தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Wed Mar 26, 2014 3:23 pm

First topic message reminder :

வறுமையை போல
வாழ்க்கையை கற்று கொடுக்க
எந்த குருவாலும் முடியாது
அந்த வறுமையை நீ வெல்லாமல் விட்டால்
அதன் புனிதம் தெரியாது .......!!!
வறுமையை உடைத்து வெளியே வா
அதை
உடைக்கும் சக்தி உன்னிடமே உண்டு
எரிமலை போல எழுந்தே வா .....!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down


சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Wed Apr 09, 2014 4:50 pm

எதுவும் இல்லாதபோது
எளிமையாகவும் தூய்மையாகவும் வாழ கற்று கொள்ளும் மனசு
எல்லாம் கிடைத்தபின்
உண்மையான வாழ்வை தொலைத்து விட்டு
ஆணவத்தோடு அலைகிறது .....!!!
எல்லாமே கிடைத்தது
அந்த பரிசுத்தமான அன்பின்
தூய்மையினால் தான் என்பதை மறந்து .....!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by mohaideen Wed Apr 09, 2014 11:22 pm

அனைத்தும் அருமையாக உள்ளன
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 2:25 pm

!!!....மீனவனின் தலை விதி ......!!!
அன்று கடலுக்கு போனவன்
மீனோடும் முத்தோடும் வந்தான்
இன்று கடலுக்கு போவபன்
இன்னொரு மீனவனின் சடலத்தோடு
திரும்பி வருகிறான்
எந்தன் தாய் பூமியே .......!
தமிழன் யுத்தத்தில் செத்தான்
அங்கு தர்மம் தோற்றது
அது எழுதபடாத ஈழ விதி
பாவம்
அனுதினமும் மீனவன் சாகிறான்
இது யார் எழுதி வைத்த யுத்த விதி .....!!!
பாரதம் தூங்கி நாளாச்சு
பாரதியை ஈன்ற பவள தமிழே ...!!!
நீ விழித்தெழு ......!
இல்லையேல் உனக்கான ஓய்வுக்கு
கடற்கரை கூட மிச்சமிருக்காது
அதிலும் குண்டுகள் வந்து குடியிருக்கலாம் .......!!!!
சுபபாலா : பிரான்ஸ்
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 2:28 pm


அனைத்தும் அருமையாக உள்ளன


நன்றி  mohaideen:003:  சூப்பர் 
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 2:28 pm

பெண்மைக்குள் நூறு வலி
அதன் உண்மையை சொல்ல முடியாது
அதுவும் ஊமைவலி
பருவம் பூத்த பின்
வரும் அத்தனை நாட்களும்
பயம் கொண்டு வாழும் நரகவலி
இறைவா .....!
இதை மாற்ற ஏதுவழி
ஆணாய் பிறந்தால் ஆசைவழி
அத்தனை செயலுக்கும் உண்டு மாற்றுவழி
உலகமே வீடாகும் அவன் பிறந்தபயன்
வீடே உலகாகும்
பெண்மைக்கு ஆயுள் வரை பிறவி பயன் ....!!!!
உண்மையில் உண்மையில் ஒன்றும் இல்லை
பெண்மைக்கு மட்டும் தான் ஒன்றும் இல்லை
பொய்மையில் வாழும் மானுடமே ....!!!
பெண்மையை பொய்கையாய் மாற்று
வாழ்க்கை நினைக்க நினைக்க இனிக்கும்
அனுதினமே...........!!!!
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 2:29 pm

தேர்தல் வரும் போது மட்டும்
நாட்டுக்காக உண்மையாய் வாழ்ந்த
அரசியல் தலைவர்கள்
வாக்குறுதிகளோடு வந்து போகிறார்கள் அரசியல் மேடைகளில்
பாவம் ......!
அந்த புனிதங்கள் கூட
மாசுபடுகிறது
வாக்குகளை கொள்ளையடிக்க போடும்
அரசியல் வேடங்களுக்கு
முகமூடியாய் .....!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 3:33 pm

உன் தாய் தந்தையர் ஊருக்கே தெரியாத அடையாளமற்று இருந்தால்
உலகத்திற்கு தெரிந்த
அடையாளமாக
உன் கடின உழைப்பால் மாற்று ....!!!
சாகும் முன் தங்க தேரில் ஏற்று....!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu Apr 10, 2014 3:34 pm

சொந்த வீடு எல்லோருக்கும் இருப்பது இல்லை
இருப்பவர்கள் எல்லாவற்றையும் வாங்கி
அழகுபடுத்தி பார்கிறார்கள்
இல்லாதவர்கள் அப்படி இப்படி வாடகையோடு வாழ்ந்து போகிறார்கள்
ஆனால்
முகவீடு உங்களின் சொந்த மனவீடு
இதில் விருந்தினர்களை வரவேற்று அழகு பாருங்கள்
அதற்காக விருந்தினர்களுக்கே உங்கள் வீட்டை வாழ கொடுக்காதிர்கள்
உங்கள் பதிவுகளையே முடிந்தவரை பதிவுசெய்யுங்கள் ...!!!
அது உங்கள் நல்லெண்ண கருத்து எதுவானாலும் பருவாயில்லை
அது உங்களுக்கு ஆத்மா திருப்தி தரும் ...!!!
உங்களுக்கான தேடலை அதிகபடுத்தும்
உங்களையும் ஒரு பத்து இருபது பேர் வாழ்த்தும் போது
உங்கள் மகிழ்சியும் நம்பிக்கையும்
இரட்டிப்பாகும்
ஆதலால்
எதுவும் வராது எதுவும் தெரியாது என்று ஒதுங்கிவிடாதிர்கள் .....!!!
யாரும் உருவாக்கி கொண்டு வரவில்லை
போராடி விழுந்தெழும்பி தான்
விருது பெற்றார்கள்
அது ஏன் உங்களால் முடியாது
களத்தில் துணிந்து இறங்குங்கள்
வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்
நிச்சயம் உங்கள் போராடும் குணம்
மிகப்பெரிய உளவியல் மாற்றத்தை
உருவாக்கும் .....!!!
(குறிபிட்ட நண்பரின் முகபக்கத்தை வாழ்த்த புரட்டிய போது எதுவுமே அவர் பதிவில்லை என்ற ஏக்கத்தின் பதிவு இது)
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 13, 2014 11:14 pm

!!!....அதிகாலை ....!!!
உறக்கத்திலும் விழிப்பாக இருந்து
அதிகாலையை தரிசிப்பவன்
அந்த நாளையே முழுமையாக
வாழ்ந்துவிடுகிறான்
"அதிகாலை "
இயற்கையும் இறைவனும் வந்து போகும் பூஞ்சோலை .....!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Wed Apr 16, 2014 10:28 pm

கோயிலில் கல்லானவனுக்கு
கடும் பாதுகாப்பு
தெருவோரத்தில்
அனாதைகளை அப்புறபடுத்த
உத்தரவு .........!!!
பாரதமே ......!
எப்போது கல்லை விட்டு
உயிர்களை பாதுகாக்க போகிறாய் ......!!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Wed Apr 16, 2014 10:30 pm

!!!.....தேர்தல் .........!!!
பாரதம் தழுவிய
சிறப்பு பொய்களுக்கான
போட்டி ........!!!!
( காசுகளின்
ஊழல்களின் நடுவரின் தீர்ப்பே
போட்டியாளரை தேர்வு செய்யும் )
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 6:54 pm

பெண் அழுதால் பாவம்
ஆண் அழுதால் கோபம்
பெண் சுமைதாங்கி
ஆண் அதையும் தாங்கி
வாழ்வுக்கு கொடுப்பது வரம் .....!!!
ஆனால்
அவன் ஓய்வெடுக்க இருக்காது
கடைசிவரை
ஆறுதலுக்கு ஒரு உறவு மரம் .....!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 6:55 pm

முதலில் ஏமாறுபவனும்
கடைசியில் வெற்றி பெறுவனும் கையில் வைத்திருக்கும் ஆயுதம்
அன்பும் நம்பிக்கையுமே .....!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:01 pm

கேலி கிண்டல் நையாண்டி
புறம் ஒதுக்கல்
வசதி தகுதி
சாதி சமயம் என்று ஒதுக்கபடுகிறீர்களா .......!!!
கவலை படாதீர்கள் /கவலைபடுத்தாதிர்கள்
உங்களுக்கான காலம் வந்தேயாகும்
உங்களுக்குள் அணையா நெருப்பை ஏற்றி
அமைதியாக போர் தொடுங்கள்
ஒதுக்கபடுவனுக்குள் தான்
ஆயிரம் ஒளி விளக்கு ஒளிர காத்திருக்கும் ........!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:09 pm

கடன்பட்டவனுக்கே தெரியும்
இரவு அவனை தின்று
துப்பும் காட்சி ........!!!
காரணம் தேடியும் புரியாமலும்
கட்டுவதற்கு வழி தெரியாமலும்
போலிக்கு உதிர்க்கும் புன்னகையே
அதற்கு சாட்சி .......!!!
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:09 pm

சூழ்சியில் இருந்து கூட
வென்று வரலாம்
சூது விளையாட தொடங்கியவன்
சுடுகாடு வரை
நாளும் செத்து பிழைப்பான்
போதைக்கு அடிமையாகு
பாதை உண்டு
சூதுக்கு அடிமையானால்
வாழ்க்கையில்
சாவதே நன்று .......!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:10 pm

!!!..... சூதாட்டம் ........!!!
கையிருப்பில் இருந்ததே
அதிஸ்டம் தான் என்று
மூளைக்கு தெரிவது
சூதாட்டத்தில் மட்டுமே ....!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:11 pm

பதவியிலும் வசதியிலும்
வாழ்வோர் செய்யும் துரோகங்கள்
இரண்டும் இல்லாதவர்களால் தற்காலிகமாக ஏற்று கொள்ளபடுமே தவிர ........!
ஒருபோதும் அந்த காயங்கள்
மாறாது
கைபுன்னாகவே இருக்கும் .......!!!
கடைசி மரணத்தில்
கண்ணீர் பாம்புகள் கொத்த
கைதட்டி சிரிக்கும் .......!!!
ஆதலால் தான்
ஆட்சிகளின் காட்சிகளும்
அரண்மனை சாட்சிகளும் இறுதியில்
தொலைக்காட்சிகளில் மட்டும்
கண்ணீர் ஊர்வலமாய் போகிறது ....!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:17 pm

உங்களை ஊக்குவிக்க யாரோ
ஒருவர் வரும் வரை
உங்களுக்கு நீங்களே குருவாக இருந்து
உங்களின் அத்தனை சக்திகளையும்
அறிவோடும் அனுபவத்தோடும்
சேகரியுங்கள்
யாரோ ஒருவர் தேடி வராவிட்டாலும்
நீ யார் என்று கேட்குமளவுக்கு
ஒருவன் வருவான் .....!!!
இல்லையானால் அதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் தருவான்
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:17 pm

அறிவுள்ள உலகத்தை
ஒதுக்கி வைத்துவிட்டு
காசுள்ள உறவுகளை மட்டும்
கௌரவிக்கும் சமூகம்
கண்ணீர் அஞ்சலியின் போது மட்டும்
கருணையை தேடி அழுகிறது .....!!!!!
எதை மறந்து ஓடினாலும்
எதை மறைத்து பாடினாலும்
மரணத்தின் பிடியின் முன்
உணர்ந்தே உயிர் போகும்
இது தான் வாழ்வின் விதியாகும்
ஆதலால் ......!!!
காசோடும் கர்வத்தோடும் வாழாமல்
கருணையோடும் அன்போடும்
வாழ்தலே
இவ் வாழ்வின் பூரணத்தை பூர்த்தி செய்யும் .....!!!!
மானுடமும் உன்னை வாழ்த்தி
உன் உறவுகளை மலர செய்யும் .......!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:18 pm

சந்தேகத்தையும் கோபத்தையும்
கணவன்மார்களே
கையில் எடுத்து கொள்கிறார்கள்
செய்கிற எல்லா செயல்களையும்
அரசுகளின் ஊழலைபோல் செய்து விட்டு ......!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Sun Apr 27, 2014 7:19 pm

குடித்து விட்டு மனைவியை
துன்புறுத்துபவன்
பெற்ற தாயினானால் கூட
சபிக்கபடுவான்
மனைவியின் கண்ணீர் அவன்
சாவிலும்
உண்மையின் அழுகையாய் ஒப்பாரி பாடாது .......!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Tue Apr 29, 2014 2:07 pm

இன்னொருவரின் ஆற்றலையும்
தனி திறமையையும் இனம் கண்டு
ஊக்கபடுத்தி விடுவதும்
வாழ்க்கையில் நீ சேர்க்கும் புண்ணியமே .......!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by ஸ்ரீராம் Tue Apr 29, 2014 7:33 pm

சுபபாலா wrote:இன்னொருவரின் ஆற்றலையும்
தனி திறமையையும் இனம் கண்டு
ஊக்கபடுத்தி விடுவதும்
வாழ்க்கையில் நீ சேர்க்கும் புண்ணியமே .......!!!!

சூப்பர் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by சுபபாலா Thu May 08, 2014 5:45 pm

கிடைகாதவரைக்கும்
ஆசையைவிட்டு
தேடலை மட்டும் பூசையாக்கி
தவம் செய்பவன்
தேடியது கிடைத்தபின்பு
தேடியதையும் தொலைத்து விட்டு
பேராசைபடுகிறான் ..........!!!!
ஆசையை கரைத்தால்
ஆன்மாவே ஆலயம் .....!!!
ஆள் மனம் உண்மையானால்
தேடி போக தேவை இல்லை
ஆண்டவன் ஆலயம் ........!!!!
சுபபாலா
சுபபாலா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 545

Back to top Go down

சுபபாலாவின் வாழ்க்கை கவிதை - Page 3 Empty Re: சுபபாலாவின் வாழ்க்கை கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum