Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினம் ஒரு தேவாரம்
Page 23 of 33 • Share
Page 23 of 33 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 33
தினம் ஒரு தேவாரம்
First topic message reminder :
திருச்சிற்றம்பலம்!!!
தேவாரங்கள் எனப்படுபவைசைவசமயத்தின் முழுமுதற்
கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசுநாயனார், சுந்தரமூர்த்திநாயனார்
ஆகியநாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும்.
முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும்.
மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம், சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.
திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ளதோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.
“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத்தொகுத்தார்.
நற்றுணையாவது நமச்சிவாயவே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருமுறை | பாடியவர்(கள்) | பாடல் எண்ணிக்கை |
முதலாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,469 |
இரண்டாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,331 |
மூன்றாம் திருமுறை | திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் | 1,358 |
நான்காம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,070 |
ஐந்தாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 1,015 |
ஆறாம் திருமுறை | திருநாவுக்கரசு நாயனார் | 981 |
ஏழாம் திருமுறை | சுந்தரமூர்த்தி நாயனார் | 1,026 |
எட்டாம் திருமுறை | மாணிக்கவாசகர் | 1,058 |
ஒன்பதாம் திருமுறை | 9 ஆசிரியர்கள் | 301 |
பத்தாம் திருமுறை | திருமூலர் | 3,000 |
பதினொன்றாம் திருமுறை | 11 ஆசிரியர்கள் | 1,385 |
பன்னிரண்டாம் திருமுறை | சேக்கிழார் | 4,272 |
| மொத்தம் | 18,266 |
Last edited by முழுமுதலோன் on Wed Aug 13, 2014 3:45 pm; edited 2 times in total
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
260 | காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் சீரார் ஞான சம்பந் தன்சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏரார் வானத் தினிதா விருப்பரே. |
நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
திருச்செம்பொன்பள்ளி
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்னபுரீசர்.
தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.
261 | மருவார் குழலி மாதோர் பாகமாய்த் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை மருவா தவர்மேன் மன்னும் பாவமே. |
மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்த வையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
262 | வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச் சீரார் செம்பொன் பள்ளி மேவிய ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச் சேரா தவர்மேற் சேரும் வினைகளே. |
கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
263 | வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித் திரையார் செம்பொன் பள்ளி மேவிய நரையார் விடையொன் றூரும் நம்பனை உரையா தவர்மே லொழியா வூனமே. |
மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
264 | மழுவா ளேந்தி மாதோர்பாகமாய்ச் செழுவார் செம்பொன் பள்ளி மேவிய எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத் தொழுவார் தம்மேற் றுயர மில்லையே. |
மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய் வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
265 | மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த சிலையார் செம்பொன் பள்ளி யானையே இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் நிலையா வணங்க நில்லா வினைகளே. |
மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினை நில்லா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
266 | அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச் சிறையார் செம்பொன் பள்ளி மேவிய கறையார் கண்டத் தீசன் கழல்களை நிறையால் வணங்க நில்லா வினைகளே. |
பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
267 | பையா ரரவே ரல்கு லாளொடும் செய்யார் செம்பொன் பள்ளி மேவிய கையார் சூல மேந்து கடவுளை மெய்யால் வணங்க மேவா வினைகளே. |
அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
268 | வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத் தேனார் செம்பொன் பள்ளி மேவிய ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலே யடைந்து வாழ்மினே. |
வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக்கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
269 | காரார் வண்ணன் கனக மனையானும் தேரார் செம்பொன் பள்ளி மேவிய நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை ஓரா தவர்மே லொழியா வூனமே. |
நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக் காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
270 | மாசா ருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித் திரியவே தேசார் செம்பொன் பள்ளி மேவிய ஈசா வென்ன நில்லா விடர்களே. |
அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக் கூடாதவைகளைப் பேசித் திரிய அன்பர்கள் "ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!" என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
271 | நறவார் புகலி ஞான சம்பந்தன் செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப் பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும் உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. |
தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தினம் ஒரு தேவாரம்
திருப்புத்தூர்
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புத்தூரீசர்.
தேவியார் - சிவகாமியம்மை.
272 | வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க் கங்கை தங்கு முடியா ரவர்போலும் எங்க ளுச்சி யுறையு மிறையாரே. |
விரும்பத்தக்க தேன் விம்மிச் சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித் திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 23 of 33 • 1 ... 13 ... 22, 23, 24 ... 28 ... 33
Similar topics
» தேவாரம்
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» தினம் தினம் அழுகிறேன்....

Page 23 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum