தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவ்வை குறள்.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

அவ்வை குறள். Empty அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Sun Jun 19, 2016 6:38 am

அவ்வை குறள்.

1.வீட்டு நெறிப்பால்.
.
உள்ளுடம்பின் நிலைமை.
26.
நல்வினையும் தீவினையும் உண்டு திரிதரும்
செய்வினைக்கு வித்தாம் உடம்பு.
27.
உள்ளுடம்பில் வாழ்வன ஒன்பதும் ஏழைக்குக்
கள்ளடம்பு ஆகி விடும்.
28.
பொய்க்கெல்லாம் பாசனமாய் உள்ளதற்கோர் வித்தாகும்
மெய்க்குள்ளாம் மாய உடம்பு.
29.
வாயுவிளால் ஆய உடம்பின் பயனே
ஆயுவின் எல்லை அது.
30.
ஒன்பது வாசலும் ஒக்க அமைத்தால்
அன்பதில் ஒன்றாம் அரன்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் நூல் – பக்கம் – 78.
தகவல் : ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Jun 23, 2016 6:20 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.
வாயு தாரணை.

46.
இரேசிப் பதுபோலப் பூரித்து நிற்கின்
தராசுமுனை நாக்கதுவே யாம்.
47.
கும்பகத்தின் உள்ளே குறித்தரனை தானாக்கில்
தும்பிபோல் நிற்கும் தொடர்ந்து.
48
இரேசக பூரக கும்பக ஆற்றில்
தாரசு போல் நிற்கும் தலை.
49.
வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்.
50.
போகின்ற வாயு பொருந்தில் சிவம்ஒக்கும்
தாழ்கின்ற வாயு அடக்கு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 79.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Tue Jun 28, 2016 6:17 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.
அமுத தாரணை.
61.
அண்ணாக்குத் தன்னை அடைந்தங்கு அமிழ்துண்ணில்
விண்ணோக்கு வேந்தனும் ஆம்.
62.
ஈரெண் கலையின் நிறைந்த அமிழ்துண்ணில்
பூரணம் ஆகும் பொலிந்து.
63.
ஒங்கார மான கலசத்து அமிழ்துண்ணில்
போங்கயலம் இல்லை புரிந்து.
64.
ஆன கலசத்து அமிழ்தை அறிநதுண்ணில்
போனகம் வேண்டாமல் போம்.
65.
ஊறும் அமிழ்தத்தை உண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம- 80.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Wed Jun 29, 2016 6:19 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.
அமுத தாரணை.

66.
ஞான ஒளிவிளக்கால் நல்அமிழ்து உண்ணில்
ஆன சிவயோகி ஆம்.
67.
மேலை அமிழ்தை விலக்காமல் தானுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.
68.
கால், அனல் ஊக்கக்கலந்த அமிழ்து உண்ணில்
ஞானம் அதுவாம் நயந்து.
69.
எல்லையில் இன்னமிழ்தம் உண்டாங்கு இனிதிருக்கில்
தொல்லை முதல்ஒளியே ஆம்.
70.
நிலாமண்டபத்தின் நிறைந்த அமிழ்துண்ணில்
உலாவலாம் அந்தரத்தின் மேல்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 80 – 81.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Jun 30, 2016 6:09 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.

அர்ச்சனை.

71.
மண்டலங்கள் மூன்று மருவ உடல்நிருத்தி
அண்டரனை அர்ச்சிக்கும் ஆறு.
72.
ஆசனத்தைக் கட்டி அரன்தன்னை அர்ச்சித்தும்
பூசனைசெய் துள்ளே புணர்.
73.
உள்ளமே பீடம் உணர்வே சிவனுருவைத்
தெள்ளியர் அர்ச்சிக்கும் ஆறு்
74.
ஆதாரத் துள்ளே அறிந்த சிவனுருவைப்
பேதமற அர்ச்சிக்கும் ஆறு.
75.
பூரித்து இருந்து புணர்நது சிவனுருவைப்
பாரித்தங்கு அர்ச்சிக்கும் ஆறு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 81.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Fri Jul 01, 2016 9:17 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.

அர்ச்சனை.

76.
விளக்குறு சிந்தையால் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற அர்ச்சிக்கும் ஆறு.
77.
பிண்டத்தின் உள்ளே பெயராது இறைவனைக்
கண்டுதான் அர்ச்சிக்கும் ஆறு.
78.
மந்திரங்கள் எல்லாம் மயங்காமல் உள்நினைந்து
முந்தரனை அர்ச்சிக்கும் ஆறு.
79.
பேராகக் கருத்தினால் பிண்டத்தில் உள்நினைந்து
தாராதனை செய்யும் ஆறு.
80.
உள்ளத்தின் உள்ளே உறப்பார்த்தங் கொண்டகரை
மெள்ளத்தான் அர்ச்சிக்கும் ஆறு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 81.
தகவல் : ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Sat Jul 02, 2016 6:18 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.

உள்ளுணர்தல்.

81.
எண்ணிலி ஊழிதவம் செய்திங்கு ஈசனை
உள்நிலைமை பெற்றது உணர்வு.
82.
பல்லூழி காலம் பயின்று அரனை அர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.
*
83.
எண்ணற்கு அரிய அருந்தவத்தால் அன்றோ
நண்ணப்படும் உணர்வு தான்.
*
84.
முன்னைப பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெரும் உணர்வுதான்.
*
85.
காயக் கிலேசம் உணர்ந்த பயன்ஆன்றே
ஓயா உணர்வு பெறல்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 81 – 82.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Wed Jul 06, 2016 5:58 am

அவ்வை குறள்
*
வீட்டு நெறிப்பால்.

உள்ளுணர்தல்.

86.
பண்டைப் பிறவிப் பயனாம் தவத்தினால்
கண்டங்கு உணர்வு பெறல்.
87.
பேராத் தவத்தினால் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந்து உணர்வு பெறின்.
88.
ஞானத்தால் ஆய உடம்பின் பயன் அன்றே
மோனத்தால் ஆய உணர்வு.
89.
ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான்
நீதியால் செய்த தவம்.
90.
காடும் மலையும் கருதித் தவம்செய்தால்
கூடும் உணர்வின் பயன்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 81 – 82.
தகவல் : ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Jul 07, 2016 6:41 am

அவ்வை குறள்
*
பத்தியுடைமை.

91.
பத்தியால் உள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூலம் அது.
92.
பாடியும் ஆடியும் பல்காலும் நேசித்துத்
தேடும் சிவசிந்தை யால்.
93.
அன்பால் அழுதுபலர் அறியும் ஆள்வானை
என்புருகி உள்ளே நினை.
94.
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தால் ஈசனைத் தேடு.
95.
கண்ணால் உறப்பார்த்துக் காதலால் தானோக்கில்
உண்ணுமே ஈசன் ஒளி.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 82.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Jul 21, 2016 6:57 am

அவ்வை குறள்.

2. திருவருட்பால்.
நினைப்புருகல்.

111.
கருத்துறப் பார்த்துக் கலங்காமல் உள்ளத்து
இருத்திச் சிவனை நினை.
112.
குண்டலினியின் உள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார்.
113.
ஒர்மின்கள் சிந்தையில் ஒன்றச் சிவன் தன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம்.
114.
சிக்கெனத் தேர்ந்துக்கொள் சிந்தையில் ஈசனை
மிக்க மலத்தை விடு.
115.
அறிமின்கள் சிந்தையில்ஆகாரத்தைச் சேர்த்து
உறுமின்கள் உம்முலே ஒர்ந்து.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 83 – 84.
தகவல ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Tue Jul 26, 2016 8:57 am

அவ்வை குறள்.

2. திருவருட்பால்.
நினைப்புருகல்.

நித்தம் நினைந்திரங்கி நின்மலனை ஒன்றுவிக்கில்
முற்றும் அவன்ஒளியே ஆம்.
117.
ஓசைஉணர்ந் தங்கே உணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தாய் இரு.
118.
இராப்பகல் அன்றி இருசுடர் சிந்திக்கில்
பராபரத்தோடு ஒன்றலும் ஆம்.
*
119.
மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில்
ஒக்க சிவனுருவம் ஆம்.
120.
வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும்
காண்டற்கு அரிதாம் சிவம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 64.
தகவல் : ந.க.துறைன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by செந்தில் Wed Jul 27, 2016 6:45 pm

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Aug 04, 2016 5:56 am

அவ்வை குறள்.

2. திருவருட்பால்.

தெரிந்து தெளிதல்.
*
126.
ஒவாதது ஒன்றே பலவாம் உயிர்க்கெல்லாம்
தேவானது ஒன்றே தெளி.
127
தம்மை அறியாதார் தாம்அறிவோம் என்பதுஎன்?
செம்மையால் ஈசன் திறம்.
128.
எல்லா உலகத்து இருந்தாலும் ஏத்துவர்
நல்லுலக நாதன் அடி.
129.
உலகத்தில் உள்ள உயிர்க்கெல்லாம் ஈசன்
நிலவுபோல் நிற்கும் நிறைந்து.
130.
உலகத்தில் மன்னும் உயிர்க்கெல்லாம் ஈசன்
அலகிறந்த ஆதியே ஆம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 84 -85.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Wed Aug 17, 2016 6:12 am

அவ்வை குறள்.

2. திருவருட்பால்.

தெரிந்து தெளிதல்.
*
136.
கூடக மான குறியெழுத்தைத் தான் அறியில்
வீடகம் ஆகும் வரைந்து.
137.
வீடக மாகவிரைந்துஒல்லை வேண்டுமேல்
கூடகத்தில் சோதியோடு ஒன்று.
138.
பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகும் கருத்து.
139.
ஈரேசகம் ஆற்றி இடையறாதே நிற்கில்
பூரிப்பது உள்ளே சிவம்.
140.
சிந்தையில் நின்ற சிவவிசும்பில் சாக்கிரமாம்
சந்திரனில் தோன்றும் உணர்வு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள். நூல் – பக்கம் – 85.
தகவல் ; ந.க.துறைவன.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Aug 18, 2016 6:21 am

அவ்வை குறள்…!!
*
உருவொன்றி நிற்றல்.
141.
எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்குமே
உள்ளகத்து ஈசன் ஒளி.
142.
பாலின் கண் நெய்போல் பரந்தெங்கும் நிற்குமே
நுலின் கண் ஈசன் நுழைந்து.
143.
கரும்பினில் கடடியும் காய்பாலின் நெய்யும்
இரும்புண்ட நீரும் இயல்பு.
144.
பழத்தின் ரதம்போல பரந்தெங்கும் நிற்கும்
வழுத்தினால் ஈசன் நிலை.
145.
தனுவொடு தோன்றுமே தான்எல்லாம் ஆகி
அணுவதுவாய் நிற்கும் உணர்வு.
ஆதாரம் ;சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 86.
தகவல் ; ந.க. துறைவன்.
*\
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Fri Aug 19, 2016 6:07 am

அவ்வை குறள்…!!
*
உருவொன்றி நிற்றல்.
146.
வித்து முனைபோல் விரிந்தெங்கும் நிற்குமே
ஒத்துளே நிற்கும் உணர்வு.
147.
அச்சம் ஆங்காரம் அகத்தடக்கினால் பின்னை
நிச்சயமாம் ஈசன் நிலை.
148.
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கும் இயல்பு.
149.
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்க்கும் தானாம் அவன்.
150.
ஒசையில் உள்ளே உதி்க்கின்றது ஒன்றுண்டு
வாசமலர் நாற்றம்பொல் வந்து.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 86.
தகவல் ; ந.க.து்றைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Aug 25, 2016 6:29 am

அவ்வை குறள்…!!
*
முத்தி காண்டல்.

151.
மனத்தோடு உறுபுத்தி ஆங்காரம் சித்தம்
அனைத்திலும் இல்லை அது.
152.
வாக்கும் கருத்தும் மயக்கும் சமயங்கள்
ஆக்கிய நூலிலும் இல்.
153.
உருவம்ஒன் றில்லை உணர்வில்லை ஒதும்
அருவமும் தானதுவே ஆம்.
154.
தனக்கோர் உருவில்லை தான்எங்கும் ஆகி
மனத்தகமாய் நிற்கும் அது.
155.
பெண்ஆண் அலிஎன்னும் பேர்ஒன்று இலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் 86 - 87.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Sep 08, 2016 9:20 am

அவ்வை குறள்…!!
*
உருபாதீதம்.

161.
கருவின்றி வீடாம் கருத்ததுரை வேண்டில்
உருவின் றி நிற்கும் உணர்வு.
162.
பிறத்தல்ஒன் றின்றிப் பிறவாமை வேண்டில்
அறத்துருவம் ஆற்றி இரு.
163.
உருவங்கள் எல்லாம் அறுத்தறம் ஆற்றில்
கருவேதும் இல்லை தனக்கு.
164.
கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
அறுத்துருவம் ஆற்றி இரு.
165.
அனைத்துருவம் எல்லாம் அறக்கோடு நின்றால்
தனக்கொன்றும் இல்லை பிறப்பு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – நூல் – பக்கம் – 87 – 88..
தகவல் ; ந.க.து்றைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ஸ்ரீராம் Thu Sep 08, 2016 1:49 pm

அனைத்தும் அருமை அண்ணா
பகிர்வுக்கு நன்றி!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Sep 15, 2016 5:24 pm

உருபாதீதம்.

166.
நினைப்புமறப் பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்றும் இல்லை பிறப்பு.
167.
குறித்துருவம் எல்லாம் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு.
168.
பிகற்றும் உணர்வை அறுத்துப்ர சஞ்ச
விகற்பம் உணர்வதே வீடு.
169.
பிறப்புறுக்க வீடாம் பேருவகை இன்றி
அறுத்துருவம் ஆற்றி இரு.
170.
ஒசை உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 87 – 88.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Mon Sep 19, 2016 3:44 pm

அவ்வை குறள்…!!
*
பிறப்பறுத்தில்.

171.
அன்னை அறியும் அறிவு தன்னைப் பெறில்
பின்னைக் பிறப்பில்லை வீடு.
172.
அறம் பாவம் ஆயும் அறிவதனைக் கண்டால்
பிறழ்த்துழல வேண்டா பெயர்ந்து.
173.
சிவனுருவம் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கல்
பவநாசம் ஆகும் பரிந்து.
174.
உறக்க உணர்வோடு உயிர்ப்பின்மை அற்றால்
பிறப்பின்றி விடாம் பரம்.
175.
நினைப்பு மறப்பு நெடும்பசியும் அற்றால்
அனைத்துலகும் வீடாம் அது.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 88.
தகவல் ; ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Sep 22, 2016 5:54 am

அவ்வை குறள்…!!
*
பிறப்பறுத்தில்.

176.
உடம்பிரண்டும் கெட்டால் உறுபயன்ஒன் றுண்டு
திடம்படும் ஈசன் திறம்.
177.
பின்னை அறிந்து செறிந்தடங்கித் தான்அற்றால்
தன்னை பிறப்பில்லை வீடு.
178.
மருளன்றி மாசறுக்கி மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கும் இடம்.
179.
விகாரம் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாம் கண்டீர் அறிவு.
180.
சிந்தைஆங் காரம் செறிபுலன் அற்றக்கால்
முந்தியே ஆகுமாம் வீடு.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 88.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Thu Sep 29, 2016 3:19 pm

அவ்வை குறள்…!!
*
தூய ஒளி காண்டல்.

181.
தோன்றியது எல்லாம் தொடக்கறுத்துத் தூய்வெளியாயத்
தோன்றியக் கால் தூய ஒளி.
182.
தெளிவாய் தேச விளக்கொளியைக் காணில்
விளியாய விடதுவே ஆம்.
183.
மின்போல் உருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும;.
184.
பளிங்கு வலம்புரி பால்நிறத்த தாகில்
துளங்கொளியாம் தூயநெறி.
185.
சங்கு நிறம்போல் தவள ஒளிகாணில்
அங்கையின் கெல்லியே ஆம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 88 – 89.
தகவல் ; ந.க.து்றைவன்.
*\
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Fri Nov 04, 2016 10:12 am

அவ்வை குறள்…!!
*
தூய ஒளி காண்டல்.

186.
துளங்கியத் தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம விரைந்து.
187.
மின்மினி போன்ற விளக்காகத் தான்தோன்றில்
அன்னப் பறவையே ஆம்.
188.
உள்ளொளி தோன்றில் உணரில் அருள்ஒளி
அவ்வொளி ஆதி ஓளி.
189.
பரந்த விசும்பில் பரந்த ஒளி காணில்
பரம்பரமே ஆய ஓளி.
190.
ஆதிஓளியாகி ஆள்வானும் தானாகி
ஆதி அவனுருவம் ஆம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள் – பக்கம் – 88 89.
தகவல் ; ந.க. துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by ந.கணேசன் Mon Nov 07, 2016 8:48 am

அவ்வை குறள்…!!
*
சதாசிவம்.
191.
பத்துத் திசையும் பரந்த கடலுக்கும்
ஒத்தெங்கும் நிற்கும் சிவம்.
192.
விண்நிறைந்து நின்றுவிளங்கும் சுடர்ஒளிபோல்
உள்நிறைந்து நிற்கும் சிவம்.
193.
ஆகமும் சிவனும் ஆசையும் தானாகி
ஏகமாய் நிற்கும் சிவம்.
194.
வாயுவாய் மன்னுயி்ர் மற்றவற்றின் உட்பொருளாய்
ஆயுமிடம் தானே சிவம்.
195.
எண்ணிறந்த யோனி பலவாய் பரந்தெங்கும்
உள்நிறைந்து நிற்கும் சிவம்.
ஆதாரம் ; சித்தர் பாடல்கள். – பக்கம் – 89.
ந.க.து்றைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அவ்வை குறள். Empty Re: அவ்வை குறள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum