Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் இனிய இரட்டை தேவதைகள்!
Page 1 of 1 • Share
என் இனிய இரட்டை தேவதைகள்!
‘நீங்க அதிர்ஷ்டசாலி... ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்னு ஒரே டைம்ல ரெண்டு குழந்தைங்களையும் பெத்து, ஒண்ணா வளர்த்துடுவீங்க...’இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற அம்மாக்கள் அடிக்கடி எதிர்கொள்கிற கமென்ட் இது. ஒரே நேரத்தில் இருவரை வளர்ப்பதில் உள்ள சிரமங்களும் சவால்களும் அந்தத் தாய்க்கு மட்டுமே வெளிச்சம்.
வளர வளர, இருவரும் அடிக்கிற கூத்தில், அம்மாக்களின் பிபி எக்குத்தப்பாக எகிறும். டென்ஷன் தவிர்த்து அமைதியானாலே அந்த பிபியை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், இரட்டையரைச் சுமக்கும் அம்மாக்களுக்கு, கர்ப்ப காலத்தில் தலைதூக்குகிற ரத்த அழுத்தத்தை அத்தனை சுலபத்தில் விரட்ட முடியாது.’’எல்லா கர்ப்பிணிகளுக்குமே ரத்தசோகையும் ரத்த அழுத்தமும் கர்ப்ப காலத்தில் சகஜம். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் அம்மாக்களுக்கு இந்த இரண்டும் சற்றே தீவிரமாக இருக்கும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். இவற்றுக்கான காரணங்களையும், அறிகுறிகளையும், எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.
‘‘அம்மாவின் ரத்தமானது இரண்டு குழந்தைகளுக்கும் செல்வதால், இரண்டு குழந்தைகளைச் சுமக்கும் கர்ப்பிணியானவள் சீக்கிரமே ரத்தசோகையால் தாக்கப்படலாம். மூச்சு வாங்குதல், அதீத களைப்பு, எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு அசதி, கால்களில் வீக்கம், கை, கால்களும், முகமும் வெளுத்திருத்தல் போன்றவை கர்ப்பிணி ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள். ஆனால், இந்த எல்லா அறிகுறிகளுமே கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சாதாரண அறிகுறிகளாக அலட்சியப்படுத்தப்படும்.
இவை கர்ப்ப காலத்தில் தோன்றும் பிரச்னையில்லாத விஷயங்களா அல்லது ரத்தசோகையின் அறிகுறிகளா என்பதைத் தெரிந்து கொள்ள அடிக்கடி பரிசோதனை அவசியம்.
சாதாரணமாக பெண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் அது 11க்கும் கீழ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிக் குறைந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அனீமியா என்கிற ரத்தசோகையை அலட்சியப்படுத்தினால், குழந்தைக்கு இதயக் கோளாறு ஏற்படும் அபாயமும் வரலாம். ஒரு குழந்தையைச் சுமப்பவர்களுக்கே கால் வீக்கம் இருக்கும். இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு, ரத்தசோகை இருப்பதன் வெளிப்பாடாக கால்கள் வீங்கும். குழந்தையின் அழுத் தம் காரணம் என அதையும் தவிர்க்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ரத்தசோகை யைப் போலவே கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ரத்த அழுத்தப் பிரச்னையும் அவசியம் கவனிக்கப்பட வேண்டியது. கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் 120/80 அளவு இருப்பதுதான் நார்மல். அதற்கு மேலே போனால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக வேண்டும். இந்த அளவு 140/100 வந்தால் கர்ப்பிணிக்கு ஃபிட்ஸ் வரலாம். கர்ப்ப கால ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளான கால் வீக்கம், முகம் மற்றும் உடல் வீக்கம் எல்லாமே, ஏற்கனவே சொன்ன மாதிரி கர்ப்ப காலத்தில் வழக்கமாக தென்படுகிற விஷயங்கள்தானே என அலட்சியப்படுத்தப்படலாம்.
ரத்த அழுத்தம் அதிகமானால் நஞ்சுக் கொடியில் ரத்த ஓட்டம் குறைந்து, குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். குழந்தையைச் சுற்றியுள்ள தண்ணீர், அதன் சிறுநீர் அளவு என எல்லாமே குறையும். அதன் விளைவாக குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் உண்டாகி, அது தாயின் வயிற்றுக்குள்ளேயே இறந்து போகலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற இந்த அதிக ரத்த அழுத்தமானது, அந்தப் பெண்ணுக்கு எதிர்காலத்தில் அந்தப் பிரச்னை தொடரலாம் என்பதற்கான ஒரு அலாரம் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உணவில் அதிக கவனம் அவசியம்.
உப்பு, எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவேளைகளில் முறையான ஸ்கேன் மூலம் ரத்த அழுத்த அளவை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்...”
என் இனிய இரட்டை தேவதைகள்!
முதலில் ஓர் ஆண், அடுத்து இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பெண்கள் என குழந்தைகள் சூழ அழகாகி இருக்கிறது தீபாவின் வாழ்க்கை. ‘‘பையன் மிதிலேஷுக்கு மூன்றரை வயசானப்ப, ரெண்டாவது முறை கர்ப்பமானேன். ரெண்டாவது குழந்தைங்கிற நினைப்பைத் தவிர எனக்கோ, எங்க வீட்டாளுங்களுக்கோ வேற பெரிசா எந்த எதிர்பார்ப்புமே இல்லை. நாலாவது மாசமே வயிறு வழக்கத்தைவிட பெரிசா இருந்தது. அதுக்கு முன்னாடி வரைக்கும் ஸ்கேன்ல கூட ட்வின்ஸ்னு கண்டுபிடிக்கலை. 5வது மாசத் தொடக்கத்துல ஸ்கேன் பண்ணினப்பதான் ட்வின்ஸ்னு உறுதியாச்சு. முதல்ல ரொம்பவே பயமா இருந்தது.
எங்க பெரிய மாமியார் குடும்பத்துல ட்வின்ஸ் உண்டு. இதுல பயப்பட ஒண்ணுமில்லைனு அவங்க எல்லாரும் தைரியம் சொன்னாங்க. அடுத்த ஸ்கேன்ல ஒண்ணு மட்டும் பெண் குழந்தைனு சொன்னாங்க. இன்னொரு குழந்தையைப் பத்தி சொல்ல மாட்டே னுட்டாங்க. ஒரு பொண்ணு, ஒரு பையனா இருக்குமோங்கிற பயம்... அப்படி இருந்தா ரெண்டுல ஒரு குழந்தைதான் தங்கும்னு கேள்விப்பட்டிருந்த விஷயம் எனக்குள்ள மறுபடி குழப்பத்தையும் பயத்தையும் கொடுத்தது. ஆனாலும், அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுனு ஒரு உள்ளுணர்வு. ட்வின்ஸ்னு தெரிஞ்ச நாள்லேருந்து என் வீட்டாளுங்க என்னை ஒரு சின்ன வேலையைக் கூடச் செய்ய விடலை. ட்வின்ஸை சுமக்கிறவங்களுக்கு கர்ப்ப காலத்தைக் கடக்கறது ரொம்பக் கஷ்டமா இருக்கும்னு நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தேன்.
கடவுள் புண்ணியத்துல எனக்கு அப்படி எந்தக் கஷ்டமும் இல்லை. மகாராணி மாதிரி என்னைத் தாங்கினாங்க. ரெண்டு பேரும் நல்லபடியா பிறந்தாங்க. ரெண்டும் பெண்குழந்தைங்கனு தெரிஞ்சதும் இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. வீடு கொள்ளாம சொந்தக்காரங்க இருந்தாங்க. அத்தனை பேர் உதவிக்கு இருந்தாலுமே, முதல் ஒரு வருஷத்தைக் கடக்கிறது பெரிய போராட்டமா இருந்தது. இதுக்கிடையில முதல் பையனையும் கவனிக்கணும். அவன் தன்னை ஒதுக்கிறதா நினைச்சிடக்கூடாது. ஆக மொத்தம் ஒரே நேரத்துல மூணு குழந்தைங்களையும் சமாளிக்கிற பெரிய சவால் எனக்கு. என் பையன் மிதிலேஷ் ரொம்ப சமத்து. சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டு, தங்கச்சிங்களோட அன்பாகிட்டான். சஞ்சனாவும் சாதனாவும் நடக்க ஆரம்பிச்சாங்க.
ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறதும், விளையாடறதுமா அவங்களுக்குள்ள அந்த நெருக்கத்தைப் பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கும். இப்ப பையனுக்கு 7 வயசும், பொண்ணுங்களுக்கு மூன்றரை வயசும் ஆகுது. மூணு பேரும் மூணு விதமான கேரக்டர். காலையில ஸ்கூலுக்கு கிளப்பற அந்த டைம் வீடே அதகளப்படும். மூணு பேரோட எங்கேயாவது வெளியில போனா, ‘உங்களுக்கு மூணு பசங்களா’னு ஆச்சரியமா கேட்பாங்க. அப்புறம் ட்வின்ஸானு இன்னும் ஆச்சரியத்தோட கேட்பாங்க. அந்தப் பார்வையும் ஆச்சரியமும் எல்லாருக்கும் கிடைக்கிற விஷயங்கள் இல்லை...’’ _இடமொன்றும் வலமொன்றுமாக இரட்டை தேவதைகளை வாரி அணைக்கிறார் தீபா.
தீபாவின் டிப்ஸ்
‘‘கர்ப்ப காலத்துல பாசிட்டிவான எண்ணங்களை மட்டுமே வளர்த்துக்கோங்க... அதுவே உங்களை வழிநடத்தும். பிரசவத்துக்கு முன்னாடியே, குழந்தைங்களை பார்த்துக்கறதுக்கான ஆட்களை ஏற்பாடு பண்ணிடுங்க. பெரியவங்க துணை ரொம்பவே முக்கியம்.’’
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» இரட்டை வேடம்...?
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» இரட்டை பிறப்பு குழந்தை...?
» இரட்டை அர்த்தம் (double meaning)
» இரட்டை குழந்தைகள் பிறப்பதன் காரணம்
» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
» இரட்டை பிறப்பு குழந்தை...?
» இரட்டை அர்த்தம் (double meaning)
» இரட்டை குழந்தைகள் பிறப்பதன் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum