தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வயதான பெண்மணி

View previous topic View next topic Go down

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வயதான பெண்மணி Empty இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வயதான பெண்மணி

Post by நாஞ்சில் குமார் Mon Oct 27, 2014 9:40 pm

[You must be registered and logged in to see this image.]


அத்தனை நாட்கள் அணிந்திருந்த உடைகளில் கொள்ளாமல் உடைக்குள் உடல் லேசாக இறுகும். கை வளையல் தொடங்கி, கால் மெட்டி வரை எல்லாமே உடலைக் கவ்வும். முகம் பூரிக்கும். கடைசியாக கால்கள் வீங்கும். ‘‘இந்த நேரத்துல அப்படித்தான் இருக்கும். சுரைக்காய் மாதிரி நீர்க்காய்கறி நிறைய சேர்த்துக்கிட்டா தானா சரியாப் போகும்...” என்கிற மாதிரியான அறிவுரைகளும் ஆலோசனைகளும் கேட்காமலேயே வந்து சேரும். எல்லா கால் வீக்கமும் சாதாரணமானதுதானா? ‘இல்லை’ என்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி, ஆபத்தான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறார்.‘‘கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கால்கள் வீங்குவது சகஜம். ஆனால், அதில் எது சாதாரணமானது, எது அசாதாரணமானது என்கிற தெளிவு அவர்களுக்கு வேண்டும். கால் வீக்கப் பிரச்னையானது இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் பெண்களுக்கு சற்றே அதிகமாகக் காணப்படும்.

கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்க பல காரணங்கள் இருக்கலாம். ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளாக இருப்பதால் எடை அதிகரித்து, வயிறு பெரிதாகி, அழுத்தம் அதிகமாவது ஒரு காரணம். அதிலும் வயதாகி, கருத்தரிக்கிற பெண்களுக்கு கர்ப்பத்தைக் காப்பாற்ற கர்ப்பப் பையின் வாயில் உள் தையல் போட்டு, அவரை பூரண ஓய்வில் இருக்கச் சொல்வோம். அதன் காரணமாகவும் கால்கள் வீங்கலாம். ரத்த சோகையோ, வேறு ஊட்டச்சத்துக் குறை பாடுகளோ இருந்தாலும் கால்களில் வீக்கம் வரலாம். புரோட்டீன் குறைபாடு ஏற்படுகிறவர்களுக்கும் கால்வீக்கம் சகஜம்.

இந்தக் காரணங்கள் பயப்பட வேண்டியவை அல்ல. ஓய்வெடுத்தால் தன்னால் சரியாகி விடும். ஆனால் ஆபத்தான காரணங்களால் ஏற்படுகிற கால் வீக்கமும் சிலரைப் பாதிக்கும். அந்த வீக்கம் ஓய்வெடுத்தாலும் வடியாது. உப்புச் சத்து அதிகரிப்பதன் விளைவாக சில பெண்களுக்குக் கால்கள் வீங்கும். அதன் விளைவாக முகம் வீங்கும். சிறுநீரிலும்உப்பின் அளவு அதிகரிக்கும். இன்னொன்று டி.வி.டி. எனப்படுகிற ‘டீப் வெயின் த்ராம்போசிஸ்’ பிரச்னை. ரத்த நாளங்கள், உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் ரத்தத்தை இதயத்துக்கு ரிவர்சில் கொண்டு செல்லும். அந்த நிகழ்வில் அரிதாக சில நேரங்களில் ரத்தம் உறைய நேரலாம். கர்ப்ப காலத்தில் உண்டாகிற மிகப் பரவலான ரத்த உறைவுப் பிரச்னையைத்தான் டீப் வெயின் த்ராம்போசிஸ் (Deep vein thrombosis) என்கிறோம்.

டீப் வெயின் த்ராம்போசிஸ் எனப்படுகிற இந்தப் பிரச்னையில் கால் நரம்புகளிலும் அபூர்வமாக இடுப்பெலும்புப் பகுதியிலும் ரத்தம் உறையும்.  ரத்தம் உறைகிற அந்தப் பிரச்னையானது நுரையீரல் வரை பரவினால் உயிருக்கே ஆபத்து. இந்த ரத்த உறைவு கர்ப்பத்தின் எந்தக் காலக்கட்டத்தில் வேண்டுமானாலும் வரலாம்.  பிரசவத்துக்கு 6 வாரங்களுக்குப் பிறகு வரை வரலாம். முந்தைய கர்ப்பத்தில் ஏற்கனவே இந்தப் பிரச்னையை சந்தித்தவர்கள், 35 வயதுக்கு மேலானவர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள், சமீபத்தில் சிசேரியன் செய்து கொண்டவர்கள், கர்ப்ப காலத்தில் முழுக்க முழுக்க படுக்கையிலேயே ஓய்வெடுப்பவர்கள், அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருக்காமல், நடக்காமல் இருப்போர் போன்றவர்களுக்கு பிளேட் லெட்டுகளின் ரத்தம் உறைகிற தன்மை அதிகமாகி, ரத்தம் தேங்கும். அதன் தொடர்ச்சியாக டி.வி.டி. பிரச்னை வரும் வாய்ப்புகள் அதிகம்.

கால்களில் உள்ள ரத்த நாளங்களில் இருந்து, இதயத்துக்கு ரத்தம் மிக மெதுவாகப் பாயும். கர்ப்பத்துக்குக் காரணமான ஹார்மோன்களாலும், கரு வளர்ச்சியின் காரணமாக விரிவடைகிற கர்ப்பப் பையின் காரணமாகவும் இப்படி நிகழும். பிரசவ நேரத்தில், குழந்தையானது, இடுப்புப் பகுதியை அழுத்துவதால், அந்த ரத்த நாளங்கள் பாதிக்கப் படலாம். ரத்தம் உறைகிற இந்தப் பிரச்னையின் முதல் அறிகுறி, கணுக்கால்களில் வலியாகஉணரப்படும்.கால்களில் வீக்கம்,  சருமம் மென்மையாதல், சிவந்து போதல் போன்றவையும் இதன் அறிகுறிகள். பிரசவ காலத்தில் உண்டாகிற சாதாரண கால் வீக்கத்தை இத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை.

ஆனால், அது டி.வி.டி.யின் அறிகுறிகளாக இருந்து, அலட்சியப்படுத்தப்பட்டால், அது கர்ப்பிணியின் இதயம், நுரையீரல் வரை பரவலாம்.  அதனால் கர்ப்பிணிக்கு மூச்சுத் திணறல் உண்டாகலாம். வயதான பிறகு கர்ப்பம் தரிக்கிற பெண்களுக்கு வயதின் காரணமாக, கெண்டைக்கால்களில் உள்ள தசைகளின் சுருங்கி விரியும் தன்மை சீரற்று இருப்பதால், ரத்தம் தேங்கி, உறையும். அப்படி உறைகிற ரத்தமானது உதிரத் துகள்களாக நேரடியாக இதயத்துக்கும், பிறகு அங்கிருந்து நுரையீரலுக்கும் செல்லும். ‘பல் மனரி எம்பாலிசம்’ எனப்படுகிற இந்த நிலை உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆபத்தானது.

சாதாரண கால் வீக்கமா, டி.வி.டியா என்பதை மகப்பேறு மருத்துவர் உறுதி செய்வார். கர்ப்பிணியின் அவதியைப் பொறுத்து, அவருக்குக் கால்களில் பேன்டேஜ் கட்டுவது, எலாஸ்டிக் ஸ்டாக்கிங் கட்டுவது அல்லது வீனோ கம்ப்ரஷன் செட் என்கிற கருவியைக் கால்களுடன் பொருத்தி விடுவது போன்றவற்றைப் பரிந்துரைப்பார். இந்த வீனோ கம்ப்ரஷன் கருவியானது, கெண்டைக்கால் சதையை அழுத்தி, விரிந்து கொடுக்கச்  செய்யும். டி.வி.டி. என உறுதி செய்யப்பட்டால், ரத்தம் உறைவது பெரிதாகாமல் தடுக்கப்பட குறைந்த டோஸில் ஹெப்பரைன் மருந்துகள் தருவார். இந்த மருந்து கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்காது. இந்த மருந்துகள் ரத்த உறைவானது நுரையீரலைப் பாதிப்பதைத் தடுப்பதோடு, கால்களில் மேலும் மேலும் ரத்த உறைவு உருவாவதையும் தடுக்கும். மிகவும் சீரியஸான பிரச்னையான இதை சரியான நேரத்தில் கவனித்து, சிகிச்சை எடுக்க வேண்டியது மிக முக்கியம்.’’

உலகம் என் கையில்!

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வயதான பெண்மணி என்கிற பெருமைக்குரியவர் பெங்களூருவை சேர்ந்த பிருந்தா அழகப்பன். இது லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ், ரிஷிகேஷ் என இரண்டு இளவரசர்களைப் பெற்ற பிறகு,  ரிவர்ஸில் வயது திரும்பியது போல பிருந்தாவிடம் அத்தனை இளமை... அத்தனை உற்சாகம்... ‘‘கல்யாணமாகி 28 வருஷங்களா குழந்தைங்க இல்லை. ரெண்டு முறை கர்ப்பமாகி, கலைஞ்சிருச்சு. ஒரு முறை ஐவிஎஃப் பண்ணிப் பார்த்தோம். சக்ஸஸ் ஆகலை. குழந்தை இல்லாதது நம்மூர்ல எவ்வளவு பெரிய விமர்சனத்துக்குரிய விஷயம்னு நான் புதுசா சொல்லத் தேவையில்லை.

எந்த நல்ல காரியத்துலயும் முன்னால நிக்க முடியாது. நிறைய அவமானங்கள்... அவமதிப்புகள்... எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டேன். ஒரு கட்டத்துல வாழ்க்கையே வெறுத்து, நான் பார்த்திட்டிருந்த பேங்க்ல வேலையிலேருந்து வி.ஆர்.எஸ். வாங்கிட்டேன். வீட்ல சும்மா டி.வி. பார்த்திட்டிருந்தப்ப அதுல டாக்டர் ஜெயராணியை பத்தி ஸ்க்ராலிங் ஓடிட்டிருந்தது. 35 வயசுலயே எனக்கு மெனோபாஸ் வந்திருச்சு. 54 வயசுல எனக்கு ஏன் அப்படித் தோணினதோ தெரியலை. கடைசி முயற்சியா அந்த டாக்டரை ஒரு முறை பார்த்தா என்னனு தோணவே, என் ஹஸ்பெண்ட்கிட்ட கேட்டேன். ‘உனக்கு விருப்பம்னா பார்க்கலாம்’னு சொன்னார். எல்லாமே எனக்கு சாதகமா அமைஞ்சதுனு தான் சொல்லணும். போன் பண்ணினப்ப டாக்டரே எடுத்துப் பேசினாங்க. சென்னைக்கு வரச் சொன்னாங்க. நவம்பர் மாசம் சென்னைக்கு வந்தோம். மெனோபாஸ் வந்த எனக்கு ட்ரீட்மென்ட் மூலமா மறுபடி மாத
விலக்கை வர வச்சாங்க.

ஜனவரி மாசம் இக்ஸி ட்ரீட்மென்ட் கொடுத்ததுல நான் பிரெக்னன்ட் ஆனேன். கர்ப்பம் உறுதியான அந்தத் தருணத்தை நினைச்சா இப்பவும் எனக்கு அழுகை வரும். குழந்தை வேணும்னு நாங்க பட்ட கஷ்டங்கள்... அவமானங்கள்... அழுகைனு எல்லாத்துக்கும் விடை கிடைச்சது.. அதுலயும் ஒண்ணுக்கு ரெண்டா ரெட்டைக் குழந்தைகள்... உலகமே என் கைக்குள்ள வந்துட்ட மாதிரி இருந்தது...’’ தாய்மைப் பூரிப்பு விலகாமல் பேசுகிற பிருந்தாவுக்கு கர்ப்ப காலம் இனிதாகவே கழிந்ததாகச் சொல்கிறார். ‘‘கர்ப்பமா இருக்கிறப்ப பட்ட கஷ்டங்களைப் பத்தி ஆளாளுக்கு ஆயிரம் அனுபவங்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா, எனக்கு அப்படி எந்தச் சிரமமும் இல்லை. ஒருவேளை தவமிருந்து கிடைச்ச குழந்தைகளாச்சே... அந்த சந்தோஷத்துல வேறெந்த வலியும் வேதனையும் எனக்குத் தெரியாமப் போயிருக்கலாம்.

பிரசவ தேதி நெருங்க நெருங்க முதுகு வலி அதிகமாச்சு. டயப்பட்டிஸும் பிபியும் வந்தது. மனசெல்லாம் என் குழந்தைகளைப் பார்க்கப் போற நொடியைப் பத்தின நினைப்புதான் வியாபிச்சிருந்தது.  2007, ஆகஸ்ட் 27ம் தேதி என் குழந்தைங்க பிறந்தாங்க. ஆணா, பெண்ணாங்கிற கேள்வியெல்லாம் எனக்கோ, என் கணவருக்கோ இல்லை. குழந்தைங்க ரெண்டு பேருக்கும் தங்கச் சங்கிலி போட்டு, ‘ரெண்டு ரத்னங்கள் பிறந்திருக்காங்க’னு டாக்டர் ஜெயராணி என் கையில கொண்டு வந்து கொடுத்தப்ப, ஜென்ம சாபல்யமே அடைஞ்ச மாதிரி இருந்தது. பிறந்த ஆஸ்பத்திரியோட நினைவா ஒருத்தனுக்கு ஆகாஷ்னும், இன்னொருத்தனுக்கு ரிஷிகேஷ்னும் பேர் வச்சோம்.

குழந்தைங்க பிறந்த நாள்லேருந்து இன்னி வரைக்கும் எங்களுக்கு தினம் தினம் சந்தோஷம்தான். அவங்க படிக்கிற ஸ்கூல்லேருந்து போற இடங்கள்ல எல்லாம் ‘ஆகாஷ், ரிஷிகேஷோட அம்மா’னு என்னைப் பெருமையா பார்ப்பாங்க. லிம்கா ரெக்கார்ட் பத்தி சொன்னதும், என் ரெண்டு பசங்களும், ‘அப்ப உங்களைவிட நாங்க ரெண்டு பேர்தான் ஸ்பெஷல் தெரியுமா?’னு கேட்டாங்க. ‘ஆமாண்டா செல்லங்களா... எங்க வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கப் பிறந்த நீங்க நிச்சயம் ஸ்பெஷல்தாண்டா’னு சொல்வேன்...’’ மகிழ்ச்சியில் விழிகள் கசிய, இரண்டு குழந்தைகளையும் இறுக அணைத்துக் கொள்கிறார் பிருந்தா.

பிருந்தாவின் டிப்ஸ்

‘‘இந்த டிப்ஸ் கணவர்களுக்கு... உங்க மனைவி ரெட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறாங்கன்னா, கிட்டத்தட்ட ரெண்டு பிரசவத்தை ஒரே நேரத்துல சுமக்கிறதுக்கு சமம். கர்ப்ப காலத்துலயும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி... அவங்களுக்கு எல்லாமே ரெட்டைச் சுமைதான். குறைஞ்சது முதல் ஒரு வருஷத்துக்காவது உங்களோட சப்போர்ட் அவங்களுக்கு அவசியம். நீங்க குழந்தைங்களைப் பார்த்துக்கிற அந்தக் கொஞ்ச நேரத் தூக்கமும், ரெஸ்ட்டும் அவங்களுக்கு மிகப் பெரிய தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கும். புரிஞ்சுக்கோங்க.’’

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum