தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Mon May 04, 2015 1:33 pm

First topic message reminder :

கவிஞர்களுக்கு வணக்கம்,

இந்த வார தலைப்பு: நிலா 
[You must be registered and logged in to see this image.]'நிலா'வை பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை எனலாம். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதல் இன்றைய காலகட்டத்தில் உள்ள கவிஞர்கள் வரை அனைவருமே நிலாவை ரசித்து கவிதைகள் எழுதி இருக்கிறார்கள். உங்கள் கவிதை 8 வரிகளுக்கு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் அதிகபட்சம் இரண்டு கவிதைகள் எழுதலாம். 

இந்த கவிதைகள் வேறு எங்கும் இதற்கு முன்பு பிரசுரித்து இருக்க கூடாது. இங்கே எழுதிய பின்னர் நீங்கள் வேறு தளங்களில் பதிவிட தடையில்லை. 

இந்த பதிவின் கீழேயே ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். நடுவர் குழுவினர் கவிதைகளை பரிசீலனை செய்ய வசதியாக/எளிதாக இருக்கும். வேறு எங்கும் சிறப்பு கவிஞர் விருதுக்கான கவிதைகளை பதிவிட கூடாது.

புதிய விதிமுறைகளை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்: 
[You must be registered and logged in to see this link.]

இந்த பதிவு இன்று மதியம் 01.30 முதல் ஞாயிற்று கிழமை மதியம் 01.30 வரை திறந்து இருக்கும். 

நட்புடன் 
நடுவர் குழுவினர். 
தகவல் தளம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by மகா பிரபு Tue May 05, 2015 8:33 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:மிக அருமையான கவிதை மகாபிரபு 

யார் எழுதி கொடுத்த கவிதை இது மகா பிரபு புன்முறுவல்
உங்கள் தங்க தம்பி

உண்மையிலேயே கவிதை நல்லாருக்கு தம்பி.
நன்றி ராம் அண்ணா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by கவிப்புயல் இனியவன் Thu May 07, 2015 7:03 am

நிலவே ....
உன்னை உவமையாக கூறி ....
காதல் செய்தும் காதலரை ....
வாழ்த்திட ஒருமுறை வருவாயோ ..?
உன்னையே உவமையாக கூறி ....
காதலியை ஏமாற்றிய ....
காதலனை சுட்டெரிக்க ....
ஒருமுறை வருவாயோ ..?

நிலவே உன்னிடம் ..
நீர் ,நிலம், காற்று இருக்கிறதா ..?
தொடரட்டும் விஞ்ஞான ஆய்வு ....!
பூலோகத்திலோ உன்னால் ...
நீர் ,நிலம், காற்றுமாசடைகிறது ....!!!
நிலவே ஒருமுறை வருவாயோ ..
சூழலை மாசுபடுத்தும் இவர்களை ....
எச்சரிக்க மாட்டாயோ ...?

நிலாவில்
பாட்டி இருக்கிறார் ....
இன்றுவரை நம்பும் குழந்தைகள் ....!!!
பாட்டியுமில்லை பாட்டனுமில்லை ...
வான் வெளி தூசிகளே அவை ....
நிரூபிக்க ஒருமுறை வருவாயோ ...?
மூடநம்பிக்கையை உடைத்தெறிய ...
ஒருமுறை இறங்கி வருவாயோ ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Thu May 07, 2015 7:36 am

நிலாவை பற்றிய அருமையான கவிதை.
கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by கவிப்புயல் இனியவன் Thu May 07, 2015 8:02 am

நிலாவை பற்றிய அருமையான கவிதை.
கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணா

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Thu May 07, 2015 9:23 am

தகவல் தளத்தின் உறுப்பினர்கள் இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த கவிதைகளுக்கு கீழே உள்ள விருப்பம் பொத்தானை அழுத்தி உங்கள் விருப்பத்தையும் பதிவு செய்யுங்கள். (கவிதை எழுதியவர் தன் கவிதைக்கு விருப்பம் தெரிவிக்க முடியாது.)
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by sendhilmohan Thu May 07, 2015 4:01 pm

நிலா ..

திரண்ட மேகக்கூந்தலை
லாவகமாய் விலக்கி வெளியேறும்..
அகன்ற நெற்றியின்
அழகுப்பொட்டே..
இரவெல்லாம் உளவு
பார்த்ததாலோ உன்னை
நிலவென்று உறவுகொண்டாடினோம் !

நீர்க்கண்ணாடியில்
முகம் பார்த்து
வெண்பஞ்செடுத்து ஒப்பனை செய்து
இரவுப்பணிக்கு செல்லும்
செவிலிய பெண்போல்
வெளிச்சத்தில் மறைகிறாய்
இருளுக்குள் ஒளிர்கிறாய்..
நிச்சயம் நீ பெண்பால்தான்!

வெள்ளைக்காரி மடியில்
நீக்ரோ குழந்தைகள் போல
உன் மடியிலும் ஒரு அழகான
கவிதை சுமக்கிறாய்..
சிலநேரங்களில் உன்
மேக புகுந்தவீட்டின்
கொல்லைவழி வெளியேறி
எல்லையில்லா பயணமேற்கிறாய்..
எனக்குத்தெரியும் உன்
கணவன் கதிரவனை
தேடியே வானத்தின்
வாசல் வரை சென்று
பார்க்கிறாய் என்று !

ஆடைகளைந்த
நீல தேகத்தில்
எங்கு தேடியும் காணமுடியாத
அந்த மச்சம் ஆகிறாய்..!
உன் அம்மா வீட்டிற்கு
ஆசையுடன் சென்றாயோ
என்றே அந்நாளை
அமாவாசை என்றோமோ..

நீ கொடுத்த முத்தத்தில்
முகம் சிவந்த அல்லியின்
கலைந்து கிடக்கும்
நீர்ப்படுக்கை...அலைகளென

காலை முதல் மாலைவரை
உனைக்காணாமல்
தவித்துக்கிடக்கும்
உப்பரிகை சிலைகளென..!
sendhilmohan
sendhilmohan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Thu May 07, 2015 5:20 pm

திரண்ட மேகக்கூந்தலை
லாவகமாய் விலக்கி வெளியேறும்..
அகன்ற நெற்றியின்
அழகுப்பொட்டே..
இரவெல்லாம் உளவு
பார்த்ததாலோ உன்னை
நிலவென்று உறவுகொண்டாடினோம் !

சிலநேரங்களில் உன்
மேக புகுந்தவீட்டின்
கொல்லைவழி வெளியேறி
எல்லையில்லா பயணமேற்கிறாய்..

அடடா ஒவ்வொரு வரிகளும் அழகு.
என்ன ஒரு உவமை
கவிதை சூப்பர் செந்தில் மோகன். மிக்க நன்றி!!!

விருப்பம் தெரிவித்தேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by thamiliniyan Thu May 07, 2015 6:15 pm

திரண்ட மேகக்கூந்தலை
லாவகமாய் விலக்கி வெளியேறும்..
அகன்ற நெற்றியின்
அழகுப்பொட்டே..

அருமை
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by கவிப்புயல் இனியவன் Thu May 07, 2015 9:54 pm

காரிருள்
வானத்தில் பளிச்சிடும் நிலாவே ....
காரிருள் கூந்தலோடு பளிச்சிடும் ....
என்னவளின் வதனமும் .....
மண்ணுலக நிலாதானடி ....
விண் நிலவே - நீ தான் ....
என்னவளை படைத்தாயோ ....!!!

நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

அண்ணாந்து பார்த்த வெண்ணிலாவை ....
அருகில் இருக்கும் அற்புதம் பார்த்தேன் ......
தேய்ந்து வளரும் வெண்ணிலாவை ....
தோளோடு சார்ந்திருக்கும் வரமும் பெற்றேன் ....
விண்ணுலக வெண்ணிலாவே .....
மண்ணுலக வெண்ணிலாவை .....
என்னவளாக தந்தமைக்கு நன்றி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by sendhilmohan Thu May 07, 2015 11:28 pm

மிக்க நன்றி ஐயா
sendhilmohan
sendhilmohan
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 6

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by முரளிராஜா Fri May 08, 2015 11:25 am

நிலாவை பற்றிய தங்கள் கவிதை அருமை sendhilmohan
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by mohammed sarfan Fri May 08, 2015 2:45 pm

நிலா-கவிஞர் முஹம்மத் ஸர்பான் 

தூணில்லாத வானில் 
அடிக்கப்பட்ட வட்டவடிவான ஆணி
நிலவும் பெண்ணாகத்தான் 
இருக்க வேண்டும் அவளை சுற்றி
ஆயிரம் விண்மீன்கள் காவற்காரர்கள்.

மேகங்கள் பந்தாடும் வெண்பந்து 
கடலையும் கண்ணாடியாய் மாற்றி
முகம் பார்க்கும் முன்னோடி.

மாதத்தில் சிலநாட்கள் வானை 
விட்டு பிரிந்து விடுவாள் அவளுக்கு மாதாவிடாய்.
உன் வயது நாளுக்கு நாள் 
குறைகிறது.கடவுள் விதி எழுதும் 
போது வரமாய் தந்துவிட்டானோ?

உன் முகம் வெள்ளையாக 
இருந்தாலும் உடலுக்கு 
கறுப்புச் சேலைதான் பிடிக்குமா?

நிலா நீ உலா செல்லாதே!
மானுக்கு வலை விரிக்கும் வேடன்  
வானுக்கு வலை போட்டு விடுவான்
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Fri May 08, 2015 4:11 pm

இது வரை வந்த கவிதைகள் அனைத்துமே சூப்பர்தான்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by முரளிராஜா Fri May 08, 2015 7:15 pm

நீ படைத்த என்னவளோ ....
தரையில் உலாவரும் முழுநிலா .....
விண் நிலவே வந்துவிடாதே .....
வெட்கப்படுவாய் வேதனை படுவாய் ....
மாதமொருமுறை எடுக்கும் ஓய்வை....
மாதம் முழுதும் எடுத்துவிடுவாய்....!!!

அருமையான வரிகள் நிலவை பற்றி
வாழ்த்துக்கள் கவிஞர் இனியவன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by mohammed sarfan Fri May 08, 2015 11:58 pm

நிலவுக்கோர் மடல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் 

வண்ண வண்ண மலர்களை பறிக்கும் 
கைகள்,அழகின் பிறப்பான நிலவை 
சீண்டிப்பார்ப்பதற்காய் உருவாக்கப்பட்டது நாசா.

இருளில் தனிமை கொள்ளும் வெண்மதியே!
உன் தேகத்தை பெளர்ணமியாக ஒளித்துக்கொள்.
மனிதர்கள் கண்ணால் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மண்ணை நனைக்க பெய்யும் மழையின் போது
உன்னை காண முடிவதில்லை.நள்ளிரவில் விண்தூவும் 
பனிச்சாரல் வீதியோரம் தூங்கும் ஏழைக்கு மருந்து 
என்பதற்கு நீதான் சாட்சி 

ஆலமரக்கிளைகளுக்கிடையில் உன்னை இயக்குனர்கள்  
மறைக்கிறார்கள் ஆனால் உணவுக்காக உடலை விலை 
பேசும் வறுமைப்பட்ட பெண்ணின் நிலை கண்டு நிலவு தான் 
பூட்டப்பட்ட   அறைகளுக்குள்  ஒழிகிறது.

நிலவே! இவ்வுலகில்  உனக்கென துணையை
தேடிக்கொள்! இளைஞர்கள்  எல்லாம் உன்னை 
கனவில் விபச்சாரியாக்குகிறார்கள்.செல்வர்கள்
உன் கழுத்தில் தாலி கட்டுவதற்காய் செவ்வாய்க்கு 
கடவுச்சீட்டு வாங்கி விட்டார்கள்.

உன் அழகினை வரிகளிலும் இனி எழுதமாட்டேன்.
கலைஞன் என்ற ரீதியில் அன்பாய் இக்கடிதத்தை 
தருகிறேன்.கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகலாம்
அவர்கள் உன்னை அழிப்பதற்கு நெருங்கிவிட்டார்கள்.
நிலவே!! ஜாக்கிரதை.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty தாய்மடி நீ!

Post by thamiliniyan Sat May 09, 2015 5:32 am

தாய்மடி நீ!
நிஜம்  மறைத்த நிழலெல்லாம் அழகில்லை!
நிலா! நீ காட்டும் நிழல் மட்டும் அழகோ அழகு!

பார்த்தாலும் சுவைத்தாலும் திகட்டாத பால் நீ!
இரவுக் காத்தாடி உனைச்சாய சலிக்காத தோள் நீ!

முதல் மனிதன் முதற்கொண்டு
பெண்டாண்டும் பத்தினி நீ!

நாம்இன்று வரை உனைத் தூக்கி  
கொண்டாடும் உத்தமி நீ!

பாவலர் பாக்களிலே பாபொருள் ஆனவள் நீ!
உனைப் பாடாத பாவலர் யார் பாரினிலே சொல்லடி நீ !

பாவையர் பூமுகமுன் பால்நிறம் போன்றதென்று
பாடிய பாடலுக்குள் வீழாத பெண்ணவள் யார்?

திங்களொரு நாளில் தீட்டாகி நீயொதுங்க
பங்கமாய் விசும்பிருண்டு மூளியாகிப் போகிறது!

பங்கமென்று உன்னுடலில் அங்கமெதுவுமில்லையே!
எங்கெதனை சென்றுநீ சீர்செய்ய  மறைகிறாய்?

ஆதிமுதல் காதலுக்கு தூது போன தோழியடி! நீ
ஜாதி மத பேதமின்றி நம்சோகங்களின் தூளியடி!

தனிமை கொண்டு தவிப்போரின் தாசியடி -அவர்
தனிமை கொன்று தாலாட்டும் தாய்மடி நீ!

-தமிழினியன்-
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by முரளிராஜா Sat May 09, 2015 10:13 am

உன் அழகினை வரிகளிலும் இனி எழுதமாட்டேன்.
கலைஞன் என்ற ரீதியில் அன்பாய் இக்கடிதத்தை 
தருகிறேன்.கிடைப்பதற்கு பல வருடங்கள் ஆகலாம்
அவர்கள் உன்னை அழிப்பதற்கு நெருங்கிவிட்டார்கள்.
நிலவே!! ஜாக்கிரதை.

அருமையான வரிகள் mohammed sarfan

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ரௌத்திரன் Sat May 09, 2015 3:55 pm

நிலா...!
========

வா! மதியே வா!
உலகுக்கு நீ நிலா
எனக்கு மட்டும் நட்சத்திரம்.

பிறைகளைக் கடந்து –மேகமிடும்
திரைகளைக் கடந்து ஒளிவிடும் நீ
எனக்கு நட்சத்திரம்தான்
ஆம்,
நம்பிக்கை நட்சத்திரம்....

வா!
உன்னை வரவேற்கவே
அந்திவானம்
அன்றாடம் விரிக்கிறது
சிவப்புக்கம்பளம்....

ஏசுநாதன்தான்
எப்போதோ மரித்துவிட்டானே
என்கிற தைரியமோ
கறைப்பட்டவள் நீயென்று
உன்மீது எறிந்த கற்கள் அல்லவா
அந்த நட்சத்திரங்கள்?

சுட்டெரிக்கும் சூரியனிடம்
சற்று அடக்கியே வாசிக்கும் கடல்
சாந்தமான உன்னிடம் மட்டும்
சீறிப் பார்க்கிறது
அதுசரி
அடிப்பவனுக்குத்தான் மரியாதை!
அன்புக்கு எப்போது
அடிபணிந்தது உலகம்?

ஆண்டவனிடம்
அப்படியென்னதான் வேண்டுகிறாய்
ஒவ்வொருநாளும்
ஒருகோடி விளக்கேற்றி?

என்
தமிழின் உயர்வைத்
தமிழனைவிட
நீயே
நன்கு அறிந்து வைத்திருக்கிறாய்

நட்சத்திர சபைகூட்டி
வானத்தில் ஏறி
விடிய விடிய நிகழ்த்துகிறாய்
என் எழுத்தைப் பற்றிச் சொற்பொழிவு!

கட்டில் விளையாட்டில்
கணவன் கரம்பட்டு
அறுந்துவிழுந்த மேகலையா நீ?
தெறித்துச் சிதறிய முத்துக்களே விண்மீன்களோ?

இந்தக் கவிஞர்களையெல்லாம்
இறக்கும்வரை தூக்கிலே போடவேண்டும்
போயும்போயும் இவர்களுன்னை
பெண்ணுடனா ஒப்பீடு செய்வது?

வானில் இருள்வந்தால்
ஆறுதலாய் வருபவள் நீ
வாழ்வில் இருள்வந்தால்
வார்த்தை மாறி ஓடுபவள் பெண்!

போயும்போயும் இவர்களுன்னை
பெண்ணுடனா ஒப்பீடு செய்வது?

ஏ நிலவே!
உன்னைப் போல்
நட்சத்திரங்கள் தேய்வதில்லை
ஆனால்
நட்சத்திரங்களைப் போல்
நீ உதிர்வதில்லை!

இருட்டில் நிற்கிறோமே என்று
இதயம் கலங்காதே
இருள்வந்து சூழாவிட்டால்
உலகுக்குத் தெரிந்திருக்குமா
உன் அழகு?

கறைப்பட்டோமே கறைப்பட்டோமே என்ற
மான உணர்ச்சியில்தான்
தேம்பித் தேம்பி அழுது
தேய்கிறாயோ?

கறைப்பட்ட பின்
கணப்போதுமினி உயிர்வாழ்தற் கூடாதென்றே
குளத்திலும் ஆற்றிலும்
குதிக்கிறாயோ?

நீயும் என்போல்
ஒற்றையில்தான் வாழுகிறாய் என்றாலும்
ஓரவஞ்சனை அதிகம் உனக்கு
பிறையாய் வந்தால்கூடப்
பிழிந்தெடுத்து விடுகிறாய்
ஆம்,
பிரிந்த காதலி மார்பில்
பதித்த நகக்குறியாய்ப்
பல்லிளித்து பல்லிளித்து
பரிகாசம் செய்கிறாய்....

கொஞ்சம் பொறு
கண்மூடிவிடுவேன் சீக்கிரம்!

அநங்கனின்
அறிவிக்கப்படாத
ஆறாம் கணையே!
உன்னைப் பாடாத கவிஞன்
உலகில் எவனுமில்லை
என்னைத் தவிர.

நானும்
இதோ இப்போது பாடிவிட்டேன்
இதற்கெனக்கு ஒரு வரம் தருவாயா?

வரதட்சணைக்கு வழியின்றி
வயது தொலைத்து
உணர்ச்சிகளின் கல்லறையாய்
உலாவிக்கொண்டிருக்கும்
முதிர்கன்னி எவளையும் இனி
முற்றுகையிட
நீள வேண்டாம்
நஞ்சு தோய்ந்த நின் கிரணங்கள்...!

கட்டில் சுகத்திற்கு
கன்னிமார் விலை வைத்தால்
அது விபச்சாரமாம்
அதே சுகத்திற்கு
ஆடவர் விலை வைத்தால்
அது கல்யாணமாம்!

ச்சீ! ச்ச்சீ!
மானங்கெட்ட சாதி
இந்த ஆண்சாதி!

----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Sat May 09, 2015 4:33 pm

ஆக ஆகா அனைத்து கவிதைகளுமே ரொம்ப நல்லாதான் இருக்கு.

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

இந்த வாரம் நடுவர் குழுவினர்களுக்கு திண்டாட்டம்தான். முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ரௌத்திரன் Sat May 09, 2015 4:54 pm

நன்றி நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு! --------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by முரளிராஜா Sat May 09, 2015 6:42 pm

தாய் மடி நீ என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய கவிதை மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது தமிழினியன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by thamiliniyan Sat May 09, 2015 8:47 pm

நன்றி நண்பரே உங்கள் ரசனைக்கு
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by மகா பிரபு Sun May 10, 2015 9:09 am

கவிதை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Sun May 10, 2015 12:08 pm

இந்த பதிவு இன்று மதியம் 1.35PM மணி வரை திறந்து இருக்கும்.
அதன் பிறகு பூட்டப்படும். நாளை புதிய தலைப்புடன் வேறு ஒரு புதிய கவிதை பதிவை நடத்துனர்கள் வழங்குவார்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by ஸ்ரீராம் Sun May 10, 2015 1:38 pm

இந்த பதிவு பூட்டப்படுகிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா - Page 2 Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: நிலா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum