தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:16 am

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 02, 2013 8:45 pm

சொன்னதுபோல் ஆரம்பித்துவிட்டீர்கள் ..
பார்க்கிறேன் தொடர்ந்து
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:46 pm

“ஓர் அடியார் (தொழுகையில்) ஸஜ்தாவில் இருக்கும்போது தம் இறைவனிடம் அதிக நெருக்கமாக இருக்கிறார்.
எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) பிரார்த்தனையை அதிகப்படுத்துங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 749
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:46 pm

“நான் வானுலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது (மிஃராஜ்) ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினாலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் அவர்கள் தங்களுடைய முகங்களிலும் நெஞ்சுகளிலும் கீறிக் கொண்டனர். ஜிப்ரீலே இவர்கள் யார்?” எனக் கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்கள் தான் (புறம் பேசி) மக்களின் இறைச்சியை உண்டவர்கள், மேலும் மக்களின் மானத்துடன் விளையாடியவர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அபூதாவுத் 4878
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:46 pm

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.

ஸஹீஹுல் புகாரி 5971.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:47 pm

கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி 3289.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:47 pm

இறைவனுக்கு இணை வைப்பதும்,

மனிதனைக் கொலை செய்வதும்,

தாய் தந்தையரை புண்படுத்துவதும்,

'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்'

பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.


என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 6871.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:48 pm

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்-அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 2992
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:48 pm

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1.அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலை நிறுத்துவது.

3. ரமளானில் நோன்பு நோற்பது.

4. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

5. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

ஸஹீஹுல் புகாரி - 08
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:48 pm

“பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 196
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:49 pm

நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 257,259,265,266,274
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:49 pm

அபூமூஸா அஷ்அரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நல்லவனுடன் உட்கார்ந்திருப்பவன், கெட்டவனுடன் உட்கார்ந்திருப்பவன் இந்த இருவருக்கும் உதாரணம் என்பது, கஸ்தூரி வைத்திருப்பவன் மற்றும் இரும்பு உலையில் ஊதுபவன் போன்றதாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன், உமக்கு அதைத்தருவான். அல்லது அவனிடம் நீ நல்ல வாடையைப் பெற்றுக் கொள்ளலாம். இரும்பு உலையை ஊதுபவன், உன் ஆடையை கரித்து விடுவான் அல்லது அவனிடம் கெட்ட வாடையை நீ அடையலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:49 pm

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள். வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா, லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க (இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.)

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: நஸாயீ 897
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:50 pm

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.


*(பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்),


*நாளை என்ன நடக்கும் என்பதையும்,


*எந்த உயிரும் தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதையும்,


*மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் (உறுதியாக) அறியமாட்டார்கள்.


*மறுமை நாள் எப்போது வரும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.



என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்:-ஸஹீஹ் புகாரி.7379.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Aug 02, 2013 8:52 pm

கவிஞர் கே இனியவன் wrote:சொன்னதுபோல் ஆரம்பித்துவிட்டீர்கள் ..
பார்க்கிறேன் தொடர்ந்து

மிக்க மகிழ்ச்சி அண்ணா
இன்ஷா அல்லாஹ் நானும் தொடர்ந்து பதிகிறேன் நீங்களும் தொடர்ந்து பாருங்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 7:22 am

Muthumohamed wrote:
கவிஞர் கே இனியவன் wrote:சொன்னதுபோல் ஆரம்பித்துவிட்டீர்கள் ..
பார்க்கிறேன் தொடர்ந்து

மிக்க மகிழ்ச்சி அண்ணா
இன்ஷா அல்லாஹ் நானும் தொடர்ந்து பதிகிறேன் நீங்களும் தொடர்ந்து பாருங்கள்
பிற சமய கருத்துகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால்தான் இந்தத் தொடரை தொடரச் சொல்லியிருந்தேன்...

தொடர்ச்சிக்குப் பாராட்டுகள்... வளரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 10:28 am

பிற சமய கருத்துகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால்தான் இந்தத் தொடரை தொடரச் சொல்லியிருந்தேன்...

தொடர்ச்சிக்குப் பாராட்டுகள்... வளரட்டும்...

நானும் கருத்துக்கு உடன் படுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:06 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
Muthumohamed wrote:
கவிஞர் கே இனியவன் wrote:சொன்னதுபோல் ஆரம்பித்துவிட்டீர்கள் ..
பார்க்கிறேன் தொடர்ந்து
மிக்க மகிழ்ச்சி அண்ணா
இன்ஷா அல்லாஹ் நானும் தொடர்ந்து பதிகிறேன் நீங்களும் தொடர்ந்து பாருங்கள்
பிற சமய கருத்துகளையும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால்தான் இந்தத் தொடரை தொடரச் சொல்லியிருந்தேன்...

தொடர்ச்சிக்குப் பாராட்டுகள்... வளரட்டும்...
மிக்க மகிழ்ச்சி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:06 am

தான் கொடுத்த அன்பளிப்புப் பொருளை

திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியை,

தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2621.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:06 am

“சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி” (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6405
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:06 am

தொழுகையில், இமாமான) ஓதுபவர், 'ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்' என்று கூறும்போது, அவரைப் பின்பற்றி தொழுபவர்கள் ஆமீன் கூறுங்கள். (இவ்வாறு வானவர்களும் கூறுவார்கள்.) அப்படி நீங்கள் கூறும் ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (ஒரே வேளையில்) பொருந்தி அமைந்து விட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 621
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:07 am

இமாம், (தொழுகையில்) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து' என்று கூறுங்கள். (வானவர்களும் இவ்வாறு கூறுவார்கள்.) அப்படி நீங்கள் சொல்லும் கூற்று, வானவர்களின் கூற்றோடு (ஒரே வேளையில்) பொருந்தி விட்டால் உங்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 617
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:07 am

"ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது.

ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது.


அவ்விரண்டிற்குமிடையே

சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன.

பாவம் என சந்தேகப்படுபவற்றை விட்டு விடுகிறவர்,

பாவம் என்று தெளிவாகத் தெரிவதை

நிச்சயம் விட்டு விடுவார்.


பாவம் என சந்தேகப்படுபவற்றை செய்யத்துணிகிறவர்

தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும்.


பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும்.

வேலியைச் சுற்றி மேய்கிறவர்

அதற்குள்ளும் சென்று விடக்கூடும்".


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி.2051.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:07 am

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

49:12.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:08 am

"(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு,

அவரைப் பின் தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு.

அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது.


தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு,

அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு.

அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது"


என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரலி)

நூல்:- முஸ்லிம். 4194.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:08 am

"மூவருக்கெதிராக கியாமத் (மறுமை) நாளில் நான் வழக்குரைப்பேன்..


என் (அல்லாஹ்) பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்.

சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.

கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.


(ஆகிய இவர்கள் தான் அந்த மூவர்)' என்று அல்லாஹ் கூறினான்."


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹிஹ் புகாரி. 2270.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 5 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum