Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் கணினியை பரமாரிப்பது எப்படி?
Page 1 of 1 • Share
உங்கள் கணினியை பரமாரிப்பது எப்படி?
[You must be registered and logged in to see this image.]
கணிணிக்குறிப்புக்கள்
*******************
விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்! அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, நல்ல முறையில் பராமரிப்பது தொடர்பான சில ஆலோசனைகள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.
முறையான ஷட் டவுன்... முக்கியம்!
--------------------------------------------------
பலரும் கம்ப்யூட்டரை அணைப்பதை மின்விளக்கை அணைப்பதைப்போலச் செய்வார்கள். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது முக்கியமான காரணம் ஆகிவிடும். ஒவ்வொரு விண்டோவையும் முறையாக நிறுத்திவிட்டுப் பின்னரே கம்ப்யூட்டரின் திரையையும், சி.பி.யூ-வையும் அணைக்க வேண்டும். இல்லை என்றால்... கம்ப்யூட்டரின் மூளை குழம்பி, அடுத்த முறை ஆன் செய்யும்போது பலவிதமான பிரச்னைகளையும் கொடுக்கும்.
பாக்கெட் மணி!
---------------------
'செபி’யின் இணையதளத்தில் (http://investor.sebi.gov.in/fevernacular.html) 'பணம்’ என்ற தலைப்பில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் குழந்தைகளுக்கான நிதிக்கல்வி விவரங்கள் இருக்கிறது.http://www.nism.ac.in/ என்ற வலைதளத்தில், 'ஃபைனான்ஷியல் எஜுகேஷன்' என்கிற தலைப்பில், குழந்தைகளுக்கான நடைமுறை நிதிக்கல்வி, 'பாக்கெட் மணி' என்கிற பெயரில் தரப்பட்டிருக்கிறது. இதை டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்கு கற்றுத் தரலாம்!
கம்ப்யூட்டர் கிளீனிங் விதிகள்!
-----------------------------------------
கம்ப்யூட்டரின் அருகில் உண்பதோ, அருந்துவதோ கூடாது. சுத்தம் செய்யும் திரவங்களை நேரடியாக கம்ப்யூட்டர் மீது பீய்ச்ச வேண்டாம். சுத்தமான துணியில் தெளித்து, பிறகு கம்ப்யூட்டரைத் துடைக்கவும். வேக்குவம் கிளீனர் மூலம் வெளிப்புறத்தை சுத்தம் செய்யலாம். ஆனால், உட்பகுதியில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும்போது கம்ப்யூட்டரை அணைத்துவிடவும்.
பேக் அப்’ கைகொடுக்கும்!
-----------------------------------
பல சமயங்களில் மிக முக்கியமான கோப்புகளை 'சி டிரைவ்’ என்னும் பகுதியில் சேமித்து வைத்திருப்பார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் கம்ப்யூட்டரை ஃபார்மட் செய்யும்போது இவை அழிந்துபோகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வேறு டிரைவ்களில் 'பேக் அப்’பாக முக்கியமான கோப்புகளைச் சேமித்து வையுங்கள். நிச்சயம் இது உங்களுக்கு உதவும்.
பொது கம்ப்யூட்டர்... கூடுதல் கவனம்!
-----------------------------------------------------
பொது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும்போது, உபயோகித்து முடித்தவுடன் முறையாக 'லாக் அவுட்’ செய்யுங்கள். மற்றவர்கள் உங்களது ஐ.டி-யில் விஷமம் செய்வதை இது தவிர்க்கும். கம்ப்யூட்டரை விட்டு விலகிய பிறகு கைகளை சுத்தமாகக் கழுவுவது முக்கியம். மௌஸிலும், கீ - போர்டிலும் எக்கச்சக்கமான கிருமிகள் இருக்கக்கூடும். இதனால், நோய்த் தொற்று ஏற்படலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களில் எவரும் உங்களது யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு போன்றவற்றை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
வைரஸ்... ஜாக்கிரதை!
-------------------------------
ஒருமுறை ஆன்டி வைரஸ் நிறுவிவிட்டால் அது எல்லா வைரஸ்களையும் தவிர்த்துவிடாது. அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும். காரணம், புதுப் புது வைரஸ்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள். பெரும்பாலான வைரஸ்களை உற்பத்தி செய்வதே சில ஆன்டி வைரஸ் நிறுவனங்கள்தான் என்ற பேச்சும் உண்டு. வைரஸ் தடுப்புக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ்களை நிறுவக்கூடாது. தரமான நிறுவனத்தின் ஆன்டி வைரஸ் மென்பொருளையே நிறுவுங்கள். வைரஸ் ஏதேனும் புகுந்திருக்கிறதா என்று தினசரி உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்யுங்கள்.
கம்ப்யூட்டரே கதியாக இருக்காதீர்!
-----------------------------------------------
சிலர், வேலை வேலை என்று கம்ப்யூட்டரிலேயே ஆழ்ந்து இருப்பார்கள். வேறு சிலர் ப்ளாக், ட்விட்டர், ஃபேஸ்புக் என நாள் முழுக்க மூழ்கி... குடும்பம், உறவு என அனைத்தையும் துறந்து, கம்ப்யூட்டருக்கே அடிமையாகிவிடுவார்கள். ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து நெறிமுறைப்படுத்தாவிட்டால், பலவிதமான சிக்கல்களும், தேவையற்ற மனஉளைச்சல்களும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டருடன் அளவோடு உறவாடி, குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவதே உத்தமம்.
நட்புக்கு எல்லைக்கோடு!
----------------------------------
இனிக்க இனிக்கப் பேசினாலும், இணைய நட்புக்கு எல்லைக்கோடு அவசியம். நம்மைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி வெள்ளந்தியாக ஃபேஸ்புக்கில் விவரிப்பது, சமயங்களில் வில்லங்கத்தை விளைவிக்கலாம். முகம் தெரியாமல் சாட் (நீலீணீt) செய்பவர்கள், உண்மைகளைத்தான் சொல்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நட்பாகப் பழகுவதற்கு ஓர் ஐ.டி-யும், தரக்குறைவாகப் பேசுவதற்கு ஓர் ஐ.டி-யும் உருவாக்கிக் கொண்டு, பிறரின் மன நிம்மதியைக் குலைக்கும் பேர்வழிகள் இணையத்தில் உண்டு. ஆர்வத்தால், நிம்மதியைத் தொலைக்காதீர்கள்.
அளவுக்கு மிஞ்சினால் உடலுக்கு கேடு!
------------------------------------------------------
தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. பார்வைக் குறைபாடு, முதுகுவலி, தலைவலி போன்றவை அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையையே உற்றுப் பார்ப்பதாலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதா லும் ஏற்படுகின்றன. இடைவெளி கொடுத்து, சற்றே நடமாடி, தூரத்தில் தெரியும் மரங்களிலோ அல்லது கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளிலோ சற்று நேரம் கவனம் செலுத்துங்கள். புத்துணர்ச்சி கிடைக்கும்.
'எர்த்’ விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்!
-----------------------------------------------------------
சில கம்ப்யூட்டர்களின் இரும்புப் பகுதியைத் தொடும்போது 'சுரீர்’ என்று மெலிதான ஷாக் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரியான முறையில் 'எர்த்’ இணைப்பு கொடுக்காததே இதற்குக் காரணம். கவனிக்காமல் விட்டுவிட்டால்... மின்கசிவு ஏற்படவும், கூடுதல் மின்சாரம் உங்களது உடலில் பாயவும் நேரிடலாம். சரியான எலெக்ட்ரீஷியன் உதவியுடன் முறையாக எர்த் இணைப்பைக் கொடுப்பது அவசியம். 'லேசான ஷாக்’தானே என்று அசிரத்தையாக இருந்துவிட்டால், ஆபத்தான அளவு மின்சாரம் பாயவும் வாய்ப்பு உண்டு.
உயரம்... உஷார்!
-----------------------
படிக்கும்போது வெளிச்சம் நமக்குப் பின்புறத்தில் இருந்து வருவது நல்லதல்லவா? ஆனால், கம்ப்யூட்டரில் பணிபுரியும்போது வெளிச்சம் நமக்கு முன்புறம் இருந்து வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கண்ணுக்கு சிரமம் தராமல் இருக்கும். மேலும் ரேடியேஷனைத் தவிர்க்கும் திரையையும் மானிட்டருக்குப் பொருத்தலாம். திரையின் வெளிச்ச அளவு மற்றும் வண்ணங்களின் அடர்த்தி ஆகியவையும் தேவையான அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரம் மற்றும் மேஜையின் உயரம் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு அதற்கேற்ற உயரம் உடைய நாற்காலிகளைத் தேர்வு செய்யுங்கள்.
நன்றி : பாபநாசம் பக்கம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: உங்கள் கணினியை பரமாரிப்பது எப்படி?
கணினியை வைத்திருப்பவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கு...
Similar topics
» உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் கணினியை இயக்குவது எப்படி?
» உங்கள் கணினியை வேகமாக நிறுத்த..
» உங்கள் கணினியை வேகமாக Boot ஆக
» உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-
» உங்கள் கணினியை வைரஸில் இருந்து காப்பாற்றி கொள்ள

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum