Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
Page 1 of 1 • Share
இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
30 யூத் ரெசிபெஸ்
‘மாத்தி யோசிக்கவே மாட்டியாம்மா?” – வழக்கமான டிபன் வகைகளை செய்யும் போது, பிள்ளைகள் அடிக்கும் கமென்ட் இது. அவர்களை எல்லாம் ‘இன்னும் இருக்கா? என்று கேட்டபடியே ஆர்வத்துடன் சாப்பிட வைக்கும் வகையில்… 30 வகை ‘யூத் ரெசிபி’களை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

”இளம் வயதினர் விரும்பும் டேஸ்ட்டில்… அதேசமயம், ஊட்டச்சத்து தரும் பொருட்களை கொண்டு நான் தயாரித்துள்ள இந்த ரெசிபிகளை செய்து கொடுத்தால், ‘சூப்பர் மாம்’ என்று கொண்டாடப்படுவீர்கள்” என்று உற்சாகப்படுத்தும் ஆதிரையின் ரெசிபிகளை, கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
கிரிஸ்பி கார்ன் கட்லெட்
தேவையானவை: மக்காச்சோளம் – 3 (வேக வைத்தது உதிர்க்கவும்), பிரெட் ஸ்லைஸ் – 3, பால் – சிறிதளவு, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, ரஸ்க்தூள், எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: உதிர்த்த சோள மணிகளை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை ஒரு நிமிடம் பாலில் நனைத்து, அரைத்து வைத்துள்ள சோள விழுதில் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். அவற்றை ரஸ்க் தூளில் புரட்டி, லேசாக தட்டி… தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்
Last edited by முழுமுதலோன் on Sun Sep 08, 2013 3:10 pm; edited 1 time in total (Reason for editing : தலைப்பு மாற்றம்)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
கார்ன் சீஸ் ஃபிரிட்டாட்டா
தேவையானவை: மக்காச்சோளம் – 2, துருவிய சீஸ் – அரை கப், பால், மைதா மாவு – தலா ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு, வெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மக்காச்சோளத்தில் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிட்டு, வெந்ததும் மணிகளை உதிர்த்துக் கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். தவாவை சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன ஆம்லெட்களாக ஊற்றி… சுடச்சுட பரிமாறவும்.
பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்
தேவையானவை: பிஞ்சு பேபிகார்ன் – 10, மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பேபிகார்னை 2 இஞ்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி சாஸ், சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசையவும். இதனுடன் பேபி கார்ன் துண்டுகள் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஊறிய பேபி கார்ன்களை போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஸ்வீட் இளநீர் டிலைட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை – ஒரு கப், பால் – 3 கப், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்பால் – ஒரு கப்.
செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும். ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
மிக்ஸ்ட் வெஜ் சப்பாத்தி
தேவையானவை: சப்பாத்தி – 4 (ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று, மெலிதாக, நீளவாக்கில் நறுக்கிய கோஸ், கேரட், குடமிளகாய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், தக்காளி சாஸ், – ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய கோஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து… நன்கு வதங்கி யதும், தக்காளி சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, நறுக்கிய சப்பாத்தி களைச் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லி, கறி வேப்பிலை தூவி சூடாகப் பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஆலு பிரெட் டிக்கிஸ்
தேவையானவை: உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் – தலா 4, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா – தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். அதனுடன் நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும். தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, தட்டிவைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
கரகர பிண்டி
தேவையானவை : வெண்டைக்காய் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : நறுக்கிய வெண்டைக்காயுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து சிறிது நீர் விட்டு நன்கு பிசிறவும். எண்ணெயை காயவிட்டு பிசிறி வைத்த வெண்டைக்காயை பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஹாட் மசாலா நூடுல்ஸ்
தேவையானவை: பிளெய்ன் நூடுல்ஸ் – 2 பாக்கெட் ( 200 கிராம்), வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்), நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய கோஸ்,கேரட், குடமிளகாய் மூன்றும் சேர்த்து – ஒரு கப், பூண்டு – 4 பல் (பொடியாக நறுக் கவும்), பச்சை மிளகாய் – 2, மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் – தலா அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன், சில்லி சாஸ் – 2 டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவை யான அளவு.
செய்முறை: நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, பின் வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டு அலசி தனியே வடித்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கி… கோஸ், கேரட், குடமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும். பின்னர் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாகக் கலக்கி… வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.
பனீர் 65
தேவையானவை: பனீர் – 200 கிராம் (சதுர சதுர துண்டுகளாக நறுக்கவும்), கார்ன்ஃப்ளார், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கார்ன் ஃப்ளார், மைதா மாவு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து திக்காக கரைக்கவும். பின்னர் பனீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஊறிய பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸ் அல்லது ஆனியன் ராய்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.

சோயா கார்ன் ஃப்ளேக்ஸ் குலாபி
தேவையானவை: சோயா உருண்டைகள் (மீல் மேக்கர்) – 10, கார்ன் ஃப்ளேக்ஸ் – 2 கப், மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் இரண்டும் சேர்த்து – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சைப் பட்டாணி – கால் கப் (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மைதா – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சோயா உருண்டைகளை கொதிக் கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி நீரை ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சோயாவுடன் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், வெங்காயம், மசித்த பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, மைதா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசிறி (சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம்) உருண்டைகளாக்கி, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ரைஸ் வெஜ் பால்ஸ்
தேவையானவை: வடித்த சாதம் – 2 கப் (மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கார்ன் ஃப்ளார், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு அரைத்த விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்துப் பிசிறி, உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
பீஸ் கார்ன் கோர்மெட்
தேவையானவை : ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி, உதிர்த்த கார்ன் – தலா ஒரு கப் (இரண்டையும் ஆவியில் நன்கு வேக வைக்கவும்), பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு – அரை கப், தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை : பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டில் கால் கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். வடிகட்டியதை மீண்டும், 2, 3 நிமிடம் அடுப்பில் வைக்க… லேசாக பிசுக்கு பதம் வரும். அப்போது வெந்த பட்டாணி மற்றும் கார்ன் இரண்டையும் அதில் சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும். தேனை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
கோபி வேர்க்கடலை பட்டீஸ்
தேவையானவை: காலிஃப்ளவர் – ஒரு கப் (சிறு சிறு பூக்களாக ஆய்ந்தது), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வறுத்த வேர்க்கடலை – அரை கப் (ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும்), பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
பட்டீஸ் செய்ய: மைதா – ஒரு கப், கார்ன்ஃப்ளார் – அரை கப், உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை: ஆய்ந்த காலிஃப்ளவருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், காலிஃப்ளவர், பொடித்த வேர்க்கடலை, பச்சை மிளகாய் – இஞ்சி – பூண்டு விழுது எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி, கொத்தமல்லி தூவி தனியே வைக்கவும்.
மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு மாவு பிசைந்து, சின்ன சின்ன வட்ட பூரிகளாக திரட்டவும். ஒரு வட்டத்தின் மேல் ஒரு டீஸ்பூன் காலிஃப்ளவர் கலவையை சற்று பரவலாக வைத்து, அதன் மேல் மற்றொரு வட்டத்தை வைத்து, ஓரங்களை நன்கு ஒட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
இட்லி மஞ்சூரியன்
தேவையானவை: இட்லி – 4 (விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்), மைதா, கார்ன்ஃப்ளார், கடலை மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி – பூண்டு விழுது, சோயா சாஸ், க்ரீன் சில்லி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி, கேசரி கலர் – சிறிதளவு.
செய்முறை: இட்லி, எண்ணெய், கொத்தமல்லி நீங்கலாக மற்ற அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தேவையான நீர்விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இட்லித் துண்டு களை மாவுக் கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொரித் தெடுத்து… கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஆலு வெஜ் பர்கர்
தேவையானவை: வட்டமான பன் – 4, உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து மசிக்கவும்), வெங்காயம் – 2, கேரட், பீன்ஸ், கோஸ் (பொடியாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி எல்லாம் சேர்த்து – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், மைதா – கால் கப், பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தக்காளி சாஸ், சில்லி சாஸ் – சிறிதளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மசித்த உருளையைச் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை சிறிய உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.
மைதாவுடன் சிறிது நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒவ்வொரு உருண்டையையும் வட்டமாக தட்டி, கரைத்த மைதாவில் தோய்த்து, பிரெட் அல்லது ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பன்னை, வட்டவடிவில் இரண்டாக ‘கட்’ செய்து மேல் பாகத்தில் தக்காளி சாஸ்… கீழ் பாகத்தில் சில்லி சாஸ் தடவி, பொரித்த கட்லெட்டுகளை அதில் ஸ்டஃப் செய்து பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
சன்னா ஆலு சாட்
தேவையானவை: வெள்ளை சன்னா (வெள்ளை கொண்டைக்கடலை) – ஒரு கப் , உருளைக்கிழங்கு - 2 (சதுர சதுரமாக, மெலிதாக கட் செய்து கொள்ளவும்), மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: சன்னாவை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு வேக வைக்கவும். நறுக்கிய உருளைகிழங்கை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த உருளையுடன் வெந்த சன்னா, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொடி யாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கிரன்ச்சி சோயா
தேவையானவை : சோயா உருண்டைகள் (மீல் மேக்கர்) – 20, வெந்தயக்கீரை – சிறுகட்டு (கீரையின் இலைகளை மட்டும் ஆய்ந்து அலசவும்), சின்ன வெங்காயம் - 10, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 2, கார்ன்ஃப்ளார், கடலை மாவு, தயிர் – தலா 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, நீரை ஒட்டப்பிழிந்து மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். உதிர்த்த சோயாவுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி… சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
பனீர் சப்பாத்தி ரோல்
தேவையானவை : சப்பாத்தி – 2, பனீர் – அரை கப் (துருவியது), வெங்காயம் – ஒன்று, பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் ( இரண்டும் சேர்த்து) – அரை கப், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவையான அளவு.
செய்முறை : ஒரு வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும்… பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… துருவிய பனீர் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். சப்பாத்திக்குள் பனீர் கலவையை வைத்து சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும். தக்காளி சாஸ், ராய்தா இதற்கு ஏற்ற சைட் டிஷ்.
ஹனி சில்லி பொட்டேடோ
தேவையானவை : பெரிய உருளைக்கிழங்கு – 4, கார்ன்ஃப்ளார்- 2 டேபிள்ஸ்பூன், வெள்ளை எள், தக்காளி சாஸ் – தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தேன் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், - தேவையான அளவு.
செய்முறை : உருளைக்கிழங்கை தோல் சீவி விரல் நீளத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் நன்கு அலசவும். பிறகு நீரை வடித்துவிட்டு கிழங்குடன் கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து நன்கு பிசிறி, சூடான எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் வெண்ணெயை போட்டு… உருகியதும் வெள்ளை எள், தக்காளி சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக் கிளறி, பொரித்த உருளையை அதில் போட்டு ஒரு புரட்டு புரட்டி இறக்கி, தேனை மேலே ஊற்றி… சூடாக சாப்பிடக் கொடுக்கவும்.

கேரட் மில்க் ஷேக்
தேவையானவை : கேரட் – 2 கப், பால் – அரை லிட்டர், மில்க்மெய்ட், தேன் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை : துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீதமுள்ள பாலுடன் கேரட் விழுதை சேர்த்து கூடவே மில்க்மெய்ட், தேன் கலந்து, மிக்ஸியில் மீண்டும் சுற்று சுற்றி எடுத்து… பரிமாறும் முன் 2, 3 ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சூப்
தேவையானவை : பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், வெங்காயம் (மூன்றும் சேர்த்து) – ஒரு கப், பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்), ஸ்வீட் கார்ன் – ஒரு கப், அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், கார்ன்ஃப்ளார் மாவு – தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய காய்கள், பூண்டு, ஸ்வீட் கார்ன் போட்டு நன்கு வதக்கி, 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அஜினமோட்டோ, மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், இறக்குவதற்கு முன்பு கார்ன்ஃப்ளார் மாவை நீரில் கரைத்து சேர்த்து இறக்கி…. கப்பில் ஊற்றி பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
மசாலா கேஷ்யூ பேல்பூரி
தேவையானவை: குட்டி பூரி – ஒரு பாக்கெட், உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்து கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), நெய்யில் வறுத்து, பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், அரிசிப்பொரி, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை), கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மசித்த உருளை, பொடித்த முந்திரி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக்கவும். பூரியின் மேல் பாகத்தை லேசா உடைத்து உருண்டையை ஸ்டப் செய்யவும்.
அகலமான தட்டில் ஸ்டப் செய்த பூரிகளை வைத்து மேலே தக்காளி சாஸ், க்ரீன் சில்லி சாஸ் சிறிது சேர்த்து, அதற்கும் மேலே அரிசிப் பொரி, ஓமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பாதாம் மில்க் ஷேக்
தேவையானவை : பாதாம் பருப்பு – 100 கிராம், பால் (காய்ச்சி ஆறவிடவும்) – அரை லிட்டர், சர்க்கரை – 3 டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் – ஒரு கப்.
செய்முறை : பாதாமை முதல் நாளிரவே ஊற வைத்து, மறுநாள் அதன் தோலை உரித்து, மிக்ஸியில் கொஞ்சம் பால் சேர்த்து விழுதாக அரைத்து, சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, மீதமுள்ள பாலுடன் சேர்த்துப் பரிமாறவும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஆட்டா க்ரீன்ஸ் கிரிஸ்ப்
தேவையானவை : கோதுமை மாவு – ஒரு கப், முளைக்கீரை அல்லது பொன்னாங்கண்ணி கீரை – சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 2 பல், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : நறுக்கிய கீரை, வெங்காயம், நறுக்கிய பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை கோதுமை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து, தேவையான நீர் விட்டு கலக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு, மாவை கரண்டியால் எடுத்துப் போட்டு, பொரித்தெடுக்கவும்.
ஹாட் சீஸ் பாப்ஸ்
தேவையானவை : சீஸ் – ஒரு கப் (நன்கு கெட்டியாக இருப்பது மிகவும் முக்கியம்), மைதா மாவு – கால் கப், கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : சீஸை அரை இன்ச் அளவில் சதுர சதுரமாக ‘கட்’ செய்து கொள்ளவும், மைதா மாவுடன் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ‘கட்’ செய்த சீஸை கரைத்து வைத்த மாவில் தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
கேஷ்யூ கிரிஸ்பிஸ்
தேவையானவை : முந்திரி – 50 கிராம் (உடைத்தது), கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான நீர் விட்டு நன்கு பிசிறவும். சூடான எண்ணெயில் மாவை உதிர்த்தாற் போல போட்டு பொரித்தெடுக்கவும்.
கேபேஜ் பனீர் பால்ஸ்
தேவையானவை : முட்டைகோஸ் – 100 கிராம் கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம், பெரிய வெங்காயம் – 2 (நான்கு காய்கறிகளையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), உதிர்த்த பனீர் – 100 கிராம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது – ஒரு டீஸ்பூன், மைதா மாவு – 8 டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய், ரஸ்க்தூள் – தேவையான அளவு.
செய்முறை : ரஸ்க்தூள், எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான நீர் விட்டு நன்கு கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஜிஞ்சர் லெமன் மாக்
தேவையானவை : எலுமிச்சம் பழம் – 2 (வட்ட வட்டமாக, மெல்லிதாக நறுக்கவும்), இஞ்சி – சிறிய துண்டு, சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா – சிறிதளவு, தண்ணீர், ஐஸ் க்யூப் – தேவையான அளவு.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின், அதில் எலுமிச்சை, இஞ்சி, சர்க்கரை, புதினா இலைகள் சேர்த்து அடுப்பை அணைத்து, ஆறவிட வேண்டும். நன்கு ஆறியவுடன் வடிகட்டி, ஐஸ் க்யூப் சேர்த்து அருந்தவும்.
விருப்பப்பட்டால் சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
ஃப்ரைடு கேப்ஸிகம் சாண்ட்விச்
தேவையானவை : சாண்ட்விச் பிரெட் – ஒரு பாக்கெட், குடமிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை : வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்கா யம், குடமிளகாய், கேரட் துருவல் மூன்றையும் லேசாக வதக்கி, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிரெட்டை டோஸ்ட் செய்யவும். டோஸ்ட் செய்த ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை நன்கு தடவி, நடுவில் வதக் கிய காய்கறி கலவையை வைத்து, அதன் மேல் வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட் ஸ்லைஸை வைத்து அழுத்தி பரிமாறவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
ஓட்ஸ் ஆலு கட்லெட்
தேவையானவை : ஓட்ஸ் – ஒரு கப் (மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 6, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோலுரித்து மசிக்கவும்), பச்சை மிளகாய் – 4 (மிகவும் பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, மைதா – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் அல்லது ரஸ்க் தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : பிரெட் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து… பொடித்த ஓட்ஸ், மசித்த உருளை, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். மைதாவை தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை விரும்பிய வடிவத்தில் தட்டி, மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் அல்லது ரஸ்க் தூளில் புரட்டவும். தவாவை சூடாக்கி அதன் மேல் கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரெட் தூளில் புரட்டிய கட்லெட்டுகளை சேர்த்து பொரித்தும் எடுக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளம் வயதினர் விரும்பும் வகை வகையான சமையல் முறைகள்
சூப்பர் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» என் சமையல் அறையில் இன்று ... வகை வகையான ஸ்டார் சமையல்!
» வகை வகையான வேர்க்கடலை சமையல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» வகை வகையான வாழை சமையல்
» வித்தியாசமா பண்ணுங்க... விட்டமின்களை அள்ளுங்க.... வகை வகையான கீரை சமையல் ...
» வகை வகையான வேர்க்கடலை சமையல்
» இன்று என் சமையல் அறையில் ..பட்ஜெட் சமையல்!
» வகை வகையான வாழை சமையல்
» வித்தியாசமா பண்ணுங்க... விட்டமின்களை அள்ளுங்க.... வகை வகையான கீரை சமையல் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum