Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
Page 1 of 1 • Share
மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
செரிமானத்திற்கு உதவும்
கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் செரிமானத்திற்கு பெரிதும் உதவி புரியும். வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் அதிகமாக சுரக்க தூண்டுகோலாக விளங்குகிறது கருப்பு மிளகு. இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் செரிமானமாக உதவும். இந்த உணவு வகைகள் சரிவர செரிமானமாகாமல் போனால் வயிற்றுப் பொருமல், செரிமானமின்மை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும். அதிகப்படியாக உற்பத்தியாகும் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கும். செரிமானத்தை சீராக்க, சமைக்கும் போது உணவில் ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள். அது சுவையை கூட்டுவதுடன், வயிற்றையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உடல் எடை குறைய உதவும்
கருப்பு மிளகு உணவை செரிக்க (ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்தல்) வைப்பதிலும் பெரிதும் உதவும். மேலும் அதன் வெளிப்புறத்தில் உள்ள ஆற்றல் மிக்க பைட்டோ-நியூட்ரியன்ட் ஊக்கி கொழுப்பு அணுக்களை உடைத்தெறியும். இது வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க உதவும். இதனால் அதிகப்படியான நீர் வெளியேறுவதால், உடலில் இருந்து நச்சுப் பொருட்களும் வெளியேறும். இவையனைத்தும் கூட்டாக சேர்ந்து, உடல் எடை குறைய துணை புரியும். ஆகுவே உடல் எடை குறைய தினமும் உண்ணும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி கொள்ளுங்கள். அதிகப்படியாக அதை சேர்க்கக்கூடாது. அது வேறு விதமான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வாயு பிரச்சனை நீங்கும்
வாயு உருவாகுவதை தடுக்கும் பொருளான கார்மிநேடிவ் கருப்பு மிளகில் உள்ளதால் வாய்வு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். எனவே உணவில் மிளகாய்க்கு பதிலாக மிளகை சேர்த்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
சருமத்தை தூய்மையாக்கும்
உடலில் இருந்து வியர்வை மற்றும் நச்சுப் பொருட்கள் வெளியேற கருப்பு மிளகு உதவுவதோடு நிற்காமல், அழுக்கு நீக்கியாகவும் உதவுகிறது. மிளகை அரைத்து முகத்திற்கு தடவும் ஸ்க்ரப்புடன் சேர்த்து முகத்தில் தடவினால் இறந்த செல்களை நீக்கி, இரத்த சுற்றோட்டத்தை ஊக்குவித்து, சருமத்திற்கு அதிக ஆக்சிஜனும் ஊட்டமும் அளிக்கும். மேலும் அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் சருமத்தை பருக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பொடுகில் இருந்து காக்கும்
பொடுகை நீக்கும் ஷாம்புக்களை எல்லாம் தூக்கி எறியுங்கள். அதற்கு பதில் மிளகை பயன்படுத்துங்கள். அதிலுள்ள பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்கள் பொடுகை நீக்க உதவும். அதற்கு அரைத்த மிளகை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கப் தயிரில் கலக்கவும். அதனை நன்றாக கலந்து தலை சருமத்தில் தடவவும். அரை மணி நேரத்திற்கு பின்பு தலை முடியை அலசுங்கள். இந்த நேரத்தில் ஷாம்பு பயன்படுத்தாதீர்கள். அடுத்த நாள் தலையை ஷாம்பு போட்டு கழுவிக் கொள்ளுங்கள். மிளகை அதிகமாக பயன்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் அது தலையை காயப்படுத்திவிடும்.
அடைத்த மூக்கை சுத்தப்படுத்தி சளியை நீக்கும்
கருப்பு மிளகில் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளதால், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அது பெரிதும் உதவும். கதகதப்புடன் காரசாரமாக இருப்பதால், சளியை நீக்கி அடைபட்டிருக்கும் மூக்கிற்கு நிவாரணியாக விளங்கும். அதற்கு அரைத்த மிளகை ரசம் அல்லது சூப்பில் சேர்த்து குடியுங்கள். இது உடனடியாக சளியை நீக்கி சுலபமாக மூச்சு விட செய்யும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பசியின்மையை போக்கும்
கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தி சுவை அரும்புகளை ஊக்குவிப்பதை அறிவோம். இந்த குணத்தால் பசியின்மையால் தவிப்பவர்களுக்கு மிளகு ஒரு இயற்கை மருந்தாக விளங்குகிறது. உணவில் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொண்டால் போதும். அது பசியின்மை பிரச்சனையை நீக்கும்.
ஊட்டச்சத்துக்களை உடல் திறமையாக பயன்படுத்த உதவும்
உடலில் உள்ள மருந்து இருப்பை அதிகரிக்க கருப்பு மிளகின் குணங்கள் உதவுகிறது. அப்படியென்றால் உணவில் இருந்து வரும் ஊட்டச்சத்துக்களை உடலில் சரியாக பயணிக்க செய்து ஈர்த்துக் கொள்ள உதவும். இந்த குணம் மருந்து சரியாக வேலை செய்யவும் துணை நிற்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மன அழுத்தம் குறைக்கும்
கருப்பு மிளகில் உள்ள பப்பெரைன் மூளையில் உள்ள அறிவுத்திறன் அமைப்பை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஜெர்னல் ஆப் ஃபுட் அண்ட் கெமிக்கல் டாக்சிகாலாஜி கூறியுள்ளது. அதிலும் சீரான முறையில் மிளகை உட்கொண்டால், மூளை செயல்பாடு ஒழுங்காக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமெனில் சாலட்டிலும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொண்டால், ஆற்றல் அதிகரித்து மன அழுத்தம் நீங்கும். அடுத்த முறை உணவில் காரசாரம் சேர்க்க வேண்டும் என்றால் மிளகை பயன்படுத்துங்கள். இது சுவையை மட்டும் கூட்டாமல், உடல் ஆரோக்கியத்தையும் அதிகரித்து, சந்தோஷமாக வைத்திருக்கும்.
நன்றி: tamil.boldsky.com
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
» உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!
» ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
» பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
» உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!
» ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
» பசலைக்கீரையை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum