தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 12 of 43 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 27 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:10 pm

தட்டு மானம் _ ஏமாற்று : தந்திர வழி.
தட்டு முட்டு _ கருவிகள் : வீட்டுப் பொருள்கள்.
தட்டுவாணி _ குதிரைவகை : விலை மகள்.
தட்டை _ பயிர்களின் அடித்தாள்: மொட்டை : பரந்த வடிவம் : முறம் : திருகாணி : தினைத்தாள் :மூங்கில்: கிளிகடி கருவி : கவண் : கரடி கைப்பறை : அறிவிலி : காலணி வகை : தீ.
தட்டோடு _ தட்டையோடு : கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஒரு வகை ஓடு.




தட்பம் _ குளிர்ச்சி : அருள்.
தணக்கு _ நுணாமரம் : தணக்க மரம் : முட்டைக் கோங்கிலவு மரம் : வால்.
தணத்தல் _ போதல் : நீங்குதல்: பிரிதல் : நீக்குதல்.
தணப்பு _ தடை : செல்லல்: நீங்குதல்.
தணலம் _ எருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:11 pm

தணல் _ நெருப்பு : நிழலிடம்.
தணவம் _ அரச மரம்.
தணி _ மலை : குளிர்ச்சி : தேர் நெம்புங் கட்டை.
தணிகை _ திருத்தணிகை என்னும் தலம்.
தணிக்கை _ மேற்பார்வையிடுதல்: விதிமுறைப்படி சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தல்.




தணிதல் _ குறதைல்: ஆறுதல்: வற்றுதல்: தாழ்தல்: இசைதல்: நிறைதல்.
தணிவு _ குறைகை : சாந்தம் : வணக்கம் : நீர் வற்றுதல்: தாழ்வு.
தணுப்பு _ குளிர்ச்சி : நீர்க்கோவை.
தண் _ குளிர்ச்சி : அருள்.
தண்கதிர் _ நிலவொளி : சந்திரன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:11 pm

தண்டக மாலை _ 300 வெண் பாக்களால் பாடும் நூல் வகை.
தண்டகம் _ தொண்டை நாடு : தண்டகாரண்யம் : தண்டனை: முதுகெலும்பு : அணிகலன்: கரிக்குருவி : நுரை.
தண்டகன் _ ஒரு மன்னன் : இயமன்.
தண்டகாரண்யம் _ தக்கண தேயத்தில் துறவியர் வசித்து வந்த ஒரு காடு.
தண்டச்சக்கரம் _ குயவனது சுழற்றுக் கருவி.




தண்டஞ்செய்தல் _ நிலத்தில் வீழ்ந்து வணங்குதல்: தண்டித்தல் : கோலால் அளத்தல்.
தண்டத் தலைவன் _ படைத் தலைவன்.
தண்டத்தான் _ இயமன்.
தண்டநாயகம் _ படைத்தலைமை.
தண்ட நாயகன் _ படைத்தலைவன் : அரசன்: சிவகணத் தலைவனாகிய நந்தி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:11 pm

தண்ட நீதி _ அரசியல் நூல்.
தண்டப்படுதல் _ அபராதம் விதித்தல்.
தண்ட பாசிகன் _ கொலைகாரன்.
தண்டபாணி _ தண்டாயுதம் ஏந்திய முருகக் கடவுள்: திருமால்: வீமன் : இயமன்.
தண்டமிழ் _ தண்ணிய தமிழ்.


தண்டம் _ கோல் : தண்டாயுதம் : அபராதம் : தண்டனை : குடைக்காம்பு : உலக்கை : படகுத் துடுப்பு : ஓர் அளவை : உடம்பு : படை வகுப்பு : திரள் : வரி: கருவூலம் : இழப்பு : யானை கட்டுமிடம் : ஒறுத்து அடக்குகை : வணக்கம் : செங்கோல்: ஒரு நாழிகை நேரம்.
தண்டலர் _ பகைவர்.
தண்டலாளர் _ தீர்வை வசூலிப்பவர்.
தண்டலை _ சோலை : பூந்தோட்டம் : ஓர் ஊர்.
தண்டல் _ வசூலித்தல் : எதிர்த்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:12 pm

தண்டவாளம் _ இரும்புச் சட்டம் : புடைவை வகை.
தண்டனம் _ தண்டனை.
தண்டனிடுதல் _ கீழே விழுந்து வணங்குதல்.
தண்டனை _ ஒறுப்பு.
தண்டன் _ கோல் : வணக்கம்.



தண்டா _ சண்டை : சிக்கல் : உடற் பயிற்சி வகை : கதவை அடைத்து இடும் இரும்புத் தடி.
தண்டாமை _ நீங்காமை.
தண்டாயம் _ பாரம் தாங்கும் தண்டு : தவணைப் பகுதி.
தண்டாயுதபாணி _ தண்டாயுதத்தை யேந்திய முருகக் கடவுள்.
தண்டாயுதம் _ கதாயுதம் : தண்டு : பாரம் தாங்கும் தண்டு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:12 pm

தண்டாரம் _ குயவன் சக்கரம் : மதயானை : வில்: தோணி : வண்டி.
தண்டான் _ கோரை வகை : புடல் வகை.
தண்டி _ தண்டற்காரன் : மிகுதி : பருமன் : தரம் : அணி இலக்கண நூலாசிரியர் : இயமன் : சண்டேசுர நாயனார் : எட்டு அடியுள்ள இசைப்பாட்டு வகை: செருக்குள்ளவர்.
தண்டிகை _ பல்லக்குவகை : பெரிய வீடு.
தண்டிதரம் _ ஆற்றல்.



தண்டித்தல் _ ஒறுத்தல் : வெட்டுதல்.
தண்டியம் _ கச்சூர்க் கட்டை : புறக் கூரையைத் தாங்கும் கட்டை : வாயிற் படியின் மேற் கட்டை.
தண்டியல் _ பல்லக்கு வகை.
தண்டிலம் _ ஓமம் : சிவ பூசை முதலியவற்றிக்கு ஏற்ப அமைத்துக்கொண்ட இடம்.
தண்டு _ மரக்கொம்பு : கோல் : கதாயுதம் : வளை தடி : உலக்கை : வீணை : விளக்குத் தண்டு : மூக்குத் தண்டு : வரம்பு : பச்சோந்தி : ஆடவர்: மர்மத்தானம் : மூங்கிற் குழாய்: சிவிகை : செருக்கு : மிதுன ராசி: சேனை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:12 pm

தண்டுக் கோல் _ படகுத் துடுப்பு : பிரமசாரிக்குரிய பலாசக் கோல்.
தண்டுதல் _ வசூலித்தல் : வருத்துதல்: இணைத்தல்: நீங்குதல்: விலகுதல்: தணிதல்: கெடுதல்: தடை படுதல்: தொடுதல்: மனம் அமைதல்: சினம் மூளுதல்: விருப்பம் கொள்ளுதல்.
தண்டு மாரி _ சிறு தெய்வங்களுள் ஒன்று : அடக்கமில்லாத பெண்.
தண்டுல பலை _ திப்பிலிச் சடி.
தண்டுலம் _ அரிசி.



தண்டுலம்பு _ அரிசி கழுவும் நீர்.
தண்டெடுத்தல் _ படையெடுத்தல்.
தண்டெலும்பு _ முதுகெலும்பு.
தண்டேறு _ எலும்பு.
தண்டேறுதல் _ பல்லக்கேறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:12 pm

தண்டை _ மாதர் காலில் அணியும் அணிகலம் : கேடகம் : வால்.
தண்டைக்காரன் _ வஞ்சகன் : தொந்தரவு செய்பவன்.
தண்டை மாலை _ பூ மாலை வகை.
தண்டொட்டி _ மாதரின் காதணி வகை.
தண்டோரா _ பறை சாற்றுதல்.



தண்ணடை _ மருத நிலத்தூர் : நாடு : பச்சிலை : காடு : சிற்றூர் : உடுக்கை வகை.
தண்ணம் _ ஒரு கட்பறை : மழுவாயுதம் : காடு : குளிர்ச்சி.
தண்ணவன் _ சந்திரன்.
தண்ணளி _ குளிர்ந்த அருள்.
தண்ணாத்தல் _ தாழ்த்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:13 pm

தண்ணீர் _ குளிர்ந்த நீர் : நீர்.
தண்ணீர்த்துரும்பு _ இடையூறு.
தண்ணிர்ப் பந்தல் _ வெயிற் காலத்தில் வழிப்போக்கர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச் செயல்.
தண்ணுமை _ முழவு : மத்தளம் : ஒரு கட்பறை : உடுக்கை.
தண்பணை _ மருத நிலம்.



தண்பதம் _ புதுப்புனல்: தாழ் நிலை.
தண்பு _ குளிர்ச்சி.
தண்மை _ குளிர்ச்சி : சாந்தம்: மென்மை : தாழ்வு : அறிவின்மை.
ததபத்திரி _ வாழை.
ததம் _ அகலம் : பின்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:13 pm

ததர் _ செறிவு : கொத்து : சிதறுகை.
ததர்தல் _ நெரிதல்.
ததர்த்தல் _ வருத்துதல்.
ததா _ அப்படி.
ததாகதன் _ புத்தன்.



ததி _ தக்க சமயம் : தயிர் : சத்துவம்.
ததிகேடு _ செல்வக் குறைவு: வலியின்மை.
ததிசாரம் _ வெண்ணெய்.
ததிமண்டம் _ மோர்.
ததியர் _ அடியார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:13 pm

ததியோதனம் _ தயிர்ச்சோறு.
ததீயாராதனை _ திருமாலடியார்க்கு இடும் விருந்துணவு.
ததும்புதல் _ மிகுதல் : நிறைதல்: நிரம்பி வழிதல் : மனம் மகிழ்தல்: அசைதல்: முழங்குதல்.
ததைதல் _ நெருங்குதல் : சிதைதல் : சிதறல்: வெளிப்படாதிருத்தல்.
ததைத்தல் _ கூட்டுதல்: நெருக்குதல்: நிறைதல்.



தத் _ அது : அந்த.
தத்தம் _ நீர்வாத்துக்கொடுக்கும் கொடை.
தத்தயோகம் _ தீய யோகங்களுள் ஒன்று.
தத்தரம் _ நடுக்கம் : மிகு விரைவு : தந்திரம்.
தத்தளித்தல் _ ஆபத்தில் அகப்பட்டுத் திகைத்தல்: பஞ்சத்தால் துன்புறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:14 pm

தத்தாங்கி _ சிறுமியர் கைகொட்டிப் பாடும் விளையாட்டு வகை.
தத்தாரி _ கண்டபடி திரிவோர்.
தத்தி _ கொடை : சத்துவம்.
தத்திகாரம் _ பொய்.
தத்தியம் _ மெய் : துகில் வகை.


தத்து _ தாவி நடத்தல் : பாய்தல்: மனக்கவலை : தவறு : சுவீகாரம் : சிறுதுளை.
தத்துக்கிளி _ வெட்டுக்கிளி: கிளிப்பிள்ளை.
தத்துதல் _ குதித்தல் : தாவி ஏறுதல்: ததும்புதல் : பரவுதல்.
தத்துப்பிள்ளை _ சுவீகாரப் புத்திரன்.
தத்துவ சதுக்கம் _ மணமேடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:14 pm

தத்துவஞானம் _ உண்மையுணர்வு.
தத்துவஞானி _ உண்மையுணர்ந்தோன்.
தத்துவம் _ உண்மை : பொருள்களின் குணம் : உடற் பலம் : இந்திரிய பலம் : அதிகாரம் : பரமாத்மா : ஆன்மா : அதிகார பத்திரம்.
தத்துவமசி _ அது நீயாக இருக்கிறாய் என்னும் வேதவாக்கியம்.
தத்துவன் _ பேருண்மையாய் உள்ள கடவுள் : அருகன்.



தத்துவாதீதன் _ தத்துவம் கடந்த பொருள்.
தத்துறுதல் _ வருதப்படுதல் : நேர்தல் : கிட்டுதல்.
தத்தெடுத்தல் _ பிறர் குழந்தையைத் தனக்கு உரிமையாக ஏற்றல்.
தத்தை _ கிளி : தமக்கை.
தத்ரூபம் _ முழுவதும் ஒற்றுமையான வடிவம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:15 pm

தநம் _ சந்தனம் : மனம்.
தந்தசடம் _ எலுமிச்சை : விளாமரம்.
தந்த சுத்தி _ பல் விளக்கல்.
தந்த சூகம் _ பாம்பு : பாம்புகள் நிரம்பிய நகரம்.
தந்த சூலை _ பல்வலி.



தந்த பத்திரம் _ மல்லிகை வகை.
தந்த பலம் _ விளாம்மரம்.
தந்த பலை _ திப்பிலி.
தந்த பாகம் _ யானையின் மத்தகம்.
தந்தமா _ தந்தத்தையுடையதான யானை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:15 pm

தந்தமாமிசம் _ பல்லின் ஈறு.
தந்தம் _ பல் : யானையின் கொம்பு : மலை முகடு : நறுக்கிய பழத்துண்டு.
தந்தரோகம் _ பல்நோய்.
தந்தாயுதம் _ யானை : ஆண் பன்றி.
தந்தார் _ பெற்றோர்.



தந்தாலிகை _ கடிவாளம்.
தந்தாவளம் _ யானை.
தந்தி _ ஆண் யானை : நச்சுப்பாம்பு : யாழ் : யாழ் நரம்பு : நரம்பு : நேர் வாளம் : மின்சாரம் மூலம் அனுப்பும் செய்தி.
தந்திக் கடவுள் _ விநாயகர்.
தந்தித் தீ _ யானைத் தீ என்னும் பசி நோய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:15 pm

தந்தி மருப்பு _ முள்ளங்கி.
தந்தி முகன் _ விநாயகன்.
தந்திரம் _ தொழில் திறமை : வழி வகை : உத்தி : பித்தலாட்டம் : சூழ்ச்சி : கல்வி நூல்.
தந்திரமா _ தந்திரமுள்ள விலங்கான நரி.
தந்திரி _ தந்திரக்காரன் : மந்திரி : கோயில் அருச்சகர்: யாழ் : யாழ் நரம்பு : குழலின் துளை.



தந்திரிகை _ கம்பி.
தந்திரை _ சோம்பல் : உறக்கம்.
தந்து _ நூல் : கயிறு : சந்ததி : கல்வி நூல்: உபாயம் : உத்தி : தொழில் திறமை.
தந்துகடம் _ சிலந்திப் பூச்சி.
தந்துகம் _ கடுகு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:15 pm

தந்துகி _ நாடி நுட்பக் குழல்கள்.
தந்துசாரம் _ கமுகு.
தந்துபம் _ கடுகு.
தந்து மந்து _ குழப்பம்.
தந்துரம் _ ஒழுங்கின்மை.


தந்துவர் _ ஆடை நெய்வோர்: கைக்கோளர்.
தந்துவை _ மாமியார் : மாமன் மனைவி.
தந்தை _ தகப்பன்.
தபசி _ தவசி.
தபசியம் _ முல்லை : பங்குனி மாதம்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:16 pm

தபதி _ சிற்பி : கல் தச்சன்.
தபம் _ தவம் : மாசி மாதம் : வெப்பம்.
தபலை _ தவலை : மத்தள வகை.
தபனம் _ சூரியன் தீக் கடவுள்: கொடிவேலி.
தபன் _ சூரியன்.


தபா _ தடவை.
தபாது _ தப்பு : ஏமாற்றுகை.
தபால் _ அஞ்சல் : நிற்குமிடம்.
தபித்தல் _ வருந்துதல் : காய்தல்.
தபுதல் _ இறத்தல் : கெடுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:16 pm

தபுதாரம் _ கணவன் தன் மனைவியை இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத் துறை.
தபுதி _ அழிவு.
தபுத்தல் _ கெடுத்தல் : அழித்தல்.
தபோதனன் _ முனிவன்.
தபோபலம் _ தவப் பயன்.



தபோலோகம் _ மேலேழு உலகினுள் ஒன்று.
தபோவனம் _ தவம் செய்யும் வனம் : தவசிகள் வாழும் சோலை.
தப்படி _ தவறான செயல்.
தப்பட்டை _ பறை.
தப்பணம் _ யோணியூசி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:16 pm

தப்பல் _ குற்றம் : அடி : துவைத்தல்.
தப்பளம் _ எண்எணய் தேய்த்தல்:காய்கறிகள் சேர்ந்த குழம்பு.
தப்பளை _ தவளை : மீன் வகை: பெருவயிறு.
தப்பறை _ பொய் : சூது : கெட்ட சொல்.
தப்பறைக்காரன் _ பொய்யன்.


தப்பிதம் _ தவறு : குற்றம்.
தப்பித்தல் _ குற்றத்திலிருந்து விலகுதல்.
தப்பு _ பறை : பொய்: குற்றம் : வஞ்சனை : துணி துவைத்தல்.
தப்புச் செடி _ தானே தோன்றிய செடி.
தப்புதல் _ தவறுதல்: பயன் படாது போதல்: பிறழ்தல்: பிழை செய்தல்: அழிதல்: காணாமற் போதல்: கையால் தட்டுதல் : அப்புதல்: செய்யத் தவறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:16 pm

தப்பெண்ணம் _ தவறான கருத்து.
தப்பை _ மூங்கிற் பட்டை : அடி : சிறு பறை.
தமகன் _ கொல்லன்.
தமக்கை _ அக்காள் : மூத்த சகோதரி.
தமசம் _ இருள்: தாமத குணம்.



தமத்தல் _ தணிதல் : நிரம்புதல்: விலை மலிவாதல்.
தமப்பன் _ தகப்பன்.
தமப்பிரபை _ இருள் நிறைந்த நரகம்.
தமம் _ இருள்: தாமத குணம் : இராகு : சேறு: கள்வரை வாட்டும் நரகம்: ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களில் செல்லாது மனத்தை மறித்தல்.
தமயன் _ மூத்த சகோதரன்: அண்ணன் : தமையன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:17 pm

தமரகம் _ உடுக்கை : மூச்சுக் குழல்.
தமரகவாயு _ நெஞ்சடைப்பு நோய் : இரைப்பு : நோய்.
தமரத்தை _ மரவகையுள் ஒன்று.
தமரம் _ ஒலி : அரக்கு : தமரத்தை மரம்.
தமரித்தல் _ ஒலித்தல் : விரும்புதல்.



தமருகம் _ உடுக்கை.
தமரூசி _ துளையிடும் ஊசி.
தமரோசை _ கிலுகிலுப்பைச் செடி.
தமர் _ உற்றார் : விருப்பமானவர்: சிறந்தோர் : வேலையாட்கள்:துளையிடுங் கருவி: துளையிடப்பட்டது.
தமர்ப்படுதல் _ விரும்புதல்: இணங்குதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:17 pm

தமர்மை _ நட்பு.
தமலி _ அகப்பை : சட்டுவம் : தோசை திருப்பி.
தமள் _ உற்றவள்.
தமனம் _ மருக்கொழுந்து.
தமனி _ நல்ல இரத்தம் ஓடும் குழாய் :வன்னி மரம்.



தமனியம் _ பொன்.
தமனியன் _ இரணியன் : பிரமன்: சனி.
தமன் _ உற்றவன்.
தமாலம் _ பச்சிலை மரம் : இலை: நுதற்குறி : மூங்கில் தோல்.
தமி _ தனிமை : ஒப்பின்மை : இரவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:17 pm

தமிசிரம் _ இருள்: குறைவு.
தமிசு _ வேங்கை மரம்.
தமித்தல் _ தணியாதல்: தண்டித்தல்.
தமியம் _ கள்.
தமியள் _ திக்கற்றவள்.



தமியன் _ திக்கற்றவன்.
தமிழகம் _ தமிழ் நாடு.
தமிழன் _ தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன்: தென்னாட்டான்.
தமிழாகரன் _ தமிழுக்கு நிலைக்களமான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்.
தமிழ் _ இனிமை : நீர்மை : தமிழ் நூல்: தமிழ் மொழி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Nov 15, 2013 9:17 pm

தமிழ்க்குச்சரி _ குறிஞ்சி யாழ்த் திறவகை.
தமிழ் நடவை _ தமிழ் வழங்கும் இடமாகிய தமிழகம்.
தமிழ் நதி _ செந்தமிழ் நாட்டிற்குரிய ஆறான வைகை நதி.
தமிழ் நாடன் _ தமிழ் நாட்டு வேந்தன் : பாண்டிய அரசன்.
தமிழ் மலை _ பொதிய மலை.



தமிழ் மறை _ திருக்குறள் : தேவாரம் : திருவாசகம் : திவ்வியப் பிரபந்தம்.
தமிழ் முனிவன் _ அகத்தியன்.
தமிழ்வாணன் _ தமிழ்ப்புலவன்.
தமிழ் வேளர் கொல்லி _ மருத யாழ்த்திற வகை.
தமுக்கடித்தல் _ பறை சாற்றுதல்: தேவையின்றிச் செய்தியைப் பிறர்க்கு அறிவித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 12 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 43 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 27 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum