Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி
Page 1 of 1 • Share
ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி
-
ஐதராபாத் :
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்டின் ‘ஹாட்ரிக்’ சாதனையால் புனே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இது அந்த அணிக்கு 8-வது வெற்றியாகும்.
பிளே-ஆப் சுற்றுக்கு ...
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லீக் சுற்று மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாடி முடிக்க வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
44-வது லீக் போட்டி
இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் மாலை அரங்கேறிய 44-வது லீக்கில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய புனே அணிக்கு ஆரம்பமே தடுமாற்றமாக அமைந்தது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ராகுல் திரிபாதி (1 ரன்) எதிர்பாராத விதமாக ரன்-அவுட் ஆனார். ஐதராபாத் பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க, முதல் 5 ஓவர்களில் பந்து ஒரு முறை கூட எல்லைக்கோடு பக்கம் செல்லவில்லை.
புனே தடுமாற்றம்
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விழுந்த புனே அணிக்கு ரன்வேகம் பெரிய அளவில் உயரவில்லை. நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்சும் (39 ரன், 25 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஸ்டீவன் சுமித்தும்(34 ரன், 39 பந்து) முக்கியமான தருணத்தில் விக்கெட்டை தாரை வார்த்தனர். ஸ்டீவன் சுமித் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
டோனி அசத்தல்
இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் டோனி கொஞ்சம் வேகம்
காட்டினார். 19-வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்து
வீச்சில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்க விட்டு அசத்தினார்.
டோனி தனது பங்குக்கு 31 ரன்கள் (21 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்)
விளாசி ஓரளவு சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்.
20 ஓவர் முடிவில் புனே அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.
ஸ்டோக்ஸ் அபாரம்
அடுத்து களம் இறங்கிய ஐதராபாத் அணியில் ஷிகர்தவான் (19 ரன்), கனே வில்லியம்சன் (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் பென் ஸ்டோக்ஸ் காலி செய்து ‘செக்’ வைத்தார். இதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் டேவிட் வார்னரும், யுவராஜ்சிங்கும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
12 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 83 ரன்களுடன் இருந்ததை பார்த்த போது எளிதில் இலக்கை அடைந்து விடும் போலவே தோன்றியது. அப்போது மீண்டும் பந்து வீச அழைக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னரை (40 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேற்றி திருப்பத்தை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு பந்துவீச்சில் தங்களது பிடியை புனே அணி மேலும் இறுக்கியது. ஹென்ரிக்ஸ் 4 ரன்னிலும், யுவராஜ்சிங் 47 ரன்னிலும் (43 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) நடையை கட்ட, புனே அணியின் நம்பிக்கை அதிகமானது.
உனட்கட் ‘ஹாட்ரிக்’
பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 20-வது ஓவரை புனே வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் வீசினார். முதல் பந்தில் ரன் விட்டுக்கொடுக்காத உனட்கட் அடுத்த மூன்று பந்துகளில் பிபுல் ஷர்மா (8 ரன்), ரஷித்கான் (3 ரன்), புவனேஷ்வர்குமார் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ‘கேட்ச்’ மூலம் தொடர்ச்சியாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
அத்துடன் எஞ்சிய 2 பந்திலும் ரன் ஏதும் வழங்காமல் மெய்டன் ‘ஹாட்ரிக்’குடன் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்களே எடுக்க முடிந்தது.
8-வது வெற்றி
இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி ‘திரில்’ வெற்றியை ருசித்தது. உனட்கட் ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகளை அள்ளினார். 12-வது ஆட்டத்தில் விளையாடி 8-வது வெற்றியை கண்ட புனே அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சில அணிகளின் முடிவுகளை பார்க்க வேண்டி இருப்பதால், இப்போதைக்கு புனே அணியின் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி என்று மட்டுமே சொல்லமுடியும். ஐதராபாத் அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.
-
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி
» குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி 5-வது வெற்றி
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» ஐ.பி.எல்., டுவென்டி-20 – டில்லி அணி அபார வெற்றி
» விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum