Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
என்ன செய்யச் சொல்கிறாய்
என்னை?
சொல்லடி
என்ன செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேறு வழியில்லை!
ஆம்,
ரத்தத்தை
வேர்வையாய்ச் சிந்தி
வாங்கிய சுதந்திரம்
வீணர்களின் உள்ளங்கையில்
ரேகையாய் அடங்கிய பிறகும்...
காந்தியின்
அஹிம்சை கூட
ஆண்மையற்றவனின்
அடையாளமாய்
ஆகிவிட்ட பிறகும்...
எம் தேசியக் கொடியின்
மூவர்ணம் கூட
பிரிவினை வாதத்தின்
பேருரையாய்ப்
பிறழ்ந்துவிட்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேர்வை வற்ற வற்ற
உழைத்தும் கூட
வறுமை வற்றவில்லையே என்று
வயிறு எரிவோரை
கண்ட பிறகும்...
போலிச் சாமியார்களோடு
போட்டிபோட முடியாமல்
கோவில் சாமிகளெல்லாம்
காவி கட்டி
கண்மறைவாய்ப் போன பிறகும்....
பாட்டாளியின் உரிமைகளெல்லாம்
பாஞ்சாலியின் புடவையாய்
உருவப்படுமொரு சமூகத்தில்....
கிருஷ்ண பரமாத்மாக்கள் எல்லாம்
கோபியர்களைக்
கொஞ்சி கொஞ்சியே
களைத்துக் கிடப்பதைக்
கண்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
ரத்தத்தை விற்று
தண்ணீர் வாங்குவதென்பது
தவிர்க்க முடியாத
தலையெழுத்தாய் ஆகவிருக்கும்
தேசத்தில்...
ஓட்டுரிமை
ஒன்றைத் தவிர
ஒட்டுமொத்த உரிமைகளும்
பறிக்கப் பட்டுவிட்டதொரு
அடிமைச் சமூகத்தில்...
மதங்கள் வீசிகின்ற கத்தியில்
தெய்வத்தின் தலை
துண்டாகுமொரு
துயரப் பொழுதில்...
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
தேசமே
பற்றி எரிந்துகொண்டிருந்தாலும்
காதலுக்குத் தீக்குளிப்பதைக்
கொள்கையாக்கி வைத்திருக்கும்
குருட்டு இளைஞர்களுக்கு
இடையில்....
கட்சிக் கொடிகள்
படபடக்கும் காற்றில்
தேசியக் கொடியே
கிழிந்துவிடுமொரு
அபாயச் சூழலில்.....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
போர்வாளாய் அவதரித்தும்
புல்லை அறுத்துக்கொண்டிருப்பதோ?
வேறு வழியில்லை!
இதோ
இவன் கையில் இருப்பது
எழுதுகோலன்று
துப்பாக்கி...
மெய்யை நிலைநாட்ட
மையாய் வழியும்
துளிகள் ஒவ்வொன்றுமே
தோட்டாக்கள்...
ஆம்,
வேறு வழியில்லை
நானும்
நக்ஸலைட் ஆகிறேன்...
----------ரௌத்திரன்
என்னை?
சொல்லடி
என்ன செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேறு வழியில்லை!
ஆம்,
ரத்தத்தை
வேர்வையாய்ச் சிந்தி
வாங்கிய சுதந்திரம்
வீணர்களின் உள்ளங்கையில்
ரேகையாய் அடங்கிய பிறகும்...
காந்தியின்
அஹிம்சை கூட
ஆண்மையற்றவனின்
அடையாளமாய்
ஆகிவிட்ட பிறகும்...
எம் தேசியக் கொடியின்
மூவர்ணம் கூட
பிரிவினை வாதத்தின்
பேருரையாய்ப்
பிறழ்ந்துவிட்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
வேர்வை வற்ற வற்ற
உழைத்தும் கூட
வறுமை வற்றவில்லையே என்று
வயிறு எரிவோரை
கண்ட பிறகும்...
போலிச் சாமியார்களோடு
போட்டிபோட முடியாமல்
கோவில் சாமிகளெல்லாம்
காவி கட்டி
கண்மறைவாய்ப் போன பிறகும்....
பாட்டாளியின் உரிமைகளெல்லாம்
பாஞ்சாலியின் புடவையாய்
உருவப்படுமொரு சமூகத்தில்....
கிருஷ்ண பரமாத்மாக்கள் எல்லாம்
கோபியர்களைக்
கொஞ்சி கொஞ்சியே
களைத்துக் கிடப்பதைக்
கண்ட பிறகும்....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
ரத்தத்தை விற்று
தண்ணீர் வாங்குவதென்பது
தவிர்க்க முடியாத
தலையெழுத்தாய் ஆகவிருக்கும்
தேசத்தில்...
ஓட்டுரிமை
ஒன்றைத் தவிர
ஒட்டுமொத்த உரிமைகளும்
பறிக்கப் பட்டுவிட்டதொரு
அடிமைச் சமூகத்தில்...
மதங்கள் வீசிகின்ற கத்தியில்
தெய்வத்தின் தலை
துண்டாகுமொரு
துயரப் பொழுதில்...
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
தேசமே
பற்றி எரிந்துகொண்டிருந்தாலும்
காதலுக்குத் தீக்குளிப்பதைக்
கொள்கையாக்கி வைத்திருக்கும்
குருட்டு இளைஞர்களுக்கு
இடையில்....
கட்சிக் கொடிகள்
படபடக்கும் காற்றில்
தேசியக் கொடியே
கிழிந்துவிடுமொரு
அபாயச் சூழலில்.....
என்னடி செய்யச் சொல்கிறாய்
என்னை?
போர்வாளாய் அவதரித்தும்
புல்லை அறுத்துக்கொண்டிருப்பதோ?
வேறு வழியில்லை!
இதோ
இவன் கையில் இருப்பது
எழுதுகோலன்று
துப்பாக்கி...
மெய்யை நிலைநாட்ட
மையாய் வழியும்
துளிகள் ஒவ்வொன்றுமே
தோட்டாக்கள்...
ஆம்,
வேறு வழியில்லை
நானும்
நக்ஸலைட் ஆகிறேன்...
----------ரௌத்திரன்
Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
ஆம்,
வேறு வழியில்லை
நானும்
நக்ஸலைட் ஆகிறேன்..
எல்லாம் சரியாகி விடுமா ???
வேறு வழியில்லை
நானும்
நக்ஸலைட் ஆகிறேன்..
எல்லாம் சரியாகி விடுமா ???
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
சரியாகி விடாது என்பது உண்மையே. என்றாலும் எனது ஆத்திரத்தை ஆதங்கத்தை இப்படி இறக்கிவைத்துவிட்டேன். நன்றி தோழர்!-------------ரௌத்திரன்
Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
உங்கள் கவிதையில் உள்ள ஆதங்கம் ரொம்ப நியாயமானதே.
என்ன செய்வது? கஷ்டப்பட்டு சுதந்திரம் பெற்றோம் இன்று நாடு பண்பாட்டை இழந்து நிற்கிறது.
என்ன செய்வது? கஷ்டப்பட்டு சுதந்திரம் பெற்றோம் இன்று நாடு பண்பாட்டை இழந்து நிற்கிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
இந்த ஆதங்கம் இல்லாத இளைஞன் நாட்டுக்கு சாபம்
நீங்கள் கவிதைக்கு வரம்
நீங்கள் கவிதைக்கு வரம்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நானும் நக்ஸலைட் ஆகிறேன்!
"நானும் நக்ஸலைட் ஆகிறேன்" என்று எழுதியதாலேயே தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் வன்முறையைத் தூண்டுவதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள். ஒரு கவிஞன் அமைதியைத்தான் விரும்புவானேயொழிய வன்முறையை அல்ல. அப்படியிருக்க இப்படியொரு கவிதை எழுதிய நோக்கம் என்ன என்பதை எவரும் சிந்திக்கவில்லை. இன்று நிலவும் இதே போன்ற சமூக சீர்கேடுகளும், மக்கள் மீது சிறுதும் அக்கறையில்லாமல் சுரண்டுவதையே குறிக்கோளாய்க் கொண்டு செயல்படும் இதே போன்ற அரசியல் சூழலும் நீண்டுகொண்டே போனால் ஒவ்வொரு குடிமகனின் கையிலும் நாளை துப்பாக்கியிருக்கும் என்பதிலே சந்தேகமில்லை.
துப்பாக்கி எடுத்துவிட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்வி சரியானதுதான். ஆனால் நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. காரணம், மூன்றாவது மனிதனாக நாம் வேண்டுமானால் சாவகாசமாக சாத்வீகம் பேசலாம். ஆனால், ஒவ்வொரு நாளும் துகிலுரியப்படும் குறைந்தபட்சம் 100 பெண்கள் எவனோ ஒருவனின் மனைவி, எவனோ ஒருவனின் சகோதரி, எவனோ ஒருவனின் காதலி, எவனோ ஒருவனின் மகள். அவனுக்கு அவன் நிலையில் எது செய்யத்தோன்றினாலும் அது தர்மமே! அதை நாம் தவறென்று சொல்ல முடியுமா? அவனிடம் சாத்விகம், காந்தியம் பேச முடியுமா? அவன் சூழலில் நாமிருந்தால் கத்தி எடுக்க மாட்டோமா?
ஒரு பெண்ணின் கற்புக்கு பங்கம் விளையுமானால் ஆயுதம் எடுப்பது தவறில்லை. இது அஹிம்சா மூர்த்தி காந்தி சொன்னது. ஓராண்டில் ஆயிரம் பெண்கள் புடவை உருவப்படும் போது, ஒட்டுமொத்த நாட்டையே அரசியல் வாதிகள் சுரண்டித்தின்னும் போது ஒரு குடிமகன் "ஆயுதம் ஏந்துகிறேன்" என்று சொல்வது மட்டும் எப்படித் தவறாகும்?
ஸ்ரீராம் மற்றும் தமிழினியன் இருவருக்கும் நன்றி! --------ரௌத்திரன்
துப்பாக்கி எடுத்துவிட்டால் சரியாகிவிடுமா என்ற கேள்வி சரியானதுதான். ஆனால் நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. காரணம், மூன்றாவது மனிதனாக நாம் வேண்டுமானால் சாவகாசமாக சாத்வீகம் பேசலாம். ஆனால், ஒவ்வொரு நாளும் துகிலுரியப்படும் குறைந்தபட்சம் 100 பெண்கள் எவனோ ஒருவனின் மனைவி, எவனோ ஒருவனின் சகோதரி, எவனோ ஒருவனின் காதலி, எவனோ ஒருவனின் மகள். அவனுக்கு அவன் நிலையில் எது செய்யத்தோன்றினாலும் அது தர்மமே! அதை நாம் தவறென்று சொல்ல முடியுமா? அவனிடம் சாத்விகம், காந்தியம் பேச முடியுமா? அவன் சூழலில் நாமிருந்தால் கத்தி எடுக்க மாட்டோமா?
ஒரு பெண்ணின் கற்புக்கு பங்கம் விளையுமானால் ஆயுதம் எடுப்பது தவறில்லை. இது அஹிம்சா மூர்த்தி காந்தி சொன்னது. ஓராண்டில் ஆயிரம் பெண்கள் புடவை உருவப்படும் போது, ஒட்டுமொத்த நாட்டையே அரசியல் வாதிகள் சுரண்டித்தின்னும் போது ஒரு குடிமகன் "ஆயுதம் ஏந்துகிறேன்" என்று சொல்வது மட்டும் எப்படித் தவறாகும்?
ஸ்ரீராம் மற்றும் தமிழினியன் இருவருக்கும் நன்றி! --------ரௌத்திரன்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum