தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடலை கட்டுக்கோப்பாக வளர்க்க கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

View previous topic View next topic Go down

உடலை கட்டுக்கோப்பாக வளர்க்க கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!! Empty உடலை கட்டுக்கோப்பாக வளர்க்க கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

Post by முழுமுதலோன் Mon Dec 16, 2013 11:37 am

உடலை கட்டுக்கோப்பாக வளர்க்க கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்!!!

பொதுவாக, அளவுக்கு அதிகமான தசைகளோடு கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கே ஆண்கள் விரும்புவார்கள். நல்ல கட்டமைப்புடன் கூடிய எந்த ஒரு ஆண்மகனுக்கும் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை ஏற்படுவது இயல்பு தான். வெளியில் செல்லும் போது வலுவுள்ளவராக உணர்வீர்கள். மேலும் உங்கள் தோற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். இதுவே பெண்க என்றால் எழும்பும் தோலுமாக சைஸ் ஜீரோ உடல் அமைப்பை பெற விரும்புகின்றனர். ஆரோக்கியமான திடமான உடலமைப்பை பெற்ற ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். நீங்கள் சரியான உடல் கட்டமைப்புடன் திகழ்ந்தால் பல பெண்களின் கவனத்தை பெறுவீர்கள்.

நாம் சொன்னதை போல திடமான கட்டமைப்பை கொண்ட ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? கண்டிப்பாக உங்களாலும் உடலை அப்படி கட்டுக்கோப்பாக மாற்றியமைக்க முடியும் தானே? நல்ல உடல் கட்டமைப்பு, சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு உங்களை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ வைக்கும். யாருக்குமே தொந்தியும் தொப்பையுமாக இருக்கும் ஆண்களை பிடிப்பதில்லை. அதே போல் ஆங்காங்கே தொங்கும் தசைகளை காணும் போதும் உங்களின் மோசமான வாழ்க்கை முறையை அது பிரதிபலிக்கும். கட்டுக்கோப்பான உடலை பெற வேண்டுமானால் நீங்கள் உண்ணும் உணவின் மீது கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியமான புரதச்சத்துள்ள மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எப்போதும் உன்ன வேண்டும்.

நல்ல கட்டமைப்புடன் கூடிய உடலை பெற அதிக புரதச்சத்துள்ள முட்டை, மெல்லிய இறைச்சிகள், ஆல்மண்ட், முளைத்த பயறுகள் போன்றவைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வகை ஆரோக்கியமான உணவுகள் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமான புரதத்தை சேர்க்கும். மேலும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ராலை தவிர்க்கும். இது போக அரிசி சாதத்திற்கு பதிலாக முழு தானியங்களையே உட்கொள்ள வேண்டும். இதனால் தேவையற்ற கார்போஹைட்ரேட்ஸ்களையும் தவிர்க்கலாம். உங்களை பசியை மெதுவாக நிரப்பும் உணவுகளான ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புகளை எரிக்க உதவும்.

முட்டையின் வெள்ளை கரு

உடலை கட்டுக்கோப்பாக வளர்க்கவும் தசைகளை பராமரிக்கவும் தேவைப்படும் 8 வகையான அமினோ அமிலங்கள் அனைத்தும் ஒவ்வொரு முட்டையிலும் உள்ளது. இது போக முட்டையில், தசை திசுக்கள் ஆறுவதற்கும் அதன் மறு வளர்ச்சிக்கும் தேவைப்படும் வைட்டமின்கள், அமிலங்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டையின் வெள்ளை கருவில் கொழுப்பே கிடையாது. இதனால் உங்கள் உணவில் கொழுப்பு சேராது. முட்டையின் மஞ்சள் கருவில் தான் அனைத்து கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ஓட்ஸ் கஞ்சி

காலை உணவிற்கு ஓட்ஸ் கஞ்சி குடிப்பது உங்கள் பொழுதை ஆரம்பிக்க உகந்ததாக இருக்கும். அதிலுள்ள நார்ச்சத்து உங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைத்து உட்சேர்க்கைக்குரிய செயல்முறையை அதிகரிக்க உதவும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள க்ளைகோஜென் கிடங்கை நிறைவாக்கும். உடற்பயிற்சி செய்த பின் எடுத்துக் கொள்ள சிறந்த உணவாகும் இது விளங்குகிறது.

வே புரோட்டீன் (Whey Protein)

வே புரோட்டீன் என்பது உடலை கட்டுக்கோப்பாக வளர்ப்பவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்த பின் அதிக தரத்துடன் கூடிய இந்த புரதத்தை பருகினால் உங்கள் உடல் இதனை உடனே ஈர்த்துக் கொள்ளும். இதனை ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரோடு கலந்து குடித்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். இது தசை சிதைவை நிறுத்தி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மெல்லிய சிகப்பு இறைச்சி

மெல்லிய மாட்டிறைச்சி மற்றும் இதர மெல்லிய சிகப்பு இறைச்சிகள் உடலை வளர்ப்பவர்களுக்கு சிறந்த உணவுகளாக விளங்குகிறது. மெல்லிய சிகப்பு இறைச்சியில் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B வளமையாக உள்ளது. சிகப்பு இறைச்சியில் அதிகளவில் கலோரிகள் அடங்கியுள்ளது. அதனால் தீவிரமாக உடலை உருமாற்றி, கட்டமைப்புடன் உடலை வைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்ற உணவாக இருக்கும்.

பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகள்

உடல் வளர்ச்சிக்கு சிவப்பு இறைச்சி மற்றும் முட்டை மட்டுமே போதுமானது அல்ல. இதற்காக பீன்ஸ் மற்றும் பட்டாணி வகைகளின் பங்களிப்பை யாரும் ஒதுக்கி விட முடியாது. அவைகளில் தாவர புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக அடங்கியுள்ளது. அதிலும் கிட்னி பீன்ஸ் இதற்கு புகழ் பெற்று விளங்குகிறது. ஒரு கப் கிட்னி பீன்ஸ் 14 கிராம் புரதத்தையும் நார்ச்சத்தையும் அளிக்கிறது.

மீன்

உடலுக்கு ஒமேகா-3 போன்ற சில அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் தேவைப்பட தான் செய்யும். இது தசை வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். இருப்பினும் ட்ரான்ஸ் வகை கொழுப்புகள் மற்றும் பூரிதக் கொழுப்புகளை தவிர்க்க தான் வேண்டும். ஆனால் மீன்களில் உள்ள அதிமுக்கிய கொழுப்புகளை ஒதுக்க கூடாது. குளிர்ந்த நீரில் வளரும் மீன்களான சால்மன், ட்யூனா, ட்ரௌட் மற்றும் சாலை மீன்களில் அதிக அளவில் புரதமும் ஆரோக்கியமான கொழுப்புகளும் அடங்கியுள்ளது.

ப்ராக்கோலி

மெல்லிய தேகத்தை விரும்புபவர்கள் தங்கள் உணவில் ப்ராக்கோலியை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக அதிலுள்ள வைட்டமின் சி, திசுக்கள் நீடித்து வாழ பாதுகாக்கும். மேலும் கரையும் இயல்புள்ள நார்ச்சத்துக்களை போதுமான அளவில் கொடுக்கும். இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் நிரப்பி விடும்.

https://www.facebook.com/arogiyam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum