தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தசாவதாரம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தசாவதாரம்  Empty தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:46 am

தசாவதாரம்  Z


மச்சாவதாரம்


உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகர், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசம் செய்தார். சுகரைப் பார்த்து பரீட்சித்து மகராஜா ஒரு கேள்வி கேட்டார். ஹே! ரிஷிவேந்தே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கிற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார். அதற்கு சுகபிரம்மர் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள். இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது. இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக்கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின. ஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்கு கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.

பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம்.  எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான். ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே. அந்தக் காலத்தில் அவன் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான். அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அர்க்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ஹே ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது, என்றது.

இதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்டலத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது: ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.

மச்சம் பதில் சொல்லியது: ராஜரிஷியே! இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதற்கப்புறம் நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும் என்றார். தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர்க்காடு. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு  போல் ஒன்று நீண்டு இருந்தது.

சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்தியவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைவசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.

இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:48 am

கூர்ம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 2வது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாகச் சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. அது சமயம் மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. அடிக்கடி அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டது. தங்கள் தீவிர பக்தியின் காரணமாக அசுரர்களில் செத்தவர்கள் எழுந்தனர். மேலும் அசுரகுரு சுக்ராச்சாரியார் அமுதபானம் கொடுத்து இறந்த தம் சீடர்களை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். தேவர்களுக்கு அந்த சலுகை கிடைக்கவில்லை. இதனால் நிறைய தேவகணம் நஷ்டமாயிற்று. ஆகவே தேவர்களுக்கும் அமிர்தம் கிடைக்க வேண்டுமென ஸ்ரீஹரி விரும்பினார்.  போரில் தோல்வி பெற்றதோடன்றி இந்திரன் துர்வாச முனிவர் சாபத்திற்கும் ஆளாகி இருந்தான். ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுண்டத்திலிருந்து திரும்பி தேவலோகத்திற்கு வந்துகொண்டு இருந்தார். தேவலோகத்தில் அப்போது இந்திரனாக இருந்தவன் மந்தரத்துருமன் என்பவன். ஆப்பியாள் எனப்படுபவர்கள் தேவர்களாக இருந்தார்கள். அவிஷமானு, அரசுனி என்பவர் ரிஷிகள். வைராஜன் என்பவருடைய பத்தினி சம்பூதினியிடம் பகவான் அவதரித்தார். அப்போது அவருக்குப் பெயர் சுசிதர் என வழங்கலாயிற்று. அவர்தான் பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார். துர்வாசர் தேவலோகம் நோக்கி வரும்போது, அவர் கழுத்தில் பரமன் அளித்த மலர்மாலையை அணிந்திருந்தார். தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எதிரே வருவதைத் துர்வாசர் பார்த்தார். முனிவர் தன் கழுத்தில் கிடந்த மாலையை இந்திரனுக்கு கொடுத்தார். செருக்கேறிக் கிடந்த இந்திரன் அந்த மாலையைத் தன் யானையாகிய ஐராவதத்தின் தலைமீது விட்டு எறிந்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து பூமியில் போட்டுக் காலால் மிதித்தது. துர்வாசருக்கு கோபம் வந்தது.

இந்த இந்திரனால் மூன்று உலகங்களும் அவனும் பாழாகப் போகட்டும் என்று சபித்தார். அது முதல் மூன்று உலகங்களும் களையிழந்து இருண்டு கிடந்தன. இந்திரனும் தேவாதியரும் பிரம்மனை அணுகி பிரார்த்தித்து அந்த இடரிலிருந்து காப்பாற்றும்படி வேண்டினர். இந்த கஷ்டத்தை ஸ்ரீமந்நாராயணன் ஒருவராலே தான் தீர்க்கமுடியும் என அனைவரும் வைகுண்டம் சென்று மஹாவிஷ்ணுவை வணங்கினர். உடனே விஷ்ணு தேவர்களே! உங்கள் நன்மைக்காக நான் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வரை காத்திருங்கள். இப்போது அசுரர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் நாடும் பொருளை அடையும் பொருட்டு எதிரியையும் அணுக வேண்டியதாகிறது. இப்போது சாவை நீக்கும் அதர்மத்தை தேட வேண்டும். பாற்கடலில் பற்பல மூலிகைகளையும், பச்சிலைகளையும் கொண்டு போடுங்கள். மந்திரமலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் வைத்து பாற்கடலைக் கடையுங்கள். நீங்கள் மட்டுமின்றி அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைய வேண்டும். நானும் உங்களுக்கு உதவுகிறேன். இதிலிருந்து வரும் அமிர்தத்தை உங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வழி செய்கிறேன். அதர்மமே குறிக்கோளாக இருக்கும் அசுரர்கள் அமிர்தபானம் உண்டால் இறப்பு ஒழிந்து உலகத்திற்கு மேன்மேலும் கஷ்டத்தைத் தந்து விடுவார்கள். அமிர்தம் பருகினால் அதிக பலம் பெற்று நீங்கள் மரணமில்லா நல்வாழ்வு பெறுவதுடன் தேவலோகமும் சுபிட்சமடைய நேரிடும், என்றார். இந்த யோசனைப்படி நான்முகனாகிய பிரம்மா தேவேந்திரனிடம், இந்திரனே நீ உடனே அசுரர்களை நெருங்கி அமிர்தம் கடையும் காரியத்தில் அவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு அவர்களிடம் இணக்கம் பெற்று வா என்று சொல்லிவிட்டு அவர் அவருடைய சத்யலோகத்திற்குப் போனார். தேவேந்திரன் சில தேவர்களை அழைத்துக் கொண்டு மகேந்திரபுரி நோக்கி நடந்து போனான். எந்தவித ஆடம்பரமுமின்றி அரசருக்குரிய முறையில் டாம்பீகமான ஆடை அணிகலங்களின்றி மிகவும் எளிய தோற்றத்தில் வந்து நின்ற இந்திரனைப் பார்த்து அரக்கர் குலத்தினர் ஏளனம் செய்தனர். எனினும் அவன் வந்த காரியம் தம் குலத்திற்கு மிகவும் உயர்வழி காட்டும், சாவைப் போக்கும் அமிர்தம் கடையும் விஷயம் என்பது தெரிந்து அவனிடம் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டனர். விரோசன குமாரனும், அசுர அரசனுமாகிய பலியும் இந்திரன் வந்த காரியத்திற்கு உதவ சம்மதித்தான்.

நாராயணன் இட்ட கட்டளைப்படி தேவர்களும், அசுரர்களும் மந்திரமலையைத் தூக்கிக் கொண்டு பாற்கடலை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் மலையின் பாரம் தாங்க முடியாமல் களைப்புற்ற இந்திரன், பலி முதலியோர் மந்திரமலையை பூமியில் வைத்து விட்டார்கள். கீழே விழுந்த மலை பலரைத் தாக்கிக் கொன்று விட்டது. இதை அறிந்த ஸ்ரீஹரி கருடன் மீது ஏறி அங்கு வந்தார். வந்து தன் கருணைக் கடாட்சத்தால் காயம் அடைந்தவர்களைக் குணப்படுத்தினார். மலையைக் கருடன் மீது விளையாட்டாக தூக்கி வைத்துக் கொண்டு பாற்கடல் நடுவே பறந்து சென்று மந்திர மலையைக் கீழே இறக்கினார். வாசுகி என்ற பாம்பிற்கு அமிர்தத்தில் பங்கு தருவதாக ஆசை காட்டினார்கள். தேவர், அசுரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாம்பு மந்திரகிரியைக் கடையும் கயிறாக மந்திர மலையை சுற்றி வளைத்துக் கொண்டது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடையத் தொடங்கும் போது நாராயணன் பாம்பின் தலைப்பகுதியை பிடித்துக் கொண்டார். தேவர்களும் அவருடன் சேர்ந்து தலைப்புறமாக நின்றார்கள். இதைக் கண்ட அசுரத் தலைவர்கள் வாலைப் பிடிப்பது என்பது நம் நிலைக்கு இழுக்கு. அதனால் தாங்கள் தான் தலைப்பக்கம் நிற்போம் என்றனர். உடனே ஸ்ரீஹரியும் தேவர்களும் பாம்பின் வால்பக்கமும், அசுரர்கள் தலைப்பக்கமும் நின்று பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மலையோ அதனுடைய பெரும் பாரத்தால் கடலுக்குள் மூழ்கியது. உடனே பகவான் ஆமையாக அவதாரம் எடுத்தார். மந்திரமலையைத் தன் முதுகால் தாங்கிக் கொண்டார். மறுபடியும் இருசாரர்களும் தங்களது பணியை செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் வாசுகி என்ற பாம்பின் முகம் மற்றும் கண்களிலிருந்து உஷ்ண ஜ்வாலைகள் வெளிவந்தன. ஆலகாலம் என்ற விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் தன்மை எல்லாப் பக்கமும் பரவ ஆரம்பித்தது. அசுரர்கள் பாம்பை விட்டுவிட்டு தலைதெறிக்க நாலாபுறமும் ஓடிவிட்டார்கள். தேவர்கள் மீது மட்டும் மழை பொழிந்து கடல்காற்று வீசியது. எனினும் அமிர்தத்திற்கு பதில் கொடிய விஷமே பரவியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் மிகவும் சிரமப்பட்டனர். தேவர்களுடன் தேவேந்திரன் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானை பிரார்த்தித்தான். அம்பலத்தரசே! நாங்கள் பாற்கடல் கடைந்த சமயம் வாசுகியின் தாங்க முடியாத ஆலகால விஷம் நாலாப்புறமும் பொங்கித் ததும்பக் காண்கிறோமே ஒழிய அமிர்தம் வந்தபாடில்லை. ஆலகாலத்தின் விஷத்தைப் பொறுத்துக் கொண்டு எங்களால் அமிர்தம் கடைய முடியாது. எனவே தாங்கள் தான் எங்களைக் காத்தருளவேண்டும் என வேண்டினர். சிவபெருமான் தம் பிராட்டி உமாதேவியை அழைத்தார்.

அம்பிகையே! பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே! பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்ணற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர். தேவர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சற்றே தூரத்தில் அசுரர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் ஸ்ரீஹரி ஆடவரின் சிந்தையை இழக்கச் செய்யும் சீரிய அழகுடைய பெண் வடிவில் ஜெகன் மோகினியாக அவர்கள் முன் தோன்றினார். அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள் வாயடைத்து நின்றனர். இவ்வளவு அழகுடைய பெண்ணை தாங்கள் கண்டதே இல்லை, பிரம்மன் தங்களுக்காகவே இவளை படைத்திருக்கிறான் என்று வியந்தனர். அழகியே! அனைவருக்கும் சொந்தமான ஒரு பொருளுக்கு நாங்கள் சுயநலத்தால் சண்டைப் போட்டுக் கொள்கிறோம். கஸ்யபர் மைந்தர்களான எங்களுக்கு பாரபட்சமின்றி சமஅளவில் பங்கிட்டுத் தா என்றனர். கஸ்யபர் புத்திரர்களே! நீங்களோ பக்திமான்கள். ஓயாத ஆசையுடன் திரியும் ஓநாய் கூடப் பெண் அன்பிற்கு ஆளாகாது என்கிற உலகத்தில் புதிதாக வந்த என்னை எவ்வாறு நம்பினீர்கள், என வினவினாள். இவ்வாறு அவள் வினவியது மேலும் அவள் மேல் நம்பிக்கையை உண்டாக்கியது.

அமுதகலசத்தை மோகினியிடம் அசுரர்கள் ஒப்படைத்தனர்.  நான் தான் பங்கிடுவேன். நான் எது செய்தாலும் எப்படி செய்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? என்று மோகினி கேட்க, அத்தனை அசுரர்களும் ஒப்புக் கொண்டனர். அன்று உண்ணா நோன்பு நோற்று புனித நீராடினர். ஹோமங்கள் நடத்தி தானங்கள் செய்தனர். ஸ்ரீஹரியாகிய மோகினி தேவர்களை ஒரு பந்தியாகவும், அசுரர்களை ஒரு பந்தியாகவும் அமர்த்தினாள். அனைவரும் தர்ப்பாசனத்தில் அமர்ந்திருந்தனர். அசுரர்கள் கிழக்கு முகமாகவும், தேவர்கள் மேற்கு முகமாகவும் அமர்ந்து அமுதத்தை அருந்த தயாரானார்கள். அசுரர்கள் அனைவரும் மோகினியின் அழகில் மயங்கி இருந்தனர். அசுரர்களுக்கு அமிர்தம் தருவது, பாம்பிற்கு பால் வார்ப்பது போல் என்றெண்ணிய மோகினி தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்து கொண்டிருந்தாள். அசுரர்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு இந்த சூழ்ச்சி தெரியவில்லை. ஆனால் அசுரர்களில் ராகு என்பவன் மட்டும் இந்த சூழ்ச்சியை தெரிந்து கொண்டான். தேவர்கள் போல் உருமாறி சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டு அமிர்தத்தை அருந்தி விட்டான். இந்த விஷயத்தை அறிந்த மகாவிஷ்ணு தனது சுதர்சனத்தால் ராகுவின் தலையை வெட்டி எறிந்தார். அமுது உண்டதால் தலையும் அழியவில்லை, உடலும் அழியவில்லை. இதைப் பார்த்த பிரம்மன் துண்டிக்கப்பட்ட தலையோடு ஒரு சர்ப்ப உடலை பொருத்தினார்.  துண்டிக்கப்பட்ட உடலோடு ஒரு பாம்பின் தலையைப் பொருத்தி இணைத்தார். அவை இரண்டும் ராகு, கேது என்ற பெயருடன் கிரக பதவி பெற்றனர். பின்பு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அமுத பானம் உண்ட தேவர்களை அசுரர்களால் அழிக்கமுடியவில்லை. தேவர்கள் அசுரர்களை பாதாள லோகத்திற்குத் துரத்தினார்கள்.

இந்த கூர்மஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:49 am

வராக அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 3வது அவதாரமாகும்:  பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார். சிருஷ்டி என்பது இருவகைப்படும். முதலில் இறைவன் தாமாகவே மாயையின் பலத்தினால் மகத்தில் இருந்து பஞ்சபூதங்களும், ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தார். இதற்குப்பின் தான் பிரமன் தோன்றினார். பரமனின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என அனைத்தையும் பிரமன் படைத்தார். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்களைப் படைத்து சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும்படி பணித்தார். பிரமன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் தோன்றினான். அதன்பின் மர்சி, அத்ரி, ஆங்கீரசர், புலஸ்தர், புலகர், க்ருது, பிருகு, வசிஸ்டர், தக்ஷர், நாரதர், இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், காயத்ரி, பிரணவம் இத்யாதி ஆகியவற்றைப் படைத்தார். என்ன படைத்தும் பிரம்ம குலம் பெருகவில்லை. இதனால் பிரம்மா மிகவும் மனம் உடைந்து போனார். அதன் காரணமாக அவருடைய உடல் இரண்டாகப் பிரிந்தது. அவை ஆண், பெண் உருவங்களாக மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனர். சுவாயம்புவமனு பிரம்மாவைப் பார்த்துக் கேட்டார்: பிரபோ! நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது? உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் செய்து ஸ்ரீ ஹரியை சந்தோஷப்படுத்துக என்று பிரமன் கட்டளையிட்டார். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே! பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே! என்றான் மனு.

பூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று நான் எண்ணிய சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்தார் பிரம்மா. உடனே ஸ்ரீஹரியை நோக்கி தியானம் செய்தார். மனத்தில் ஸ்ரீஹரியை சிந்தித்துக் கொண்டே நான் எந்தப் பரந்தாமனுடைய கிருபையால் உருவானேனோ, அதே பிரபு இதோ இங்கே ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு வந்து நிலைக்கச் செய்யட்டும் என்று தியானித்தார். அப்போது அவருடைய நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. ஸ்ரீமந்நாராயணன், பிரம்மாவின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவே அந்த பன்றி (வராக) ரூபத்தை எடுத்தார். எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே அந்தச் சிறிய பன்றி உருவம் பூதாகரமாக யானை அளவு வளர்ந்தது. அதைப் பார்த்து பிரம்மா மெய்சிலிர்த்து புளகாங்கிதம் அடைந்தார். என் எண்ணத்தை நிறைவேற்றவே நாராயணன் இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறார் என்று மகிழ்ந்து வேதபாராயண ஸ்தோத்திரங்களைச் சொன்னார். அதனால் சந்தோஷம் அடைந்த மூர்த்தி கர்ஜனை செய்தார். அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட மகிரிஷிகள் மகிழ்ந்தார்கள். அச்சமயம் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபர் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து கொண்டிருந்தார். அந்நேரம் வேள்வி சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கணவரிடம் கூறினாள். அதற்கு அவர் இது பூதங்கள் மட்டுமே சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன நேரம், ஒரு முகூர்த்த காலம் மட்டும் நீ பொறுத்துக் கொள் என்று கூறினார். அதற்கு திதி மறுக்கவே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினார் கஸ்யபர்.  பின் மீண்டும் பகவானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த திதி, சுவாமி! என்னை மன்னித்தருளுங்கள், தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கஸ்யபர். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே! நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை.

சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சேர்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்கள் அரக்க குணம் உடையவர்களாக தர்ம விரோதமான காரியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவர்களையும் துன்புறுத்துவார்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவர்களை வதம் செய்வார் என்றார் கஸ்யபர். சுதர்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். பிரியே! கவலை வேண்டாம், இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் பையன் ஹரி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவர்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றார். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹரி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளர்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவர்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விரிந்து சூரிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நாலாத் திசையும் இருண்டன. இதைக் கண்ட தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர்.பிரம்மன் அவர்களிடம் தேவர்களே! ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் நாராயணனை தரிசிக்கச் சென்றனர். அப்போது அவர் வாயிற்காப்பாளர்களாக ஜெய, விஜயர் இருந்தனர். நாராயணனை தரிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவர்களின் சாபத்திற்கு ஆளாகினர். தங்கள் தவறை உணர்ந்த ஜெய, விஜயர்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினர். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவர்கள் முன் தோன்றினார். முனிவர்களே! பக்தர்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல. என் ஊழியர்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன், அவர்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றார். உடனே முனிவர்கள் இவர்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கர்களாக பிறந்து உன்னை அடைவார்கள் என்றார். இவர்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயர்கள் என்று சொல்லி முடித்தார். திதி நூறு வருடங்கள் சென்றதும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவர்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிவு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயரிடப்பட்டனர். விரைவிலேயே அவர்கள் பூதாகாரமாக மலை என வளர்ந்து நின்றனர். அவர்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும். ஹிரண்யாட்சன் தேவர்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் காணாமல் போயினர். இவன் அவர்களைத் தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான். ஹிரண்யாட்சனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்ம வரத்தால் பராக்கிரமம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணர்ந்தான். அசுர முதல்வனே! உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீ ஹரி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாட்சன் கதையை சுழற்றிக் கொண்டு கர்ஜனை செய்த வண்ணம் ஹரியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதர் தடுத்தார். அசுர தலைவனே! உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவர்கள் எங்கோ ஓடி ஒளிந்தார்களே, நீ இப்போது எங்கே போகிறாய், என்றார்.

நான் ஹரியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் தினவு எடுக்கும் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன்! என்றான். நல்ல காரியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹரி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறார். அப்படியா? இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஹரி பகவான் வராக மூர்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தார். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாட்சன் சிரித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார். இரண்டு மலைகள் மோதுவது போல மோதிக் கொண்டனர். யுத்தத்தை நேரில் காண பாதாள லோகத்திற்கு தேவர்களுடன், பிரம்மா வந்து சேர்ந்தார். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாட்சன் தன் கதையை எடுத்து ஹரியை நோக்கி வீசினான். அதை ஹரிபகவான் தன் சக்கராயுதத்தால் தடுத்தார். பின் ஹிரண்யாட்சனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. தன் சுதர்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தார் ஹரி பகவான். பிரம்மா அந்நேரம் ஹரியைப் பார்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினார். ஹரியும் அவ்வாறே ஹிரண்யாட்சனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினார். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவர்கள் ஹரியைப் போற்றி துதித்துப் பாடினர்.  பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணர்ந்து நிலை நிறுத்தினார். அவனுடன் யுத்தம் செய்ததால் அவர் உடல் முழுவதும் உதயசூரியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியர் அப்பொழுதும் இடைவிடாது வேத தோத்திரங்கள் செய்தனர். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமாகி அந்தர்த்தானம் ஆனார். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தார். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து  வாழ்வாயாக! என்று அனுக்கிரகித்தார். பின்னர் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிரியவரதர், உத்தானபாதர் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹுதி, தேவஹுதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தனர். இவர்களும் இவர்கள் வழி வந்தவர்களுமே ஆதிமனிதர்கள் ஆவர்.

இந்த வராகஅவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும், தீர்க்க ஆயுளும் உண்டாகும்
[size=13.333333969116211].[/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:50 am

நரசிம்ம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான்.  மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவன் தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள் கேட்டார்கள். அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீ ஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.

ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹரியைப் புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர். உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.  அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர். தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.  இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தால், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:52 am

தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா?  அதைப் பார்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.

நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹரியை அனுஷ்டிக்கிறவர்கள் மேன்மை அடையலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:53 am

வாமன அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான். அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. அதில் சிங்கத்துவஜம் கட்டப்பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான். அமராவதிப் பட்டணம் அழகுவாசம் செய்யும் இடம். இந்த எழிலார்ந்த நகரம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திரப்பட்டணத்தைத் தாக்கினான். பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் போய்க் கலந்து ஆலோசித்தான்.

தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்! என்றான். தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான். இப்போது நீ யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார். குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அசுரருக்குத் தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதியிலேயே தங்கி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். தவிர அந்தணர்களும் மகரிஷிகளும் தத்தம் கர்மாவை குறைவின்றி நடத்திக் கொள்ளவும் பலி வழி செய்து கொடுத்தான். அதனால் ஜீவராசிகளும் அவனைப் போற்றிப் புகழ்ந்தன. பிருகு வம்ச அந்தணர்கள் தங்கள் சீடனுக்கு வந்த இந்திர பதவியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவன் இந்தப் பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகங்களைச் செய்யுமாறு அவனிடம் கூறினார்கள். பலியும் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.

தேவர்கள் தட்சன் மகளாகிய அதிதி என்பவளுக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்கள். இதனால் தன் மக்களுக்கு ஏற்பட்ட எளிய, இழிநிலை வாழ்க்கையை எண்ணி அதிதி மிகவும் வருந்தினாள். இதைக் கண்ட கச்யபர், அதிதி! உன் முகம் வாடி இருக்கிறதே! நீ ஏதோ மனவருத்தம் அடைந்ததாக நினைக்கிறேன். மேலும் உனக்குத் தெரியும், அந்தணர்களுக்கும் சாதுக்களுக்கும் எந்தவிதத் துன்பமும் ஏற்பட நியாயம் இல்லை என்றார். மகரிஷியே! நீங்கள் சொல்வது உண்மையே. சாதுக்களுக்கும் அந்தணர்களுக்கும்  துன்பம் நேருவது இல்லைதான். ஆனால் அதில் தாங்கள் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர். தேவர்களும் உமது புத்திரர்கள், அசுரர்களும் உமது புத்திரர்கள். இருவரும் உமக்கு சமமே! எனினும் எனக்குக் கண் கண்ட தெய்வமாகிய உங்களிடம் ஒன்றை வேண்டுகிறேன். தேவலோகத்தில் எனது புத்திரர்களான தேவர்கள் பதவி, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் கூறுங்கள் என்றார். அதிதியின் வார்த்தைகளைக் கேட்டு சிரித்தார் கச்யபர். பிரியே! உன் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் நீ பரந்தாமனை தியானம் செய். அவர் உனக்கு வழியைத் தந்தருள்வார். பரந்தாமனை அடையவேண்டுமானால் எத்தகைய விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிதி வினவினாள். பயோவ் விரதம் எனப்படும் விரதத்தை பங்குனி மாதம் சுக்லபட்சம் பிரதமை திதி வரும் நாளில் ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரெண்டு நாள்கள் கடைபிடித்து ஸ்ரீஹரி நாராயணனை சந்தோஷப்படுத்துவாயாக என்றார் கச்யபர். அதிதியும் அதை மேற்கொண்டாள். விரதத்தை தவறாமல் கடைபிடித்தாள். கடைசி நாள் அன்று பகவான் சங்கு சக்ரதாரியாக அவளுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவள் மனம் மிக மகிழ்ந்தது.

தேவ மாதா! அதிதி தேவியே! உன் விரதத்தை கண்டு மகிழ்ந்தேன். நீ எதனால் இந்த விரதத்தை அனுஷ்டித்தாய் என்பதை நான் அறிவேன். இப்போது உன் தேவகுமாரர்கள் பதவியிழந்து, கதியிழந்து நின்கின்றனர். அவர்களை மீண்டும் சொர்க்க லோக ஆட்சிக்கு ஆளாக்க வேண்டும். உன் புதல்வன் தேவேந்திரன் மீண்டும் அமராவதி நகரில் ஆட்சி செய்ய வேண்டும் என நீ ஆசைப்படுகிறாய். ஆனால் தற்சமயம் அது இயலாது. அசுரர்கள் யாரும் வெல்ல முடியாதபடி பராக்கிரமம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நல்ல காலம், அந்தணர்கள் பராமரிப்பில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். எனவே போர் செய்து பயன்பெற முடியாது. ஆயினும் நீ என்னை வழிபட்டதற்குரிய பலன் உனக்கு நிச்சயம் உண்டு. ஆகவே உன் விருப்பத்தை வேறொரு விதத்தில் நிறைவேற்றித் தருகிறேன். நானே உனக்குப் புத்திரனாகப் பிறக்கவேண்டும் என்று மனத்திலே எண்ணி தியானம் செய். அதன்படியே பிறந்து தேவர்களை நான் காப்பாற்றுகிறேன். இது தேவரகசியம். எவரிடமும் வெளியிடாதே. உன் ஆசை நிறைவேறும். அதிதியும் பகவான் திருவார்த்தைப்படி, தனக்கு திருமாலே மகனாகப் பிறக்க வேண்டும் என்று எண்ணி மகிழ்ந்தாள். வரம் கொடுத்தது போல பரந்தாமனும் அவளுடைய கர்ப்பத்தை அடைந்தார். புரட்டாசி மாதம், சுக்கில பட்சம், திருவோண (சிரவண) நட்சத்திரத்தில் முதல் அம்சமான அபிஜித் பாதத்தில், சூரியன் நடுப்பகலில் பிரகாசிக்கும் சமயம் பரந்தாமன் கச்யபர் அதிதியிடம் புத்திரராக அவதாரம் செய்தார். இதற்குப் பெரியோர் விஜய துவாதசி என்று பெயர் இட்டனர். அப்போது தேவ துந்துபி முழங்கியது. வித்தியாதரர், சித்தர், கிம்புருடர் போன்ற வானவாசிகள் பகவானை மங்களகரமான துதிகளால் போற்றினர். பிறக்கும்போது அவர் தந்த காட்சியை கச்யபரும் அதிதியும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள். சியாமள மேனி, சிரசிலே கிரீடம், காதிலே மகர குண்டலங்கள், சங்கு சக்கரம், கதை, தாமரை தாங்கிய நான்கு கரங்கள், நெஞ்சிலே ஸ்ரீவத்சம், கைவளை, தோள்வளை, இடையிலே மேகலை, மஞ்சள் பட்டாடை, கழுத்திலே வண்டு சூழ் வனமாலையும், கௌஸ்தூப மணியும், திருவலங்கார பூஷிதராகப் பெருமாள் காட்சி கொடுத்தார். பெற்றோர்கள் முன்பு இப்படிக் காட்சிக் கொடுத்த பெருமாள், நாடகத்தில் ஏற்படும் காட்சி மாற்றம் போலத் தன் உருவத்தைக் குட்டையான ஓர் அந்தணச் சிறுவனாக மாற்றி விட்டார்.

அதிதியும், கச்யபரும் பல மகரிஷிகளை அழைத்து வரச்செய்து வைதீக கர்மாக்களைச் செய்து வாமனன் என்று பெயரிட்டனர். தேவர்கள் குழந்தை பிறந்திருக்கும் ஆசிரமத்திற்கு வந்து வணங்கினர். பின்னர் மகரிஷிகள் பெருமானுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். அச்சமயம் கதிரவனே அவருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தை (பூணூலை) கொடுத்தார். கச்யபர் முஞ்சியைக் கொடுத்தார். (முஞ்சி என்றால் தர்ப்பையால் செய்த அதை ஞாண் கயிறு) பூமாதேவி கிருஷ்ணா ஜனத்தை (மான் தோலை) கொடுத்தாள். சந்திரன் தண்டத்தை அளித்தான். அதிதி கௌபீனம் கொடுத்தாள். பிரம்மா கமண்டலம் வழங்கினார். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தான். பார்வதி தேவி அதில் முதல் பிச்சை ஈந்தாள். இப்படி பலர் பல பரிசுகள் நல்கி மகிழ்ந்தனர். பெருமான் திருவருளையும் வேண்டினர். இவ்வாறு நிகரற்ற பேரும் புகழும் பெற்ற அந்தணச் சிறுவன் தனது வைதீக கர்மாக்களைத் தவறாது செய்து வந்தான். நர்மதா நதியின் வடகரையில் பலிச்சக்கரவர்த்தி ஒரு பெரிய யாகசாலை அமைத்தான். அந்த வேள்விக்கு மகரிஷிகளை எல்லாம் வரவழைத்திருந்தான். வாமனர் தன் பெற்றோரிடம் அந்த யாக சாலைக்குத் தான் போக வேண்டும் என்று அனுமதி கேட்டார். அவர்கள் அனுமதி தந்து ஆசி கூறி வழியனுப்பி வைத்தனர். யாகசாலைக்குள் இவர் நுழைந்ததும் இவருடைய அரும்பெரும் ஜோதியால் மற்ற இடம் எல்லாம் ஒளிமயமாகி விட்டது. இவர் என்ன கதிரவனோ, அக்கினி பகவானோ அல்லது சனக் குமாரனோ என்று அநேகரும் சந்தேகித்தனர். அவரை பலிச்சக்கரவர்த்தி அன்புருக வரவேற்றான். அர்க்கியம் கொடுத்து அவர் திருப்பாத கமலங்களைக் கழுவி அந்நீரைத் தன் தலையில் தெளித்துக் கொண்டான். பின்னர் அகமும், முகமும் மலர வாமனரிடம் பலி பேசினான்.

சுவாமி! தாங்கள் இந்த யாகசாலைக்கு எழுந்தருளியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பாத துளிகள் பட்டதன் காரணமாக என் முன்னோர்கள் நல்ல பதவியை பெற்றுவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். தங்கள் பாதம் கழுவிய தீர்த்தத்தைத் தெளித்து நான் என் பாவங்களைப் போக்கிக் கொண்டேன். தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் அதை அடியேன் தர சித்தமாக இருக்கிறேன். தாங்கள் தம் தேவைகளைப் பெற்று மேலும் என்னை கிருதார்த்தன் ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பலியின் பிரார்த்தனையைக் கேட்ட பகவான், அசுரேந்திரா! நீ கூறிய வார்த்தைகளைக் கேட்டு நான் உண்மையில் புளகாங்கிதம் அடைகிறேன். நீயோ பரம பாகவதனான பிரகலாதன் வம்சத்தில் பிறந்தவன். அதனால் உனக்குக் கிடைக்காத சம்பத்தே இல்லை என்று சொல்லுவேன். மேலும் நீயோ மகரிஷிகளை மதித்து அவர்கள் வார்த்தைகளைத் தட்டாமல் கேட்டு அவர்கள் வழி நடக்கிறாய். அந்தணர்களுக்கு ஆவன செய்து ஆதரிக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு என்ன குறை இருக்கப் போகிறது? அதுமட்டுமா, உன் தந்தையோ தேவதைகள் அந்தணர்களாக வந்து அவனுடைய ஆயுளை யாசிக்கிறார்கள் என்று அறிந்தும் தெரிந்தும் யாசித்ததை அவன் கொடுக்கவில்லையா? அத்தகைய குலத்தில் உதித்த நீ யாசிப்பவர்கள் எது கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கக் கூடியவன் என்பதை நான் அறிவேன். கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, பின்னால் வாக்கு மாறுவது என்பது பெருத்த அவமானம் என்பதை நீ அறியாதவன் அல்ல. நான் உன்னிடம் விரும்புவது எல்லாம் எனது கால் அடியினால் மூன்றடி நிலமே. அதற்கு மேலே எனக்கு எதுவும் தேவை இல்லை. ஆக எனக்குத்தேவையான அந்த மூன்றடி நிலத்தைப் பெற்றுப் போகவே வந்திருக்கிறேன் என்றார்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:54 am

சுவாமி! என்னிடம் யாரெல்லாமோ எதை எதையோ கேட்டுப் பெற்றுச் செல்கிறார்கள். தாங்களோ மிகவும் இளைய வயதினராகத் திகழ்கிறீர். அப்படிப்பட்ட தாங்கள் தங்கள் காலடிகளால் மூன்றே மூன்று அடிகளே கேட்பதாக நினைக்கிறேன். பிரம்மச்சர்யத்தைக் கடைபிடிக்கும் உங்களுக்குப் பகவானைத் தியானிக்கச் சௌகர்யமாக நிறைய மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தோட்டத்துடன் கூடிய பெரிய நிலத்தையே தருகிறேன், என்றான் பலிச்சக்கரவர்த்தி. அசுர சிரேஷ்டனே! நீ கூறிய வார்த்தைகளால் நான் மிகவும் திருப்தி பெற்றேன். ஆனால் எனக்கு நான் கேட்கும் மூன்றடி நிலம் மட்டும் போதும், வேறெதும் தேவையில்லை என்றார். பலிச்சக்கரவர்த்தி அவரை வணங்கி தங்கள் விருப்பப்படியே தருகிறேன் என்று சொல்லிவிட்டு வாமனருக்கு தானம் செய்வதற்கு நீர் நிறைந்திருக்கும் கிண்டியை கையில் எடுத்தான். அந்நேரம் இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சுக்கிராச்சாரியார், பலியைத் தனியே அழைத்தார். பலியே! இதோ இங்கே குள்ளமான உருவில் வந்து நிற்பது வேறு யாருமில்லை, ஸ்ரீமந்நாராயணனே. அவர் தேவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறார். எந்த காரியத்தையும் ஆராய்ந்து அவசரப்படாமல் சற்று நிதானமாகவே செய். நீ செய்யப் போகும் காரியத்தால் உனக்கு மட்டும் அல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னை நம்பி இருக்கிற அசுரர்கள் அனைவருக்கும் அழிவு வந்திருக்கிறது என்பதை மறந்துவிடாதே. இப்பொழுதும் ஒன்றுமில்லை. வாக்கு கொடுத்த விட்டோமே, அதை நிறைவேற்ற வேண்டுமே என்ற தயக்கம் வேண்டாம். ஒரு சில இக்கட்டான நிலையில் வாக்குத் தவறுவதை சாஸ்திரங்கள் சம்மதிக்கின்றன. அதுமட்டுமல்ல ஒருவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டு பிறர் பொருளுக்கு ஆசைப்படும் போது நீ பொய் பேசுவது தவறில்லை. ஆகவே உன் வாக்குறுதியை மறந்து விடுவாயாக என்று விளக்கமாக சுக்கிராச்சாரியார் எடுத்து உரைத்தார்.

ஆச்சாரியாரே! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. இருந்தாலும் சற்று சிந்தித்துப் பாருங்கள். என் குலம் எப்படிப்பட்டது? நான் வாக்குத் தவறினால் பரமபாகவதனான என் பாட்டன் பிரகலாதனுக்கு அல்லவா இழிவு. இந்த தூர்த்தன் பிரகலாத வம்சத்தில் பிறந்தவன், வாக்குத் தவறிவிட்டான் என்று அவர் பெயரை நினைத்துத்தானே உலகம் பழிக்கும். கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்வதைக் காட்டிலும் சிறந்த தர்மம் வேறு உண்டோ? தானம் செய்வதினால் நான் அனைத்தையும் இழந்தாலும் சரி, ஓர் அந்தணனுக்கு அளித்த பிராமணத்தை ஒரு போதும் நான் மீற மாட்டேன். வந்திருப்பது பரந்தாமனே என்று சொன்னீர்கள். பகவானே வந்து யாசிக்கிறான் என்றால் அது என் குலத்துக்கு ஏற்பட்ட பெருமையாகவே நினைக்கிறேன். அவருக்குத் தானம் கொடுப்பதால் வரும் விளைவு எதுவாயினும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகி விட்டேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். தங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று கருத வேண்டாம். நான் கொடுத்த வாக்குறுதியை மீறப் போவதில்லை! என்றான் பலி. அடே மூடா! நான் உனக்கு இப்படி விளக்கமாகக் கூறியும் என் பேச்சைக் கேட்காத நீ பதவி இழந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவாய் என்று சாபம் விட்டார் சுக்கிராச்சாரியார். பலி அந்த நேரத்தில் தன் மனைவியை அழைத்து வாமனருக்கு நீர் வார்த்துக் கொடுக்கத் தயார் ஆனான். பிறகு வாமனருடைய திருப்பாதமலர்களைக் கழுவுவதற்கு ஒரு ஆசனத்தில் அமர்த்தினான். பலியின் மனைவி விந்தியாவளி நீர் முகர்ந்து கொடுத்தாள். பலி அவருடைய பாதங்களைக் கழுவினான். அந்த நீரைத் தன் சிரசிலும், உடலிலும் தெளித்துக் கொண்டான். அவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்தான். நிலத்தை தானம் செய்யும் பொருட்டு தாரை வார்த்துக் கொடுப்பதற்காக கிண்டிச் செம்பை எடுத்தான். அது சமயம் தன் அறிவுரையை ஏற்காமல் பலி தாரை வார்த்துக் கொடுத்து ஏமாந்து விடப் போகிறானே என்று எண்ணிய சுக்கிராச்சாரியார் வண்டு உருவெடுத்து செம்பினுள் நுழைந்து நீர்த்துவாரத்தை அடைத்துக் கொண்டார். செம்பிலிருந்து நீர் வரவில்லை. இதை உணர்ந்த பகவான் அறுகம்புல் ஒன்றினால் துவாரத்தில் குத்தினார். அந்த அறுகம்புல் துவாரத்தை அடைத்துக் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களில் ஒன்றைக் குருடாக்கியது. கிண்டிச் செம்பிலிருந்து நீர் வெளி வந்தது. மனைவி நீர் வார்க்க மகாபலி தாரை வார்த்தான்.

அந்தண குலத் திலகமே! உம் காலடி அளவில் மூன்று அடிநிலங்களை உமக்குத் தானம் செய்கிறேன்! என்று தெரிவித்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் முகம் மலர்ந்தபடி தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அப்போது அவருடைய உருவம் வானளாவி நின்றது. அவருடைய திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்றது. விண்ணும், மண்ணும், திசைகளும், மற்ற உலகங்களும் எழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன. இதைக்கண்ட அசுரேந்திரன் பிரமித்து நின்றான். இத்துடன் ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒரு கையில் சுதர்சனச் சக்கரம் சுழன்றது. மற்றொரு கையில் சாரங்கம் என்ற வில்லும், இன்னொரு கையில் கௌமோதகி என்ற கதையும் வேறொரு கையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிருந்தார். தேவர்களும், முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதி பாடி வணங்கினார்கள். வானளாவ நின்ற வாமனர் ஒரு காலால் பூமியை அளந்தார். மற்றொரு காலால் வானத்தை அளந்தார். ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை. இந்நிலையில் மூன்றாவது அடி வைக்க இடம் ஏது? என்று வினவினார். மீண்டும் தன் உடலைக் குறுக்கி வாமனராக நின்றார். அசுரேந்திரனே! நீ சகல தர்மங்களையும் அறிந்தவன். நீ இந்நேரம் என்னிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே! அதனால் நீ நரகத்திற்குப் போக வேண்டியதாகும் என்பதை நீ அறியாதவன் அல்லன். நான் என் காலால் ஓரடியில் பூமியை அளந்தேன். இரண்டாவது அடியால் விண்ணுலகம் முழுவதும் அளந்தும் இன்னும் என் கால் அடிக்கு இடம் தேவை என்றாகி விட்டது. மூன்றாம் அடிக்கு இடம் இல்லையே. ஆக நீ அதற்காக என்ன தரப் போகிறாய்? மகாப்பிரபோ! இந்தப் பலிச்சக்கரவர்த்தியை நீங்கள் அறியாதவர் அல்ல. எப்போதும் நான் கொடுத்த வாக்குறுதியை மீறமாட்டேன். மூன்றாம் அடிக்குத் தங்களுக்கு இடம் வேண்டும். அவ்வளவு தானே! இதோ என் சிரசின் மீது தாங்கள் காலடியை வைக்கலாம். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக் கொள்ள சித்தமாகவே இருக்கிறேன். இச்சமயம் வருண பாசத்தால் பலி கட்டுப்பட்டான். அங்கே பிரகலாதன் வந்தான். வாமனரை வணங்கினான். அவனை சாஷ்டாங்கமாக பலியால் விழுந்து வணங்க முடியவில்லை. வருணபாசத்தினால் கட்டப்பட்டதுதான் காரணம். ஆகவே தன் தலையைத் தாழ்த்தி தன் பாட்டனாகிய பிரகலாதனுக்கு அஞ்சலி செலுத்தினான்.

பிரகலாதன் தன் கரங்களை உயர்த்திப் பேரன் பலிக்கு ஆசி கூறிவிட்டு மகாவிஷ்ணுவிடம், பிரபோ மகாபலிக்கு இந்திரபதவியை அளித்தவரும் தாங்களே, இப்போது அதைப் பரித்துக் கொண்டதும் தாங்களே. இவை அனைத்தும் உங்கள் திருவிளையாடல்கள். அனைத்தும் நன்மைக்கே என்பது எனது கொள்கை. மகாபலியின் மனைவியும் அறிவிலிகளாக இருந்தத் தங்களைக் காத்தருள வேண்டினாள். பிரம்மாவும், தயாநிதியே! தாங்கள் கருணை கூர்ந்து பலியின் விஷயத்தில் அவனுக்குப் பரிபூரண அனுக்கிரகத்தைத் தந்தருள பிரார்த்திக்கிறேன். அப்போது பகவான் திருவாய் மலர்ந்து பிரம்மதேவனே! நான் யாருக்கு என் அருளை அளிக்க விரும்புகிறேனோ அவனுடைய செல்வத்தைப் பறிப்பேன். அப்படிச் செய்யாவிட்டால் அவன் செருக்குற்று என்னைச் சிந்திக்காமல் போய்விடக் கூடும். எனினும் என்னைச் சரணடைந்தவர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். இங்கே பலி தான் செய்யப்போகும் தான தர்மத்தால் தனக்குப் பதவி பறிபோகும், துன்பம் வரும் என்று அவனுடைய குலகுரு சுக்கிராச்சாரியார் சொல்லியும், தடுத்து நிறுத்த முயன்றும் பலி தன் உறுதியைக் கைவிடவில்லை. எனது மாயைகளைத் தேவர்களும், முனிவர்களும்கூடத் தாண்டுவது அரிது. ஆக அவர்களாலும் அடைய முடியாத சிரேயஸ்ஸை பலி அடைந்து விட்டான். அடுத்து வரும் சாவர்ணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார். பிறகு பகவான் பிரகலாதனை அழைத்து, அப்பா பாகவத சிரோன்மணியாகிய நீயும் சுதல லோகத்திற்கு போகக்கடவாய். நான் அங்கு உங்களுக்கு துவார பாலகராக இருந்து ரட்சிப்பேன் என்று அனுக்கிரகித்தார். உடனே பிரகலாதன், பிரபோ தங்களால் அசுரகுலமே பெருமையடைந்தோம். அவர்களின் சார்பாக அடியேன் தங்களை நன்றியுடன் வணங்குகிறேன் என்றான். அடுத்து சுக்கிராச்சாரியாரை அழைத்த பகவான், ஆச்சாரியாரே! யாகத்தைப் பூர்த்தி செய்யாதவன் பாவத்தை அடைவான் என்பதை நீர் அறிவீர். ஆகவே பலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யவும் என ஆணையிட்டார். பின்னர் வருண பாசத்தால் கட்டுண்டிருந்த பலியை விடுவித்தார். பகவானுடைய ஆணைப்படி சுக்கிராச்சாரியாரும் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகம் நிறைவேறியதும் பலி எல்லோருக்கும் அஞ்சலி செய்தான். அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். அடுத்து பிரகலாதனோடும் தன் உற்றார் உறவினரோடும் சுதல லோகத்திற்குப் பலி போனான்.

வாமன மூர்த்தியான பகவான் பலியிடம் இருந்து பெற்ற மூவுலகங்களையும் இந்திரனிடம் ஒப்புக்கொடுத்து தேவானுக்கிரகம் செய்தவராய் அந்தர்த்தானமானார்.

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:56 am

பரசுராம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்: ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.

சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.

ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.

ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:58 am

ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.

மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.

பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.

கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:00 pm

ராம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 7வது அவதாரமாகும்: ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந் நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான். அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு  அழைத்துச் செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார். மாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய்த் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும்போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள். பின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது.

அந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன். பலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு முறியவில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்து தம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து, தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? மேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி, ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும், தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள். மந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளைப் பாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறிவிட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்துவிட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள்.

தன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான். அவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள். இந்நிகழ்ச்சிகள் நடக்கும்போது பரதன் தன் தாய்வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்குப் போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டான். அத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனான். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லிவிட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன்தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் மறுத்து விட்டான். பின்பு, அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா! உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்குப் பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான்.  அண்ணா!  அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்! என்று பரதன் பணிந்து உரைத்தான். தம்பி! அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும்! என்றான் ராமன். அண்ணா! அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தினான்.

ராமன் பாதுகைகளைக் கொடுத்தான். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்குச் சென்றான். ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான். ஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனான். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்துவிட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றான். அவர் வில்லும் அஸ்திரங்களும் கொடுத்து உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவைச் சந்தித்தான். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தான். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வரனுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது. அதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். ராமர் தன்னந்தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள். ராவணனாகிய தன் சகோதரனிடம் கர தூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும், தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா? இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும்படி சொன்னாள். இதைக் கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான்.

மாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரியச் சொன்னான். அப்படி மானாகத் திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் பொன்மானாக மாறினான். பஞ்சவடிக்குச் சென்ற ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள். லட்சுமணனோ தேவி! அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான்! என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகுதூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா! ஹே சீதா என்று அலறிய படியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய், லட்சுமணா! உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள். தேவி! இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம்! என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், நீ உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்! என ஆவேசமாகக் கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான். சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே  அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லிவிட்டு அவன் ராவணனைத் தாக்கினான். ராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்குத் திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன், தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும்படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:01 pm

அங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்கமுற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. ஜடாயுவுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்யவே சாப விமோசனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான். அவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்துவிட்டே அவருக்குக் கொடுத்தாள். அதைக் கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும்படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்கப் பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார். சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும்படி அனுமனை அனுப்பினான். அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்புக் கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான்.

காரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர, ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும்படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான். அதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக்கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்காலமாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன். அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனைப் பார்த்து, வாலியைக் கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம்! என்று தெரிவித்தான். அதைக் கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன்பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பினான். அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள். முயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியைப் பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான்.

அனுமனை அனுப்பி கடலைத் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும்படியும் ஆவேசமாகக் கூறினான். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளைச் சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். மேலும் தங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன், அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி, பிரபுவை தயவுசெய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள். அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜித்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சில கணப் பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனைப் பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்? என்று வினவினான்.

என் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, மேலும் ராவணனிடம் ஹே! ராவணா! நீ புத்திகெட்டுப் போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார்! என்று எடுத்துச் சொன்னான். அப்போது ராவணன் அவனைக் கொன்றுவிடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன். உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி, அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமனோ வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினான். அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை! என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தான். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாராகும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்கக் காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம் நீ பெற்ற வரம்; அவரும் உனது ஈனச் செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டுவிடு. சீதாதேவியை நாம் ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:02 pm

ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து, அசுரகுலத்துக்கே நீ இழுக்கு! நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் ஒருவேளை அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி, வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது, இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா! என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர். அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் மற்ற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ்திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானைத் தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால், நிகும்பலை என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான். அதை அறிந்த விபீஷணன் ராம லட்சுமணர்களிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று யாகத்தைத் தடுத்து, இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான். எனினும் ஸ்ரீராமனிடம் அவன் பணிய விரும்பவில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர். கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்ப விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள்.

அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார். தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்கச் செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த  குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர். பரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்குச் சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் இதை ராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர், மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார்.

ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது. அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப்பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை பிரித்து சென்றுவிட்டாள் என ராமர் கோபமடைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார். பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார். அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரைப் பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:03 pm

பலராமன் அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 8வது அவதாரமாகும்: கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

அசுரர்களே அரசுபரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமிதேவியை வருந்திற்று. அவள் தன் குறையைப் பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்குப் போய் புருஷக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடிப் பரந்தாமனைத் துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது. பிரம்மதேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிகிறேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும். தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யது குலத்தில் பிறந்து என் வரவுக்காகக் காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது. அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். சூரசேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான். மத்ரா என்றும் மதுரையைக் கூறுவார்கள். சூரசேனனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் உக்கிரசேனன். அவன் மகன் கம்ஸன். ராஜகுமாரியாகிய தேவகிக்கும், வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியர் திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனுமாகிய கம்ஸன் குதிரைகளின் கடிவாளத்தைக் கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க வந்து கொண்டு இருந்தது. அப்போது கம்ஸனுக்கு ஓர் அசரீரி கேட்டது. மதியற்றவனே! கம்ஸா, கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரதசாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜகுமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்கப் போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்ஸன் தேவகியைக் கொன்று விட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாளை உருவி அவளைக் கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி, நீ என் மனைவியாகிய புதுமணப் பெண்ணை, மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னியைக் கொல்லும் பாவம் மிகவும் கொடியது. மேலும் அசரீரி இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் எனச் சொல்லியது? நான் இவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள! என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கி கொண்டார். சிசுக்கள் பிறந்தவுடன் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படிச் சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்ஸன் தேவகியை விட்டுவிட்டான்.

ஒருநாள் நாரதர் கம்சனை சந்தித்து, ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும், யாதவரும் உனக்குப் பகைவர் என்று சொல்லி புவியின் பாரம்தீர பிரம்மாவால் செய்த ஏற்பாட்டையும் எடுத்துச் சொன்னார். உடனே கம்ஸன் தந்திரமாக வசுதேவரையும், தேவகியையும் சிறையிட்டான். அவர்களுடன் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்ஜியத்தையும் தான் ஏற்றுக் கொண்டாள். தன் அசுர நண்பர்களுடன் சேர்ந்து யதுகுலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான். அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தாள். அந்தக் கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து, தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு ஒரு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவகியின் வயிற்றில் ஆதிசேஷன் கருக்கொண்டிருக்கிறான். நீ அந்தக் குழந்தையை ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றி விடு. அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாகப் பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திருஅவதாரம் செய்யப் போகிறேன். இதனால் சகல மனோ பீஷ்டங்களையும் அளிப்பதற்குக் காரணமானவளாக ஈஸ்வரியாக காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார். பரந்தாமன் கட்டளைப்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகிணி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையிலும் கம்ஸன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போயிற்று என அனைவரும் கம்சனை ஏசினார்கள்.

இச்சமயம் ரோகிணியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாகப் பசுமடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்கச் செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் எனப் பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுர வதத்தைக் கிருஷ்ணன் செய்த நாளைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவிவிதன் என்ற ஒரு வானரத்தலைவன் இருந்தான். அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்றதைக் கண்டு வானரத் தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனைக் கொன்று விடுவதாகச் சொல்லி பல அட்டகாசங்களைச் செய்தான். அந்த வைராக்கியத்தில் நேரே கோவர்த்தனகிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோபியர்களுடன் ஆனந்தமாக இருந்தான். அதைப் பார்த்த வானரத் தலைவன், பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தைப் பற்றி இழுத்துக் கிழித்தான். சுக்கல் சுக்கலாகக் கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியரை அடித்து விரட்டினான். இதைப் பார்த்ததும் பலராமனுக்குக் கோபம் வந்தது. உடனே வானரனைக் கட்டிப் பிடித்தான். அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தித் தள்ளித் துன்புறுத்தினான். ஆனால் பலராமனோ அவனைப் பிடித்து கைமுஷ்டியால் அவன் தலையில் ஒரு குட்டு குட்டினான். அந்த க்ஷணத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதே போல கோவர்த்தன கிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீதாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன், கண்ணனிடம் ஓடி வந்தான்.

பலராமா! கண்ணா! இந்த மலைச்சாரலைக் கடந்து நாம் மலைக்காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனைமரங்களைக் காணலாம். அந்த பனைமரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் அங்கே நாம் போக முடியாது. காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தைக் காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிகிறான். அவனைச் சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள். அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பிரியம். அவன் பக்கத்தில் போனவர்களை அடித்துக் கொன்று தின்றுவிடுவான். எனினும் அவன் வசிக்கும் பனைக்கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறிக் கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா! அந்த பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயா? என்று ஸ்ரீதாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள்! நாம் எல்லோரும் பனங்காட்டிற்குச் செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுலச் சிறுவர்களும், பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதைக் கேட்ட தேனுகன் வேகமாக ஓடிவந்து பலராமனைத் தாக்க ஆரம்பித்தான். கழுதையாகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலைப் பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான்.  இப்படி பலமுறை சுற்றிச் சுழல விட்டு அவன் சடலத்தை பனைமரத்தின் மீது வீசினான். அந்த மரம் அல்லாது அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும், கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்
[size=13.333333969116211].[/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:06 pm

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாடினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான். எல்லாரும் வில்வப்பழம் பறித்துப் பந்தாடுவார்கள். இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன், கோகுலச் சிறுவனைப் போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியைக் கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்துச் சொன்னான். நண்பர்களே! நாம் இப்போது இரண்டு கட்சிகளாகப் பிரிவோம். ஒரு கட்சிக்குப் பலராமன் தலைவன், மற்றொரு கட்சிக்கு நான் தலைவன். ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அவனைத் தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லாரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்த விளையாடினர். ஓடி விளையாடிய ஓட்டப் பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனைத் தூக்கி சுமந்து கொண்டு ஓடினான். அப்படி ஓடியவன், ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கிவிட வேண்டியவன், பலராமனைக் கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓடஓட பலராமன் பாரம் அரக்கனாகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது. அரக்கன் சுமை தாங்க மாட்டாமல் பலராமனைத் தொப் என்று கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிறிக் குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச் என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலையெனச் சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும், பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கித் துரத்தினான். பலராமனை மங்கையரைக் காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு, கண்ணன் சங்கசூடனைத் துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

மகாபாரதத்தில் பலராமன்: பலராமருடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸலாவை, துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்து விட்டால், பலராமனும், அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும், இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான். இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா
சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். சகுனி துவராரகைக்கு வரும் வழியில் துர்சகுனங்கள் தோன்றின. அவைகளைப் பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான். சாதுர்யமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றித் தன் மனைவி ரேவதியைக் கலந்து பதில் சொல்வதாகச் சொன்னான். அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள். ரேவதி சம்மதம் தந்ததும் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனைக் கலந்தான். அத்துடன், வத்ஸலாவை லெட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிக திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன், அண்ணா! தர்மத்தைப் பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தைப் பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படித் தழைத்து ஓங்கும்?  நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்குக் கொண்டு வர வேண்டியவனாக இருக்கிறேன். முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்திராதேவி தன் புதல்வன் அபிமன்யூவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தைச் சுற்றி வந்தோம். அப்போது அபிமன்யூவும் வத்ஸலாவும் சதிபதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக் கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் விந்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய்? உனக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா? என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்றிரண்டு ஞாபத்திற்கு வருகிறது. இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீதான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு? சும்மா சொல் என்றான் பலராமன். கிருஷ்ணன் தொடர்ந்து சொன்னான், அண்ணா! அருமைத் தங்காய் சுபத்திரை! இந்த இரண்டு பேரும் தம்பதிகளே இதில் என்ன சந்தேகம். மேலும் வத்ஸலையை அபிமன்யூவுக்குக் கொடுப்பதில் நாம் ஏதாவது குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டுமா என்ன? என்றைக்கு இருந்தாலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யூவுக்குப் பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்குக் கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர், பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்குக் கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே, நான் ஒரு நாளும் வாக்கு மாறமாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்திய வாக்கைக் காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:07 pm

அதைக் கேட்ட பலராமன், கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தில் பூபதிகளாக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போதோ அவர்கள் தங்கள் ராஜ்யம், சொத்து, சுகம் இழந்து வனவாஸத்தில் அல்லவா இருக்கிறார்கள்? நமது சகோதரி மகன் அபிமன்யூவோ நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸலையை அவனுக்குக் கொடுக்க யார் சம்பதிப்பார்கள்? என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான்: அண்ணா! இனி உங்கள் இஷ்டம். அண்ணியும் இதற்கு சம்பதிக்கிறாள் என்னும் போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயன் இல்லை. எல்லாம் பகவத் சங்கற்பம் போல் நடக்கும் என்பதை மறந்துவிடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்குப் போய்விட்டான். சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். சகுனியை மீண்டும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று பலராமன் அவர் கையில் தன் சம்மதத்துடன் வத்ஸலா லெட்சணன் திருமணத்திற்கு லக்கினப் பத்திரிக்கையைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அஸ்தினாபுரத்திற்குத் திரும்பி, நடந்த விவரங்களை துரியோதனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்னப் பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டாடினான். உடனே தன் மனைவி பானுமதி, மகன் லெட்சணன், மாமா சகுனி மற்றும் உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான்.  செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்ரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பிவிட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்ரையும், அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடி சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரியவந்ததும், இருவரும் கிருஷ்ணனின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதையான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார். ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யூ-வத்ஸலா திருமணம் நடைபெற்றுவிடும். எனினும் அதை நீங்கள் தான் முன்னின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்றார். அவர்கள் தங்கள் கட்டளையை சிரம்மேல் தாங்கி செய்கிறோம்! என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமைக் குழந்தை வத்ஸலா படுத்துக் கிடக்கிறாள். அவளை அங்கிருந்து எடுத்துக் கொண்டு சுபத்திரையிடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைத்திருக்கும் திருமணப் பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்களைக் கொண்டு அலாக்காகத் தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனாதியருக்கு உங்கள் இஷ்டம் போல் , அவர்கள் பாடம் கற்கும்படி, மானபங்கம் செய்து விடுங்கள். பின் தேவலோகத்திலிருந்து திருமண காரியங்களுக்குப் புரோகிதம், வேள்வி, மேள தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்தத் தேவர் குழாம் வந்ததும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார். வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்குச் சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியரைக் கண்டு, அவர்களைப் போல மாற்றருக் கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளைத் தட்டி எழுப்பினார்கள். அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்குப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே வத்ஸலாவிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி கொடுத்தாள். உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லி, அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யட்சர், தேவதேவியர், தெய்வ ரிஷிகளைத் திருமணம் நடக்க இருக்கும் இடத்திற்கு வரச் செய்து கல்யாண சாபக் கிரியத் திரவியத்திற்கும் தேவ துந்துபி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமணப் பந்தலுக்கு எழுந்தருளினார். அங்கே தன் தங்கை சுபத்திரா, மருமகன் அபிமன்யூ மற்றும் புதுப்பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான் பகவான். பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸலாவுக்கும் அபிமன்யூவுக்கும் விவாக சுபமுகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதர் போலத் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகன் வத்ஸலையைக் காணாமல் தவித்து, கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப்பின் வத்ஸலா விவாகமான சேதியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்குத் தெரிவித்தார். அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யூ வத்ஸலாவைத் தன் அரண்மனைக்குத் திருமண ஊர்வலமாக நாததுந்துபிகள் முழங்க வெகு விமரிசையாக அழைத்து வந்தான். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர், படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வமங்களமும் கிடைக்கும்.

சாம்பன்-லட்சுமளை திருமணம்: துரியோதனனுக்கு லட்சுமளை என்ற ஒரு பெண் இருந்தாள். அவள் திருமணத்தை முன்னிட்டு அவன் சுயம்வரம் ஏற்படுத்தினான். சுயம்வரத்துக்கு வந்த சாம்பன் லட்சுமளையைத் தூக்கிச் சென்றான். இந்த சாம்பன் கிருஷ்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த புத்திரன். துரியோதனாதியரும் அவனைச் சேர்ந்தவர்களும் படையுடன் அவனைத் துரத்தி வந்தார்கள். பின் அவனுடன் யுத்தம் செய்தனர். சாம்பன் அனைவரையும் நன்கு தாக்கினான். எனினும் பீஷ்மரும் துரோணரும் கௌரவ சேனையில் இருந்ததால் அவனைச் சிறைப்படுத்தினார்கள். இதைக் கேள்விப்பட்டதும் பலராமன் உத்தரவோடு அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தான். துரியோதனா! என்ன காரியம் செய்தாய்? தனி ஒருவனாக நின்று போராடிய சாம்பனை வீரர்களுடன் நீ சுற்றிவளைத்துச் சிறைபடுத்திவிட்டாயே? இது என்ன நியாயம்? உனக்கு நாங்கள் உறவினர் என்பது மறந்து போயிற்றா? நமக்குள் விரோதம் வேண்டாம் என்று நான் எத்தனையோ தடவை எடுத்து சொல்லியும் நீ பகைமை பாராட்டுகிறாய். ஆக நீ சாம்பனை விடுவித்து அவனுக்கு லட்சுமளையை விவாகம் செய்து கொடு! என்று பலராமன் சொன்னான். அவன் சொன்னைதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன் பலராமனையும் அவன் குலத்தையும் இழிவாகப் பேசினான். அதனால் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. உங்களோடு சண்டை போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. இதோ பார் க்ஷண நேரத்தில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன் பார்! என்று சொல்லித் தான். அடுத்த நொடிப் பொழுதில் அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவதுபோல் ஆட்டம் கண்டது. கங்கையில் நகரம் மூழ்கிப் போகும் என்ற பயம் தோன்றியது. உடனே துரியோதனன் பலராமன் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அத்துடன் லட்சுமளையை சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான். அவ்வாறு துரியோதனன் மன்னிப்புக் கேட்டு வழிக்கு வந்ததும் தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமன் நிலைப்படுத்தினான்.

பலராமன் தீர்த்த யாத்திரை: துவாரகையில் கிருஷ்ணனும் பலராமனும் இருந்த சமயம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே இருந்த விரோதம் முற்றியது. இரு சாராரும் யுத்த சன்னத்தராக இருக்கிறார்கள் என்ற சேதி பலராமனுக்கு எட்டியது. இரு சாராரும் யுத்த சன்னத்தராக இருக்கிறார்கள் என்ற சேதி பலராமனுக்கு எட்டியது. இருசாராரும் உறவினர்களே. ஆக அவர்கள் தம்மைப் போருக்கு உதவ கேட்கும் போது தாம் யாருக்கு உதவுவது என்ற தர்மசங்கடமாக சூழ்நிலையை எண்ணிப் பலராமன் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பினான். ஒவ்வொரு தலமும் தரிசித்து தீர்த்த யாத்திரையாக ஆங்காங்கே உள்ள பிராமணோத்தமர்களுக்கு பலராமன் தான தருமங்கள் செய்து கொண்டே வந்தான். நைமி சாரண்யத்திற்கு வந்தான். அங்கே எல்லா மகரிஷிகளும் சந்திரயாகம் செய்து கொண்டு இருந்தார்கள். அனைவரும் பலராமனைக் கண்டதும் அகமும் முகமும் மலர எழுந்து நின்று அவனை வரவேற்று நமஸ்காரம் செய்தனர். சூதர் மட்டும் எழுந்திருக்கவே இல்லை. இதைக் கண்டதும் பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. பதினெட்டுப் புராணங்களையும் மற்றவர்களுக்குத் தாம் தானே உபதேசம் செய்தோம் என்ற கர்வத்தால் இப்படி எழுந்திராது இருந்தார் என்பதைப் பலராமன் உணர்ந்தான். கையில் ஒரு தர்ப்பையை எடுத்தான். மந்திரித்து அஸ்திரமாகப் பிரயோகம் செய்தான். அது சூதருடைய தலையைத் துண்டாக்கிச் சென்றது. அதைப் பார்த்த மற்ற மகரிஷிகள் பலராமனைப் பெரிதும் வேண்டினார்கள்.ஹே பிரபோ! சூதர் செய்த குற்றம் பெரிதே. இருந்தாலும் எங்களைக் கிருதார்த்தர்களாக்கப் பதினெட்டு புராணங்களையும் எங்களுக்கு ஓதுவித்தவர் சூதர் அல்லவா? அவரை நாங்கள் கௌரவித்து வந்தோம்.

இனியும் அவ்வாறு நாங்கள் நடந்து கொள்ள, தாங்கள் அவர் பிழை பொறுத்து அவரை உயிர் பெற்று எழச் செய்ய வேண்டும் என மன்றாடினார்கள். அதனால் சூதருக்கு இரங்கி அவரை உயிர்த்தெழச் செய்தான் பலராமன். அதன் பிறகு சூதர் தூங்கி எழுந்தது போல எழுந்து நின்று பலராமனை வணங்கினார். அங்கு அந்த முனிவர்களுக்கு பல்லவன் என்ற அரசன் மிகவும் தொல்லை கொடுத்து வந்தான். இந்தப் பல்லவன் அகஸ்தியரால் முன்பு சம்கரிக்கப்பட்ட இல்லவன் வாதாபி என்ற இரு அசுரர்களில் இல்லவனுடைய மகன் ஆவான். முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவனையும் பலராமன் அழித்தான். நாடெங்கிலும் சென்று தீர்த்த யாத்திரை முடித்து குருஷேத்திர யுத்தம் முடிவடையும் நேரம் அங்கே பலராமன் வந்தான். பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருந்தது. பீமனும் துரியோதனனை கதையைக் கொண்டு பலமாகத் தாக்கினான். அப்படியே துரியோதனனும் மிகவும் ஆக்ரோஷமாகச் சண்டை செய்து கொண்டு இருந்தான். பலராமன் இரண்டு பேரையும் பார்த்து சண்டையை நிறுத்தி சமாதானமாகப் போகவும் என வலியுறுத்தினான். யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் துரியோதனன் தொடையில் பீமன் கதையால் ஒங்கி அறைந்தான். உடனே பலராமன் அலறினான்.பீமா! கதை கொண்டு பகைவனை அவனது தொடையில் தாக்குவது எந்த யுத்த தருமத்தைச் சேர்ந்தது? இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்லி பீமனைத் தாக்க பலராமன் கலப்பையைக் கையில் எடுத்தான். இதோ பீமா! என்னைத் தாக்கு என்று கத்தினான் பலராமன். உடனே கண்ணன், அண்ணா! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? தயவு செய்து கலப்பையைக் கீழே போடுங்கள். நீங்கள் தீர்த்தயாத்திரை போகும் முன்பு இங்கு நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் தெரிந்திருக்க முடியாது. துரியோதனன் ஆரம்பம் முதல் இன்று வரை தர்மத்திற்கு விரோதமாகவே நடந்து கொண்டு இருக்கிறான். திரௌபதையை அரசவைக்கு நடுவே இழுத்து வரச்செய்து அவள் சேலையை அவிழ்த்து அவமானப்படுத்தினான். அது எந்த தர்ம நியாயத்தோடு சேர்ந்தது? நீங்கள் மட்டும் அந்த சபையில் அன்று இருந்திருந்தால் அப்போதே அவனை துவம்சம் செய்திருப்பீர்கள். அன்றைய தினம் தொடையிலே கைபோட்டுத் துரியோதனன் பேசியதால் அவனை அதே தொடையில் அடித்து அது முறிய அவனை பீமன் மாளச் செய்வான் என்று திரௌபதை சாபம் கொடுத்தாள். அந்த சாபத்திற்கு ஏற்ப இந்த மரணத்தைத் துரியன் ஏற்றான்! ஆகவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்! என்றான் கண்ணன். பலராமனும் கோபத்தைத் துறந்து நிலைமை புரிந்து சாந்தம் ஆனான். பின்னர் துவாரகைக்குத் திரும்பி சென்றான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:10 pm

கிருஷ்ண அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும்: வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்ட வரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு  முறை பூமாதேவி, நாராயணனிடம், பகவானே ! பூமியில் நடக்கும் அக்கிரமங்களை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டினாள். அதற்கு நாராயணனும் சற்று பொறுமையா இருக்கும் படி கூறினார். பல காலம் கழித்து பூமாதேவி நாராயணா! தாங்கள் சொன்னது போல இன்று வரை பொறுமையுடன் தான் இருக்கிறேன். ஆனால், முனிவர்கள் செய்யும் யாகத்தைக் கெடுப்பவர்கள், நாத்திகர்கள், காமுகர்கள், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள், உழைப்பைத் திருடுபவர்கள் ஆகியோரையும் சேர்த்து சுமக்கிறேனே ! இவர்களின் எடையைத் தாங்கும் சக்தி எனக்கில்லை பிரபு ! இவர்களை அழிக்கும் அளவுக்கு பலமும் என்னிடமில்லை. புரு÷ஷாத்தமா ! என்னையும், நான் தாங்கும் நல்லவர்களையும் இவர்களிடம் இருந்து காப்பாற்று... பூமாதேவியின் புலம்பல் சத்தம் அந்த பரந்தாமனுக்கும் கேட்டது, பிரம்மாவின் காதிலும் விழுந்தது. சிவனும் கொதித்தெழுந்தார். சிவனும், பிரம்மனும், மற்ற தேவர்களும் முன்செல்ல, பூமாதேவியும் அவர்களின் பின்னால், நாராயணனைச் சந்திக்கச் சென்றனர். இவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் நாராயணனின் வரவுக்காக காத்திருந்தனர். நாராயணன் வரவில்லை. ஆனால், பிரம்மாவுக்கு ஒரு செய்தி மட்டும் வந்தது.பிரம்மனே ! பூமாதேவியின் கவலையை விடச்சொல். உலகத்திலுள்ள பாவிகளை அழிக்க நானே பூலோகத்தில் பிறக்கப்போகிறேன். அதற்கு முன்னதாக தேவர்கள் அனைவரும் பூலோகத்திலுள்ள யது வம்ச (இடையர்குலம்) குடும்பங்களில் பிறக்க வேண்டும். எனக்கு உதவியாக இருக்க வேண்டும், என்பதே அந்தச் செய்தி. பிரம்மா மகிழ்ந்தார். பூமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். சிவனும் மற்ற தேவர்களும் மகிழ்ந்தனர். தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். எல்லா தேவர்களும் யதுகுலத்தில் அவதரித்தனர்.

யதுகுலத்தின் அரசனாக இருந்தவர் சூரசேனன். இவரது புத்திரன் வசுதேவர். இவருக்கு தேவகர் என்பவரின் மகள் தேவகியை பெண் பார்த்து நிச்சயமாயிற்று. தேவகரின் அண்ணன் உக்ரசேனன் போஜகுல மக்களின் ராஜாவாக இருந்தார். அவருக்கு ஒரு மகன். பெயர் கம்சன். தேவகி கம்சனின் சித்தப்பா மகள். கம்சன் தோற்றத்தால் தான் மனிதனே தவிர, உள்ளத்தால் அசுரன். மேலும், அவன் ஒரு நாத்திகவாதி. ஒரு சுபமுகூர்த்த வேளையில் தேவகியைக் கைப்பிடித்தார் வசுதேவர். தேவகிக்கு ஏகப்பட்ட சீர் வரிசையை அள்ளிக் கொடுத்தார் தேவகர். திருமணம் முடிந்தவுடன் மணமக்களை, மணமகளின் சகோதரன் அவளது புகுந்த வீட்டில் கொண்டு விடுவது அக்கால வழக்கம். தேவகிக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இல்லையென்பதால், பெரியப்பா மகன் கம்சன் தன் தங்கையை தேரில் அழைத்துச் சென்றான். மின்னல் வேகத்தில் குதிரைகள் பறந்து கொண்டிருந்தன. அப்போது, வானம் அதிர்ந்தது. அங்கிருந்து ஒரு குரல் எழுந்தது. நில்லு கம்சா! போஜகுலத்தின் இளவரசனை இவ்வளவு தைரியத்துடன் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்து, தடுத்து நிறுத்திய மாயக்குரலே.. யார் நீ ? என்ற கம்சனுக்கு பதிலாக பயங்கர சிரிப்பொலி வானிலிருந்து எழும்பியது. மூடனே ! எமனுக்கு யாராவது தேரோட்டுவார்களா ? உன்னைப் போல் மடையர்கள் தான் உண்டா ? யார் அந்த எமன் என்கிறாயா ? உனது சகோதரியின் வயிற்றில் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை தான் அது, குரல் அடங்கிவிட்டது. கம்சன் ஆவேசமானான். அத்தனை நாளும் ஊட்டி வளர்த்த அன்புத்தங்கையுடன் விளையாடிய காலத்தை மறந்தான். அவளுக்கு அன்று தான் திருமணமே நடந்திருக்கிறது என்பதையும் மறந்தான். இந்த உலகத்து இன்பங்களையெல்லாம் எப்படி எப்படியோ துய்க்க வேண்டுமென கனாக்கண்டு கொண்டிருக்கும் அவன் மடிவதா ? ஏ தேவகி ! கேட்டாயா அசரீரியின் குரலை ! ஒழிந்துபோ ! என்பவனாய், வாளை உருவினான்.புது மணப்பெண்ணைக் கொல்வதற்கு கம்சன் வாளுடன் பாய்ந்ததைக் கண்ட வசுதேவர் கம்சனைத் தடுத்தார். மைத்துனரே ! நீர் வீரத்தில் வல்லவர். உம்மை அழிக்க யாரால் இயலும் ? அசரீரி சொல்வது உண்மையே ஆனாலும் கூட, தேவகி அதற்கு எப்படி பொறுப்பாவாள் ? அவளுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தானே உமக்கு ஆபத்து ! நான் அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உம்மிடம் ஒப்படைத்து விடுகிறேன். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யும். மேலும் மரணத்தைக் கண்டு நீர் அஞ்சுவீர் என நான் கனவிலும் எண்ணவில்லை. மரணத்தைக் கண்டு மனிதன் ஏன் பயப்பட வேண்டும் ? மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அது எல்லாருக்கும் வந்து சேரும். அது எந்தநாள் என்பதும் குறிக்கப்பட்ட ஒன்றுதான். அப்படியிருக்க, தைரியசாலிகள் மரணத்தைக் கண்டு அஞ்சுவார்களா ? தேவகியின் குழந்தையால் இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் உமக்கு மரணம் சம்பவிக்கத்தானே போகிறது. உனக்கு வயது 25 என்றால், நீர் ஏற்கனவே 25 ஆண்டுகள் இறந்து விட்டீர். மனிதன் தான் கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் மரணத்தின் வாசலை நோக்கித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறான்! இந்த உண்மையை நீர் அறிந்திருந்தும், இவ்வாறு செய்வது முறையானதாக தெரியவில்லை,  என பணிவு கலந்தது போலும், அதே நேரம் அழுத்தமாகவும் தெரிவித்தார். கம்சன் கோபம் தணிந்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:11 pm

வசுதேவரே ! உமது சமாதானத்தை ஏற்கிறேன். நீர் உமது எட்டாவது குழந்தையை என்னிடம் தந்துவிடுவீர் என்பதை நான் அறிவேன். ஏனெனில், நீர் சத்தியசீலர், என்ற கம்சன் அவர்களை வீட்டில் கொண்டுபோய் விட்டான். காலம் ஓடியது. தேவகி முதல் குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தையுடன் கம்சனின் அரண்மனைக்குச் சென்றார் வசுதேவர். கம்சன் ஆச்சரியப்பட்டான். வசுதேவரே ! உலகில் சொன்ன சொல் காப்பாற்றுபவர்கள் மிகவும் குறைவு. நீர் உயர்ந்த ஆத்மா என்பதை நிரூபித்து விட்டீர். என் பாசத்திற்குரியவரே ! உமது பண்பை மதிக்கிறேன். இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம். உமது எட்டாவது குழந்தை தான் என்னைக் கொல்லும் என்ற விதி இருக்கிறது. எனவே, இந்தக் குழந்தையை நீரே வளர்த்துக் கொள்ளும், என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான். வசுதேவர் சென்றதும், நாரதர் கம்சனைக் காண வந்தார். கம்சன் அவரை வரவேற்று ஆசனமளித்து உபசரித்தான். அவர் கம்சனிடம், உன் மீது கொண்ட அன்பின் காரணமாக நான் ஒரு ரகசியத்தை உனக்குச் சொல்கிறேன். தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறக்கப்போவது உறுதி. அது விஷ்ணுவின் அவதாரம் என்பதைத் தெரிந்து கொள். அதற்கு முன்னதாக யது குலத்தில், தேவர்களே குழந்தைகளாக வந்து பிறக்கப் போகிறார்கள். உன் தங்கைக்கு பிறந்த முதல் குழந்தையும், இனி பிறக்கப்போகும் குழந்தைகளும் எட்டாவது குழந்தைக்கு உதவி செய்வதற்காகவே பிறக்கப் போகின்றன. எனவே, நீ உன் தங்கைக்கு பிறக்கும் குழந்தைகளைக் கொன்றுவிடு. அதில் எது விஷ்ணு அம்சமுடையது என்று கண்டுபிடிப்பது கஷ்டம், என்று தூபம் போட்டார். அவ்வளவு தான் ! கம்சனின் மிருக குணம் தலைதூக்கி விட்டது. நாரதரே ! காலம் முழுவதும் நான் உமக்கு கடமைப்பட்டவன். இனி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், என்றவன், யாரங்கே ! உடனே வசுதேவரையும், தேவகியையும் கைதுசெய்து பாதாள சிறையில் அடையுங்கள், என்றான். சில மணி நேரத்தில் வசுதேவரும், தேவகியும் சிறையில் தள்ளப்பட்டனர்.

வசுதேவருக்கு பிறந்த குழந்தைகள் அஷ்டவசுக்கள் எனப்பட்டனர். இவர்கள் ஒரு சாபத்தின் விளைவாக பூமியில் பிறந்து, உடனே இறந்து இறைவனை அடைய விரும்பினர். அதன்படி அவர்களில் ஆறுபேர் இறையடி சேர்ந்து விட்டனர். இப்படியிருக்க, ஏழாவது குழந்தையாக தேவகியின் வயிற்றில் பிறக்க கிருஷ்ணர் தன்னைத் தாங்கும் அனந்தனை (நாகம்) அனுப்பி வைத்தார். கிருஷ்ணாவதாரத்துக்கு முந்தைய அவதாரத்தில், அனந்தன், ராமனின் தம்பி லட்சுமணனாகப் பிறந்து, சேவை செய்தார். அதற்கு நன்றி சொல்லும் வகையில், இப் பிறப்பில் தனது அண்ணனாக அனந்தனை அனுப்ப முடிவெடுத்தாராம் பரமாத்மா. இவரே பலராமர் எனப்பட்டார். கிருஷ்ணரிடமே பல மாயசக்திகள் உண்டு என்றும், அதில் ஒரு சக்தியே அனந்தனாகிய பலராமர் என்றும் அதிதீவிர கிருஷ்ண பக்தர்கள் சொல்வார்கள். அதாவது இறைவனை யாராலும் தாங்க முடியாது. அவரே தன்னை தாங்க முடியும். எனவே, கிருஷ்ணரே அனந்தனாகிய பாம்பு வடிவில் இருந்தார் என்றும் சொல்வதுண்டு. இதே கிருஷ்ணருக்குள், இன்னொரு பெண் சக்தியும் அடங்கிக் கிடந்தது. அவளுக்கு யோக மாயை எனப்பெயர். அவளை கிருஷ்ணர் வரவழைத்தார். மாயா ! நீ பூலோகம் செல். மதுராபுரி சிறையிலே தேவகியும், வசுதேவரும் சிறைப்பட்டு கிடக்கின்றனர். அவர்களின் வயிற்றில் நான் அவதரிக்கப் போகிறேன். அதற்கு முன்னதாக எனது மற்றொரு சக்தியான அனந்தன் தேவகியின் வயிற்றுக்கு போய் விட்டான். நீ, யதுகுலத்தின் தலைவரும், கோகுலத்தில் வசிப்பவருமான நந்தகோபனின் மனைவி யசோதையின் கருவில் உருவெடு. சில காலம் கழித்து, நீ தேவகியின் வயிற்றிலுள்ள கருவை மாய சக்தியால் அகற்றி, வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றிவிடு. பின்னர் நடப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார். தலைவணங்கி அவரது உத்தரவை ஏற்ற யோகமாயை, பரந்தாமா ! என் பங்கு பூலோகத்தில் என்ன ? என்றாள்.

தங்கையே ! பூலோக மக்கள் உன்னை என் சகோதரியாக கருதுவர். உன்னை துர்க்கை என அழைப்பர். வைஷ்ணவி, சாமுண்டி, காளி, விஜயா, சாரதா, அம்பிகா இப்படி பல பெயர்களை சூட்டுவர். புஷ்பம், பழங்களால் ஆராதிப்பர். மேலும் உன்னை நம்பி யாகங்கள் பல நடத்தி, தங்கள் சொந்த நலனை எல்லாம் நிறைவேற்றித்தர வேண்டுவர். தகுதியானவர்களுக்கு நீ தகுதியானதைச் செய்வாய், என்றார். மகிழ்ச்சியடைந்த துர்க்கை பூமிக்கு வந்து யசோதையின் வயிற்றில் கருவானாள். சில காலம் சென்றதும், தேவகியின் வயிற்றில் இருந்த பலராமனை, ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றி விட்டாள். இதன்மூலம் கிருஷ்ணர், தன்னோடு என்றும் இருக்க வேண்டிய ஒரு சக்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். பலராமனின் கரு பலவந்தமாக இன்னொரு பெண்ணின் வயிற்றுக்கு ஈர்க்கப்பட்டதால் அவரை ஆகர்ஷணன் என்றும், ரமணன் என்றும் சொல்வார்கள். அவரை யார் உளமார நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அவரே குழந்தையாவார் என்பது இதன் உட்கருத்து. ஆறு குழந்தைகளைக் கொன்ற பாவமும், ஒரு குழந்தை கர்ப்பத்திலேயே கலைந்து போகவும், தன்மூலம் தேவகிக்கு ஏற்பட்ட பயமே என்பதால் அதையும் ஏழாவது கொலையாகக் கருதி, அதனால் தனக்கு துன்பம் விளையுமோ என்று அச்சமும் கொண்டிருந்தான் கம்சன். கிருஷ்ணர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்தார். ஒரு நன்னாளில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை வசுதேவர் பார்த்தார். பரவசத்தின் உச்சிக்கே போய்விட்டார். ஆம்... குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன. மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன். பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம். இதெப்படி சாத்தியம்? தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.

தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து... உஹும்... தரிசித்துக் கொண்டிருந்தாள். கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்த வேளையில், அண்ணன் கம்சன் அவளது நினைவில் ஊசலாடினான். அவள் அந்த தெய்வக் குழந்தையிடம், பரந்தாமா ! உலகம் உய்விக்க வந்த விளக்கே ! தாங்கள் உங்கள் சொந்தக் கோலத்தில் எங்களிடம் எப்படி வளர முடியும் ? என் அண்ணன் கம்சன் உங்களைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறான். அத்துடன் எங்களையும் அவன் கொன்று விடுவான். என்னைத் திருமணம் செய்த பாவத்திற்காக, என் கணவர் உயிர்விடுவது எவ்வகையில் நியாயம் ? தாங்கள் தான் இதற்கொரு வழி சொல்ல வேண்டும், என பிரார்த்தித்தாள். அந்தக் கணமே குழந்தை பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். என்னைப் பெற்ற புண்ணியவதிக்கும், என் தந்தை வசுதேவருக்கும் நமஸ்காரம். தாயே ! முன்னொரு பிறவியில் தந்தை வசுதேவர் சுதபா என்ற பெயரில் ஒரு நாட்டின் மன்னனாக இருந்தார். தாயான நீ பிருச்னி என்ற பெயருடன் அவரது மனைவியாய் இருந்தாய். அப்போது இந்தப் பூவுலகில் மக்கள் தொகை குறைந்தது. இதனால் கலவரமடைந்த பிரம்மன், உன்னை அணுகி மக்கள்தொகையை அதிகரிக்க உதவ வேண்டும் என்றான். ஆனால், நீயும், சுதபாவும் ஐம்புலன்களையும் அடக்கி விரதம் ஒன்றை அனுஷ்டித்துக் கொண்டிருந்தீர்கள். இதனால் பிரம்மாவுக்கு நீங்கள் கட்டுப்படவில்லை. கோபமடைந்த பிரம்மன் புயலை உருவாக்கி தவத்தை கெடுக்க முயன்றான். ஆயினும், உங்களை இயற்கை கூட ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனெனில்,  உங்கள் இதயம் பரிசுத்தமாயிருந்தது. பரிசுத்தமான மனம் எங்கே உள்ளதோ, அங்கே இயற்கை பாதிப்பை ஏற்படுத்தாது.

இப்படி 12 ஆயிரம் தேவஆண்டுகள் விரதம் அனுஷ்டித்தீர்கள். உங்கள் மனம் முழுவதும் என்னைப் பற்றிய சிந்தனையே தவிர வேறில்லை. அப்போதும், நான் உங்களுக்கு காட்சி தந்து, என்ன வரம் வேண்டுமெனக் கேட்டேன். நீங்கள் வைகுண்டம் வர விரும்புவீர்கள் என எண்ணினேன். ஆனால், நீயோ, பரந்தாமா ! நீ என் வயிற்றில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்றாய். நானும் சம்மதித்தேன். அதன்பின் நீங்கள் தவ வாழ்க்கையை நிறுத்திவிட்டு இல்லறத்தில் புகுந்தீர்கள். நான் உங்கள் வயிற்றில் பிருச்னிகர்பா என்ற பெயரில் மகனாய் பிறந்தேன். அடுத்த பிறவியில், நீங்கள் காஷ்யபர் - அதிதி என்ற தம்பதியராய் பிறந்தீர்கள். அந்தப்பிறவியில் நான் உபேந்திரன் என்ற பெயரில் உங்களுக்கு பிறந்தேன். இப்போது, கிருஷ்ணன் என்ற பெயரில் பிறந்திருக்கிறேன். நீங்கள் வைகுண்டம் வந்து விட வேண்டியது தான். பல பிறவிகளில் என்னை அன்புடன் மகனாய் வளர்த்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கம்சனிடமிருந்து உங்களைக் காப்பது என் கடமை. நீங்கள் உடனே என்னை கோகுலத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே வசுதேவரின் நண்பர் நந்தகோபனுக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். என்னை நந்தகோபரின் மனைவி யசோதையிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு சாதாரண குழந்தையாக உருமாறி விட்டார். பின்னர், ஒரு குழந்தை பிறந்துள்ள நினைவும், தன்னை கோகுலத்துக்கு கொண்டு போகச் சொன்னதையும் தவிர மற்ற எல்லாவற்றையும், தன் தாய் தந்தைக்கு மறக்க செய்து விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். கனவிலிருந்து விழித்தவர் போன்ற வசுதேவர், குழந்தையைப் எடுத்துப் போகும் ஏற்பாட்டைச் செய்தார். அவர் குழந்தையைத் தொட்டாரோ இல்லையோ, கையிலிருந்த விலங்குகள் கழன்றுவிட்டன. சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்களோ மயக்கம் வந்தது போன்ற தூக்கத்தில் கிடந்தனர். அங்கு கிடந்த ஒரு பழைய கூடையில் தன் அங்கவஸ்திரத்தை விரித்தார். குழந்தையை அதற்குள் வைத்தார். பெண் குழந்தை பெற்றிருந்த யசோதை, மயக்கத்தில் இருந்து எழவில்லை. அவளுக்கு தனக்கு குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்வு இருந்ததே தவிர, என்ன குழந்தை பிறந்தது என்று பார்ப்பதற்குள் மயக்கமாகி விட்டாள். சப்தமின்றி, வசுதேவர் கண்ணனை யசோதையின் அருகில் கிடத்தினார். பெண் குழந்தையை எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு சிறைக்கு வந்து சேர்ந்தார். சந்தேகமின்றி இருக்க விலங்குகளை பூட்டிக் கொண்டார். குழந்தை வீறிட்டு அழவே, காவலர்கள் விழித்தனர். தேவகிக்கு குழந்தை பிறந்து விட்டதென்ற செய்தி கம்சனுக்கு பறந்தது. மிகப்பெரிய வாளுடன் வசுதேவர் பூட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தான் கம்சன். என் உயிரைக் குடிக்க வந்த அந்த எமன் எங்கே ? அவனுக்கு எமனாய் நான் வந்திருக்கிறேன், என்ற கம்சனின் பாதத்தில் விழுந்தாள் தேவகி. அண்ணா ! ஏதோ ஒரு அசரீரி சொன்னது என்பதற்காக, என் ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்றாய். இப்போது பிறந்திருப்பது பெண். அசரீரியின் வாக்கு உண்மையே என்றாலும் கூட, என் வயிற்றில் பிறக்கும் எட்டாவது ஆண்பிள்ளையால் தான் உனக்கு மரணமே தவிர, பெண்ணால் இல்லை. பார்த்தாயா, இது பெண் குழந்தை, என குழந்தையை நீட்டினாள். கொடிய உள்ளம் கொண்ட கம்சன், அவள் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை. குழந்தையின் கால்களைப் பிடித்தான். தலையை சுவரில் ஓங்கி அடித்தான். அவ்வளவு தான் ! மதுராபுரியே கிடுகிடுக்கும் வகையில், ஓங்கி ஒலித்த சிரிப்புடன் ஒய்யாரமாய் வளர்ந்து நின்றது அந்தக் குழந்தை. அந்த நடுநிசியில் சூரியன் உதித்து விட்டது போல பிரகாசம். கையில் சங்கு, சக்கரம் மின்ன, திரிசூலம், வாள் பளபளக்க, மண்டை ஓடுகள் மாலையாய் கழுத்தை அலங்கரிக்க அந்தப் பெண் ஆங்காரமாய் சிரித்தாள். அவள் விஷ்ணுவின் சகோதரி என்பதாலும், உலகைக் காக்கப்போகும் ரட்சகி என்பதாலும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல், வானத்து தேவர்களும், கந்தர்வர்களும், கிங்கரர்களும் அந்த தேவியைத் தரிசிக்க பரிசுப் பொருள்களுடன் வந்து அவளை பணிந்தார்கள். துர்க்கை கர்ஜித்தாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:12 pm

கொடியவனே ! உன் தங்கைக்கு நீ இழைத்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமா ! மனிதனாய் பிறந்தவன் அழிவது உறுதி என்று தெரிந்திருந்தும், இவ்வுலகம் உள்ளளவும் உயிர் வாழப்போவதாக எண்ணி, அப்பாவி குழந்தைகளைக் கொன்றாயே ! உன்னைக்கொல்லப் போகிறவன் பிறந்து விட்டானடா ! அவன் ஒளிந்து வளர்கிறான் உன் அழிவு நெருங்கிவிட்டது. இவர்களை விடுதலை செய்து ஒரு புண்ணியத்தையாவது தேடிக்கொள், என்றாள். அத்துடன் அவள் மறைந்து விட்டாள். கம்சனின் மனம் அந்தக்கணமே மாறிவிட்டது. அம்மா தேவகி ! என் அன்பு சகோதரியே ! உனக்கு எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்து விட்டேன். என் கொடுமைக்கு பலனாக பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) என்னைப் பற்றும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே என்னை இருவரும் மன்னிக்க வேண்டும் என்று கூறி வசுதேவரின் கால்களில் விழுந்து வணங்கினான். தன்னையுமறியாமல் அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது. வசுதேவர் அவனைத் தேற்றும்படியான சூழ்நிலை உருவாகி விட்டது. அதன்பின் கம்சன் ஒருநாள் அரசவையில் வீற்றிருந்தான். அவனுடைய சகாக்கள் வந்தனர். கம்சா ! நீ ஏதோ தியாகி போல உன் தங்கையை விடுவித்து விட்டாய். உன்னைக்கொல்ல பிறந்திருப்பவன் விஷ்ணு என்பதை நீ அறிவாய். எங்கோ, அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகிறது. அவன் வளர்ந்து அதன்பிறகு தானே உன்னைக் கொல்ல வருவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டாயோ ? அசரீரி சொன்னதை ஒரு பொருட்டாக நீ மதிக்கவில்லை. இதன் பலனை நீ அனுபவிக்கத்தான் போகிறாய் என கம்சனை எச்சரித்தனர். உடனே கம்சன் அரசவையைக் கூட்டி நமது அதிகார எல்லைக்குள் கடந்த பத்து நாட்களுக்குள் பிறந்துள்ள எல்லாக் குழந்தைகளையும் கொன்று விடுமாறு கூறினான். இந்த தகவல் வசுதேவருக்கு தெரிய வந்தது. நந்தகோபருக்கு இதை தெரிவித்து, கோகுலத்தில் இருக்கும் தன் குழந்தைகளான கிருஷ்ணரையும், பலராமரையும் பாதுகாக்க ஏற்பாடு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இந்நேரத்தில், தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவே நம்பிவிட்ட கோகுலத்தலைவர் நந்தகோபரும், அவர் மனைவி யசோதையும் குழந்தைக்கு ஜாதகம் கணிக்க முடிவெடுத்தனர். தன் மகன் கிருஷ்ணரின் ஜாதக கணிப்பு திருநாளை, மலை போல் செல்வத்தை குவித்து வைத்து கொண்டாடினார் நந்தகோபர். பசுக்களையும், பொன்னையும், நவரத்தினங்களையும், தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என வேதம் சொல்கிறது. பிராமணர்களுக்கு இத்தகைய தகுதி இருந்தால், அவர்களுக்கு தங்கள் பொருளை தானமாகக் கொடுத்து, தங்களைப் புனிதப் படுத்திக் கொண்டனர் கோகுலவாசிகள். நந்தகோபர் மிக அதிகமாகவே தானம் கொடுத்தார். ஏனெனில் அவர் வீட்டில் லட்சுமியின் மணவாளனே பிறந்திருந்ததால், செல்வத்திற்கு ஏது குறை ! கிருஷ்ணனுக்கு மிக சிறப்பாக ஜாதக்கணிப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதன்பிறகு, கோகுலத்தின் சார்பில் கம்சனுக்கு செலுத்த வேண்டிய வரித்தொகையை செலுத்த நந்தகோபர் மதுராபுரி வந்தடைந்தார். அவரை வசுதேவர் சந்தித்தார். குழந்தைகளைக் கொல்ல கம்சன் முடிவெடுத்திருக்கிறான் என்ற விபரத்தை நேரடியாகச் சொல்லி அவரை பயமுறுத்தாமல், கோகுலத்தின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் வரப்போகிறது. நீங்கள் கவனமாக இருப்பது நல்லது என்று மட்டும் சொல்லி வைத்தார். வசுதேவர் க்ஷத்திரியர், நந்தகோபர் வைசியர். இருப்பினும், இவர்கள் சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். தன் நண்பர், தனக்கு தந்த எச்சரிக்கையை மறக்காத நந்தகோபர் மிக கவனமாகவே இருந்தார். இதற்குள் கம்சன் குழந்தைகளைக் கொல்வதற்குரிய ஏற்பாட்டை செய்து முடித்து விட்டான்.

சூன்யக்காரியான பூதனா என்பவளை அழைத்தான். குழந்தைகளைக் கொல்லும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான். இப்படிப்பட்ட சூன்யக்காரிகளை கேசரீ என்பார்கள். சூன்யம், தெய்வ வழிபாட்டில் ஊறிப்போனவர்களை தாக்காது. கோகுலத்திலும் அதுவே நிகழ்ந்தது. பூதனா, கோகுலத்திற்குள் நுழைந்தவுடன் தன்னை பேரழகியாக மாற்றிக் கொண்டாள். முகத்தில் கனிவை படரவிட்டுக் கொண்டாள். அவளது அழகும், போலி சாந்தமும் அங்கிருந்தவர்களின் கண்களை ஏமாற்றி விட்டது. அவ்வூர் மக்கள் அந்தப் புதியவளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கவில்லை. நல்லவர்களின் கண்களுக்கு கெட்டது கூட நல்லதாகத்தான் தெரியும், இதைப் பயன்படுத்திக் கொண்டு, தன் மார்பில் நஞ்சை தடவி பல குழந்தைகளை அவர்களது பெற்றவர்கள் அறியாமல் கொன்றாள். அவள் நந்தகோபரின் மாளிகைக்குள் நுழைந்தாள். அவள் மீது சந்தேகம் கொள்ளாத வாயிற்காவலர்கள், அவள் யசோதையைப் பார்க்க வந்திருக்கலாம் எனக் கருதி தடுக்கவில்லை. யாரும் அறியாமல், கிருஷ்ணன் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். குழந்தையைப் பார்த்ததும் பூதனாவின் மனதில் ஏதோ சஞ்சலம். அது சாதாரண குழந்தையாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு சக்தி அதனுள் மறைந்து கிடப்பதைப் புரிந்து கொண்டாள். இருப்பினும், கம்சனின் கட்டளையை அவளால் மீற முடியுமா ? குழந்தையை மடியில் வைத்தாள். அவள் மார்புக்காம்பை வாயில் திணித்தாள்.கிருஷ்ணன் விஷப்பாலோடு அவளது உயிரையும் சேர்த்துக் குடித்தான். அவள் அலறினாள். கோகுலத்தையே அதிர வைத்தது அந்த அலறல். அது மட்டுமா ! அவளது அசுர உருவம் வெளிப்பட்டது. 12 மைல் நீளத்துக்கு அவளது உடல் நீண்டது.பூதனாவின் உடலைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. கோகுலத்தையே அதிரச்செய்த அவளது அலறல் கேட்டு, யசோதையும் ரோகிணியும் இதர கோபியர்களும் ஓடிச் சென்று கிருஷ்ணரை தூக்கினர். தங்கள் அன்புக்குழந்தையின் உயிர்காப்பாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைக்கு கண்ணேறு பட்டுவிட்டது என எண்ணி பசுவின் வாலைப்பிடித்து குழந்தையின் உடலைச்சுற்றி திருஷ்டி கழித்தார்கள்.  பசுக்கன்றுகளின் பாதத்தில் ஒட்டியிருந்த தூசை குழந்தையின் உடல் மீது தூவினார்கள். இதன் பிறகு கிருஷ்ணரை நாராயணின் 22 திருநாமங்கள் சொல்லி பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள் : நாராயணின் 22 நாமங்களை சொல்வோர் அருகில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்குவதில்லை என நம்பிய கோகுல மக்கள், மணிமான், யக்ஞர், அச்யுதா, ஹயக்ரீவர், கேசவா, விஷ்ணு, உருக்ரமா, ஈஸ்வரா, சக்ரதாரி, கதாதரா, மதுசூதனா, குபேந்திரா, தாரக்ஷயா, ஹலாதரா, ஹ்ருஷிகேசா, நாராயணா, ப்ருஷ்ணிஹர்பா, யோகேஸ்வரா, புரு÷ஷாத்தமா, கோவிந்தா, மாதவா, வைகுண்டாதிபதி, என்ற நாமங்களால் அவரைப் பூஜித்தனர். இந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பூதனா கொடுமைக்காரியாக இருந்தாலும் கூட, குழந்தைகளை கொன்றவள் என்றாலும் கூட, கடைசி நேரத்தில் கிருஷ்ணருக்கு பாலூட்டிய காரணத்தால் அவள் வைகுண்டத்தை அடைந்தாள். அவளுக்கும் முக்தியும் கிடைத்தது. அவளது உடலை கோகுலவாசிகள் எரித்த போது, அதிலிருந்து நறுமணம் கிளம்பியது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:15 pm

நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதானது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந்தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டுமெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியின் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்றுநேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார். அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர். யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர் ! இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான்.எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் இருக்க மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களுக்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவைக் கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினான். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன். இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுலத்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுலத்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பறந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரைக் காணாமல் அழுதாள். ஐயோ ! என் மகன் புழுதிப்புயலில் சிக்கிக் கொண்டானோ ! அவன் எங்கே ? என அரற்றினாள்.

த்ருணாவர்த்தன் உயரே சென்று, குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே ! குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசிகள் பார்த்தனர். கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வக் குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக்கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளித் தின்று கொண்டிருந்தார். யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா ! என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தருவேனே ! ஏன் மண்ணைத் தின்கிறாய் ? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்புகளில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார். அவள் அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ ! வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன்னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாகத் திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து தகுந்த உபசாரம் புரிந்த நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டுமின்றி, ரோகிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தையும் கொடுத்தார். ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணிக் கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்றதும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னருகே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள். தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர். பலராமனும், தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார். நந்தகோபரே ! இக்குழந்தை சாதாரண பிறவியல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவியில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்சளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக்கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக்கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்கலாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தையும் அவர் காட்டவில்லை. மாறாக, விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதைப் பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார்கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.

பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள். அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள். யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா ! உன் மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள். சரி... சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர்களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்ய வேண்டும். என உத்தரவிட்டார். அப்போது அவர்கள், தந்தையே ! நீங்கள் சொல்லும் உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தர வேண்டும். மகா விஷ்ணுவை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியாங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.

யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மனமெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடியபடியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள். அப்போது, அவளையறியாமல் அவளது மார்பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமென்ற தன் ஆசையைக் குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு, அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப்பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத்தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக்கண்ணன்! பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடுத்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந்திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்! அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத்தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான். மாயனே ! வசமாக சிக்கினாயா ? வெண்ணெயை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவாய் போலும் ! என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சித்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்துக் கட்டினாள். என்ன அதிசயம் ! எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப்பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ! அந்தக் குறும்புக்காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.

பரந்தாமா ! நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண்டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனைத்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல ! பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதானமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவையே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதைக் கண்ட நாரதர், இருவரையும் அர்ஜுன மரமாகும் படி சபித்து விட்டார். மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர்களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ்ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெருங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளித்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர். குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதரரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:16 pm

கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிடமிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுலத்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருவான். அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே, நாம் யமுனை நதிக்கரையிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில், நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்றனர். அவர்கள், விருந்தாவனத்தை அடைந்தனர். குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கும் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவனம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திருந்தது. மாடு மேய்க்கச்செல்லும் சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால், என்ன ஆச்சரியம்... ஒவ்வொருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடிதான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள். இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.

ஒருமுறை, கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான். அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன். அவனைக் கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி, தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட, பயந்த நிலையில் இருந்தனர். அகாசுரன், பூமியில் கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான். கிருஷ்ணனும், அவரது நண்பர்களும் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை. இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக் கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்டது. அவன் மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம், ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ளமுடியும். அகாசுரன் தன் உருவத்தை 12 கி.மீ. நீளத்துக்கு பெரிதாக்கி, ஒரு பாம்பின் வடிவெடுத்து கிருஷ்ணரையும், அவரது நண்பர்களையும் கொல்ல வந்தான். கிருஷ்ணரும், அவரது தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கன்று மேய்க்க வந்த சிறுவர்கள், ஒரு சர்ப்பம் வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில் ஒருவன் சொன்னான். இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால் தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவனை இந்தப் பாம்பு விழுங்கிவிட்டால் அவர்களின் நிலைமை என்னாவது ? மேலும், கஷ்ட காலத்தில் நண்பனைக் காப்பாற்றுபவனே உண்மையான தோழன். நாம், இந்த பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக் கொண்டு போய்விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான். எல்லா தோழர்களும் ஆஹா... அருமையான யோசனை என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்றுவிட்டனர். பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட்டார். அவர் நின்ற நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும் ! ஆனால், மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே .... அந்த எல்லையை அவ்வப்போது அவர் கடைபிடிக்கத்தான் செய்வார். தன் நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார். சதிகார பாம்பு வாயை மூடிவிட்டது வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கிவிட்டனர். கிருஷ்ணர் இல்லாவிட்டால் தங்கள் கதி என்னாவது என்று ! வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர் அவர்களை தன் கருணைப் பார்வையால் அமைதிப்படுத்தினார்... பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன் வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது. கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர். வயிறு கிழிந்த பாம்பு இறந்தது. கிருஷ்ணரின் பாதம்பட்ட காரணத்தால், அதன் உயிரொளி அவரிடமே கலந்தது. நண்பர்களைக் காத்த கண்ணன், தன்னைக் கொல்ல வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.

ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அன்று பலராமன் உடன் வரவில்லை. அந்த ஆற்றில் காளிங்கன் என்ற நாகம் வசித்தது. அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கரைகளில் நின்ற பெரும்பாலான மரங்கள் அதன் விஷக்காற்று பட்டு கருகிவிட்டன. காளிங்களின் இந்தப் போக்கு கிருஷ்ணருக்கு கோபத்தைத் தந்தது. ஆனாலும், கரையில் ஒரே ஒரு மரம் மட்டும் பச்சை பசேலென கிளைகளுடன் உயரமாக நின்றது. இந்த மரத்தில் கிருஷ்ணர் பிற்காலத்தில் ஏறுவார் எனத்தெரிந்து, கருடபகவான் அதன் மீது அமிர்தத்தை தெளித்து வைத்திருந்தாராம். அதனால் அது அழியவில்லை. அந்த மரத்தின் மீதேறிய கிருஷ்ணர் தண்ணீரில் குதித்தார். தண்ணீர் சிதறியது. அப்போது ஏற்பட்ட நீரலைகள், பல மிக்க காளிங்கனையே அசைத்தது. அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒரு சிறுவன் தண்ணீரில் குதித்து தன்னை இம்சை செய்ததைக் கண்ட காளிங்கன், ஆத்திரத்துடன் கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணரின் அழகு அவனைக் கவர்ந்து விட்டது. அப்படியே அதிசயித்து பார்த்தான். இருப்பினும், தன் ஆக்ரோஷத்தைக் காட்டி அவரை வளைத்தான். கிருஷ்ணர் தன் பலத்தைப் பிரயோகித்து விடுபட்டு, அவனது தலையில் ஏறி நர்த்தனமாடினார். அப்போது, அவரது பாதங்களின் வலிமையை உணர்ந்தான் காளிங்கன். ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவும் தாங்க முடியாத வலியைத் தர, ஒவ்வொரு தலையாக உயர்த்தி தாக்குப் பிடித்தான். ஒரு கட்டத்தில் வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் அவர் பகவான் நாராயணின் அவதாரம் என்பதைத் தெரிந்து ஓடி வந்தனர். இங்கே இப்படி இருக்க, கரையில் நின்ற நண்பர்கள், கிருஷ்ணர் நீரில் குதித்து காளிங்கனால் இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, யசோதையிடம் தகவல் சொன்னார்கள். அவள் பதறியடித்து வந்தாள். பலராமனுக்கு தெரியும், காளிங்கனின் கதை முடிந்து விடுமென்று. எனவே, அவன் பதட்டமின்றி வந்தான். யாசோதை தண்ணீரில் குதிக்க முயன்றாள். என் மகனை இழுத்திச் சென்ற அந்த பாம்பு என்னையும் இழுத்துச் செல்லட்டும், என்றாள். யசோதயை கரையில் நின்ற கோபியர்கள் பிடித்து இழுத்து வந்தனர். அவள் மூர்ச்சையாகி விட்டாள். காளிங்கனின் பத்தினிகள், கிருஷ்ணரிடம் சென்றனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:17 pm

மகாபிரபு ! உமது சக்தியை அறியாமல் எங்களது கணவர் உம்மிடம் தவறு செய்து விட்டார். அவரை ரட்சிக்க வேண்டும். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. கிருஷ்ணர் கரைக்கு வந்த பின்னர் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அவரிடம், முன்வினைப்பட்டது. நான் கொடுத்து வைத்தவன். கடிப்பதும், சீறுவதும் எனது இயற்கை குணம். அது உம்மால் தரப்பட்டது. அதை உம்மால் தான் மாற்ற முடியும். எனவே, நான் சீறியது குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும், மகாபிரபு தண்டிக்க நினைத்தாலும் அதையே ஏற்கிறேன், என்றது பணிவுடன். உடனே கிருஷ்ணர், காளிங்கா  ! நீ உனது மனைவி, குழந்தை மற்ற சகாக்களுடன் கடலுக்கு போய்விடு. யமுனையை அசுத்தப்படுத்தாதே. பசுக்களும், சிறுவர்களும் அதை குடிக்கிறார்கள். அதில் விஷத்தன்மை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன். நீ கருடனுக்கு பயந்தே இங்கு வந்தாய். இப்போது, நான் நடனமாடியாதால் ஏற்பட்ட குறிகள் உன் தலையில் உள்ளன. இதைப் பார்க்கும் கருடன் உன்னை ஏதும் செய்யமாட்டான், என்றார். காளிங்கனும் அதை ஏற்று, கடல் நோக்கி போய்விட்டது. கோகுலமக்கள் நிம்மதி பெற்றனர். கிருஷ்ணரின் உறுதியான மனம், வீரம், அலங்காரம் ஆகியவை கோபியர்களை பெரிதும் கவர்ந்திருந்து. பல சிறுமிகள் கிருஷ்ணன் தனக்கும் கணவனாக மாட்டானா என எண்ணத் துவங்கினர். அவரது புல்லாங்குழல் இசையால் ஈர்க்கப்படும் அவர்கள் தங்களை மறந்து நிற்பார்கள். சில சமயங்களில் அவர்களது ஆடைகள் விலகியோ, நெகிழ்ந்தோ இருக்கும். ஆனால், இசையிலும் கிருஷ்ணரின் அழகிலும் லயித்துப் போகும் அவர்கள் இவ்வாறு ஆடை நெகிழ்ந்தது கூட தெரியாமல் அவரையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பார்கள். அப்பகுதியில் வசித்த பழங்குடி இனப்பெண்களும் கிருஷ்ணரை காதலித்தனர்.  கிருஷ்ணர் நடந்து செல்லும்போது, அவரது திருவடிப்பட்டு மண் சிவந்து போகும். அந்த சிவந்தமண்னை எடுத்து குழைத்து தங்கள் மார்பிலும், முகத்திலும் பூசிக்கொள்வார்கள் பழங்குடிப் பெண்கள். அவர்களுக்கு ஏற்கனவே காதலர்களே கணவர்களோ உண்டு. இருப்பினும் அவர்கள் தொட்டால் தீராத காம இச்சை, கிருஷ்ணரின் காலடிபட்ட மண்ணை எடுத்து மார்பில் தடவினால் அடங்கிப்போகும். இது தவறில்லையா ? பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வுடன் வாழ வேண்டாமா ? என கேட்பீர்கள். அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வுடன் தான் வாழ்ந்தார்கள், ஆனாலும், காமம் குறையவில்லை. கிருஷ்ணரின் காலடி பட்டமண் உடலில் பட்டதும் காமஇச்சை தீர்ந்து விடுகிறது. அதாவது, காமம் மிகுந்தவர்கள் பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்தால் போதும். காமம் என்ற பேய் உடலில் இருந்து பறந்து விடும் என்பதே இதன் தாத்பர்யம். மேலும், கோபியர் கிருஷ்ணரின் நினைவிலேயே மூழ்கிக்கிடந்தனர். கிருஷ்ணர் கடவுள். கடவுளின் நினைப்பில் மூழ்கிக் கிடப்பது எவ்வகையிலும் தவறாகாது. இப்போதும், இது தொடரத்தான் செய்கிறது. திருமணத்துக்கு முன்னும், பிறகும், நம் பெண்கள் சிவனையோ, திருமாலையோ, முருகனையோ உள்ளன்போடு வணங்கத்தான் செய்கிறார்கள். அது பக்தி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர, ஒரு ஆணுடன் கொண்ட உறவாகக் கொள்ளப்படாது. காமம் என்ற உணர்வு கிருஷ்ணனை நினைத்தாலே போய்விடும். காமம் நீங்கிவிட்டால் உலகில் பிறப்புகளே இருக்காதே ! மீண்டும் பிறக்கக்கூடாது. கிருஷ்ணனுடன் கலந்திருக்க வேண்டும் என்பதே கோபிகிருஷ்ண காதல் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

கிருஷ்ணர் யமுனையில் அதிகாலையில் குளிக்கும் பெண்களின் பின்னால் செல்வார். ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொள்வார். கோபியர், தங்கள் ஆடைகளை முழுமையாகக் களைந்து விட்டு, ஆற்றில் இறங்கி நீராடினார்கள். கோபியர் கரையில் கழற்றி வைத்திருந்த ஆடையை எடுத்து மரப்பொந்தில் ஒளித்து வைத்தார் கிருஷ்ணர். கரைக்கு வந்த கோபியர் ஆடையைக் காணாமல் தவித்தனர். எப்படி வீட்டுக்குச் செல்வது என தவித்த வேளையில், உங்கள் ஆடைகள் என்னிடம் உள்ளன என மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. கோபியர் நிமிர்ந்து பார்த்தனர். மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கிருஷ்ணரைக் கண்டு வெட்கப்பட்டனர். கண்ணா ! பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை ? போதாக்குறைக்கு எங்கள் ஆடைகளையும் கவர்ந்து கொண்டாய். இப்போது, நாங்கள் எப்படி மேலே வருவது ? என்றாள். கிருஷ்ணர் கலகலவென சிரித்தபடியே, நானாகவே இந்து வந்தேன். நீங்கள் என்னை மனதில் நினைத்தீர்கள் ! என்னைப் பற்றி பாடினீர்கள். என்னையே அடைய வேண்டுமென மனதார வேண்டினீர்கள். அது எனக்கு கேட்டது வந்தேன் என்றார். இது நிஜம் தானே ! கோபிகைகளால் அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. இருந்தாலும் உடைகளைப் பெறும் பொருட்டு, அதற்காக, நாங்கள் ஆடைகளை எப்படி மேலே வந்து பெற முடியும். நீயாக கீழே வைத்து விட்டு போய்விடு என்றனர். கோபியரே ! ஒரு பெண் கணவனைத்தவிர பிறர் முன்னிலையில் ஆடையின்றி இருக்கலாகாது. நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென துர்க்கையை வழிபட்டு விரதம் இருந்தீர்கள். உங்கள் கணவனாகிய என் முன்னால் வருவதற்கு என்ன வெட்கம் ? வாருங்கள். வந்து பெற்றுக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் தயங்கவே, பெண்களே ! ஆடையின்றி தண்ணீரில் இறங்குவது குற்றம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயலால் வருணன் கோபமடைந்துள்ளான். எனவே, நீங்கள் வருணனை நினைத்து மனதார வணங்கி, இனி இவ்வாறு ஆடையின்றி குளிக்கமாட்டோம். எனச் சொல்லி அவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மேலே வந்து ஆடையைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான். இப்படி கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நாரத முனிவர் கம்சனை அழிப்பதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்தார். அவர் நேராக கம்சனிடம் சென்றார். கம்சா ! சவுக்கியமாக இருக்கிறாயா ? உன் சவுக்கியம் நீண்டு நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால், நீயோ, உன்னை அழிக்கப்போகும் கிருஷ்ணனும், பலராமனும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதை அறியாமாலேயே இருக்கிறாய். அவர்களை சீக்கிரம் கொன்றுவிடு. இல்லாவிட்டால், உன் அழிவை யாராலும் தடுக்க இயலாமல் போய்விடும் நீ சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும், உன்மீது நான் அக்கறை கொண்டவன் என்பதாலும் சொல்கிறேன். உன்மீது ஏமாற்றிய வசுதேவரையும், நந்தகோபனையும் விட்டுவிடாதே, என்றார். கம்சனும் அவரது கருத்தை ஆமோதித்து, வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதாகச் சொன்னான். நாரதர் தன் கடமை முடிந்த திருப்தியுடன் சென்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:19 pm

கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்குரிய ஏற்பாடுகளைத் துவங்கினான். சிவசக்தியான காலபைரவருக்கு மிருகபலி கொடுத்தான். சில யாகங்களையும் செய்தான். கிருஷ்ணர் வளர்ந்து கொண்டிருக்கும் யது வம்சத்தைச் சேர்ந்த அக்ரூரர் என்பவரை அழைத்து, அன்பு நண்பரே ! விருந்தாவனத்தில் வசிக்கும் கிருஷ்ணர், பலராமன், வசுதேவர், நந்கோபர், எனது தங்கை தேவகி, எனது தந்தை உக்கிரசேனன், சித்தப்பா தேவகன் ஆகியோரைக் கொல்லப் போகிறேன். எனது அரசியல் காரியங்களில், என் தந்தை தலையிடுவதால், அவரையும் கொல்ல வேண்டியுள்ளது. எதிரிகளே இல்லாத நிலையில் இவ்வுலகை சிரமமின்றி ஆள்வேன். எனக்கு என் மாமனார் ஜராசந்தன், துவிவிதா என்ற குரங்கு அரசன், சம்பரன், நரகாசுரன், பாணாசுரன் என்ற எனது நண்பர்கள் உதவுவர். நீங்களும் உதவ வேண்டும், என்றான். அக்ரூரர் அவன் சொல்வதைக் கேட்டு, எம்மாதிரியான உதவி என்றார். அக்ரூரரே! கிருஷ்ண பலராமர்களை இங்கே ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதாகச் சொல்லி, அழைத்து வாருங்கள். அவர்கள் வரும் வழியில் குவலயாபீடம் என்ற யானையை அவிழ்த்து விடுவேன். அது அவர்களைக் கொல்லும். ஒருவேளை தப்பிவிட்டால், எனது மல்யுத்த வீரர்கள் கொல்வார்கள், என்றான். அக்ரூரர் கிருஷ்ணரின் பக்தர். அவருக்கு கம்சன் சொன்னது பிடிக்கவில்லை. இருப்பினும், கம்சனே ! உன் நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். திட்டம் தீட்டுவது மனித அறிவு. அதை வெற்றி பெறச் செய்பவன் இறைவனே ! ஒருவேளை இவ்விஷயத்தில் நீ தோற்றுப்போகலாம். நல்லதைச் சொல்லவேண்டியது நண்பனின் கடமை என்பதால் சொன்னேன். இருப்பினும், உனக்காக கிருஷ்ணரிடம் சென்று அவரை அழைத்து வருகிறேன், என்றார். சொன்னபடியே விருந்தாவனம் சென்று, கிருஷ்ணரைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தார். அவரது பக்தர் என்ற முறையில், கிருஷ்ணரை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப்போவது பற்றி மகிழ்ந்தார். அதே நேரம், கம்சனின் பிரதிநிதியாக வந்திருப்பதால், கிருஷ்ணர் தன்னை என்ன செய்வாரோ என்ற பயமும் மனதில் எழுந்தது. இருப்பினும், தனது தேரில் சென்று கிருஷ்ணர் இருக்கும் இடத்தை அடைந்தார். விருந்தாவனத்துக்குள் அக்ரூரரின் ரதம் நுழைந்தது. ஓரிடத்தில் மரகத மலையும், வெள்ளிமலையும் சேர்ந்து ஒளி வீசியது போன்ற பிரகாசம் ஏற்படவே ரதத்தை நிறுத்தினர். அங்கே கிருஷ்ணரும், பலராமரும் ஒளிபொங்கும் உடலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்ததால் மணலில் பதிந்த அவர்களது பாதச்சுவடுகளைத் தான் அக்ரூரர் முதன்முதலாகப் பார்த்தார். அவற்றை மனதார தரிசித்தார். அந்த பாதசுவடுகளை பார்த்த பிறகு, கிருஷ்ண, பலராமரின் முகங்களை உற்று நோக்கினார் அக்ரூரர். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கிருஷ்ண, பலராமர் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். எதிரியின் தூதராய் வந்தாலும், தனது பக்தர் அக்ரூரர் என்பது அந்த பரந்தாமனுக்கு தெரியும் ! அவர்கள் விரைந்து வந்து அக்ரூரரை வரவேற்றனர். அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு ஒரு பசுவைத் தானமாக வழங்கினர். அவரை உணவருந்தச் செய்து, சந்தனம் முதலானவை பூசி உபசரித்தனர். இதன்பிறகு, அக்ரூரர் கம்சனின் திட்டம் பற்றியும், நாரதர் அங்கு வந்து சென்றது பற்றியும் தகவல் தெரிவித்தார். மதுராவில், தனுர் யக்ஞ விழா நடக்க இருப்பது பற்றியும், அதில் கோகுலத்திலுள்ள இளைஞர்கள் அனைவரும் வரவேண்டும் என்ற கம்சனின் உத்தரவு பற்றியும் சொன்னார். கிருஷ்ணர் அதற்குரிய ஏற்பாட்டை உடனடியாக முடித்தார். அவர்கள் மதுராவுக்கு புறப்பட்டனர். தேர் புறப்பட்டது. கோபியர்கள் வந்து மறித்தார்கள்.

கண்ணா ! நீ போகாதே என கண்களாலேயே தடுத்தார்கள். அவர்களில் மனநிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவர்களிடம், அருமை கோபியரே ! என்னை உங்கள் மனதால் கட்டிப் போடாதீர்கள். என்னை அவிழ்த்து விடுங்கள் உங்களுடன் களித்து விளையாடுவேன், என உறுதியளித்தார். கோபியர் ஒருவழியாய் வழிவிட ரதங்கள் புறப்பட்டன. செல்லும் வழியில் யமுனை நதி வந்தது. அங்கே ஒரு ஐந்துதலை நாகம் ! அது தன் உடலை மடித்திருக்க, அதன் மீது விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில் பரமாத்மா சயனித்திருக்கும் காட்சி அக்ரூரருக்கு தென்பட்டது. ஆம்... மாயக்கண்ணன் தன் பக்தனான அக்ரூரருக்கும் இப்படி காட்சி தந்தார். இந்த தரிசனத்தின் போது, அக்ரூரர் மனம் குளிர்ந்து கிருஷ்ணரைத் துதித்தார். தேர்கள் மதுராபுரிக்கு நுழைந்தன. அக்ரூரர் தனது இல்லத்துக்கு வரும்படி கிருஷ்ணரை அழைத்தார். கிருஷ்ணர் அவரிடம், அக்ரூரரே ! மதுராவிலுள்ள என் குல எதிரிகளை அழித்தபிறகு, உமது இல்லத்துக்கு வருகிறேன், என்றார். அக்ரூரருக்கு மனதுக்கு கஷ்டமாயிருந்தாலும், அந்தக் கடவுளின் வார்த்தையில் நிச்சயம் அர்த்தமிருக்கும் என்பதப் புரிந்து கொண்டு, கம்சனிடம் சென்றார். கிருஷ்ணர் மதுராவுக்கு வந்துவிட்ட செய்தியை அவனுக்கு அறிவித்தார். கிருஷ்ண, பலராமர் தம் திட்டப்படி மதுராவுக்கு வந்துவிட்டாலும், கம்சனுக்கு உள்ளூர பயம். அவர்களை எப்படியும் மடக்கிவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தான். கிருஷ்ண பலராமர்கள் மதுரா நகரை தங்கள் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தனர். அந்த நகரம் மிக நேர்த்தியாக இருந்தது. மாளிகை போன்ற வீடுகளில் உள்ள கதவுகள் பத்தரை மாற்று பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. செல்வச்செழிப்புக்கு இலக்கணமான ஊர் அது. எதிரிகளை மடக்க ஆங்காங்கே அகழிகள் தோண்டப்பட்டிருந்தன. கிருஷ்ணர், வழியில் சென்ற ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்தார். நீ எனக்கு அரண்மனைவாசிகள் உடுத்தும் விலை உயர்ந்த ஆடைகளைக் கொடு, என்றார். அந்த தொழிலாளி, சிறுவனே ! கம்சமகாராஜாவின் ஆடையைக் கேட்குமளவுக்கு உனக்கு தைரியம் வந்து விட்டதா ? ஓடிப்போய்விடு. மன்னரின் தண்டனைக்கு ஆளாகாதே, என்றார். கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவனை ஒரு அடி அடித்தார். அவன் இறந்து விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தையல்காரன் ஓடி வந்தான். ஐயா ! இது என் கடையில் ஒருவர் தைக்கக் கொடுத்தார். இதை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள். பொருத்தமாயிருக்கும், என்றான். அவர் அதை அன்புடன் அணிந்து கொண்டார். அந்த மட்டிலேயே அந்த தையல்காரன் ஸாரூப்ய முக்தி அடைந்து விட்டான். அந்தத்தெரு வழியே ஒரு கூன் விழுந்த பெண் வந்தாள். அவள் கிருஷ்ண சகோதரர்களை கவனித்தாள். அவள் இளமையானவள். ஆனால் ஊனமுற்றவள். கம்சனுக்கு சந்தனம் பூசுவது அவளது பணி. அவள் அவர்களைக் கண்டதும் அழகில் சொக்கி நின்றாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:20 pm

பெண்ணே ! நீ யார் ? இந்த சந்தனக்கிண்ணத்துடன் எங்கே செல்கிறாய் ? என்றதும், அவள் கம்சனின் அரண்மனைக்குச் செல்வதாக தெரிவித்தாள். இந்த சந்தனம் மிக அருமையான மணம் கொண்டதாக உள்ளதே ! எங்களுக்கு இதை பூசமாட்டாயா ? என்றதும், அவள் மகிழ்ச்சியுடன், இது ராஜாவுக்கு உரியதுதான். இருப்பினும், அவரை விட மிக உயர்ந்தவர்களாக உங்களைக் கருதுகிறேன். மனதளவில் உயர்ந்தவர்களுக்கே சந்தனம் பூசும் உரிமையுண்டு.  நான் பூசுகிறேன். எனச் சொல்லி, கிருஷ்ணரின் மார்பில் தடவினாளோ இல்லையோ, அந்த உடல் ஸ்பரிசம்பட்டதும், அவளது கூன் நிமிர்ந்தது. அவள் அழகிய வடிவத்தை அடைந்தாள். தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. முற்பிறவி ஞாபகம் வந்தது. ஆ ராமா ! நீயா ! உனக்கு நான் துரோகம் இழைத்தேன். உன் சிற்றன்னையிடம் சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்த கொடுமைக்காரியடா ! இப்பிறவியிலும், நான் அதே ஊனத்துடன் பிறந்தேன். இருப்பினும், நீ எனக்கு செய்த உதவியை என்ன சொல்லி வர்ணிப்பேன் ! எனக்கு பேச்சே வரவில்லை. ராமா !  உன் சிற்றன்னைக்கு நான் செய்த சேவைக்கு பரிசாக இப்படி செய்துவிட்டாயே ! முற்பிறவியில், கொடுமைக்காரியாயினும் கூட, உனது தரிசனம் எனக்கு கிடைத்தது என்பதன் பலனை இப்போது அனுபவித்து விட்டேனோ ! பரந்தாமா ! நான் எவ்வளவு பெரிய பாக்கியவதி. அன்று ராமதரிசனம், இன்று கொடுமைக்காரனான கம்சனுக்கு பணியாளாக இருந்தும் கிருஷ்ண தரிசனம் காட்டினாய். உனக்கு சேவை செய்யும் பாக்கியம் தந்தாய், என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த நினைவலைகளை மறக்கச் செய்துவிட்டார் கிருஷ்ணர். இப்போது, தன்னிலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், கிருஷ்ணரின் மீது காதல் கொண்டவளாய், கிருஷ்ணா ! இத்தனை அழகிய உருவத்தை கொடுத்த நீயே என்னை அடையவேண்டும். வா, என் இல்லத்துக்கு என்றாள். பெண்ணே ! நான் உன் இல்லம் வருவேன். கவலைப்படாதே. நான் வந்த காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இதற்குள் கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டான். மிகப்பெரிய மல்யுத்தத்துக்கு ஏற்பாடு செய்து சிறந்த வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். மல்யுத்தப் போட்டிக்கான களம் தயாராகி விட்டது. மதுராபுரியின் பிரபல மல்யுத்த வீரர்களான சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். எல்லாருமே மிக பலசாலிகள். வயதிலோ, வீரத்திலோ கிருஷ்ண, பலராமருக்கு சற்றும் ஒத்து வராதவர்கள். அவர்கள் களத்தில் காத்திருந்த வேளையில், கம்சன் கிருஷ்ணரைக் கொல்ல மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தான். அவர் வரும் வழியில், குவாலயாபீட என்ற யானையை கம்சன் நிறுத்தியிருந்தான். அந்த யானையைக் கண்டால், பிற யானைகள் ஓட்டமெடுக்கும். அப்படிப்பட்ட சக்திமிக்க அந்த யானையை கிருஷ்ண பலராமர் வரும் வழியில் வேண்டுமென்றே மறைத்து நிறுத்தியிருந்தான் அதன் பாகன். கிருஷ்ணர் யானையை ஒதுக்கி நிறுத்தும்படி பாகனிடம் சொல்லவே, அவன் கண்டுகொள்ளவில்லை. பாகனின் நோக்கம் கிருஷ்ணருக்கும் புரிந்து விட்டது என்றாலும், முறையாக அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் முடியாது என வம்பு செய்யவே, கோபமடைந்த கிருஷ்ணர் யானையை மிக லாவகமாகத் தாண்டிச் செல்ல, அவர்களை பிடிக்கும்படி யானையை பாகன் ஏவினான். யானை தும்பிக்கையை அவர்களை நோக்கி நீட்ட, கிருஷ்ணர் யானையை ஓங்கிக் குத்தினார். அவரது பலம் தாங்காத யானை சுருண்டது. அதன் வாலை பிடித்து தரதரவென இழுத்தார். பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். யானை பிளிறித்துடித்தது உயிர்விட்டது. பாகனையும் ஒரே அடியில் வீழ்த்திய மாயக் கிருஷ்ணர், வெற்றி வீரராக மல்யுத்த களத்துக்குள் புகுந்தார். அவர்கள் வருவதற்குள் முன்னால் ஓடிச்சென்ற வீரன் ஒருவன், கம்சனிடம் யானை கொல்லப்பட்ட விபரத்தைச் சொல்லி விட்டான். கூட்டத்தினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது.

அந்த மாவீரர்கள் அரங்கில் நுழையவும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைந்தனர். பார்வையாளர்கள் வரிசைக்கு கிருஷ்ணரும் பலராமரும் சென்றனர். அப்போது சாணூரன், கிருஷ்ணா ! பலராமா ! ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள் ? போட்டியில் நீங்கள் பங்கேற்கவில்லையா ? என்றான். கிருஷ்ணர் அவனிடம், சாணூரா ! இங்கே பலத்திலும், வீரத்திலும், அனுபவத்திலும் சிறந்த வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மோதினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் சிறுவர்கள். எங்களோடு நீங்கள் மோதினால், பார்ப்பவர்களுக்கு ரசனை இருக்காது. மேலும், அது நியாயமும் அல்ல, என்றார். கிருஷ்ணா ! நீங்கள் குவாலயபீட யானையையே கொன்றவர்கள் என்ற தகவல் எங்களுக்கு நீங்கள் வரும் முன்பே கிடைத்துவிட்டது. அதை விடவா நாங்கள் பலசாலிகள். அதனால், நீங்கள் எங்களோடு மோதலாம், வாருங்கள் என்றான். கிருஷ்ணர் சாணுரனையும், பலராமர் முஷ்டிகனையும் எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களது அடியை அந்த மல்லர்களால் தாங்க முடியாமல் கூக்குரலிட்டு இறந்தனர். அடுத்து மற்ற மல்லர்கள் சிலர் களமிறங்க அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதைக் கண்ட மற்றமல்லர்கள் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண பலராமரை பாரட்ட மனமில்லாதது மட்டுமின்றி, வீரர்களே ! இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, வஞ்சகம் புரிந்த வசுதேவர், இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும்  கொல்லப்பட வேண்டும், என ஆணையிட்டான். கிருஷ்ணருக்கோ மகாகோபம். சற்றும் நியாயமின்றி நடந்த அந்தக் கொடியவன் மீது பாய்ந்தார். அவனது கிரீடத்தை தட்டிவிட்டார். அவனது தலைமுடியை பிடித்து இழுத்தார். ஆசனத்தில் இருந்து சரிந்து விழுந்த அவனை இழுத்து வந்தார். மல்யுத்த களத்தில் அவனைக் கொண்டு வந்து கீழே தள்ளினார். மார்பின் மீது ஏறி அமர்ந்தார். கம்சனுக்கு மூச்சு முட்டியது. ஒரே குத்தில் அவன் உயிரை விட்டான். அவனது உயிர் வைகுண்டத்தை அடைந்தது, கொடுமைக்காரனாயினும், சதாசர்வகாலமும் கிருஷ்ணரையே நினைத்தவன் அவன். அவரால் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே சிந்தித்தவன். வைகுண்டத்தில் அவனுக்கு ஸாரூப்ய சொரூபம் கிடைத்தது. இந்த சொல்லுக்கு நாராயணனைப் போலவே உருவமெடுத்தல் என்பது பொருள். வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயணனை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறுவார்களாம். அந்த வடிவத்தை கருணைக்கடலான நாராயணன், கம்சனுக்கு அளித்தருளினார். கீதையில் தத் பாவ பாவித் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கிருஷ்ணரை நினைத்தாலும், அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது. கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோரர்கள் இருந்தனர். கிருஷ்ணரால், அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:22 pm

தாய்மாமனைக் கொல்வதை வேதம் அனுமதிக்கவில்லை. ஆனால், கம்சனைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கிருஷ்ணருக்கு ஏற்பட்டது. ஏனெனில், கம்சனைக் கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என்பது அசரீரி வாக்கு. அதன் காரணமாக, பகவான் இங்கே வேதத்தின் கட்டளையை மீற வேண்டியதாயிற்று. சரி.... இது அனுமதிக்கப்பட்ட ஒன்றானால், இப்போது தன்னைத் தாக்க வரும் மற்ற தாய் மாமன்களை என்ன செய்வது ? எல்லாருமே தேவகியின் சகோதரர்கள். இவர்களை அழிக்க ஒரே வழி தன் அண்ணன் பலராமன் தான். ஏனெனில், அவர் ரோகிணியின் மகன். அவ்வகையில், எதிரே நிற்பவர்கள் தாய்மாமன்மார் ஆக முடியாது. அந்த எட்டு பேரையும் கொல்லும் பணியை பலராமர் ஏற்றுக் கொண்டார். குவலாயபீட யானையைக் கொன்ற போது, கிருஷ்ணரும் அவரும் ஆளுக்கொரு தந்தத்தை ஒடித்து வந்திருந்தனர். அந்த தந்தத்தைக் கொண்டு, கம்சனின் சகோதரர்களைத் தாக்கினார் பலராமர். ஒருவன் பின் ஒருவராக அவர்களை கொன்றார். அப்போது, தேவலோகத்தில் இருந்து மலர் மாரி பொழிந்தது. கிருஷ்ணபலராமரின் வீரமான செயல்களால் யசோதையும், நந்தகோபனும் ஆனந்தமாகி கண்ணீர் வடித்து நின்றனர். கிருஷ்ணர் கடவுள் என்பது நன்றாகத் தெரிந்து விட்டதால், அவரைத் தொட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. கிருஷ்ணரோ அவர்களின் பாதத்தில் விழுந்து ஆசி வழங்கச் சொன்னார். அவர் கடவுள் என்பதால் அவருக்கு ஆசி வழங்கும் தகுதி தங்களுக்கு இல்லை எனக்கருதி, அவர்கள் ஒதுங்கி நின்றனர். அப்போது கிருஷ்ணர் அவர்களிடம், தாயே ! தேவகி என்னைப் பெற்றவள் என்றாலும் நீயே  என்னை வளர்த்தாய். என் பால்ய பருவ விளையாட்டுகளை நீயே ரசித்தாய். அம்மா ! இந்த உடல் தாய் தந்தையின் உறவால் பிறக்கிறது. அதன் காரணமாக பெற்றவர்களுக்கு கடன்படுகிறது. இந்தக் கடனை தீர்க்குமளவுக்கு சமஅளவுள்ள பொருள் எவ்வுலகிலும் இல்லை. ஏனெனில், மனிதனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே எல்லாவற்றையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மனிதப்பிறவிக்கு மட்டுமே இந்த உடலை விடுத்து, இறைவனிடம் சேர்வதற்குரிய அறிவு தரப்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் வேறு, வளர்த்தவர்கள் வேறல்ல ! அவ்வகையில், நீங்கள் என்னை ஆசீர்வாதிக்க தகுதியுள்ளவர்கள் ஆகிறீர்கள். இதைக்கேட்டு மகிழ்ந்த யசோதையை தம்பதியர் தங்கள் அன்பு மகனை வாரியணைத்தனர். பலராமனுக்கு முத்தமழை பொழிந்தனர். அவர்களது கண்களில் கண்ணீர் பெருகியது. இதன் பிறகு தன் தாத்தா உக்ரசேனரை (கம்சனின் தந்தை) சந்தித்த கிருஷ்ணர், யது ராஜ்யத்தின் அதிபதியாக அவரை அறிவித்தார். கம்சனுக்கு பயந்து ஒளிந்திருந்த மன்னர்களெல்லாம் மகிழ்ந்து, உக்ரசேனரை பணிந்து வணங்கினர். மதுரா மக்கள் கிருஷ்ணரை தினமும் வணங்கும் பாக்கியம் பெற்றனர். முகுந்தா எனக் கூறி அழைத்தனர். இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவன் எனப் பொருள். நிச்சயமாக, மதுரா மக்கள் பரமானந்தத்தில் மூழ்கினர் என்றால் மிகையல்ல. சில நாட்களுக்கு பிறகு, விருந்தாவனத்துக்கு யசோதையும், நந்த குமாரரும் புறப்பட்டனர். கிருஷ்ணரை அவர்கள் அழைத்தனர். அம்மா ! எனக்கு இன்னும் சில கடமைகள் இங்குள்ளன. வசுதேவர், தேவகியை சிறையில் இருந்து விடுவித்து, அவர்களுடன் சில நாட்கள் தங்கி வருகிறேன். என்னை வளர்த்த உங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாவும் என்னுடன் தான் இருப்பார். நாங்கள், நிச்சயம் விருந்தாவனத்துக்கு வருவோம், என்றார். அவர்கள், மகன்களைப் பிரிந்து கண்ணீருடன் புறப்பட்டனர். இதன் பின்னர் தேவகியையும், வசுதேவரையும் கிருஷ்ணர் சிறையில் இருந்து விடுவித்தார். வசுதேவர் தன் பிள்ளைகளுக்கும், கர்க முனிவர் என்பவர் மூலம் புனிதநூல் சடங்கை செய்து வைத்தார். கிருஷ்ணர் பிறந்த போது, மனதால் செய்த பசுதானத்தை இப்போது அவர், நிஜமாகவே செய்தார். பின்னர், தன் மகன்களை சாந்தீபனி முனிவரிடம் கல்விபயில அனுப்பி வைத்தார். இத்தனை காலமும் மாடு மேய்த்து திரிந்த அந்த இளைஞர்கள் இப்போது அறிவியல், அரசியல், கணிதம், சகுனக்கலை, வைரங்களுக்கு பட்டை தீட்டும் கலை என சகல சாஸ்திரங்களையும் ஆசானிடம் கற்றனர். பயிற்சி முடிந்ததும், ஆசானிடம், குருவே ! தங்களுக்கு தர வேண்டிய குருதட்சணை என்ன ? என்றதும், குரு ஏதும் பேசாமல், அருகில் இருந்த தன் மனைவியை பார்த்தார், அவளது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:23 pm

தாயே ! தங்கள் கண்கள் பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க விரும்புகிறீர்கள். தாரளமாகக் கேளுங்கள், என்றனர் கிருஷ்ணரும் பலராமரும்.குறுக்கிட்ட சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே ! எங்கள் மகனுடன் பிரபாஸ÷க்ஷத்திர (குஜராத்திலுள்ள சோமநாதம் என கருதப்படுகிறது) கடற்கரைக்குச் சென்றிருந்தோம். அவன் அதில் மூழ்கி விட்டான். அவனை மீட்டுத்தர வேண்டும், என்றனர். இறந்து போன ஒருவனை மீட்பதென்றால், அது தெய்வத்தாலேயே முடியும். இங்கே பகவான், இரட்டை அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவரால் முடியாதது தான் என்ன ? அவரிடம் ஆசிபெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண பலராமர். சமுத்திரராஜன் அவர்களின் திவ்யதரிசனம் கண்டு ஓடோடி வந்து பணிந்தான். ஸ்ரீகிருஷ்ணா! நான் தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன ? உன்னிடம் மூழ்கியுள்ள எங்கள் குரு சாந்தீபனியின் மகனை திருப்பிக்கொடு, என்றார் கிருஷ்ணர். தேவாதி தேவா ! அவன் எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்துச்  சென்றான். ஒருவேளை அச்சிறுவனை அவன் உயிருடன் விழுங்கியிருக்க கூடும். சங்கு வடிவில் என்னுள் மறைந்திருக்கும் அவனைப் பிடித்தால் விபரம் தெரியும், என்றான் பணிவுடன். கிருஷ்ண பலராமர் சற்றும் தாமதிக்காமல், கடலுக்குள் சென்றனர். அங்கே சங்கின் வடிவில் உருண்டுகொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது வயிற்றைக் கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை. சங்கு வடிவ அசுரனைக் கொன்று வெளியே தூக்கி வந்தனர். அவர்கள் நேராக யமலோகம் சென்றனர். எமலோக வாசலில், எமதர்மராஜா அவர்களை தண்டனிட்டு வரவேற்றான். காலனே ! எங்கள் குருவின் மகன் இங்கிருந்தால் உடனே என்னுடன் அனுப்ப வேண்டும், என்றார். தங்கள் கட்டளை என் பாக்கியம், என்றவன் சிறுவனை அழைத்து வந்தான். அவர்கள் சிறுவனை குருவிடம் ஒப்படைத்தனர். சாந்தீபனி முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சீடர்களே ! நீங்கள் ஆசிர்வாதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இருப்பினும், குரு என்ற முறையில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்.  நீங்கள் இந்த யுகத்தில் பேசப்படுபவர்களாக இருப்பீர்கள். உங்கள் போதனைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், என்றார். பயிற்சி முடித்து மதுராவுக்கு அவர்கள் திரும்பினர். தேவகியும், நந்தகோபரும் தங்கள் மக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மாடு மேய்த்த சிறுவர்களுக்கு, கல்வி கற்றுத்தந்ததில், தந்தை வசுதேவருக்கு மிகுந்த திருப்தி. கிருஷ்ணர் மதுராவில் சூழ்நிலை காரணமாக இருந்தாலும், விருந்தாவனத்தில் தந்தை, தாய் மற்றும் கோபியருக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அங்கு வருவதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியே அது. விருந்தாவனத்தில் யசோதை, நந்தகோபர் மட்டுமின்றி, கோபியர்களும் கிருஷ்ணரின் நினைவிலேயே இருந்தனர். பார்க்கும் இடத்தில் எல்லாம் அந்த பரந்தாமன் தான் தெரிந்தான். அங்கே ராதா என்ற கோபிகை வசித்தாள். அவள் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் நினைப்பவள் இல்லை. உண்ணும் போதும் கிருஷ்ணா, உறங்கும் போதும் கிருஷ்ணா, எந்த செயல் ..... என்ன நடந்தாலும் கிருஷ்ணா... கிருஷ்ணா.... கிருஷ்ணா.... இப்படி கிருஷ்ணனையே நினைத்துக் கிடந்தவள் அவள். இவள் பிறந்த பிறகு கண்விழிக்கவே இல்லையாம். ஒருநாள் யசோதை கண்ணனை இடுப்பில் சுமந்தபடி இவள் வீட்டுக்கு வரவே, விழித்துப் பார்த்தாளாம். அப்படி ஒரு தீராத காதல் அந்த மாயவன் மீது. நெஞ்சுக்குள் அவனது திருவடிகளைப் பற்றி நினைவு மட்டுமே அவளுக்கு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவளைத் தழுவி இனிய மொழி பேசுவார். அவர் இங்கிருந்து சென்றதில் இருந்து, கலங்கிப்போய் இருந்தாள். கிருஷ்ணரின் நினைவு அவளை வாட்டியது. மதுராவுக்கு கிருஷ்ணரின் பெரியப்பா பிள்ளையான (வசுதேவரின் சகோதரர் மகன்) உத்தவர் என்பவர் வந்தார். இவர் தோற்றத்தில் கிருஷ்ணரை ஒத்திருப்பார். அவர்கள் சகோதரர்கள் என்றாலும், நண்பர்கள் போல் பேசிக்கொள்வார்கள்[size=13.333333969116211].[/size]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்  Empty Re: தசாவதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum