தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:26 pm

சுரீர்
==================================================ருத்ரா

காதல் இல்லையென்றால்
பேனாவுக்கு இங்கு இயக்கம் இல்லை.
காகிதங்கள்
எல்லாம் மலட்டு வெள்ளையில்
மலங்க மலங்க விழித்துக்கிடக்கும்.
இல்லையெனில்
கணினியின் விசைப்பலகை கூட
எழுத்துக்களுக்குப் பதில்
ஈக்கள் மொய்த்துக்கிடக்கும்.
செல் போன்களில்
வெறும் மௌனத்தை மட்டுமே
குதப்பிக்கொண்டிருக்க
ஆயிரக்கணக்கில்
பில் கட்ட தயார்.
அந்தப்பக்கம் இருந்தும்
இந்தப்பக்கம் இருந்தும்
பாம்பு மூச்சுகள்
பறிமாறிக்கண்டிருந்தாலும்
காதலின் பரம பதமும்
பகடைகள் உருட்டிக்கொண்டு தான்
இருக்கின்றன.
மாடர்ன் பெயிண்டிங் தூரிகைகளின்
நெய் வண்ண ஓவியங்கள் கூட
காதல் மயக்க பொய்மைகளின்
மனவெளியை
கோடுகளாய்
சுழிகளாய்
காட்டிக்கொண்டு தான் இருக்கின்றன..
ஒரு சாயங்கால மட்டன் ஸ்டால்
தோசைக்கல்லில்
முட்டை பிளந்து சிதறி
அவள் கருவிழியை
பிரபஞ்ச "ப்ளாக் ஹோல்"ஆக்கி
ஓவியம் காட்டி நின்றது.
.....
"ஹாப் பாயில் ரெடி சார்"
சுரீர் என்றது
மிக மிகச்சூடாய் என் கையில் அது.

================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:27 pm

முடியாட்சியின் தீமைகளுக்கு
முடிவு கட்ட வந்த ஜனநாயகம்
பணநாயகமாய் வந்த
முகமூடி முடியாட்சியின் முன்னே
வாலைசுருட்டிக்கொண்டு கிடப்பதே
இன்றைய அரசியல் அவலம்.
செம்மரம் என்றாலும் காவிரி என்றாலும்
கல் குவாரி மணல் குவாரி என்றாலும்
"மறைவாய்ப் புதைந்து கிடக்கும்"
அந்த மாஃபியா "ஓட்டை"
அடையாளம் காணமுடியாமல் தான்
திருநீலகண்டர்களும் சிவபெருமான்களும்
முழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே
நம் ஜனநாயகத்தின் "தல புராணம்"

===============================================ருத்ரா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:27 pm

தாகம்
==============================================ருத்ரா

தெரு வெறிச்சிட்டு கிடக்கிறது.
வெயிலின் வெண்மை நாக்கு நக்கி கொடுத்ததில்
தூசு தும்புகள் கூட மினுமினுத்து
கதிர் வீசின..வெப்பம் கக்கின.
வழக்கமான கோடையின் புலம்பல்
சூரியனை நோக்கி காறி உமிழ்ந்தது.
சன்னல் கம்பிகளில்
பாம்பு மூச்சுகள் சுற்றிக்கிடந்தன.
தாகத்தை தர்ப்பூசணிகளில்
அறு கோணமாய் எண் கோணமாய்
ஒரு குங்கும ஜியாமெட்ரியில்
கொலு வைத்திருந்தார்கள்.
அடங்காத தாகம் அருகே இருந்த‌
தூங்குமூஞ்சி மரத்தின்
பஞ்சு மிட்டாய்ப்பூக்களில் கூட‌
உதடு சப்பிக்கொண்டிருந்தது அருவமாய்.
இயற்கையின் நதிகள்
மனிதன் கைகளின் கசாப்புக்கத்திகளில்
சின்னா பின்னம் ஆனதில்
பத்து பன்னிரெண்டு டி.எம்.சி என்றெல்லாம்
புள்ளி விவரம் வந்த போதும்
அத்தனை டி.எம்.சி யும் தண்ணீர் அல்ல‌
இன்னும் அது
நம் கண்ணீர் தான்.
நம் மண்ணின் தாகத்துக்கு
பூட்டுக்கு மேல் பூட்டுகள் போடும்
அணைக்கட்டுகள் எனும் மகிஷாசுரன்களை
கர்ப்பம் தரித்துக்கொண்டிருப்பதே
கர்னாடம் எனும் துர்நாடகம்.
பேச்சு வார்த்தை மூலம்
இரு மாநிலங்களிலுமே
தேன் ஆறு ஓடலாம்.
பாலாறு ஓடலாம்.
சிந்தனையில் பாழாறு ஓடுகிறதே.
ஓட்டு வங்கி எனும்
புற்று நோய்க்கிடங்கில்
மனித நேயம் செத்துக்கிடக்கிறதே!
சர்வாதிகாரத்தின் கொடூரங்கள் எல்லாம்
கறுப்பு பணத்திலும் லஞ்சத்திலும்
ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டதால்
இங்கு
ஜனங்களும் இல்லை.
நியாயங்களின்
நாயகங்களும் இல்லை.

======================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:28 pm

கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள்
====================================================ருத்ரா


கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட‌
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?

கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?

அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய‌
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப் கள் கிளிகூட‌
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.

==============================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:28 pm

சில "பல்ஸ்களே" பாக்கி.
=======================================ருத்ரா

மயிலிறகில்
மனம் தொட்டு
ஒரு கவிதை
உனக்கு இதோ.
கடல் நுரையில்
சொல்லெடுத்து
ஒரு கவிதை இதோ.
பட்டாம்பூச்சி சிறகில்
பட்டா போட்ட கனவுகளோடு
இதோ கவிதை.
தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று இனித்த உதடுகள்
வருடிய சொற்களில்
கவிதை இனிப்பாய் இதோ..

"போதும் டா மொக்கை.
ஐ லவ் யூ சொல்லுடா
சீக்கிரம்.
டாப் அப் போட
சில பல்ஸ்களே பாக்கி..."

=============================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:29 pm

நாகூர் HONEYபா!
=============================ருத்ரா

அழைக்கின்றார் அண்ணா
என்ற கணீர் தேன்குரலில்
திராவிட கீதம்
யாழ் மீட்டிய‌
மா மனிதர் திரு நாகூர் ஹனீபா
மறைந்ததற்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
எத்தனைப்பாடல்கள்?
அந்த குரல் சுவடுகளுக்கு
இறைவனின் கையெழுத்தும்
போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு.
இறைவனிடம் கையேந்தினேன் என்று
மக்கள் முன் உருகி வழிந்தார்.
காசுகள் குலுங்கும் ஒலிபோல‌
அந்த கைப்பறையின் ஒலியில்
ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.
HONEYபா அவர்களின் தேன்குரலில்
தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை
இந்த தமிழ் மண் மறக்காது.

================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:29 pm

கோர்ட்
==============================ருத்ரா


திரைப்படம் அல்ல இது.
மராத்தியிலும்
மானிடத்தின் மொழி
சிவப்பாகத்தான் இருக்கும்.

சட்டப்புத்தம்
அடிக்கடி வழக்கறிஞர்களால்
தூசி தட்டப்படுகிறது.
அரசியல் சாசனம் அப்படியே இருக்கிறது.
வறுமைக்கோடு போட்டு
"அரிசி கார்டும் மண்ணெண்ணெய்க்கார்டும்"
கொடுத்தார்கள்.
தேர்தல் எனும்
பருவக்காற்று வீசும்போது
பிய்ந்த குடிசைக்குள்ளும் வந்து
ஃப்ரிட்ஜுகள் உட்காரும்.
"சஹர் அவுர் சப்னா"வில்
க்வாஜா முகம்மது அப்பாஸ்
கண்ட கனவு தான் இது.
அந்த நனவை இன்னும்
கொடியேந்திக் கொண்டிருப்பவர்கள்
இந்த பாரத பூமியில்
தெய்வங்களாகத் திரிகிறார்கள்.
இவர்களுக்கு தெய்வங்கள் தேவையில்லை.
"கட் அவுட்டுகளே"போதுமானது.
ஓட்டுகளில் செய்யப்பட்ட‌
நாற்காலிகளில் உட்கார்ந்து
கல் மலைகள் விழுங்கப்படுகின்றன.
மணல்கள் பகாசுரர்களால்
அள்ளி அள்ளி தின்கப்படுகின்றன.
ஆறுகள் எல்லாம்
அவர்கள் வீட்டு குரோட்டன் செடிகளுக்கு.
கோடிகளை
லட்சக்கணக்கில் புதைத்து வைத்திருக்கும்
பொன் முட்டை வாத்துக‌ள்
செங்கோலில் முளையடிக்கப்பட்டு
சுற்றி சுற்றி வருகின்றன.
இந்த ஓட்டுப்பூச்சிகளே
அதற்கு வெண்கொற்றக்குடை பிடிக்கின்றன.
தங்கள் கல்லறைகளை
தாங்களே சிமிண்டும் செங்கல்லும் வைத்து
கட்டிக்கொள்ள‌
பணம் பட்டுவாடா ஆனதில்
பட்டுப்போய் செத்துப்போய்
எப்போதோ
கருமாதி காரியங்கள் ஆகிவிட்டன
நம் ஜனநாயகத்துக்கு.
பொருத்தமாய்த்தான் இந்தியில்
பெயர் சூட்டியிருக்கிறார்கள்
"சுதந்திர திவஸ்"என்று.
(சுதந்திரத்துக்கு திவஸம்)
இந்த வருட "திவஸத்திற்கு"
வாத்தியாருக்கு சொல்லிவிட்டீர்களா?


==‍‍‍‍‍‍‍‍‍‍‍‍==================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:30 pm

அத்தியாயம் (1)
===============================================ருத்ரா

கையாலாகாதவன்
கவிதை எழுதினான்.
மின்னல் கீரைக் குழம்பு வைத்து
சாப்பிட்டேன் என்று.
நிலவை நறுக்கி
உப்புக்கண்டம் போட்டேன் என்று.
கடலிடமே கடலை போட்டேன்
அது
காலடியில் குழைந்து நெகிழ்ந்தது.
என் எழுத்தாணிக்குள்
கோடி கோடி எழுத்துக்கள்!
கம்பன் இரவல் கேட்டான்
கொடுத்து விட்டேன்.
25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட‌
நத்தைக் கூட்டுக்குள்
லே அவுட் போட்டேன்.
உங்களுக்குத் தெரியுமா?
என் காதலி
காலி செய்து தூக்கிப்போட்ட‌
அந்த மெகந்திக்குழாயை
இன்னும் பிதுக்கி பிதுக்கிப்பார்த்து
போட்டுக்கொண்டிருக்கிறது
அந்த பிரபஞ்சம்
இந்த "கேலக்ஸிகளை"!
நான் சுண்டி ஒரு "தூஸ்ரா"போட்டால் போதும்
ஆயிரம் ஆஸ்திரேலியாக்கள்
சுருண்டு விழும்.
கறுப்பு பணம் என்ன கறுப்பு பணம்?
அதற்கு வெள்ளையடிக்கும்
வினோத "ப்ரஷ்"என்னிடம் உள்ளது.
மோடி கேட்டால் மட்டுமே
விற்பனைக்கு உண்டு.
அதன் எம் ஆர் பி விலை...
அச்சிடப்பட்டிருப்பது தெரிகிறதா?
முதல் எண் அழிந்து விட்டது.
அதற்கப்புறம்..எத்தனை "சைஃபர்கள்"..
மில்லியனா? பில்லியனா?
அந்த முதல் எண்
நிச்சயம் பூஜ்யம் அல்ல.
நம் கணித மேதை ராமானுஜம் அவர்களின்
"இன்ஃபினிடி" சூத்திரத்தின் படி போட்டது?

அது என்ன!
கறுப்பு பணம் கத்தரிக்காய் என்று?
காதல் கத்தரிக்காய் என்று
டன் டன்னாய் குவிக்கும்
எழுத்துக்களின் அடியில் எல்லாம் கூட‌
சமுதாய அசிங்கங்கள்
காக்காய் முள்ளாக‌
குத்திக்கிழிப்பதும் கூட‌
கறுப்புக்கவிதைகளே.

சரி...
"சப்னோங்கி சௌதாகர்" களாய்
நுரைக்கோபுரங்கள்
கட்டிக்கொன்டிருக்கிறார்களே அங்கு!
கோலிவுட் பக்கம் போனேன்.
"சஹர் அவுர் சப்னா" என்று
க்வாஜா அஹமத் அப்பாஸ்
அன்று ஒரு நாள்
இந்த செல்லுலோஸ் சுருள் வழியே
நம் மீது நிழல் பாய்ச்சிய‌
அந்த அந்துப்பூச்சிகளையும் கரையான்களையும்
அற்புதமாய் காட்டினாரே!
அதை அசைபோட்டு நடந்தேன்.

இப்போதெல்லாம்
அஞ்சு நிமிட குறும்படங்களையெல்லாம்
முழு நீளப்படமாக்கி
அதிரடி கலாய்ப்பு கானாப்பாட்டு சகிதம்
கலக்கியடித்ததில்
சத்யஜித் ரேக்களும்
அடூர் கோபாலகிருஷ்ணன்களும்
"மெர்ஸல்"ஆகிப்போனார்கள்.

"மெர்ஸல்"ஆகிப்போனார்கள்....

ஆஹா!...
இது நல்ல தலைப்பு!
இன்றே பூஜை போட்டு
மாலையே இசை விழா நடத்தி
நாளையே வெளிவந்து
நாலு நாளில்
"வெள்ளி விழா"கண்டு விடும் வேகம்
இவர்கள் காமிரா வேகம்!
விருதுகள் அங்கே
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
கச்சா பிலிம் சுருளுக்கு
கொஞ்சம் "பெப்" ஏத்தி
காது சவ்வுகளுக்கும் கொஞ்சம்
கலர் ஊத்திக்கொடுத்தால் போதும்
விருது தயார்.

உலக நடப்புகள் வேறு
உலகம் வேறா என்ன?
வினாயகரின் ஞானப்பழ சமாச்சாரம் இது!

ஒரு நவீனக்கழிப்பிட வசதி பற்றிய‌
சிந்தனைக்கும் கூட‌
நமக்கு
ஒரு உலக தினம் கொண்டாட வேண்டியிருக்கிறது.

அந்த கையாலாகதவன்
கவிதை எளுதி பேப்பரை
சுருட்டி மடக்கி
தூர எறிந்து விட்டான்.
உலக தினம் கொண்டாட ரெடியாகி விட்டான்.

உன் காழ்ப்புகளையும் கசப்புகளையும்
ஏன் சில வக்கிரங்களையும் கூட‌
இப்படி எழுத்தின்
விக்கிரகம் ஆக்கி விட்டு
காகிதத்தை மட்டும் கசக்கி எறிவது
என்ன இலக்கியம்?
என்று நீங்கள் கேட்கலாம்.
கசக்கி எறிந்தது காகிதம் மட்டுமே.
கவிதை
கருவுயிர்க்கும்.
மீண்டும் மீண்டும் கருவுயிர்க்கும்.

======================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:31 pm

வேடந்தாங்கல்
==========================================ருத்ரா

ஒன்று
நைந்த சிறகை ஆட்டி
அழகு பார்த்துக்கொண்டது.

இன்னொன்று
அலகை ஆற‌ அமர கூர் தீட்டி
தினவை தீர்த்துக்கொண்டது.

ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அப்படி பார்த்ததே போதும் என்று
தாகம் தீர்த்துக்கொண்டது.

ஒன்று சிற்றலகு பிளந்து
உள்ளே செந்தளிர் போல் நா அசைய‌
இனிய ஒலியை
ஜாங்கிரி ஜாங்கிரியாய்
பிழிந்து
காடு கரையெல்லாம் இனிப்பு..

இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை
சிலுப்பி
எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய்
கொத்தி கொத்தி துளையிட்டது
வெறும் காற்றுப்படலத்தை.

ஒன்று
நேர்குத்தாக‌
தலைகீழாய் பாய்ந்து
அதை கவ்வியே தீருவது
தண்ணீர்ப்பிழம்பின்
மணிவயிற்றைக்கீறி
சிசேரியன் ஆவது போல்
சளக் என்ற சத்தத்தை
அங்கே எதிரொலித்தது.

ஒன்று அசையாமல் கிடந்தது.
அவ்வளவு தான்
அதைப்பார்த்து
மற்றொன்று கா கா ..வென்று
கீறல் விழுந்த கர்ர் சத்தத்தை
காற்றெல்லாம் தெளிக்க‌
அதன் சுற்றம் எல்லாம்
கருஞ்சிறகுக் காடாய் அங்கே குழுமி விட்டது
கருப்புச்சட்டைக்காரர்கள்
திடீரென்று அணிதிரள்வது போல்.

தாய்ப்பறவைகள் எல்லாம்
இன்னும்
தன் பொன் முட்டைக்குள்ளிருக்கும்
பொன் குஞ்சுகளோடு
இந்தப் பிரபஞ்சத்துக்கே
ஒரு பொன் விடியலை
கிழித்துக்காட்டும் பெருமிதத்தை
அரங்கேற்றி பாசாங்கு செய்தன.

ஊசி அலகு கொண்டு
பன்னீர்ப்பூக்குள்ளும்
தேன் சுவைக்க
சிறகை வினாடிக்கு
ஆயிரம் அதிர்வுகளாய்
துடித்துத்தீர்த்தது
சிட்டு ஒன்று.

"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
சிறகொடிந்த‌
அலகொடிந்த‌
ஒலி இழந்த‌
ஒளி இழந்த‌
அந்த பறவைகளின் "வேடந்தாங்கல்" அது.

பாசம் தாங்கியதெல்லாம் போய்
வெறும்
பஞ்சடைத்த
வைக்கோல் கூளமடைத்த‌
பறவைகளாய்
வேடங்கள் தாங்கிய இடம் அது.

அடைய கூடும் இல்லை.
பறக்க வானமும் இல்லை.
கால்களும் இல்லை.சிறகுகளும் இல்லை.
என்ற எல்லைக்கோடு
அங்கு ஆடிக்கொண்டே இருக்கிறது
"ஓலைக்கிளிகள்"போல.

அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த‌
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.

==============================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:31 pm

உலக மகளிர் தினம்
==================================================ருத்ரா.

பெண்ணே!
ஒரு காதலர் தினம்
கொண்டாடிய களைப்பில்
கண்ணயர்ந்து கொஞ்சம்
கண்விழித்த போது
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தினம்.
இரண்டு பேரும் சேர்ந்து மகிழ்ந்த‌
அந்த "வசந்த விழா" தாண்டிய பின்
வந்த‌
அலங்கார வளைவு
"இந்த உலக மகளிர் தினம்."

அன்று உன் வளையல்கள் குலுங்கினால்
அது உன் காதலனுக்கு மட்டுமே!
அதில் அவன் மனம் எல்லாம் தூள் தூள்!
இன்று உன் விரல் தொட்டு
கணினி உலகங்கள் கூட‌
உன் மடியில் "பொமரேனியன்கள்!"
பெண்ணே!
உன் அறிவு கூர்மை தீட்டிய பிறகு
உன் கல்வி "கரையில"வாகிய பிறகு
கடல்கள் கூட வாரிச்சுருட்டிக்கொண்டன.

காதல் பூச்செண்டுகளை வைத்து மட்டும்
உன் நந்தவனத்தை
மிடைந்து கொள்ளாதாதே.
லட்சுமணன் கோடுகள்
உனக்கு பாதுகாப்பா? பாதகமா?
ஆமாம் அந்த ஐயம் தான் உன் நெருப்பு வளையம்.
உன்னை நெருப்பில் குளிக்கவைத்து
புடம் போட்டுக்கொண்டே இருக்கும்
இவர்களை யார்
பழுக்கக்காய்ச்சிய இரும்புக்குழம்பாக்கி
நேர்மை வளையாத "வாள்"ஆக்க‌
அடித்து வார்க்கப் போகிறார்கள்?
ஆணாதிக்கம் என்ற சொல் அலுத்துவிட்டது.
பாருங்கள்!
ஆவணப்படுத்துவதாய் சொல்லி
அவர்கள் "ஆணவத்தையே"தான் இன்று
உலகம் முழுவதும்
நிர்வாணப்படுத்தி இருக்கிறார்கள்.
மகளிர் தினங்கள் இனி
மாணிக்க வீணைகளை
மீட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.
உயிர்ப்பான மானிடத்து ராகங்களை
சுண்டி இழுத்து மீட்ட வேண்டும்.
மகளிர் தினத்தில் உனக்கு
மங்கலங்கள் பெருக எங்கள் வாழ்த்துக்கள்.
உன் மங்கலம் வேறு
மனித குலத்தின் மங்கலம் வேறு அல்ல!
மகளிர்கள் தினமே
மனிதர்கள் தினம்.
கண்களுக்கு ஒரு தினம்
அவற்றின்
ஒளிக்கு ஒரு தினமா என்ன?
ஒளி படைத்த "பெண்ணினாய்" வா! வா! வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!
உலகில் இனி என்றுமே உன்
இதய ஒலி கேட்குமே வா!வா!வா!

====================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:32 pm

ஒரு தீர்ப்பு
===================================================ருத்ரா


நாட்டை தாய் என்றாய்
மொழியை அன்னை என்றாய்
நதியையும் புனித தாய் என்றாய்
ஆனால்
தாயை
நீ
ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை.

தாய்..
அவள் சிரிப்பும் கண்ணீரும்
உனக்கு அரச்சனைப்பூக்கள் தான்.
அவள் பெண்ணாகிய போது
உன் மனைவியாகிய போது
அவளை நீ அர்ச்சனை செய்ததையெல்லாம்
அள்ளிக்கூட்டினால்
இந்த ஆகாயமே
சல்லடையாய் கிழிந்து தொங்கும்.

பெண் எனும் கோவில் உன் தாய் ஆனபோது
நீ ஆத்திகன் ஆனாய்.
மனைவி எனும் பெண் கோவில் ஆகும்போது
நீ நாத்திகன் ஆனாய்

ஆணாதிக்கம் என்ற சொல்லும் அலுத்துப்போனது.
டி.என்.ஏ ..ஆர்.என்.ஏ சமன்பாடுகள் சில‌
மாறிப்போனதால்
அவளை நோக்கி உன் கையில்
சாட்டையா?
இன்னும் உயிரியலின் இந்த நுண்கணிதம்
தெரியாத நீ
மிருகமாகவே தான் வலம் வருகிறாய்.
உன் ஆணவத்தை
நீயே "ஆவணப்படுத்தி"க்கொண்டாய்.
உலகம் பூராவும்
உன் கோரைப்பல் பட்டுமே
ஊடக உரிமை எனும்
வெளிச்சத்தில்
குரூரம் காட்டுகிறது.
பரபரப்பு விளம்பரத்தில்
பணம் குவிக்கும் புல்லுருவிகளின்
மகசூலில்
இந்த பெண்மை எனும்
உண்மை மகரந்தங்கள்
வெறும் கொச்சைப்படுத்தப்பட்ட‌
தூசிகளாய்
தூவிக்கிடக்கின்றன.
பெண்மையை அசிங்கப்படுத்திவிட்டு
ஆயிரம் தடவை
"மகளிர் தின"ங்களால்
கழுவிக்கொண்டாலும்
அசுத்தம் மறைவதில்லை.
ஆம்..ஆண்மை
நியாயத்தை நிலை நாட்டுவதில்
"ஆணமையற்று"ப்போன அந்த அசுத்தம்
மறைவதில்லை.
பெண்களின் இந்த‌
வெற்றுப் பொம்மை சமுதாயத்தில்
என்ன உயிர் இருக்கப்போகிறது?
நமது நியாயங்களெல்லாம்
"இருட்டறையில் பிணந்தழீஇய அற்று.."
இதை விட‌
எவனும் கடுமையாய்
தீர்ப்பு சொன்னதில்லை!

===============================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:32 pm

காதல் ஐம்பாக்கள்
==============================================ருத்ரா


குறும்படத்திலும்
ஒரு குறும்படம் எடுத்தார்கள்
இரண்டு எறும்புகளின் காதல் பற்றி.

____________________________________________(1)


மடல் ஏறினான் சங்க காலக்காதலன்.
காதலிக்கு அமிலம் வீசினான்
இந்தக்கால காதல(க)ன்.


____________________________________________(2)

ப்ளஸ் ஒன் படிக்கும்போதே
ப்ளஸ் டூ படித்தான்.பெற்றோருக்கு பெருமை.
பளஸ் டூ வாய் வந்தது காதலி.

‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________(3)

அவள் "முறுவல்" பாக்க மூணு ஜிபி.
அவள் சிணுங்கல் நோக்க முப்பது ஜிபி.
"ஆண் லைனில்" மில்லியன் ஜிபி அல்லவா
இந்த "பெண்"!

_____________________________________________(4)


அவள் தன் இதயத்தை
பத்திரமாக வைத்துதான் நடந்தாள்
தன் நீளமான கம்பியூட்டர் நோட்டுக்குள்.
காதலுக்கு இவர்கள்
செமஸ்டர்களை தொலைத்தாலும்.

________________________________________________(5)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:33 pm

இதோ ஒரு காதல் கவிதை!
==============================================ருத்ரா


ஒரு படம் வரைந்து
இன்னார் தான் இவர் என்று
எழுதுவது போல் இருக்கிறதல்லவா
தலைப்பு?

காதலின் உயிர்ப்புக்கும்
வேண்டுமா
அடையாளம்?
அப்படியென்றால்
அந்த மில்லியன் சிறகுத்துடிப்புகளில்
அந்த தேன் சிட்டு
தன் தேடல்களை
கையெழுத்து இட்டுக்காட்டுகிறதே
அதன் தலைப்பு என்ன?

கற்பனைகள் உரசல் செய்து
எழுத்தில் உருண்டு திரண்டு நிற்பதற்கு
என்ன தலைப்பு இடுவது?

கண்களில்
இமைவிளிம்புகளில்
இமயங்களை தூக்கி நிறுத்தும்
கனமான இனிப்புகளின்
கனவுகளுக்கு
என்ன தலைப்பு சூடுவது?

மலர்களின்
அடுக்கு இதழ்களுக்குள் கூட‌
அடுக்கு மாடி கட்டிக்கொண்டு
காற்று மகரந்தங்களில்
ஊற்று சுரக்கும்
உன்னத நினைப்புகளுடன்
காத்திருப்பின் கடுவெயிலில்
வடாம் பிழிந்த வாடலில்
அமுதம் துளைக்கும்
வதம் கொண்டு கிடப்பது
என்ன சுகம் என்று
தலைப்பு தருவது?

"எல்லாம் இன்பமயம் "என்று
அந்த "சிம்மேந்திர மத்யமத்தை"
சுடிதார் சகிதம்
அந்த துப்பட்டாவின்
மின்னல் நூல் ஜரிகையில் அலையாட‌
அவனை வருடி வருடிப் பாடும்
ராக மெகந்திக்குள்
சுருள விட்டுக்கொண்டு
ஒரு "ஜுகல் பந்தி" செய்வதன்
சூட்சுமத்தை
என்ன தலைப்பில் இட்டு மகிழ்வது?

பிரம்ம சக்க‌ரத்தின் அம்பத்தேழாவது
மேளகர்த்தாவின்
அந்த உச்சாணிக்கொம்பு "கல்யாணியில்"
அவனோடு நான்
காதலின்
ஆரோகணம் அவரோகணம் எனும்
இரண்டின் ஊஞ்சலிலும்
ஊடாடிக்கொண்டு
தேன் துளியில் திளைப்பதை
என்னவென்று எழுதுவது?

கவிதை என்பதே
காதலின் பட்டுக்குஞ்சம் தானே!
அப்புறமும்
மனதையே சுத்தமாக‌
துடைத்து விடும்
இந்த துடைப்பத்துக்கா
இப்படி யொரு பட்டுக்குஞ்சம்?
"இதோ ஒரு காதல் கவிதை!"
அனிச்சமலருக்கு மேல்
அன்னத்தூவியை
"பேப்பர் வெய்ட்டாக"
வைப்பதற்கும்
இப்படி யொரு தலைப்பா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:33 pm

காதலை எப்படிச் சொல்வது?
====================================================ருத்ரா

காதலை எப்படி சொல்வது?
வார்த்தைகளை தோண்டி தோண்டி
எழுதலாம் என்று உட்கார்ந்தான்.
காகிதப்பரப்பு முழுவதும் மயான அமைதி.
அதன் மேல் பேனா.
அதன் மேல் ஒரு ஈ.
அது கூட கோளக்கண்ணாடி முட்டை போல் தெரிந்த‌
தன் கண்ணின் வலை மிடைந்த பிம்பத்தை
பிசைந்து பிசைந்து உருட்டியது.
முன்கால் நுண்கம்பிச்சுருளை
மீட்டி மீட்டி
ஏதோ வாசித்தது..
இவனுக்கு கேட்டது...
"கொல வெரியிலிருந்து..டங்கா மாரி" வரைக்கும்..
ஆகா.. அவனுக்கு பொறி தட்டியது.
பிச்சு பிச்சு வார்த்தைகளை
எறியணும்.
கடிச்சு கடிச்சுத் துப்பணும்.
மீன் எலும்பு கணக்கா வரி வரியா
அதுல நெழல் விழணும்.
லவ்வு அதுல கவ்வு செய்யணும்..
அம்ப்டித்தேன்..
அப்றம் ரவிக்கை கொக்கி கணக்கா
கப்புன்னு புடிச்சுக்கும்..
அவன் எளுத ஆரம்பிச்சான்.

"டகல் பேட்டா பால் பேட்டா.
ஒம் மூக்கு மேல நா போட்ட‌
சுவாச காத்து பட்டா
அது ஜென்மத்துக்கும் "பட்டா"

ஊய்..
அவன் காதலி விரல்களை
வாய்க்குள் அமுக்கிக்கொண்டு
அடிச்சா பாரு விஸிலு...

லேசர்க கலரு கலரா பிழிஞ்சுதுக
கிடாரும் ட்ரம்மும் ஒலிப்பூக்களை
பிச்சு பிச்சு கோத்துதுக..

ஐ லவ் யூயூயூ...
லவ் லெட்டர் "ச்ஜ்ஜெஸ்டிவ் க்ராபிக்ஸில்"..
நரம்பு நரம்பா கரப்பாம்பூச்சி மீச ஆட்டி ஆட்டி
..ஸூம் இன்..ஸூம் அவுட்.
ஆடியன்ஸ் சுநாமியில் தீக்கொளுந்தா மழ பெஞ்சு..
எல்லாமே கரஞ்சு போச்சு.
கனவுப்பீய்ச்சல்..கனவுப்பீய்ச்சல்
ஆகாசமே கந்தல் தான்...

மறுநாள் சூரியனைக்காணவில்லை.
மரம் தோறும் செடி தோறும்
தொங்கினான் வெட்டிப்போட்ட வேதாளமாய்.

மீண்டும் தொடங்கிவிட்டார்கள்
பேப்பரும் பேனாவுமாய்..
இந்த காதல் விக்கிரமாதித்தர்கள்..

=================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:34 pm

விரல்வழியே...
====================================================ருத்ரா

பெரும்பான்மை சிறுபான்மை
கணிதம் மட்டுமே
ஜனநாயகத்துக்குத்தெரியும்.
எண்ணிக்கையே இங்கு அரசன்.
அம்பதுக்கு மேல் ஒன்று..
இதுவே
ஆண்டியை அரசனாக்குவது
அரசனை ஆண்டியாக்குவது
இந்த சோழி விளையாட்டு
ஒரு தடவை என்றால்
அரசாங்கம்.
ஒவ்வொரு தடவை என்றால்
சதுரங்கம்.
சூது கவ்வும்.சூது கடிக்கும்.
சூது தின்னும்.சூது விழுங்கும்
சூதுக்குள்
எல்லாம் செரிக்கும்.
அறுபத்தேழு ஆண்டுகளாய்
ஜனநாயகம்
நம் சிந்தனைக்குள்
இன்னும் செரிக்கப்படவில்லை.
சிறுபான்மையாகிப்போன‌
இந்த சிந்தனையே
பெரும்பான்மையாய்
பலூன் ஊதி ஊதி உடைத்து
விளையாடுகிறது.
விரல் வழியே கண் தேடி
ப்ரெய்லியில்
நாம் தேடும் வெள்ளை யானை இது!
அன்று நாம்
வெள்ளைச்சோறு மட்டுமே கனவு கண்டோம்.
இந்த உப்பரிகை வர்க்கத்தை
உடைத்துக்கொண்டு
உப்புக்கரிக்கும் வர்க்கம் வந்து
உட்காரும் என்றார்கள்.
ஆனால்
தனியொருவனுக்கு உரிமை இல்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்
என்று குரல்கள் கொப்பளித்தன.
இதனால்
கடமைகள் நொறுக்கப்பட்டன.
தனி மனித ஆசை
புனிதம் ஆனது.
அது ஆலயம் கட்டியது.
அதன் கருப்பகிருகத்தில்
லாபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதுவே தான்
எல்லாவற்றிற்கும் உந்து விசை.
இந்த சமுதாயம் பிரம்மாண்டம் ஆகிவிட்டது.
இதன் வளர்ச்சிக்குத் தீனியாக‌
அந்த சமுதாயமே தின்னப்பட்டது.
மனிதன்
தன் "நாஸ்டா"வை தின்பதற்கும்
மனிதனையே பன் ஆக்கி
பிய்த்து தின்க வேண்டி வந்தது.
இந்த ஓட்டப்பந்தயத்தில்
நம் நூற்றைம்பது கோடிப்பேர்களும்
ஒருவர் கழுத்தை இன்னொருவர் முறித்துப்போட்டு
முன்னேற வேண்டியிருக்கிறது.
அதோ
டிவியில் சொற்பொழிவு ஓடிக்கொண்டிருக்கிறது.
பட்டிமன்றம் கையொலிகளில் முஷ்டிகள் உயர்த்துகின்றன.
சீரியல்களில் புலம்பல் மூட்டைகள்.
சினிமா குத்தாட்டங்களில்
"ஃப்ராய்டு"சிக்கன்களின் வறுவல்கள்.
தேர்தல் கணிப்பொறிகளில்
எலிகள் தின்னும் மசால்வடைகள்..
இலக்கியம்
பின் நவீனத்துவம் முன் நவீனத்துவம் நடு நவீனத்துவம்
என்று
எழுத்துக்களை வெற்றிலை குதப்பி எச்சில் துப்பி
நாட்டாமை செய்து
காகிதங்களின் "திடக்கழிவு மேலாண்மையை" நன்றாகவே
நடத்திச்செல்கிறது.
ஆவேசங்களின் அடாவடித்தனங்கள்
தீவிரவாதத்தின் தீயைக்கொளுத்தி
சமுதாய மானிடத்தின் பிணம் சுட்டுத் தின்கிறது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அக்மார்க முத்திரை குத்தியிருக்கிறோம் என்று
சாதி மதங்கள் மற்றும் இனப்பூசல்கள் வழியே
மானிட இதயத்தை
கூறு போட்டுச் சல்லடை ஆக்குகிறது.
நிமிடத்துக்கு நிமிடம்
கருத்துக்கணிப்புகள்..
பங்கு மூலதனக்குறியீடுகள்..
என்று
பகடைகள் உருட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
பணத்தின் குவியல்கள்
செய்யும் பாசாங்குகளில்
மனிதம் நசுக்கப்படுகிறது..கூழாக்கப்படுகிறது.

அதோ
அந்த நத்தைக்கூட்டுக்குள் கேட்கும்
சங்கீதத்தின் ராகத்தின் பெயர் தெரியுமா?
ஆரோகரணமும் அவரோகணமும்
மடங்கி மடங்கிக்கேட்கும்
"உபய வர்ஜ வக்ர ராகம்"
அடையாளம் சொன்னார்கள்
ராக பண்டிதர்கள்.
இருபதாவது மேள ஜன்யம் "ரீதி கௌளை"என்று..
ஆம்..
நம் விடியல் இன்னும்
நமக்கு புரியவில்லை..
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:34 pm

காதலர் தினம்
=========================================ருத்ரா

சுட்டெரிக்கும் சூரியன் கூட‌
கடலில் முகம் கழுவி
காற்றில் பல் தேய்த்து
பளிச்சென்று காத்திருக்கும்...
எங்கோ ஒதுங்கி இருக்கும்
அந்த மேக மங்கை
தன் முகம் தழுவி
கொடுக்கும் முத்தத்திற்கு
காத்திருக்கும்.
பிப்ரவரி பதினாலு
எனும் காலண்டர் தாள்
நரம்புக்குள்
ஆயிரம் மகரயாழை
நிமிண்டி விடும்.
இது வெள்ளைக்காரனின்
கருப்பு நிழல் என்று
வெறுப்பு கொள்வோரே
உங்கள் செல்லரித்த‌
சுவடிகளைத்தடவிப்பாருங்கள்
அங்கே ஒரு "காந்தர்வ"முறையில்
இளம் உள்ளங்கள்
காதலின் கிலுகிலுப்பைகளை
ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கும்.
இன்னும்
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
வால் எயிறு ஊறி
சொல் குழறிய மாணிக்கப்பரல்களில்
ஒலித்து ஒலித்து விளையாடும்
ஒளிப்பூக்கள் சிதறும்.
எலும்பு இற்று குருதி வற்றி
இதயத்தின்
ஓட்டைக்கசிவுகளில்
முனகும் துடிப்புகளில்
காலம் உன்னை
துவைத்துக் கசக்கிப்பிழியும்
நாட்களில்
நீ கொளுத்திப்பார்க்கும்
மத்தாப்புக்குச்சிகள் இது தானே!
மனிதா!
மழலை போல
இன்னொரு இனிய‌
தெய்வீக மொழியை உன்னால்
கேட்க முடியுமா?
சமுதாய வளர்ச்சியின்
ஒரு மழலை உருவகம்
இது.
இதைத்தகர்க்கவா
வெறும் சம்ப்ரதாயங்களின்
வெடிமருந்தை
மூட்டை கட்டி
முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாய்
எதிர்ப்பு என்ற பெயரில்?
வேண்டாம்..ஜாக்கிரதை!
வீணாய் நீ
வெடித்துச்சிதறாதே!
கண்ணாடிச்சிறகுகளில்
சர சரக்கும் தட்டாம்பூச்சிகளே!
உங்கள்
கனவுகளைச்செதுக்கி
கல்வெட்டு ஆக்கிக்கொள்ளுங்கள்.
இனிய‌
காதலர் தின வாழ்த்துக்கள்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:35 pm

மூவர்ணக் குறும்பு பாக்கள்
==========================================ருத்ரா


தலைநகரில் அணிவகுப்பு.
முப்பது லட்சம் பேர் திரண்டிருக்கலாம்.
ஆனால்
இருபத்தொன்பது லட்சத்து தொண்ணூத்தொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூத்தெட்டு பேர்கள்
செக்யூரிடிக்கு.
யார் அந்த இரண்டு பேர்?
ஒபாமாவும் மோடியும் தான்.
________________________________________________

வெயிலில் நின்றாலும் கூட‌
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு
நிழலே விழுவதில்லையாம்.
அவர் நிழல் கூட‌
இப்போது பா.ஜ.கா வில்.

_______________________________________________

நம் நாட்டு
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கூட‌
கடன் தருகிறதாமே சுவிஸ்பேங்க்.
நமக்கு அன்னியோன்யமாகி விட்ட‌
ஒரே உலக பாங்கு இதுவே.

_______________________________________________


வெள்ளை மாளிகையும்
அசோக சக்கரமும்
பூச்செண்டுகள் பரிமாறிக்கொண்டன.
ஆனால்
டாலரின் நண்டுப்பிடியில்
முழி பிதுங்குவது
நம் ரூபாயே தான்.
"ஸாரே ஜஹாம் ஸே அச்சா..."

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________


ராம் ராம் என்று
கோவில் கட்ட கிளம்பிவிட்டார்கள்.
"ராம நாம சங்கீர்த்தனம்..."
எல்லா இடங்களிலிருந்தும்
இப்போது வரும் செங்கல்கள்
நாது "ராம்"கோட்சேக்கு.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________________________


இவர்கள்
நிச்சயமாக சமஸ்கிருதத்தை
தேசிய மொழியாக்கி விடுவார்கள்.
பாவம்!
அதன் உள்ளே இருப்பது
தமிழ் என்று தெரிந்துகொள்ளாத வரை.

___________________________________________________

தனுஷும் அமிதாப்பும்
அர்த்தநாரிஸ்வர் ஆகிவிட்டார்களே.
குத்தாட்ட சேனை வீரர்கலே!
இந்தி எதிர்ப்பு எல்லாம்
இனி வேண்டாம்..
போய் கட் அவுட் கட்டுகிற‌
வேலையைப்பாருங்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________________________

அங்கே ஒரு கொலை விழப்போகிறது
என்று
அருகம்புல்லுக்கும் தெரிந்திருக்கிறது.
ஜனநாயக ரோஜாக்களே
மொட்டாக வரும்போதே
கருகிப்போய் விடுங்கள்.
இப்போதைய
புனித
ஜனநாயகக்கடமை அது மட்டுமே!
திருவரங்கம்.

_______________________________________________________


எது நடந்ததோ அது நன்றாக நடந்த‌து.
எது நடந்துகொண்டிருக்கிறதோ
அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.

பகவத் கீதையா அது?

அல்ல அல்ல.
"பெங்களூரு"க் கீதை!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________________

சமணர்கள் கழுவேற்றப்படுவது
இன்றும் நடைபெறுகிறதோ?
இந்திய தொன்மை இங்கே
கழுத்தறு பட்டு கிடக்கிறது.
மதுரையில்
கிரானைட் குவாரி.

________________________________________________________

மோடியின் தலைப்பாகை
மிக அருமை.
டெல்லியின்
விரல் தட்டும் பொறிகள்
அதைத்தான் கட்டிக்கொள்ள‌
தயார் ஆகின்றன.

__________________________________________________________

தேசியமயமாக்க‌
இதோ மிச்சமிருக்கிறது
சாதிமதங்களின் ஒரு தொழில்.
"எழுத்துக்களோடு ஒரு கட்டப்பஞ்சாயத்து"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 20, 2015 8:36 pm

புத்தாண்டு குறும்பாக்கள்
====================================ருத்ரா


நடுநிசியில்
வானத்தைக்கிழித்து
ஒரு "சிசேரியன்".

_____________________________________________


புதிய காலண்டர் சிறகில்.
பழைய காலண்டர்
சிதையில்.

________________________________________________


இந்து மதக்கடவுளுக்கும்
அர்ச்சனைகள்.
ஆரவாரங்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________


நம்பிக்கைகள்
வருடம் தோறும்
சட்டை மாற்றிக்கொள்கின்றன‌

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________________________


டிவியில் கலர் கலராய் வாந்தி
365 நாட்களின்
பழைய சோற்றை.

__________________________________________________


365 தாள்களிலும் கண்ணீரை
மட்டுமே அச்சடித்திருக்கும் காலண்டர்
ஈழத்தில்.

____________________________________________________

பாரத புத்திரர்கள் எல்லோரும்
"கௌரவ"ப்படுத்தப்பட‌
பகவத் கீதை "புத்தாண்டு" பதிப்பு தயார்.

_________________________________________________________


நீலவானம் கிழிசல் ஆனதில்
கல்லறைகளின் மழை பெய்தது கடலுக்குள்.
இந்தோனேஷிய விமானவிபத்து.

_______________________________________________________


ஜனவரி ஒண்ணுக்கு
ஏதாவது ஒரு ரிஷியின் "ஜன்ம திவஸ்"
அகப்படவில்லையா?

________________________________________________________


கோட்ஸேக்கும் சிலை வைக்கலாம்.
"ஹே ராம்" என்ற எழுத்துக்களுடன்.
"நாது ராம்"என்பதை நாசூக்காய் ஒலிக்க.

_____________________________________
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by mohaideen Tue Apr 21, 2015 5:23 pm

அனைத்தும் அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 21, 2015 7:18 pm

ரசித்தமைக்கு மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by kanmani singh Wed Apr 22, 2015 11:55 am

அனைத்து கவிதைகளும் நெஞ்சில் பதிந்துவிட்டன! பாராட்டுக்கள்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 22, 2015 3:01 pm

கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள்
====================================================ருத்ரா


கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட‌
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?

கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?

அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய‌
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப் கள் கிளிகூட‌
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.

================================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 24, 2015 7:07 am

புத்தகங்களே!..புத்தகங்களே..!
=============================================ருத்ரா

காகிதக்காடுகளாய் மண்டிவிட்ட‌
உங்களை நான் அழைக்கவில்லை!
புது அகங்களே! புது அகங்களே!
என்று
அந்த புதிய "அகநானூறு"களைத்தான்
நான் தேடித்துருவுகின்றேன்.
காதலைப்பற்றி எழுதித்தீர்த்து விட்டு
சில சொட்டுகள்
மை மிச்சத்திலும்
பணம் குவிப்பது எப்படி?
அதற்காக அடுத்தவன் குரல்வளை என்றாலும்
அதை அழகாக நேர்த்தியாய்
அறுப்பது எப்படி?
தூரத்து நட்சத்திரங்களை
மடியில் கட்டி வைத்து
அல்லது அருநாக்கொடியில்
பிணைத்து வைத்து
அதன் சாத்திரங்கள் சடங்குகள் பரிகாரங்கள்
சிறப்பு தகடுகள் பூஜைகள்
என்று
மனித அச்சத்தில்
ரூபாய்களையும் டாலர்களையும்
அச்சடித்து
அழுக்கு மூட்டைகள் குவிப்பது பற்றி
இங்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
இதையும் மீறி
இந்த வைக்கோல் படப்புக்குள்
விழுந்து கிடக்கும்
அந்த சில வைர ஊசிகள் தேடியே
என் பயணம்.
அந்த எழுத்துகளின் தரிசனம் கண்டு
நான் புல்லரித்துப்போனேன்.
அந்த அரிய எழுத்துகள் ஊர்ந்த‌
மனிதனின்
சிந்து சமவெளிப்பக்கங்கள்
பொன் பரப்புகள்.
சில‌
சமுதாய பிரக்ஞைகளையே
கர்ப்பம் தரித்து
புதிய சமுதாயங்களை
பிரசவிக்கும்
சிந்தனை வெளிச்சங்கள்.
அவை உண்மையில் புத்தகங்கள் அல்ல.
மானிடத்தின்
பயணம் தொலைத்த தடங்களுக்கு
காகிதக்கல் செதுக்கிய‌
மைல் கற்கள்.

==================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 24, 2015 7:12 am

அருமையான கவிதைகள்
ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் 318206f9bd74fc9q
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 24, 2015 7:17 am

மெய்யா?பொய்யா?
================================================ருத்ரா

நிலவைச் சொன்னார்கள்
உன் நிறம் காட்ட.
ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு
என தெரிந்து கொண்டேன்.
அன்று அமாவாசை அல்லவா!

கடலைக் காட்டி
உன் மன ஆழம்
பார்த்துக்கொள் என்றார்கள்.
கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட‌
வாய் திறந்து எதுவும்
காட்டவில்லையே.

பூவைக்காட்டி
காத்திரு என்றார்கள்
பட்டாம்பூச்சி சிறகுகளில்
இமை பட படக்க‌
பார்வை வீசுவாய் என்றார்கள்.
பூச்சி தான் வந்தது
வண்ணம் இல்லை
அவள் எண்ணம் இல்லை.
பூ முழுதும் சஹாரா ஆனது.

வானம் காட்டி
எழுத்துகள் கூட்டிச்சொன்னார்கள்.
நட்சத்திரம் ஒவ்வொன்றும்
நீ எழுதிய‌
காதல் கடிதமாம்.

இரவு முழுதும்
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்தேன்.
ஹப்பிள் டெலஸ்கோப்
உரித்துக் காட்டிய‌
"ஆண்ட்ரோமிடா" நெபுலா போல‌
அகலமாய்
அவள் வியப்பைக்காட்டினாள்

என்னைப் புரிந்து கொள்ள‌
இப்படி ஒரு
விண்ணைத்தாண்டியா வரவேண்டும்?
அன்று நான்
ஒரு மெல்லிய முறுவல் கோடு
வீசியதில் இன்னுமா
நீ மெய்சிலிர்க்கவில்லை?

என்ன செய்வது?
காதல் என்பது
மெய்யா? பொய்யா?

=========================================
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் Empty Re: ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum