Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
Page 1 of 1 • Share
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
நான்கு வேதங்களில் ரிக் வேதமே முதல் வேதமாகும். ரிக் வேதத்தின் பல பாடல்கள் பிற வேதங்களில் காணப்படுகிறது. ஞான மரபில் ரிக் வேதத்தில் உள்ள ஸ்ருஷ்டி கீதம் என்ற பாடல் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
ரிக்வேதத்தில் 10,600 பதங்கள் கொண்ட 1,017 சூக்தங்கள் உள்ளன. வேதங்களுக்கு அன்னை என ரிக் வேதத்தை அழைக்கின்றனர். இதில் உள்ள சூக்தங்கள் மற்ற வேதங்களில் மீண்டும் மீண்டும் வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரிக் வேத ஆய்வாளர்களில் மாக்ஸ் முல்லர் அவர்களின் ஆய்வு குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் ராதாக்ருஷ்ணன் அவர்களின் வேத ஆய்வும் மிக மிக முக்கிய மானது. பல விடயங்களை ஆராயும் பொழுதில் டாக்டர் ராதாக்ருஷ்ணன் அவர்களின் ஆய்வு தரப்பே உறுதிப்பட்டு வருகிறது.எ
யஜுர் வேதம் வேள்விச்சடங்கு களுக்காக தொகுக்கப்பட்ட பாடல்கள் ஆகும். இதில் 40 அத்தியாயங்கள் 1886 மந்திரங்கள் உள்ளன.
சாம வேதம் பாடுவதற்கு உரிய வேதம் ஆகும், இசை சார்ந்த ஒதுதலுக்கு உரியது. இதில் 32 அத்தியாயங்கள் 460 சூக்தங்கள் உள்ளது. இவற்றில் 75 தவிர மீதம் ரிக் வேத சூக்தங்களே ஆகும்.
இறுதியாக அதர்வ வேதம், இதை வைதீக மரபு ஏற்க வில்லை. மனுஸ்ம்ருதி மற்றும் சாந்தோக்கிய உபநிசத் போன்றவை அதர்வ வேதத்தை மறுக்கிறது. இருந்தாலும் ஆய்வாளர்களின் கருத்துப்படி அதர்வ வேதத்தை 4 வது வேதமாக ஏற்கத்தான் வேண்டும். அவ்வாறுதான் வழங்கியும் வருகின்றோம்.
அதர்வ வேதம் தாந்தரிக மரபை கொண்டதாக உள்ளது. கேரளம், ஒரிசா, மற்றும் வங்காளம் பகுதிகளில் இதை முக்கிய ஒன்றாக கருதினர். காரணம் அந்த பகுதிகளில் தாந்தரிக மதங்களே ஆகும். இதில் 20 காண்டங்களும் 131 மந்திரங்களும் உள்ளன. மேலும் இது குறியீட்டு செயல்களுக்கான வேதம்
இதை அனைத்தையும் தொகுத்தது வியாசர் என்றே கூறுகின்றனர். இதிலும் ஒரு கருத்து வேறுபாடு உள்ளது. வியசரில் இருவர் இருப்பதாகவும் ஒருவர் வேத வியாசர் என்றும் மற்றொருவர் பாரதம் எழுதியவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிலர் வியாசர் என்பது பெயர் அல்ல அது ஒரு பட்டம் என்றும் பலவாறாக கூறப்படுகிறது. தமிழில் அவ்வையார் பலர் இருப்பதை போலவே.
ஆனாலும் வேத ஆய்வாளர்களின் கருத்துப்படி "வேத வியாசர்" என்பவரே இதை அனைத்தையும் தொகுத்து உள்ளார். மேலும் வேதங்களை தனது முக்கிய சீடர்களான 4 பேருக்கு நான்கு வேதங்களை உபதேசித்து உள்ளார்.
ரிக் வேதம் - ரிஷி பைலனுக்கும்
யஜுர் வேதம் -ரிஷி வைசம்பயனுக்கும்
சாம வேதம் -ரிஷி ஜைமினிக்கும்
அதர்வ வேதம் -ரிஷி சுமந்துவிற்கும்
உபதேசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுவே எளிய அறிமுகம் ஆகும். இது போன்ற நல்ல நல்ல பதிவுகளை ஊக்குவிக்கும் நேசத்திற்கு உரிய நல் நெஞ்சங்களுக்கு என்றென்றைக்கும் நன்றி !
வினக்காளும் சில உப பகுதிகளும் அடுத்த பதிவில்....
நெஞ்சார்ந்த நன்றி:
1. பித்தனுக்கு முன் தேடி தேடலை எளிமைபடுத்திய முன்னோடிகளுக்கு.
2. சின்மயா மிசன் நிறுவன நூலான "awakening indians to india "
3. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் நூல்கள்
4.ராமகிருஷ்ண மட நூல்கள்
5. இது போன்ற விஷயங்களை பித்தனோடு பேசிக்கொண்டே இருக்கும் நண்பர் முத்து வடுகநாதன் என்பாருக்கும்.
இதன் நோக்கம் பித்தனுக்கு தகவல்கள் எங்கு இருந்து கிடைத்தது என அறிவிக்கவும் நன்றி உணர்வை வெளிப்படுத்தவுமே.
சரி அடுத்த பதிவில் சில உப விஷயங்கள் தேடுவோம்
பயணிப்போம் விசால தேடலுடன்.......
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
பல தெள்ளிய நூட்களைத் தெரிந்து பகுத்து நீரோடையான கருத்து நடையுடன்
வேதங்கள் பற்றி அறியத் தந்த அமர்க்களத்தின் சொத்து
பித்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.....!
கேட்ட கதை பாதியில் நிறுத்தப்பட்ட போதிருக்கும் குழந்தையின் மனதைப் போலுள்ளது என் மனம் முடிவிலியாய்.....!
இன்னும் சற்று விரிவாக வேதங்கள் பற்றி அலசலாமே பித்தன்........?

வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
மிக்க நன்றி வனவாசி,
இது போன்ற பதிவின் நோக்கம் பித்தனுக்குள் நுழைந்த தேடல் தீயை அனைவரின் உள்ளத்திலும் ஏற்ற வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. பித்தனும் தேடலில் சக பயணியே! இவன் எதோ உச்சாணிக்கொம்பில் இருப்பதாக எண்ணிவிட வேண்டாம்.
சின்ன சின்ன வாசிப்பு உங்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
தேடல் என்பது தொடரட்டும்.
ஒவ்வொன்றையும் பற்றி பற்றி எழுத வேண்டும் என என்னும் போது எல்லாம் மனதில் ஒன்று தோன்றும் தூக்கணாங்குருவி வல்லூராக மாற இயலாது. இருப்பினும் அன்பின் மகிழ்வில் இங்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறான் பித்தன்.
வாய்ப்பு கிடைக்கும் போது நிறைய விவாதிப்போம், நல்ல தகவல்களை பகிர தளம் தந்த அமர்க்களத்திற்கு நன்றி என சொன்னால் அது சிறிய ஒன்றை போலவே இருப்பதாக மனம் சொல்கிறது. இருந்தாலும் இதைவிட வேறு சொல் தமிழில் பித்தனுக்கு தெரியவில்லை.

அருமை பித்தன்,மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நான் ,பித்தனின் அடுத்த பகிர்வுக்காக,நன்றி பித்தன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
நான்கு வேதங்களையும் படிக்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக்கொண்டேயிருக்கிறேன்... நான்கு வேதங்களும் தமிழில் கிடைக்குமா?
கிடைக்குமானால் லிங்க் கொடுங்களேன்...
கிடைக்குமானால் லிங்க் கொடுங்களேன்...
Similar topics
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|