Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல... மனித வதை : இயக்குனர் பாரதிராஜா ஆவேசம்
Page 1 of 1 • Share
ஜல்லிக்கட்டு மிருக வதையல்ல... மனித வதை : இயக்குனர் பாரதிராஜா ஆவேசம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் மரித்துப் போனதாய்தான் செய்தி இருக்கிறது. இது இப்படியிருக்க, இதை மிருக வதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.
ஜல்லிக்கட்டு மிருக வதையென்றால் அனுதினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு அடிமாடுகளாய் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடியுமா?
கோயில்களில் காட்சிப் பொருளாய், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?
பறவைகளையும் விலங்குகளையும் சிறைப்பிடித்து அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருகக்காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா?
குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?
தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா?
காவல் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாயக்ளை விடுவிக்க முடியுமா?
ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்திய முழுவதும் சைவ உணவுதான் - அசைவத்திற்கு தடை விதியுங்கள்.
இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள். இது ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தேளா? என்ற போட்டியே தவிர, மிருக வதைக்கான இடமே இல்லை. மனிதன், மடிந்திருக்கிறானே தவிர மாடுகள் இறந்ததாக தகவல் இல்லை. மனித வதையென்று மனு செய்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிருக வதை என்பது இரண்டாம் கருத்து.
ஜல்லிக்கட்டுக்கு தடையென்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினை போட காளைகள் இல்லாமல், நம் பசு மாடுகளுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதிலிருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது.
நம் கண்முன்னே பண்பாட்டு, பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாமென்று மாடுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தை கழட்டி விடுங்கள். எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கனாங்கயிற்றை அவிழ்த்து விடுங்கள்.
எங்கள் வாடி வாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் அழியாதிருக்கட்டும்.
ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டு கலாச்சாரத்தின் அடி மடியிலேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதறகு மாநில அரசு கைகட்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பதும் தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும். உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறைகேடுகளாலும் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள்.
அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை. இதனை இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-maalaimalar

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கமலின் ரத்தத்தை ருசி பார்க்காதீர்கள்: பாரதிராஜா காட்டமான அறிக்கை
» என்னை கற்பழித்தவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்: பெண் போட்டோகிராபர் ஆவேசம்
» சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum