Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
Page 1 of 1 • Share
டீசல் விலை உயர்வு : காஸ் சிலிண்டருக்கு கட்டுப் பாடு!: மத்திய அரசின் திடீர் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்?
டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது. அதுபோல, இனி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் அளிக்கப்படும் என்ற கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், “”விஷம் போல ஏறும் விலைவாசி, வரலாறு காணாத பணவீக்கம், வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கிறது.
ஆனால், இதற்கு நேர்மாறாக பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதனைப் பார்க்கும்போது படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியுள்ளது. மேலும், ஒரு குடும்பத்துக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.
இது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கேற்ப திரும்பத் திரும்ப ஏழை, எளிய பாமர மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருவது கண்டனத்துக்
குரியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதும்தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. இது ஒரு வலுவற்ற வாதமாகும்.
இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விலை உயர்வைத் தவிர்த்திருக்கலாம்.
ஆனால், இதனைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு விலைவாசி உயரவே இது வழிவகுக்கும்.
அனைவருக்கும் பாதிப்பு: டீசல் விலை உயர்வினால் ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் கிடுகிடுவென உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை, எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் அதிக கட்டணத்தை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தவிர, காய்கறிகள், பழங்கள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் விஷம்போல உயரும். டீசலை பயன்படுத்தி பம்பு செட்டுகளை இயக்கும் விவசாயிகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு ஏழை, நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும். இரண்டு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்பது எந்தக் குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்யாது.
அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கும் இந்த விலை உயர்வு கடும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனில் மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் இந்த விலை உயர்வையும், சமையல் எரிவாயு கட்டுப்பாட்டையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”” என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,”” எதிர்பாராததும், மிகவும் அதிகமானதுமான டீசல் விலை உயர்வு, தொடர்ச்சியான பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். டீசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, ஏழைகளையும், நடுத்தர மக்களையும், மாத ஊதியம் பெற்று குடும்பம் நடத்துபவர்களையும் பெருமளவு பாதிக்கும்.
மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, டீசல் விலை உயர்வை தாமதம் ஏதுமின்றி திரும்பப் பெற வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உடனடியாக கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று செய்யப்பட்டுள்ள அறிவிப்பும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்”” என்று தன் அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
இது போல் பல்வேறு மாநில முதல்வர்களும் உதிரிக் கட்சித் தலைவர்களும் இந்த திடீர் டீசல் எதிர்ப்பு மற்ரும் கேஸ் கட்டுப்பட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த விலையேற்றம் குறித்து லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி கூறும்போது, ‘மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அவ்வாறு திரும்ப பெறாத பட்சத்தில், நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும்’ என்றார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த இரண்டு உத்தரவையும் உடனடியாக வாபஸ் செய்யக் கோரி நாடெங்கும் ஆளும் கட்சியின் ஆதரவுக் கட்சிகளும் எதிர் கட்சிகளும் பல்வேறு தொழிற்சங்க அபைப்புகளின் துணையோடு பெரும் போராட்டத்தில் ஈடுபட போகிறது.
aanthai

பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு இன்று முடிவு
» பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமல்!
» சிலிண்டர் விலை திடீர் உயர்வு- ரூ11.42 பைசா அதிகரிப்பு
» பெட்ரோல் லிட்டருக்கு 10 காசு, டீசல் விலை 9 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum