தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர்

View previous topic View next topic Go down

சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர் Empty சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர்

Post by மகா பிரபு Thu Sep 19, 2013 1:59 pm

வரலாறு:
 
மிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நகரம் தஞ்சை. இந்த  பகுதியை  ஆண்ட தனஞ்சய முத்தரையரின் பெயரையே கொண்டு இந்நகரம் "தனஞ்சய ஊர்"
என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றதாக கூறப்படுகிறது.

     கி.பி. 850-ல் தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விஜயாலயன் கைப்பற்றித் தஞ்சையில்  சோழர் ஆட்சியைத் நிறுவினான். இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் பெற்றது. கி.பி. 1532-ல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்ததால் தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.
     
        கி.பி 1676-ல் மராட்டிய மன்னனர் சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி  ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன.

1832-1855 காலத்தில் ஆண்ட இரண்டாம் சிவாஜி மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் சென்றது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.


 
தஞ்சை பிரகதீசுவரர் கோயில்:
[You must be registered and logged in to see this image.]        
க்கோயில் பெருவுடையார் கோயில் என்றும் தஞ்சை பெரிய கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது . இக்கோயில் உலக பரம்பரியச் சின்னமாகா யுனெஸ்கோவினால்
அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் அமைப்பானது பண்டைய தமிழர்கள் கட்டடக்கலையில் கொண்ட நுட்பமான அறிவை காட்டுகிறது.
     இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே வைத்து கோயில்கள் கட்டப்பட்டுகொண்டிருந்த அக்காலத்திலேயே இக்கோயில் 15 தளங்களைக்  கொண்டு சுமார் 60 மீட்டர் உயரத்தில்  கட்டப்பட்டுள்ளது. [You must be registered and logged in to see this image.]இக்கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செதுக்கப்பட்டது ஆகும். இதன் உயரம் 14 மீ, நீளம்      7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


சரசுவதிமகால் நூலகம்:


[You must be registered and logged in to see this image.]      லகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாக உள்ளது  தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம். இந்த நூலகம்  சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர் நாயக்கர்  மன்னர்கள் மற்றும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களாலும் வளர்ச்சிப்பெற்றது.

    கல்வெட்டுகளில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி முதலில் இந்நூலகம் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம்   என அழைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் பணியாற்றிவர்களை சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டனர்.

       இந்நூலகத்தில்  தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன்,  இலத்தீன், கிரேக்கம் முதலிய  பலமொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப்பிரதிகளும், அச்சுப்பிரதிகளும் உள்ளன. இந்நூலகத்தில் சுமார் 25,000 சமஸ்கிருத நூல்கள் உள்ளன. அதுமட்டுமின்றி 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 'நந்திநாகரி' என்னும் எழுத்து வடிவத்தில் உள்ள சுவடிகளும் இங்கு உள்ளன.
[You must be registered and logged in to see this image.]     கி.பி. 1703-ல் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட 'சீவகசிந்தாமணி' நூல் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட 'சாமுத்திரிகா' என்ற அரியநூல் ஒன்றும் இந்நூலகத்தில் உள்ளது .





தஞ்சை ஓவியங்கள்:
[You must be registered and logged in to see this image.]        ந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து தஞ்சாவூரில் குடியேறிய மூச்சிகள்  என்ற ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இத்தஞ்சை ஓவியத்தினை குலதொழிலாக கொண்டனர். தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் கலைகளின் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்பதால் இவர்களுக்கு வேண்டுமளவிற்கு வாய்ப்புக்களை வழங்கி ஆதரித்து வந்தார்.
கி.பி. 16 முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், விஜயநகர பேரரசின் நாயக்கர்கள்,  ஆகியோர்  தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். இதனால் தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.
மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது.


தஞ்சாவூர் அரண்மனை

 
[You must be registered and logged in to see this image.]      நாயக்கர்களால் பாதியும் மீதி மராட்டியர்களாலும் கட்டப்பட்டது. கிழக்குப் பிரதான வீதியில் உள்ள இந்த அரண்மனை வரிசைத் தொடராகக் கட்டங்களாக இருக்கும். இதன் நுழைவாயில் நான்கு கட்டுகள் கொண்டு அரசவைக்கு கொண்டுசெல்வதாக இருக்கிறது. அங்கிருந்து வடக்கு, கிழக்கு புறவாயில்களுக்குச் செல்லும் வகையில் சுற்றுச்சுவர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

   

[You must be registered and logged in to see this image.] மூன்றாவது கட்டின் தெற்குப்புறத்தில் 190 அடி உயரத்தில் எட்டு அடுக்கு கொண்ட கோபுரம் உள்ளது. இதுவே இந்த அரண்மனையின் கண்காணிப்புக் கோபுரமாகவும், ஆயுதக் கிடங்காகவும் கி.பி. 1855 வரை இருந்து வந்துள்ளது.
 


தஞ்சை தலையாட்டி பொம்மை:
[You must be registered and logged in to see this image.]        லைகளுக்கு பெயர் பெற்ற தஞ்சையில் கி.பி. 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் உருவானதுதான் தலையாட்டி பொம்மைகள். தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தினை பறைசாற்றும் இப்பொம்மைகள் காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படுகிறது. இப்பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும் மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப் படுகின்றன. இதனால் இப்பொம்மைகள் சாய்த்து தள்ளினாலும் கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப  செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன, முதலில் ராஜா ராணி பொம்மைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. பிறகு நடன மங்கை பொம்மை, தாத்தா, பாட்டி பொம்மை என காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டு வருகின்றன.

தமிழ் பல்கலைக்கழகம்:
[You must be registered and logged in to see this image.]           மிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளின் உயர் ஆய்வினை நோக்கமாகக் கொண்டு 1981 செப்டம்பர் 15 ஆம் நாள்  தமிழ் மொழிக்கென்று 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம். இப்பல்கலைக் கழகத்தில் தமிழில் உயர்கல்வி, மற்றும் ஆய்வுகள் இங்கு நடந்து வருகின்றன. பழைய நாணயங்கள், இசைக்கருவிகள் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளன. இப்பல்கலைகழகதின் முதல் துணைவேந்தர் மொழியியலாளர் திரு. வ.ஐ. சுப்பிரமணியம் ஆவார்.

நன்றி: goodluckanjana.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர் Empty Re: சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர்

Post by முழுமுதலோன் Thu Sep 19, 2013 3:31 pm

தஞ்சாவூர் பதிவு அருமை நல்ல தகவல்கள் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர் Empty Re: சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர்

Post by முரளிராஜா Thu Jan 16, 2014 8:38 am

தஞ்சாவூர் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர் Empty Re: சுற்றுலாத் தளம் - தஞ்சாவூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum