தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

View previous topic View next topic Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by ragu Sun Jul 28, 2013 6:41 pm

என் தங்கை மகன் கீழ்கண்ட கேள்விகளை கேக்கிறான்.

இன்டெர்நெட் என்றால் என்ன?
இன்டெர்நெட் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
இன்டெர்நெட் எவ்வாறு இயங்குகிறது?

இந்த கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்தவர்கள் மட்டும் சொல்லுங்க.?

இவன்
ரகுநாதன்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by மகா பிரபு Sun Jul 28, 2013 6:48 pm

முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:06 pm

நன்றி [You must be registered and logged in to see this link.]

இணையம் எப்படி செயல்படுகிறது?.. எங்கிருந்து இத்தகைய கோடிக்கணக்கான தகவல்கள் கிடைக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடினால் இணையம் எப்படி செயல்படுகிறது? என்பதை அறிந்துகொள்ளலாம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:09 pm

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Working-method-of-ISP
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:10 pm

ஆம் நண்பர்களே.. இணையம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன தெரியுமா? இணைப்பது என்பதுதான்..ஒருவரை.. இருவரை.. ஏன் பல்லாயிரக்காணவர்களை இணைப்பதுதான் இணையம்.. இன்னும் ஆழ நோக்கினால் எங்கெங்கோ, உலகத்தில் ஏதோ மூலையில் இருக்கும் கணினியிலுள்ள (server) தகவல்களை எடுத்து வந்து நம் கணினியுடன் இணைப்பதுதான் இணையம். நாம் உள்ளிட்ட முகவரியுடைய தளத்தை நமக்கு உடனுக்குடன் வழங்குவதுதான் இணையம்.. இவ்வாறு ஒரு பக்கத்தை உள்ளிடப் பயன்படும் கணனியையும். நான் தேடிய பக்கத்தை வைத்திருக்கிற கணினியையும் இணைப்பதுதான் இணையம். உலகத்திலுள்ள இப்படிப்பட்ட server computer, personal computer என பலவாறு இருக்கும் கணினி, மற்றும் வழங்கிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய பக்கங்களையும் தகவல்களையும் பெற்றுத்தருவதே இணையம். இவற்றை ஆங்கிலத்தில் இதை Internet என்பார்கள்.

இணையம் எவ்வாறு செயல்படுகிறது?
(? How does the Internet work?)
உங்கள் கணினியில் இணையத்தைப் பயன்படுத்த என்ன செய்வீர்கள்? கணினியை உயிர்ப்பித்து அதிலுள்ள Browser ஒன்றினை இயக்கி.. அதிலுள்ள Address Bar -ல் ஏதேனும் தளத்தின் URL கொடுப்பதன் மூலம் இணையத்தை அடைகிறீர்கள் அல்லவா? இது எப்படி நடக்கிறது. அதாவது நாம் URL - கொடுத்தவுடன் go பட்டனையோ அல்லது Enter பட்டனையோ தட்டிவிட்டால் நாம் கொடுத்த பக்கமானது திறந்துகொள்கிறது.. இந்தப் பக்கம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? எதனால் வருகிறது? ஏன் வருகிறது?
இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Working-method-of-internet-connection
இதெல்லாம் கம்ப்யூட்டர் செய்யும் மாயம் என்கிறீர்களா? ம்ம்.. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். ஆனால் கம்ப்யூட்டர் என்ன மாயாஜால வித்தையா கற்று வைத்திருக்கிறது.. இல்லை.. அது நம்மைப்போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாதனம். அவ்வளவே.. இதற்கு மாயாஜாலமும் தெரியாது.. மண்ணாங்கட்டியும் தெரியாது..

சரி..பதிவிற்கு வருவோம்.. நீங்கள் இணையத்தை நாட Browser கிளிக் செய்து url கொடுக்கிறீர்கள் அல்லவா? இந்த Browser -ஐ கிளையண்ட் என்பார்கள்.. இந்த பிரவுசர்.. எந்த நிறுவனத்தினுடையதாகவும் இருக்கலாம். உம். நான் அடிக்கடிப் பயன்படுத்தும், firefox, Google Chrome, Opera, Internet Explorer போன்றவை.

இந்த கிளையண்ட்கள் என்ன செய்கின்றன தெரியுமா? நாம் உள்ளிட்ட URL நமக்கு இணைய இணைப்பு வழங்கிய ISP Server-க்கு அனுப்புகிறது.. இணைப்பு வழங்கிய சர்வரா? குழம்ப வேண்டாம்.. உங்களுக்கு இணைய இணைப்பைப் பெற்றுத் தரக்கூடிய BSNL, Airtel, Relience, Aircel இதுபோன்ற நிறுவனங்களின் சர்வரைத்தான் ISP Server- என்கிறோம்.

இந்த சர்வரானது தான் இணைக்கப்பட்ட மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது. அந்த சர்வரானது மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது.. இப்படி சங்கிலித்தொடராக இறுதியில் நாம் தேடும் தகவலடங்கிய சர்வருடன் இணைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட URL இருக்கும் சர்வரை அடைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட தகவலானது Very High Speed network என்னும் வழியில் வேகமாக உரிய சர்வரை வேகமாக சென்றடைகிறது.

உரிய சர்வரை அடைந்ததும் அதிலுள்ள தகவல்கள் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மீண்டும் அதே வழியில் தகவல்கள் நீங்கள் இணைந்திருக்கும் ISP , உங்களுக்கு இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து உங்களுடைய கணினிக்கு அந்த வலைத்தளத்தின் பக்கம் வந்தடைகிறது. நீங்கள் பிரௌசரில் உள்ளிட்ட தகவலனைத்தும் இவ்வாறுதான் உங்களுக்கு வந்தடைகிறது. இவ்வாறு நீங்கள் உள்ளிட்ட தகவலைப் உரிய சர்வரைச் சென்று மீண்டும் தகவலைப் பெற்று மீண்டும் உங்கள் கணினிக்குத் திரும்பும் நேரம் ஒரு சில விநாடிகளே...!

நாம் உள்ளிட்ட URL - ஐ கணினி எப்படி புரிந்துகொள்கிறது?

கணினிக்கு எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை.. கணினி என்றாலே 0,1 என்ற முறைதான்.. இன்னும் சொல்லப்போனால் கணினி ஆன், ஆப் என்ற இருமுறையில்தான் புரிந்துகொள்கிறது. அதாவது true or false.. ஒன்று அல்லது பூஜ்ஜியம்..இதைப்பற்றித் தெளிவாகப் படிக்க Unicode எழுத்துருவிற்கு நன்றி என்ற பதிவைப் படிக்கவும்.

கணினிக்கு நீங்கள் உள்ளிட URL படிக்கத் தெரியாது என்பதால் இவற்றை கணினி புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். இதற்கு protocol என்ற முறை பயன்படுகிறது. இந்த புரோட்டோகால் என்பது இரண்டு கணினிகளுக்கிடையாயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறையாகும். HTT, FTP, SMTP, WiFi, TCPIP என பல வகைகளாக இருக்கிறது. பொதுவாக TCP, IP ஆகியவைகளையே பெரும்பான்மையாக பயன்படுத்துகிறோம்.

இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு IP Address தரப்படுகிறது. இந்த IP அட்ரசானது நம்முடைய முகவரியைப் போல எழுத்தில் இருக்காது. இவ்வாறு IP ADDRESS எண்களாக இருக்கும். இந்த எண்கள் 0 தொடங்கி 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். உதாரணமாக யாஹூ தளம் உள்ள சர்வரின் IP Address 82.248.113.14 ஆகும். இந்த எண் இந்த தளத்தின் நிலையான எண் ஆகும்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் இணையத்தில் இணையும்போது ISP உங்கள் கணினிக்கென ஒரு தற்காலிக IP Address கொடுக்கப்படும். நிரந்தரமில்லாத இந்த IP Address ஆனது நீங்கள் இணையத்தில் இணைந்திருக்கும் வரை மட்டுமே செயல்படும். இணையத்தை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் இணையத்தை தொடங்கும்போது மீண்டும் புதிதாக IP Address உங்கள் ISP வழங்கும். காரணம் உங்களைப் போன்றவர்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உங்களுடைய ISP நிறுவனத்துடன் இணைந்திருப்பார்கள். ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை இன்டர்நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் இவ்வாறு IP அட்ரஸ் நிலையாக கொடுக்காமல், அவ்வப்போது IP ADDRESS கொடுக்கப்படுகிறது.

இந்த எண்கள் நான்கு இலக்க எண்களின் தொடராக இருக்கும். ஒவ்வொரு எண்ணையும் ஒரு புள்ளி வைத்து பிரித்திருப்பார்கள். அதாவது இவ்வாறு இருக்கும். 64.233.167.104 இந்த எண்களினால் ஆன முகவரி இணையத்தின் மிக முக்கியமானதாகும்.

ஏனெனில் இந்த முகவரியை வைத்துதான் Internet-ல் வேண்டுகோள் வைத்த கம்ப்யூட்டர் எது? எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். TCP என்பது Transmission Control Protocol என்பதின் குறுக்கமாகும். இது அனுப்பபடும் தகவல்களை சிறு சிறு பொட்டலங்களாக (Pockets)பிரித்து, மீண்டும் சேர வேண்டிய இடத்தில் தகவல்களை மீண்டும் உள்ளவாறே சரியான முறையில் இணைத்து கொடுக்கும். இதுதான் TCP என்று சொல்லப்படுகிற Transmission Control Protocol ன் வழிமுறையாகும்.

எனவேதான் இந்த ஐபி அட்ரஸ் ஆனது மிக முக்கியத்துவம் பெறுகிறது.. வேண்டுகோள் விடுத்த ஐ.பி அட்ரஸ் உடைய கணினிக்கும், தகவல்களை கொடுக்கிற கணிக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்குவது இணையம். வேண்டுகோள் விடுத்த கணினியையும், வேண்டிய தகவலடங்கிய கணினியையும் அடையாளப்படுத்தவே இந்த IP முகவரிகள். இப்போது தெளிவாக புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:14 pm

இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள்...இப்பதிவினுடைய அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த வீடியோ.. தவறாமல் வீடியோவைப் பாருங்கள்.. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.



இவ்வாறுதான் நாம் இணையத்தில் இணைகிறோம்.. நம்முடைய கணினிக்கு, உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கணினியிலுள்ள தகவல்கள், தரவுகள் நம்மை வந்தடைகின்றன..

குறிப்பு: ISP - INTERNET SERVICE PROVIDER - இணைய இணைப்பு வழங்குநர்.
IP- INTERNET PROTOCOL - இணைய நெறிமுறை
SERVER - வழங்கி (கணினி) - சேவையகம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 28, 2013 9:18 pm; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by Muthumohamed Mon Jul 29, 2013 12:22 am

தகவலுக்கு நன்றி ரமேஷ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by ragu Mon Jul 29, 2013 12:30 pm

பதில் அளித்த அண்ணாவுக்கு நன்றி. மகிழ்ச்சி ரொம்ப ஜாலி
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by Thuvakaran Thu Jun 15, 2017 9:48 pm

ragu wrote:என் தங்கை மகன் கீழ்கண்ட கேள்விகளை கேக்கிறான்.

இன்டெர்நெட் என்றால் என்ன?
இன்டெர்நெட் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
இன்டெர்நெட் எவ்வாறு இயங்குகிறது?

இந்த கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்தவர்கள் மட்டும் சொல்லுங்க.?

இவன்
ரகுநாதன்
Thuvakaran
Thuvakaran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்   Empty Re: இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum