Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திறமைக்கும் வளர்ச்சிக்கும் பிறப்பின் அடையாளமாஅளவுகோல்?
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
திறமைக்கும் வளர்ச்சிக்கும் பிறப்பின் அடையாளமாஅளவுகோல்?
[You must be registered and logged in to see this image.]
பிறந்தது முதல் அறிந்ததெல்லாம் வறுமை மட்டுமே. தலித்தாக பிறந்ததில் சமுதாயத்தின் உதாசீனங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பழகிய சுமைகள் நிறைந்த வாழ்க்கை... இப்படியொரு சூழலில் வளர்ந்த, வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு தன் சமுதாயத்தின் மீது கோபங்களும் ஆற்றாமைகளும் இருப்பதுதானே இயல்பு? முத்தமிழ் கலை விழியால் அப்படி இருக்க முடியவில்லை!
‘‘எனக்கு அடுத்து வரும் தலைமுறை இந்த மாதிரி அவலங்களை சந்திக்கக் கூடாது. என் வாழ்க்கையில நான் மாற்றத்தைக் காண எனக்கு உதவின அந்தக் கல்விதான், இங்கே ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் மாற்றத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கக் கூடியது. நானும், என் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியிருக்கிற ‘மாற்றம் தேடி’ அமைப்பானது கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தும்...’’ ஆஸ்திரேலியாவி லிருந்து அலைபேசியில் அழைத்துப் பேசுகிற முத்தமிழின் வார்த்தைகளில் உற்சாகம் பீறிடுகிறது.
முத்தமிழின் முழுக் கதையையும் கேட்டால், ஒரு திரைப்படமே பார்த்த உணர்வு உண்டாகிறது. ஒரே பாடலில் உயரம் தொடுகிற சினிமா கதை போல அல்லாமல், முத்தமிழுக்குக் கிடைத்த வெற்றியானது, அவமானங்களையும் அவலங்களையும் கடந்து கைகூடிய நீண்ட நெடும் பயணம். ‘‘சென்னை அயனாவரத்துல, குடிசைப்பகுதியில, சாமிதுரை பாத்திமா தம்பதிக்குப் பிறந்த மூணாவது குழந்தை நான். எனக்கொரு அண்ணன், அக்கா, தம்பினு பெரிய குடும்பம்.
அப்பாவுக்கு ரயில்வேல வெல்டர் வேலை. வறுமை ஒரு பக்கம் வாட்டினாலும், வாழ்க்கைக் கல்விக்கு அவசியமான விஷயங்களைக் கத்துக்க சாரணர் இயக்கத்துல சேர்த்து விட்டார் அப்பா. ஒரு பெண்ணா எனக்குத் தேவையான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது அந்த அனுபவம். சாரணர் இயக்க ஈடுபாடு எனக்குள்ள சமூக சேவை ஆர்வத்தை வளர்த்தது. அதனால மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்ல ‘பேச்சிலர் ஆஃப் சோஷியல் ஒர்க்’ சேர்ந்தேன்.
அதுக்கு முன்னாடி ரயில்வே ரெக்ரூட்மென்ட் எக்ஸாம் எழுதியிருந்தேன். காலேஜ்ல சேர்ந்த மூணாவது மாசமே, மத்திய அரசு வேலை தேடி வந்தது. குடும்பக் கஷ்டங்களுக்கெல்லாம் விடிவு வந்துட்டதா அம்மா, அப்பாவுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. மேல படிக்கணும்கிற என் ஆசையை அவங்களால ஏத்துக்க முடியலை. ஒரு பொண்ணுக்கு நல்ல வேலையும், நல்ல மாப்பிள்ளையும் கிடைக்கிறதைத் தவிர வேற என்ன சந்தோஷம் இருக்கப் போகுதுனு சொல்லி, படிப்பைப் பாதியில நிறுத்திட்டு, வேலையில சேரச் சொன்னாங்க.
முதல்நாள் வேலை... என்னைக் கொண்டு போய் விட்ட இடம் ரயில்வே ஊழியர்களுக்கான கேன்டீன்... அங்கே என்னைவிட பெரிசு பெரிசா இருந்த பாத்திரங்களைக் கழுவறதும், அந்த இடத்தைப் பெருக்கி சுத்தப்படுத்தறதும்தான் எனக்கான வேலை. அழுகையை அடக்க முடியலை. அன்னிக்கு சாயந்திரமே வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி அழுதேன். ‘கொஞ்ச நாள் பொறுத்துக்கம்மா... பரீட்சை எழுதி, பிரமோஷன் வாங்கிட லாம்... எத்தனை பேர் வேலையில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்க...
இந்த சின்ன வயசுல மத்திய அரசு வேலை கிடைச்சது உன் அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கோ’னு அவங்க சொன்ன ஆறுதல் என்னை சமாதானப்படுத்தலை. வேலையை சகிக்சுக்கிட்டு, கரஸ்பான்டெண்ஸ்ல பி.எஸ்சி. சைக்காலஜி சேர்ந்தேன். கொஞ்ச நாள்ல என் வேலையில சின்ன மாற்றம்... அதாவது, பாத்திரங்கள் கழுவிட்டிருந்த எனக்கு, தோட்டத்துல செடிகளுக்குத் தண்ணீர் விடறது, புல் வெட்டறது, களை பிடுங்கறது, தொட்டிகளுக்கு காவி பூசறதுனு வேற வேலைகளைக் கொடுத்தாங்க. எதுக்கும் நான் சோர்ந்து போயிடலை. சாரணர் இயக்கம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்ல தீவிரமா இருந்தேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் படிப்பைத் தொடர்ந்தேன்.
என் நெருங்கின நண்பர் திலீப் மூலமா மாற்றத்துக்கான முதல் விதை விழுந்தது. அவர் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்ல எம்.ஏ. சோஷியல் ஒர்க் படிச்சிட்டிருந்தார். அவரோட வழிகாட்டுதலின் பேர்ல டாடா இன்ஸ்டிட்யூட்ல சேர நுழைவுத் தேர்வு எழுதி, தேர்வானேன். என் விருப்பப்படியே மாஸ்டர்ஸ் இன் சோஷியல் ஒர்க் சேர அட்மிஷன் கார்டு வீட்டுக்கு வந்தது. அதுவரை எந்த விஷயமும் தெரியாத எங்க வீட்ல கலவரம் ஆரம்ப மாச்சு. அந்தப் படிப்புக்காக நான் வேலையை விடப் போறேன்னு சொன்னதும், அம்மா, அப்பா, சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்கனு ஆளாளுக்கு என்னைத் திட்டித் தீர்த்தாங்க.
பைத்தியம்னு பட்டம் கட்டினாங்க. எதையுமே காதுல போட்டுக்கலை. இதுதான் எனக்கு சரியான பாதையா தெரியுதுனு உறுதியா சொல்லிட்டு, மும்பைக்கு கிளம்பிட்டேன். தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூகப் பணிங்கிற பிரிவுல படிப்பைத் தொடர ஆரம்பிச்சேன். தமிழ் வழியில படிச்ச எனக்கு புதுச் சூழலுக்குப் பழகறது ஆரம்பத்துல பெரிய சவாலா இருந்தது. சக மாணவர்களைப் போல சரளமான ஆங்கிலப் புலமையோ, மேல் தட்டு மனோபாவமோ இல்லாத தால சிரமப்பட்டேன்.
ரயில்வே வேலையில பாத்திரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் இடையில வீணாப் போன அந்த நாலு வருஷ வாழ்க்கைப் போராட்டம் நினைவுக்கு வரும். உடனே எனக்குள்ள ஒரு உத்வேகம் பிறக்கும். அங்கே ஜெயிச்சுக் காட்ட ணும்கிற வெறி கிளம்பும். ஸ்காலர்ஷிப்ல படிச்சேன். கல்லூரியில மாணவர் தேர்தல் வந்தது. சக மாணவர்கள்ல சிலர் என்னை தேர்தல்ல நிக்கச் சொன்னாங்க. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருத்தர், அதுலயும் ஒரு பெண் எங்களுக்குத் தலைவியா வர்றதானு சிலர் எதிர்த்தாங்க.
ஒருத்தரோட பிறப்பின் அடையாளம் அவங்களோட திறமைக்கும் வளர்ச்சிக்கும் எப்படி அளவுகோலாகும்? அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு, தேர்தல்ல நின்னேன். டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸோட 75 வருஷ சரித்திரத்துலயே ஸ்டூடண்ட் யூனியனோட முதல் பெண் பிரெசிடென்ட்டா தேர்வானேன். அடுத்து ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ்ச் புரோகிராம் மூலமா அமெரிக்காவுல உள்ள துலேன் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க் போக வாய்ப்பு கிடைச்சது. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் கருப்பின மக்களுக்கு இடையிலான போராட்டங்களின் ஒற்றுமையைப் பத்தி ஒரு சின்ன ஆய்வு முடிச்சு மும்பை திரும்பினேன். தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூகப்பணி குறித்த என் பாடத்துல முதல் மதிப்பெண்ல தேர்வானேன்.
கேம்பஸ் இன்டர்வியூ மூலமா ஆஸ்திரேலியாவுல அங்குள்ள பழங்குடி மக்களோட பணிபுரியற வாய்ப்பு வந்தது. இப்ப மாசம் 4 லட்ச ரூபாய் சம்பளத்துல, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுல வேலை. அங்கே உள்ள பழங்குடி மக்கள்ல ஒருத்தியா, அவங்களோட உரிமைகளுக்குக் குரல் கொடுக்கிற அந்த வேலை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆனாலும், நான் அதைத் தொடரப் போறதில்லை. ஆகஸ்ட் மாசம் மறுபடி இந்தியாவுக்கு வரப் போறேன். கை நிறைய சம்பளம், நல்ல வேலைனு என் வாழ்க்கை எங்கேயோ போயிருச்சுன்னாலும், என் மனசு முழுக்க என் மக்களைச் சுத்தியே இருக்கு. வாய்ப்பு கிடைக்காத அந்த மக்களோட வாழ்க்கையில சின்னதா ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தணுங்கிற முயற்சியிலதான் ‘மாற்றம் தேடி’யை தொடங்கி வச்சுட்டு, ஆஸ்திரேலியா வந்திருக்கேன்.
கல்லூரியிலயும் கடந்த காலத்துலயும் என்கூட இருந்த பிரணய், நபியா எத்திராஜ், சரண்யா வைரம், கலைத்தமிழ் இனியவன், கலைவாணியோட இணைஞ்சேன். எங்க 6 பேரோட வாழ்க்கையிலயும் நிறைய போராட்டக் கதைகள் உண்டு. எல்லாருக்கும் என்னைப் போலவே இந்தச் சமுதாய மாற்றத்துக்கு ஏதாவது செய்திட மாட்டோமாங்கிற துடிப்பு இருந்தது. ‘மாற்றம் தேடி’ உருவாயிடுச்சு.
இது குடும்ப அமைப்புலேருந்து மாற்றத்தைத் தேடக் கூடியது. தொடக்கக் கல்வி, வாழ்க்கைக் கல்வி, தொழில் கல்வினு கல்வி சார்ந்த மாற்றங்களுக்கான நிறைய திட்டங்கள் வச்சிருக்கோம். முதல் கட்டமா பெண் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்கான மாற்றங்களுக்கான விஷயங்களைச் செய்யப் போறோம். ஆஸ்திரேலியாவுல என்னோட புராஜெக்ட் வேலைகள் கொஞ்சம் மிச்சமிருக்கு. அதையெல்லாம் முடிச்சிட்டு, ஆகஸ்ட் மாசம் இந்தியாவுக்கே திரும்பிடுவேன்.
‘நாலு லட்ச ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு, சமூக சேவை செய்யப் போறாளாம்... பைத்தியக்காரி’னு இப்பவே என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இப்பவும் நான் அதையெல்லாம் காதுல வாங்கலை. கல்விதான் ஒருத்தர் வாழ்க்கையில விளக்கேத்த முடியும். அதுதான் சமுதாயத்துல புரட்சியை உருவாக்கும்னு நம்பறோம். அதை நோக்கின எங்கக் குழுவோட கனவுகளும் லட்சியங்களும் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத்தான் போகுது... சீக்கிரமே சந்திப்போம்...’’ சின்னப் பெண்ணின் பெரிய கனவு களில் அந்த மாற்றத்தைக் காண முடிகிறது!
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: திறமைக்கும் வளர்ச்சிக்கும் பிறப்பின் அடையாளமாஅளவுகோல்?
சமுதாயப்பணியையே பணமாக்குகிற இவ்வுலகில் பணம் மட்டும் வாழ்க்கையில்லை லட்சியம்தான் முக்கியம் எனக்கருதுகிற உங்களுக்கு இறைவன் துணை நிற்பான்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்
» நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்…!
» நம்பிக்கையே உங்களின் திறமைக்கும், செயல்திறனுக்கும் சரியான அஸ்திவாரம்…!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum