தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தகவல் களஞ்சியம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Mon Feb 24, 2014 12:02 pm

First topic message reminder :

* 16-ம் நூற்றாண்டில் தங்கம் அரிய ரசாயனப் பொருளாக இருந்துள்ளது.

* பிரமாண்ட உயிரினமான திமிங்கலத்தினால், பின்பக்கமாக நீச்சலடிக்க முடியாது.

* தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு கனவுகள் பெரும்பாலும் குறைவாகத்தான் வருமாம்.

* இங்கிலாந்தில் 1942-ம் ஆண்டில் எல்லா மக்களுக்கும் ரேஷன் முறையில் சோப் வினியோகம் செய்யப்பட்டது.

* உலக மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் சீனர்கள்.

* சுத்தமான உறைபனியைவிட, அசுத்த உறைபனி வெகுவேகமாக உருகியோடும்.

* 1896-ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஜான்சிபார் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் வெறும் 38 நிமிடங்களிலேயே முடிந்தது.

* சுவீடன் நாட்டில் சுமார் 40 சதவீத மக்களின் பெயர்கள் `ஷீஸீ' என்றே முடிகிறது.

* மிகப்பெரிய தீவுகளில் 8-வது இடத்தில் பிரிட்டன் உள்ளது.

* ஆண்களைவிட பெண்கள்தான் அதிக சத்தத்துடன் குறட்டை விடுகிறார்களாம்.

* நைட்டிங்கேல் பறவையில் ஆண் இனம் மட்டுமே பாடும் தன்மை கொண்டது.

* உலகிலேயே சீனாவில்தான் அதிகம் சைக்கிள்கள் உள்ளன. அங்குள்ள மொத்த சைக்கிள்களின் எண்ணிக்கை 21 கோடியை தாண்டி விட்டதாம்.

* அங்கேரி நாட்டில் அதிக அளவில் ஏற்றுமதியாகும் உயிரினம்? - நீர்யானை.

* `சாக் கடல்' என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒரு கடல் அல்ல; அது ஏரியாகும்.

* உலகில் அதிகமாக பார்வையற்றவர்களை கொண்ட நாடு? -
சீனா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:40 am

* உலக நாடுகள் அனைத்திலும் அதிகளவில் காணப்படும் பிராணி சுண்டெலி.

* பாலைவனத்திலும், குளிர்பிரதேசங்களிலும் எலிகள் வாழ்வதில்லை.

* ஐரோப்பாவில் உள்ள ஒரு வகை சுண்டெலி, ஆண்டின் 6 மாதங்கள் வரை தூங்கும்.

* உலகம் முழுவதும் சுமார் 1,600 வகை எலிகள் உள்ளன.

* விலங்கினங்களில் மிகவும் சுத்தமானது சுண்டெலிதான். அது, நிமிஷத்துக்கு மூன்று முறை தன் உடலைத் துடைத்துக் கொள்கிறது. இதனால், அது தன் ஆயுளில் பாதியைச் சுத்தம் செய்வதிலேயே செலவிடுகிறது.

* உலகிலேயே மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.

* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்.

* அமெரிக்க தேசிய கீதத்தில் 5 பாடல்கள் உள்ளன.

* இரண்டு மொழிகளில் தேசிய கீதம் உள்ள நாடு செக்கோஸ்லாவாகியா.

* நமது தேசிய கீதம் முதன்முதலில் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.

* அமெரிக்க தேசிய கீதத்தை இயற்றியவர் ஒரு ரஷ்யர்.

* பாலைவனச் சோலையை ஒயாஸிஸ் என்றழைப்பர்.
* ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தன் தாயாருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தார். தாயார் `கிளாராவின்' இரண்டாவது கணவருக்கு பிறந்தவர் இவர்.

* ஆக்ரோஷமான பேச்சினால் இத்தாலியை கைப்பற்றிய முசோலினியின் தாயார் பயந்த சுபாவமுடைய பள்ளி ஆசிரியை ஆவார். முசோலினியின் தந்தையோ இரும்பு பட்டறையில் தினக்கூலி தொழிலாளி.

* சதாம் உசேன் தன் வளர்ப்பு தந்தையின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு ஓடியவர்.

* இருபது வயது ராணுவ வீரனுக்கும் நாற்பது வயது சமையல்காரிக்கும் மகனாக இடி அமீன் பிறந்தார்.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

* பெஞ்சமின் பிராங்க்ளின் தன்னுடைய சிறு வயது பள்ளி படிப்பின்போது கணக்கில் பல தடவை பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்துள்ளார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:41 am

*சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் உள்ள கணக்கு பரம ரகசியமாக காக்கப்படுகிறது. தனி மனிதன் ஒருவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை எப்போதும் வெளியிடக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டம். அதனால்தான் பிற நாட்டவரும் சுவீஸ் நாட்டு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

* முதலாவது வான் புகைப்படம் அமெரிக்க உள் நாட்டுச் சண்டையின் போது பலூனில் இருந்து எடுக்கப்பட்டது.

* ஆங்கிலேய தத்துவ அறிஞர் ஜான்லாக் தென் கரோலினாவுக்கு அரசியல் சட்டம் வரைந்து கொடுத்தார்.

* கலிபோர்னியா மாநிலத்தில் பசிபிக் குரோவ் நகராட்சியின் 325-வது சட்ட பிரிவு வண்ணத்து பூச்சியை அச்சுறுத்துவதையும், கொல்வதையும் குற்றமாக்குகிறது.

*உலகம் முழுவதும் 100 கோடிப் பேர் நரம்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

*அண்மையில் பெங்களூரில் நான்கு நாட்களில் 1400 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

*2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கு 30,000 ஹோட்டல் அறைகள் தேவைப்படுகின்றன.

*ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்கள் 600 கோடி லிட்டர் குளிர்பானங்களை அருந்துகிறார்கள்.

*அண்மையில் தேசிய குடும்ப சுகாதார அமைப்பு எடுத்த ஒரு சர்வேயில் பீகார் மாநிலத்தில் 61 சதவீத குடும்ப பெண்கள் அடித்துக் கொடுமைப் படுத்தப் படுவது தெரியவந்துள்ளது.

*இங்கிலாந்தில் கடந்த 15 ஆண்டுகளில் மனநோயால் பாதிக்கப்படுபவர்கள் 38 சதவீதம் உயர்ந்துள்ளனர்.

*நமது நாட்டில் அரசாங்க ஆரம்ப பள்ளிக் கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 சதவீதம் பேர் ஒழுங்காக பள்ளிக்குச் (பணிக்கு) செல்வதில்லை என்று அண்மையில் உலக வங்கி எடுத்துள்ள ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது.

*நமது நாட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 371 பேர் வசிக்கிறார்கள். இது இந்த ஆண்டு 376 ஆக உயரும்.

*உணவிற்காக இந்தியர்கள் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 176 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் செலவிட்டிருக்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:42 am

*உலகிலேயே மகா முட்டாள் பறவை வான்கோழிதான். கடும் மழையில் நனைந்து வெள்ளத்தில் மூழ்குமே தவிர, பாதுகாப்பான இடம் நோக்கிப் போகாது. இன்னும் சில வான்கோழி இனங்களுக்கு எப்படிச் சாப்பிடுவது என்று கூடத் தெரியாது.

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

* வைரத்திற்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.

* காஷ்மீர் மாநில மக்களுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை உண்டு.

* காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் எவரும் ஒரு அடி கூட நிலம் வாங்க முடியாது.

* அமெரிக்காவில் ஒவ்வோர் அரைமணி நேரத்துக்கும் பன்னிரண்டு கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

* தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலம் பஞ்சாப்.

* இந்தியாவில் ஏழாயிரம் ரயில் நிலையங்கள் உள்ளன.

*அமெரிக்காவில் 15 கோடி பேர் சம்பாதிப்பதற்கு இணையான வருமானத்தை 3 லட்சம்பேர் சம்பாதித்து விடுகிறார்கள்.

*வெஸ்ட் இண்டீசின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக சீனா 600 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறது.

*நமது நாட்டில் 22 கோடியே 70 லட்சம் பேர் கைவினைத் தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.

*சமீபத்திய புள்ளிவிவரப்படி நமது நாட்டில் 5.5 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் டெலிபோன் (மொபைல் போனையும் சேர்த்து) வைத்திருக்கிறார்கள்.

*ரஷியாவில் நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் 53 பேர் மட்டுமே.

*2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 920 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*பெரு நாட்டின் லிமா பல்கலைக்கழகத்தில் 12 வயது சிறுவன் டான்டே ரோசலெஸ் பட்டதாரியாகி சாதனை படைத்திருக்கிறான்.

*அழகு சாதனப் பொருட்களுக்காக கடந்த ஆண்டு நம்மவர்கள் செலவிட்ட தொகை 16,000 கோடி ரூபாயாகும்.

*நமது மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:44 am

*மிகவேகமாக ஓடும் ஆற்றல் கொண்ட மான் ஆண்டிலோப் என் னும் இன மானாகும். இது மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் ஓடும். அதிகமான உயரத்தை துள்ளிக் குதித்து தாண்டும் ஆற்றலும் உடையது.

***

*தொட்டால் சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ் வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற் குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.

***

*உலக அளவில் மக்கள் பயன்படுத்துகின்ற பழங்களில் தக்காளி தான் முதலிடத்தைப் பிடிக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதற்கு அடுத்ததாக மக்கள் வாழைப்பழத்தைப் பயன்படுத்துகின் றனர். காய்கறிகளில் மக்கள் அதிகம் உபயோகிப்பது உருளைக் கிழங்கு.

***

*எகிப்து நாட்டின் கிராமப்புற மக்கள் நாய், பூனை, ஆடு,மாடு போன்ற வற்றை மிகவும் அன்போடு வளர்க்கிறார்கள். இப்படி வளர்க்கும் விளங்குகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டால் அவர்களின் கவலை மூன்று நாட்கள் நீடிக்கிறது. ஆம், இந்த மூன்று நாட் களையும் அவர்கள் துக்க நாட்களாக அனுஷ்டிக்கிறார்கள்.இப் பழக் கம் பல நூற்றாண்டுகளாக எகிப்தில் உள்ளது.

***

*60 கிலோ எடை கொண்ட மனிதனைக் கொல்வதற்கு பாம்பின் விஷத்தில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு விஷம் போதுமானது. நல்ல பாம்பு, ராஜ நாகம், கட்டுவிரியன், கொம்பேறி மூக்கன் போன்றவை அதிக விஷமுள்ள பாம்புகளாகக் கருதப்பட்டாலும் கூட கூழைப் பாம்பின் விஷம்தான் வேகமாகப் பரவக் கூடியது. இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் பாம்பு கடித்து இறப்பவர்களை விட பயத்தினால் இறப்பவர்களே அதிகம்.

*எப்போதும் வெடிக்கலாம் என்ற நிலையில் இன்று உலகில் உள்ள எரிமலைகளின் எண்ணிக்கை 500. இதில் மூன்றில் ஒரு பங்கு எரிமலைகள் பசிபிக் கடல் பகுதியில் இருக்கின்றன. இதனால் இப்பகுதி நெருப்பு வளையம் என்றழைக்கப்படுகிறது.


*பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு இவை உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக் கொள்ளவும் நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன.

***

*ஆந்தை இருளில்தான் இரை தேடும். இரவில் அவற்றின் கண் கரு விழிகள் விரிவடைவதால் மங்கிய வெளிச்சத்தில் இருக்கும் இரையைக் கூட மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். தவிர, தனது இரையின் சத்தத்தை கூர்ந்து கேட்டு அந்த ஒலி எங்கேயிருந்து வருகிறது என்பதை புரிந்து கொண்டு அதன் பின் இரையை வேட்டையாடும்.

***

*தென் துருவப் பகுதியின் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் பெங்கு வின் பறவைகள் ஆனந்தமாய் திரியும். மழைக்காலத்தின் மத்தியில் பெண் பெங்குவின் ஒரேயொரு முட்டை மட்டும் போடும். அதை ஆண் பறவைதான் அடைக்காக்கும். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:45 am

* குடைக்கு ஆங்கிலத்தில் "அம்ப்ரெல்லா' என்று பெயர். இலத்தீன் மொழியில் "அம்ப்ரா' என்றால் "நிழல் தரும்' என்று பொருள்.

* இந்தியாவில் முதன்முதலாக கல்கத்தாவில் தான் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

* சிங்கள மொழியில் "அநு' என்றால் 90 என்பதாகும். 90 அரசர்கள் ஆண்ட ஊர் என்பதால் அநுராதபுரம் என்று அழைக்கப்பட்டது. இலங்கையில் உள்ள முக்கிய ஊர்களில் அநுராதபுரம் ஒன்று.

* உலகில் பல ரத்தினங்கள் காணப்பட்டாலும், வைரம், எமரால்ட் கற்களைத் தவிர, ஏழு கற்கள் இலங்கையில் கிடைக்கின்றன.

* உலகிலேயே மிகவும் உயரமான வெண்கலச் சிலை, சீனாவில் உள்ள அக்சி என்ற நகரில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை ஆகும். இதன் உயரம் 1,200 அடி.

* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர், அப்போதைய நிதியமைச்சர் சண்முகம் செட்டியார்.

* உலகப் புகழ் பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு கையால் ஓவியம் வரைந்து கொண்டே, மறு கையால் எதையாவது எழுதிக் கொண்டு இருப்பதில் திறமை படைத்தவர்.

* இந்தியாவில் முதன்முதலாக கல்கத்தாவில் தான் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

*உலகின் பல நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகின்றது. காற்று மாசுபட்டிருக்கும் உலகின் முக்கிய நகரங்களில் தில்லியும் ஒன்று. உலக வங்கி அறிக்கையின் படி, காற்று மாசு அதிகம் உள்ள முதல் 20 நகரங்களில் 16 நகரங்கள் சீனாவில் உள்ளன. ஹாங்காங் நகரம் காற்று மாசினால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, மக்கள் ஆங்காங்கே காசு கொடுத்து சுத்தக் காற்றை சுவாசித்துவிட்டு போவதை அதிகம் பார்க்கலாம்.
* நமது நாட்டின் மொத்த வழக்கு களில் பாலியல் குற்றங்களுக்காக தண்டனை பெறுவோர் சராசரியாக 8 சதவீதம் ஆகும்.

* கடந்த ஆண்டில் மட்டும் நமது நாட்டில் 1,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

* தற்போது இந்திய விமான போக்கு வரத்து நிறுவனங்களில் பணி புரியும் பெண் பைலட்டுகளின் எண்ணிக்கை 257 ஆகும்.

* மும்பை நகரில் ஒவ்வொரு ஆண்டும் 350 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

* சர்வதேச மனித வள அமைப்பு எடுத்த சர்வேயின்படி வாழ்க்கைத் தரத்தில் டெல்லி 148-வது நகரமாக உள்ளது.

* அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடவிருக்கும் ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் செலவிற்காக 3 கோடியே 60 லட்சம் அமெரிக்க டாலர் பணம் திரட்டப்படுகிறது.

* நமது நாட்டின் மொத்த மென்பொருள் உற்பத்தி வருமானத்தில் 45 சதவீதத்தை 20 முக்கிய நிறுவனங்கள் பெற்றுத் தருகின்றன.

* சீனா, தாய்லாந்து, ஹாங்காங், மெக்சிகோ நாடுகளில் பாம்பின் மூலம் 60 விதமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:46 am

முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பேண்டேஜ் 3 அங்குல அகலமும் 18 அங்குல நீளமும் கொண்டதாக இருந்தது. நமக்கு எந்த அளவு தேவையோ அந்தளவிற்கு வெட்டி பயன்படுத்தவேண்டியதுதான். 1950-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் தேவைக்கேற்ப சிறிய வடிவில் பேண்டேஜ்கள் அதிகமாக வர ஆரம்பித்தன.

***
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஒரு வினோத சட்டம் இன்றளவும் உள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் வருடத் திற்கு ஒரு முறையாவது குளிக்கவேண்டும் என்பதுதான், அது. அப்படி குளிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு.

***

நாம் சுவாசிக்கும் பிராண வாயுவில் 25 சதவீதத்தை மூளை எடுத்துக் கொள்கிறது. மனித கண்களில் இருக்கும் லென்ஸ் ஆயுள் காலம் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.

***

ராட்சத செகுவாயா மரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் உயரமான மரங்களில் இதுவும் ஒன்று. அதிக பட்சம் 300 அடிகள் வரை வளரும். இந்த மரம் பல கோடிக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்யக் கூடியது. ராட்சத செகுவாயா, பூப் பூப்பதற்கு 175 முதல் 200 ஆண்டுகள் வரை ஆகின்றன. பூ பூக்க வேறு எந்த மரத்திற்கும் இவ்வளவு காலம் ஆவதில்லை.

***


செம் மரத்தின் மேற்புற பட்டை தீ பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதல்ல. ஆனாலும் செம்மரக்காடுகள் தீப்பற்றி எரிவதுண்டு. அப்போது மரத்தின் உட்பகுதி மட்டும்தான் தீயால் எரியும்.

***

*அமெரிக்காவில் 29 சதவீதம் பேரின் பிரதான உணவாக இருப்பது பால் பொருட்கள். 60 பசுக்களால் ஒரு நாளைக்கு ஒரு டன் பாலைத் தர முடியும். அமெரிக்காவில் மாடுகளிடம் கறக்கப்படும் பால் இரண்டு நாட்களுக்குப் பின்னரே விற்பனைக்கு வருகிறது.
*கிளிகள் பேசுவதாக நாம் நினைக்கிறோம். அது தவறு. அவற்றுக்கு சொன்னதைத் திருப்பிச் சொல்லும் ஆற்றல்தான் அதிகம் உண்டு. இதனால்தான் நாம் ஒன்றைச் சொல்வதற்குப் பழக்கினால் அதுவும் திருப்பிச் சொல்கிறது. மற்றபடி கிளிகளுக்கு தானாக பேசும் ஆற்றல் கிடையாது.

***


இசையை முணுமுணுப்பதை `ஹம்' என்று ஆங்கிலத்தில் கூறு வோம். இதே போன்று ஒரு பறவை எப்போதும் இசையை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் அதற்கு `ஹம்மிங் பேர்ட்' என்று பெயர் வந்தது. தமிழில் இதை ரீங்காரப் பறவை என் பார்கள். இந்தப் பறவைக்கு பின்னோக்கி பறக்கும் ஆற்றலும் உண்டு. இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்திலேயே இந்தப் பற வையால் பறக்கவும் முடியும்.

***


பொதுவாக எல்லாப் பறவைகளிலுமே பெண் பறவைகளை விட ஆண் பறவைகளின் இறக்கை மற்றும் உடல் நிறம் சற்று எடுப் பாகவே இருக்கும். பெண் பறவைகளுக்கு இறக்கையில் வண்ணம் குறைந்து காணப்படுவது அவை குஞ்சு பொரிக்கும் சமயங்களில் பெரிதும் உதவுகின்றது. ஏனெனில் எதிரி பறவைகளிடமிருந்து தங்களையும் தங்களின் குஞ்சுகளையும் தற்காத்துக் கொள்வதற்கு இந்த நிறக் குறைவு உதவுகிறது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:47 am

* ஏலகிரி மலையில் மொத்தம் 14 ஹேர்பின் (கொண்டை ஊசி) வளைவுகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும், பாரி வளைவு, அதியமான் வளைவு என சங்ககால இலக்கிய மன்னர்களின் பெயர்கள் சூட்டியிருப்பது தமிழ் உணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.

* நீர்யானை நிலத்திலும் வாழக் கூடியது. 3.5 மீட்டர் நீளமும், 3.5 டன் எடையும் கொண்டது. மேல்தாடையில் இரண்டு கொம்புகளும், கீழ்த்தாடையில் நான்கு கொம்புகளும் என ஆக மொத்தம் 6 கொம்புகள் உள்ளன. 10 நிமிடங்கள் வரை நீரில் மூழ்கியிருக்கும். ஒரு நாளைக்கு 45 கிலோ உணவு உண்ணும். இரவில் இரையைத் தேடி பகலில் ஓய்வெடுக்கும்.

* சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன் சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது. 79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும்.

* இந்தியப் பழந்தின்னி ஆந்தையே, ஆந்தை இனத்தில் மிகப் பெரியவை ஆகும். இவற்றின் உடல் 30 செ.மீ. நீளமும், இறக்கையின் நீளம் 1.2 மீட்டர் நீளமும் கொண்டது. மிகப் பெரிய மரங்களில் தான் இவை ஓய்வெடுக்கும். இவற்றின் கண்கள் பெரியது.

* வெட்டுக் கிளிகள் பாலைவனத்தில் இருந்து உருவாகின்றன. ஒரு கூட்டத்தில் உள்ள மொத்த எடை சுமார் 15 டன்களுக்கு மேல் இருக்கும். அவை ஒரு நாளில் சுமார் இரண்டு லட்சம் பேர் சாப்பிடக் கூடிய உணவைத் தின்னு தீர்த்து விடும். ஒரு கிலோ மீட்டர் பரப்புள்ள வெட்டுக் கிளிகள் கூட்டத்தில் சுமார் 25 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

* சுறா மீன்கள் ஒரு அடியில் இருந்து 70 அடி வரை நீளம் கொண்டவை.

* சுறா மீனின் வாய்ப் பகுதியானது, அதன் தலையின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.
* ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க்கில் மே மாத இறுதியிலிருந்து ஜூலை மாதம் வரையிலான இரவுகள் மிகப் பிரகாசமாக இருப்பதால் இவை வெள்ளை இரவுகள் என்றழைக்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் இங்கு இரவில் தெரு விளக்குகள் எரிவதில்லை.

* இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் கோவா கடற்கரைக்குத்தான் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

* 50 வகையான கடல் பாம்புகள் உள்ளன. எல்லாமே நச்சுத்தன்மை கொண்டவை. ஆஸ்திரேலியாவிலும், பெர்சியா வளைகுடாவிலிருந்து ஜப்பான் வரையும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. நல்ல பாம்பைப் போல் 10 மடங்கு அதிக விஷம் கொண்டவை.

* பறக்கும் பாம்புகள் 1 மீட்டரிலிருந்து 2 மீட்டர் வரை நீளமுள்ளது. இது ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்திற்கு எவ்வளவு தூரமிருந்தாலும் தாண்டிவிடும். இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இந்த வகை பாம்பு காணப்படுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:48 am

*இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனது தலையை அலங்காரம் செய்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் ஆகின்றன.

*நமது வீட்டிற்கு வரும் தூசுகளில் பெரும்பாலானவை இறந்து போன பிராணிகளின் தோலில் இருந்து வருபவை ஆகும்.

*உதட்டுச் சாயம் பூசும் பெண்களில் 90 சதவீத பேர் அதை தெரிந்தோ தெரியாமலோ சுவைத்து, உட்கொண்டு விடுகிறார்கள்.

*கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது.

*கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் தூங்கியே பொழுதைக் கழிக்கின்றன.


*உயிருடன் வாழும் மனிதர்களின் போர்ட்ராய்ட் படங்களை தபால் தலைகளில் வெளியிட அமெரிக்கா அனுமதிப்பதில்லை.

*சராசரியாக உலக அளவில் ஒரு பெண் தன் வாழ்நாளில் 3.3 தடவை கர்ப்பம் அடைகிறார்.

*போலார் கரடிகள் அனைத்தும் இடது கைப் (கால்?) பழக்கம் கொண்டவை ஆகும்.

*வசிப்பதற்குரிய உலகின் சிறந்த, பெரிய நகரங்கள் பற்றி எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் சென்னை நகருக்கு 177-வது இடம் கிடைத்திருக்கிறது.

*பில்கேட்ஸ் வசிக்கும் வீடு கம்ப்ïட்டரால் டிசைன் செய்து உருவாக்கப்பட்டதாகும்.
* ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர்தான் பொதுமக்களுக்காக முதன்முதலில் பொது நூலகங்களைக் கட்டியவர்.

* தக்காளிப் பழம் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா. பிறகு, இது அமெரிக்காவுக்குச் சென்றது. இப்போது, இந்தியாவில் தக்காளி பயிரிடப்படாத இடமே இல்லை.

* தெய்வத்தின் சொந்த நாடு என்று கேரளா அழைக்கப்படுகிறது.

* இருபதாம் நூற்றாண்டின் இரு மாமனிதர்கள் மதர் தெரசாவும், இளவரசி டயானாவும் என்கிறது "டைம்' பத்திரிகை.

* உலகிலேயே மிகப் பெரிய மணி 1733-ல் மாஸ்கோவிலுள்ள கிரெம்ளினில் அமைக்கப்பட்டது. இதன் எடை 200 டன். 6 மீட்டர் உயரம், 8 மீட்டர் அகலம் கொண்டது.

* வாடிகன் அரண்மனையின் பரப்பளவு 233 கிரவுண்டு. இதில், 7,000 அறைகளும், 200 இடங்களில் மாடிப் படிகளும் இருக்கின்றன.

* உலகிலேயே மிகப் பெரிய மலர் ராபின்ஸியா. இது சுமித்ரா தீவில் உள்ளது. இம்மலரின் குறுக்களவு ஒரு மீட்டர். பூவின் நடுவில் 10 லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றலாம். மலர ஒரு மாதம் ஆகும்.

*நடைபெறும் நிகழ்ச்சியை அங்கேயே படமாக்கி, அப்படியே ஒளிபரப்புச் செய்யும் நேரடி ஒளிபரப்பு முறையை முதன்முதலில் ஜப்பான் டி.வி. ஒளிபரப்பியது. அந்தக் காட்சி உலகின் மிகப் பெரிய சிகரமான எவரெஸ்ட் உச்சியில் எடுத்து ஒளிபரப்பினார்கள். இமயமலையில் நேபாளம் திபெத் எல்லையில் படமாக்கப்பட்ட காட்சி ஒளிபரப்பப்பட்ட ஆண்டு 1988.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:49 am

* பாம்புக்குக் கேட்கும் சக்தி இல்லை.

* எமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை.

* குதிரைக்குப் படுத்து உறங்கத் தெரியாது.

* நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது.

* யானைக்குக் குதிக்கத் தெரியாது.

* பாலூட்டிகளில் அதிகப் பற்கள் உள்ள முதல் உயிரினம் திமிங்கலம். இதற்கு மனிதனை விட எட்டு மடங்கு அதிகமாக பற்கள் இருக்கின்றன.

* பிளாடிபஸ் என்பது ஒரு நீர் வாழ் உயிரினம். இது முதலில் முட்டையிடும். பிறகு, குஞ்சு பொரித்து பாலூட்ட ஆரம்பிக்கும்.

* உலகின் மிக உயரமான விலங்கு ஒட்டகச் சிவிங்கி. மிகப் பெரிய விலங்கு ஆப்பிரிக்க யானை. அதிவேகப் பறவை ஹம்மிங் பறவை. அதிவேக விலங்கு சிறுத்தை. இவை அனைத்தும் லண்டனில் அதிகம்.

* மிகப் பெரிய கடல் பறவை ஆல்ப்ட்ராஸ்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:50 am

*ஆடு மேய்ப்பவர் ஒருவரால் காபி கண்டு பிடிக்கப்பட்டு சுமார் 1000 ஆண்டுகள் ஆகின்றன.

*500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரேபியப் பயணி காபிச் செடியை இந்தியாவில் மைசூருக்குக் கொண்டு வந்தார்.

*காபிச் செடியின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள்.

*'எக்ஸ்பிரஸோ' என்ற காபி இயந்திரம் 1946-ல் ஓர் இத்தாலியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

*இன்று உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் காபி பருகும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.
* உலகிலேயே அதிக அளவில் பருத்தியை உற்பத்தி செய்யும் நாடு சீனா. ஆனால் பருத்தியை அதிக அளவில் இறக்குமதி செய்வதும் சீனாதான்.

* ஒவ்வொரு வருடமும் வங்காள தேசத்தின் சாகுபடி நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை வெள்ளம் மூழ்கடித்து விடுகிறது.

* உலகிலேயே அதிக அளவில் மனிதர்களை கடத்தும் சம்பவங்கள் கொலம்பியா நாட்டில்தான் நடக்கின்றன.

* மாலத்தீவு நாட்டின் மக்கள் தொகையில் ஆயிரம் பேரில் இருவர் ஜெயில் கைதிகளாக உள்ளனர்.

* தாய்லாந்து, கத்தார், பராகுவே, கோஸ்டாரிகா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெண் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

* செல்லாத ஓட்டுக்கள் போடுவதில் அர்ஜென்டினாகாரர்களுக்கு ஈடு இணை இல்லை. கடந்த தேர்தலில் இங்கே 21 சதவீதம் பேர் செல்லாத ஓட்டுக்களைக் போட்டுள்ளனர்.

* உலகிலேயே மிகவும் குறைவாக சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட நாடு மாலி. இங்கே 72 சதவீத மக்கள் தினமும் இந்திய பண மதிப்புபடி 50 ரூபாய்க்கு குறைவாக சம்பாதிக்கிறார்கள். உலக அளவில் இந்த நாட்டில்தான் குழந்தைத் தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர்.

* கருணை மனம் கொண்டவர்கள் அதிகம் உள்ள கண்டம் ஐரோப்பா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:51 am

* ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

* அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ள நாடு உக்ரைன்.

* தேனீர் அருந்துவதில் இங்கிலாந்துகாரர்களுக்கு ஈடு இணையில்லை. இங்கே சராசரியாக ஒவ்வொருவரும் ஆண்டு ஒன்றுக்கு 2 கிலோ 300 கிராம் தேயிலையை, தேனீர் குடிப்பதற்கு உபயோகிக்கின்றனர்.

* சேவல் கோழியைத்தான் உலகம் முழுவதும் கடிகார பறவையாக போற்றுகிறார்கள். ஆனால் சேவலை விட காகம்தான் கடிகாரப் பறவையாகத் திகழ்கிறது என்று அண்மையில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பத்து ஆண்டு ஆய்வுக்குப் பின் இந்த முடிவை அவர் கள் அறிவித்துள்ளார்கள்.

***

* குதிரைகள் எப்போதும் நின்றவாறேதான் தூங்கும். நின்று கொண்டே தூங்குவதால் அவற்றின் உறுதியான கால் தசைநார்கள் களைப்படைந்து போகும் நேரத்தல் அவை சுதாரித்துக் கொண்டு விடும். குதிரைகள் நின்றுகொண்டே தூங்கினால்தான் அவை களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கிறது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

***

* நாம் இனிப்பு பண்டங்களை ஒரு பிடி பிடிப்பது போல் சில விலங்குகளும் இனிப்பு என்றால் ருசித்துத் தின்னுகின்றன. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளில் நாய், எலி, பன்றிகளுக்கு மட்டும் இப்படி இனிப்புச் சுவையை அறியும் குணாதிசயம் உண்டு. பூனை, மற்றும் கோழிக்கு இனிப்புச் சுவை தெரியாது.

* ஆழ்கடலில் 10 ஆயிரம் அடி ஆழம் வரை சென்று நீந்தும் திமிங்கலங்களும் உண்டு. குறிப்பாக ஸ்பெர்ம் திமிங்கலங்கள் இப்படி கடல் அடிப் பகுதி வரை செல்கின்றன. இரை தேடவே இந்த திமிங்கலங்கள் இப்படி பயணப்படுகின்றன. கடலில் மேல் மட்டத்திற்கு மேலே வந்து ஒரு மணி நேரம் வரை வந்து சுவாசித்து விட்டுப் போகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:52 am

* குளிர் காலங்களில் பறவைகள்தான் வெது வெதுப்பான பிரதேசங்களை நோக்கி பயணப்படுகின்றன என்று நினைக்க வேண்டாம். கடல் வாழ் பிராணிகள் கூட இப்படி புலம் பெயர் கின்றன. திமிங்கலங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். வடக்கு அட்லாண்டிக் பகுதியில் வசிக்கும் திமிங்கலங்கள் குளிர் காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்க கடல் பகுதிக்கு வந்து விடுகின்றன. குளிர் காலம் முடிந்ததும் மறுபடியும் அட்லாண்டிக் பகுதிக்குச் செல்கின்றன.

***

* வால்ரஸ் என்னும் கடற்பிராணி யானையைப் போன்ற தோற்ற முடையது. ஆகையால்தான் இதற்கு கடல் யானை என பெயர் வந்தது. இந்த கடல் யானைகளுக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள இரண்டு பற்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. இந்த நீண்ட பற்களின் மூலம் சிப்பி மீன்களை குத்தி பிடித்துத் தின்னும். வால்ரஸ்களுக்கு அவற் றின் நீண்ட பற்கள்தான் ஆயுதம். எதிரிகளை பற்களைக் காட்டியே பயமுறுத்தும்.

* பெட்டை கோழிக்கு எட்டு வண்ணங்கள் தெரியுமாம்.

* நாய், பூனை, மாடு ஆகியவற்றுக்கு வண்ணங்கள் தெரியாது.

* பல மிருகங்களுக்கு வண்ணங்கள் தெரியாததினால் தான் முன்னோர்களால் இரவில் வேட்டையாடப்பட்டன.

* தேனீக்கு நீல வண்ணம் தெரியும்.

* நாய்களின் வாழ்நாள் 15 ஆண்டுகள்.

* இந்தியாவில் நாய்களுக்கு காப்பகங்கள் உள்ளன.

* விப்பெட் என்ற வேட்டை நாய் மணிக்கு 35.5 மைல் வேகத்தில் ஓடும்.

* ஜெர்மனியின் டாபர்மேன் நாய் தான் உலகப் புகழ் பெற்றது.

* காகம் தனது இடதுகாலைத் தான் அதிகமாகப் பயன்படுத்தும்.

* நீர் யானை பன்றி வகையைச் சார்ந்தது.

* ஆசியா என்பதன் பொருள் சூரியோதயப் பூமி என்பதாகும்.

* கேள்விக் குறியை முதன்முதலில் பயன்படுத்திய மொழி ரோமன்.

* உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் அரிசியை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். சீனாவில் ஒருவரையொருவர் சந்திக்கும் போது, நம்மைப் போல் "நலமா?' என்று விசாரிப்பதில்லை. அதற்குப் பதிலாக, "இன்று உனது அரிசி உணவைச் சாப்பிட்டு விட்டாயா?' என்றுதான் கேட்பார்கள்.

* ஆலமரம், அத்திமரம் போன்றவை பூக்காமல் காய்க்கும் மரங்களாகும்.

* பூத்தாலும், காய்த்தாலும் பட்டுப் போகும் தாவரங்கள் கரும்பு, மூங்கில், வாழை.

* ராஜநாகம் மட்டுமே கூடு கட்டி வசிக்கும் ஒரே இன பாம்பாகும்.

* உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு ஒரு வேலையும் கிடையாது.

* டால்பின் என்ற மீன் இனம் 32 வகையான ஒலிகளை எழுப்புவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 32 வகையான ஒலிகளும், 32 வகையான ஒலி எழுத்துகள் எனக் கொள்ளப்படும். இது டால்பின் மொழி எனப்படும்.


* யானைக்கு நுகரும் நரம்புகள் வாயில் உள்ளன.

* ஒட்டகச் சிவிங்கி திரும்பாமலேயே பின்புறம் பார்க்கும்.

* நீல நிறத்தைக் கண்டால் ஈக்களுக்குப் பிடிக்காது.

* வெட்டுக்கிளி நாள் கணக்கில் பறக்கக் கூடியது.

* வண்ணத்துப் பூச்சி காலினாலேயே ருசி அறியும் தனமைக் கொண்டது.

* ஸ்லாத் என்ற விலங்கு தலைகீழாகவும் நடக்கும்.

* ஒளசல் என்ற குருவி நீருக்குள் மூழ்கிய படியே நீந்தும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:53 am

* கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அபிசீனியர்கள் தான் முதலில் காபி பானத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். பிரேசில் நாட்டில் தான் உலகிலேயே மிகப் பெரிய அளவிலான காபி தோட்டங்கள் உள்ளது. வெப்பமான நாடுகளில் 25 வகையான காபி செடிகள் வளர்கின்றன.

*கார்ட்டூன் படங்களை முதன்முதலாகத் தயாரித்தவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த "ஜோசப் பிலேட்டு" என்ற பேராசிரியர். இவர் 1832ம் வருடம் முதல் கார்ட்டூன் படங்களை வெளியிட்டார்!

*தென் அமெரிக்காவின் பெரு நாட்டையும் பொலிவியா நாட்டையும் இணைக்கும் ஒரு ரயில்பாதை "ஆண்டிஸ்" மலையில் 4744.7 மீட்டர் உயரத்தைல் போடப்பட்டு இருக்கிறது. இதுவே உலகில் ஆக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையாகும்.

*இந்தியாவில் அதிக கிலோமீட்டர்கள் தூரம் செல்லும் அரசுப்பேருந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து கிளம்புகிறது. இந்த பேருந்துகள் பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையே ஓடுகிறது. இரண்டு நகரங்களுக்கும் நடுவில் உள்ள தூரம் சுமார் ஆயிரத்து 10 கிலோமீட்டர். அதுமட்டும் அல்ல பயணநேரம் 26 மணிநேரமாகும்.

*'தி ஸார் கேஸோ' என்ற கடலுக்கு கரையே கிடையாது. காரணம், இந்தக் கடலைச் சுற்றி அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்திருப்பதால்தான்.

* உலகில் உள்ள மென்பொருள் என்ஜினீயர்களில் 30 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். இத் தகவலை கடந்த 2000-ம் ஆண்டில் நிïயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டன் தெரிவித்தார்.

* உலகப்புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரிலிருந்து, ஒரு செங்கலை முதன்முதலாக டென்மார்க் நாட்டிற்கு 1999-ம் ஆண்டு சீனா வழங்கியது. டென்மார்க் இந்த செங்கலை அருங்காட்சியகம் ஒன்றில் வைத்து பாதுகாத்து வருகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:55 am

* வெள்ளிக்கு ரூப்யம் என்ற பெயரும் உண்டு. இதனால்தான் வெள்ளியால் செய்யப்பட்ட நாணயத்துக்கு ரூபாய் என்று பெயர் வந்தது.

* ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கசால் என்ற ஊர் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஊரின் தபால் நிலையம்தான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்த தபால் நிலையமாகும்.

* தண்ணீர் குடிக்காத விலங்குகள் எலி, கங்காரு.

* சீல், டால்பின், திமிங்கலம் இவை மூன்றும் கடலில் வாழும் பாலூட்டிகளாகும்.

* அண்டார்டிகா ஓர் அதிசயக் கண்டமாகும். இங்கு நிலப் பரப்பைச் சுமார் 1000 மீட்டர் உயரத்திற்குப் பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன.

* பாலூட்டி இனத்தில் முட்டையிட்டுப் பால் கொடுக்கும் ஓர் உயிரினம் பிளாட்டிபஸ் தான்.

* டொனால்டு டக்கின் சட்டையின் நிறம் நீலமாகவே இருக்கும்.

* நோபல் பரிசுத் தொகையின் மதிப்பு 6 கோடி ரூபாய்.

* சீனநாட்டின் எல்லைகளை சுற்றி 14 நாடுகளின் எல்லைகள் உள்ளன.

* ஆஸ்திரேலியா ஒரு நாடும், ஒரு தீவும் ஆகும்.

* இமயமலையைவிட வயதில் மூத்த மலை எது தெரியுமா? நம் சென்னையில் இருக்கும் பரங்கிமலைதான். மூர்த்தி சிறியது என்றாலும், கீர்த்தி பெரியது!

* வெட்டுக்கிளிக்கு ஆறுகால்கள், நான்கு இறக்கைகள் உள்ளன

* பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின் னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன.

*முதலையின் பற்கள் வாயின் உள்ளே மட்டும் இருப்பதில்லை மூக்கின் மீதும் பற்கள் இருக்கிறது. முதலையின் முட்டை மிகவும் கடினமானவை. எளிதில் உடைக்க முடியாது. முட்டையின் உள்ளே இருக்கும் முதலைக் குஞ்சு அதன் மூக்கில் இருக்கும் பல்லால் முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். குஞ்சு வெளியே வந்ததும் அந்த பல் விழுந்து விடும். இந்த பல்லைத்தான் `எக்டூத்' என்கிறார்கள்.


*பறவைகள் மரங்களின் மீது அமருவது மட்டும் அல்லாமல் கூடு கட்டியும் வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் வாழாது. பறவைகள் வெறுத்து ஒதுக்கும் ஒரே பழமும் இலந்தை பழங்கள்தான்!

* ஒரு மரத்தை தனது பற்களால் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து முறிக்க கூடிய சக்தி உள்ள விலங்கு `பீவர்'.

* உயிரின பாலூட்டிகளில் முற்றிலும் ஆகாயத்தில் வசிப்பது - பறக்கும் லிமர்.

* 1888-ம் ஆண்டில் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு நிபந்தனையுடன் சைக்கிளை ஒரு வாகனமாக அங்கீகாரம் செய்தது. நிபந்தனை என்னவென்று தெரியுமா? சைக்கிளில் செல்பவர்கள் தொடர்ச்சியாக மணி அடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:56 am

* உலகிலேயே உயரமான விலங்கு ஒட்டகச்சிவிங்கிதான். இது சராசரியாக 5 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கும். இதன் மூலம், உயரமான மரத்தின் கிளைகளை எல்லாம் சாதாரணமாக எட்டி மேயும்.

***

* விலங்கு உலகத்திலேயே மிக விரைவாகப் பறக்கக்கூடிய பறவை, `பெரிகிரைன் பால்கன்' ஆகும். மணிக்கு 100 முதல் 200 மைல் வேகத்தில் பறக்கக் கூடியது இப்பறவை.

***

*அரை மைல் தொலைவில் உள்ள பொருளைக் கூட நாய்களால் மோப்பம் பிடிக்க இயலும். மனிதர்களைப் போல 40 மடங்கு மோப்ப சக்தி உள்ளவை நாய்கள்.

***

* உலகிலேயே மிக அதிகமாக ஒலி எழுப்பக்கூடிய விலங்கு, `ஹாவ்லர் குரங்கு' ஆகும். இந்த இன ஆண் குரங்கு சப்தமிடும்போது அது 16 கி.மீ. தூரம் வரை கேட்கும்.

***

'கிரிக்கெட் வண்டு' என்ற வண்டு எழுப்பும் ஓசையைக் கொண்டு சுற்றுப்புறச் சூழல் வெப்பநிலையைக் கணக்கிட இயலும். 15 நொடிகளில் இது விட்டு விட்டு எழுப்பும் ஓசைகளுடன் 39-ஐ கூட்டினால், அது 'பாரன்ஹீட் டிகிரி' வெப்ப நிலையுடன் சரியாக இருக்கும்.

***

பல்லி இனத்தில் உலகிலேயே பெரியது, இந்தோனேசியாவில் காணப்படும் 'கொமடோ' டிராகன் ஆகும். இது 3 மீட்டர் நீளம் வரை வளரும்.

* பசிபிக் என்ற சொல்லிற்கு "அமைதியான' என்று பொருள். அலைகளின்று அமைதியாக இருந்ததால் பசிபிக் கடல் என்று மாலுமிகள் பெயரிட்டு அழைத்தனர்.


* 1815-ம் ஆண்டு நடைபெற்ற வாட்டர்லூ போரில் ஈடுபட்டிருந்த மாவீரன் நெப்போலியனின் பல் துலக்கும் பிரஷ் காணாமல் போய்விட்டது. பின்னர் கண்டெடுக்கப்பட்ட அதில் அரச முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் பிரஷ் 21,000 டாலருக்கு ஏலம் போனது.

* உலகிலேயே மிகப் பழமையான ரயில் நிலையம் இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டரில் உள்ள லிவர் பூல் ரயில் நிலையமாகும். கி.பி.1830-ம் ஆண்டு இது செயல்படத் தொடங்கியது.


* முதல் உலகப் போரில் கொல்லப்பட்ட 90,000 இந்தியப் படை வீரர்களின் நினைவுச் சின்னம் தான் தில்லியில் உள்ள இந்தியா கேட்.

* ஆங்கிலேயே வைஸ்ராய்களின் அரண்மனையாக இருந்ததுதான் இன்றைய குடியரசுத் தலைவரின் மாளிகை. 330 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சர்.எட்வர்ட் லூ டெய்ன்ஸ் என்பவரால் இது வடிவமைக்கப்பட்டது.

* உலகிலேயே மிக அதிக உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் சீன நாடாளுமன்றம் தான். தேசிய மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படும் இந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,978 ஆகும்.


* அந்தமானில் 204 தீவுகளும், நிகோபாரில் 19 தீவுகளும் உள்ளன.

* பாம்புகளுக்கு காதுகளும், இமைகளும் இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:58 am

* பிரான்ஸ் நாட்டிலுள்ள பாண்ட்ஸ் டி.சி. என்னும் ஊரில் ஒரு தெரு இரண்டு மைல் நீளமுள்ளது. இந்த தெரு நான்கு பாலங்களையும், மூன்று தீவுகளையும் கடந்து செல்கிறது.

* நாம் சிறிய உயிராக நினைக்கும் நத்தைக்கு நாக்கின் அடியில் ஏராளமான பற்கள் இருக்கின்றன. அதேபோன்று சிறிய கொசுவுக்கு கூட 47 பற்கள் உள்ளன.

* குடிக்கும் `சோடா' முதன்முதலில் 1821-ம் ஆண்டு விற்பனைக்கு வந்தது எங்கே தெரியுமா? கொல்கத்தா நகரில் இருந்துதான்.

* சுவார்ரின் என்னும் ஒருவகை பறவை இனம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த பறவை இனம் குளிக்காமல் தனது கூட்டுக்குள் நுழைவது இல்லை. அவ்வளவு சுத்தமாம்...

* இந்தியாவில் வசிக்கும் சுமார் ஆயிரத்து 500 கோடி எலிகளையும் கொன்றுவிட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தலா ஐந்து சப்பாத்தி அதிகம் கிடைக்குமாம். அந்த அளவு கோதுமைகளை எலிகள் தின்று தீர்க்கின்றன.

* கரும்பு புல் இனத்தைச் சேர்ந்தது.

* ஈயின் ஆயுட்காலம் பத்து நாட்கள் தான்.

* தாய்பால் சேமித்து வைக்கும் நிலையம் லண்டனில் உள்ளது.

* தமிழில் முதன்முதலாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

* சிகிச்சையில் குளறுபடி செய்யும் மருத்துவரின் கையை வெட்டிவிட வேண்டும்' என்று பாபிலோனிய மன்னன் ஹெமுராபி அறிவித்தான். அவனது கட்டளை பொறிக்கப்பட்ட கல்வெட்டு இப்போதும் பாரிஸ் நகரில் பத்திரமாக உள்ளது.

* 1555-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் புனித பாசில் ஆலயத்தைக் கட்டுமாறு உத்தரவிட்டான் இவான் என்ற மன்னன். வோஸ்ட்னிக், பர்மா ஆகிய இரு கட்டிடக் கலைஞர்கள் அழகாக ஆலயத்தை உருவாக்கினார்கள். அதன் அழகில் மயங்கிய இவான், இதைவிட அழகாக வேறு எந்த கட்டிடத்தையும் கட்டக் கூடாது என்று கருதி அந்தக் கலைஞர்களின் கண்களை குருடாக்கி விட்டான்!

* இரண்டாவது உலக போர் உச்சத்தில் இருந்த நேரம் அது. அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் உலக செஸ் சேம்பியன் ரூபன்பைனை அழைத்து, எதிரிகளின் படைகள் எங்கெங்கு இருக்கும் என்று கணிக்க சொன்னது. அவரும் கணித்து சொன்னார்.

என்ன ஆச்சரியம்! ரூபன் பைன் சொன்னது போலவே நடந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 11:59 am

சிவப்பு மட்டுமல்லாமல் நீலம், வெள்ளை, வெளிர் சிவப்பு நிறங்களிலும் பவளம் உண்டு. இது சிறியதாக இருக்கும் சுலன்ட்ரேட்டா என்ற கடல் வாழ் உயிரினங்கள் தங்களைச் சுற்றி கால்சியம் கார்பனேட் நிறைந்த சுண்ணாம்பு போன்றதொரு கலவையை சுரந்து தன் கூட்டை உருவாக்குகின்றன. இந்த கூடுகள் தான் பவளங்களாக மாறுகின்றன.


***

வைரங்களில் ஆண் வைரம், பெண் வைரம், நடுத்தர வைரம் என மூன்று வகைப்படும். இவற்றில் ஆண், பெண் வைரம் மட்டுமே நகைகள் செய்ய பயன்படுகிறது. ஆறு எட்டுமுக பட்டைகளை உடையது ஆண் வைரம் என்றும், விளிம்புகள் சேர்ந்து சற்றுக் கடினமாக உருளை வடிவம் போன்று இருப்பது பெண் வைரம் என்றும், நீள வடிவில் மூன்று முக பட்டைகளுடன் இருப்பது நடுத்தர வைரம் என்றும் கூறுவர்.

* உலகிலேயே சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் `பம்லிபீ' வவ்வால் ஆகும். இதன் எடை ஒரு பேனாவை விடக் குறைவானது.

***

* பச்சோந்தி தனது பசையுள்ள நீள நாக்கால் இரையை மின்னல் வேகத்தில் சுருட்டி வாய்க்குள் தள்ளிவிடும். பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட 2 மடங்கு நீளம் இருக்கும்.

***

* தனது அலகால் மரத்தைக் கொத்திப் பொந்தாக்கி தன் இருப்பிட மாக மாற்றிக் கொள்வது மரங்கொத்தியின் வழக்கம். இது ஒரு நிமிடத்துக்கு 20 முறை மரத்தைக் கொத்துகிறது.

***

* உலகில் வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கரடிகள் காணப்படுகின்றன. பூமியில் வாழும் மாமி சம் உண்ணும் விலங்குகளிலேயே பெரியது, அலாஸ்கா பழுப்புக் கரடி ஆகும்.

***

* விலங்குகளில் மிகவும் சோம்பேறியானது ஆண் சிங்கம். அது பெரும்பாலும் ஓய்விலேயே இருக்கும். பெண் சிங்கம்தான் அதிகம் வேட்டையாடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:00 pm

* படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.

* உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள்.

* எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர்.

* உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய்.

* தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது.

* ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும்.

* ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம்.

* பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது.

* அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

* லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும்

* உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா.

* அதிக நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

* ஆஸ்கார் விருது சிலை வெண்கலத்தால் ஆனது.

* மிகக் குறைந்த நேரமே மலர்ந்திருக்கும் பூ பார்லிப் பூ ஆகும். இது மூன்று நிமிடத்திற்குள் மலர்ந்து வாடி வதங்கிப் போய்விடும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 05, 2014 12:01 pm

எப்பாடி எவ்ளோ தகவல்கள்...

இன்னும் கொடுங்கள்...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:01 pm

* எப்போதும் விரியாத பூ அத்திப்பூ.

* துளசியும், அரச மரமும் தாவரங்களில் வித்தியாசமானவை. ஏனெனில், இவை இரவு நேரங்களில் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.

* அமெரிக்க அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் தந்தை விறகு வெட்டியாகப் பணிபுரிந்தவர்.

* எடிசனின் தந்தை தச்சராகப் பணிபுரிந்தவர்.

* சாமியார்கள் வைத்திருக்கும் திருவோடு கோகோ-டி-மெர் என்ற தென்னை இனத்தைச் சேர்ந்தது.

* தமிழகத்தில் முதல் தபால் பெட்டி சென்னை மௌபரிஸ் சாலையில் 1855 செப்டம்பர் 7-ம் தேதி வைக்கப்பட்டது.

* பறவைகளில் நெருப்புக் கோழிக்கு மட்டுமே இமைகள் உண்டு.

* நெருப்புக் கோழியால் பறக்க முடியாது. ஆனால், தண்ணீரில் நீந்தும்.

* ஒரு மனிதனைச் சுமந்து செல்லும் அளவு வலுவுள்ளது.

* நெருப்புக் கோழியின் ஒரு முட்டையைப் பன்னிரண்டு பேர் வரை சாப்பிடலாம்.

* நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர் போல சுமார் மூவாயிரம் மடங்கு சுத்தமான நீர் நிலத்தினடியில் உள்ளது.

* நீர் சம்மந்தப்பட்ட நோய்களின் காரணமாக சுமார் 7 கோடியே 30 லட்சம் வேலை நாள்கள் வீணாகின்றன.

* ஒரு மேலைநாட்டு மனிதன் நாளொன்றுக்கு 150 முதல் 500 லிட்டர் நீரை வீணாக்குகின்றன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:02 pm

ந்திய நதிகளில் ஆண்டொன்றுக்கு 1,68,300 மில்லியன் கன மீட்டர் அளவு நீர் பாய்கிறது.

* நாளொன்றுக்கு ஒரு வீட்டில் ஒருவர் பயன்படுத்தும் நீரின் அளவு 200 லிட்டர்.


* பாலூட்டும் பறவையினம் வெளவால்.

* பறக்கத் தெரியாத பறவை கிவி.

* மிகவும் சிறிய பறவை ஹம்மிங் பறவை. இது பின்னோக்கியும் பறக்கும்.

* சர்வதேச அளவில் அதிக வெண்ணெய் சாப்பிடுபவர்கள் வசிக்கும் நாடு நியூசிலாந்து.

* இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் மேற்குவங்கத்தில் உள்ள கரக்பூர் என்ற நகரில் உள்ளது.

* படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.

* உலகில் கடற்கரை இல்லாமல் இருப்பது 26 நாடுகள்.

* எகிப்தியர்களின் சூரிய கடவுளுக்கு "ரா' என்று பெயர்.

* உயிரற்ற குளிர் பாலைவனம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் செவ்வாய்.

* தண்ணீரை விட காற்று 800 மடங்கு லேசானது.

* ஒட்டகச்சிவிங்கி தான் உண்ணும் இலை, காய், கனிகள் தன் உயரத்துக்கு மேலே மரக்கிளைகளில் இருந்தால், 18 அடி அங்குல நீளம் வரை, தன் நாக்கை நீட்டி, மரங்களிலிருந்து பறித்துண்ணும்.

* ஒட்டகம் போல சுண்டெலியும் தண்ணீர் குடிக்காமல் பல நாட்கள் இருக்குமாம்.

* பூனை ஒரு நிறக் குருடு. எந்த நிறமும் அதற்குத் தெரியாது.

* அமெரிக்காவில் சராசரியாக மூன்று பேரில் ஒருவர் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

* லிபியா நாட்டின் 90 சதவீத பரப்பளவு வெறும்

* உலக மக்கள் தொகையில் நான்காவது பெரிய நாடு இந்தோனேஷியா.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:04 pm

* இந்தியாவின் தேசப்படத்தை முதலில் உருவாக்கியவர் இந்தியர் அல்ல! `டா ஆன்லில்' என்ற பிரான்சு நாட்டுக்காரர் ஆவார்.

* `கங்காரு எலி' என்னும் எலி இனம் தென்மேற்குப் பகுதி பாலைவனங்களில் காணப்படுகிறது. இந்த எலிகள் தங்கள் வாழ்நாளில் தண்ணீர் குடிப்பதே இல்லை. இவற்றின் கால்களும், வாலும் கங்காருவைப் போல இருப்பதால் இப்பெயர் பெற்றது. கங்காருவைப் போல் இவை குதித்து, குதித்து ஓடும் என்பது கூடுதல் செய்தி ஆகும்.

* சிலந்திக்கு எட்டு கண்கள் உள்ளன.

* மிக உயர்ந்த பகுதிகளிலும் வாழும் திறன் பெற்றுள்ளது.

* உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால் தன் இனத்தையே கொன்று உண்ணும்.

* ஆண் சிலந்திகளை காட்டிலும் பெண் சிலந்திகள் உருவத்தில் பெரியது.

* உறவுக்குப்பின் பெண்சிலந்திகள் ஆண் சிலந்தியைக் கொன்று விடுகின்றன.

* ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் வலைபின்னும் திறன் உடையது.

* நீர் சிலந்திகள் தண்ணீருக்கு அடியில் கூடுகட்டி வாழ்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:05 pm

பூச்சி வகைகள் எல்லாவற்றாலும் தன் உடலின் உயரத்தைப் போல 350 மடங்கு உயரத்துக்கு எம்பிக் குதிக்க முடியும். ஒரு சராசரி மனிதன் இந்த அளவு குதிக்க வேண்டுமென்றால், ஈஃபிள் கோபுரத்தின் உயரம்வரை குதிக்க வேண்டும்.

உணவில் சேர்க்கும் வாசனைத் திரவியங்களில், உலகிலயே மிக மிக அதிக விலை உடையவை குங்குமப்பூ (இதில் காம்பு மட்டும்தான் பயன்படும்). ஒரு கிலோ எடையுள்ள குங்குமப்பூ காம்புகளைச் சேகரிக்க ஒன்றரை லட்சம் குங்குமப் பூக்கள் தேவைப்படும்.



உலகின் மிகப் பழமையான புல்லாங்குழல்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பறவையின் எலும்பில் துளையிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புல்லாங்குழல்கள் ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இப்போதும் வாசிக்கத் தகுந்த நிலையில் சில புல்லாங்குழல்கள் இருப்பதுதான்.

உலகிலேயே பயணிகளுக்கான மிகப் பெரிய கப்பல் கன்னார்ட் லைன் நிறுவனத்தின் ‘குயின் மேரி&2’. இது, 345 மீட்டர் நீளமும் 1,48,528 டன் எடையும் கொண்டது. இதில் 2,620 பேர் பயணிக்க முடியும்.



பெலிகன் பறவைக் குஞ்சுகளால் முட்டைக்குள் இருக்கும்போதே தன் தாயுடன் தொடர்பு கொள்ள முடியுமாம். அவை முட்டைக்குள் சரியான சூட்டில் இருக்கிறதா இல்லையா என்பதையும் தாய்க்கு தெரியப்படுத்துமாம். இதனால் தங்கள் பெற்றோர் யாரென்பதை குஞ்சுகள் வெளியே வந்ததும் உடனே கண்டு கொள்ளுமாம்.

பறவைகளிலே, வெர்வியன் ஹம்மிங் என்ற பறவை இடும் முட்டைதான் மிக மிகச் சிறியது. 10 மி.மீ.&க்கும் குறைவான நீளமே கொண்ட இந்த முட்டையின் எடை வெறும் 0.356 கிராம்.



நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி மருந்தைக் கொண்டு உலகின் முதல் ராக்கெட்டைத் தயாரித்தவர்கள் சீனர்கள். அம்புகளின் வடிவத்திலிருந்த இவை வலிமை அற்றவையாகவே இருந்தன.



பலத்த காற்று, புயல், பெருமழை போன்றவற்றால் பாதிக்கப்படாதவை தவளைக் குஞ்சுகள். காற்றால் வெகு தூரம் தூக்கிச் செல்லப்பட்டாலும், மழையால் வெகு தொலைவு அடித்துச் செல்லப்பட்டாலும் லேசான காயம்கூட இல்லாமல் அடுத்த நொடியே இயல்பு வாழ்க்கையைத் தொடங்கிவிடும் இந்த தவளைக் குஞ்சுகள்.

நமீபியா மற்றும் அங்கோலா நாடுகளின் பாலைவனப் பகுதிகளில் வளரும் ‘வெல்விட்சீயா’ என்ற தாவர இனம், ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரை வாழக்கூடியது. வெறும் இரண்டே இலைகளைக் கொண்ட இந்தத் தாவரம் பாலைவனத்தில் இருக்கும் சின்னச் சின்ன உயிரினங்களுக்கு நிழல் தருகிறதாம்!

1. ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு சென்று, அங்கு சந்திரனைச் சுற்றிய முதல் உயிரினம்? - ஆமை.

2. பின்புறமாக மரத்தில் ஏறும் விலங்கு? - கரடி.

3. `கார்த்திகைப் பூ' என்று அழைக்கப்படும் மலர்? - காந்தள் பூ.

4. வீட்டுக்கு ஒரு பியானோ உள்ள நாடு? - இங்கிலாந்து.

5. `கிரியோபைட்' என்பது?
- பனிக்கட்டியில் வளரும் தாவரம்.

6. `நீலப்பசு' என்று அழைக்கப்படும் விலங்கு எது?
- நீல்கை எனப்படும் ஆசிய மான்.

7. இடி தாங்கியை கண்டறிந்தவர்?
- பெஞ்சமின் பிராங்க்ளின்.

8. மிக நீண்ட ஆயுட்காலம் கொண்ட பூச்சியினம்? - சிக்காடா.

9. பாலை தயிராக்கும் பாக்டீரியா எது? - லாக்டோ பாஸிலஸ்.

10. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர்?
- டென் டிகிரி கால்வாய்.

11. கடலில் வாழும் அதிசய மீன் இனம்? - சிவந்த வவ்வால் மீன்.

12. கொடூர குணம் கொண்ட ஆக்டோபஸ் எது?
- நீல வளைய ஆக்டோபஸ்.

13. பூமிக்கு சொந்தமான இயற்கை விண்வெளிக் கோள்?
- நிலா.

14. கவுரவர்களுடன் பிறந்த சகோதரியின் பெயர்? - துச்சலை.

15. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர்? - அலெக்சாண்டர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by முழுமுதலோன் Wed Mar 05, 2014 12:07 pm

* கடவுளின் பெயர் சூட்டப்படாத ஒரே கோள்- பூமி.

* பீரங்கிகளை முதன்முதலாக பயன்படுத்திய நாடு- சீனா.

* காற்றாலைகளின் நாடு என்று அழைக்கப்படுவது- ஆலந்து.

* வெண்மேகங்கள் உலாவும் நாடு- நியூசிலாந்து.

* லண்டனுக்கு முன் இங்கிலாந்தின் தலைநகராக இருந்த நகரம்- வின்ஸ்டர்.

* ஹெல்மெட் தயாரிக்க பயன் படும் உலோகக்கலவை -நிக்கல் எக்கு.

* சவுதி அரேபியாவின் முந்தைய பெயர்- ஹேஜாஸ்.

* மக்கள் தொகை கணக்கிடும் முறை?- 'ஒரு சதுர கிலோமீட்டருக்கு எத்தனைபேர் உள்ளனர்' என கணக்கிடப்படுகிறது.

* உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமான நிலையம் -லாசா (இது திபெத்தில் உள்ளது.)

* பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிகா பகுதி 99 சதவீதம் பனிக்கட்டியால் ஆனது.

* சிட்டுக்குருவியின் உடலில் மொத்தம் 2116 சிறகுகள் உள்ளன.

* இந்தியாவில் ரூபாய் நாணயம் கி.பி. 16-ம் நூற்றாண்டில்தான் பழக்கத்திற்கு வந்தது. இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் டில்லியை ஆண்ட `ஷெர்ஷா சூரி' என்ற அரசர்.


* ஒரிசா மாநிலத்தில் உள்ள `அஸ்கா' என்ற இடத்தில்தான் முதன் முதலில் சர்க்கரை தயாரிக்கப்பட்டது. இதனால் சர்க்கரை `அஸ்கா' என்றும் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவில் முதன்முதலாக 1852-ம் ஆண்டு கராச்சி நகரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) தபால் தலை வெளியிடப்பட்டது.

* தேசிய மாணவர் படை (என்.சி.சி.) 1948-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

*அமெரிக்க மக்களுக்கு ஸ்மித் என்ற பெயரின் மீது அதிக ஆசையாம். அமெரிக்க மக்களில் ஏராளமானவர்களுக்கு ஸ்மித் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களை `ஜான்சன், வில்லியம்ஸ்' என்ற பெயர்கள் பிடித்துள்ளன.

*எறும்புகளில் 1500 இனங்கள் உள்ளன. இவைகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். எறும்பு புற்று ஒன்றில் கிட்டத்தட்ட 15 லட்சம் எறும்புகள் இருக்கும். புற ஊதா ஒளியைக் கூட காணக் கூடிய எறும்புகளால், சிவப்பு நிறத்தை மட்டும் காண இயலாதாம்.

இன்னும் வளரும் .........

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by rammalar Wed Mar 05, 2014 12:23 pm

படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.
-
இது தவறான தகவலாக இருக்கலாம்..
-
லாவோஸ் என்றழைக்கப்படும் லாவோஸ்
மக்கள் குடியரசு தென்கிழக்கு ஆசியாவில்
உள்ள ஒரு நாடு ஆகும்.
-
இந்நாட்டின் வடமேற்கில் சீனாவும் மியான்மாரும்
கிழக்கில் வியட்நாம் நாடும் தெற்கில் கம்போடியா,
மேற்கில் தாய்லாந்து ஆகியன எல்லைகளாக
அமைந்துள்ளன.
-
சிறிய நாடான லாவோசில் பல இந்திய, தாய்லாந்து,
சீன நிறுவனங்கள் அணைகள், சாலைகள் அமைக்கும்
பணியில்ஈடுபட்டுள்ளன. பல இந்தியப் பொறியாளர்கள்
இங்கு பணியாற்றி வருகின்றனர்.
-

இந்த நாட்டின் அமைவிடம்
-
-
[You must be registered and logged in to see this image.]
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

தகவல் களஞ்சியம் - Page 3 Empty Re: தகவல் களஞ்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum