Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Page 1 of 1 • Share
கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது. மேலும் மைதா சாப்பிடுவதை விட, கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி, உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள்.
மேலும் தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆகவே அப்படி சாப்பிடும் கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம் அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது அதன் நன்மையை புரிந்து கொண்டு சாப்பிடுங்கள். சரி, கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* இரத்தத்தை சுத்தப்படுத்தும்
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
* உடல் எடை குறையும்
பெரும்பாலானோருக்கு கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும். இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
* செரிமானத்தை சீராக வைக்கும்
மைதாவை அதிகம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். ஆனால் கோதுமையை சாப்பிட்டால், அது எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.
* இதய நோய்
இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.
* புற்றுநோயை தடுக்கும்
உங்களுக்கு தெரியுமா கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.
* இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளதா? அப்படியானால் மைதா ரொட்டி சாப்பிடுவதை நிறுத்தி, கோதுமை ரொட்டியை சாப்பிடுங்கள். இது உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும். கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
* தைராய்டு
தற்போது நிறைய மக்கள் தைராய்டினால் அவஸ்தைப்படுகின்றனர். அத்தகையவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
* வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.
* எலும்பு அழற்சி
எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் டயட்டில் கோதுமை ரொட்டி அல்லது பிரட் சேர்த்து வந்தால், அது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும்.
* நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.
* மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள பிரச்சனையை சரிசெய்து, மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தரும்.
* சிறுநீரக பிரச்சனை
30 வயதிற்கு மேல் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பித்துவிடும். ஆகவே அத்தகைய பிரச்சனையில் இருந்து தள்ளி இருக்க வேண்டுமானால், தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* இரத்த சோகை
உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், கோதுமை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வாருங்கள். இது சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை.
* புரோட்டீன் நிறைந்தவை
கோதுமையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.
நன்றி Seithy
Re: கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பயனுள்ள தகவல் நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பயனுள்ள தகவல் நன்றி முள்ளி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
» ரசத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
» ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
» உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!
» நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
» ரசத்தை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
» ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
» உணவில் சேர்க்கும் இந்திய மசாலாப் பொருட்களின் நன்மைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum