தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் களஞ்சியம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:02 pm

First topic message reminder :

* 16-ம் நூற்றாண்டில் தங்கம் அரிய ரசாயனப் பொருளாக இருந்துள்ளது.

* பிரமாண்ட உயிரினமான திமிங்கலத்தினால், பின்பக்கமாக நீச்சலடிக்க முடியாது.

* தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கனவுகள் பெரும்பாலும் குறைவாகத்தான் வருமாம்.

* இங்கிலாந்தில் 1942-ம் ஆண்டில் எல்லா மக்களுக்கும் ரேஷன் முறையில் சோப் வினியோகம் செய்யப்பட்டது.

* உலக மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் சீனர்கள்.

* சுத்தமான உறைபனியைவிட, அசுத்த உறைபனி வெகுவேகமாக உருகியோடும்.

* 1896-ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஜான்சிபார் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் வெறும் 38 நிமிடங்களிலேயே முடிந்தது.

* சுவீடன் நாட்டில் சுமார் 40 சதவீத மக்களின் பெயர்கள் `ஷீஸீ' என்றே முடிகிறது.

* மிகப்பெரிய தீவுகளில் 8-வது இடத்தில் பிரிட்டன் உள்ளது.

* ஆண்களைவிட பெண்கள்தான் அதிக சத்தத்துடன் குறட்டை விடுகிறார்களாம்.

* நைட்டிங்கேல் பறவையில் ஆண் இனம் மட்டுமே பாடும் தன்மை கொண்டது.

* உலகிலேயே சீனாவில்தான் அதிகம் சைக்கிள்கள் உள்ளன. அங்குள்ள மொத்த சைக்கிள்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டி விட்டதாம்.

* அங்கேரி நாட்டில் அதிக அளவில் ஏற்றுமதியாகும் உயிரினம்? - நீர்யானை.

* `சாக் கடல்' என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒரு கடல் அல்ல; அது ஏரியாகும்.

* உலகில் அதிகமாக பார்வையற்றவர்களை கொண்ட நாடு? -
சீனா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:14 am

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:15 am

* சீனா தலைநகர் பீஜிங் நகரிலிருந்து வெளிவரும் "சீங்பாவோ' என்ற பத்திரிகை 103 ஆண்டுகளாக வெளிவருகிறது. அச்சு இயந்திரம் வருவதற்கு முன் இதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்களாம்.

* உலகிலேயே முதன்முதலில் தலைப்புடன் செய்தி வந்தது 1777-ம் ஆண்டில் "நியூயார்க் கெஜட்' என்ற பத்திரிகையில்.

*உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் முதல் கோலைப் போட்டவர் என்ற பெருமை பிரான்ஸ் நாட்டு அணியைச் சேர்ந்த லூசியனண்ட் லூரான் என்ற வீரர் பெற்றார். 1930-ம் ஆண்டு முதல் கோலை மெக்ஸிகோவிற்கு எதிராகப் போட்டார்.

* தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில் வெளிவந்த வார இதழ் பத்திரிகை 12.10.1785-ம் ஆண்டு வெளியான "மெட்ராஸ் கொரியர்' என்னும் வார இதழ் தான். இதன் ஆசிரியர் ரிச்சர்ட் ஜான்சன்.

* 1841-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ்.

* இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை "சுக்ரினி'. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப் பெண்.

* இந்தியாவில் முதலில் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 1854 மே 6-ம் தேதி. அன்றைய கமிஷனர் பென்னி பிளாக் என்பவரால் வெளியிடப்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்திற்கு 1865-ம் ஆண்டில் தான் அப்பெயர் வந்தது. அதற்கு முன்பு சிகரம்-15 என்னும் பெயர் தான் வழங்கப்பட்டது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த நேரம், இந்தியாவில் எவரெஸ்ட் என்பவர் சர்வேயர் ஜெனரலாக இருந்தார். அவர் இமயமலைத் தொடரில் உள்ள சிகரங்களுள் சிகரம்-15 தான் உயரமான சிகரம் எனக் கண்டறிந்தார். அதனால், அவர் பெயரையே அந்த சிகரத்திற்கு சூட்டிவிட்டனர்.

* ஒரு புற்றிலுள்ள எறும்பு அடுத்த புற்றில் நுழைவதில்லை.

* தலை துண்டிக்கப்பட்டாலும் எறும்புகள் 20 நாட்கள் உயிருடன் இருக்குமாம்.

* வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து 106 நாட்கள் வரை உயிர் வாழுமாம்.

* ஒரு வாரம் வரை நீருக்கடியில் உயிருடன் வாழும்.

* சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் உள்ளது.

* கி.மு.13-ம் நூற்றாண்டிலேயே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

* உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:16 am

*சாலையோர உணவு விடுதி யாரால், எப்போது தொடங்கி வைக்கப்பட்டது? -ஆர்தர் ஹெய்ன்மென் (1925-ம் ஆண்டு)

*நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன்

*உலகின் மிகப் பழமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது? -ஹோசி ரியாகோன், ஜப்பான்.

*தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர்? -ஹோவர்ட் ஹக்ஸ்

*உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி? -பர்ஜ் அல்-அராப்

*அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய தங்கும் விடுதி எந்த நகரில் உள்ளது? -பர்ஸ்ட் வேர்ல்ட் ஹோட்டல்(அமெரிக்கா)

*அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்? -அரிஸ் டவர்ஸ்

*உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம் ? -எல் புல்லி (ஸ்பெயின்)

*அமெரிக்காவிலேயே முதலிடத்தில் இருக்கும் உணவகம்?-பெர் சி

*தி பேட் டக் என்பது எந்த நாட்டின் பிரபல உணவகம்? -இங்கிலாந்து

*பாஸ்தா என்பது எந்த நாட்டின் பிரபல உணவு? - இத்தாலி.

*சால்சா என்ற உணவு எந்த நாட்டில் மிகவும் பிரபலமானது? -மெக்சிகோ


*தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது? -இட்லி

*காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர்? -ஸ்பெயின்
*பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.

*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.

*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.

*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.

*இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.

*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:17 am

* புதுதில்லியில் 2010-ம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஷேரா என்ற புலி நினைவுச் சின்னமாக இருக்கும்.

*சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.

* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.

* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.

* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.

* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.

*எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.

*********************

*வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.


*********************

*ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்'. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்' என்று பெயர். `டைகான்'. ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:18 am

* ஒரிசா மாநிலத்தில் யானை சந்தை உள்ளது.

* பைசா நகர சாய்வு கோபுரம் வட்ட வடிவிலானது. எட்டு அடுக்குகளைக் கொண்டது.

* ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் குட்டி கோவேரி கழுதை எனப்படும்.

* பெண் நீர் யானைகளை விட, ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.

* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 660 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

* 22 காரட் தங்கம் என்பது 91.67 சதவீதம் தூய்மையானது.

* சோழ மன்னர்களுக்குரிய பட்டப் பெயர்கள் கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன், கண்டர் என்பதாகும்.

* பாண்டியருக்குரிய பட்டப் பெயர்கள் வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின், செழியன்.

* சேரர்களுக்குரிய பட்டப் பெயர்கள் சேரன், வானவன், மலையன், பொறையன், உழியன்.

* ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.

* கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.

* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.

* மூங்கில் ஒரு நாளைக்கு 3 அடி உயரம் வளரும்

* முந்திரிச் செடி 1660-ம் ஆண்டில் முதன்முதலில் இந்தியாவில் பயிரிடப்பட்டது. இச் செடி பிரேசில் நாட்டில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.

* கழுதைகள் காதை வீசி ஆட்டினால் விடியும் முன்பு மழை பெய்யும் என்பது ஃபிரான்ஸ் நாட்டு மக்களின் நம்பிக்கை.

* நண்பகலில் சிலந்தி வலை பின்னுவது மழை வருவதற்கான அறிகுறி என ஜப்பான் நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

* தங்கம் உலகம் முழுவதும் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகின்றன.

* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளே அணிகிறார்கள்.

* சுத்தமான தங்கம் 99.99 சதவீதம் தூய்மையானது.

* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு
இந்தியா.

* அதிக அளவில் வெள்ளி எடுக்கப்படும் நாடு மெக்சிகோ ஆகும்.

* பிறந்த முயல் குட்டியின் எடை 49 முதல் 50 கிராம் வரை இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:19 am

*நீர் யானைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரண நீர் யானை. இதன் எடை 3,600 கிலோவாகும். இன்னொன்று, சைபீரிய நீர்யானை. இவை அதிக பட்சம் 2,500 கிலோ எடை வரை இருக்கும்.

பெண் நீர் யானை 210 முதல் 255 நாட்களுக்குள் குட்டி போடுகிறது. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 நீர்யானைகள் வரை இருக்கும்.
கனத்த எடை கொண்டது என்றாலும் நீர்யானைகள் ஓடுவதில் வல்லவை. அவை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை. இவற்றின் ஒருவேளை உணவு 45 கிலோ புல் ஆகும்.

***

*மாடுகளைப் போல் நாய்களும் நிறக்குருடுகள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாய்கள் நிறக் குருடுகள் அல்ல. அவற்றாலும் சில நிறங்களை அடையாளம் கண்டு கொள்ள இயலும். இப்படி நாய்கள் நிறத்தை அடையாளம் காண்பது நாய்க்கு நாய் வேறுபடும். இதனால்தான் நாய்கள் சில நேரம் அழுக்கு ஆடை அணிந்தவர்களைக் கண்டால் குரைக்கின்றன.

***

*பாம்புகளை விட மீன்களில்தான் அதிக விஷம் கொண்டவை இருக்கின்றன. உலகில் மொத்தம் 1,200 வகையான விஷ மீன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மீன்கடியால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகள் வரை 300-க்கும் சற்று குறைவான மீன்கள்தான் விஷத் தன்மை கொண்டவை என்று கூறப்பட்டு வந்தது.

*யானை மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்படி ஓடும்போது அதன் ஏதாவது ஒரு காலோ இரண்டு கால்களோ தரையில் இருக்கும்படிதான் அது ஓடும். இல்லாவிட்டால் யானையால் ஓட முடியாது.

***

*வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுக்கள் இலைகளை மட்டுமே தின்னுகின்றன என்று நினைத்தால் தவறு. இவை பட்டுப்போன்ற மென்மையான வலையையும் பின்னுகின்றன. இதில் சிக்கிக் கொள்ளும் நத்தையைக் கூட இவை தின்று விடுகின்றன

* உலகின் எல்லா பகுதிகளிலும் மேலிருந்து கீழே குதிக்கும் போது, இடப்பக்கமாகத்தான் சற்றே விலகி விழுகிறார்கள். காரணம், சூரியனை இட, வலமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தப் பக்கம்தான் அழுத்தம் அதிகம். நீச்சல் வீரர்கள், பாராசூட் வீரர்கள் என அனைவரும் இதனால்தான் இடது பக்கமாகவே படு இயல்பாக குதிக்கிறார்கள்.

* உலகிலேயே முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள் எட்மண்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கேயி. 1953-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்த சாதனையை நிகழ்த்தினார்கள்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய மிக வயதான பெண்மணி, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தமேவர்தனாவே என்பவர். 2002 மே 16-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அவருக்கு வயது 64.

* நாணயங்களை முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.

* இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டிலிருந்து நாணயம் புழக்கத்தில் உள்ளது.

* இன்றும் தங்க நாணயங்கள் ஜப்பான், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:20 am

* ரஷியாவில் பண்டையக் காலத்தில் சுவரொட்டி அளவு ரூபாய் புழக்கத்தில் இருந்தது.

* அல்பட்ராஸ் என்னும் வெண்ணிறக் கடற் பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டைதான் இடுகிறது.

* கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் இடும்.

* ஸ்டிக்கிள் பாக் என்ற மீன் கடற் தாவரங்களைக் கொண்டு கடலின் அடியில் கூடு கட்டி வாழும்.

* அட்லாண்டிக்கின் ஒரு பகுதியான ஸர்காúஸô கடல் உலகிலேயே மிக ஆழமானது. சில இடங்களில் அதன் ஆழம் 19,680 அடிகளாகும்.

* ரஷியாவில் உள்ள அஜாவ் என்ற கடல்தான் ஆழமற்றது. இதன் அதிகபட்ச ஆழமே 42.64 அடி தான்.

* நேபாளத்தின் தேசிய விலங்கு பசு.

* பால் பாயின்ட் பேனாவைக் கண்டறிந்தவர் ஜான்டி லார்டு.

* ஒரு சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம்.

* உலகின் மிகப் பெரிய விமானம் போயிங்-747 ரக விமானம் ஆகும்.

* கறுப்பு நிறக் கொடி துக்கம் மற்றும் எதிர்ப்பை உணர்த்துகிறது.

* இந்திய ரயில்வே 1853-ம் ஆண்டு மும்பையிலிருந்து, தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூர முதல் பயணத்தை துவக்கியது. இன்று உலகின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் மொத்த ரயில் பாதை நீளம் 63,028 கி.மீ. பணியாளர்களின் எண்ணிக்கை 1.54 மில்லியன்.

* தமிழ்நாடு நிலப்பரப்பில் 7-வது இடத்தையும், மக்கள் தொகையில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

* தமிழகத்தில் படிப்பறிவு விகிதம் 73.47%.

* இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்க்கண்ட். இது 2000-ம் ஆண்டில் உதயமானது.

* இந்திய யூனியன் பிரதேசங்களில் மிகப் பெரியது அந்தமான் நிகோபார் தீவுகள். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட நீதித்துறைச் சார்ந்த பிரச்சினைகளுக்கு கோல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* லட்சத் தீவின் பரப்பளவு 32 சதுர கி.மீட்டர். இங்குள்ளவர்கள் சட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கேரளா உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.

*நிலவை விட சூரியன் பல மடங்கு பெரியது நமக்குத் தெரிந்தது தான். ஆனாலும் புவியிலிருந்து பார்க்கும் போது நிலவும் சூரியனும் ஒரே அளவாகத் தெரிவது ஏன் தெரியுமா?

நிலவின் விட்டத்தை போல் சூரியனின் விட்டம் 400 மடங்கு பெரியது. அதேபோல், புவியிலிருந்து நிலா உள்ள தொலைவை போல் புவியிலிருந்து சூரியன் 400 மடங்கு தொலைவில் உள்ளதே காரணம் ஆகும்.

* வருமானத்தில் பணக்கார நாடாக திகழ்வது குவைத்.

* ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் ஸ்ரீபானு அஜயா.

* உடன்கட்டை ஏறுதலைத் தடுத்தவர் லார்ட் வில்லியம் பென்டிங்.

* வெள்ளை யானைகள் அதிகமாகக் காணப்படும் நாடு தாய்லாந்து.

* பூமியிலிருந்து சூரியனின் தொலைவு சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர்களாகும்.

* கடலின் ஆழம் சராசரியாக 4 கிலோ மீட்டர்களாகும்.

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.

* தென்கிழக்கு ஆசியாவின் மிகச் சிறிய நாடு சிங்கப்பூர்.

* தேள் இனத்தில் 1,300 வகையுண்டு.

* பாலைவனங்களில் வளரும் கள்ளிச் செடிகள் 200 வருடங்கள் வரை கூட வாழும்.

* உலகில் உள்ள கடல்களின் சராசரி ஆழம் சுமார் இரண்டு மைல்கள்.

* சிதம்பரத்தின் இன்னொரு பெயர் தில்லை

*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.

முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.

* யானையால் தாண்ட முடியாது.

* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.

* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.

* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.

* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.

* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:21 am

* தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து "கேஷ்' என்ற ஆங்கிலச் சொல் வந்தது.

* முதன்முறையாக கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

* உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்கள் ஆப்பிரிக்கர்கள். குறைந்த நேரம் தூங்குபவர்கள் சீனர்கள்.

* திருத்தணியைத் தமிழகத்துடன் இணைக்கப் பாடுபட்டவர் ம.பொ.சிவஞானம்.

* கொச்சியில் யூத இனத்தவர்கள் வசிக்கின்றனர்.

* மகாத்மா காந்தியைக் கௌரவித்து இதுவரை 49 நாடுகள் தபால் தலையை வெளியிட்டுள்ளன.

* நண்டிற்கு தலை என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை.

* ஒரு மைல் தூரத்தைக் கடக்க 33 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன நத்தைகள்.

* ஒரு சதுரமைல் வளமான நிலத்தில் 3 கோடியே 20 லட்சம் மண் புழுக்கள் இருக்கும்.

* தும்பிகளின் வாழ்நாள் 24 மணி நேரம் மட்டுமே.

* முதலைகளால் பின்னோக்கி நகர முடியாது.

* பாம்புக்கு காதுகள் கிடையாது. ஆனால், ஒலி அதிர்வுகளை உணரும் திறன் அதன் நாக்குக்கு உண்டு.

* ஒரு நத்தைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் பற்கள் இருக்கும்.நெ.சங்கராபரணி, பெருமாத்தூர்.நாணயம் தோன்றிய நாடு!

* ஆமைக்குப் பல் கிடையாது. கடினமான ஈறு போன்ற அமைப்பாலே அது உணவுகளை உண்கிறது.

* உயில் எழுதும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள்.

* ஸ்பெயின் நாட்டில் தான் முதன் முதலில் நாணயம் தோன்றியது.

* துக்கத்தால் வரும் கண்ணீர் நம் உடலில் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.கே.வேல்முருகன், ஆண்டிபட்டி.கடல் முயல்!கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மீனுக்குக் கடல் முயல் என்று பெயர். இது தோற்றத்தில் பார்ப்பதற்கு முயலைப் போலவே இருக்கும். மீன் இனத்திலேயே அதிக முட்டைகள் இடும் உயிரினம் கடல் முயல் தான். அதாவது, ஒரு மாதத்தில் 11 கோடியே 95 லட்சம் முட்டைகள் இடக் கூடியது.

* தேனீக்கள் ஒரு தடவையில் சுமார் 50 முதல் 100 பூக்கள் வரை அமர்ந்து தேனை உறிஞ்சுகின்றன.

* தேனீக்களுக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.

* தேனீக்கள் மணிக்கு இருபது கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்கின்றன.

* இந்தியாவின் மிக உயரமான சிலை கர்நாடகத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை.

* கடல் சிங்கங்கள் சுமார் 30 வருடங்கள் வாழ்கின்றன.

* இந்தியாவில் முதல் மியூசியம் 1796-ம் ஆண்டு கோல்கத்தாவில் அமைக்கப்பட்டது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:22 am

*அமெரிக்காவில் அரிசோனா மாவட்டத்தில் வின்ஸ்லோ என்ற இடத்தில் 1000 வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் விழுந்தது. இதனால் 1250 மீ, 180 மீ அகலமுள்ள பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இது 800 மீட்டர் ஆழம் கொண்டது. இதுவே உலகிலேயே மிகப் பெரிய கிரேட்டர் ஆகும்.

*பிரெஞ்சு நாட்டின் மன்னனாக நெப்போலியனை முடிசூட்ட, பாரீஸ் நகரிலுள்ள நாத்திரிடாம் "சர்ச்'சில் ஏற்பாடு நடந்தது. நெப்போலியன், போப் 7-வது பயஸ் முன் மண்டியிட்டு உட்கார்ந்து இருந்தார். முறைப்படி போப் அவரது தலையில் அபிஷேக எண்ணெய்யைப் பூசி, செங்கோலைக் கையில் கொடுத்தார்.

முடிசூட போப் எத்தனித்த போது, நெப்போலியனே முடியை எடுத்து தனக்குத்தானே சூடிக் கொண்டு, தன் மனைவிக்கும் முடி சூட்டினார். கூடியிருந்த மக்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர்.

* யானையால் தாண்ட முடியாது.

* பூனையால் இனிப்பு சுவையை உணர முடியாது.

* நெருப்புக் கோழியின் கண் அதனுடைய மூளையைக் காட்டிலும் பெரியது.

* நீலத் திமிங்கலம் இதயம் ஒரு கார் அளவும், நாக்கு யானையின் நீளத்திற்குச் சமமானது.

* பூனை மற்றும் நாய் மனிதர்களைப் போலவே இடக்கை, வலக்கை பழக்க முடையவை.

* எறும்பு தன்னுடைய உடல் எடையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.

*அமெரிக்க நாட்டு சிவப்பிந்தியர்கள் குழந்தை பிறந்தவுடன் அதனுடைய தந்தை எந்தப் பொருளை முதலில் பார்க்கின்றாரோ அப்பொருளின் பெயரையே அக்குழந்தைக்குச் சூட்டுகின்றனர். ஓடும் தண்ணீர், நடக்கும் நாய் என்ற வித்தியாசமான பெயரில் பெயர்கள் உள்ளன.

*ஒலிம்பிக் கொடி வெள்ளை நிற பின்னணியுடன் சிகப்பு, மஞ்சள், கறுப்பு, பச்சை, நீலம் முதலிய 5 நிற வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து காணப்படும். இதில் சிகப்பு அமெரிக்கா கண்டத்தையும், மஞ்சள் ஆசியாக் கண்டத்தையும், கறுப்பு ஆப்பிரிக்கா கண்டத்தையும், பச்சை ஆஸ்திரேலியா கண்டத்தையும் நீலம் ஐரோப்பாக் கண்டத்தையும் குறிக்கின்றது.

*நமது நாட்டின் மிக நீளமான ரெயில் பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ். இதில் 26 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

*75 கிலோ எடை கொண்ட ஒருவரின் எடை பூமியிலிருந்து 2 லட்சம் கிலோமீட்டர்கள் உயரத்தில் ஒரு கிலோதான் இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:23 am

உலகில் கிடைக்கும் உலோகங்களில் மிகுந்த எடையுள்ளது இரிடியம் ஆகும். இது 1804ல் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மித்சன் டென்னண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இந்த உலோகம் மிகுந்த எடை கொண்டது. ஒரு கன அடி இரிடியத்தின் எடை 660 கி.கி. உலோகங்களுள் மிகவும் இலேசானது லித்தியம் 1 க.அடி லித்தியத்தின் எடை 150 கி.கி. பெரிய சாய்ந்தாடி மரத்தின் ஒரு பக்கத்தில் 6 டன் எடையுள்ள யானையை நிறுத்தி எதிர்ப்பக்கத்தில் 8 அடி லித்தியத்தை வைத்தால் சமமாக இருக்கும்.

* அறிவியல் மேதை ஜேம்ஸ் வாட்டின் தந்தை ஒரு தச்சர்.

* அறிவியல் மேதை கெப்ளரின் தந்தை உணவு விடுதி நடத்தியவர்.

* இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தாட்சரின் தந்தை கீரை வியாபாரி.

* இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜரின் தந்தை ஒரு சர்க்கஸ் கோமாளி.

* கணித மேதை காஸ் என்பவரின் தந்தை ஒரு கொத்தனார்.

* உலகிலேயே வருமான வரி இல்லாத நாடு குவைத்.

* ஜப்பான் நாட்டின் பழையப் பெயர் நிப்பான்.

* தும்பா ராக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது.

* பனிக்கட்டியால் சூழப்பட்ட கண்டம் அண்டார்டிகா.

* கடலில் கலக்காத நதி யமுனை.

* பசுவுக்கு நான்கு இரைப்பைகள் உள்ளன.

* வெட்டுக் கிளிக்கு காதுகள் கால்களில் உள்ளன.

* தமிழகத்திலுள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை 496.

* தமிழகத்திலுள்ள மொத்த கோட்டங்களின் எண்ணிக்கை 72.

* தமிழகத்திலுள்ள மொத்த உள் வட்டங்களின் எண்ணிக்கை 1,106.

* தமிழகத்திலுள்ள மொத்த வட்டங்களின் எண்ணிக்கை 195.

* தமிழகத்திலுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 17,273.

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.

* தீபாவளியன்று பிறந்த மதகுரு குருநானக்.

* ராஜீவ்காந்தி தனது 42-வது வயதில் பிரதமர் ஆனார்.

* அரபிக் கடலின் ராணி கேரளம்.

* உலகில் உள்ள மொத்தப் பரப்பளவில் 71% தண்ணீர் உள்ளது.

* இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

* செங்கற்களை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்.

* கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.

* நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது 28.

* இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.

* நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பிப்ரவரி 28.

* நேரு தனது மனைவி கமலா நேரு இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.

* நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

* "பெலுகா' என்ற பெயர் கொண்ட திமிங்கலங்கள் கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் காற்று இன்றி உயிரோடு இருக்கும்.

* "ரோடு ரன்னர்' என்ற பெயருக்கு ஏற்றாற்போல, இந்தப் பறவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால், பறக்காது.

* ஒரு வளர்ந்த ஆண் யானை, ஒரு நாளைக்கு 63 கிலோ எடையுள்ள மரம், தழை, புல் போன்றவற்றை சாப்பிடும்.

* ஒரே நேரத்தில் ஒரு ஆமை 120 முட்டைகள் இடும்.

* ராட்சத ஆமையின் எடை 40 கிலோ இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:24 am

*அமெரிக்காவில் உள்ள "சிகாகோ' சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு மிகுந்தது. இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம் கிளம்பும் அல்லது இறங்கும். ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக் கணக்கு.
இந்தப் புள்ளிவிவரத்தின் படி, ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள் வந்து போகின்றன. இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள் என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. விமானப் போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு அமைந்துள்ளன.

*வட அமெரிக்காவில் பேரீச்சை மரம் அதிகளவில் பயிராகிறது. மேற்காசியா மற்றும் தென் ஐரோப்பாவிலும் ஓரளவு பயிரிடப்படுகிறது. 100 அடி உயரம் வளரக் கூடியது. 300 வருடங்கள் வரை பழங்கள் தரும். பேரீச்சம் பழம் சத்து நிறைந்தது. பேரீச்சை மரத்தின் இலைகளைக் கொண்டு ஆப்பிரிக்கர்கள் தங்கள் குடிசைகளுக்குக் கூரை போட்டுக் கொள்கின்றனர். இதிலிருந்து கயிறும் தயாரிக்கப்படுகிறது. இதன் இளம் தண்டிலிருந்து ஒருவகைப் பானம் தயாரிக்கப்படுகிறது.

*நாம் வாழைக் குலையை தார் என்றும் அதன் தனித்தனி துண்டுபகுதியை சீப்பு என்று அழைப்பது போல் ஆப்பிரிக்கர்கள் தார் என்பதை கை என்றும் சீப்பு என்பதை விரல்கள் என்றும் அழைக்கிறார்கள்.

*பெங்குவின் முட்டைகளை ஆண் பறவைதான் அடை காக்கும். சுமார் 60 நாட்கள் வரை தந்தை பெங்குவின் அடை காத்து குஞ்சு பொரிக்கும். இந்த 60 நாட்களிலும் தந்தை பெங்குவின் உணவு எதுவும் சாப்பிடுவதில்லை. இதனால் கிட்டத்தட்ட 12 கிலோ வரை இவை எடை குறைந்து விடுகின்றன.குஞ்சு பொரித்தப் பின் சில நாட்கள் வரை தன் தொண்டையில் சுரக்கும் ஒரு வித திரவத்தை தந்தை பெங்குவின் பறவை தனது குஞ்சுகளுக்கு பால் போல கொடுக்கும். தாய் பறவை அதன் பிறகே குஞ்சைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும்.

*இந்தியாவில் ஒவ்வொரு பசுவும் தனது வாழ்நாளில் 12 முதல் 15 ஆயிரம் லிட்டர் வரை பால் தருகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய பசுக்கள் 22 ஆயிரம் லிட்டர் வரை பால் தருகின்றன.

*111 111 111 என்ற எண்ணை 111 111 111 என்ற எண்ணால் பெருக்கினால் வேடிக்கையான விடை கிடைக்கும். அந்த விடை 1234 5678 9 8765 4321 என்பதாகும்.

*கனடா என்ற பிரெஞ்ச் மொழிச் சொல்லுக்கு பெரிய கிராமம் என்று பெயர்.

*இஸ்ரேல் நாட்டில் மூன்று பேருக்கு ஒருவர் செல்போன் வைத்திருக்கிறார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:25 am

*ஒரு ஜம்போ ஜெட் விமானம் மேலே கிளம்பி எழுவதற்கு மட்டும் 4 ஆயிரம் கேலன் பெட்ரோல் செலவாகிறது.

*ஒரு தீப்பெட்டி அளவேயுள்ள தங்கக் கட்டியைக் கொண்டு ஒரு டென்னிஸ் மைதான அளவிற்கு அதை தட்டி மெலிதாக்கிவிட முடியும்.

*ஒரு மனிதன் தொடர்ந்து பத்து நாட்கள் தூங்காமல் இருந்தால் இறந்து போய் விடுவான். ஆனால் உணவு சாப்பிடாவிட்டால் அவன் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகும்.

*ராணி தேனீ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடுகின்றன.

*பத்து கோடியில் ஒரு பங்கு அளவு ரத்தத்துளியைக் கூட சுறா மீன்கள் மோப்பம் பிடித்து விடும். மீன்களில் இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில் இமைக்கக் கூடியது சுறாமீன்தான். வாரத்திற்கு ஒரு முறை பல் முளைக்கிறது.

*கண்ணாடி மற்றும் பானைகளில் ஏற்படும் விரிசலின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமானது.

*ஆபிரஹாம் லிங்கனின் தாயார் எப்படி இறந்தார் தெரியுமா?...அவர்களது வீட்டிலிருந்த பசுமாடு விஷக் காளானைத் தின்றுவிட்டது. இது தெரியாமல் அந்த மாட்டின் பாலைக் கறந்து குடித்துவிட்டார், லிங்கனின் தாயார். இதுதான் அவரது மரணத்திற்கு காரணம்.

*டாஸ்மேனியா தீவில் உள்ள அத்தனை பாம்புகளும் விஷத்தன்மை கொண்டவை.

*அர்ஜென்டினா என்ற ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு வெள்ளி நிலம் என்று பெயர். முதன் முதலில் இங்கே குடியேறியவர்கள் இங்கே நிறைய வெள்ளி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் பெயரை வைத்துவிட்டனர். ஆனால் அர்ஜென்டினாவில் வெள்ளி குறைவாகவே வெட்டியெடுக்கப்படுகிறது.

*மற்ற எல்லாப் பழங்களையும் விட அமெரிக்கர்கள் வாழைப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

*ஆல்பட்ராஸ் பறவைகள் பறக்கும்போதே தூங்கக் கூடியவை. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் போது அவை தூங்குகின்றன.

*அண்டார்டிகா கண்டத்தில் ஒரேயொரு ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். அண்டார்டிகா கண்டத்தில் மட்டும்தான் பாம்புகளோ, மற்ற ஊர்வன விலங்குகளோ கிடையாது.

*ஒரு கங்காரு 3 மீட்டர் உயரத்திற்கும் 8 மீட்டர் நீளத்திற்கும் தாவிக் குதிக்கும் சக்தி கொண்டது. தனது வால் தரையைத் தொட்டால் மட்டுமே கங்காரு தாவிக் குதிக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:26 am

*நாம் பிறக்கும் போது நம் கண் எப்படி இருந்ததோ, அதே அளவுதான் கடைசி வரை இருக்கும். வளரவே வளராது. ஆனால், இதற்கு நேரெதிரானது காதும், மூக்கும். வளர்ந்து கொண்டே இருக்கும்.

*சாப்பிடாமல் இருப்பவர்களை விட சரியான தூக்கம் இல்லாதவர்கள் சீக்கிரமாகவே இறக்க வாய்ப்புள்ளது. தூங்காதவர் பத்து நாளில் இறப்பார் என்றால், சாப்பிடாதவர் இறக்க சில வாரங்கள் ஆகும்.

*புகழ்பெற்ற ஓவிய மங்கை மோனலிசாவிற்கு புருவம் கிடையாது.

*தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹாம் பெல் ஒருபோதும் தன் அம்மாவுக்கோ, மனைவிக்கோ போன் செய்ததே கிடையாது. ஏனென்றால், இருவருக்கும் காது கேட்காது.

*“I am" என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் முழுமை பெற்ற மிகச் சிறிய வாக்கியம்.

*சந்திரன் நம் தலைக்கு நேரெதிராக இருக்கும்போது நம் உடல் எடை சிறிதளவு குறைந்து இருக்கும். காரணம் பூமி, சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும் ஒன்றுடன் ஒன்று தொடர் புடையது!

*ஸ்பானிஷ் பேசும் நாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய டூத் பேஸ்ட் நிறுவனமான கோல்கேட் மிகவும் கஷ்டப்பட்டது. காரணம், ஸ்பானிஷ் மொழியில் கோல்கேட் என்றால், ‘போய்த் தூக்கு மாட்டிக்கொள்’ என்று அர்த்தம்.

*எப்படி மனிதருக்கு மனிதர் கைரேகை மாறுபடுமோ அதேபோல் நாக்கு ரேகையும் மாறுபடும்.

*‘Bookkeeper’ என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில்தான் மூன்று ஆங்கில எழுத்துகள் தொடர்ந்து இரண்டு முறை வருகின்றன. (oo, kk, ee)

*B.C என்றால், ஆங்கிலத்தில் Before Christ என்று பொருள். அதாவது ஏசு பிறப்பதற்கு முன்.

*A.D (anno domini) என்பது லத்தீன் சொல். லத்தீனத்தில் anno domini என்றால், (“in the year of the Lord”- the year Jesus was born ) அதாவது ஏசு பிறந்த வருடம் என்று பொருள்.

*A M ( Ante Meridiem ) என்பது லத்தீன் சொல். அதற்கு லத்தீனத்தில், before noon,, பகலுக்கு முன்பு என்று பொருள். P M (Post Meridiem : after noon) அதாவது பகலுக்கு பின், பிற்பகல் என்று பொருள்.

*மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

*மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

*"வீட்டோ' என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

*கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

*கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

*"குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:27 am

*இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.

*பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

*இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

*அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

*மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

* மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

* மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

* மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.

* சர்க்கரை ஒரு மடங்கு இனிப்பு சுவை உடையது.

* சாக்கரீன் 300 மடங்கு இனிப்பு சுவை உடையது.

* நாயை செல்லப் பிராணியாக முதன்முதலில் வளர்த்தவர்கள் ரோமானியர்கள் தான்.

* இந்தியாவைப் போலவே ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திரமடைந்த இன்னொரு ஆசிய நாடு தென்கொரியா.

* அரிமா சங்கத்தை தோற்றுவித்தவர் மெல்வின் ஜோன்ஸ்

* இந்திய தேசியக் கீதம் பாடி முடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 52 விநாடிகள்.

* தில்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகராக இருந்த நகரம் கொல்கத்தா.

* 1969-ம் ஆண்டில் தமிழ், தமிழ்நாட்டின் அரசாங்க மொழியாக ஆக்கப்பட்டது.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1999-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு பேருந்த பயணத்தை தொடங்கி வைத்தார்.

*கங்காரு கால்களால் சண்டை போடும்.

* உகாரி என்ற வகை குரங்கு கைகளைக் கட்டிக் கொண்டு நடக்கும்.
* மண் புழுவுக்கு கண்கள் கிடையாது.

* குக்குபெர்ரா என்ற பறவை சிரிக்கும்.

* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.

* எள்ளின் விதை ஒரு கிராமில் 230-ல் ஒரு பங்கு இருக்கும்.

* இந்தியாவில் முதல் மின்சார ரயில் 1925-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் பம்பாய் வி.டி.யில் இருந்து குர்லா வரை (16 கி.மீ. தூரம்) இயக்கப்பட்டது.

* மிகப் பெரிய ரயில்வே பிளாட்பாரம் உத்தரபிரதேசத்தில் உள்ள காரக்பூரில் உள்ளது. இதன் நீளம் 2,733 அடி.

* மிக நீளமான குகை ரயில்பாதை குஜராத்தில் உள்ள மங்கி மில்லுக்கும், காண்ட்லா ரயில் நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2,100 மீட்டர் ஆகும்.

* அதிகமான குகைகள் உள்ள ரயில் பாதை கல்கத்தாவில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் ரயில் பாதையாகும். இந்த வழித்தடத்தில் 102 குகைகள் உள்ளன.

* மெட்ரோ ரயில் 1984, அக்டோபர் 24-ம் தேதி கொல்கத்தாவில் விடப்பட்டது.

* பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலை 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பெரிய, ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும்.

* பாம்புகளின் கண்களுக்கு இமைகள் கிடையாது. இதனால் தான் பாம்பு தூங்கும் போது கண் விழித்திருப்பது போலத் தோன்றும்.

* ஆப்பிரிக்காவில் வாழும் விஷமில்லாத ஒருவித பாம்பினம் வெறும் முட்டையை மட்டும் உண்டு உயிர் வாழ்கிறது.

* அயர்லாந்து, நியூசிலாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.

* நீரிலும், நீர்நிலைகளின் அருகிலும் வாழும் ஆமைகள் டர்ட்டில் என்றும், நிலப்பரப்பில் வாழும் ஆமைகள் டார்ட்டாய்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

* பாலைவனத்திலும், குளிர்ப்பிரதேசங்களிலும் எலிகள் வாழ்வதில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:28 am

* இந்தியாவில் 139 சிறிய துறைமுகங்களும், 11 பெரிய துறைமுகங்களும் இருக்கின்றன.

* கலிபோர்னியாவில் "ரெட் உட்' ரகத்தில் உள்ள மரங்கள் எல்லாம் 2,000-ம் ஆண்டு பழமையானவை.

* சைக்கிளில் மொத்தம் 1,430 பாகங்கள் உள்ளன.

ஒரு மின்னலின் நீளம் 6 கி.மீட்டர். சிறுத்தைப் புலி மணிக்கு 90 கி.மீ.ஓடும்.

*தேனீக்களுக்கு 4 கண்கள் உள் ளன.

*மூக்கில் பல் கொண்ட உயிரினம் முதலை.

*சீன மொழியில் மொத்தம் 1500 எழுத்துக்கள் உள்ளன.

*யானை தினமும் இரண்டு மணிநேரம்தான் தூங்கும்.

*மலேரியா என்பதன் பொருள் சுத்தமற்ற காற்று என்பதாகும்.

*தபால் பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் உலகில் முதன் முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.

*நாம் வாழ்ந்து வருகிற நிலத்திற்கு கீழே 30 மைல் போனால் அப்போது அங்குள்ள வெப்பம் 1,200 சென்டிகிரேட் ஆக இருக்கும். இது மிகக் கடினமான பாறைகளைக் கூட உருகச் செய்யக் கூடிய வெப்ப அளவாகும்.

*ஒட்டுமொத்தமாக ஒருங்கே கூடி கூட்டம் கூட்டமாக வாழும் பூச்சிகள்: கறையான், குளவி, எறும்பு, தேனீ.

*மனிதப் பிறவியில் இரண்டு முறை மட்டுமே பற்கள் முளைக்கும். முதல் முறை குழந்தைப் பருவமாக இருக்கும்போது 20 பால் பற்கள் முளைக் கின்றன. அவை அறவே முழுவதும் விழுந்த பின்பு மீண்டும் 32 பற்கள் முளைக்கின்றன.

*நமது உடலில் ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்கள். ரத்தக் குழாய்களுக்குள் செல் லும்போது அதனுடையவேகம் மணிக்கு 65 கி.மீ. ரத்தத்தில் அடங்கியுள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோ குளோபின் என்னும் ரசாயனப் பொருள் உள்ளது. இதுதான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது.

*யானைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கூட அடிக்கடி தனது காதுகளை அசைக்கும். மிகவும் கோபமாக உள்ள நேரங்களில் மட்டும் யானை கள் தமது முறம் போன்ற காதுகளை அசைக்காமல் கழுத்தோடு ஒட்டி வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கும்.

*தூண்டில் மீன் என்று பெயர் பெற்ற ஒரு வகை மீன் சமுத்திரத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படும். இது மிகவும் தந்திரசாலி. இதன் வாயைச் சுற்றிலும் எப்போதும் அசைந்தபடியே இருக்கும் சிம்புகள் உண்டு. அவற்றை சிறு புழுக்கள் என்று நம்பி, வேறு சில சிறு மீன்கள் தின்பதற்காக அருகில் செல்லும்போது தூண்டில் மீன்களுக்கு அவை இரையாகி விடுகின்றன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:29 am

*அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில்தான் முதன்முதலில் அச்சுக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. முதல் செய்தித் தாளும் இங்குதான் தொடங்கப்பட்டது. முதல் பள்ளிக் கூடமும், கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டன. இங்குள்ள "மான்யுமென்ட் ஹில்' என்ற இடத்தில்தான் பிரிட்டிஷாரை எதிர்த்து முதல் சுதந்திர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

* பசிபிக் கடலில் உள்ள மெரியானாட் என்ற இடம்தான் உலகின் மிக ஆழமான கடல் பகுதி. இதன் ஆழம் 35,808 அடி.

*சுமத்ரா தீவில் பேடோசை பிரிள்ஃபிஷ் என்ற மீன் உள்ளது. இது 79 மில்லி மீட்டர் நீளமே உள்ளது. உலகிலேயே முதுகெலும்பு உள்ள மீனினங்களில் மிகவும் சிறிய மீனாகும் இது. சாதாரண காடித் தன்மையை விட 100 மடங்கு அதிகக் காடித் தன்மையுள்ள சேற்றுத் தண்ணீரில் தான் இது வாழ்கிறது.

* வீடுகளுக்கு எண்கள் இடும் வழக்கம் முதன்முதலில் பாரிஸில் 1493-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* மகாத்மா காந்தியின் உருவப் படத்தை முதன்முதலில் தபால் தலையாக வெளியிட்ட நாடு அமெரிக்கா.

* முதன்முதலில் தனது 119-வது வயதில் திருமணம் செய்து கொண்டவர் வல்டெமிரா சில்வா. பிரேசிலின் ரியோடி ஜெனிரோவைச் சேர்ந்தவர்.

* பாக்கெட் கடிகாரங்கள் முதன்முதலில் உபயோகத்திற்கு வந்து போது அளவில் பெரியதாக இருந்ததாம். அந்த பாக்கெட் கடிகாரங்களை அவற்றின் சொந்தக்காரர்கள் சுமக்க முடியாமல் வேலையாட்களை அமர்த்தி உடன் கொண்டு வரச் செய்வார்களாம்.

*ஆப்கானிஸ்தானில் 1981-ம் ஆண்டு வரை கடிதங்களில் முத்திரை குத்தும் பழக்கம் மேற்கொள்ளப்படவில்லை. கடிதங்களின் ஓரங்களைப் பற்களால் கடித்து பல் முத்திரை பதித்து அனுப்பி வைத்தார்கள். இதற்கென்றே தனியாகத் தபால் கடியர்களை அந்நாட்டு தபால் துறை நியமித்து வந்தது.

* முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் தொடர்ந்து 12 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்.

* 1929-ம் ஆண்டு முதன்முதலில் விமான கடிதப் போக்குவரத்தை நிறுவியவர் ஜே.ஆர்.டி.டாட்டா.

* பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குடும்ப வறுமை காரணமாக 38 ஆண்டுகள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க டீயே குடிக்காமல் இருந்துள்ளார்.

* இந்தியாவில் முதன்முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் ராஜாஜி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:30 am

* தவளை இனங்களில் மிகப் பெரியவை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள "கோலியாத்' என்ற இனமாகும். இவற்றின் நீளம் 72 செ.மீ. (இரண்டரை அடி).

* தேனீக்களுக்கு மொத்தம் ஐந்து கண்கள். தலையின் உச்சியில் மூன்று கண்களும், முன்பக்கத்தில் இரண்டு கண்களும் அமைந்துள்ளன.

* பாலூட்டிகளில் மிகவும் சிறிய இதயமுள்ள விலங்கு சிங்கம்.

* தொலைக்காட்சி 1926-ம் ஆண்டு கண்டு
பிடிக்கப்பட்டது.

* உலகில் சுமார் 2,700 வகை கொசுக்கள் உண்டு.

* நம் நாட்டின் தேசிய மரம் ஆலமரம்.

* யானை தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கும்.

* புலி ஒரு நாளைக்கு சராசரியாக 18 மணி நேரம் தூங்கும்.

*சீனாவிலுள்ள மஞ்சள் ஆற்றின் வட மேற்கு பகுதியில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய நூடுல்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தான் உலகிலேயே மிகப் பழமையான நூடுல்ஸ் ஆகும்.

*லாலுகேலு ஷெர்பா என்பவர் எவரெஸ்ட் மலையேறுவதில் ஒரு புதிய சாதனை படைத்தார். கடந்த 2003ம் வருடம் மே மாதம் 26ம் தேதியன்று மலையேறுவதை ஆரம்பித்து 10 மணி 56 நிமிடம் 46 செகண்ட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தில் பயணத்தை தொடங்கி எவரெஸ்ட் மலை உச்சியை அதிவேகமாக ஏறி சாதனை படைத்துள்ளார்.

* நீந்தத் தெரியாத மிருகம் ஒட்டகம்.

* உலகிலேயே உயரத்தில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து.

* குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி பிட்யூட்டரி.

* மேட்டூர் அணையின் வேறு பெயர் ஸ்டான்லி அணை.

* தீப நகரம் என்றழைக்கப்படும் நகரம் மைசூர்.

* "இமாலயா' என்ற வார்த்தையின் அர்த்தம் பனியின் இருப்பிடம் என்பதாகும்.

* திருவனந்தபுரத்தில் உள்ள விலங்கியல் பூங்காதான் இந்தியாவிலுள்ள மிகப் பழமையான விலங்கியல்
பூங்காவாகும்.

* இந்தியாவில் உள்ள மிகப் பெரிய குகை ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையாகும்.

* இந்தியாவில் வெளிவரும் மிகப் பழமையான பத்திரிகை "பாம்பே சமாச்சார்.'

* உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடா.

* சீனப் பெருஞ்சுவரின் நீளம் 3,480 கி.மீ.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:32 am

* 1918-ம் ஆண்டில் 11-வது மாதம், 11-வது நாள், 11 மணிக்கு முதல் உலகப் போர் முடிந்தது.

* பிரான்சு நாட்டில் ஒரு ரயில் பெட்டியில் ஜெர்மனி பிரதிநிதிகள் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

* பாம்பைப் போன்று நண்டு தனது ஆயுள் காலத்தில் 18 முறை சட்டை உரிக்கிறது.

* கஸ்தூரி மான்களுக்குக் கொம்புகள் கிடையாது. அதற்குப் பதிலாக இரண்டு நீண்ட கூர்மையான பற்கள் போன்ற அமைப்பில் அவை இருக்கும்.

* நாட்டின் "பள்ளித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் டேராடூன்.

* மகாத்மா காந்தி இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் படைத்தவர்.

*நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க 2,857 மணி 8 நிமிடம் 33 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது.

*கொக்கு தன் ஜோடியை இழந்து விட்டால் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கடைசி வரை வேறு துணையை தேடுவதே இல்லை.

*ஒரு பெரிய மரத்திற்கு மயக்க மருந்து கொடுத்து அதை வேருடன் பெயர்த்து வேறிடத்தில் நட்டு வளர்த்துக் காட்டி சாதனை புரிந்தவர் நமது விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ்.

*ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.

*மேற்கு மலைத் தொடரில் 1,200 கி.மீ உயரத்தில் அரு கருகே, துங்கா, பத்ரா என்று ஆறுகள் உற்பத்தியாகி தனித் தனியாக பாய்கின்றன. வெகுதூரம் சென்று இவை கூடலி என்ற இடத்தில் ஒன்று சேர்கின்றன. அந்த இடத்தி லிருந்துதான் இந்த ஒரே ஆற்றுக்கு துங்க பத்ரா என்று பெயர்.

*இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு சின் என்ற மாநிலம் இருந்தது. இதை கி.மு.221-ல் ஆண்டு வந்த செங் என்ற மன்னன் 6 எதிரி நாடுகளை வென்று தனது மாநிலத்தோடு இணைத்துக் கொண்டான். இதுவே சீனாவாக விரிவானது.

*கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

*உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.

*சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:33 am

*பெரியோப்தாலஸ் என்ற மீனுக்கு மற்ற மீன்களுக்கு இல்லாத சிறப்பியல்பு உள்ளது. இது தன்னுடைய வால் பகுதி மூலமாகக் கூட சுவாசிக்கிறது. நீரில் உள்ள ஆக்ஸிஜனை வால் பகுதியிலுள்ள ரத்தக் குழாய்களின் மூலமாக உறிஞ்சி மூச்சு விடுகிறது.

*ஜெல்லி மீன், மீன் இனங்களிலேயே சிறப்பான தோற்றம் கொண்டது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாய்த் தோற்றமளிக்கும். ஜெல்லி மீனின் வெளிப்புறம் நீண்டிருக்கும் வால் போன்ற பகுதிகளுக்கு "டென்டக்கிள்ஸ்' என்று பெயர். இந்த டென்டக்கிள்கள் ஜெல்லி மீன் தனது இரையைப் பிடிக்க உதவுகின்றன. சில வகை ஜெல்லி மீன்களின் டென்டக்கிள்கள் கொடிய விஷம் கொண்டவை. இவை மனிதனைத் தாக்கினால் 3 நிமிடங்களில் மரணம் ஏற்பட்டுவிடும். இந்த மீன்கள் ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

*போக்குவரத்து விதிகளை உருவாக்கியவர் வில்லியம் பெல்ப்ஸ் ஈனோ என்பவர். போக்குவரத்து விதிகளை உருவாக்கியிருந்தும், அவருக்கு கார் ஓட்ட தெரியாது. வெளியில் செல்ல ஓட்டுநரின் உதவியைத் தான் நாடுவார். முதன் முதலில் 1903ம் ஆண்டு இவர் உருவாக்கியபோக்குவரத்து விதிகள் நியூயார்க், லண்டன் மற்றும் பாரீஸ் நகரில் அமுல்படுத்தப்பட்டன. "நில்' சிக்னலை கண்டுபிடித்தவரும் இவரே!

*"ஆர்ச்சி' என்பது தான் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட சர்ச் இன்ஜினாகும். இதை1990ம் ஆண்டு மாண்டிரியாவிலுள்ள மெக்கில் பல்களைக் கழக மாணவரான ஆலென் எம்டேஜ் என்பவர் கண்டுபிடித்தார். பிறகு லேரிபேஜ் மற்றும் செர்ஜி ஜோடியால் தான் கூகுல் சர்ச் இன்ஜின் கண்டுபிடிக்கப்பட்டு 1997ல் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

*அர்ஜென்டினா நாட்டின் அருகேயுள்ள பாக்லாந்து தீவில் 2 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கிறார்கள். ஆனால் இந்த தீவில் 7 லட்சம் கம் பளி ஆடுகள் உள்ளன. அதாவது ஒருவருக்கு 350 கம்பளி ஆடுகள் என்று விகிதத்தில் உள்ளன.

*நியூசிலாந்து நாட்டில் ஒருவருக்கு நான்கு கம்பளி ஆடுகள் இருக் கின்றன.

* பிரேசில் உலக கோப்பையை அதிக தடவை வென்றதில் முதலிடம்.

* பிரேசில் உலகில் அதிக கிறிஸ்தவ மக்கள் தொகையை கொண்ட 2-வது நாடு.

* பிரேசில் அதிகமான போக்குவரத்து சாலை வசதி ஒருங்கிணைப்பு கொண்ட நாடுகளில் பிரேசிலுக்கு மூன்றாமிடம்.

* பிரேசில் அதிகமான பத்திரிகைகளை வெளியிடுவதில் பிரேசிலுக்கு நான்காம் இடம்.

* பிரேசில் உலகின் மிகப் பெரிய ஐந்தாவது நாடு.

* அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் வெறும் கைகளில் மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று சட்டமே உள்ளது.

* 55 சதவீத அமெரிக்கர்களுக்கு மட்டுமே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது தெரியும்.

* வருடத்திற்கு விமானத்தில் மோதி இறந்து போகும் பறவைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கும் அதிகம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:34 am

* ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும்போது வலது கையை விட இடது கைக்குத்தான் அதிக வேலை இருக்கிறது.

* அமெரிக்காவின் தற்போதைய டென்னிசி மாகாணம் 1796-ம் ஆண்டுக்கு முன்பு வரை பிராங்க்ளின் என்றே அழைக்கப்பட்டது.

* தென் அமெரிக்க கண்டத்தில் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட ஒரே நாடு, கயானாதான். இந்த உலகில் 5 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.

* பண்ணையே இல்லாத மிகப் பெரிய நாடு சிங்கப்பூர்தான். பண்ணை இல்லாத மிகச் சிறிய நாடுகள் வாடிகன் சிட்டி, மோனாகோ, நவ்ரு ஆகியவை.

*ஒட்டக சிவங்கி தனது 1 அடி நீள நாக்கைக் கொண்டு தனது காதுகளை சுத்தம் செய்து கொள்ளும். ஒட்டகச் சிவங்கிகளுக்கு மனிதர்களைப் போல் குரல் பெட்டி கிடையாது.

*உலகம் முழுவதும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவதற்காக நிமிடத்திற்கு 40 பேர் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள். நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியர்கள்தான்.

*கிரேக்க நாட்டு தேசிய கீதம்தான் மிகப் பெரியது. அந்நாட்டின் தேசிய கீதம் முழுமையாக அந்நாட்டு மக்களுக்குத் தெரியாது. காரணம் அந்த தேசிய கீதம் 158 வரிகளைக் கொண்டதாகும்.

1. அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.

2. கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா

3. அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹிï

4. புனிதர் பட்டத்தை 2003-ம் ஆண்டு அன்னை தெரசாவிற்கு அளித்தவர் யார்? - போப் இரண்டாம் ஜான் பால்

5. தமிழ்நாட்டிற்கு அன்னை தெரசாவை அழைத்து வந்து அவரது பெயரில் பல்கலைக்கழத்தைத் தொடங்கிய முதல்-அமைச்சர்? - எம்.ஜி.ஆர்.

6. மெடல் ஆப் பிரீடம் என்னும் விருதை அன்னை தெரசாவிற்கு வழங்கிய அமெரிக்க அதிபர்? - ரொனால்டு ரீகன்.

7. தனது எத்தனையாவது வயதில் அன்னை தெரசா சமூக சேவைக்கு வந்தார்? - 18-வது வயதில்.

8. இந்தியாவில் உயிருடன் இருக்கும்போதே தபால் தலையில் இடம் பிடித்த முதல் இந்தியர்? - அன்னை தெரசா.

9. அன்னை தெரசாவை அன்புடன் எந்தப் பெயரில் அழைத்தார்கள்? - கருணை தேவதை.

10. எந்த ஆண்டு அன்னை தெரசாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது? - 1979-ம் ஆண்டு.

11.இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது எந்த ஆண்டு அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது? - 1980-ம் ஆண்டு.

12. தனிப்பட்ட முறையில் சமூகசேவை அமைப்பை அமைத்துக் கொள்ள வாடிகனிலிருந்து அன்னை தெரசாவிற்கு அனுமதி கிடைத்தது? -1950-ம் ஆண்டு.

13. அன்னை தெரசா மரணமடைந்தபோது எத்தனை நாடுகளில் அவரது சமூக சேவை அமைப்பு இருந்தது? - 123 நாடுகளில்.

14. அன்னை தெரசா தினம் அல்பேனியா நாட்டில் எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது தெரியுமா? - அக்டோபர் 19-ந்தேதி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:36 am

* மேற்கு ஜெர்மனியில் ஹைடிரேட்லர் என்ற மருந்தை பூந்தொட்டியில் போட்டு அந்தத் தொட்டியை மூன்று நாட்களுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு மூடி விடுவார்கள். அவ்வாறு செய்வதால் பூக்களின் இதழ்களிலுள்ள ஈரப்பசை உறிஞ்சப்பட்டு நீண்ட நாட்கள் வாடாமல், நறுமணத்தோடும், அழகாகவும் காட்சியளிக்கும்.

* லண்டனில் டாக்டர் ரேமான்ட் லாங்க் என்பவர் நாய்களுக்காக ரத்த சேமிப்பு நிலையத்தைத் தொடங்கி வைத்தார். நல்ல ஆரோக்கியமான நாய்களின் ரத்தத்தை இங்கே சேமித்து வைக்கிறார்கள். ரத்த தானம் செய்யும் நாய் குறைந்தபட்சம் 50 பவுண்ட் எடை கொண்டிருக்க வேண்டும்.

* இஞ்சியின் தாயகம் இந்தியா.

* தாய்லாந்து நாட்டு மக்கள் தேள்களை வறுத்துச் சாப்பிடுவார்கள்.

* தென்னாப்பிரிக்காவை பறவைகளின் கண்டம் என்று குறிப்பிடுகின்றனர்.

* வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு, பக்கவாதம் தடுக்கப்படலாம்.

* ரூவாண்டா நாட்டு ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் உயரம் இருப்பர். பெண்களின் சராசரி உயரம் ஐந்தடி பத்து அங்குலம்.

* வாலைத் துண்டித்து மீண்டும் வளரச் செய்து கொள்ளும் பிராணி பல்லி.

* சங்கு என்பது ஒரு வகை கடல் உயிரினத்தின் ஓடு.

* யானையைப் பிடிக்கும் வேட்டைக்கு "கெத்தா' என்று பெயர்.

* குதிரை முன்னங்கால்களை முதலில் ஊன்றி எழுந்திருக்கும். பசு பின்னங்கால்களை முதலில் ஊன்றி எழுந்திருக்கும்.

* நிலத்தில் வாழும் மிகப் பெரிய மிருகம் ஆப்பிரிக்க யானை. சராசரி உயரம் பத்தரை அடி. அதன் சராசரி எடை ஆறரை டன்.

* ஒட்டகம் சுமார் 600 ராத்தல் எடையைச் சுமக்கும்.

* சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா கண்டம் பேரிங் ஜலசந்தியில் பூமிப் பாலம் ஒன்றினால் ஆசியக் கண்டத்தோடு இணைந்திருந்தது.

* செக்கோஸ்லாவியா நாட்டில் குகைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகாலத்து மனிதர்கள் டைனோசர்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை உணவாக உட்கொண்டனர்.

* பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எருமைகளின் ஜல்லிக் கட்டு ஓவியம் ஒன்று, பிரான்ஸ் நாட்டு லாஸ்காக்ஸ் என்னுமிடத்தில் குகை ஒன்றின் சுவரில் வரையப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* ஒலிம்பிக் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஐந்து வளையங்கள் ஐந்து வண்ணங்களில் இருக்கின்றன. நீல வளையம் ஐரோப்பாவையும், மஞ்சள் வளையம் ஆசியாவையும், கருப்பு வளையம் அமெரிக்காவையும், சிவப்பு வளையம் ஆஸ்திரேலியாவையும் குறிக்கின்றன.

* அமெரிக்காவில் பல மாகாணங்களில் நீதிபதிகள் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தலில் வென்ற நீதிபதிகளின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.

* தொழிலாளர் போராட்டங்கள் குறைவாக உள்ள நாடு சுவிட்சர்லாந்து.

* அமெரிக்காவின் அடிமை முறையைத் தடை செய்த அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:36 am

* ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாகக் கொண்டாடும் பழக்கம் முதன் முதலில் இங்கிலாந்தில் தோன்றியது.

* வெட்டுக்கிளிகளுக்குக் கால்கள் உண்டு. ஆனால், அவற்றுக்கு நடக்கத் தெரியாது.

* ஒட்டகத்துக்கு எவ்வளவு பசியெடுத்தாலும் மாலை 6 மணியில் இருந்து விடியும் வரை சாப்பிடாது.

* நாள் ஒன்றுக்கு ஒரு யானை 200 கிலோ அளவு வரையுள்ள உணவை உண்ணும்.

* இந்தியாவில் எரிமலை இல்லை.

* கடல் விலங்குகளில் வேகமாக நகரக் கூடியது திமிங்கலம்.

* உலகில் பூனைகள் அதிகம் உள்ள நாடு இங்கிலாந்து.

* கரடி இனத்திலேயே மிகச் சிறியது மலேயா சூரியக் கரடியாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

* உலகிலேயே மிகப் பெரிய மணி ரஷ்யாவில் உள்ள கிரெம்ளினில் உள்ளது. இதன் எடை 193 டன் ஆகும்.

* பூமியின் மொத்தப் பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது.

* இந்தியாவில் பெய்யும் மழையில் 10 சதவீதம்தான் மனித தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

* உலகில் உள்ள மொத்த நன்னீரில் இரண்டு சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது.

* மனிதன் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ஒரு சதவீதம் தான்.

* கடற்பஞ்சு என்பது ஒரு வகைக் கடற் பிராணியின் ஓடு. கடற்பஞ்சு கடல் ஆழத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

* ஆண்டு தோறும் நவம்பர் 11-ம் தேதி உலகப் போர் நிறைவடைந்த நாளை நினைவுக் கூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

* உலகில் பழைய சிவன்கோயில் அமெரிக்காவில் கொலராடோ என்னும் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள பீடபூமியில் உள்ளது.

* அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர் வீழ்ச்சியின் உயரம் 160 அடி ஆகும்.

* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைக் காட்டிலும் இரு மடங்கு நீளமானது.

* உலகிலேயே உயரமான புல் வகை மூங்கில்.

* தந்தம் என்பது யானையின் அதிகப்படியாக வளர்ந்த முன் பல்லாகும்.

* கரையானின் ரத்தத்தின் நிறம் வெண்மை.
* கிவி பறவைக்கு இறக்கைகள் கிடையாது. அதனால் பறக்க இயலாது.

* இரண்டாம் உலகப் போரில் 51 நாடுகள் போரிட்டன. ஆனால், கனடா மட்டும் போரில் கலந்து கொள்ளவே இல்லை.

* வானவில் எப்பொழுதும் காலை அல்லது மாலை நேரங்களில்தான் தோன்றும். ஆனால், எந்நேரமும் வானவில் தோன்றக் கூடிய இடம் நயாகரா நீர்வீழ்ச்சி.

* இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட உலோகப் பற்றாக்குறையினால் ஆஸ்கர் விருதுகள் மரத்தினால் செய்து வழங்கப்பட்டன.

* காபி பானத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் அபிசீனியர்கள்.

* கொரில்லா குரங்குகள் நிறைய பழங்கள் சாப்பிடுவதால் தண்ணீர் அதிகம் குடிக்காது.

* பெண் குளவிகளுக்கு மட்டுமே கொடுக்கு உள்ளது.

* இந்தியாவில் 14-ம் நூற்றாண்டில் தான் காகிதம் உபயோகத்துக்கு வந்தது.

* நைஜீரியாவில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அதை அபசகுனமாகக் கருதுகிறார்கள்.

* ஜப்பானியர்கள் 4, 9 ஆகிய இரண்டு எண்களையும் அதிர்ஷ்டமில்லாதவை என நம்புகிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:37 am

*உலகில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா.

*பசும் பாலை விட ஒட்டகப் பாலில் சத்துக்கள் அதிகம்.

*சிங்கத்தின் பாலை தங்க கிண்ணத்தை தவிர வேறு எதில் வைத்தாலும் கெட்டுவிடும்.

*யாக் எருமையின் பால் ஊதா நிறத்தில் இருக்கும்.

*ஒட்டகத்தின் பால் கறந்தவுடன் கெட்டியாகி விடும்.

*பண்டைய காலத்தில் கிரேக்க நாட்டில் பல் துலக்கி வாய் கொப்பளிக்க கழுதைப் பாலைப் பயன்படுத்தினார்கள்.

*ரப்பர் மரத்திலிருந்து வடியும் பாலுக்கு லேட்டக்ஸ் என்று பெயர்.

*முற்றாத நெல் மணிகளை நசுக்கினால் பால் வரும். அந்தப் பால்தான் புறாக்குஞ்சுகளின் உணவு.

*பாலின் சுத்தத் தன்மையை அறிய உதவும் கருவி லேக்டோ மீட்டர்.

*பாலைக் தயிராக்க உதவும் பாக்டீரியாவின் பெயர் பாசில்லஸ்.

***
*எண்களில் 12 என்பதற்கு தனிச் சிறப்பு உண்டு. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள், ராசிகள் 12, ஒரு டஜன் என்பதற்கு எண்ணிக்கை 12 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். புத்தரின் சீடர் களும் 12 பேர் ஆவர்.
***
*முதலைக்கு 68 பற்கள் இருக்கும். அதன் வாயில் எந்த உயிரினம் பிடிபட்டாலும் பிரித்து எடுக்க முடியாது. இதற்குக் காரணம் அதன் பற்கள் வரிசையாக ஒழுங்கான அமைப்பில் இல்லை.

***

*உழவனின் நண்பன் என்றழைக்கப்படும் மண்புழு ஒரு ஏக்கர் நிலத்தில் 10 லட்சம் அளவிற்கு இருக்கும். இந்த மண்புழுக்கள் வருடத்திற்கு 18 டன் மண்ணை விழுங்கித் துப்புகின்றன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:38 am

*வட அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டனியோ நகரில் வசிப்பவர் ஜெரால்ட் ஹானோஸ். இவர் உலகில் உள்ள பல்வேறு கம்பெனிகளின் சவர பிளேடுகளை சேகரித்து வைத்துள்ளார். உலகிலுள்ள கிட்டத்தட்ட 6 ஆயிரம் கம்பெனி பிளேடுகள் இவரிடம் உள்ளன. இதை வைத்து அடிக்கடி இவர் கண்காட்சியும் நடத்துகிறார்.

*சுவிட்சர்லாந்தில் உள்ள லுகானோ என்னுமிடத்தில் சிறிய பரப்பளவு இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள் பார்த்து முடிக்கக் கூடிய மினி சுவிட்சர்லாந்தை உருவாக்கி இருக்கிறார்கள். `சுவிஸ் மினியேச்சர்' என்றழைக்கப்படும் இந்த இடத்தில் அந் நாட்டின் ஒவ்வொரு நகரத்தினுடைய அமைப்பும் உண்டு. ஒவ் வொரு கோடையின் போது ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த மினி சுவிட்சர்லாந்தை பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

*முராட்கான் என்பவன் முன்பு பாகிஸ்தானின் ராவல்பிண்டியை ஆட்சி செய்தவன். இவனிடம் வினோத பழக்கம் உண்டு. தன் னிடம் பிச்சை கேட்டு வருபவர்களுக்கு லட்ச ரூபாய் மதிப் பிற்கு இணையான பணம் அல்லது மரணம் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் பரிசாகக் கொடுப்பான். கையில் பணம் இல்லாத நேரத்தில் யாராவது வந்து கேட்டால் அவர்களைக் கொன்று விடுவான். இல்லை என்று சொல்ல மனம் வராததே இதற்குக் காரணம்.

*அமெரிக்காவின் மிசிசிபி நதிக்கரையில் ஒரு பழங்காலத்து சுக்கான் பாறையில் மனிதனின் காலடித் தடங்கள் சுவடுகளாகப் பதிந்திருந்ததை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்தனர். அந்த பாறையை ஆராய்ச்சி செய்தபோது 27 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் காலடித்தடம் அது என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மனித காலடித்தடம் ஒரு அடி நீளம் கொண்டதாக இருந்தது.

*தெற்கு லண்டன் நகரில் நாய்களுக்கென்று விசேஷ பிஸ்கட்டுகளைத் தயாரிக் கிறார்கள். இந்த பிஸ்கெட்டுகள் பெரும்பாலும் தபால்காரரைப் போன்ற வடிவில் தயாரிக் கப்படுகிறது. இந்த பிஸ்கெட்டை நாய்கள் விரும்பிச் சாப்பிடுகின்றன என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

தபால்காரர் வடிவ பிஸ்கெட்டை நாய்கள் விரும்புவதன் ரகசியம்தான் என்ன?...தபால்காரர் வீட்டுக்குள் வருவதை பொதுவாக வீட்டின் உரிமையாளர் யாரும் விரும்ப மாட்டார்கள். தபாலை வாசலிலேயே வாங்கிக் கொண்டு அனுப்பிவிடுவதுதான் உலகம் முழுவதும் உள்ள வழக்கமாக இருக்கிறது.

இதனால்தான், வீட்டின் எஜமானர்கள் போலவே நாய்களும் தபால்காரர்களை தங்களுக்கு ஆகாதவர்கள் என்று நினைக்கின்றனவாம். இதனால்தான், தபால்காரரை கடிப்பதாக நினைத்து அவர்களின் வடிவில் தயாரான பிஸ்கெட்டுகளை நாய்கள் விரும்பிச் சுவைக்கின்றனவாம்.

===============================

*ஒரு பூசணிக்காய் எவ்வளவு பெரியதாக வளரும். ஆங்கில மழலையர் பாடலில் பீட்டர் என்பவன், தனது மனைவியை ஒரு பூசணிக்காய் கூட்டுக்குள் வைத்து சுமந்து செல்வதாக வரும். அதாவது அந்த அளவிற்கு பூசணிக்காய் பெரிதாக இருக்கும் என்பது கற்பனை.
ஆனால் உண்மையிலேயே ஒரு பூசணிக்காய் எவ்வளவு பெரிதாக இருக்கும் தெரியுமா?...அமெரிக்காவின் ரோடேத் தீவைச் சேர்ந்த ரான் வாலஸ் என் பவர் தனது தோட்டத்தில் வளர்த்த ஒரு பூசணி 682 கிலோ எடை இருந்தது. இதுதான் உலகின் மிகப் பெரிய பூசணிக்காய் என்ற பெயரை உலக சாதனைப் புத்தகத்தில் பதித்துள்ளது.



*கார் ஓட்டப் பழகியவர்கள் சோதனை ஓட்டத்தின் போது முதல் தடவையிலேயே தங்களது ஓட்டும் திறனைக் காண்பித்து ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடுவார்கள். ஒரு சிலர் அல்லது இரண்டு மூன்றாவது முயற்சியில் வெற்றிபெறுவார்கள். ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண்ணான கீத் கவுர் ரந்தவா என்பவர், தனது 48-வது டிரைவிங் டெஸ்ட்டின்போதுதான் தேர்ச்சி பெற்றார். இதற்காக அவர் 330 தடவை பாடம் படிக்கவேண்டியிருந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:39 am

* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது.

* நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் அளித்திருக்கின்றன.

*கம்பளங்களுக்கான மியூசியமொன்று துருக்மெனிஸ்தான் தலைநகரான ஆஸ்க்ஷாபாத்தில் அமைந்துள்ளது. இங்கு உலகிலேயே மிக அரிய மற்றும் தொன்மையான கம்பளங்கள் உள்ளன. 15-ம் நூற்றாண்டு கம்பளங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப் பெரிய கம்பளமாக 11ஷ்20 ச.மீ. பரப்புக் கொண்ட கம்பளமும் இங்கு உள்ளது.

* வெட்டுக் கிளியைப் பற்றிய குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவை கடவுள் மோசசுக்கு சொன்னது- "நீ உன் கையை வெட்டுக் கிளியின் நாடான எகிப்தை நோக்கி நீட்டு. அவை வந்து அங்குள்ள ஒவ்வொரு செடியையும் தின்று விடும். பசுமையான ஒன்று கூட மிச்சம் இராது. அனைத்து மரங்களிலும் உள்ள பழங்கள், செடிகள், வயல்கள் எல்லாம் நாசமாகி வெட்டுக் கிளிகள் தீர்த்து விடும்' என்று ஒரு பகுதியில் உள்ளது.

* நிலத்தில் மின்மினிப் பூச்சியைத் தவிர ஒளி சிந்தும் வேறு பூச்சிகள் கிடையாது.

* ஜெருசலேம் என்றால் சொர்க்கத்தின் அமைதி என்று பெயர்.

* நோபல் பரிசும், பாரத ரத்னா விருதும் பெற்றவர் அன்னை தெரசா.

* நான்காம் மைசூர் யுத்தத்தில் உயிரிழந்தார் திப்பு சுல்தான்.

* எகிப்து நாட்டில் பருத்தியை வெள்ளைத் தங்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.
* புத்தர் மறைந்த இடம் குஷிநாகரா என்னும் ஊர்.

* உலகிலேயே மிகுதியான கால்நடைகளைக் கொண்ட நாடு நம் இந்தியா தான். இங்கு 27 கோடி கால்நடைகள் உள்ளன. உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவின் பங்கு 19 விழுக்காடாகும்.

* நமது பறவை வகைகளில் அதிக இந்தியப் பண்பு வாய்ந்தது மைனா தான். மைனாக்களில் பல வகை உண்டு அவை: சுதேசி மைனா, ஆற்று மைனா, ரோஜா மைனா, காட்டு மைனா, பிராமரி மைனா.
நம் வீடுகளில் வளர்க்கப்படுபவை காட்டு மைனாக்கள். இதற்கு வேறு குரல்களை அப்படியே காப்பியடிக்கும் திறமை உண்டு.
* தில்லியில் உள்ள இந்தியாகேட் சுவர்களில் 13,516 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

* உலகில் அதிகம் கிளைகள் உள்ள வங்கி என்ற பெருமை பாரத ஸ்டேட் வங்கிக்கு உண்டு.

* பாம்பைப் போல் பல்லியும் சட்டை உரிக்கும்.

* பறவைகள் இலந்தை மரத்தில் மட்டும் கூடு கட்டுவதில்லை.

* பைபிளில் பெண் என்ற வார்த்தை ஒரே ஒரு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* சீன மொழி டைப் ரைட்டரில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.

* சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தனி தேசிய மொழி கிடையாது.

* சினிமாவுக்காக முதன்முதலாக போஸ்டர் அடிக்கப்பட்ட படம் மாயா பஜார்.

*சிறுத்தைகள் தன்னை எதிர்க்கும் எந்த விலங்கையும் தாக்குவது கிடையாது. தன்னைக் கண்டு பயந்தோடும் விலங்குகளையே துரத்திச் சென்று வேட்டையாடும். பெண் சிறுத்தை வேட்டையாடப் போகும் போது குட்டிகளை அடர்ந்த புதர் மறைவில் தங்கவிட்டு தனித்துச் செல்லும். சிறுத்தையின் வேகம் மணிக்கு 100 கி.மீட்டர். ஆனால், அதே வேகத்தில் நீண்ட தூரம் ஓட முடியாது.

* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்தா பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.

* ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடும்.

* சுவீடன் நாட்டில் சைக்கிள்களுக்குப் பூட்டு கிடையாது. அங்கு யாரும் சைக்கிளைத் திருடுவதில்லை. சைக்கிள் கடையில் பூட்டுகள் விற்பனையும் கிடையாது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 2 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum