தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 1 of 43 1, 2, 3 ... 22 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:34 pm

சாதாரம் _ ஆதாரத்தோடு கூடியது.
சாதாரி _ செவ்வழி என்னும் முல்லை நிலத்துப் பண்.
சாதாழை _ வலியற்றவன்: கடற் பூண்டு வகை.
சாதாள நிம்பம் _ எருக்கிலை.
சாதாளி _ மருத நில யாழ்த்திறவகை.


சாதி _ குலம்: இனம்: சாதி மல்லிகை : சாதிக்காய்: தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று: போலிப் பதில்: திப்பிலி: பிரம்பு : ஆடாதோடை : கள்: சீந்தில்: புழுகு சட்டம் : சாதியென்னேவல்.
சாதிக்காய் _ ஒரு மணச்சரக்கு: சீமைக் கள்ளி மரம்.
சாதிசம் _ நறும் பிசின் : ஒரு மணச் சரக்கு.
சாதித்தல் _ நிலை நாட்டுதல் : விடாது பற்றுதல்: வெல்லுதல்: சொல்லுதல்: மறைத்தல்: அழித்தல் : அளித்தல்: மந்திர சித்தி பெறுதல்: அருள் புரிதல்.
சாதிப் பெயர் _ சாதியைக் குறிக்கும் பெயர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:34 pm


சாதிப் பெரும்பண் _ அகநிலை, புற நிலை , அருகியல் , பெருகியல் என்னும் நால்வகைத் தலைமைப் பண்கள்.
சாதி முறை _ சாதிக்குரிய ஒழுகலாறு.
சாதிமை _ பெருமை : சிறப்புக் குணம்.
சாதிருகியம் _ ஒப்புமை.
சாதி ரேகம் _ குங்குமப்பூ.




சாதிரை _ ஊர் வலம்.
சாதிலிங்கம் _ வைப்புப் பாடாண வகை.
சாதினி _ முசுக்கட்டை : பீர்க்கங் கொடி.
சாது _ துறவி : அருகன் : பைராகி : நற் குணத்தோன் : அப்பாவி : தயிர்.
சாது கம் _ பெருங்காயம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:34 pm


சாது சரணம் _ சாதுக்களைச் சரண் புகுதல்.
சாது ரங்கம் _ நால்வகைப் படை: மாணிக்க வகை.
சாது ரம் _ தேர்.
சாது ரன் _ தேர்ப்பாகன் : அறிவுடையவன்.
சாதுரியம் _ திறமை : நாகரிகம்.


சாது வன் _ நல்லவன் : ஐம்புலன்கள் அடக்கியவன்: அருகன் : மணிமேகலை என்னும் காப்பியத்துள் வரும் ஆதிரையின் கணவன்.
சாதேவம் _ குழி நாவல் மரம்.
சாத்தம் _ ஒலி அளவை : சக்தியைத் தெய்வமாகக் கொண்டு வழி படும் சமயம்.
சாத்தல் _ வேதம்.
சாத்தவர் _ வெளிநாடு சென்று வாணிகம் செய்பவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:35 pm

சாத்தவி _ சத்தி .
சாத்தன் _ ஐயனார் : அருகன் : புத்தன் : சீத்தலைச் சாத்தான்: வாணிகக் கூட்டத் தலைவன்.
சாத்தானி _ கோயிலில் பூ மாலை தொண்டு செய்பவர்.
சாத்தான் _ பிசாச நாதன்.
சாத்திகம் _ முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் : சிற்ப நூலுள் ஒன்று.



சாத்தியந்தன் _ பிறவிக் குருடன்.
சாத்தியம் _ முடிக்கத்தக்க செயல் : 27 யோகத்துள் ஒன்று.
சாத்தியர் _ தேவருள் ஒரு பகுதியார்.
சாத்திரம் _ வேதாந்தம் நூல்.
சாத்து _ சாத்து முறை : வணிகர் கூட்டம் : கைம் மரம் : சாத்து என்னும் ஏவல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:36 pm

சாத்துக்கவி _ நூல் செய்தோன் பெருமை சாற்றும் சிறப்புப்பாயிரம்.
சாத்துக் குடி _ கிச்சிலி வகை.
சாத்துதல் _ அணிதல் : தரித்தல் : பூசுதல்: அடைத்தல்.
சாத்துப்படி _ கோயில் சிலைகளுக்கு மாலை முதலியன அணிவித்து அலங்கரித்தல்: சந்தனம்.
சாத்துப் பயிர் _ நாற்றுப் பிடுங்கி நடப் பெற்று வளர்ந்த பயிர்.



சாத்து மாலை _ அணிதற்குரிய பூமாலை.
சாத்து முறை _ பெருமாள் சந்நிதியின் முன்பு பாசுரங்களை ஓதுதல் : ஆழ்வாரதியர் திருவிழா.
சாத்துலம் _ புலி.
சாத்துவம் _ சாத்துவிகம்.
சாத்துவி _ சாத்துவ வடிவமாயுள்ள சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:37 pm

சாத்துவிகம் _ முக்குணத்துள் ஒன்றான உயர்ந்த நற்குணம்.
சாத்துவிகன் _ சாந்த குணம் உடையவன்.
சாத்துறி _ உறி வகை.
சாத்தெறிதல் _ வாணிகக் கூட்டத்தைக் கொள்ளையிடுதல்.
சாந்தம் _ அமைதி : பொறுமை : குளிர்ச்சி : சந்தனம் : சாணி : ஒன்பான் சுவைகளுள் ஒன்று.



சாந்தம்பி _ கலவை சந்தனம் குழைத்தற்கரிய அம்மி : மெருகு சுண்ணாம்பு அரைக்கும், பெரிய அம்மி வகை :சாத்து அம்மி.
சாந்தன் _ அருகன் : புத்தன்.
சாந்தி _ அமைதி : தணிவு : கோள்களால் விளையும் தீச்செயல்களை நீக்கச் செய்யும் சடங்கு : விழா : பூசை: சாந்தி கலை: 24 தீர்த்தங்கரர்களுள் ஒருவர்.
சாந்தி கலியாணம் _ திருமணமான பெண் முறைப்படி கணவனுடன் சேர்வதற்குச் செய்யும் சடங்கு.
சாந்திரம் _ சந்திர காந்தக் கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:38 pm

சாந்திராயனம் _ நோன்பு வகை, இது ஒரு மாதத்தில் வெள்ளுவா ( பெளர்ணமி ) முதல் காருவா ( அமாவாசை ) வரை தினம் ஒவ்வொரு பிடி சோறு குறைத்தும் பின்னர், காருவா முதல் வெள்ளுவா வரை தினம் ஒவ்வொரு பிடி சோறு கூட்டியும் உண்டு இருப்பது.
சாந்து _ சந்தனம் : சந்தன மரம் , திருநீறு : விழுது : சுண்ணாம்பு : மலம்.
சாந்துக்காறை _ மகளிர் கழுத்தணி.
சாந்துப் பொடி _ மணப் பொடி.
சாந்தை _ மன அமைதியுடையவள் : பூமி.




சாபசரத்தி _ தவமாது.
சாபத்திரி _ சாதிபத்திரி.
சாபம் _ வில் : தனுராசி: விலங்கின் குட்டி : தவத்தோர் சபித்துக்கூறும் மொழி.
சாபலம் _ விடாப்பற்று : எளிமை.
சாபல்லியம் _ சபலபுத்தி : பயனுளதாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:38 pm

சாபனை _ சாபம்.
சாபாலன் _ ஆட்டு வணிகன்.
சாபித்தல் _ சாபமிடுதல்.
சாப்பறை _ சாவுப்பறை : சாவில் அடிக்கப்படும் பறை.
சாப்பாடு _ உணவு.




சாப்பிடுதல் _ உண்ணுதல் : கைப்பற்றுதல்.
சாப்பிள்ளை _ செத்துப்பிறக்கும் பிள்ளை.
சாப்பை _ புல் பாய் : வலிமையில்லாதவன்.
சாமகண்டன் _ நீல கண்டம் உடைய சிவபிரான்.
சாமகம் _ சாணைக்கல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:38 pm

சாமகானம் _ சாமவேதம் பாடுதல்.
சாமக் கோழி _ நள்ளிரவில் கூவும் கோழி.
சாமணம் _ பொற்கொல்லர் கருவி வகை.
சாமந்தம் _ ஒரு பண் : பக்கம்.
சாமந்தன் _ சிற்றரசன் : படைத் தலைவன் : அமைச்சன்.



சாமந்தி _ பூச் செடி வகை: செவ்வந்தி : சீமைச் சாமந்தி.
சாமம் _ 7 1/2 நாழிகை கொண்ட கால அளவு : சாமவேதம் : ஓர் உபாயம் : கருமை : பச்சை : பஞ்சம் : அறுகு.
சாமரபுட்பம் _ மாமரம் : கமுகு.
சாமரம் _ கழு : கவரிமான் : மயிரால் அமைந்த அரச சின்னம்: சிவதைக் கொடி.
சாமரை _ கவரி மான் : மயிரால் அமைந்த அரச சின்னம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:28 am

சாமர்த்தியம் _ திறமை : பூப்படைதல்.
சாமளம் _ கருமை : பசுமை.
சாமளை _ பசுமை நிறமுடைய பார்வதி தேவி.
சாமன் _ புதன் : மன்மதன் தம்பி.
சாமாசி _ நடு நிலையாளன் : தூதன் : ஆலோசனை.


சாமானியம் _ சாதாரணம் : பொது : எளியது.
சாமான் _ பண்டம் : பொருள்.
சாமி _ கடவுள் : முருகக் கடவுள் : அருகன் : குரு : தலைவன்: மூத்தோன் : தலைவி : தாய் : பொன் : செல்வம் : சாமை : மரியாதை குறிக்கும் சொல்.
சாமியம் _ ஒப்புமை : சொத்துரிமை.
சாமீகரம் _ பொன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:29 am

சாமீபம் _ அண்மை : ஒரு பதவி : கடவுளை அணுகி விளங்கும் ஒரு பதவி நிலை.
சாமுசித்தன் _ முற்பிறவியில் சரியை : கிரியை : யோகம் முடித்து ஞானத்தோடு பிறந்தவன்.
சாமுண்டி _ துர்க்கை : நாணல் : அவுரிப்பூண்டு.
சாமுதம் _ கடுக்காய் : கோரைப்புல்.
சாமேளம் _ சாப்பறை.



சாமை _ ஒரு தானியம் : வரகு : கற்சேம்பு : பெரு நெருஞ்சில்.
சாமோபாயம் _ நால்வகை சூழ்சியுள் இன் சொல் கூறிப் பகைவனைத் தன் வயமாக்குதல்.
சாமோற்பலம் _ யானை நெற்றியில் அணியும் சிந்தூரம்.
சாமோற்பவை _ பெண் யானை.
சாம்பசிவன் _ அம்பிகையுடன் விளங்கும் சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:29 am

சாம்பர் _ சாம்பல் : எரிந்த நீறு.
சாம்பல் _ எரிபட்ட சாணம் : வாடற்பூ : முதுமை : நாவல் மரம் : பயிர்களை நாசம் செய்யும் ஒரு வகைப்பூச்சி.
சாம்பலாண்டி _ உடல் முழுதும் சாம்பல் பூசிய பரதேசி : கோமாளி.
சாம்பலொட்டி _ எருக்கு.
சாம்பல் மொந்தன் _ வாழை வகை.



சாம்பவம் _ சிவ சம்பந்தமானது : சைவமத பேதம் : ஒரு புராணம்.
சாம்பவான் _ சிவ பிரானை வழிபடுவோன் : இராமாயணத்தில் கூறப்படும் கரடி வேந்தன்.
சாம்பவி _ பார்வதி தேவி : நாவல் வகை : ஒரு தீக்கை வகை.
சாம்பற் பூத்தல் _ நெருப்பில் நீறு பூத்தல் : சாம்பல் நிறம் படிதல் : சாம்பல் போல் உடல் வெளுத்தல்.
சாம்பன் _ சிவபிரான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:29 am

சாம்பார் _ பருப்புக் குழம்பு.
சாம்பான் _ பறையர் பட்டப் பெயர்.
சாம்பிராணி _ ஒரு மரவகை : தூப வகையுள் ஒன்று : மூடன்.
சாம்பு _ பொன் : பறை : படுக்கை : புடைவை : நாவல் மரம்.
சாம்புதல் _ வாடுதல் : கெடுதல் : ஒடுங்குதல் : குவிதல் : ஒளி மங்குதல்.


சாம்பூநதம் _ நால்வகைப் பொன்னுள் ஒன்று : மேருமலையின் வடக்கிலுள்ள நாவற் சாறுள்ள ஆறு.
சாம்ராச்சியம் _ தனியரசாட்சி : பெரும் பதவி.
சாயகம் _ அம்பு.
சாயங்காலம் _ மாலைநேரம்.
சாயப்பணி _ சாயமிடும் தொழில் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:30 am

சாயப்பாக்கு _ சாயம் ஏற்றிய பாக்கு.
சாயம் _ நிறம் : வண்ணம் : சாயவேர்.
சாயரட்சை _ சாயங்காலம் : கோயிலில் நடக்கும் மாலைப் பூசை.
சாயரி _ பாலைப் பண் வகை.
சாயல் _ அழகு : ஒப்பு : மென்மைத் தோற்றம் : மேனி : சாய்வு : இளைப்பு : நிழல் : மாதிரி : நுணுக்கம் : துயிலிடம் : சார்பு : மஞ்சள்: மேம் பாடு : அருள்.


சாயவேர் _ சாயமிடுவதற்கு உதவும் பூண்டு வகை.
சாய வேளாகொல்லி _ ஒரு பண் வகை.
சாயனம் _ கள் : கிரக புடம் : இரசாயனம்.
சாயாகெளளம் _ ஒரு வகைப் பண்.
சாயாக்கிரகம் _ காணாக் கோள்களாகிய இராகு : கேதுக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:30 am

சாயாதனயன் _ சாயையின் மகனாகிய சனி.
சாயா நீர் _ கானல் நீர்.
சாயா படம் _ நிழற் படம்.
சாயாபதி _ சாயையின் கணவனாகிய சூரியன்.
சாயானகம் _ ஓந்தி : ஓணான்.



சாயினம் _ மென்மையுடைய மகளிர் கூட்டம்.
சாயுச்சம் _ ஆன்மா கடவுளிடம் ஒன்றும் நிலை.
சாயை _ நிழல் : சூரியனின் தேவி : எதிரொலி :இராகு கேதுக்கள்: புகழ் : பாவம் : பிரதேசம் : தேயிலை : ஒப்பு.
சாய் _ ஒளி : அழகு : நிறம் : புகழ் : தண்டாங்கோரைப் புல்: செறும்பு.
சாய்கால் _ செல்வாக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:30 am

சாய்தல் _ கவிழ்தல் : மெலிதல்: நடு நிலை மாறுதல்: ஒதுங்குதல் : தோற்றோடுதல்.
சாய்த்தல் _ சாயச் செய்தல் : கரைக்குச் செலுத்துதல் : கெடுத்தல் : மெய்படுத்துதல் : முறித்தல் : மிகுதியாகக் கொடுத்தல்.
சாய்ப்பு _ தாழ்வு : மலைச்சரிவு : இறப்பு : இரிதல் : மட்ட வெற்றிலை.
சாய்மணை _ திண்டு : சார் மணை.
சாய் மரம் _ சிவதைக் கொடி.




சாய் மானம் _ சார்மணை : ஒரு சார்பு.
சாய்வு _ சரிவு : ஒரு சார்பு நிற்றல் : குறைவு : நிலைமைத் தாழ்வு :வளைவு : நோக்கம் : அழிவு.
சாரகம் _ இந்துப்பு.
சாரங்கம் _ மான் : வானம் பாடி : யானை : மேகம் : குயில் : வில் : வண்டு : ஒரு பண் : திருமால் வில் : குறிஞ்சாக் கொடி.
சாரங்கன் _ திருமால் : குதிரை வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:31 am

சாரங்கி _ நரம்பு வாத்திய வகை.
சாரசம் _ தாமரை : கொக்கு : வெண்ணாரை : இனிய ஓசை : சீமை நன்னாரி.
சாரசன் _ சோரபுத்திரன்.
சாரசியம் _ இனிமை.
சாரணர் _ ஒற்றர் : தூதுவர் : சமண பெளத்தருள் சித்திகளடைந்தோர் : தேவ கணத்தாருள் ஒருவர் : நாட்டுத் தொண்டர்.



சாரணை _ ஒரு பூடு வகை.
சாரதம் _ பூதம் : இனியவோசை : ஓர் இசைப்பாட்டு வகை.
சாரதர் _ பூத கணத்தார்.
சாரதா,சாரதை _ கலைமகள்.
சாரதி _ தேரோட்டி : புலவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:31 am

சாரத்தின் சத்துரு _ முட்டை.
சாரத்துவம் _ விபசாரம்.
சாரத்துளை _ சுவர்த்துளை.
சாரப் பருப்பு _ காட்டு மாவிரை.
சாரமேயன் _ நாய்.



சாரம் _ மேலேறக் கட்டும் மரம் : மேடு : சாறு : இனிமை : மருந்து : சிறந்தது : ஆற்றல் : பயன் : மர வயிரம் : இலுப்பை : கொட்டை முந்திரி : மரம் : நவச்சாரம் : காரச் சாம்பல் : விபசாரம்.
சாரலம் _ எள்.
சாரல் _ பக்கம் : மலை : துவானம் : அடைதல்: தூற்றல் : மருத யாழிசை.
சாரன் _ ஒற்றன் : குதிரைவகை : சோர நாயகன்.
சாராம்சம் _ வடித்தெடுத்த பகுதி : பயன்.

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:31 am

சாராயம் _ காய்ச்சி வடித்த மது.
சாரி _ வட்டமாய் ஓடுதல் : நடை : ஊர்தி மீது செல்லுதல் : பக்கம்: கூட்டம் : உலாவல் : இசைக்கருவி வகை : சூதாடு காய் : மாதர் சீலைவகை : அஞ்சன பாடாணம்.
சாரிகை _ வட்டமாய் ஓடுதல் : வையாளி : கதி : சுழற் காற்று : நாகணவாய்ப் பறவை : கவசம் : சுங்கம் : பக்கம்.
சாரிசம் _ கறியுப்பு.
சாரிதம் _ இனிய குரல்.


சாரித்தல் _ கீழேவிழச் செய்தல்.
சாரித்திரம் _ ஒழுக்கம் : வரலாறு : கதை.
சாரிநாதன் _ கத்தூரி விலங்கு.
சாரிபம் _ சாரிபை : நன்னாரி.
சாரியல் _ இந்துப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:32 am

சாரியன் _ ஒழுக்கமுடையவன்.
சாரியை _ சார்ந்து வரும் இடைச்சொல் : குதிரையின் சுற்று வரவு நடை : வீரன் போர் செய்யும் போது கொளு்ளும் நடைவகை: ஆடல் வகை.
சாரீரகம் _ சரீர சம்பந்தம் உடையது : நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
சாரீரம் _ இனிய குரல்.
சாரு _ அழகு : கிளி.



சாருகம் _ கொலை.
சாருகன் _ கொலையாளன்.
சாருசம் _ கல்லுப்பு.
சாரூபம் _ கடவுளைப் போன்ற வடிவம் பெறுதல்: இணக்கம் : பொன் வகை.
சாரை _ நீளமான கோடு : பாம்பு வகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:32 am

சாரையோட்டம் _ சாரைப் பாம்பின் பின் போக்கு : நேரே ஓடும் வகை.
சாரைவாலன் _ நீண்ட வாலுள்ள எருது : புகையிலை வகை.
சார் _ கூடுகை : இடம் : பக்கம் : தாழ்வாரம் : அழகு : ஒரு மரம் : ஒற்றன் : வகை : ஏழனுருபு.
சார்க்கரம் _ கற்கண்டு : பாலின் ஆடை.
சார்ங்கம் _ திருமாலின் வில்.



சார்தல் _ சென்றடைதல் : அடுத்தல்: கலத்தல் : பொருந்தியிருத்தல்: உறவு கொள்ளுதல் : ஒத்தல் : சாய்தல்.
சார்த்து _ குறிப்பு : பத்திரம்.
சார்த்துதல் _ இணைத்தல் : சாரச் செய்தல்.
சார்த்தூலம் _ புலி.
சார்ந்தார் _ நண்பர் : சுற்றத்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:32 am

சார்பறுத்தல் _ துறத்தல்: பிறப் பறுத்தல்.
சார்பிலார் _ முனிவர் : பகைவர்.
சார்பு _ இடம் : பக்கம் : பற்று : அடைக்கலம் : பிறப்பு : ஒரு தலை நிற்றல் : கூட்டுறவு : பொருத்தம்.
சார்பு நூல் _ முதல் நூல் வழி நூல்களின் பொருள் தன்மை கொண்ட வேறு நூல்.
சார்பெழுத்து _ குற்றிய லிகரம், குற்றிய லுகரம் முதலிய சார்பில் தோன்றும் எழுத்து.



சார்மணை _ சாய்ந்து கொள்வதற்காகத் திண்ணைகளில் அமைக்கப்படும் சாய்மானம்.
சார்வரி _ ஒரு தமிழ் வருடம்.
சார்வு _ இடம் : புகலிடம் : ஆதாரம் : துணை : பற்று : வழி வகை : ஒரு பக்கமாய்ச் சாய்தல் .
சால _ மிகவும்.
சாலகபங்கடர் _ இராக்கதர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:33 am

சாலகம் _ சிலந்தி வலை : வலை: யாக பத்தினியின் நெற்றியிலணியும் அணி : பறவைக்கூடு : பலகணி : அரும்பு : மாய வித்தை : சாக்கடை : சிறு குறிஞ்சா.
சாலகராகம் _ ஒரு பண்.
சாலகன் _ விரிவாகப் பேசுபவன்.
சாலகிரி _ அழுக்கு அகற்றுமிடம் :அரண்மனையின் ஒரு புறம்.
சாலக்காரன் _ மாய வித்தைக் காரன் : வஞ்சகன்.



சாலக்கு _ சூழ்ச்சி : போலி நடிப்பு : திறமை.
சாலடித்தல் _ உழுதல்.
சால பஞ்சிகை _ மரப்பாவை.
சால மாலம் _ வஞ்சகம்.
சாலம் _ மதில் : கூட்டம் : பலகணி : ஆச்சா : வலை : பூ அரும்பு : கல்வி : தாழ்வாரம் : பெருமை : அகலம் : குறளை : மருத்துவ நூல்: கொடி மரம் : மாய வித்தை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 06, 2013 5:33 am

சாலம்பம் _ பற்றுக் கோடு உள்ளது.
சாலரி _ ஒரு வாத்தியம்.
சாலர் _ நெய்தல் நில மக்கள் : கைத்தாள வகை.
சாலாதார் _ பெருமையற்றவர்.
சாலாபோகம் _ அறச் சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம்.



சாலாரம் _ ஏணி : படி : பறவைக்கூடு.
சாலி _ செந்நெல் : கள் : புழுகு சட்டம் : அருந்ததி : கவசம் : மராமரம் : வேலமரம்.
சாலிகன் _ நெசவுத் தொழில் செய்பவன்.
சாலிகை _ கவசம் : சுங்க வரி.
சாலியன் _ துணி நெய்வோன்: ஆடை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 43 1, 2, 3 ... 22 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum