தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் அகராதி

Page 33 of 43 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 43  Next

View previous topic View next topic Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 05, 2013 7:33 pm

First topic message reminder :

சாதனக்காணி _ அரசனால் கொடுக்கப்பட்ட உரிமை நிலம்.
சாதனபத்திரம் _ உரிமைப் பத்திரம்.
சாதனம் _ கருவி : பயிற்சி : துணைக்காரணம் : உருத்திராக்கம் முதலிய சின்னம் : இலாஞ்சனை : இடம் : நகரம் : ஆதார பத்திரம்.
சாதனம் பண்ணல் _ உறுதி செய்தல் : பழகுதல்.
சாதனன் _ பிறந்தவன்.



சாதனை _ செயல் முடித்தல்: விடாத முயற்சி : பிடிவாதம் : சலஞ் சாதிக்கை : நடித்துக் காட்டுகை : பொய்.
சாதன்மியம் _ ஒப்புமை.
சாதா _ சாதாரணமாக : பகட்டு இல்லாத.
சாதாரண _ ஒரு தமிழ் வருடம்.
சாதாரணம் _ பொதுவானது: எளிது : தாழ்வானது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:44 pm

மருளாளி - பேயாவேசங்கொண்டு குறி சொல்லும் பூசாரி.
மருள் - மயக்கம் : ஆவேசம் : உவமையுருபு : உன்மத்தம் : ஒரு கிழங்கு : கள் : குறிஞ்சியாழ்த்திறம் : பிசாசம் :
மயக்கம் : மருளென்னேவல் : திரிபுணர்ச்சி : வியப்பு : புல்லுரு : புதல்.
மருள்வி - மருட்டு : மருளச்செய் : மயக்கு.
மரூஉமொழி - மருவி வழங்கும் மொழி.
மரூகம் - மயில் : தோகை.


மரை - ஒருவகை மான் : தவளை : தாமரை : இரத்தினக் குற்றம் : திருகுவகை : திருக்குள்ளகாய்.
மரைப்பூ - தாமரைப் பூ.
மரையா - காட்டுமான் : உழைமான்.
மர்க்கடமுட்டி - குரங்குப்பிடி.
மர்க்கடம் - குரங்கு.


மர்க்கடவைரி - பாம்பு.
மர்த்தனம் - கடைதல் : பிசைதல்.
மர்த்தித்தல் - அரைத்தல் : உடைத்தல் : கடைதல் : மருந்து கலத்தல்.
மர்மி - இரகசியத்தை வெளிவிடாதவன் : தந்திரி.
மலக்கடி - கலக்கம் : வருத்தம்.


மலக்கம் - கலக்கம் : துன்பம் : மாறு.
மலக்கு - மயக்கம் : தேவன்.
மலங்கல் - கலங்கல் : குளம் : விலாங்கு மீன்.
மலங்கழித்தல் - உடல் மலத்தை வெளியேற்றல் : ஆணவம் முதலிய மலம் நீங்குதல்.
மலங்கு - ஒரு மீன் : மலங்கென்னேவல்.


மலங்குதல் - மனங்கலங்குதல் : பிறழ்தல் : ததும்புதல்.
மலசகிதர் - மும்மலத்தோடு கூடியவர்.
மலடன் - பிள்ளையில்லாதவன்.
மலடு - கருத்தரியாமை.
மலட்டாறு - காடுகளில் ஓடுவதும் நீர் வற்றுவதுமான ஆறு.


மலத்திரயம் - மும்மலம்.
மலநீர் - மலமூத்திரம்.
மலபந்தம் - மலச்சிக்கல்.
மலபரிபாகம் - பந்தபாசம் நீங்கிப் பக்குவம் அடைதல்.
மலப்பாண்டம் - உடல்.


மலமாசம் - அதிகமாசம்.
மலம் - அழுக்கு : இரத்தம் : கட்டம் : கண்பீளை : கருப்பூரம் : கறள் : குறும்பி : தாது : நகம் : பந்தம் : பவ்வீ :
பாவம் : மண்டி : மூக்குச் சளி : மூளை : வியர்வை.
மலயக்கால் - தென்றல் : மலயமாருதம்.
மலயசம் - சந்தனம் : தென்றல் : மலையாடு.
மலையமுனி - அகத்தியன்.


மலயம் - பொதியமலை : சந்தனம்.
மலரகிதர் - மும்மலம் நீங்கப்பெற்றவர்.
மலரணை - மலர்ப்பள்ளி : மலர் அமளி.
மலரவன், மலரோன் - நான்முகன்.
மலர் - பூ : மலரென்னேவல் : மலர்ச்சியானது.


மலர்கணைவேள் - காமன்.
மலர்க்கா - பூம்பொழில்.
மலர்ச்சி - அலர்ச்சி : எழுச்சி : களிப்பு : பொலிவு.
மலர்தல் - எதிர்தல் : தோன்றல் : நிறைதல் : விரிதல் : மொட்டவிழ்தல் : அகலுதல் : பரத்தல் : மனமகிழ்தல் : மிகுதல்.
மலர்த்தல் - நிமிரச்செய்தல்.


மலர்த்தாள் - மலர்க்கொம்பு.
மலர்த்திரள் - பூங்கொத்து.
மலர்த்தேன் - பூந்தாது : பூந்தேன்.
மலர்ப்பலி - கை நிறையக் கொண்டு வழிபாடாக இடும் பூ.
மலர்மகள் - இலக்குமி : மலர் மங்கை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:44 pm

மலர்வு - மலர்ச்சி.
மலாகை - தூது செல்பவள் : காமமிக்கவள் : பெண் யானை.
மலாசு - சிறு பூளை.
மலாஞ்சி - வெள்ளுள்ளி.
மலாடு - மலையமானாடு : திருக்கோவலூர் நாடு.


மலாரம் - வளையற்கோவை.
மலிதல் - நிறைதல் : பெருகல் : விலை நயத்தல் : மிகுதல் : நெருங்குதல் : புணர்ச்சியில் மகிழ்தல் : செருக்குதல் :
பரத்தல் : சொல்லுதல்.
மலிர் - நீரூற்று.
மலிர்தல் - பெருகுதல் : பயிலுதல் : நீர் முதலியன ஒழுகுதல்.
மலிவு - நயம் : மிகுதி : நிறைவு : தன்மை.


மலினமுகம் - அக்கினி : ஆவி : கருங்குரங்கு.
மலினமுகன் - இறந்தோன் : கொடியவன் : தீக்கடவுள் : தீயோன் : முசு : வண்டு.
மலினம் - மாசு : பாசம் : அழுக்கு : கருமை : குற்றம் : பாவம் : மோர்.
மலினி - கெடுதி : பச்சிலை : தூரஸ்திரி.
மலூகம் - குருவி.


மலை - உவமை : பருப்பதம் : மலையென்னேவல்.
மலைக்கல் - ஆட்டுக்கல்.
மலைக்குண்டுவேர் - அதிமதுரம்.
மலைக்கோன் - கொன்றை.
மலைச்சரக்கு - கருப்பூர வகை : மருந்துச்சரக்கு.


மலைதல் - அணிதல் : உவமையாதல் : எதிர்த்தல் : ஒருவழிப்படாது நிற்றல் : பொருதல் : மறுத்தல் : செய்யுள் வழுவினொன்று :
செய்தல் : சூடுதல் : ஒத்தல் : பகைத்தல் : மயங்குதல் : மேற்கொள்ளுதல்.
மலைத்தல் - தடுமாறல் : பொருதல் : வருத்துதல்.
மலைத்துவாரம் - மலைபடு திரவியம்.
மலைத்தும்மட்டி - கக்கரி.
மலைநாடன் - சேரன்.


மலைநாடு - சேரனாடு.
மலைபடுதிரவியம் - மலைலிலுண்டாகும் அகில் : மிளகு : கோட்டம் : தக்கோலம் : குங்குமம் என்ற ஐவகை வாசனைப் பண்டம்.
மலைப்பாழி - மலைக்குகை.
மலைப்பிஞ்சு - சிறு கல்.
மலைப்பு - கூத்தின் விகற்பம் : திகைப்பு : போர் : மலைவு : அறிவு மயக்கம் : மாறுபாடு : சம்பிரமம்.


மலைப்புனம் - தினைவிளை நிலம்.
மலைமுழை, மலைமுழைஞ்சு - மலைக்குகை.
மலையகராதி - மூலைகைகளைப் பற்றிய ஓர் அகராதி நூல்.
மலையக்கால் - தென்றற் காற்று.
மலையசம் - மலையாடு.


மலையடி - தாழ்வரை : சேவற்கோழி : கொங்குவேளாளர்.
மலையமான் - சேரன்.
மலையம் - இந்திரன்கா : குறிஞ்சி யாழ்த்திறம் : தோட்டம் : பொதிய மலை : மலையினுச்சி.
மலையசரன் - இமவான்.
மலையரையன் - இமவான் : மலையமான்.


மலையன் - ஒரு சாமை : கடையெழு வள்ளலில் ஒருவன் : குறிஞ்சி நிலத் தலைவன் : சேரன்.
மலையாசலம் - பொதியமலை.
மலையாரம் - சந்தனம்.
மலையாளி - மலையாள நாட்டான் : மிளகு.
மலையானிலம் - தென்றல்.


மலையிசம் - சந்தனம் : மலையசம் : ஈகம் : சாந்தம்.
மலையிடறு - பெருந்தடை.
மலையிலக்கு - வெளிப்படையானது.
மலையேறுதல் - தெய்வம் இடத்தினின்று நீங்குதல் : முடிவடைதல்.
மலைவளர் காதலி - பார்வதி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:46 pm

மலைவாணர் - வேடர் : மலைவாழ்நர்.
மலைவில்லோன் - சிவன்.
மலைவு - உவமை : போர் : மயக்கம் : மாறுபாடு : பிரமிப்பு : உரை செயல்களின் முன்னுக்குப்பின் விரோதம்.
மலைவெட்பு - சந்தனம்.
மல் - கூத்தினோர் விகற்பம் : திருமால் கூத்து : பெருகல் : வலிமை : வளமை : வருவாய் : மற்போர் : மல்லுச் சட்டம் : துகில்.


மல்கல், மல்குதல் - நிறைதல் : செழித்தல் : பெருகுதல்.
மல்குவித்தல் - நிரப்பல் : பூரிக்கச் செய்தல்.
மல்லகதி - குதிரையின் ஐந்து கதியில் ஒன்று.
மல்லகை - மல்லிகை.
மல்லசம் - மிளகு.


மல்லம் - கதுப்பு : பள்ளியறை : மற்போர் : ஓர் ஏனம் : தட்டம் : வலிமை : கிண்ணம் : யாகசேடம்.
மல்லரி - பம்பை மேளம் : பறைவகை.
மல்லர் - மற்போர் செய்வோர் : வலியர்.
மல்லல் - மிகுதி : வலி : வளமை : செல்வம் : பொலிவு : அழகு.
மல்லன் - திண்ணியன் : வலியோன் : பெருமையிற் சிறந்தோன்.


மல்லாட்டம் - போராட்டம்.
மல்லாத்துதல் - முதுகு கீழாக முகம் மேலாகக் கிடக்கச் செய்தல்.
மல்லாரி - பம்பை மேளம்.
மல்லி - கொத்துமல்லி : மல்லிகை : மிகப் பருத்தவள் : பருத்துத் தடித்தவள்.
மல்லிகை - ஒரு பூச்செடி : விளக்குத் தண்டு : பூங்கொடி : எருமை : முல்லை : பாத்திரம் : இரப்போர் கலம்.


மல்லு - ஒரு கூத்து : ஒரு போர்.
மல்லூகம் - புழு : கிருமி : கீடம் : பொட்டு.
மல்லை - இரப்போர்கலம் : கப்பரை : மௌனம் : வட்டம் : வளம் : பெருமை : மாமல்லபுரம்.
மவுட்டியம் - அறியாமை.
மவுலி - மௌலி : முடி : சடை : தலை.


மவுனம் - மோனம்.
மவுனி - ஆமை : மவுன ஞானி.
மவ்வம் - அழகு : சுந்தரம்.
மழ, மழம் - இளமை : குழந்தை : மனமயக்கம்.
மழநாடு - திருச்சிராப்பள்ளிக்கு மேல் பால் காவிரியாற்றுக்கு வட பாகத்திலுள்ள பகுதி.


மழபுலவஞ்சி - பகைவர் புலம் பாழ் படுத்தும் புறத்துறை.
மழம் - இளமை : கொம்மை.
மழலை - இளமை : குழந்தைகளின் திருந்தாச்சொல் : மென் மொழி : மெல்லோசை : புதுமை.
மழவர் - வீரர்.
மழவன் - கட்டிளமையோன் : வீரன் : மழநாட்டான்.


மழவு - இளமை : குழந்தை.
மழித்தல் - முண்டனஞ் செய்தல் : மொட்டையடித்தல்.
மழு - எரியிரும்பு : சிவன் ஆயுதத்தொன்று : பரசாயுதம் : கோடரி : பழுக்கக் காய்ச்சிய இரும்பு : கடல் : அதிகமான : மழுங்கிய.
மழுகூழை - வாலிழந்த விலங்கு : மூடன்.
மழுக்கம் - கூரின்மை : தோற்றமின்மை : மங்கல்.


மழுக்கல், மழுக்குதல் - அடித்தல் : கூர்மை மழுங்கச் செய்தல்.
மழுங்கல், மழுங்குதல் - ஒளி மழுங்கல் : கூர்கெடுதல் : பேர் குறைதல் : பொலிவழிதல்.
மழுப்பன் - காரியத்தை மழுப்பி விடுவோன் : தாமதப்படுத்துவோன் : குதர்க்கம் பேசுபவன்.
மழுப்புதல் - நெகிழவிடுதல் : தாமதப்படுத்தல் : ஏமாற்றுதல் : வீண் பேச்சினாலே புரட்டுதல்.
மழுமாறி - புரட்டன்.


மழுவன் - அஞ்சாதவன் : நகர் காப்போன் : பிடித்ததை விடாதவன்.
மழுவாளி - சிவன் : பரசுராமன்.
மழுவி - மழுங்கி : மழுப்பன் : மழுங்குணி.
மழுவெடுத்தல் - எரியிரும்பைக் கையேந்தல்.
மழுவேந்தி - சிவன் : பொய்யன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:46 pm

மழை - குளிர்ச்சி : நீர் : மாரி : மிகுதி : மேகம் : கருகை : மேகத்தினின்று பொழியும் நீர் : நீருண்ட மேகம் : மழைக்கால்.
மழைக்கோளாறு - மழைத்தோற்றம் : புசலெடுக்கை.
மழைக்கோள் - சுக்கிரன்.
மழைதாங்கி - கொங்காணி.
மழைத்தல் - மழை பெய்தல் : குளிர்தல் : கருநிறமாதல் : மழை நிறைந்திருத்தல்.


மழைப்புகார் - மழை முகில்.
மழையடைத்தல் - விடாமழை பொழிதல்.
மழையான் - திருமால்.
மழையேறு - இடி : அசனி : உருமு.
மழைவண்ணக் குறிஞ்சி - ஒரு கொடி.


மழைவண்ணன் - திருமால்.
மழைவறங்கூர்தல் - மழை பெய்யா தொழிதல்.
மளமளப்பு - முறிதற் குறிப்புள்ள ஒலி.
மளிகாரம் - வெண்காரம்.
மளிகை - பலசரக்குக் கடை.


மள்குதல் - குறைதல் : சிக்கடைதல் : அஃகுதல் : மள்கல்.
மள்ளம் - வலி : மள்ளல் : பலம்.
மள்ளர் - உழவர் : குறவர் : குறிஞ்சி நில மாக்கள் : திண்ணியர் : படைவீரர் : மறவர்.
மள்ளல் - வலி : மள்ளம் : திடம்.
மள்ளன் - படை வீரன் : இளைஞன் : மருத நிலத்தான் : திண்ணியோன் : படைத்தலைவன் : குறிஞ்சி நிலத்து வாழ்வோன்.


மள்ளு - கைம்மரம்.
மறக்கருணை - அழித்துக் காட்டுங் கருணை : நிக்கிரக ரூபமான கருணை.
மறக்களம் - போர்க்களம்.
மறக்களவழி - போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை.
மறக்கற்பு - சீற்றங்காட்டி நிறுத்துங் கற்பு.


மறங்குதல் - கலங்குதல் : குலைதல் : நிலைகெடல்.
மறதி - நினைவின்மை.
மறத்தல் - அசட்டை பண்ணல் : பொச்சாப்பு : விட்டுவிடல்.
மறத்தியர் - பாலை நிலப் பெண்கள்.
மறநிலைப்பொருள் - மறத்தாற்கவர் பொருள் : பகைவர் பொருள் : திறைப்பொருள் : சூதில் வெல்பொருள்.


மறநிலையறம் - நிரை மீட்டுப் பகை வென்று செஞ்சோற்றுக் கடன் கழியாதாரைத் தண்டித்துக் குறைவுறச் செய்தல் : அரசன்
பகையறுத்து நாட்டினைக் காவல் புரியும் அறச் செயல்.
மறநிலையின்பம் - குறியெய்தல் ஏறு தழுவல் முதலிய மறத்தகையால் கன்னியை மணம் முடித்து இன்புறல்.
மறப்பிலி - கடவுள் : நித்தியன் : சுயம்பு : விவேகி.
மறப்புலி - சிங்கம்.
மறமலி - யானை : மதகரி : களிறு : மாதங்கம்.


மறம் - கலம்பகத்தின் ஓர் உறுப்பு : கெடுதி : கொலைத் தொழில் : கோபம் : சினம் : நமன் : பாவம் : பிணவலி : வீரம் :
வலி : வெற்றி : போர் : மறக்குடி : மயக்கம்.
மறம்வைத்தல் - வன்மம் வைத்தல்.
மறவல் - மாறுபடுதல்.
மறலி - நமன் : மயக்கம் : பொறாமை.
மறலிமறலி - சிவன்.


மறலை - புல்லறிவாளன் : அற்பன்.
மறல் - எழுச்சி : ஒரு கூத்து : காலன் : குற்றம் : சாதல் : தரித்திரம் : நமன் : பகை : பிணக்கு : போர் : மயக்கம் : மறதி.
மறவர் - படைவீரர் : பாலைநில மாக்கள் : வேடர்.
மறவன் - மலைவேடன் : வீரன் : பாலி நிலத்தான் : மறக்குடியான் : படைத்தலைவன் : கொடியோன்.
மறவி - தேன் : கள் : மறதி : இழிவு : குற்றம் : பதநீர் : அழுக்காறு : மறதியுள்ளவன்.


மறவை - வன்கண்மையுடையது.
மறி - அழுங்கு, ஆடு, குதிரை, மான் இவற்றின் குட்டி : ஆடு , குதிரை , மான் , இவற்றின் பெண் : மறியென்னேவல் :
மான் : மேடராசி.
மறிகாணுதல் - குதிரை, மான் முதலிய குட்டி போடுதல்.
மறிதரல் - மீளல்.
மறிதல் - தடைபடல் : திரும்பல் : மடங்கல் : விழுதல் : மீளுதல் : காவற்படுதல் : கீழ்மேலாதல் : முதுகிடுதல் : சாய்தல் :
முறுக்குண்ணுதல் : அறுபடுதல் : சாதல் : துள்ளுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:47 pm

மறித்தல் - தடுத்தல் : திருப்புதல் : அழித்தல்.
மறியல் - தடை : நிறுத்துகை : சிறை : வழக்கில் செய்யும் தடையுத்தரவு : காவற்கூடம்.
மறியேந்தி - சிவன்.
மறு - குற்றம் : மச்சம் : மறுவென்னேவல் : மற்றை : மாசு : குறை : அடையாளம்.
மறுகலிடுதல் - திரும்பி வருதல்.


மறுகால் - கதகு : அதிக நீரை வெளியேற்றும் வாய்க்கால்.
மறுகு - இரண்டாம் விளைச்சல் : குறுந்தெரு : தெரு : மறுக்கென்னேவல்.
மறுகுதல் - உலாவுதல் : சுழலுதல் : கலங்குதல் : வருந்துதல்.
மறுகை - நுங்கு : மாட்டின் பொதிப் பாரத்தில் பாதியளவு.
மறுக்கம் - இக்கட்டு : சுழற்சி : மனக் குழப்பம் : துன்பம்.


மறுக்குதல் - மறுதலித்தல் : மனஞ்சுழலல்.
மறுதலித்தல் - மறுத்தல் : வேறுபடல் : மாறுபடுதல் : மார்க்கத்தை விட்டு நீங்குதல்.
மறுதலை - சத்துரு : மறுதலிப்பு : வேறிடம்.
மறுதலைத்தல் - எதிரிட்டுத் தோன்றுதல் : மறுத்தல்.
மறுதல் - மாறுதல்.


மறுதாக்கல் - எதிருரை : விடை.
மறுத்தல் - கொடாமை : தவறு : நீக்கல் : வெட்கம் : ஆட்சேபித்தல் : மாறுகூறுதல் : தடுத்தல்.
மறுபிறவி - மறுபிறப்பு : புதுப்பிறப்பு.
மறுபுலம் - பாலை நிலம் : சுரம் : வன்பால்.
மறுப்படுதல் - ஊறடைதல் : வசைப்படல் : சிதைவுறுதல் : புள்ளியுடைத்தாதல்.


மறுப்பு - மறுக்குதல் : தடுத்தல் : எதிர்த்தல்.
மறுமணம் - கணவன் இறந்த பின் மீண்டும் செய்து கொள்ளுந் திருமணம்.
மறுமாடி - மஞ்சுக்கட்டை : மலைப்பிளவு.
மறுமுள் - பாலுண்ணி : அம்மை முத்தின் மேலுண்டாம் மறுமுத்து.
மறுமை - மறுபிறவி : மறுவுலகம்.


மறுமொழி - பதில் : விடை.
மறுவரல் - சுழற்சி : மயக்கம் : கலக்கம்.
மறுவலிடுதல் - திரும்புதல் : சிறிது எஞ்சி நிற்றல்.
மறுவல், மறுவி - கத்தூரி மிருகம் : கத்தூரி.
மறை - அடைக்கலம் : இரகசியம் : இரண்டாம் உழவு : எதிர் மறுப்பு : ஒளிப்பிடம் : கறை : கேடகம் : சங்குச் சுரி :
சொல் : புள்ளி : மந்திரம் : மறையென்னேவல் : மறைவு : வேதம் : மந்திராலோசனை : மறைக்கை : உபநிடதம் :
ஆகமம் : களவுப் புணர்ச்சி : வஞ்சனை : விலக்குகை.


மறைக்கொடியோர் - பார்ப்பார்.
மறைசை - திருமறைக்காடு.
மறைச்சி - பார்ப்பனத்தி : துரும்பப் பெண்.
மறைதல் - ஒளித்தல் : தோன்றாமற் போதல்.
மறைத்தலைவி - அலைமகள் : கலைமகள் : மலைமகள்.


மறைத்தல் - மறையச் செய்தல் : மூடல்.
மறைத்துமொழிகிளவி - இடக்கரடக் கல்.
மறைபதி - கள்ளக் கணவன்.
மறைபுகல் - அடைக்கலம் புகுதல்.
மறைபொருள் - உட்பொருள்.


மறைமுடிவு - கடவுள் : வேதாந்தம்.
மறைமுதல் - கடவுள் : சிவன் : பிரணவம்.
மறைமொழி - வேதமந்திரம்.
மறையவர் - அந்தணர் : துரும்பர் : முனிவர்.
மறையவர்கோன் - நான்முகன்.


மறையிலார் - கீழ்மக்கள்.
மறையோன் - நான்முகன் : பார்ப்பான்.
மறைவிடம் - ஒளிப்பிடம் : வெளியிலிருந்து காணவியலாத இடம் : கக்கூசு.
மறைவு - ஒதுக்கு : தோன்றாமை.
மற்கடம் - குரங்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:48 pm

மற்கரை - குகை : மலடி.
மற்கு - கோபம்.
மற்குணம் - மூட்டுப்பூச்சி.
மற்கோல் - பகை.
மற்சரம் - மச்சம் : பொறாமை : போட்டி.


மற்சரித்தல் - போட்டியிடுதல் : வாதிடுதல்.
மற்சியம் - மீன் : மச்சம்.
மற்றது - அடுத்தது : பிறிது : வேறு.
மற்றவர் - ஏனையோர் : பிறர்.
மற்று - அசைநிலை : பிறிது என்னும் பொருள் வினைமாற்றுப் பொருள் என்பவற்றைத் தரும் இடைச்சொல்.


மற்றும் - பிறவும் : மேலும் : மீண்டும்.
மற்றோ - அதிசய இரக்கச் சொல்.
மனக்கடினம் - நெஞ்சழுத்தம்.
மனக்கதை - மனக்களங்கம்.
மனக்கிடக்கை - உள்ளக் கருத்து : மனக்கிடை.


மனக்குருடு - அறிவீனம்.
மனக்குவிவு - மனஒருமிப்பு.
மனக்குள்ளம் - வஞ்சகம்.
மனக்குறிப்பு - கருத்து : நோக்கம்.
மனக்கோட்டம் - அழுக்காறு : புத்தியின் கோணல்.


மனக்கோட்டரவு - மனவாட்டம்.
மனங்கரைதல் - நெஞ்சிளகுதல் : பின் இரங்குதல் : துக்கப்படுதல்.
மனங்கல் - ஒடுங்கல்.
மனச்சான்று - மனச்சாட்சி.
மனத்தழுக்கம் - அழுக்காறு.


மனத்துப்புரவு - மனச்சுத்தம்.
மனப்பால் குடித்தல் - கைகூடாதவற்றைப் பற்றி நெடுக எண்ணி அகமகிழ்தல்.
மனப்பகை - உட்பகை.
மனப்பரியஞானம் - பிறர் கருத்துக்கள் முற்பிறப்புக்கள் முதலியவற்றை அறியும் அறிவு.
மனப்பிரமை - மனமயக்கம்.


மனப்பூரணம் - முழுமனம் : மனத்திருத்தி : மிகு களிப்பு : மனநேர்மை : மனப்பூரிப்பு.
மனமிடுக்கு - மனத்திடம்.
மனமிறுகுதல் - கடினமனமாதல் : உலோபகுணங் கொள்ளுதல்.
மனமுரிவு - மனவெறுப்பு.
மனம் - இந்துப்பு.


மனம்போன போக்கு - சிந்தை சென்ற வழியே செல்லுகை.
மனவலி - ஊக்கம்.
மனவிறப்பு - மனவொடுக்கம்.
மனவு - அக்குமணி : மணி : அரைப்பட்டிகை : சங்கு : புடைவை.
மனவொடுக்கம் - மனவொன்றிப்பு : அமைதி : அடக்கம் : மன ஒற்றுமை.


மனவொன்றிப்பு - மனப் பொருத்தம்.
மனனம் - சிந்திக்கை.
மனாகை - பெண் யானை.
மனாலம் - குங்குமம் : சாதிலிங்கம்.
மனு - தரும நூல் பதினெட்டில் ஒன்று : மன்றாட்டு : விண்ணப்பம் : மனுநீதிச் சோழன் : சுவாயம்பு முதலிய ஆதியரசர் :
மனுதர்ம சாத்திரம் : மந்திரம் : மனிதன் : வார்த்தை.


மனுக்கள் - மனிதர்.
மனுசை - பெண்.
மனுநெறி - அறநூல்.
மனுபு - மனிதன் : மாந்தர் : மக்கள்.
மனுப்படுதல் - இருதுவாதல் : பசு முதலியன சினையாதல் : உபயோகமாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:49 pm

மனுவந்தரம் - மனுவின் காலம்.
மனுவர் - மனிதர் : கொல்லர்.
மனை - வீடு : மனைவி : இல் வாழ்க்கை : ஓர் அளவு : வெற்றிடம் : குடும்பம் : நற்றாய் : சூதாடுபலகையின் அறை.
மனைக்கோள் - பல்லி.
மனைத்தக்காள் - இல்வாழ்க்கைக்கு ஏற்ற மனைவி.


மனைத்தாயம் - இல்லொழுக்கத்தின் திறமை : வீட்டுரிமை : இல்லற ஒழுக்கம்.
மனைப்படப்பை - வீட்டுக் கொல்லை.
மனைமாட்சி - இல்லறத்திற்குரிய நற்குண நற்செய்கைகள்.
மனைமுதல் - மனைக்கிழத்தி.
மனையறம் - இல்லறம்.


மனையுறைமகள் - விவாகமான பெண்.
மனைவாழ்க்கை - இல்வாழ்க்கை.
மனைவேள்வி - இல்லறம்.
மனோகதம் - எண்ணம் : விருப்பம்.
மனோகதி - மனோவேகம்.


மனோகரம் - விரும்பப்படுந்தன்மை.
மனோசவம் - விவேகம் : மனத்தெளிவு.
மனோபவன் - மனநிலை : மன வெண்ணம்.
மனோபாவனை - மனப்பாவிப்பு : மனநிலை.
மனோரஞ்சிதம் - இன்பமானது : வாசனைப் பூக்கொடி வகை.


மனோரதம் - விருப்பம்.
மனோரமை - மேருமலைக்கு மகளும் இமய மலைக்கு மனைவியுமாகிய மேனை.
மனோராச்சியம் - மனப்பால் குடித்தல்.
மனோலயம் - மனவொடுக்கம்.
மனோவதி - பிரமன் நகரம்.


மனோவியாபாரம் - பலவகை எண்ணங்கள்.
மனோன்மணி - பார்வதி.
மன் - அசைச்சொல் : இறந்தகால இடைநிலை : ஒழிபிசை : கழிவு : மிகுதி : அரசன் : நிலைபேறு : பெருமை : சத்திரியன் :
கணவன் : உத்திரட்டாதி : இழிவு : மணங்கு : மந்திரம்.
மன்பதை - மக்கட்பரப்பு : படை.
மன்மத - இருபத்தொன்பதாவதாண்டு.


மன்மதகிருகம் - பெண்குறி.
மன்மதன் - காமன்.
மன்மதாலயம் - மாமரம்.
மன்மதோபாலம்பனம் - காமனைப் பழிக்கை.
மன்விருத்தம் - ஆசிரியவிருத்தம்.


மன்ற - அசைச்சொல் : தேற்றம் : தெளிவாக : நிச்சயமாக : மிக.
மன்றகம் - சபை : அவை : கூட்டம் : சங்கம் : கழகம்.
மன்றக்கூத்தன் - சிவன்.
மன்றம் - சபை : நிச்சயம் : நெடுந்தெரு : பலர் கூடும் வெளி : வாசனை : வெளி : பசுவின் தொழுவம் : செண்டுவெளி :
நியாசபை : மரத்தடிப் பொதுவிடம் : சிதம்பரம் : வீடு : மெய்ம்மை.
மன்றல் - கலியாணம் : நெடுந்தெரு : வாசனை.


மன்றவாணன் - கூத்தப்பிரான்.
மன்றாடி - கூத்தப்பிரான் : பிறர்க்காக வழக்கெடுத்துரைப்போன் : சபையில் வழக்காடுபவன் : ஆட்டிடையன் :
சில சாதியார் பட்டப் பெயர்.
மன்றாடுதல் - குறையிரந்து வேண்டுதல் : வழக்காடுதல்.
மன்றாட்டம் - வேண்டுகோள் : தொந்தரவு.
மன்றில் - வாயில் முற்றம்.


மன்று - கனகசபை : சபை : நீதித்தலம் : வெளி : பசுத்தொழு : மன்றம் : வாசனை.
மன்றுதல் - தண்டஞ் செய்தல்.
மன்றுபடுதல் - வெளிப்படுதல் : அரங்கிடைப்படுதல்.
மன்றுபாடு - தண்டப்பொருள்.
மன்றுளாடி - சிவன்.


மன்னல் - நிலைபேறு : வலிமை : உயர்ச்சி : விடாமுயற்சி : பெருமை.
மன்னன் - அரசன்.
மன்னர்பின்னோன் - வைசியன்.
மன்னாப்புக்குற்றவாளி - அரசாங்கத்தாரால் மன்னிப்புப் பெற்றுச் சாட்சி கூறுங் குற்றவாளி.
மன்னுதல் - நிலைபெறுதல்.


மன்னி - தமையன் மனைவி.
மன்னுயிர் - ஆன்மா : சீவன்.
மன்னுமான் - கடவுள் : நான்முகன்.
மன்னும் - மிகவும் : பெரும்பான்மையும் : பொருந்தும்.
மன்னை - கதுப்பு : கோபம் : தொண்டை : மன்னைக்காஞ்சி.


மன்னைப்பிடித்தல் - தொண்டையைப் பிடித்தல் : தாங்கிக் கேட்டல்.
மன்னோ - அசைச்சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:50 pm

மா - அசைச்சொல் : அழகு : அழைத்தல் : அளவு : அறிவு : ஆணி : இடித்த மா : இடை : இலக்குமி : எதிர்மறை யுபசருக்கம் : ஐயவுபசருக்கம் : ஓரசைச் சொல் : ஓர் எண் : அஃது இருபதிலொன்று : ஓர் எழுத்து : ஒரு மரம் : கட்டு : கறுப்பு : குதிரை : பன்றி : யானை : இவற்றின் ஆண் : குதிரைப் பொது : சரசுவதி : சீலை : செல்வம் : தாய் : துகள் : நஞ்சுக் கொடி : நிறம் : பரி : பிரபை : பெரிய : பெருமை : மகத்துவம் : மரணம் : மிகுதி : மேன்மை : வண்டு : வயல் : வலி : வியங்கோளொடு வரும் அசைச்சொல் : விலங்கின் பொது : வெறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:50 pm

மாகதி _ முல்லை வகை : சருக்கரை : திப்பிலி.
மாகத்தார் _ தேவர்.
மாகந்தம் _ மாமரம்.
மாகந்தி _ நெல்லி மரம்.
மாகபதி _ இந்திரன்.


மாகம் _ மாசி மாதம் : மகநாள் : வானம் : மேலிடம் : துறக்கம் : திக்கு : மேகம்.
மாகரி _ ஆண் யானை.
மாகவதி _ கீழ்த்திசை.
மாகனன் _ பார்ப்பனன்.
மாகாணம் _ மாநிலம் : நாடு.


மாகாணி _ ஓர் அளவு : பதினாறில் ஒரு பாகம்.
மாகாளி _ கொற்றவை : எழு மாதருள் ஒருத்தி.
மாகாளிக்கிழங்கு _ மலையில் விளையும் நன்னாரி வகை.
மாகு _ வலை : வலையில் கோத்தமணி.
மாகுலர் _ வேடர்.


மாகுலி _ உயர் குடியிற் பிறந்தவள்.
மாகேயம் _ பவளம்.
மாகை _ பசு.
மாக்கள் _ மனிதர்கள் : பகுத்தறி விலார் : விலங்குகள்.
மாக்கிகம் _ தேன் : செவ் வெண்மைக்கல்.



மாக்கோலம் _ நீர் சேர்த்த அரிசி மாவால் பூமியிலிடும் சித்திர வகை.
மாங்கலியம் _ தாலி.
மாங்கிசம் _ மாமிசம்.
மாசக்காய் _ ஒரு மருந்துச் சரக்கு வகை.
மாசலம் _ நோய் : முதலை.



மாசலன் _ கள்வன்.
மாசனம் _ மக்கட் கூட்டம் : ஒரு போதை மருந்து.
மாசி _ மேகம் : ஒரு மாதம் : புது வரம்பு : மக நாள் : கடல் மீன் வகை.
மாசிகம் _ இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறும் செய்யும் சிராத்தம்.
மாசிகை _ பறவை.


மாசிங்கம் _ கலை மான் கொம்பு.
மாசிமகம் _ மாசி மாத முழு நிலவும் மக நாளும் கூடிய புண்ணிய நாள்.
மாசியம் _ ஒரு போதைப் பண்ட வகை.
மாசு _ அழுக்கு : குற்றம் : மறு : மாறு பாடு : கருமை : இருள் : மேகம் : பாவம் : தீமை : தூளி : புழுதி : புன்மை.
மாசுகம் _ பீர்க்கு : மிகு இன்பம்.




மாசுணம் _ பாம்பு : பெரும் பாம்பு.
மாசூல் _ பயிரின் விளைச்சல்.
மாசேனன் _ அருகன் : திருமால் : கடவுள் : முருகன்.
மாசை _ பொன் : பழைய நாணயம்.
மாச்சரியம் _ பகைமை : பொறாமை.



மாச்சல் _ சாதல் : மிக்க வருத்தம்: சோம்பல்.
மாச்சி _ கைவிலங்கு.
மாச்சீர் _ நேரசைச்சீர்.
மாச்சு _ விலக்கு : குற்றம் : பிள்ளை விளையாட்டு.
மாஞ்சி _ சணல் : மணப்பண்டம் : ஒரு பண் வகை.


மாடகம் _ யாழின் முறுக்காணி.
மாடநிலை _ உபரிகை.
மாடப்புறா _ புறா வகை.
மாடம் _ வீடு : குடிசை : உபரிகையுள்ள வீடு : உழுந்து : ஒரு நிறை : கோச் செங்கணான் கட்டிய சிவாலயம்.
மாடவீதி _ கோயிலைச் சுற்றியுள்ள தெரு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:51 pm

மாடன் _ ஒரு தெய்வம் : மூடன்.
மாடி _ உபரிகை : இக் கட்டு : புடைவையோரம் : ஒரு தேவதை.
மாடியம் _ கவசம்.
மாடு _ எருது : பக்கம் : உரம் : ஏழனுருபு : செல்வம் : பொன் : சீதனம்.
மாடை _ பொன் : அரை வராகன் : ஒரு பழைய நாணய வகை : மாட்டுக்கொம்பு முதலிய கீழ் நோக்கி வளைந்திருத்தல்.


மாட்சி _ பெருமை : விளக்கம் : இயல்பு : அழகு.
மாட்சிமை _ பெருமை.
மாட்டடி _ கடுமையான அடி.
மாட்டல் _ மகளிர் அணிகலன்.
மாட்டு _ அடி : சொல் : கொண்டு கூட்டிச் சொல் பொருள் கொள்ளும் முறை.


மாட்டுதல் _ இணைத்தல் : தொடுத்தல் : அடித்தல் : வலிபெறுதல் : அழித்தல் : போக்குதல்.
மாட்டேறு _ முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று : ஒரு சூத்திரத்தில் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்களுக்கும் இணைத்துக்கூறுதல்.
மாணம் _ மாட்சிமை.
மாணல் _ மாட்சிமை : நன்மை.
மாணவகம் _ கல்வி.



மாணவகன் _ மாணாக்கன் : பிரமசாரி : 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவன் : அறிவீனன்.
மாணவம் _ பிரமசாரியம் : பதினாறு கோவையுள்ள முத்தாரம்.
மாணவன் _ மாணாக்கன் : சீடன் : பிரமசாரி : பள்ளியில் பயிலும் சிறுவன்.
மாணவி _ மாணாக்கி : பள்ளியில் பயிலும் சிறுமி.
மாணார் _ பகைவர்.


மாணி _ பிரமசாரி : அழகு : குறள் வடிவம் : ஆடவர் மருமத்தானம்.
மாணிக்கம் _ ஒன்பது மணியுள்ள ஒன்று.
மாண் _ மாட்சிமை : மடங்கு : மாணவன் : பிரமசாரி.
மாண்டல் _ இறத்தல் : மாட்சிமையடைதல்.
மாண்டார் _ இறந்தவர் : மாட்சிமையுடையவர்.


மாண்பு _ பெருமை : மாட்சிமை : அழகு : நன்மை.
மாதங்கம் _ அரச மரம் : யானை : இளமை : கடல் : உத்தி : தலையணிகலன்.
மாதங்கன் _ கீழ்மகன் : வேடன் : புலையன்.
மாதங்கி _ காளி : பார்வதி : யாழ்த்தெய்வம் : ஆடல் பாடல்களில் வல்லவள்.
மாதண்டம் _ இராச வீதி.



மாதம் _ 30 நாள் கொண்ட காலம்.
மாதரி _ காளி.
மாதர் _ அழகு : பெண் : பொன் : காதல்.
மாதலம் _ கீழேழு உலகுள் ஒன்று.
மாதலி _ இந்திரனின் சாரதி.



மாதவம் _ பெருந்தவம் : இளவேனில்: இனிமை : மது : வைகாசி மாதம்.
மாதவர் _ முனிவர்.
மாதவன் _ திருமால் : வசந்தன்.
மாதவி _ சீனி : துளசி : துர்க்கை : சுபத்திரை : கள்ளி : கோவலனின் நாயகி : கண்ணன் மனைவி : பனை வெல்லம் : குருக்கத்திக் கொடி.
மாதவிடாய் _ மகளிர்ன் தீட்டு.


மாதா _ தாய் : உமையம்மை : கலைமகள்.
மாதானுபங்கி _ திருவள்ளுவர்.
மாதி _ கோளின் சுற்று வட்டமாய் ஓடுதல் : மாமரம்.
மாதிகம் _ குதிரை போகும் வழி.
மாதிமை _ காதல் : தகுதி.



மாதிரம் _ வானம் : திசை : மலை : யானை : நிலம் : மண்டிலம்.
மாதிரி _ தினுசு : முறை : தன்மை : எடுத்துக்காட்டு.
மாதிரு _ மாதா : வானம் : திருமகள் : பசு : பூமி : இரேவதி நாள் : பார்ப்பனப் பெண்.
மாதிருகை _ நெடுங்கணக்கு : தேவி : தாய்.
மாது _ பெண் : அழகு : பெருமை : காதல் : குற்றம் : ஓர் அசைச் சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:51 pm

மாதுகரம் _ வீடுகள் தோறும் சென்று பிச்சையெடுத்தல்.
மாதுமை _ பெண் : தன்மை: அறிவின்மை.
மாதுரம் _ மல்லிகை வகை.
மாதுரி _ சாராயம் : கள் : இனிமை.
மாதுரியம் _ இனிமை.



மாதுலன் _ மாமன்.
மாதுலி _ மாமன் மனைவி.
மாதுவம் _ கள் :பேரீந்து.
மாதுவான் _ நகச்சுற்று : பெண் குதிரை.
மாதுளம் _ மாதுளை :மரவகை :கனிவகை.


மாதேவன் _ சிவபிரான் : 11 உருத்திரருள் ஒருவர்.
மாதேவி _ உமையம்மை : பட்டத்தரசி : செங்கழுநீர்ப் பூ.
மாதொரு பாகன் _ சிவபிரான்.
மாதோ _ ஓர் அசைச் சொல்.
மாதோயம் _ பெருநீர் : கடல்.



மாத்தகை _ பெருந்தகை.
மாத்திரம் _ தனிமை : மட்டும் : தும்பி : அளவு.
மாத்திரை _ கணப்பொழுது : கைந்நொடிப்பொழுது : குளிகை : பேறு.
மாத்திரைக்கோல் _ மந்திரக் கோல் : அளவு கோல்.
மாத்து _ செருக்கு : பெருமை.


மாத்துவம் _ பெருமை.
மாநகரம் _ பெருநகரம்.
மாநிலம் _ பூமி : ஒரு நாட்டின் பெரும் பிரிவு.
மாநிறம் _ மாந்தளிர் நிறம்.
மாந்தம் _ குழந்தை நோய் : ஒரு புல் வகை : செரியாமை.


மாந்தர் _ மனிதர் : ஆடவர்.
மாந்தளிர் _ மாமரத்துளிர்.
மாந்தன் _ ஆண்மகன் : வாழை வகை.
மாந்தி _ மாமரம் : கலியாணச்சடங்கு : குளிகன்.
மாந்திரிகன் _ மந்திரவாதி.


மாந்திரீகம் _ வித்தை வகை.
மாந்ததுதல் _ குடித்தல் : வருந்துதல் : நுகர்தல்.
மாந்தை _ ஒரு நகரம் : நோய் வகை.
மாபலன் _ காற்று.
மாபனம் _ தராசு : அளவு.


மாபாடியம் _ பேருரை.
மாபாதகம் _ பெருந்தீங்கு.
மாபாவி _ பெரும் பாவி : கொடிய பாவம் செய்தவன்.
மாபுலி _ சிங்கம்.
மாபெலை _ உமையம்மை : பார்வதிதேவி.


மாப்பிள்ளை _ மகளின் கணவன் : மைத்துனன் : மாமன் மகன் : தங்கை கணவன்.
மாப்பு _ மிகுதி : மன்னிப்பு.
மாமகன் _ அம்மான் : மன்மதன்.
மாமணி _ மாணிக்கம்.
மாமலர் _ சரக்கொன்றை.


மாமன், மாமா _ தாயுடன் பிறந்தோன் : மனைவியின் தந்தை : அத்தையின் கணவன் : கணவன்.
மானார் _ கணவன் அல்லது மனைவியின் தந்தை.
மாமாங்கம் _ மாசி மகத்தன்று கும்பகோணத்தில் நடைபெறும் விழா.
மாமாத்திரன் _ மருத்துவன்.
மாமாத்து _ பெருஞ் செருக்கு : பெரியது : மோசம் : ஏமாற்று வேலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:52 pm

மாமி _ மாமியார் : அம்மான் மனைவி : மனைவி அல்லது கணவனின் தாய்.
மாமிசம் _ இறைச்சி : தசை : புலால்.
மாமுகத்தன் _ விநாயகன்.
மாமுனி _ பெருந்துறவி : அருகன்: நாயுருவிச் செடி.
மாமுல் _ பரம்பரை வழக்கம்.



மாமேரு _ மேரு மலை.
மாமை _ நிறம் : அழகு : கருமை : மேனி : துன்பம்.
மாம்பழம் _ மாங்கனி : புடைவை உடுத்தும் போது செருகும் முடிப்பு.
மாயசாலம் _ வஞ்சனை : ஏமாற்று வேலை.
மாயப்போர் _ சூழ்ச்சி மிக்க சண்டை.


மாயம் _ வஞ்சனை : மாயை : பாசாங்கு : கனவு : பொய் : வியப்பு : அழகு : தீமை : கறுப்பு.
மாயவள் _ துர்க்கை :தெய்வப்பெண்.
மாயவன் _ திருமால்.
மாயவேடம் _ பொய் வேடம்.
மாயாபுரி _ உடம்பு : பித்தளை : அரித்துவாரம் என்னும் தலம்.



மாயாவி _ வஞ்சகன் : மாயை செய்வோன்.
மாயி _ துர்க்கை.
மாயிடம் _ எருமை.
மாயிரம் _ புறமாய் உள்ளது.
மாயூரம் _ மயில் : மயிலாடுதுறை என்னும் சிவதலம்.


மாயேயம் _ அசுத்த மாயையின் காரியமாயுள்ள கலை, வித்தை, இராகம், புருடன், மாயை, காலம், நியதி முதலிய ஏழு தத்துவங்கள் : ஐந்து மலங்களுள் ஒன்று.
மாயை _ மூலப்பிரகிருதி : விந்து, மோகினி, மாயேயம் என்னும் மூவகைப் பட்ட மலம் : பொய்த் தோற்றம் : மாயவித்தை : வஞ்சகம் : அமானுட சக்தி : காளி : உமையம்மை : அசுத்த மாயை : மாயா தேவி : மாயாபுரி : திரோதான சத்தி : ஒரு நரக வகை.
மாயோள் _ வஞ்சகி : பெண் : கருநிறமுடையவள் : மாமை நிறமுடையவள்.
மாயோன் _ திருமால்.
மாய்தல் _ மறைதல் : அழிதல் : மறத்தல்.



மாய்மாலம் _ மோசடி : ஏமாற்று : வஞ்சகம் : பாசாங்கு.
மாய்வு _ மறைவு : சாவு.
மாரகம் _ இறப்பைத் தருவது.
மாரகன் _ சாவை உண்டாக்குவோன்.
மாரகாகளம் _ மன்மத வாத்தியமான குயில்.



மாரடைப்பு _ நெஞ்சடைப்பு : மூர்ச்சை.
மாரணம் _ அழித்தல் : சாவு : மந்திரத்தால் இறக்கச் செய்யும் வித்தை.
மாரதந்தி _ காமனின் யானையாகிய இருள்.
மாரதன் _ ஒருவனே பத்தாயிரம் வீரரை எதிர்த்துப் போர் செய்யவல்ல தேர் வீரன்.
மாரபேரி _ காமனின் முரசான கடல்.


மாரப்பற்று _ கருப்பூர வகை.
மாரம் _ செடிவகை.
மாரவேள், மாரன் _ மன்மதன்.
மாரன் ஆலயம் _ மன்மதன் இருக்கை.
மாராட்டம் _ துன்பம் : ஆள் மாறாட்டம் : ஊர் : மகாராட்டிரம்.


மாராப்பு _ தன் மார்பின் குறுக்கே பெண்கள் இடும் சீலைப்பகுதி.
மாராயம் _ வேந்தனால் பெறும் சிறப்பு : மகிழ்ச்சி : நற்செய்தி : பாராட்டுச்சொல்.
மாராயன் _ அரசன் : பட்டப் பெயர்.
மாரி _ மழை : நீர்: மேகம் : மழைக்காலம் : பூராட நாள் : புள் வகை : சாவு : அம்மை நோய் : துர்க்கை : ஒரு தேவதை.
மாரிபம் _ மூலம்.


மாரீசம் _ வஞ்சகம் : மூர்ச்சை : ஒரு புராணம் : மிளகு தைலம்.
மாருதப் படை _ வாயு தேவனின் அம்பு.
மாருதம் _ காற்று.
மாருதன் _ வாயு பகவான்.
மாருதி _ அனுமான் : வீமன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:53 pm

மாருதேயன் _ அனுமான்.
மாரோடம் _ செங்கருங்காலி.
மார் _ மார்பகம் : நெஞ்சு : மார்பு : நான்கு அளவுள்ள நீட்டலளவை : பன்மை படர்க்கை விகுதி.
மார்கழி _ ஒரு தமிழ் மாதம்.
மார்க்கணம் _ அம்பு : இரப்பு : தேடுகை : நெஞ்சுப்பகுதி.



மார்க்கண்டம் _ மார்பெலும்பு.
மார்க்கம் _ நெறி : வழி : முறை : சமயம் : ஒழுங்கு : மரபு வழி : மார்கழி மாதம்.
மார்க்கிகன் _ வேடன் : வழிச் செல்வோன்.
மார்ச்சரியம் _ பொறாமை.
மார்ச்சனம் _ துடைத்தல் : தூய்மை செய்தல்.


மார்ச்சனி _ துடைப்பம்.
மார்ச்சனை _ மேளத்திடும் கரிய மட்சாந்து : முழவின் வார்.
மார்ச்சாலம் _ பூனை : மரநாய்.
மார்த்தவம் _ மென்மைத்தன்மை.
மார்த்தாண்டன் _ சூரியன்.


மார்பு _ நெஞ்சு : தடாகம் : அகலம் : கருப்பூர வகை.
மார்புச்சளி _ நெஞ்சில் சளி பிடிக்கும் நோய் வகை.
மார்வம் _ நெஞ்சு.
மாலகம் _ வேப்ப மரம் : செம்பரத்தை வகை.
மாலதி _ சிறு சண்பகம் : மல்லிகை வகை : விளக்குத் தண்டு : நிலவின் கதிர் : நிருவாணம்.


மாலதிபலம் _ சாதிக்காய்.
மாலமாயம் _ பேயின் தந்திரம்.
மாலம் _ பேய் : குங்கும மரம்.
மாலர் _ கவசம் : வேடர் : புலையர்.
மாலவன் _ புதன் : திருமால்.



மாலி _ சூரியன் : ஓர் அரக்கன் : தோட்டக்காரன் : கள் : மாலையணிந்தவன்.
மாலிகன் _ பூவிற்போன்.
மாலிகை _ மாலை : வரிசை : சீமைச்சணல்.
மாலிமி _ இளமைப் பருவத்திற் செய்யும் நட்பு : கப்பலோட்டி : மாலுமி.
மாலியம் _ பூ : கடவுளுக்குப் படைக்கும் மலர்.



மாலிருஞ் சோலை _ அழகர் மாலை.
மாலினி _ உமையம்மை : துர்க்கை.
மாலுதல் _ மயங்குதல் : எழுதகம் அமைத்தல் : மாட்சிமைப்படுதல்.
மாலுதானம் _ பச்சைப்பாம்பு.
மாலுமி _ கப்பலோட்டி.



மாலூரம் _ மாவிலிங்க மரம் : வில்வ மரம்.
மாலூர்தி _ கருடன்.
மாலை _ அந்திப்பொழுது : இரவு : இருள் : சமயம் : குற்றம் : இயல்பு : தொடுக்கப்பட்டது : வரிசை : நூல் வகை : பாசம் : விறலி : பெண் : மாதரணிகலன்.
மாலைக்கண் _ பார்வை குறைவு: இரவில் கண் தெரியாமை.
மாலைப்படிகம் _ பளிங்கு.


மாலை மாற்று _ மிறைக்கவி வகை : திருமணத்தில் மாலை மாற்றுதல்.
மாலோகம் _ மிகுதி : மேலேழுலகத்துள் ஒன்று.
மால் _ பெருமை : திருமால் : இந்திரன் : அருகன் : காற்று : புதன் : சோழன் : மலை : செல்வம் : வளமை : பழைமை : மேகம் : மயக்கம் : ஆசை : காமம் : கருமை : விஷ்ணு கரந்தை : காளவாய் : எல்லை : இலாயம் : அரண்மனை.
மால் தொடை _ துளசி.
மால்பு _ கண்ணேணி.


மால்முருகு _ துளசி.
மாவடம் _ மாம் பலகை.
மாவடு _ மாவின் பிஞ்சு.
மாவட்டணம் _ நெடும் பரிசை.
மாவட்டம் _ மாநிலத்தின் ஒரு பிரிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:54 pm

மாவரி _ சல்லடை.
மாவலன் _ குதிரைப்பாகன் : யானைப்பாகன்.
மாவலி _ திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன் : தீப்பொறி சிதறும் கார்த்திகை வாண வகை.
மாவிட்டம் _ கடல் நுரை.
மாவிரதம் _ சைவ உட் சமயங்களுள் ஒன்று.



மாவிலங்கம் _ ஒரு மர வகை.
மாவிலங்கை _ இலிங்க பாடாணம் : திண்டிவனத்திலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர்.
மாவிளம் _ வில்வமரம்.
மாவுத்தன் _ யானைப்பாகன்.
மாழாத்தல் _ மயங்குதல் : ஒளி மழுங்குதல்.



மாழாம்பலம் _ தூக்கம்.
மாழை _ அழகு : ஓலை : இளமை : மாமரம் : பேதமை : பொன் : திரட்சி : மாதர் கூட்டம்.
மாழ்கி _ தொட்டாற் சிணுங்கி.
மாழ்கு _ மிருக சீரிட நாள் : சுருள்.
மாழ்குதல் _ மயங்குதல் : கெடுதல் : கலத்தல்.



மாளம் _ கத்தூரி.
மாளயம் _ இறந்தவரை நினைத்துப் புரட்டாசி மாதத்தில் செய்யும் சிராத்தம்.
மாளவகெளளம், மாளவி _ ஒரு பண் வகை.
மாளிகை _ அரண்மனை : கோயில் : வீடு : மாடி வீட்டின் மேல் தளம் : மாடமுள்ள பெரு வீடு.
மாளுதல் _ சாதல் : அழிதல்: கழிதல் : இயலுதல்.



மாளை _ புளியம் பட்டை.
மாளுவம் _ மாளவ தேசம்.
மாறன் _ பாண்டியன் : சடகோபன் என்னும் நம்மாழ்வார் : பகைவர்.
மாறாடுதல் _ உருவம் முதலிய மாறுதல் : தடுமாறுதல் : புரட்டுதல் : எதிர்த்து நிற்றல்.
மாறாட்டம் _ தவறு : பைத்தியம் : புரட்டு : தடுமாற்றம்.



மாறு _ பிறவி : வேறு பாடு : பகை : ஒவ்வாதது : பதில் : துடைப்பம் : மிலாறு : எதிர் : பிரம்பு : விதம் : மாற்று : வேறாக்கு.
மாறுகண் _ சாய்வான பார்வை : ஓரப்பார்வை.
மாறுகம் _ சீலை.
மாறுகோள் _ வக்கிரம் : ஒவ்வாமை.
மாறுதல் _ வேறுபடுதல் : நீங்குதல் : பொய்யாதல் : மறுத்தல் : அடித்தல் : கைவிடுதல்.


மாறுபடுதல் _ முரணுதல் : பகைமை யடைதல்.
மாறுபாடு _ ஒவ்வாமை : பகைமை.
மாற்சரியம் _ பொறாமை.
மாற்றம் _ சொல் : விடை : பகை : மாறு பட்ட நிலை : வஞ்சின மொழி.
மாற்றலர் _ பகைவர்.


மாற்றல் _ கொடாமை : ஒன்றை வேறொன்றாக்குதல் : இடம் மாறுதல்.
மாற்றாண்மை _ பகைமை.
மாற்றாள் _ சக்களத்தி.
மாற்றான் _ பகைவன்.
மாற்று _ வேறு படுத்துகை : ஒழிக்கை : பண்ட மாற்று : விலை : தங்கம் : எதிர் : உவமை : வலிமை : வண்ணம்.



மாற்றுதல் _ வேறுபடுத்துதல் : கெடுத்தல் : ஒடுக்குதல்: ஒழிதல்.
மாற்றுமை _ மாறுபாடு.
மானக்கவரி _ சாமரை : கவரிமான்.
மானக்கேடு _ பெருமைக் கேடு.
மானசம் _ கருத்து : மனம் : ஒரு புண்ணிய தீர்த்தம்.



மானசி _ உமையம்மை.
மானசிகம் _ மனத்தாற் செய்யும் தவம்.
மானசூத்திரம் _ அரைஞாண்.
மானத பூசை _ மனப் பாவனையால் வழிபடுதல்.
மானதம் _ மனம் : மனத்தால் நினைத்தல் : பாவனை : ஒரு புண்ணிய தீர்த்தம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:54 pm

மானதன் _ பகைவரது மானத்தை அழிப்பவனான அரசன் : மனத்திலிருந்து தோன்றியவன்.
மானதுங்கன் _ மானம் மிக்கவன்.
மானபங்கம் _ மானக் குறைவு.
மானபரன் _ தன் மதிப்புள்ளோன் :ஒரு பட்டப் பெயர்.
மானம் _ மதிப்புடைமை : கற்பு : பெருமை : புலவி : வலிமை : வஞ்சினம் : கணிப்பு : ஒப்புமை : அளவை : அன்பு : பற்று : இகழ்ச்சி : வெட்கம் : குற்றம் : வானூர்தி : கோயில் விமானம் : மண்டபம் : கத்தூரி : சவ்வாது : வானம் : ஒரு தொழிற்பெயர் விகுதி.



மானரந்தரி _ நாழிகை வட்டில்.
மானரியம் _ விந்தையானது.
மானல் _ நாணம் : மயக்கம் : ஒப்பு : ஐயுறுதல்.
மானவர் _ மாந்தர்.
மானவன் _ அரசன் : மனிதன்: பெருமையுடையோன் : வீரன்.



மானவு _ தெளிவு.
மானன் _ தலைவன் : வேடன் : மதிப்புள்ளவன் : மூடன்.
மானா _ பாட்டன் : தகப்பன்.
மானாகம் _ பெரு நாரை.
மானார் _ பெண்டிர் : பகைவர்.



மானாவாரி _ மனப்போக்கு : ஒரு விளைச்சல் : மழை பெய்து விளையும் விளைச்சல்.
மானாவி _ நவராத்திரி விழா.
மானி _ மதிப்புள்ளவர் : மங்கையர்க்கரசியார்.
மானிகை _ சாராயம்.
மானிட வேள்வி _ விருந்தினரைப் போற்றுதல்.
மானிடன் _ மனிதன்.



மானிதம் _ சிறப்பு.
மானித்தல் _ நாணுதல் : பெருமைப்படுத்துதல்.
மானியம் _ இறையிலி நிலம்.
மானினி _ பெண்.
மானுடம் _ மனிதர்.



மானுதல் _ ஒத்தல்.
மானேறு _ உத்திர நாள் : கலைமான்.
மான் _ ஒரு விலங்கு வகை : குதிரை : சிங்கம் : மகர மீன் : மகர ராசி : பெரியோன் : மலை ஒப்பு.
மான் கொம்பு _ பாதிரி மரம்: மானின் கொம்பு.
மான் தலை _ மிருக சீரிட நாள் : அபிநய வகை.


மான்மதம் _ கத்தூரி : சவ்வாது.
மான் மறி _ பெண் மான் : மான் குட்டி.
மான்மியம் _ பெருமை.
மான்றல் _ மயக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:56 pm

மிகல் - கடத்தல் : மிகுதல் : பெருமை : வெற்றி : மிகுகை : மேற்செல்லல் : தருக்குதல் : அதிகமாதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:57 pm

மிக _ மிகவும்.
மிகிரம் _ காற்று : முகில்.
மிகிரன் _ சூரியன் : சந்திரன்.
மிகு _ பெரிய.
மிகுதல் _ பெருகுதல் : அதிகமாதல் : எழுத்து அதிகரித்தல்: சிறத்தல் : செருக்கடைதல் : எஞ்சுதல்.


மிகுதி _ மீதி : அதிகம் : நிறைவு : பொலிவு : சிறப்பு.
மிகுத்தல் _ அதிகப்படுத்தல் : விஞ்சுதல் : பெருக்குதல்: மிச்சப்படுத்துதல்.
மிகுந்த _ மிச்சமான : அதிகமான.
மிகுபெயல் _ அதிகமான மழை.
மிகை _ சிறந்த பொருள் : மேன்மை : பெருமை : கேடு : தேவையற்றது : மிகுதிப்பொருள் : செருக்கு : தீச் செயல் : தவறு : தண்டனை : வருத்தம் : துன்பம்.


மிகை படக் கூறல் _ நூற் குற்ற வகை.
மிகை படுதல் _ குற்றப் படுதல் : அதிகப்படுதல்.
மிக்க _ உயர்ந்த.
மிக்கது _ சிறந்தது : மீறிய செய்கை : எஞ்சியது : வேறானது : மிகுதியானது.
மிக்கவை _ தீயவை : ஊன் : மிகுதியானவை : சோறு.



மிக்கார் _ பெரியோர் : மேம் பட்டவர் : பெரும் பாலோர் : பகைவர் : தீமை செய்பவர்.
மிக்கிளமை _ குழந்தைப் பருவம்.
மிக்கோர் _ அறிவுடையோர்.
மிக்கோன் _ பெரியோன்.
மிசிரம் _ கலப்பு : கலப்புச் சாதி.


மிசுக்கன் _ வறிஞன் : ஈனன்.
மிசுக்கை _ புல்லியது.
மிசை _ உணவு : சோறு : மேலிடம்: மேடு : வானம் : முன்னிடம்.
மிசைஞர் _ உண்பவர்.
மிசைதல் _ உண்ணுதல் : நுகர்தல்.



மிசைவடம் _ வீரக்கழல்.
மிச்சம் _ மீதி : பொய் : அதிகம்.
மிச்சில் _ எஞ்சிய பொருள் : எச்சில்: கரி.
மிச்சை _ அறியாமை : வறுமை : பொய்.
மிஞிறு _ தேனீ : வண்டு.



மிஞ்சி _ காலில் அணியும் மோதிர வகை.
மிஞ்சிகம் _ பெண்பால் மயிர் முடி.
மிஞ்சிகை _ குண்டலம் : பேழை.
மிஞ்சிப்போதல் _ அளவுக்கு மீறுதல்.
மிஞ்சு _ மிகுவது : வண்டு.


மிஞ்சுதல் _ வரம்பு மீறுதல்: செருக்கடைதல்.
மிடல் _ வலிமை : மகன் : சந்திரன் : மிடன்.
மிடறு _ கழுத்து : கீழ் வாய் : தொண்டை : இனிய குரற் கருவியாகிய கண்டம்.
மிடன் _ வலிமை : சந்திரன் : மகன்.
மிடா _ தடா : பானை : குழிசி.


மிடி _ வறுமை : துன்பம்.
மிடியன் _ வறியவன்.
மிடுக்கன் _ வலிமையுள்ளவன் : முருடன் : இறுமாப்புடையவன்.
மிடுக்கு _ வலிமை : செருக்கு.
மிடை _ தூறு : பரண் : புணர்ச்சி : நெருக்கம்.


மிட்டாய் _ இனிப்பு வகை.
மிண்டன் _ திண்ணியன் : அறிவில்லாதவன்.
மிண்டி _ நெம்புதடி.
மிண்டு _ வலிமை : முட்டு :துணிவு : அறிந்து செய்யும் குற்றம் : துடுக்கு : செருக்கிக் கூறும் மொழி.
மிண்டுதல் _ மதங் கொள்ளுதல்: நெருங்குதல்: வலியதாதல்: நிறைதல் : நெம்புதல்: குத்துதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:57 pm

மிண்டை _ கண்ணின் கருவிழி.
மிதத்தல் _ மேலெழும்புதல் : நீர் மேல் கிடத்தல் : மிகுதல் : வீண் பெருமை பண்ணுதல்.
மிதப்பு _ உயர்ச்சி : மேடு : தெப்பம் : செழிப்பு : மேலெழுந்த தன்மை.
மிதம் _ அளவு : நிதானம் : நடுத்தரம்.
மிதலை _ கொப்பூழ்.


மிதவாதி _ தணிப்பாளன் : நிதானமானவன்.
மிதவை _ தெப்பம் : சோறு : கூழ்.
மிதி _ அடிவைப்பு : படிக்கல் : நடை : அளவு : அறிவு : சான்று.
மிதிதோல் _ துருத்தி.
மிதித்தல் _ காலால் துவைத்தல் : அவமதித்தல்.



மிதியடி _ பாதுகை : செருப்பு.
மிதிவண்டி _ மிதித்து ஓட்டும் சக்கரச் சுழல் வண்டி : ஈருருளி.
மிதுக்கை _ தும்மட்டிக்கொடி.
மிதுனம் _ இரட்டை : புணர்ச்சி : மிதுன ராசி : ஆனி மாதம் : ஒரு பறவை வகை.
மிதுனன் _ புதன் கிரகம்.


மிதுனி _ கரிக் கருவி.
மித்தியம் _ பொய்.
மித்தியாமதி _ அறியாமை : பிழை.
மித்தியை _ பொய் : கபடம்.
மித்திர நாள் _ அனுட நாள்.



மித்திரம் _ கோள் : பொய் கூறுதல் : நட்பு.
மித்திரன் _ நண்பன் : உறவினன் : சூரியன்.
மித்திரை _ தோழி.
மித்திரு _ நண்பன்.
மித்தை _ பொய் : மாயை.


மியா _ முன்னிலை அசைச் சொல்.
மிரட்டுதல் _ அச்சுறுத்தல் : ஓட்டுதல்.
மிரதம் _ பாம்பு.
மிரளுதல் _ மிரள்தல் : மயங்கி அஞ்சுதல்.
மிராசுகுடி _ வழிவழி நிலவுரிமை உடையதாதல்.


மிரிநாளம் _ தாமரை.
மிரியம் _ மிளகு.
மிருக சீரிடம் _ ஒரு நட்சத்திரம்.
மிருகதரன் _ சந்திரன்.
மிருக தூர்த்தகன் _ நரி.


மிருக நாபி _ கத்தூரி மான் : கத்தூரி.
மிருகமதம் _ கத்தூரி மஞ்சள் : கத்தூரி : கத்தூரி விலங்கு.
மிருகம் _ விலங்கு : பன்றி : மிருகசீரிட நாள் : யானை வகை : கத்தூரி மான்.
மிருகராசன் _ அரிமா : வேங்கைப் புலி.
மிருக வாகனன் _ வாயு தேவன்.



மிருகாங்கம் _ காற்று : சந்திரன்.
மிருகாங்கன் _ சிவபிரான் : சந்திரன்.
மிருசம் _ சாட்சி.
மிருடன் _ சிவபிரான்.
மிருடானி _ உமையம்மை.


மிருடை _ துர்க்கை.
மிருதகம் _ பிணம்.
மிருதங்கம் _ மத்தளம் : முழவு : ஒலி : மூங்கில்.
மிருத சஞ்சீவி _ உயிர் தரும் மருந்து.
மிருதண்டன் _ சூரியன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:57 pm

மிருதம் _ பிணம் : சாவு : போர் : நஞ்சு : இரந்து தேடிய பொருள்.
மிருதார சிங்கி _ ஈயம் : பாடாண வகை.
மிருதி _ சாவு : நினைவு : அறநூல்: உமையம்மை.
மிருது _ மென்மை : சாந்தம் : நொய்ம்மை :சாவு.
மிருதுவாதம் _ சிறுதென்றல்.


மிருதுளம் _ மென்மையானது.
மிருதுன்னகம் _ பொன்.
மிருதை _ பூமி.
மிருத்தனம் _ துவரை.
மிருத்தாலகம் _ உவர் மண் : துவரை.


மிருத்திகை _ மண் : நிலம்.
மிருத்தியம் _ மண்.
மிருத்தியு _ இறப்பு : இயமன் : தீராப் பகைவன் : ஆணவமலம்.
மிருத்தியுஞ்சயம் _ இறப்பை நீக்க வல்ல மந்திரம்.
மிருத்தியுஞ்சயன் _ இயமனை வென்றவனான சிவ பெருமான்.


மிருத்து _ மண் : இயமன் : சாவு.
மிருநாளம் _ தாமரைத்தண்டு.
மிலாரடி _ கலக்கம் : உன் மத்தம்.
மிலாறு _ இளங்கொம்பு : வளார்.
மிலேச்சன் _ அறிவீனன் : நாகரிகமற்றவன் : தாழ்ந்தவன் : வேடன் : சூரியன்.



மிலைதல் _ சூடுதல்.
மிலைத்தல் _ மயங்குதல் : கனைத்தல்.
மிழலை _ மழலைச்சொல் : சோழ நாட்டின் பகுதி.
மிழற்றுதல் _ சொல்லுதல்.
மிளகாய் _ காரமுள்ள காய் தரும் செடி வகை.


மிளகி _ சிறு நெல் வகை.
மிளகு _ காட்டு மிளகு : காரப் பொருள் வகை.
மிளப்பு _ இலவங்கம்.
மிளிர்தல் _ ஒளி செய்தல் : பெருமையடைதல்.
மிளிர் _ பெருமை : ஒளி.



மிளிறு _ கரடி.
மிளை _ காவல் : குறுங்காடு : காட்டு வேலி.
மிறல் _ பெருமை.
மிறுக்கு _ வருத்தம்: மிடுக்கு.
மிறை _ அச்சம் : குற்றம் : வருத்தம்: வளைவு.


மிறைக்கவி _ சித்திர கவி.
மிறைத்தல் _ துன்புறுத்தல் : பாடுபடல் : மிடுக்காயிருத்தல்.
மிற்கு _ மென்மை : இரை : பேசுதல்.
மினுக்கு _ பகட்டு : ஒளி : சிறப்பு.
மினுங்குதல் _ ஒளி வீசுதல்.


மின் _ மின்னல் : ஒளி : பெண் : ஏவற் பன்மை விகுதி : மின்சாரம்.
மின்னல் _ மழை மேகத்தில் தோன்றும் ஒளி.
மின்னார் _ அழகிய பெண்டிதர்.
மின்னுதல் _ ஒளிர்தல் : ஒளி வீசுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:59 pm

மீ - ஆகாயம் : உயர்ச்சி : மகிமை : மேற்புறம் : மேலிடம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 1:59 pm

மீகண் _ கண்ணின் மேலிடம்.
மீகாமன் _ மாலுமி.
மீகாரம் _ மாளிகையின் மேலிடம்.
மீக்கட்டணம் _ மேல்வரி.
மீக்குணம் _ பெருமிதமாய் நடக்கும் தன்மை.


மீக்குவம் _ மருத மரம்.
மீக்கூர்தல் _ மிகுதல்.
மீக்கூற்று _ புகழ் : மதிக்கப்படும் சொல்.
மீக்கூறல் _ மேம்பாடு.
மீக்கூறுதல் _ புகழ்ந்து கூறுதல்.


மீக்கொள்ளுதல் _ உயர்தல் : மிகுதல் : மேலாகமதித்தல்.
மீசரம் _ மிகுதி : மேலானது.
மீசரன் _ மேலானவன்.
மீசு _ மிகுதி.
மீசுரம் _ அதிகமானது.


மீசை _ உதட்டின் மேலுள்ள மயிர்: மேலிடம்.
மீச்செலவு _ நீதி தவறிய செயல்: மேற்போதல்.
மீடம் _ சிறுநீர்.
மீட்சி _ திரும்புதல் : கைம்மாறு : விடுதலை செய்கை.
மீட்டுதல் _ யாழ் நரம்பு தெறிக்கச் செய்கை: காப்பாற்றுதல்.


மீட்பர் _ காப்பாற்றுவோர்.
மீட்பு _ மீட்கை.
மீண்டும் _ திரும்பவும்.
மீதாரி _ மிச்சம் : நறுமணப்புகை.
மீதி _ மிச்சம் : எட்டி மரம் : காட்டுக் கத்தரி.


மீதிடல் _ வளர்தல்.
மீது _ மேற் புறம் : மேடு: அதிகம்.
மீதூர்தல் _ அடர்தல் : மேன்மேல் வருதல்.
மீத்து வைத்தல் _ மிச்சப்படுத்துதல்.
மீத்தோல் _ மேல் தோல்.


மீநீர் _ நீரின் மேற்பரப்பு.
மீந்தது _ மிச்சமானது.
மீப்பு _ மிகுதி : மேன்மை.
மீப் போர்வை _ மேற் போர்வை.
மீமாஞ்சை _ வேதப் பொருள் அறிவிக்கும் நூல்.


மீமிசை _ மிக்கது : மேலிடத்தில்.
மீயாளுதல் _ மேலதிகாரம் செய்தல்.
மீயான் _ மாலுமி.
மீயை _ செங்குடை.
மீரம் _ கடல்.


மீலம் _ வானம்.
மீலனம் _ கண்சிமிட்டு.
மீவான் _ மாலுமி.
மீள, மீளவும் _ மறுபடியும்.
மீளி _ மீளுகை : தலைவன் : இறை : வலிமை : பெருமை : கூற்றுவன் : பேய் : இளைஞன்.


மீளிமை _ வீரம் : வலிமை.
மீளுதல் _ திரும்புதல் : கடத்தல்.
மீறுதல் _ மேற் போதல் : மிகுதல்: செருக்கடைதல் : ஆணை முதலியன கடத்தல்.
மீனகேதனன் _ பாண்டியன் : மன்மதன்.
மீனம் _ உடு : மீன் : பங்குனி மாதம்.


மீனரசு _ உடுக்களின் அரசான சந்திரன்.
மீனவன் _ பாண்டியன்.
மீனா _ வயிரமுள்ள மரவகை.
மீனாட்சி _ மதுரையில் உள்ள உமையம்மை.
மீனாண்டி _ சருக்கரை.


மீனாய் _ நீர் நாய்.
மீனாலயம் _ கடல்.
மீனூர்தி _ வருணன்.
மீனேறு _ சுறாமீன்.
மீன் _ நீர் வாழ் உயிரினம் : விண்மீன்: அத்த நாள்.
மீன்முள் _ மீன் எலும்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:00 pm

முக ஆட்டம் - முகமன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:01 pm

முகக்கட்டை _ மோவாய்க் கட்டை.
முகக்கடுப்பு _ முகத்தில் காணும் கடுமை.
முகக்கயில் _ உடைந்த தேங்காயின் கண்ணுள்ள மேல் மூடி.
முகக் கருவி _ கடிவாளம்.
முகங் கொடுத்தல் _ இன் முகம் காட்டுதல் : செவி சாய்த்தல்.


முகச் சாயல் _ முகத் தோற்றம்.
முகசோதி _ எலுமிச்சை.
முகட்டுப் பூச்சி _ மூட்டைப் பூச்சி.
முகடி _ மூதேவி.
முகடு _ உச்சி : மலையுச்சி : உயர்வு : தலை : வீடு : பேறு.


முகதலை _ சீலையின் முன்றானை கைம்மாற்றுக்கடன்.
முகத்தல் _ அளத்தல் : விரும்புதல்: மணம் பார்த்தல் : நிரம்பப் பெறுதல்.
முகத்துதி _ ஒருவன் முன் புகழ்தல்.
முகநட்பு _ வெளி வேட நட்பு.
முகப்பாடம் _ யானையின் முகத்திலிடும் அலங்காரத் துகில்.


முகப்படுதல் _ முன் தோன்றுதல் : காணுதல்.
முகப் பழக்கம் _ அறிமுகம்.
முகப்பு _ தலைப்பு : முற்பகுதி : முன்னிலை : மகளிரின் சீலை : முன்றானை.
முகப்புமடை _ தலை மடை.
முகப் போதரவு _ இச்சகம்.


முகமயக்கு _ பார்வையால் மயக்கும் மாயம்.
முகமன் _ உபசாரச் சொல்.
முகமாதல் _ உடன் படுதல்.
முகமூடி _ முகத்தை மறைப்பது.
முகம் _ தலையின் ஓர் உறுப்பு : வாய் : வாயில் : இடம் : மேலிடம் : தொடக்கம் : வடிவு : தியானம் : காரணம் : இயல்பு : பக்கம் : மூலம் : யாகம்.


முகம் பார்த்தல் _ அன்பு செய்தல் : நன்கு மதித்தல் : இனம் தெரிதல்.
முகரம் _ கடிய ஒலி : சங்கு : காகம்.
முகரன் _ பயனில்லாது சொல்பவன்.
முகராசி _ முகக் கவர்ச்சி : நற்பேறு.
முகரி _ மல்லிகைப் பூ: தாழை மரம் : முன் புறம் : தொடக்கம் : தலைப்பு : மூக்கின் அடி : ஓர் ஆறு : ஆரவாரம் செய்வோன்.



முகரிமை _ பேரறிவு : தலைமை.
முகருதல் _ மூக்கால் மோத்தல்.
முகரை _ மூக்கின் அடி.
முகரோமம் _ மீசை மயிர்.
முகவணை _ முகவுரை : முகப்பு.


முகவரி _ மேல் விலாசம்.
முகவல்லபம் _ மாதுளை.
முகவழி _ மூலம்.
முகவாள் _ கலப்பைக் கூறு.
முகவுரை _ முன்னுரை.


முகவை _ முகந்து கொள்ளுகை : நீர் முகக்கும் கருவி : அகப்பை : நெற்பொலி : இராமநாதபுரம்.
முகனை _ முன்புறம் : தலைமை : தொடக்கம் : முன்கோபம் : பொழுது.
முகாந்தரம் _ காரணம் : ஆதாரம் : மூலம்.
முகாரி _ ஒரு பண்.
முகிதல் _ முடிதல்.


முகித்தல் _ முடித்தல்.
முகிரம் _ அன்பு : காமம்.
முகிரன் _ மூடன்.
முகில் _ மேகம்.
முகிவு _ முடிவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:01 pm

முகிழம் _ மலரும் பருவத்து அரும்பு.
முகிழிதம் _ பூ முதலியவற்றின் காம்பு அடி : தேங்காயின் மடல் : தயிரின் கட்டி.
முகிழ் _ அரும்பு.
முகிழ்த்தல் _ அரும்புதல் : தோன்றுதல் : குவிதல் : தோற்றுவித்தல் : ஈனுதல்.
முகிளம் _ அரும்பு.


முகிளிதம் _ அரும்பு.
முகினி _ புளிய மரம்.
முகு _ விருப்பம் : மன நிறைவு.
முகுடம் _ முடி.
முகுந்தம் _ குபேரன் நிதி.



முகுந்தன் _ திருமால்.
முகுரம் _ தளிர் : கண்ணாடி : பெரு மல்லிகை.
முகுலி _ தாழை மரம்.
முகுளம் _ அரும்பு : தாமரைத்தண்டு : ஆசன வகை : மூளையின் பின் பகுதி.
முகூர்த்தம் _ நேரம் : நல்வேளை : திருமணம்.



முகை _ அரும்பு : மொட்டு : குகை : கூட்டம் : மிடா.
முகைதல் _ அரும்புதல்.
முக்கட் செல்வன் _ சிவபிரான்.
முக்கண்ணன் _ சிவபிரான்.
முக்கண்ணி _ உமையம்மை : காளி : தேங்காய்.


முக்கம் _ பல்லி செய்யும் ஒலி.
முக்கரம் _ பிடிவாதம்.
முக்கல் _ பெரு முயற்சி : எடுத்தலோசை.
முக்கனி _ மா : பலா : வாழை.
முக்காடு _ தலைமறைவுச் சீலை.


முக்காணி _ எண்பதில் மூன்று பங்குடைய பின்ன எண் : முன் குடுமி தரிக்கும் பார்ப்பனர்: மூன்று காணியாகிய அளவு.
முக்காரம் _ எருதின் முழக்கம் : பிடிவாதம் : தாழ்ப்பாள்.
முக்காலம் _ மூன்று காலங்களான இறந்த காலம் : நிகழ் காலம் : எதிர் காலம் : காலை மாலை உச்சி என்னும் மூன்று வேளை.
முக்காலி _ மூன்று கால் பீடம்.
முக்கால் _ மூன்றாம் முறை : மூன்று முறை : நான்கில் மூன்று பங்குடைய பின்ன எண் (3/4).


முக்காழி _ மூன்று கொட்டையுள்ள பனம் பழம்.
முக்காழ் _ மூன்று கோவையாலான முத்துவடம்.
முக்கியம் _ சிறப்பானது : தலைமை : இன்றியமையாதது.
முக்கு _ மூச்சுத் திணறுதல் : மூலை : சந்து.
முக்குளம் _ கங்கை : சரஸ்வதி : யமுனை என்னும் மூன்றும் சேருமிடம் : பூராட நாள் : திரு வெண்காட்டுத் தலத்திலுள்ள தீர்த்தம்.


முக்குளித்தல் _ முழுகுதல்.
முக்குற்றம் _ காமம் : வெகுளி : மயக்கம் என்னும் மூவகை உயிர்க் குற்றங்கள்.
முக்கூட்டு _ மூன்று ஆறுகள் கூடுமிடம் : ஓர் ஊர்.
முக்கோணம் _ மூன்று கோணங்களையுடைய வடிவம் : நரகவகை.
முக்கோல் _ தவசிகளுக்குரிய திரிதண்டம் : திரு வோண நாள்.



முக்தகஞ்சுகம் _ தோலுரித்த பாம்பு.
முக்தா பலம் _ கருப்பூரம் : முத்து.
முங்குதல் _ அமிழ்தல் : நிறைதல் : நீரில் மூழ்குதல்.
முசகம் _ எலி.
முசர் _ தயிர் : மோர்.


முசலம் _ உலக்கை : ஓர் ஆயுதம்.
முசலி _ உடும்பு : பல்லி : முதலை: கடல் மீன் : நிலப்பனை : தாழை மரம் : பச்சோந்தி : பலராமன்.
முசலிகை _ உடும்பு.
முசலை _ கோரைக் கிழங்கு.
முசாதகம் _ வெண்டாமரை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 01, 2013 2:02 pm

முசிகுந்தம் _ குபேரன் வில் : சூரியனின் கைச் சங்கு.
முசிதல் _ அறுதல்: மெலிதல்: அழிதல்.
முசிப்பாறுதல் _ இளைப்பாறுதல்.
முசிப்பு _ இடை : மெலிவு : களைப்பு : அழிவு.
முசிரம் _ வள்ளல் : தன்மை.


முசிரன் _ வள்ளல் : கொடையாளி.
முசிறு _ முசுறு : கருங் குரங்கு வகை.
முசு _ திமில் : கருங்குரங்கு.
முசுக் கட்டை _ பட்டுப்பூச்சி வாழும் மரம் : கம்பளிப் பூச்சி : மரவகை.
முசுடி _ கோபக்காரி.



முசுண்டர் _ கீழ் மக்கள்.
முசுண்டி _ ஆயுத வகை.
முசுப்பு _ திமில்.
முசு முசுக்கை _ ஒரு மருந்துக் கொடிவகை.
முசுறு _ செந்நிற எறும்பு.


முச் சங்கம் _ பாண்டிய மன்னர் ஆதரித்த தலை, இடை, கடை, என்னும் மூவகைத் தமிழ்ச் சங்கம்.
முச்சந்தி _ பிரபுசத்தி, மந்திர சத்தி, உற்சாகத்தி என்னும் மூவகை ஆற்றல்.
முச்சி _ தலையுச்சி : கொண்டை முடி : சூட்டு : வேலையாள் : தச்சன்: வன்னக்காரன்.
முச்சிரம் _ சூலம் : பெருஞ்சீரகம்.
முச்சில் _ சிறு முறம்.


முச்சுடர் _ சூரியன் : சந்திரன் : அக்கினி ஆகிய மூன்று சோதிகள்.
முஞல் _ கொசு.
முஞ்சகேசன் _ திருமால்.
முஞ்சம் _ குழந்தைகளின் தலையணிகலன்.
முஞ்சரம் _ தாமரைக்கிழங்கு.


முஞ்சி _ நாணற்புல்.
முஞ்சுதல் _ சாதல் : முடிதல்.
முஞ்ஞை _ மரவகை.
முடக்கம் _ தடை : தாமதம் : சினம் : வேலையின்மை : நோய் வகையுள் ஒன்று.
முடக்கு மோதிரம் _ நெளி மோதிரம்.


முடங்கல் _ மடங்குகை : தடைப்படுகை : முடக்கு வாதம்: சிறுமை : தாழை மரம்.
முடங்கு _ தெருச்சந்து : தெரு வளைவு : நிலத்தின் மூலை நீட்டம்.
முடங்குதல் _ சுருங்குதல்: தடைப்படுதல்: கெடுதல்: தங்குதல் : கைகால் வழங்காமற் போதல்.
முடங்குளை _ பிடரி மயிருடைய சிங்கம்.
முடத்தெங்கு _ கோணலாக வளர்ந்த தென்னை.


முடந்தை _ முடம் : வளைந்தது : சூதகக்கட்டு : நோய் வகை.
முடமயிர் _ புருவமயிர் நோய் வகை.
முடம் _ கைகால் செயலற்றுப் போகும் நிலை : வளைவு : வளைந்தது.
முடலை _ பெருமை : வலிமை : உருண்டை : புலால் : நாற்றம் : முறுக்கு : முருடு : கழலை: மனவன்மை:பெருங்குறடு :திரட்சி.
முடவன் _ நொண்டி: சனி: அருணன்.



முடவன் முழுக்கு _ காவிரியில் ஐப்பசிக் கடை முகத்து நீராடற் பலனை அளிக்கும் கார்த்திகை மாத முதல் நாள் முழுக்கு.
முடவுதல் _ நொண்டுதல்.
முடி _ முடிச்சு : குடுமி : மயிர் : தலை : உச்சி : தலையணிகலன் : முடிவு : நாற்று முடிச்சு:தேங்காய்க் குடுமி : தேங்காயிற் பாதி.
முடிக்கலம் _ கிரீடம்.
முடிசாய்தல் _ இறந்தல்.


முடிசாய்த்தல் _ படுத்துக் கொள்ளுதல் : வணங்குதல்.
முடிச்சு _ முடியப்பட்டது : முட்டு : கட்டு : சிறு மூட்டை : கணு : மகளிர் காதணி.
முடிதல் _ முற்றுப்பெறுதல் : நிறைவேறுதல் : அழிதல் : தோன்றுதல்: இயலுதல்: சண்டை மூட்டுதல் : சூடுதல்.
முடிதுளக்குதல் _ தலையசைத்தல்.
முடித்தல் _ முற்று வித்தல் : நிறைவேற்றுதல்: அழித்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி  - Page 33 Empty Re: தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 43 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 38 ... 43  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum