Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
Page 1 of 1 • Share
சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
‘அம்மா எங்கே?’, ‘என் அப்பாவுக்கு என்னாச்சு?’, ‘அவுங்க வரவே மாட்டாங்களா?’ என்பது போன்ற வலிக்கும் கேள்விகளால் கனக்கும் சில குழந்தைகளின் வாழ்க்கை. பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள் அவர்கள்! இருப்பது ஒருவரா, இருவரா என்பது முக்கியமில்லை. குழந்தைக்கு மிகச் சரியான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் தத்தித் தாவி, எழுந்து நடந்து, துள்ளித் திரிந்து இயல்பாக சிகரம் தொடுவார்கள் குழந்தைகள்.
சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை விளக்குகிறார் குழந்தைகள் மருத்துவ நிபுணர் அருணா விண்ணரசி. ‘‘ஒரு குழந்தை தாய், தந்தை இருவருடனும் வளர்ந்து வரும் காலத்தில் இருவரில் ஒருவரை இழப்பது மிகப் பெரிய சோகம். அது, விபத்துக்கு ஈடான தாக்கத்தை குழந்தைகளின் மனதில் உருவாக்கிவிடும். சில குழந்தைகள் மட்டுமே அந்தச் சூழலுடன் அனுசரித்து வாழக் கற்றுக் கொள்கிறார்கள். கல்வியில் கவனக் குறைவு, மற்றவர்களுடன் சகஜமாகப் பழகுவதில் சிக்கல், தூக்கம் இன்றி தவித்தல், பிரிந்து போனவர் திரும்ப வருவார் என நம்புதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள்.
பெற்றோர் விவாகரத்து பெற்ற குடும்பங்களில் குழந்தைகள் இழந்த அன்புக்காக ஏங்கும் நிலையைப் பார்க்கலாம். பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்கவும் இன்றைக்கு வாய்ப்பிருக்கிறது. எப்படி இருந்தாலும் சிங்கிள் பேரன்ட் முதலில் எதிர்கொள்வது பொருளாதார பிரச்னை. குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பது, அவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெற்றோரில் ஒருவரை இழப்பதால் அடையும் உளவியல் சிக்கலில் இருந்து குழந்தை வெளிவரவும் மற்றவர்களுடன் கலந்து பழகச் செய்யவும் குழந்தையை தயார்படுத்த வேண்டியதும் முக்கியம்.
சிங்கிள் பேரன்டிங்கில் குழந்தையை எதையும் செய்ய விடாமல் பெற்றோரே செயல்படுவது, தான் எதற்கும் உபயோகம் இல்லாதவனோ, தன்னால் எதையும் செய்ய முடியாதோ என்ற எண்ணத்தை குழந்தைக்கு உருவாக்கிவிடும். வாழ்வை எளிதாகவும் இனிதாகவும் நகர்த்திச் செல்ல குழந்தையுடன் விவாதித்து திட்டமிடலாம். வேலைகள், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்களில் அனுபவத்தை உருவாக்கலாம். பண்பாடு, நன்னடத்தை போன்ற விஷயங்களை குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் கடைபிடிப்பது அவசியம். குழந்தையின் விருப்பத்துக்கு முதலிடம் அளித்தல், எந்த விஷயத்தையும் மனம் திறந்து பேச வாய்ப்பளித்தல், மற்றவர்களுடன் எளிதில் கலந்து பழகுதல் போன்ற திறன்களை மேம்படுத்த வேண்டும்.
குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தில் அவர்களுக்காக, அவர்களுடன் மட்டும் நேரத்தை செலவழிக்க வேண்டும். வெளியிடங்கள் மற்றும் உறவுகளுடன் இருக்கும் போது பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் கற்றுத்தர வேண்டும். விவாகரத்து செய்து கொண்ட பெற்றோராக இருந்தால் இருவருக்குள்ளும் இருக்கும் மனக்கசப்பையும் விரோத மனப்போக்கையும் குழந்தைகள் மனதில் விதைக்கக் கூடாது. குழந்தையிடம் இருவருமே சமமான அளவில் அன்பு செலுத்தி, பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் நேரடியாக பேசிக் கொள்வதற்கு பதிலாக குழந்தையை தகவல் பரிமாறும் சாதனமாக மாற்றக் கூடாது. ஒருவர், மற்றவரின் தவறைப் பெரிதுபடுத்தி குழந்தையின் மனதில் எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவதைத் தவிர்க்கலாம். வெறுமையைத் தவிர்க்க, பிரிந்த பின்னாலும் பெற்றோர் குழந்தையை அடிக்கடி சந்திக்கலாம்.
குழந்தையின் வளர்ச்சி, கல்வி, தனித்திறன் மேம்பாடு, எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டு உதவலாம். ‘தொலைவில் இருந்தாலும் நான் உன்னை வெறுக்கவில்லை’ என்ற உறுதியை குழந்தைக்கு அளிக்கலாம். சிங்கிள் பேரன்ட், ‘தாயாகவும் தந்தையாகவும் இருந்து நானே பார்த்துக் கொள்வேன் என்று களத்தில் இறங்க வேண்டாம். பிரிந்து சென்ற உறவை குழந்தைகள் முன்னிலையில் தரம் தாழ்த்திப் பேசாதீர்கள். அவர்கள், பெற்றோரிடம் இருந்து அக்கறையுடன் கூடிய கவனிப்பையும் அன்பையுமே எதிர்பார்க்கிறார்கள். அன்புக்குப் பதிலாக கேட்பதை எல்லாம் வாங்கித் தருவது அவர்களை தவறாக வழிநடத்தும்.
நிதி நிலைக்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடுதல், சேமித்தல், ஒரு பொருள் தேவைதானா என யோசித்து வாங்குதல் இப்படி வாழ்வின் அடிப்படைத் திறன்களை ஒவ்வொரு செயலின் மூலமாகவும் உணர்த்தி வளர்க்கலாம். குழந்தை சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொண்டு தேவையான நம்பிக்கையை அளிக்க வேண்டும். எதற்காகவும் கட்டாயப்படுத்தக் கூடாது. வீட்டுச் சூழலை குழந்தை புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துக் கூற வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல், நேர மேலாண்மை, நிதியைத் திட்டமிடுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளில் குழந்தையை கலந்து கொள்ளச் செய்யலாம். இது போன்ற இடங்களில் பிரச்னைகளில் இருந்து வெளிவர சிறந்த ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகள் சமூகத்தின் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள்... தங்களுக்கான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்ளவும் தயாராகி விடுவார்கள்.
குழந்தை, பெற்றோரில் ஒருவரை இறப்பின் மூலம் இழந்திருக்கலாம். இந்தச் சூழலில் குழந்தையின் புரிதலுக்கு ஏற்ப விஷயங்களை சொல்ல வேண்டும். நம்பிக்கையை வரவழைத்து, அன்பின் வழியாகத்தான் மனதின் காயங்களுக்கும் மருந்து போட முடியும். மெல்லத் தேறி வரும் போது குழந்தையிடம் இருக்கும் திறன்களை கண்டறிந்து மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கலாம். ‘சிங்கிள் பேரன்டிங் என்பது பெரிய பிரச்னை அல்ல. உன்னைப் போல் வளர்ந்த பலர் சாதித்திருக்கிறார்கள் என்கிற உதாரணங்களை குழந்தைக்கு அறிமுகம் செய்யலாம். மெல்ல மெல்ல குழந்தையின் மனதில் நம்பிக்கையை உயர்த்துவதன் மூலம் வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை உணர்த்தலாம்.
கனவுகள் தகர்க்கப்பட்டு, புன்னகை பிடுங்கப் பட்டு, அழ மட்டும் அனுமதிக்கப்படும் கோடான கோடி குழந்தைகளின் கண்ணீர்த் துளிகளை துடைப்பதற்கான முயற்சிதான் இந்த ‘செல்லமே...’ தொடர். ஒரு குழந்தையின் கண்கள் பனிக்கத் தொடங்கும் போதே பதறித் துடித்து, அள்ளி அணைத்து, தேற்றி, முத்தமிட்டு, கொஞ்சி சிரிக்க வைப்பதற்கான தாய்மை ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தும் ஊற்றெடுக்க வேண்டும் என்கிற மிதமிஞ்சிய ஆசையில் எழுதப்பட்டது. இதுவரை வாசித்த, பூக்க காத்திருக்கும் மொட்டுகளோடு சேர்ந்து புன்னகைக்கத் தயாரான அத்தனை பேரிடமிருந்தும் விடை பெறுகிறோம்.
- தினகரன்

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சிங்கிள் பேரன்டிங்கில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்!
» வீட்டுக்கடன் வரிச்சலுகைக்கு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
» Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum