தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தசாவதாரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தசாவதாரம்   - Page 2 Empty தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 11:46 am

First topic message reminder :

தசாவதாரம்   - Page 2 Z


மச்சாவதாரம்


உலகத்தில் தருமம் அழிந்து அதர்மம் ஓங்குகிற சமயம் நான் உலகத்தில் அவதாரம் எடுக்கின்றேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லுகிறார். வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்டுவர். பெருமாள் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றி சுகர், பரீட்சித்து மகாராஜனுக்கு உபதேசம் செய்தார். சுகரைப் பார்த்து பரீட்சித்து மகராஜா ஒரு கேள்வி கேட்டார். ஹே! ரிஷிவேந்தே! எதற்காக ஹரிபகவான் ஒரு சாதாரண கர்மவசியனான புருஷனைப் போல, உலகத்தாரால் நிந்திக்கப்படக் கூடியதாகவும், தாமசப் பிரகிருதியாகவும், சகிக்கக் கூடாததாகவும் இருக்கிற மச்சரூபம் தாங்கி அவதாரம் செய்தார். அதற்கு சுகபிரம்மர் மகாவிஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இது. மச்சாவதாரத்தை மத்ஸ்யாவதாரம் என்றும் கூறுவார்கள். இந்த அவதாரம் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்றது. வேதங்களை மீட்டது. இந்த அவதாரத்திலேயே மகாப் பிரளயம் வர ஏழாவது மனுவும், சப்த ரிஷிகளும் மீன் உருக்கொண்டு தம் உயிர் பிழைத்திருக்க, மற்ற எல்லா உலகங்களும் அழிந்து ஒழிந்தன. பொங்கிப் பெருகும் கடலில் மூன்று உலகங்களும் மூழ்கின. ஹயக்கிரீவன் என்ற அசுரன் அங்கே வந்தான். அவனுக்கு கழுத்திற்கு மேல் குதிரை உருவம். அதனால் அப்பெயர் அவனுக்கு வந்தது.

பிரம்மா சோர்ந்து தூங்கும் போது அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமே வெளிவந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த ஹயக்ரீவன் தனது யோக சித்தியினால் அந்த வேதங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டான். பிறகு அதை ஒளித்து மறைத்து விட்டான். வேதங்கள் இருந்தாலன்றிப் பிரும்ம சிருஷ்டி இயங்காது. உலகத்தில் அறம் ஒழுங்காக நிறைவேற வேதத்தின் துணை அவசியம்.  எனவே ஹயக்ரீவனால் திருடி மறைக்கப்பட்ட வேதங்களை மீட்பதற்காக பரந்தாமன் மீனாக அவதரித்தான். ஸ்ரீமந் நாராயணன் எடுத்த மச்சாவதாரத்தில் சத்யவிரதன் என்ற பெயருடைய ராஜரிஷி இருந்தான். அவன் நாராயணன் மீது அளவிலா பக்தி கொண்டவன். அந்த ஹரிபக்தன் வேறு உணவு எதுவும் அருந்தாமல் தண்ணீரை மட்டும் உட்கொண்டு ஒரு நோன்பு நோற்று வந்தான். இப்போது நடக்கும் கல்பத்தில் மனுவாக விளங்கும் விவஸ்வரன் இவனே. அந்தக் காலத்தில் அவன் திராவிடத் திருநாட்டின் தேசாதிபதியாக இருந்தான். அவன் ஒருநாள் கிருதமாலா என்ற ஆற்றங்கரையில் அமர்ந்து தன் மூதாதையர்களுக்குத் தண்ணீர் இறைத்து அர்க்கியம் கொடுத்துக் கொண்டு இருந்தான். அர்க்கியம் செய்யும் பொழுது இரு கைகளிலும் தண்ணீரை எடுத்தான். அங்கே கைக்குள் தேங்கிய நீரில் ஒரு குஞ்சு மீன் அழகுற நீந்திக் கிடப்பதைப் பார்த்தான். பேரழகுமிக்க அந்த மீன் பேசியது: ஹே ராஜனே என்னை மீண்டும் தண்ணீரில் தள்ளிவிடாதீர்கள். குட்டி மீனான என்னைப் பெரிய மீன்கள் விழுங்கி விடும். அச்சம் என்னை பிடுங்கித் தின்கின்றது, என்றது.

இதைக் கேட்டு அகமகிழ்ந்து அந்த மச்சத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற நினைத்தான். ஆற்றுக்குத் தன்னுடன் எடுத்து வந்த கமண்டலத்திற்குள் மீனைப் போட்டான். அதைத் தன் வழிபாட்டு ஆஸ்ரமத்திற்கு எடுத்துப் போனான். அன்று இரவே அந்த மச்சம் கிடுகிடுவென்று வளர்ந்து கமண்டலம் முழுவதும் பரவியது. அரசே இந்த இடம் எனக்கு வசிக்கப் போதாது என்றது மச்சம். சத்தியவிரதன் மீனைக் கமண்டலத்தில் இருந்து எடுத்து நீர் நிறைந்த வேறு ஒரு பாத்திரத்தில் போட்டான். இந்தப் பாத்திரமும் எனக்கு வசிக்கப் போதவில்லையே என்று திரும்பவும் கெஞ்சியது. மன்னவன் உடனே மீனை அங்கிருந்து எடுத்து ஒரு குளத்தில் விட்டான். அது வெகு சீக்கிரமாக வளர்ந்து அந்தக் குளத்தை நீக்கமற அடைத்து நின்றது. அடுத்து அந்த மீனை ஆழமானதும் விரிந்து பரந்ததுமான மடுக்களிலும், ஏரிகளிலும் போட்டான். அங்கும் அது பெரிதாக வளர்ந்து தனக்கு வாழ இடம் போதவில்லை என்று சொல்லியது. கடைசியாக அதை சமுத்திரத்தில் கொண்டு போடும் போது அந்த மச்சம் சொன்னது: ராஜரிஷியே! இந்தப் பெரிய கடலில் திமிங்கலம் போன்ற பெரிய ஜந்துக்களின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே என்னை நீ இங்கே விட்டு விட்டுப் போய் விடாதே என்று அலறியது. உடனே சத்யவிரதன் அந்த மீனைக் கரம் கூப்பித் தொழுது, பரம்பொருளே! ஒரு சாதாரண மீனாகத் தாங்கள் என்னிடம் வந்து மயங்க வைக்கிற மாயம் எனக்கு என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே? இப்படி தேவரீர் என்னை விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன? நீர் வளர வளர நிச்சயம் ஸ்ரீ ஹரியேதான் தாங்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகவே பெருமானாகிய தாங்கள் இந்த உருவத்தோடு இங்கு வந்த காரணத்தைத் தங்கள் தொண்டனாகிய எனக்குத் தெரிவிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என மச்சாவதார மூர்த்தியை வீழ்ந்து வணங்கிக் கேட்டான்.

மச்சம் பதில் சொல்லியது: ராஜரிஷியே! இன்று முதல் ஏழாம் நாள் அன்று இந்த பூமியும், விண்ணும், அதற்கிடைப்பட்ட வெளியும், பொங்கி எழுந்து வரும் கடலுக்கு இரையாகப் போகிறது. உலகங்கள் அழியும் நாள் வந்து விட்டது. அஞ்சாதே! நான் உனக்கு ஒரு பெரிய தோணியை அனுப்பி வைக்கின்றேன். நீ அந்தத் தோணியில் சமஸ்த ஒளஷதிகளையும் (மூலிகைகள்) பற்பல வித்துகளையும் ஏற்றிக்கொண்டு சப்த ரிஷிகளுடன் சர்வபலம் கொண்டவனாக அந்தகாரமான சமுத்திரத்தில் மகா தீரனாக சஞ்சரிக்கப் போகிறாய். வாயுவால் அலைக்கழிக்கப்பட இருக்கும் அந்தத் தோணி கவிழ்ந்து விடாமல் எனது கொம்பில் சேர்த்த கட்டிவிடு. அப்படிக் கட்டினால் நான் பிரம்மதேவனுடைய இராப்பொழுது தீரும்வரை அந்த ஓடத்தோடு சஞ்சரித்துக் கொண்டு இருப்பேன். அப்போது சப்தரிஷிகளும் ஒளிமயமாக இருந்து உனக்கு வழிகாட்டுவார்கள். என் உடல் அப்போது திமிங்கலம் போலக் காணப்படும். அந்தப் படகை என் கொம்பில் கட்டச் சொன்னேன் அல்லவா? அப்படிக் கட்டுவதற்கு உரிய கயிறு வாசுகி என்ற பாம்பு என்பதை மறந்துவிடாதே. அந்த பாம்பை எனது சிதளில் கட்டிவிடு. அதற்கப்புறம் நீ எனது பெருமையைத் தெரிந்து கொள்வாய். உனக்கு சர்வமங்களமும் உண்டாகட்டும் என்றார். தர்ப்பாசனத்தில் இருந்தபடி சத்தியவிரதன், உலகை அழிக்கப்போகும் பிரளயத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தான். ஏழாம் நாள், ஆகாயம் அந்தகாரத்தில் மூழ்கியது. பெருமழை பெய்த வண்ணம் இருந்தது. கடல் கரைபுரண்டு வந்தது. பூமி இருக்கும் அடையாளமே தெரியவில்லை. எங்கும் ஒரே தண்ணீர்க்காடு. அந்தப் பொங்கும் நீர்ச்சுழிகளின் ஊடே பரந்தாமன் தங்கத் திமிங்கலத் தோற்றத்துடன் காணப்பட்டார். தகத்தகாயமாக ஜ்வலித்த அவர் உடம்பில் கொம்பு  போல் ஒன்று நீண்டு இருந்தது.

சத்யவிரதன் அப்போது சப்தரிஷிகளுடன் மூலிகை விதைகள் சகிதம் ஏறி இருந்த ஓடத்தை பகவான் கூறியபடி அவரைத் தியானம் செய்தபடியே, தங்கத் திமிங்கிலக் கொம்பில் கட்டினான். அந்த அபூர்வ மச்சம் இவர்கள் ஏறிய படகைப் பற்றி இழுத்துக் கொண்டு வெள்ளத்தின் மத்தியில் பயமோ, அபாயமோ இன்றி அலைந்து கொண்டு இருந்தது. அந்த சமயம் பரந்தாமன் ராஜரிஷி சத்தியவிரதனுக்கு மச்சாவதார புராணத்தை உபதேசம் செய்தார். பிரம்மதேசன் நித்திரை காலம் முடிந்தது. உலகத்தை கவ்வி இருந்த அந்தகாரம் விலகி ஊடே ஊடே ஒளிப் படலங்கள் விரிசலிட்டன. ஓயாது பெய்த மழையும் நின்றது. பல்கிய, உலகில் பொங்கிப் பெருகிய தண்ணீர் வடிய ஆரம்பித்தது. மச்சமூர்த்தி ஓடத்தைக் கரை சேர்த்தார். சத்திய விரதன் அந்நேரம் பிரம்மனைக் குறித்து பிரார்த்தனை செய்தான். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவன் அவன் முன்பு பிரத்யட்சம் ஆனார். மீண்டும் அவர் தம் சிருஷ்டியைத் தொடங்க நினைத்தபோது தான் வேதங்கள் மறைந்த விபரம் அவருக்குத் தெரிந்தது. பிரம்மதேவர் ஸ்ரீ ஹரியை நோக்கி தியானம் செய்தார். அதுசமயம் மச்சமூர்த்தியாக இருந்த பகவான் வேதங்களை ஹயக்கிரீவன் ஒளித்து வைத்திருப்பதை அறிந்து வெள்ளத்திற்குள் புகுந்து போனார். ஹயக்கிரீவனை வெள்ளத்தில் கண்டு அவனுடன் போர் புரிந்தார். வேதங்களை மீண்டும் பிரம்மதேவரிடம் கொடுத்தார். மறுபடியும் சிருஷ்டியைத் தொடங்கும்படி சொன்னார். இப்படியாகப்பட்ட கல்பத்தில் சத்தியவிரதன் வைவசதமனு என்ற பெயருடன் ராஜ்ய பரிபாலனம் செய்து வரலானான்.

இந்த மச்சாவதார மூர்த்தியைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், அவர் சரித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவரைத் தியானம் செய்பவர்களுக்கும் சகல சம்பத்தும் ஞான யோகமும் உண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:24 pm

உத்தவரே ! நீர் உடனே விருந்தாவனம் செல்ல வேண்டும். என்னால் தற்போதைக்கு அங்கு வர இயலாது என்பதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக என் தாய், தந்தை மற்றும் என்னையே உயிராய்க் கருதி, நான் வருவேன் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கோபியருக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும். நான் நிச்சயம் அங்கு வருவேன் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். காரணத்துடன் தான் நான் அங்கு வரவில்லை. கம்சனைக் கொன்றதால், அவனது ஆதரவாளர்கள் என்னை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுள்ளனர். நான் மதுராவில் இருந்தால், இங்கு தான் அவர்கள் வருவார்கள். விருந்தாவனம் சென்றால், பாவம்... ஏதுமறியா அப்பாவி ஜனங்களும், பசுக்களும் துன்பப்படுவர். அதற்காகவே, நான் வரவில்லை என்பதை எடுத்துச் சொல்லுங்கள், என்றார். உத்தவர் அதை ஏற்று ரதத்தில் புறப்பட்டார். அவர் விருந்தாவனத்தை அடைந்து, நந்தகோபரிடம் கிருஷ்ணர் சொன்னதை எடுத்துச் சொன்னார். பின்னர், கோபியரை சமாதானம் செய்ய அவர் சென்றார். ராதாவிடம் சென்று, தாயே ! உன் கிருஷ்ணன் உன்னை மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைத்து கோபியர்களையும் பார்க்க ஆவல் கொண்டுள்ளார். விரைவில் உங்களைக் காண வருவதாகச் சொல்லியுள்ளார். அந்த தகவலை அறிவித்து போகவே இவ்வூர் வந்தேன், என்றவர், மதுராவில் அவன் நிகழ்த்திய வீரச்செயல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லச் சொல்ல, கோபியர்களின் தாபம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் அவரை உயர்த்திப் பேசினாள். அதை ரசித்துக் கேட்டார் உத்தவர். கிருஷ்ணரைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்டாலே புண்ணியம் கிடைத்து விடும். அதுபோல் தான், உத்தவரின் நிலையும் அமைந்தது. உத்தவர் பிரியாவிடை பெற்று ஊர் திரும்பினார். கிருஷ்ணரிடம் கோபியர் நிலை பற்றி எடுத்துச் சொன்னார். இதன்பிறகு ஒருநாள், தான் மதுராவுக்குள் நுழைந்த அன்று, தனக்கு சந்தனம் தடவி உபசரித்த கூனிப் பெண்ணான குப்ஜாவின் இல்லத்துக்கு கிளம்பினார். குப்ஜா, கிருஷ்ணரை இன்முகத்துடன் வரவேற்றாள். அவரை ஆசனத்தில் அமர வைத்தாள். அவருக்கு சந்தனம் பூசினாள். வாசனைத் திரவியங்களை தடவினாள். இது அவளது தொழில். அவள், தான் வாழ்ந்த நாட்டின் மன்னனுக்கு சந்தனம் பூசும் தொழிலைச் செய்பவள்.  கிருஷ்ணரை அவள் ஒரு கட்டிலில் அமர வைத்தாள். ஒரு கிண்ணம் சந்தனத்தை அவர் மேல் பூசினாள். என் அன்பானவரே என்னை ஏற்றுக்கொள்ளும் என்று கெஞ்சினாள். கிருஷ்ணர் சிரித்தார். அவளை அவர் தொடவில்லை. அவரது பாதங்களை தொட்டு வணங்கினாள். இச்சை உணர்வுடன் அந்த பாதங்களை எடுத்து சற்றே நாணத்துடன் தன் மார்பில் வைத்தாள். அவ்வளவுதான் ! அவளது இச்சை உணர்வுகள் மறைந்து இப்போது குப்ஜா புது மனுஷியாகி விட்டாள். கிருஷ்ணரை மனதார துதித்தாள். அவளது குணமே மாறிப்போயிருந்து. குப்ஜாவிடம் விடை பெற்றார் கிருஷ்ணர். அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தினாள். அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத்துக்கு புறப்பட்டார். அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த்தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்பர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார். அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க வந்திருந்தார்.

கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவர்கள். ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம் என்றால் யானைகள் நிறைந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது. பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரியப்பா திருதராஷ்டிரனின் மக்களான கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாண்டவர்களின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர் அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். மேலும் அவர் பாண்டவர்களின் தாய் குந்திக்கும் உறவினர். அதை அக்ரூரரிடம் எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். திருதராஷ்டிரனின் சகோதரர் விதுரர் நியாயத்துக்கு கட்டுபட்டவர். அவர் மூலமாக, ஹஸ்தினாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாயத்தைப் பேசும் விதுரரைத்  தொடர்பு கொண்டார். பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்களை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப்பாசத்தால், பாண்டவர்களைக் கொல்ல திட்டமிடுவதை உறுதி செய்தி பின்னரே திருதராஷ்டிரனிடம் சென்று அறிவுரை வழங்கினார். அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம், அக்ரூரரே ! உமது போதனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும், ஒருவனுக்கு மரணம் என விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும். அந்த அறிவுரைகள் அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில், கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளைக் குறைக்க யது வம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான் அணிந்திருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன், என்றான். திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில் இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். திருதராஷ்டிரனும் தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார். போரைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும் அருமருந்தையும் தந்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:26 pm

கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகள் கொஞ்சமா ! பக்தர்களை பரிசோதித்து பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவனே ! ஆனால், அந்த பரந்தாமனையே பரீட்சித்து பார்த்து விட்டான் ஒரு பக்தன் ! அவன் தான் சகாதேவன். பாண்டவர்களில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்றால் இவன் தான். கவுரவர்களை அழிக்காவிட்டால் தலை முடிக்கமாட்டேன் என அடம் பிடக்கிறாள் திரவுபதி. கிருஷ்ணா இவர்களுக்கு உதவி செய்பவர் தான். ஆனால், தன் சொந்த அத்தை குந்தி உள்ளிட்ட அனைவரின் பக்தியையும் ஆழம் பார்ப்பவர். தர்மர் உத்தமர். அவரையும் விட்டு வைக்காதவர். ஆனால், சகாதேவனிடம் மட்டும் அவரது சோதனைப்படலம் எடுபடவில்லை. உன்னை விட்டால் யாருமில்லை, எனக்கு ஒன்றும் தெரியாது, நீ என்ன செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறாயோ அதுதான் நடக்கப் போகிறது என்பது மட்டுமே அவன் வாயில் வரும் வார்த்தை. பாண்டவர்கள் காட்டில் வாசம் செய்த போது, திரவுபதி கேட்டாளே என்பதற்காக, ஒரு நெல்லிக்கனியைப் பறித்துக் கொடுத்து விட்டான் அர்ஜுனன். அது ஆண்டுக்கொரு முறை காய்க்கும் அபூர்வக்கனி என்ற விஷயமும், அமித்ர முனிவர் என்பவரே அதைச் சாப்பிட்டு வந்தார் என்ற விபரமும் இருவருக்கும் தெரியாது. அவர்கள் கனியைப் பறித்து விட்டதைப் பார்த்த சில முனிவர்கள், நீங்கள் அமித்ரரின் சாபத்திற்கு ஆளாவது உறுதி என சொல்லி விட்டனர். பறித்த இடத்திலேயே வைத்து விடலாம் என்றால், அது நடக்கிற காரியமா ? வேறு வழியே இல்லை.... கூப்பிடு கிருஷ்ணனை... அவன் தான் ஆபத்துக்காலத்தில் நமக்கு உதவுபவன் என்று பாண்டவர்கள் அவரை அழைத்தனர். கிருஷ்ணர் வந்துவிட்டார். இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் கடைபிடிக்கும் தர்மத்தை ஒளிக்காமல் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே உரைக்க வேண்டும். நீங்கள் சொல்வது நிஜமானால், பழம் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும் என்றார். ஒவ்வொருவரும் தங்கள் பதிலைச் சொன்னார்கள். அப்போது சகாதேவன், கிருஷ்ணா ! சத்தியமே தாய், ஞானமே தந்தை, கருணையே தோழன், சாந்தகுணமே மனைவி, பொறுமையே குழந்தை... இதுவே நான் கடைபிடிக்கும் தர்மம். நான் சொன்னது உண்மையென்றால் கனி ஒட்டிக்கொள்ளட்டும், என்றான். பழம் திரும்பவும் கிளைக்கு போய்விட்டது. பின்னர், அவர்கள் தனியாக உரையாடினர். சகாதேவா ! நீ ஒரு முட்டாள். எவனாவது எதிரிக்கு போருக்குரிய களபலி கொடுக்கும் நாளை குறித்துக் கொடுப்பானா, நீ செய்து விட்டாயே, என்றார். தொழில் தர்மம் தவறக்கூõடது. கிருஷ்ணா ! என்ற சகாதேவனிடம், அப்படியானால், திரவுபதி அவள் கூந்தலை முடிவது சிரமம் தான் ! எதிரிகள் வெற்றி பெறுவார்கள். நீ என்ன செய்வாய் ? என்றார் கிருஷ்ணர். அதெப்படி ? நீயிருக்கும் போது அது நடந்து விடுமா ? என்று சகாதேவன்  கூறவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:27 pm

கிருஷ்ணா ! நீ எங்களை விட்டு பிரிய முடியாது. ஏனெனில் நான் உன் மீது நிஜமான பக்தி வைத்தவன். இப்போதே இங்கே உன்னைக் கட்டிப் போட்டு விடுகிறேன். கிருஷ்ணர் சிரித்தபடியே, அதெப்படி சாத்தியம் ? முடிந்தால் என்னைக் கட்டிப்பார். என்றவராய், அந்த அறை முழுக்க பல்வேறு வடிவமாய் பிரிந்து வியாபித்து நின்றார். சகாதேவன் அவரிடம், கிருஷ்ணா ! நீ மாயவன். உன்னைக் கட்ட கயிறு வேண்டுமென்று நினைத்து தானே இப்படி பல வடிவங்களில் மாயம் கட்டுகிறாய். உன்னை கயிறால் கட்டமுடியும் என்று நினைக்கும் அஞ்ஞானியா நான் ! உன்னை நான் என் மனதால் தியானிப்பது நிஜமென்றால், மனதால் உன்னைக் கட்டிப்போடுகிறேன், என்றான். கிருஷ்ணரால் அசைய முடியவில்லை. ஆம்... பகவானை பக்தியால் மட்டுமே கட்டிப் போட முடியும் என்பதை சகாதேவன் மூலமாக நமக்கு கற்றுத்தந்தவர் கிருஷ்ணர். கிருஷ்ணரின் திருமண, லீலைகளைக் கேட்டு முக்தியடைந்த முதல் பக்தர் யார் என்று தெரியுமா ? பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி தான். அபூர்வமாக எப்போதாவது ஒருமுறை நிகழும் சூரிய கிரகண நாளில், குரு÷க்ஷத்திரத்தில் உள்ள ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் மக்கள் கூடி புனித நீராடுவார்கள். பகவான் கிருஷ்ணரும் அவரது ஆயிரக்கணக்கான ராணியரும் அங்கே வந்தார்கள். இவ்விழாவில் பங்கேற்க குந்திதேவி, அவளது அண்ணன் வசுதேவர், திருதராஷ்டிரன், அவன் தேவி காந்தாரி, தர்மர், துரியோதனன் மற்றும் அவன் மனைவி பானுமதி, கிருபாச்சாரியார் இன்னும் மகாபாரத வி.ஐ.பிக்கள் அத்தனை பேரும் ஆஜராகி விட்டனர். குந்தியும், வசுதேவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். அவர்கள் அங்கு ஆற்றிய உரையாடல் மனித குலம் முழுமைக்கும் ஆறுதலளிக்கும் கருத்துக்களைக் கொண்டது.  இவர்கள் இங்கே இப்படி பேசிக்கொண்டிருக்க திரவுபதி, கிருஷ்ணரின் பெரிய ராணியான ருக்மிணியைச் சந்தித்தாள். அங்கே முக்கிய ராணிகளான சத்யபாமா, பத்ரா, ஜாம்பவதி, சத்யா, காளிந்தி, சைப்யா, லட்சுமணா, ரோகிணி ஆகியோரிடம், கிருஷ்ணா எவ்வாறு உங்களைத் திருமணம் செய்து கொண்டார் ? என்ற விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள்.ஒருசமயம் யதுகுல மக்களுக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படவே, கிருஷ்ணர் மதுராவின் ஒரு பகுதியாக இருந்த துவாரகையில் ஒரு கோட்டையை நிறுவினார். கடலின் நடுவே இக்கோட்டை நிறுவப்பட்டது. வீதிகளும், மாடமாளிகைகளும் அமைக்கப்பட்டன. அங்கே யது குல மக்களை குடியேற்றினார். அங்கு தன் மனைவி ருக்மணியுடன் வசித்து வந்தார். கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் படித்த காலத்தில் அவருக்கு சுதாமா என்ற நண்பர் இருந்தார். குசேலன் என்றும் இவரைச் சொல்வார்கள். இருவரும் இணைந்தே இருப்பார்கள். அவர் பிராமணர். வேதம் கற்ற பிறகு, அதைக்கொண்டே பிழைப்பு நடத்தி வந்தவர். அவருக்கு சுசீலை என்ற மனைவி. குழந்தைகளின் எண்ணிக்கையோ அதிகம். குடும்பத்தை நடத்த தனக்கு கிடைத்த வருமானமே போதும் என்ற நிலையில் இருந்தார். பிராமணன் என்பவன் வேதம் படித்தவன் மட்டுமே. பிற வேலைகள் அன்றைய சமுதாயத்தில் அவனுக்கு விதிக்கப்படவில்லை. அந்த தர்மப்படியே சுதாமா வாழ்ந்தார். மேலும், சுதாமா தனக்கு அதிகமான குழந்தைகள் இருந்தது பற்றி கவலைப்படவும் இல்லை. அவர் பகவான் கிருஷ்ணரிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். அவன் என்ன நிகழ்த்த வேண்டுமென நினைக்கிறானோ அதை நிகழ்த்தியே தீருவான். அவன் நடத்தும் நாடகத்தில் நாம் பாத்திரங்கள். அவன் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறானோ அதை செய்யட்டும் என்ற பக்குவநிலைக்குச் சொந்தக்காரர். தந்தை எப்படியிருந்தாலும், தாய் குழந்தைகளின் பசி பொறுக்க மாட்டாள். அவள் தன் கணவரிடம், அன்பரே ! தாங்கள் தங்கள் நண்பர் கிருஷ்ணரை துவாரகையில் சென்று சந்தியுங்கள். அவர் நம் வாழ்வு வளம்பெற உதவாமலா போவார் ? என்றாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:28 pm

சுசீலையும் பணத்தின் மீது பற்றுக் கொண்டவளல்ல. வறுமையைக் கண்டு அவள் பயப்படுபவளும் அல்ல. ஆனால், மாங்கல்யத்தின் மீது எந்தப் பெண்ணுக்குத்தான் பற்று இருக்காது... தன் கணவர் பசியாலேயே உயிர் விட்டுவிடுவாரோ என அவள் கலங்கினாள். அதன் காரணமாகவே கிருஷ்ணரைப் பார்த்து வரச்சொன்னாள். குசேலர் புறப்படும் சமயத்தில் பக்கத்து வீடுகளில் போய் சிறிது அவல் கடனாகப் பெற்று வந்து, அவரிடம் கொடுத்து அனுப்பினாள். கிழிந்த தன் அங்கவஸ்திரத்தில் அதைக் கட்டிக்கொண்டு சுதாமா கிளம்பினார். சுதாமா தனித்துப் போகவில்லை. தங்கள் ஊரிலுள்ள கிருஷ்ண பக்தர்களான அந்தணர்கள் சிலரையும் உடன் அழைத்து வந்திருந்தார். அவர்களும் பற்றற்ற நிலையிலுள்ளவர்கள். எந்த எதிர்பார்ப்பும் கருதி அவர்கள் அங்கே வரவில்லை. துவாரகையில் அரண்மனை களை கட்டியிருந்தது. கிருஷ்ணருக்கு கப்பம் செலுத்தவும், அவரிடம் சன்மானம் பெற்று செல்லவும் பல குறுநில மன்னர்கள் அரண்மனை வாசலில் காத்துக் கிடந்தனர். அவர்களை காவலர்கள் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணர் ஒரு உத்தரவு போட்டிருந்தார். வேதம் படித்த பிராமணர்கள் அரண்மனைக்கு வந்தால், அவர்களைத் தடுக்காமல், காவலர்கள் உடனடியாக தனக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு. அப்போது, கிருஷ்ணர் ருக்மணியின் மடியில் தலை வைத்து, திருவடியை சத்யபாமாவின் மடிமீது வைத்து, பத்தாயிரம் நாயகியர் சாமரம் வீச சுகமாக சயனித்திருந்தார். காவலன் ஒருவன் ஓடிவந்து, கிருஷ்ணரை அவரது நண்பர் பார்க்க வந்துள்ள விபரத்தை அறிவித்தான். துள்ளிக்குதித்து எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக்  காண அம்பு போல பாய்ந்து நண்பரைக் காணச்சென்றார். சுதாமா ! உம்மைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று ? உம்மை மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம் தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பிலேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது எப்படி... கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி. அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை நீங்கி விட்டது. சுதாமாவுடன் வந்தவர்களுக்கம் தனி அறைக்குள் ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலாயிற்று. கிருஷ்ணர் சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர் என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். ருக்மணியும் அவ்வாறே செய்தாள். பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச்சொன்ன கிருஷ்ணர், சுதாமா ! அவந்தியில் இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா ! உமது கால்கள் எவ்வளவு வலித்திருக்கும் என்றவராய் அவரது கால்களைபிடித்து விட்டபடியே பேசினார். நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர் சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:30 pm

பின்னர் சுதாமா ! நம் பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி விசாரிக்கவே இல்லை. மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா ? பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா ? என்று குசலம் விசாரித்த கையுடன், சுதாமா ! என் மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்டவராயிற்றே ! எனக்காக பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே ! சுதாமா ! அதைக் கொண்டு வந்துள்ளீரா ? என்றதும், இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அரண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா மாயக்கண்ணன் ! அதை அப்படியே பறித்து விட்டார். அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி அவலை வாயில் போட்டார். அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ, அவந்தியிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல.... அவரது ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைகளாகி விட்டன. எல்லாருமே செல்வத்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?
இதற்குள் இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடுத்து விட்டாள். ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்கப்போகும் பணத்தால் மனம் மாறி, பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா ? அதனால், அதில் இருந்து சுதாமரைக் காப்பாற்றினாளாம் அந்த தேவி ! பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர். அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமில்லை. அந்த மாயக்கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும் அவரும் கேட்கவில்லை. ஆனால், நண்பன் கொண்டு வந்த அழுக்குத்துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக்கொண்டார். பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படுகிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான். சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. பால்யத்தில், இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்றுவந்தபோது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள். விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசியெடுக்கவே, குசேலர் பொட்டலத்தைப் பிரித்தார். சாப்பிட்டார். கிருஷ்ணரை அழைத்த அவருக்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ ! ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான். அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்லவில்லை. பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம் ! அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தால், அவன் இறந்தாலும் சரி... அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். ஒரு வழியாக குசேலர் அவந்தி வந்து சேர்ந்தார். அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்தக் கள்வன் கண்ணன், குசேலர் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது. பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாமத்தை விடாமல் சொன்னபடி, வீட்டை தேடியலைந்தார். சுசீலை அவரை ஒரு மாடத்தில் நின்று அழைத்தாள். நம் வீடு இதுதான் ! இங்கே வாருங்கள் என்றாள். குழந்தைகள் தங்கம், வைரம், மாணிக்கச் சிறுதேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர் வீட்டில் கூலியை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வேலை செய்து வந்த வேலைக்காரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறையாமல் தொங்கியது. இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டுக்குள் நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.

கிருஷ்ணா ! ஏ மாயவனே ! என் ஆத்ம நண்பனே ! அடேய் ! இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ கயவனே ! என்னை ஏமாற்றி விட்டாயடா ! நான் உன்னிடம் செல்வத்தை கேட்டேனா ! என் பக்திக்கு மரியாதை அவ்வளவு தானா ! தாமோதரா ! புண்டரீகாக்ஷõ ! என் இதயத்தில் உறைபவனே ! பக்தன் என்றால் யார் தெரியுமா உனக்கு ? யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம் கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி, அதையும் அனுபவித்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன் ! அழியா உலகான வைகுண்டத்தில் ஒரு இடம்..... உன் கமல பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம்.... இந்த நிரந்தரச் செல்வத்தை நாடியல்லவா வந்தேன் ! பரந்தாமா ! இந்த செல்வம் எனக்கு வேண்டாமடா ! என்னை உன்னோடு சேர்த்துக் கொள், எனக் கதறினார். நண்பனின் கதறல் கண்டு கண்மணி கிருஷ்ணர் பொறுப்பாரா ! வந்து விட்டார் சங்கு சக்ர காதாதாரியாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார். பகவான் கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின்பற்றி நடந்தால், இப்பிறவியில் எல்லா இன்பமும், இனி பிறப்பற்ற நிலையும் பெறுவது உறுதி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முழுமுதலோன் Sun Mar 16, 2014 12:32 pm

கல்கி அவதாரம்!


பெருமாளின்  அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் எனஎதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணுவை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும். கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகுண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்திற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினால் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத்திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனைத் தொடர்ந்து வைகுண்டம் போனார்கள். கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்கள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப்படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய்விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேகங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டாணம் அற்றுப் போவதால் வீடுகள் சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்மங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.




சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து  நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார். அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர். அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும். சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும்.  ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் கிருத யுகம் - 17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் - 92, 96, 000 வருடங்களும், துவாபர யுகம் - 8, 64, 000 வருடங்களும், கலியுகம் - 4, 32, 000 வருடங்களும் கொண்டது. இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கற்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.)  60*60*60 = 216000 நொடி = 1 நாள். அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழிகை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by ஸ்ரீராம் Sun Mar 16, 2014 2:55 pm

அருமை அருமை அண்ணா
பகிர்வுக்கு நன்றி சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by sreemuky Sun Mar 16, 2014 8:48 pm

இதெல்லாம் இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் நம்பப் படுவதில்லை. ஆனாலும் நமது முன்னோர்கள் வாக்கு பொய்யில்லை.

கண்டம் விட்டு கண்டம் பாயும் அஸ்திரங்கள் ராமாயண மகாபாரதத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஒவ்வொரு அஸ்திரத்திர்க்கும் ஒரு மாற்று அஸ்திரம் இருந்திருக்கிறது (scud & patriot) போல.

மந்திரங்கள் ஜபித்து வானத்தில் இருந்து அஸ்திரங்கள் பெற்று ராமாயண மகாபாரத காலத்தில் போர் புரிந்துள்ளனர். இன்றைய cloud computing போல.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 11:15 am

அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தசாவதாரம்   - Page 2 Empty Re: தசாவதாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum