Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருவாலங்காடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
திருவாலங்காடு
வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு,
சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில். திருவள்ளூரிலிருந்து மிக அண்மையில் இருக்கிறது.
இறைவன் - வடாரண்யேஸ்வரர், ஆலங்காட்டு அடிகள், தேவர் சிங்கப் பெருமான்.
இறைவி - வண்டார் குழலி.
தலமரம் - பலா,ஆல்.
பொய்கை - முத்தி தீர்த்தம்.
புராணப் பெயர்கள் - வடாரணியம், பழையனூர் ஆலங்காடு.
பாடியவர்கள் - திருஞானசம்பந்தர் (12 பாடல்கள்), அப்பர் (20 பாடல்கள்), சுந்தரர் (10 பாடல்கள்).
வரலாறு! சிவபெருமானின் பஞ்ச சபைகளில் (ஐந்து சபை) ஒன்று.
திருக்குற்றாலம் - சித்திர சபை,
மதுரை - வெள்ளி சபை,
சிதம்பரம் - பொன் சபை,
திருநெல்வேலி - தாமிர சபை,
திருவாலங்காடு - ரத்தின சபை.
திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்கள் குருதியை குடித்ததால் காளி அசுரர்களின் பண்பு பெற்று தவமியற்றிய முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனைத் துதிக்க, அவர் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள். இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். ஒருகால் ஊன்றி மற்றோர் காலைக் காதுவரை தூக்கி ஆடுவது பெண்களுக்கு இயல்பானதல்ல. இதனால் போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிய, அழியாக் கடவுள் ஆடலால் வென்ற தலம். ஈசனின் இந்த நடனத்தின் பெயர் ஊர்த்துவதாண்டவம். ஊர்த்துவதாண்டவ ஈசனின் சிற்பங்கள் பல தலங்களில் உள்ளபோதும் இங்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கம்பத்தடி மண்டபத்திலும், தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திரு ஓலக்கா மண்படத்திலும், சிதம்பரம் நடராஜப் பெருமாள் நிருத்த சபை மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.
காரைக்கால் அம்மையார்! இயற்பெயர் புனிதவதியார். திருமணத்திற்குப் பிறகு இவர் கணவர் இவரை தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று வழிபட்டவுடன் இவர் வாழ விரும்பவில்லை. இறைவனைத் துதிக்கிறார். சிவன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று வினவ, தன் இளமையையும், அழகையும் நீக்கித் தன்க்குப் பேய் வடிவம் தரும்படி இறைஞ்சுகிறார். அவ்வாறே அருள்கிறார் ஈசன். தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைந்தார். சிவபெருமானின் திருக்கூத்தைக் காலமெல்லாம் கண்டு முக்தி அடைந்தார்.
பழையனூர் நீலி! தேவாரப் பாடல்கள் திருவாலங்காட்டைப் பழையனூருடன் தொடர்புப்படுத்திப் பாடுகின்றன. பழையனூர் என்பது ஊர். திருவாலங்காடு, காடு. இது அன்றைய நிலை. நீலி என்ற பெண் முற்பிறப்பில் தன் கணவனால் வஞ்சித்துக் கொல்லப்படுகிறாள். இந்தப் பிறப்பில் அவனைப் பழிவாங்கும் பொருட்டு திருவாலங்காட்டில் பேயாகத் திரிகிறாள். தரிசனசெட்டி என்ற பெயரில் அவன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதை இனங்கண்டு தன்னோடு இணையுமாறு அழைக்கிறாள். அவன் பேயென்று இவளை நிராகரிக்கிறான். பழையனூரில் வாழும் வேளாளப் பெருமக்களிடம் சென்று முறையிடுகிறாள். மறுநாள் தீர்ப்பு வழங்குகிறோம்; இன்று ஒன்றாகத் தங்குங்கள் என்கிறார்கள். அதிர்ந்த தரிசனசெட்டி பேயால் தான் கொல்லப்படுவேன் என்று அஞ்சுகிறான். அனைவரும் அவன் உயிருக்கு உத்தரவாதம் அளித்ததால் ஒன்றாகத் தங்குகிறார்கள். நீலி அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொள்கிறாள். மிகுந்த மனவேதனையுற்ற வேளாளப் பெருமக்கள் 70 பேரும் தீமூட்டி அதில் பாய்ந்து மாய்ந்தனர். திருவாலங்காடு - பழையனூர் செல்லும் வழியில் அவர்கள் தீயில் பாய்ந்த இடத்தில் மண்டபம் உள்ளது.
தலத்தின் சிறப்புகள்!
1000 வருடங்களுக்கு மேல் பழமையான ஆலயம். 10 ஆம் நூற்றாண்டு முதலாகப் பல மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.
தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களில் 15 ஆவது தலம்.
தேவாரமூவர், அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள் சிறப்பித்துப் பாடிய திருத்தலம்.
தலத்தின் பெருமையையும், பழமையையும் பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், தொண்ட மண்டலசதகம் போன்ற சிறப்பான நூல்களில் வாயிலாக அறியலாம்.
சிவபெருமானின் சந்நிதியைக் கடந்ததும் சிறப்புப் பொருந்திய இரத்தினசபை. இரத்தின சபாபதியின் ஊர்த்துவதாண்டவக் கோலத்தைக் காணலாம்.
இந்தத் தலத்தில் கிடைத்த செப்பேடுகள் ஆய்வாளர்களுக்குக் கிடைத்த அரும் கருவூலம்.
நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள், நடராசருக்கு ஆறு அபிஷேகங்கள், பங்குனியில் பெருவிழா, ஆடி அமாவாசை கழிந்த செவ்வாய் முதல் அடுத்த செவ்வாய் வரை பத்ரகாளியம்மன் திருவிழா எனப் பல விழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும் சிறப்பான திருத்தலம்.
கட்டாயம் காணவேண்டிய ஆலங்களுள் ஒன்று!
கூடினார் உ,மைதன்னொடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர்போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனைமேயார்
ஆடினார் காளிகாண ஆலங்காட்டு அடிகளாரே.
திருநாவுக்கரசர்.
கூடினார் உ,மைதன்னொடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர்போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழில் பழனைமேயார்
ஆடினார் காளிகாண ஆலங்காட்டு அடிகளாரே.
திருநாவுக்கரசர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திருவாலங்காடு-அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
» திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
» திருவாலங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum