தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்

View previous topic View next topic Go down

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் Empty ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்

Post by rammalar Wed May 25, 2016 10:13 am

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்றில்
ஐதராபாத்-கொல்கத்தா அணிகள் இன்று
(புதன்கிழமை) பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொல்கத்தா உற்சாகம்

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று
முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த
ஐதராபாத் சன்ரைசர்சும், 4-வது இடம் பெற்ற
கொல்கத்தா நைட் ரைடர்சும் இன்றிரவு
வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்)
மோதுகின்றன.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில்
நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்
அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில்
விளையாடும். தோற்கும் அணி நடையை கட்டும்.

இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா அணிக்கே
இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு சற்று அதிகம்
இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவ்விரு
அணிகளும் லீக்கில் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும்
கொல்கத்தா அணி 8 விக்கெட் மற்றும் 22 ரன்கள்
வித்தியாசத்தில் ஐதராபாத்தை புரட்டியெடுத்தது.

கேப்டன் கவுதம் கம்பீர் (473 ரன்), ராபின் உத்தப்பா
(383 ரன்), யூசுப் பதான் (359 ரன்), மனிஷ் பாண்டே (212 ரன்)
ஆகியோர் கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் வலு
சேர்க்கிறார்கள்.
ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் இந்த ஆட்டத்திலும்
விளையாடுவது சந்தேகம் தான்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் Empty Re: ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்

Post by rammalar Wed May 25, 2016 10:14 am

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் XTduquh9QCmsqa1ls5Gb+Evictions-round
-
மிரட்டுமா சுழல்

சுனில் நரின், பியுஷ் சாவ்லா, ஷகிப் அல்-ஹசன்,
குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள்
கொல்கத்தாவின் வெற்றியில் கணிசமான பங்களிப்பை
அளித்து இருக்கிறார்கள். டெல்லி ஆடுகளம் வேகம்
குறைந்தது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம்
முக்கிய பங்கு வகிக்கலாம்.

எப்படியும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடும் லெவன்
அணியில் இடம் பெறுவார்கள் என்பதால் இவர்கள் தான்
ஐதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

ஐதராபாத் அணிக்கு, கேப்டன் டேவிட் வார்னர் தான்
ஆணிவேராக இருக்கிறார். இதுவரை 7 அரைசதம் உள்பட
658 ரன்கள் குவித்திருக்கும் அவர் 10 ஓவர்களுக்கு மேல்
நிலைத்து விட்டாலே ஐதராபாத் அணிக்கு சாதகமான சூழல்
உருவாக தொடங்கி விடும்.
ஷிகர் தவான் (4 அரைசதத்துடன் 463 ரன்), யுவராஜ்சிங்,
வில்லியம்சன், ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா ஆகியோரும்
நன்றாக ஆடினால், நிச்சயம் ஐதராபாத் நல்ல நிலையை
எட்ட முடியும்.

கொல்கத்தா அணிக்கு சுழல் என்றால், ஐதராபாத் அணியில்
வேகம் தான் பலம். முஸ்தாபிஜூர் ரகுமான் (16 விக்கெட்),
புவனேஸ்வர்குமார் (18 விக்கெட்), பரிந்தர் ஸ்ரன் (12 விக்கெட்)
உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு
பழிதீர்க்கும் உத்வேகத்துடன் ஐதராபாத் வீரர்கள் வரிந்து
கட்டுவதால் ஆட்டத்தில் சூடுபறக்கும் என்று நம்பலாம்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் Empty Re: ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்

Post by rammalar Wed May 25, 2016 10:15 am

வீரர்கள் விவரம்

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

கொல்கத்தா:
உத்தப்பா,
கம்பீர் (கேப்டன்),
காலின் முன்ரோ அல்லது ரஸ்செல்,
மனிஷ் பாண்டே,
யூசுப் பதான்,
ஷகிப் அல்-ஹசன்,
சூர்யகுமார் யாதவ்,
அங்கித் ராஜ்புத்,
சுனில் நரின்,
குல்தீப் யாதவ் அல்லது பியுஷ் சாவ்லா,
ஜாசன் ஹோல்டர் அல்லது மோர்னே மோர்கல்.

ஐதராபாத்:
ஷிகர் தவான்,
டேவிட் வார்னர் (கேப்டன்),
நமன் ஓஜா,
யுவராஜ்சிங்,
வில்லியம்சன் அல்லது மோர்கன்,
தீபக் ஹூடா,
ஹென்ரிக்ஸ்,
கரண் ஷர்மா அல்லது பிபுல் ஷர்மா,
புவனேஸ்வர்குமார்,
பரிந்தர் ஸ்ரன்,
முஸ்தாபிஜூர் ரகுமான்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ்,
சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
-
-------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல் Empty Re: ஐ.பி.எல். வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum