Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பத்மாவதி படத்துக்கு ஆதரவு - நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்
Page 1 of 1 • Share
பத்மாவதி படத்துக்கு ஆதரவு - நாடு முழுவதும் நாளை 15 நிமிடம் படப்பிடிப்பு நிறுத்தம்
-
மும்பை:
பத்மாவதி படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மாலை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்த திரையுலகினர் தீர்மானித்துள்ளனர்.
சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
-
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.
இந்நிலையில், ரஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அதுவரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அகன்ற ராஷிரிராவதி கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை (விடுமுறைக் கால) தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இருநபர் அமர்வு தள்ளுபடி செய்தது.
பத்மாவதி படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? சினிமா தியேட்டர்களை எரிப்பவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்களா? இதைப்போன்ற மனுக்களின் மூலம் நீங்கள் போராட்டக்காரர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
-
பத்மாவதி படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான கோரிக்கைகளை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையிலும், இவ்விவகாரம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையிலும் விசாரிக்க வாய்ப்பில்லாத, அரைகுறையான அம்சங்களை கொண்ட இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பத்மாவதி படத்தை ஆதரிக்கும் வகையிலும், இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் நாளை மாலை 4.15 மணியில் இருந்து 4.30 மணிவரை 15 நிமிடம் படப்பிடிப்புகளை நிறுத்திவைக்க இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த முடிவுக்கு திரையுலகை சேர்ந்த 19 துணை அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஒளிப்பதிவாளர்கள், எழுத்தாளர்கள், ஒப்பனை கலைஞர்கள். டப்பிங் கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாடகர்கள் சங்கம், சண்டைக் காட்சி இயக்குநர்கள் சங்கம் போன்ற துணை அமைப்பை சேர்ந்த சுமார் 700 பேர் இந்த 15 நிமிட வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குநர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அஷோக் பண்டிட், நாம் சுதந்திரமானவர்கள் தானா? நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா? என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக அறிந்துகொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
-
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» 2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» கார்கில் வெற்றி விழா: நாடு முழுவதும் கொண்டாட பா.ஜ.க முடிவு
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» 2018-புத்தாண்டு பிறந்தது; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
» கார்கில் வெற்றி விழா: நாடு முழுவதும் கொண்டாட பா.ஜ.க முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum