Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உணரத் தக்க மாற்றம்!
Page 1 of 1 • Share
உணரத் தக்க மாற்றம்!
தேர்தல் நடைபெறும் காலத்தில் எது நடந்தாலும் அதற்கு அரசியல்ரீதியான சாயம் ஏற்படுவது இயல்பு. பங்குச்சந்தை, பணவீக்க விகிதம், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு போன்றவையும் இப்படித்தான் பார்க்கப்படும். இவைமட்டுமின்றி ஏற்றுமதி-இறக்குமதி, தொழில்துறை உற்பத்தி, வேளாண்துறை உற்பத்தி, வேலையில்லாதோர் எண்ணிக்கை, மின்வெட்டு அளவு என்று ஏராளமான குறியீடுகள் ஆட்சியாளர்களை அளவிடப் பயன்படுத்தப்படும்.
இந்தத் தருணத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிதுசிறிதாக உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டாலருக்கு ரூ. 68.36 என்று இருந்த மதிப்பு இப்போது ரூ. 60 என்று ஆகியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் ஏதும் பெரிய அளவில் மாறாவிட்டாலும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கூடியிருக்கிறது. இறக்குமதி குறைந்ததால் அமெரிக்க டாலர்களுக்கான தேவையும் இந்தியாவில் குறைந்தது. அதே சமயம் இந்தியாவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற நினைப்பில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதைப் பங்குச் சந்தையின் புள்ளிகள் உயர்வதிலிருந்து அறிய முடிகிறது.
கடந்த ஓராண்டாகவே மத்திய அரசு முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் காட்டிய தயக்கத்தாலும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாகவும் உற்பத்தி, வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகள் சுணங்கிவிட்டன. தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் மின் உற்பத்தி மற்றும் மூலப் பொருளான கனிமவள அகழ்வு ஆகிய இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவைத்தான் நாடு பார்த்துவருகிறது. ரிசர்வ் வங்கிக்கு அனுபவம் இருப்பதால்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்திருந்தாலும், வெளி வர்த்தகப் பற்றுவரவில் ஏற்பட்ட பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும் வட்டி வீதத்தைக் குறைக்காமல் பராமரிக்கிறது.
பழைய 500 ரூபாய் நோட்டுகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது ஓரளவுக்குப் பணச் சுழற்சிக்கு அல்லது பங்குச் சந்தை முதலீட்டுக்கு உதவியிருக்கிறது. அத்துடன் மக்களவைப் பொதுத்தேர்தல் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் மீண்டும் இந்தியாவுக்குள் எடுத்துவரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதுவும் பணப் புழக்க அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முதலீடு பெருக வேண்டும். அதற்கு, வங்கிகள் தரும் வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்தால் இது சாத்தியமல்ல. ரூபாய் மதிப்பின் இப்போதைய உயர்வு நிரந்தரமானதல்ல. எனவே, புதிய அரசின் முன்னுள்ள சவால் மிகவும் பெரியது. விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை அதிகரிக்கவிடாமல், வட்டியையும் உயர்த்தாமல், கடன் கிடைப்பதையும் தடுக்காமல் - பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது என்றால், சாதாரண காரியமில்லை.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» இளமையை தக்க வைக்கணுமா ?
» நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள்
» தக்க வயதில் திருமணம் அவசியம்
» ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
» இளமையை தக்க வைத்து கொள்ள
» நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள்
» தக்க வயதில் திருமணம் அவசியம்
» ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
» இளமையை தக்க வைத்து கொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum