Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
Page 1 of 1 • Share
நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. "நவம் என்ற சொல்லுக்கு "ஒன்பது என்றும், "புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒருநாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி அமைதியில் ஆழ்த்தி, (உறங்கச்செய்து) தாலாட்டுகிறாள். உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றைக் காப்பாற்றுகிறாள். வேதத்தில், "சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன் என அம்பாளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.
*நவராத்திரி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே நீராடி கூட்டுபிரார்த்தனை செய்யுங்கள். * பூஜையறையைச் சுத்தம் செய்து, கொலு மேடை, பூஜையறையில் "லட்சுமித்தாயே! உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஐந்துமுகம் விளக்கேற்றி, சாம்பிராணி, பத்தி ஏற்றி வையுங்கள். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.
* குழந்தைகளுக்கு தெய்வீக விஷயங்களைக் கற்றுக் கொடுங்கள். அபிராமி அந்தாதியில் ஒரு பாடலை மனப்பாடம் செய்யச் சொல்லுங்கள்.
* கொலு பார்க்க வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மலர்ச்சரம் கொடுத்து வழியனுப்புங்கள். . இதனால் நம் இல்லம் செழிக்கும்.
* பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால் மூன்று தேவியை வழிபட்ட பலன்.
* ஆதரவற்ற குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு உதவி செய்யுங்கள். இதனால் அம்மன் மனம் குளிர்ந்து வேண்ம் வரம் தருவாள்.
* அம்மன் கோயில்களில் விளக்கேற்றுங்கள். மாலையில் விளக்குபூஜை நடத்துங்கள். கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம்.
ஒரு நாள் கும்பிட்டா...ஒன்பது நாள் கும்பிட்ட பலன்: நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பூஜை நடத்த இயலாவிட்டால் அஷ்டமி திதிவரும் தினத்தன்று மட்டுமாவது அவசியம் பூஜிக்க வேண்டும். ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளியானவள் அநேககோடி யோகினிகளோடு தோன்றிய தினமாகையால் அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும். அதே அஷ்டமி தினத்தன்றுதான் மகாமாயையான துர்க்கை நந்தகோபன் இல்லத்தில் அவதரித்தாள். ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது.
சுண்டல் நிவேதனம்: நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ "மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.
http://www.friendstamilchat.com

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி முதல் நாள்: வழிபடும் முறை!!
நவராத்திரியின் முதல் நாளில் அம்பாளுக்கு "மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். "அண்டம் என்றால் "உலகம். "சரம் என்றால் "அசைகின்ற பொருட்கள். "அசரம் என்றால் "அசையாத பொருட்கள். ஆம்...அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
நாளைய நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்
சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரீ!

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வரா ஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியி ருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்ற விறகை மீனாட்சி அம்மன் தலை யில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்துவத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.Last edited by முழுமுதலோன் on Fri Oct 04, 2013 9:52 am; edited 1 time in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண் டவள். விருத் திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபா லனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.
Last edited by முழுமுதலோன் on Fri Oct 04, 2013 9:54 am; edited 1 time in total (Reason for editing : படம் சரியாக வரவில்லை)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி நான்காம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவி யாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
நவராத்திரி ஐந்தாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பா ம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண் டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட் சம் கொடுத்த அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட் சம் கொடுத்த அலங்கார த்தில் காட்சியளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
ஆறாம் நாள் :-எவ்வாறு வழிபட வேண்டும்?
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வா கனமும் சேவல் கொடியும் உடைய வள். தேவசேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவ ங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
ஏழாம் நாள் :-எவ்வாறு வழிபட வேண்டும்?
ஏழாம்நாள் அன்னையை மகாலட் சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம்,தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கல யம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
எட்டாம் நாள் :-எவ்வாறு வழிபட வேண்டும்?
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உட லும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தரு பவள். சத்ருக்கள் தொல்லை யில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்கார த்தில் காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
ஒன்பதாம் நாள் :-எவ்வாறு வழிபட வேண்டும்?
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அரு ளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.சுண்டல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நவராத்திரி கொண்டாடுவது எப்படி?
இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது. அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.
அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றைப் பெண் வடிவமாகக் கருதுவது நமது மரபு. கல்லையும் பெண்ணுருவாக்கி வழிபடுவது நமது கலாசாரம். இவை இப்படி இருக்க பெண் என்றால் பலவீனம் என்று நினைத்து சுய அழிவைத் தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான் நவராத்திரி விழாவின் தொடக்கம்.
மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமை படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள் பாலிக்க அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் “படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.
“தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்” என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறிய வில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆளாகி துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.
சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.

Similar topics
» ஆருத்ரா தரிசனம் கொண்டாடுவது ஏன்?
» நவராத்திரி.. நவராத்திரி..!
» நவராத்திரி விரதம்
» நவராத்திரி டிப்ஸ்!
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
» நவராத்திரி.. நவராத்திரி..!
» நவராத்திரி விரதம்
» நவராத்திரி டிப்ஸ்!
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum