தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

View previous topic View next topic Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 7:44 pm

மெல்ல மெல்ல...
==========================================ருத்ரா

மெல்ல மெல்ல..
புல் தரை ஸ்பர்சிக்கிறது.
பட்டாம்பூச்சிகள் ஏறி ஏறி வழுக்கி
சருக்கி ஆடுகின்றன.
மேக்னா தீக்குழம்பும் தாண்டி
வெண்டைக்காய் பிஞ்சு விரல்களின்
நகப்பூச்சு
கிலு கிலுப்பையை
குலுக்குகிறது.
அதிலிருந்து ஒரு கள்ளச்சிரிப்பு
வெறுமைக்குள்ளும்
பூவாணம் சிந்துகிறது.
பொட்டு பொட்டு வெளிச்சங்களில்
"சரஸ்வதியின்" காய்ந்த உதடுகள்
ஈரப்படுத்திக்கொள்ளுகின்றன.
நாயுருவிகள் கூட‌
என் மேனி வருடி சப்திக்கின்றன.
காற்றின் அடுக்குகளில்
நுரையீரல் நந்தவனங்களில்
வழு வழுப்பாய் புரள்கின்றேன்.
பட்டம் விடும் சிறுவன் தடவிய‌
கண்ணாடித்தூள் கயிற்றில்
ஏதோ ஒரு தொப்பூள் கொடி
மனித நாற்றத்துடன் ரோஜாவின் கூழ் காய்ச்சி
பூசியிருக்கிறது.
கழுத்து அறுபட்டால்
வானத்துக் கழுத்து நரம்புகள் புடைத்து
ஓசை கிளப்பும்.
ஜாக்கிரதையாய் தழுவுகிறேன்.
சப்பாத்திக்கள்ளியின்
சிவப்பு பூக்குண்டு முள் சிலுப்பி
முணு முணுக்கிறது.
என் மீது அப்பிக்கொண்ட‌
தட்டான் பூச்சியின் கண்ணாடி சிறகுகள்
என் மகாநிர்வாணத்துக்கு
ஆப்டிக் ஃபைபரில் பிக்கினி உடுத்துகிறது.
சிறு சிறு வெடிப்புகளின்
நீர்க்கூந்தல்களில் நங்கூரம் பாய்ச்சுகிறேன்.

அவள் தம்பி பொடிப்பயலுக்கு
அவள் சுவாசத்தில் இருந்த என் சுவாசத்தையும்
மௌன முத்தங்களால்
ஊதி நிரப்பி விட்ட‌
வண்ணப் பலூனின் பவனி இது.
உடையும் வரை உலவட்டும்.
உடையாமல் அவள்
உதட்டுத்தீவிலேயே இறங்கட்டும்.
உள்ளே ஒரு அண்டம்.
வெளியே வெறும் சோடா மூடி.
இதிலா
என் ஏழுகடல்கள் அலை குளிக்கும்?
உருண்டு கொண்டே இரு.
உருளும் திஹார்க்கூடம்
அவள் கட்டிய கட்டிடம் இது.
விடுதலை
அவள் மெஹந்திப்பஞ்சு மேகங்களின்
விளிம்புக்கூர்மைகளில்.

பூமிக்குள்ளும் கேட்கும் அவள் லப்..டப்.
வாய்ஸ் சிந்தசைசரில்
அவள் சொல்கிறாள்
ஐலவ்யூயூயூ..டா.....டா...!

================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by sawmya Thu Oct 17, 2013 7:53 pm

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by kanmani singh Fri Oct 18, 2013 11:08 am

இரண்டு முறை படித்தபின்தான் புரிந்தது.நல்ல கவிதை..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 18, 2013 1:24 pm

கைதட்டல் கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 15, 2013 12:29 pm

"ராமஜெயம்..."
=======================================ருத்ரா


வைகுண்டம்.
விஷ்ணு ஏதோ நோட்டுபுத்தகத்தில்
எழுதிக்கொண்டிருக்கிறார்.
என்ன எழுதுகிறீர்கள்?
பூதேவியும் ஸ்ரீ தேவியும்
ஆவலாய் கேட்டார்கள்.
"ராமருக்கே ராமஜெயமா?"
"நா...ரா...யணா"
அல்வாவுக்கே அல்வாவா?
கொண்டையில் பூ சுத்தி
சப்பளாக்கட்டை துந்தணா சகிதமாய்
"சோ"வின் குறும்பும்
முட்டைவிழியுமாய்
வந்து நின்றார் நாரதர்.
"நாரதரே!போம் அப்பாலே.
அது சரி..
பூலோக சஞ்சாரமெல்லாம் ஆச்சா..?
"திவ்யம் திவ்யம் கேசவா!
ஏதோ
12.12.13ங்கிறாளே.
அமர்க்களம் போங்கோ!
மகாப்ரபு நோட்டக் காம்பியுங்கோ"
"விடும் நாரதரே!"
அதற்குள் நோட்டு கை தவறி
கீழே விழ
காற்றில் படபடத்து
பக்கங்கள் தெரிந்தன...
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
.............................
.............................
........................ரஜனி"

==============================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 15, 2013 12:29 pm

மீண்டும் ஆரம்பிப்போம்
===============================ருத்ரா

குவா குவா என்று
என் தேசிய கீதம் பாடிக்கொண்டு
பூமிக்கு வந்தேன்.
இங்கு
மண் இல்லை.
கல் இல்லை.
கரடு முரடு ஏதும் இல்லை.
பூக்களே என்னை ஏந்தின.
பூக்களே மூச்சுகளால்
மொய்த்தன.
பூக்களே
ஒலித்தன.
பூக்களே
ஒளிர்ந்தன.
இது தான் அன்னை மடி
என்று
எனக்கு புரிய‌
எத்தனை கண்ணீர்
எத்தனை வலி
எத்தனை வதை
இதுவும் கூட‌
எல்லாம் அந்த அன்னைக்கே.

பெயர் சூட்டுவிழா
என்று
என் தேசத்துக்குள்
எத்தனை அணிவகுப்புகள்.
அலங்காரங்கள்.
தோரணங்கள்.
அதுவரை
இவ்வளவு ரொக்கமும்
பவுன் நகைகளும்
கொடுத்துவந்தவளுக்கு
அன்று தான்
நானே
கோடி கோடியாய்
பவுன் பவுனாய்
என் அன்னைக்கு
அர்த்தமாகியிருந்தேன்.
அர்த்தம் இல்லாத
என் அழகையிலும் கூட‌
அந்த அர்த்தம் புரிந்தது.

தன்னையே
செராக்ஸ் எடுத்த களிப்பில்
இந்த பெண்குழந்தையான என்னை
பொத்தி பொத்தி மகிழ்ந்தாள்.
தன் இதயத்தைக்கொண்டு
தைத்த சிறகுகளால்
என்ன அடைகாத்தாள்.
முட்டைகளைத்தான்
பறவைகள் அடைகாக்கும்.
என்
ஒவ்வொரு தருணங்களையும்
அவள்
தன் உயிரின் வெப்பத்தால்
தன் கனவின் தட்பத்தால்
அடைகாத்தாள்.

ஆண்டுகள் உருண்டன.
அன்ன பாயசம்
வெள்ளிக்கிண்ணம்
அப்புறம்
வித்யாப்யாசம்
கலைவாணியின்
கனமான ரத்ன வீணையின்
ஆதாரசுருதிகள்
வருடிக்கொடுக்க‌
இப்போது
நான் ஒரு டாக்டரும் ஆகிவிட்டேன்.
மெடிகல் காலேஜில்
சேர்ந்த முதல் நாளே
என்னை
ஆபாசமாக ரேக்கிங்க் செய்தவனே
இன்று என் கணவன்.
அவனும் ஒரு டாக்டர் தான்.
அந்த ஆபாசத்திலும்
ஒரு காதலின் விதை விழுந்தது
எப்படி என்றே
எனக்குத்தெரியாது.
அன்னத்தூவிகளின்
அன்னைமடி கூடவா
நெருஞ்சிக்காடு ஆகிவிடும்
இந்த‌
காதலின் நெருப்புக்காட்டில்.
அவள் எண்ணும் ஆலகாலம்
எனக்கு அமுதம்.
அதையும் எனக்காக‌
விழுங்கினாள் என் அன்னை.
அந்த அற்புதமான
அன்னையின் அத்தியாயங்களை
எப்படி கடாசினேன்
என்று எனக்கே தெரியவில்லை.

காதலன் கணவன்
என்ற இந்த இரண்டுக்கிடையே
ஆரம்பத்தில் இருந்தது
காஷ்மீர் பள்ளத்தாக்கு தான்.
பனிக்குல்லா போட்ட பூக்கள்
படகு வீடுகள்
எனும் கனவுப் பிரவாகங்கள் தான்.
அப்புறம் திடீரென்று
ஒருநாள்
அது கரைந்து போனது.
கல்லூரியில் மட்டும் அல்ல‌
வெளியிலும்
"ரேக்கிங்க்"செய்யும்
ஒரு சேடிஸ்ட் ஆகி
அந்த "கணவன்"
என் கண்ணை விட்டு நழுவி
எங்கோ போய்விட்டான்.

அவன் இட்ட தீப்பொறி மட்டும்
எனக்குள் உருண்டு திரண்டது.
கட்டுப்பெட்டியாய்
இருந்த என் அம்மா
ஏன் என் காதலை எதிர்த்தாள்
என்று இப்போது புரிந்து கொண்டேன்.
"உன் கல்யாணம்
ஒரு வியாபாரம் தானே?"
அம்மாவை
எத்தனையோ தடவை சீண்டியிருக்கிறேன்.
பதிலுக்கு என்னை அவள் மடக்கினாள்.
பார்த்தாயா
உன் காதல் வியாபாரத்தை.
இன்பம் எனும்
லாபம் மட்டுமே போதும்
என்று ஓடிவிட்டானே
உன் காதல் வியாபாரி.
அவன் எங்கேயும் ஓடிவிடவில்லை.
இங்கே தான் இருக்கிறான்.
கட்டிடங்களும் டாலர்களுமாய் குவிக்கிறான்.
சட்டத்தை
சுருட்டி மடக்கி
சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு
மதிப்புமிக்க மானிடத்தை
கசாப்பு பண்ணிக்கொண்டு இருக்கிறான்.
"மனித உறுப்புகளின் வங்கி"யை
கறுப்புத்தனமாக‌
நடத்திக்கொண்டிருக்கிறான்.
நம் நாட்டின் மக்கள் தொகையே
அவன் பணக்கடல்.
அந்த ஈசல்களின் வறுமைக்காட்டில்
அவனுக்கு கொள்ளை மழை.
எனக்குள் சொக்கப்பனை
தினம் தினம் எரித்தது.
என்னுள் விழுந்த‌
அந்த சொட்டுப்பொறியை
பத்து மாத வேள்வித்தீக்கு
ஆயத்தம் ஆக்கிக்கொண்டேன்.
இந்த தீயை வளர்த்து தான்
அந்த தீயை அழிக்கவேண்டும்.
அந்த இருட்டுப்பிண அரக்கனை
ஒழிக்கவேண்டும்.
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
மாங்காயும் மசக்கையுமாய்
மண்ணும் சாம்பலும் தின்று
ருத்ரம் சமகம் சொன்னேன்.
ஒரு அன்னையை தாங்கும்
அன்னையாயும்
என் அன்னை நின்றாள்.
அந்த ஒரு நாள்.
வலி..
கோடிக்கால் பூதமாக‌
என்னைச் சுற்றிக்கொண்டது.
அய்யோ..
பொறுக்க முடியவில்லையே.
நான் ஆவியாகி விட்டேனோ!
உத்திரத்தில் தொங்கும்
அந்த சரவிளக்கில் போய்
சுற்றிக்கொண்டேனோ?
அந்த எரிமலை லாவாவின்
கன்னிக்குடம் உடைந்தது...

குவா குவா...
மறுபடியும் இனியகீதம்.
"டப் பென்று" அறுந்தது
தொப்பூள் கொடி.
அந்த நினவுகளும் தான்.

கருப்பைக்குள்ளுமா
அந்த பேய்நிழல்?
எங்கே
அந்த காதல்
கல்யாணம் எல்லாம்?
இது வரை எல்லாம்
கனவு தானா?

குவா குவா குவா
அழுகை மட்டுமே
அங்கு அமுதம்.

"அடியே!பேத்தி..தான்.
சுகப்பிரசவம்..."
சுற்றம் சூழ‌
மங்கல இரைச்சல்கள்.

வளர்ந்தது
கருவா?
கருவின் கனவா?
இனி
மீண்டும் ஆரம்பிப்போம்.

================================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Dec 15, 2013 12:30 pm

மீசை முறுக்கிய பாரதி
=========================================ருத்ரா

மீசை முறுக்கி
சுட்டுப்பொசுக்கும்
இரு தீக்கோளங்கள் போல்
உருண்டை விழி காட்டி
ஒரு இமயத்தை
முண்டாசு கட்டி
மூச்சும் பேச்சும்
தமிழ் மூளும்
தீஞ்சுடர் ஆக்கிய‌
அந்த‌
சொற்பெருங்கடல் தன்னை
நாலு சட்டத்தில்
கண்ணாடி மாட்டி
பிறந்த நாளான
இன்று மட்டும்
மாலை சூட்டி
சூடம் காட்டும் போது
கண்ணாடியில்
அந்த சுடர் நிழல்
பளாரென்று
நம் கன்னத்தில் அறைகிறது.

"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?"

இந்த வரிகள்
சாட்டையடிகளாய்
நம்மை விளாசுகின்றனவே.


உங்கள்
"நெஞ்சு பொறுக்குதில்லையோ
உங்கள்
நிலைகெட்ட "நிலை" உணர்ந்து?

அப்புறம் சில வரங்கள் கேட்பதாய்
அவர் வரிகள் தொடர்ந்தாலும்

நம்மிடம்
தமிழ் எனும் உணர்வு
மழுங்கியிருப்பதை
மனித நேயம்
மறைந்து போயிருப்பதை
சுட்டிக்காட்டிய‌
அந்த‌
"சுளீர்கள்"
நம் உள்ளத்தை
சுடவில்லையா?

======================================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:05 am

"க்ராஃபிக்ஸ்"
=======================================ருத்ரா

ஊர்த்துவ தாண்டவம்.
உடுக்கை ஒலிக்கிறது.
தூரத்தில் அல்ல.
ஸ்டெதெஸ்கோப்பில்.
என் நுரையீரல்கொத்துகளின்
"ரத்ன சபையில்".
இதயத்தின் மின் துடிப்புகள்
துப்பிய இ.சி.ஜி.வரிகளில்.
நாடிகளுக்குள்
அருவமாய்
கரு தரிக்கும்
உத்திரகோச மங்கை
மரகத லிங்கத்தில்.

"ஆஞ்சியோ கிராம்களில்"
அகப்படாத
ஆத்மாவின் வலிப்புகளில்.
எருமை வாகனத்தின்
முரட்டுக் கொம்புகளோடு
மானசீகமாய்
டாக்டர் நடத்தும்
ஜல்லிக்கட்டுகளில்.
குடல் கிழிகிற சத்தம்
எனக்குள்ளே கேட்கிறது.
"ஹிம்ஸை த்வனி"யின் ஆலாபனை...

என் கூட
இப்போது
கொத்துசாவிகள் இல்லை.
பாஸ்புக்குகள் இல்லை.
புருஷ சூக்தங்கள் இல்லை.
ஹெரால்டு ராபின்ஸ் புத்தகங்கள் இல்லை.
இந்த
மேஜை விளக்கு கூட
இப்போது
திடீரென்று
ஒரு கொள்ளிச்சட்டி .
கண்முன்னே
கணினியின் "ஸ்க்ரீன் சேவர்கள்"
பிசைந்து பிசைந்து
பிதுக்கும்
"பிக்காஸோ"க் கனவுகள்.
விறைத்துப் போன
கணங்களின்
"ஃபாஸில்" அடுக்குகளாய்
எங்கும் வரட்டிகள்.
"ஃப்ராக்டல் ஜாமெட்ரியின்"
சின்னா பின்ன சித்திரங்களாய்..
கலர் கலர் மகர ஜோதிகளாய்..
சிவன் உடுத்திய‌
அந்த புலித்தோலின்
ஒவ்வொரு புள்ளிக்குள்ளும்
புளகாங்கிதத்தின் சொக்கப்பனைகளாய்...
"மேண்டல்ப்ராட் செட்"டின்
பூதம் காட்டும் கிறுக்கல்களாய்...
இந்திரன் மேனியில்
கண்களாய் மொய்த்த
எய்ட்ஸ் ஊர்வலங்களாய்...

இந்த வானத்தை
செதுக்கிகொண்டிருக்கும்
உளிகள் எங்கே ?
என் கடைசி மூச்சை
இத்தனை அழகாய் "க்ராஃபிக்ஸ்"செய்த
மென்பொருளின்
மெய்ப்பொருள் யாது ?
..........
அதிகாலை
சன்னல் வழியே
சூரியன் பற்றியெரிந்தது.
என் சிதை
வானத்திலா ?

========================================================ருத்ரா
("திண்ணை" 02 டிஸம்பர் 2001 இதழில் வெளிவந்தது)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:09 am

மகப்பேறு
==============================================ருத்ரா
("திண்ணை"/ 22 டிசம்பர் 2001/"மீள்பதிவு")




எனக்கு தெரிகிறது.

டாக்டர் வருடிகொடுக்கிறார்

என் தாயின் நெற்றியை.

புதைக்கப்பட்ட

டைம் பாம்ப்

இதோ வெடிக்க காத்திருக்கிறது.


கடிகாரமுட்கள்

என் ஜன்மநட்சத்திரத்தை

குத்தி குத்தி

காட்டிக்கொண்டிருக்கிறது.

என் அன்னையின்

நரம்புக்குள்

அக்கினியாய் பாய்கிறேன்.

இருட்டோடு

வேர் பிடித்து கிளை பரவி

'பிக் பேங்க் '

மறுமுனைவரை

வாசம் பிடித்து வந்திருக்கிறேன்.

பிரபஞ்சத்தை பிசைந்து

சுருட்டிக்கொண்டு

வரக்காத்திருக்கிறேன்.

வெளியே எனக்கு

என்ன வர்ணம் பூசக்காத்திருக்கிறீர்கள் ?


அதோ

வலியின் விரிவு

'பொக்ரான் ' கிளப்பிய

அலை வட்டங்களாய்

அன்னை மணி வயிற்றில்.....

காலம் கிழிந்தது.


துணிப்பரப்பில்

நிமிடங்களின் கரைசலில்

எனது முதல் மைல்கல்

ஊன்றப்பட்டு விட்டது.

ஓட்டுப்பெட்டிகள் வாய் பிளக்க

அடையாள அட்டைகளில்

நமைச்சல் எடுக்க

கணக்கில் ஒன்று கூடிவிட்டேன்.

'என்ன குழந்தை ?

ஆணா ?பெண்ணா ? '

கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறது.


அதே கணத்தில்

என்னோடு பிறந்த

அந்த கருப்பு ஆட்டுக்குட்டிக்கு

அடியில்

ஒரு கசாப்பு கத்தியின் நிழல்

ஒட்டிக்கிடக்கிறது.


எனக்கும்...

என் காலில் ஒன்று இடறுகிறது.

அது...

சாக்ரட்டீஸ் அருந்திவிட்டுச் சென்ற

கோப்பை.

அந்த 'ஹெம்லாக் ' விஷத்தின்

மிச்ச சொச்சம் எல்லாம்

உங்கள் குரல்களில்...

உங்கள் வசனங்களில்....

உங்கள் சாம்பிராணி கற்பூரங்களில்..

சவம் மூடிய சல்லாத்துணியாய்

படலம் காட்டுகிறது.


பிரசவம் ஆனது

கேள்வியா ? விடையா ?


பட்டிமன்றங்களில்

சவைத்துக்கொண்டே இருங்கள்

காலம்

உங்கள் நாக்குகளில்

சக்கையாகப் போகும் வரை.

===============================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:11 am

"ராமஜெயம்..."
=======================================ருத்ரா


வைகுண்டம்.
விஷ்ணு ஏதோ நோட்டுபுத்தகத்தில்
எழுதிக்கொண்டிருக்கிறார்.
என்ன எழுதுகிறீர்கள்?
பூதேவியும் ஸ்ரீ தேவியும்
ஆவலாய் கேட்டார்கள்.
"ராமருக்கே ராமஜெயமா?"
"நா...ரா...யணா"
அல்வாவுக்கே அல்வாவா?
கொண்டையில் பூ சுத்தி
சப்பளாக்கட்டை துந்தணா சகிதமாய்
"சோ"வின் குறும்பும்
முட்டைவிழியுமாய்
வந்து நின்றார் நாரதர்.
"நாரதரே!போம் அப்பாலே.
அது சரி..
பூலோக சஞ்சாரமெல்லாம் ஆச்சா..?
"திவ்யம் திவ்யம் கேசவா!
ஏதோ
12.12.13ங்கிறாளே.
அமர்க்களம் போங்கோ!
மகாப்ரபு நோட்டக் காம்பியுங்கோ"
"விடும் நாரதரே!"
அதற்குள் நோட்டு கை தவறி
கீழே விழ
காற்றில் படபடத்து
பக்கங்கள் தெரிந்தன...
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
"ரஜனி ரஜனி ரஜனி ரஜனி ரஜனி
.............................
.............................
........................ரஜனி"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:12 am

"தூண்டிற்புழுவினைப்போல்..."
=============================================ருத்ரா

"தூண்டிற் புழுவினைப்போல்
சுடர் விளக்கினைப்போல்.."
பாரதி துடித்தான்.
எழுத்துக்களெல்லாம்
மீன்களாய்த் துடித்தன.
மீன்கள் எல்லாம்
கண்களாய்த் துடித்தன.
காதல் பொன் தூண்டில் தான்.
அதன் புழு கூட‌
வானவில்லின் கூழ் கொண்டு
கருவுற்றதோ?
வர்ணக்கனவுகள்
"லப் டப்" "லப் டப்" என்றன.
அக்கினியின் ரத்தம்
என் நாளங்களில் எல்லாம்.
விரல்களாய்
வீணைத்தந்திகளில் உனக்கு
தந்தி அனுப்பினேனே!
அது "ஹிந்தோளமா?" "அடானா"வா?
ஏன் இன்னும் அடம் பிடிக்கிறாய்?
இப்போது தான்
டாடா காட்டினேன்
இரண்டு நிமிடம் கூட ஆகவில்லையே
அதற்குள்ளா
என்று நீ எண்ணிவிட்டாயோ?
எத்தனை நானோ செகண்டுகள்?
எத்தனை த்ரேதா யுகங்கள்!
கதையெல்லாம் வேண்டாம்.
உதை ஒன்று போதும்
உன் ஸ்கூட்டரிடம் தான்.
ஆகா!பெட்ரோல் வாசனை!
கிளம்பிவிட்டாயா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:17 am

மீசை முறுக்கிய பாரதி
=========================================ருத்ரா

மீசை முறுக்கி
சுட்டுப்பொசுக்கும்
இரு தீக்கோளங்கள் போல்
உருண்டை விழி காட்டி
ஒரு இமயத்தை
முண்டாசு கட்டி
மூச்சும் பேச்சும்
தமிழ் மூளும்
தீஞ்சுடர் ஆக்கிய‌
அந்த‌
சொற்பெருங்கடல் தன்னை
நாலு சட்டத்தில்
கண்ணாடி மாட்டி
பிறந்த நாளான
இன்று மட்டும்
மாலை சூட்டி
சூடம் காட்டும் போது
கண்ணாடியில்
அந்த சுடர் நிழல்
பளாரென்று
நம் கன்னத்தில் அறைகிறது.

"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?"

இந்த வரிகள்
சாட்டையடிகளாய்
நம்மை விளாசுகின்றனவே.


உங்கள்
"நெஞ்சு பொறுக்குதில்லையோ
உங்கள்
நிலைகெட்ட "நிலை" உணர்ந்து?

அப்புறம் சில வரங்கள் கேட்பதாய்
அவர் வரிகள் தொடர்ந்தாலும்

நம்மிடம்
தமிழ் எனும் உணர்வு
மழுங்கியிருப்பதை
மனித நேயம்
மறைந்து போயிருப்பதை
சுட்டிக்காட்டிய‌
அந்த‌
"சுளீர்கள்"
நம் உள்ளத்தை
சுடவில்லையா?

======================================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:19 am

"வாகையடி முக்கு"
====================================ருத்ரா.

திருநெல்வேலிக்காரனுக்கு
இது
நியூயார்க் "டைம்ஸ் ஸ்குவேர்".
அந்த முக்கில் நின்று
எத்தனை மணித்துளிகளை
கரையவிட்டிருப்பேன்.
என்னிடமிருந்து
நீளமாய் ஓடும்
தெக்குப்பூத்தெருவும்
நீலச்சுண்ணாம்பு பூசி
என்னவோ மஞ்சள் பூசிக்கொண்டது போல்
வெட்கப்படும்
தாசாலைகளும்
பட்டாலைகளும்
கொண்ட வீடுகள்
ட்ராமாவுல சீன்கள் மாத்துற மாரில்ல‌
நகந்துக்கிட்டேருக்கும்.
அதெல்லாம் நெஞ்சுக்குள்
ஓலைப்பெட்டி முட்டாசி கணக்கா
சுவையோ சுவை.
ஆனி மாசம்
தூள் கிளப்ப தூள் கிளப்ப ஓடிவிட்டு
அப்புறம்
தகரக்குல்லாய் போட்டு
வெய்யிலில் சுள்ளென்று
நின்று கொண்டிருக்கும்
அந்த சாமித்தேரும் அம்மன் தேரும்
என்னவோ கிசு கிசுத்துக்கொண்டிருப்பது
அந்த சட்டநாத சங்கிலிப் பூதத்தான்களுக்கு
மட்டுமே தெரியும்.
எவ்வளவு நேரம் நின்றாலும்
அந்த தூசிகள் கூட‌
அரைக்கழஞ்சி தங்கத்தூசிகள்
என்று
சொர்ண சொப்பனம்
கண்டுகொண்டு நிற்பேன் நான்.
போகும் முகங்கள்
வரும் முகங்கள்
எல்லாவற்றிலும்
ஏதாவது ஒரு நிழல்
அச்சிடித்திருக்கும்.
இவர் சிந்துபூந்துறைக்காரர்.
இன்னொருவர்
வழுக்க ஓடைக்காரர்.
அதோ அந்த பெண்
நேற்று குறுக்குத்துறையில்
மார்பு வரை சேலைகட்டி
தாமிரவர்ணியில்
முக்கியெடுத்து முக்கியெடுத்து
மேனியை மெருகு ஏற்றியவள்.
இப்போ
என்னை இடித்துவிட்டு
போகிறது போல் போகிறாரே
இவர் வேகத்தில்
எதோ ஒரு கவலைக்கு
கூளக்கடை பஜாரில்
தீர்வுகள் விற்கிறார்கள்
என்பது போல்
அதை வாங்கப்போகும் அவசரம்
அவலம் அவலமாய்த் தெரிகிறது.
சந்திப்பிள்ளையார் கோயில் பக்கம்
ஒரு லாலாக்கடை அல்வா
சுடசுட இலையில் சுருட்டி
கொடுக்கப்படுவது இங்கு
நாக்கில் சொட்டுகிறது.
அங்கே திரும்பி
ரெட்டை சம்முவம்பிள்ளத்தெரு
போறத்தெருவுப்பக்கம்
அந்த பாப்லர் டாக்கீஸில்
"வீடு நோக்கி ஓடி வந்த" பாட்டு
(இன்றோடு கேட்டு கேட்டு
எட்டு நாள் ஆகிவிட்டது)
இங்கு வரை காதுக்குள் குடைந்து
இனிப்பான மயில்பீலியைச்
சொருகுகிறது.
பதி பக்திலே சிவாஜி கணேசன்
பாடிட்டே வரும் காட்சி.
"எலெ.
என்ன நெனப்புலே.
இங்கன நின்னுகிட்டு..
போதும் போதும்
போலாம்.வீட்டுக்கு வா."
தோளுலே தட்டி கூப்புட்டுப்போனான்.
என் அண்ணன்
அந்த தெக்குப்பூத்தெருவுக்குள்
விருந்தாய் வந்த‌
பெரியம்மா வீட்டுக்கு.
"நாளக்கி
ஸ்கூல் தெறக்குலே"
கல்றகுரிச்சி திலகர்வித்யாலம்
கண்முன் வந்தது.
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
ப்ரேயர் பாட்டுடன்
திமு திமு என்று
செகண்ட் ஃபார்ம் வகுப்புக்கு போகவேண்டும்.
"வாகையடி முக்கே"
"வருவேன் ..மறவாதே.
அடுத்த லீவுக்கு."
வெகு பக்கத்தில் ஓடும்
வாய்க்கால் படித்துறையில்
டப் டப் என்று
துணி கிளியிர மாதிரி
தொவைக்கிற சத்தம்
முதுகில் அறைந்தது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 27, 2013 11:27 am

கோடாமை சான்றோர்க்கு அணி."
==========================================ருத்ரா

எல தூக்கிப்பிடிடா த்ராஸ.
ரெட்டு தட்டுலெய்ம் பாரு.
தட்டு வாடப்டாதுலே
ஒரு நூறு கிராம் கல்ல‌
இங்கப்போடுரா
எலே எங்க பாக்கான்
ங்க பாருலெ
கல்லு கூடிப்போச்சு
ரெண்டு காய அங்க போடுலெ.
என்னலே
சொள்ளமாடா
த்ராச கைல நல்லா புடிலெ.
முள்ளு ஆடப்டாதுலே..
................
கார்பரேஷன் லாரி வந்தது.
"எவண்டா நட பாதல‌
கட போடுரது."
த்ராசு உட்பட‌
எல்லாத்தையும்
அள்ளிக்கொண்டு போனது.

சங்கர (ராம)மடம்...இனி
தர்ம சங்கட மடம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by kanmani singh Fri Dec 27, 2013 12:31 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ருத்ரா கவிதைகள் - ரசித்தவை Empty Re: ருத்ரா கவிதைகள் - ரசித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum