Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்
Page 1 of 1 • Share
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்
நமது சமூகத்தில் பள்ளி வாழ்க்கை என்பது கடினமான ஒன்று என்ற அடிப்படையில் பள்ளி குழந்தைகளின் மனதில் உருவகப்படுத்தப்படுகிறது. இதற்கு பெற்றோரும், குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்களும் காரணம். வீட்டில் குறும்பு செய்கின்ற குழந்தைகளிடம் �இவ்வாறு குறும்பு செய்தால் நாளை உன்னை ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவேன் என்று மிரட்டுகின்ற பெற்றோர் உண்டு. இது அவர்கள் மனதில் பள்ளியை குறித்து ஒரு பயங்கரமான எண்ணத்தை தோற்று வித்துவிடும் என்பதை பெற்றோர் அறிவதில்லை. இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
பள்ளி வாழ்க்கை எந்த ஒரு சூழ்நிலையிலும் கடினமான ஒன்று என்றோ, தண்டனைக்குரிய இடம் என்றோ குழந்தைகளின் மனதில் கருத்துகளை விதைக்க கூடாது. புதிய நண்பர்கள் கிடைக்கின்ற இடம் என்றும், புதிய விஷயங்களை அறிந்து கொள்கின்ற இடம் என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும். முதலில் பள்ளி செல்கின்ற குழந்தையிடம் அவன்/ அவள் பள்ளிக்கு செல்வது தொடர்பாகவும், பள்ளி தொடர்பாகவும், அங்கு கிடைக்கப்போகும் புதிய நண்பர்கள் தொடர்பாகவும் அவ்வப்போது பேசி புரிய வைக்க முயல வேண்டும். பள்ளி திறக்கும் முன்னர் ஓரிரு முறை வகுப்புகளுக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்து அவன்/அவள் பள்ளிக்கு செல்ல விரும்பும் நிலையை உருவாக்கலாம்.
வீட்டில் அதிக பாசத்துடனும், அன்புடன் வளர்க்கின்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அதிக அடம் பிடித்து பள்ளிக்கு செல்ல மறுக்கும். இதனால் பள்ளியில் சேர்க்கின்ற வயதுள்ள குழந்தைகளை அருகில் உள்ள மற்ற குழந்தைகளுடன் பழக அனுமதிப்பதுடன், வீட்டின் வெளிப்புறங்களில் சென்று விளையாடவும் அனுமதிக்க வேண்டும். மூன்று நான்கு வயது நிரம்பும் போது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளில் சிறிது நேரம் தனியே விட்டு பழக வேண்டும். இது பெற்றோரிடம் இருந்து அவர்கள் தனித்திருக்க பழகும் வாய்ப்பாக அமையும்.
முதல்நாளில் பள்ளிக்கு செல்லும்போதோ, பள்ளி விட்டுவரும் போதோ குழந்தை அழுகிறதே என்று அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை நிறுத்தக்கூடாது. ஒருமுறை அது போன்று பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் மீண்டும் அவர்கள் அதனையே விரும்ப தொடங்குவர். முதல் நாளிலேயே பள்ளியில், வகுப்பறையில் குழந்தைகளை அதிக நேரம் அமர வைக்கவேண்டாம்.
எனது குழந்தை பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று அழுது அடம்பிடிக்குமோ? அவ்வாறு செய்தால் என்னால் என்ன செய்ய முடியும்? பள்ளியின் சுற்றுச்சூழல் குழந்தைக்கு பிடிக்குமா? பள்ளியில் வைத்து சரியாக உணவு உண்ணுமா? டாய்லெட் போக என்ன செய்யும்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் பெற்றோர் மனதில் வந்து செல்லும். பொதுவாக பள்ளி செல்லும் முதல் நாளில் குழந்தைகள் அடம்பிடிப்பது வழக்கம். முதல்நாளில் ஹாயாக சென்று விட்டு மறுநாளோ, அதற்கு அடுத்தநாளோ நான் போகமாட்டேன் என்று புத்தக பையை தூக்கிப்போட்டு விட்டு ஓடுகின்ற குழந்தைகளையும் காணலாம்.
வீட்டில் அன்பும், சுதந்திரமும் நிறைந்த உலகில் இருந்து கட்டுப்பாடும், கண்டிப்பும் மிகுந்த இடத்திற்கு மாறும் போது குழந்தைகளுக்கு பள்ளி செல்வதற்கான விருப்பமின்மை உருவாகிறது. வீட்டில் தந்தையும் தாயும், இதர குடும்ப உறுப்பினர்களிடம் எந்த கட்டுப்பாடுமின்றி வளைய வந்து கொண்டிருக்கும் எந்த குழந்தையும் அந்த சூழலில் இருந்து மற்றொரு சூழலுக்கு திடீரென்று மாறும்போது எழுகின்ற பிரச்னைதான் இது.
இதனை அறிந்து கொண்டு எதிர்கொள்ள தயாராக வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ள குழந்தை அழாமல் பள்ளிக்கு செல்கிறது, இவன் மட்டும் ஏன் அழுது அடம் பிடிக்கிறான் அல்லது இவள் மட்டும் ஏன் அழுது புரளுகிறாள் என்று எண்ணுகின்ற பெற்றோர் உண்டு. முதன் முதலில் பள்ளிக்கு செல்லப்போகும் குழந்தைகளின் பெற்றோர் கவனிக்க வேண்டிய அம்சங்களை இங்கே காணலாம்...
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்
முதன் முதலாக பள்ளிக்கு செல்கிறதா?
படிப்படியாக நேரத்தை அதிகரிக்க செய்யலாம். பள்ளிக்கு சென்றால் சாக்லெட் வாங்கி தருவேன், விளையாட்டு பொம்மை வாங்கி தருவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதும் தவறு. பள்ளியை பற்றியும், வகுப்பறைகள் பற்றியும் பாசிட்டிவ் விஷயங்களை கூறி குழந்தைகளை புரிய வைக்க முயல வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கிறது என்றால் ஏன் குழந்தை பள்ளி செல்ல மாட்டேன் என்கிறது என்பதை ஆராய வேண்டும். ஆசிரியரிடம் பயம், அருகில் அமருகின்ற குழந்தைகளால் தொந்தரவு, தனியாக உணவு உண்ணுவதற்கு சிரமம், தனியாக டாய்லெட்டில் சென்று அமர பயம், வகுப்பில் ஆசிரியர்கள் சொல்கின்ற விஷயங்கள் புரியாமல் போகலாம் என பள்ளி செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கின்ற குழந்தைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இவற்றில் எந்த காரணமும் இல்லாமலும் இருக்கலாம். அந்த காரணங்களை கண்டறிந்து அவற்றை போக்க முயற்சிக்க வேண்டும். இவ்விஷயத்தில் பெற்றோர் ஆசிரியரின் உதவியையும் நாடலாம். பள்ளி செல்ல புறப்படும்போது தலைவலி, வயிற்றுவலி, வாந்தி வருகிறது என்று பல்வேறு உடல்நல கோளாறுகளை சொல்லி குழந்தைகள் தப்பிக்க பார்க்கலாம். இது வீட்டில் உள்ளவர்களின் அன்பும், பாசமும், கவனமும் திசை திருப்ப செய்கின்ற முயற்சியாகும். அதே வேளையில் விடுமுறை நாட்களில் இதுபோன்ற உடல் நல கோளாறுகள் குழந்தைகளால் சொல்லப்படவில்லை எனில் அவர்கள் பள்ளிக்கு செல்ல மறுக்க சொல்லும் காரணங்கள் என்பதை அறியலாம். விடுமுறை நாட்களிலும் இதுபோன்ற உடல் நல கோளாறுகளை தெரிவித்தால் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
பொதுவாக குழந்தைகளை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் பள்ளிக்கு அனுப்பி வைப்பதை விட்டுவிட்டு அவர்களின் பிரச்னைகளை கரிசனையுடன் கேட்டு அவற்றுக்கு பரிகாரம் காணும் வகையில் முயற்சிக்க வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பும், அரவணைப்பும் பள்ளி செல்ல மறுக்கின்ற எந்த ஒரு குழந்தையையும் மாற்றும் வழியாகும். இருப்பினும் நீண்ட காலம் பள்ளி செல்ல மறுக்கின்ற குழந்தைகளால் அவர்களது கல்வியும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்ற நிலை ஏற்பட்டால் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.
தினகரன்

இது தப்பா?!!! ம்...படிப்படியாக நேரத்தை அதிகரிக்க செய்யலாம். பள்ளிக்கு சென்றால் சாக்லெட் வாங்கி தருவேன், விளையாட்டு பொம்மை வாங்கி தருவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதும் தவறு.
Re: அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அடம் பிடிக்கும் குழந்தைகளுக்காக சில டிப்ஸ்
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சரும சுருக்கங்கள் நீங்க டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» குழந்தைகளுக்காக….
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» குழந்தைகளுக்காக….
» அழகுக் குறிப்புகள் - டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
» தலைமுடி பிரச்சனைகளுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
» வசீகரிக்கும் கண்களுக்கு டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum