தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வகை வகையான வாழை சமையல்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வகை வகையான வாழை சமையல் Empty வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:43 pm

வாழைத்தண்டு பச்சடி

தேவையானவை:

 
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுது – ஒன்றரை டீஸ்பூன்,
புளிப்பில்லாத கெட்டித் தயிர் – 2 கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 
கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் கடைந்த தயிரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:44 pm

வாழைக்காய் குணுக்கு

தேவையானவை:

வேக வைத்து மசித்த வாழைக்காய் – 2 கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

மூன்று வகை பருப்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு, கெட்டியாக அரைக்கவும்.

அதனுடன்… மசித்த வாழைக்காய், அரிசி மாவு, தேங்காய்ப்பல், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:45 pm

வாழைப்பழ ஸ்மூத்தி

தேவையானவை:
 
பால், தயிர் – தலா ஒரு கப்,
வாழைப்பழம் – 2,
பாதாம்பருப்பு – 8,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்.



செய்முறை:
 
கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்-களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தெடுக்க.. நுரை பொங்க வரும். அதனை உடனே பரிமாறவும்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்; எதிர்பாராத விருந்தி-னர்களுக்கு உடனடியாக தயார் செய்து கொடுக்கலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:46 pm

பனானா பஜ்ஜி

தேவையானவை:

மைதா, சர்க்கரை – தலா 100 கிராம்,
வாழைப்பழம் – 4,
சீரகம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

மைதாவில் சீரகம், சர்க்கரை சேர்த்து, தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

வாழைப்பழத்தை நீளவாக்கிலோ அல்லது வட்டமாகவோ நறுக்கவும்.

வாழைப்பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து, பரிமாறவும்.

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த பனானா பஜ்ஜி.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:46 pm

வாழைத்தண்டு ஊறுகாய்

தேவையானவை:

மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
 நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
கடுகு – கால் டீஸ்பூன், உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய், கடுகு தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து பயன்படுத்தவும்.

‘நறுக் நறுக்’ என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ஊறுகாய்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:48 pm

வாழைக்காய் கோஃப்தா

தேவையானவை –

உருண்டைக்கு:
வாழைக்காய் – 6,
நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

கிரேவிக்கு:
சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
தயிர் – ஒன்றரை கப்,
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் – தலா அரை டீஸ்பூன்,
கிராம்பு – 4,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை – 3, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை –

 உருண்டைக்கு:

வாழைக்காய்களைத் தோலுடன் குழையாமல் வேக விடவும். ஆறியதும், தோல் உரித்து கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாகப் போட்டு பொரித்து எடுக்கவும்!

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்துக் கொள்ளவும். பிறகு… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும். அதில், பொரித்த உருண்டைகளைப் போட்டு ‘சிம்’மில் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:50 pm

வாழைக்காய் புளிக் கூட்டு

தேவையானவை:

சிறு சிறு சதுரங்களாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப்,
புளி – 50 கிராம்,
மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்,
வேக வைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (கலந்தது) – கால் கப்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு –

தேவையான அளவு.

அரைக்க:
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
தனியா – 4 டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – கால் கப்.

செய்முறை:

புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டிய கரைசலை, அடி கனமான பாத்திரத்தில் விடவும். வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதனை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். வேக வைத்த பருப்புகளைச் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி, கடுகு தாளித்துக் கொட்டிக் கலந்து இறக்கவும்.

இது சாதம், சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:51 pm

வாழைக்காய் க்ரிஸ்பீஸ்

தேவையானவை:


வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப்,
அரிசி மாவு – 2 கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
 எள் – 2 டீஸ்பூன்,
இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி மாவு, மசித்த வாழைக்காய் எள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், நெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். அந்தக் கலவையை விரல் நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

இது, மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:52 pm

வாழைப்பழ கஸ்டர்டு

தேவையாவை:


பால் — ஒரு லிட்டர்,
வாழைப்பழத் துண்டுகள் – 2 கப்,
வெனிலா கஸ்டர்டு பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை:

சிறிதளவு குளிர்ந்த பாலில் கஸ்டர்டு பவுடரைக் கரைத்துக் கொள்ளவும்.
மீதி பாலை, மிதமான தீயில் காய்ச்சவும். சிறிதளவு வற்றியதும், கரைத்து வைத்துள்ள கஸ்டர்டு பவுடரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
அப்போது பால் கெட்டியாகும். உடனே இறக்கி சர்க்கரை சேர்க்கவும்.
நன்றாக ஆறியதும், வாழைப்பழத் துண்டுகள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:53 pm

வாழைக்காய் புளி கொத்சு

தேவையானவை:


வேக வைத்த பாசிப்பருப்பு – 1 கப்,
வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப்,
கெட்டியான புளிக் கரைசல் – கால் கப்,
மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 3,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் புளிக் கரைசல், மஞ்சள்தூள், வாழைக்காய்த் துண்டுகள், பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

அதனுடன், மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து மீண்டும் கொதிக்க விடவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கலந்து பரிமாறவும்.

இதனை தோசை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ளலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:54 pm

வாழைக்காய் பராத்தா

தேவையானவை:


வேக வைத்து மசித்த வாழைக்காய் – 1 கப்,
கோதுமை மாவு – 2 கப்,
பச்சை மிளகாய்-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
உப்பு, நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மசித்த வாழைக்காய், பச்சை மிளகாய்-பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, சப்பாத்திக் கல்லில் இட்டு சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.

இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:55 pm

வாழைக்காய் கட்லெட்

தேவையானவை:


வேக வைத்து, மசித்த வாழைக்காய் – 2 கப்,
பிரெட் ஸ்லைஸ் – 4,
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,
பொடித்த அவல் – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சிறிதளவு தண்ணீரில் பிரெட் ஸ்லைஸை ஒவ்வொன்றாக அமிழ்த்தி நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

அவற்றுடன் மசித்த வாழைக்காய், பொடித்த வேர்க்கடலை, வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்டம், சதுரம் என பிடித்த வடிவங்களில் செய்து, அவல் பொடியில் இருபுறமும் புரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, தயார் செய்தவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்க… வாழைக்காய் கட்லெட் ரெடி!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:58 pm

வாழைக்காய் மிளகு கூட்டு

தேவையானவை:


தோல் சீவி, பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 2 கப்,
புளி – 50 கிராம்,
தேங்காய் துருவல் – அரை கப்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4 ,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும்.

புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும்.

இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 5:59 pm

பனானா கேக்

தேவையானவை:


கெட்டியான வாழைப்பழம் – 1,
அரிசி மாவு – முக்கால் கப்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்,
வாழை இலை, செர்ரிப்பழம் – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய்ப்பாலில் உப்பு, சர்க்கரை, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும்.

இட்லி மாவு பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

வாழைப்பழத்தை, 2 இஞ்ச் நீளத்துக்கு துண்டுகளாக நறுக்கவும்.
அவற்றை, ஒவ்வொன்றாக மாவு கலவையில் நனைக்கவும்.
அந்தத் துண்டுகளை வாழை இலையில் வைத்து மெதுவாக மடித்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். செர்ரிப் பழம் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:00 pm

வாழைக்காய் போண்டா

தேவையானவை:


வேக வைத்து, தோல் உரித்து, மசித்த வாழைக்காய் – 2 கப்,
தோசை அல்லது இட்லி மாவு – 2 கப்,
எலுமிச்சைச் சாறு, நறுக்கிய பச்சை மிளகாய் – தலா 2 டீஸ்பூன்,
 நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
பச்சைப் பட்டாணி – கால் கப்,
நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை:

வேக வைத்து மசித்த வாழைக்காய், பச்சைப் பட்டாணி, இஞ்சி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

தோசை அல்லது இட்லி மாவை அகலமான பாத்திரத்தில் விடவும். பிசைந்து வைத்துள்ள வாழைக்காய் கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு உருட்டிய உருண்டைகளைப் போட்டு, வெந்ததும் எடுக்க.. வாழைக்காய் போண்டா தயார்!

இதற்கு, தக்காளி சட்னி சரியான ஜோடி!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:01 pm

வாழைக்காய் பெப்பர் ரோஸ்ட்

தேவையானவை:

கெட்டியான வாழைக்காய் – 2,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வாழைக்காய்த் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பு, மிளகுத்தூள் தூவிக் கலந்து பரிமாறவும்.

ரெகுலரான வாழைக்காய் சிப்ஸில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:03 pm

வாழைப்பழ அல்வா

தேவையானவை:


நன்கு பழுத்த வாழைப்பழம் – 4,
சர்க்கரை – அரை கப்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு, முந்திரியை வறுத்தெடுக்கவும்.
அதே பாத்திரத்தில், நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
நிறம் மாறியதும், சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் நன்கு கிளறி, முந்திரி சேர்க்கவும். விருப்பப்பட்டால், மற்ற பழங்களையும் சேர்க்கலாம்.

விருந்தாளிகளுக்கு உடனடியாக செய்து கொடுக்கக்கூடிய சுவையான டிஷ் இது!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:04 pm

வாழைப்பூ துவையல்

தேவையானவை:

ஆய்ந்து, சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 4,
புளி – 50 கிராம்,
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
 மிளகு – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சீரகம், ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறியதும் புளி, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்க… வாழைப்பூ துவையல் ரெடி!
விரும்பினால், வாழைப்-பூவை வதக்கி அரைக்கலாம்.

இதை சாதத்துடன் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:05 pm

பனானா ஜெல்லி

தேவையானவை:


வாழைப்பழத் துண்டுகள் – அரை கப், ச
ர்க்கரை – முக்கால் கப்,
சைனா கிராஸ் பவுடர் ( டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சைனா கிராஸ் பவுடரைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடம் ஊற விடவும். பிறகு, அதனை மிதமான தீயில் வைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கவும். அதில், சர்க்கரையைப் போட்டு மெதுவாக கரைய விடவும்.
பாத்திரத்தை இறக்கி லேசாக ஆற வைத்து, இளம் சூட்டில் இருக்-கும் போது, வாழைப்-பழத் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, கிண்ணங்களில் விட்டு, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, ‘ஜில்’லென்று பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:06 pm

சீரக வாழைக்காய்

தேவையானவை:

துண்டுகளாக நறுக்கி, வேக வைத்த வாழைக்காய் – 2 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும். தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் நன்றாகக் கிளறவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:07 pm

வாழைத்தண்டு சாலட்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்,
நறுக்கிய வெள்ளரிக்காய், குடமிளகாய் – தலா கால் கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
கடுகு – கால் டீஸ்பூன்,
 உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கடுகு, எண்ணெய், கொத்தமல்லி தவிர, மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வாழைத்தண்டு கலவையில் கொட்டி, மீண்டும் ஒருமுறை கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

‘சிக்’கென்ற உடல் வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவாக இதனை சாப்பிடலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:08 pm

வாழைப்பழ ஜாம் ரோல்ஸ்

தேவையானவை:

கெட்டியான ரஸ்தாளி (அ) பச்சை வாழைப்பழம் – 2,
ஏதேனும் ஒரு ஃப்ரூட் ஜாம் – அரை கப்,
முந்திரி, பாதாம் (பொடித்தது) – ஒரு கப்.

செய்முறை:

பழத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
ஃப்ரூட் ஜாமில் சிறிதளவு சுடுதண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வாழைப்பழத்தை அந்தக் கலவையில் தோய்த்து எடுக்கவும்.
பிறகு, பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாமில் ஒருமுறை உருட்டி எடுத்துப் பரிமாறவும்.

இது, திடீர் விருந்தாளிகளுக்கான உடனடி டெஸர்ட்!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:09 pm

வாழைத்தண்டு சூப்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – கால் கப்,
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும்.
அதனை, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த சூப்பை பருகி வர, எடை குறையும்; சிறுநீரகக் கல் கரையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:10 pm

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்,
 துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டித் தயிர் – அரை கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
துவரம்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.
பிறகு, தண்ணீரை வடித்து, சீரகம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதுடன், வேக வைத்த வாழைத்தண்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, நன்றாகக் கடைந்த கெட்டித் தயிரை விட்டுக் கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by mohaideen Sun Aug 24, 2014 6:11 pm

பாசிப்பருப்பு – வாழைத்தண்டு கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் – 3,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அதனுடன், வாழைத்தண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக விடவும்.
அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் இறக்கி, தேங்காய் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வகை வகையான வாழை சமையல் Empty Re: வகை வகையான வாழை சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum