Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சோனாலி முகர்ஜியின் வாழ்வில் வீசப்பட்ட அசிட்டும், ரூ.25 லட்சம் கிடைத்த அதிஷ்டமும்.
Page 1 of 1 • Share
சோனாலி முகர்ஜியின் வாழ்வில் வீசப்பட்ட அசிட்டும், ரூ.25 லட்சம் கிடைத்த அதிஷ்டமும்.
சோனாலி முகர்ஜியின் வாழ்வில் வீசப்பட்ட அசிட்டும், ரூ.25 லட்சம் கிடைத்த அதிஷ்டமும்.
ஆசிட் வீட்டில் முகம் சிதைந்து பார்வையிழந்த ஜார்கண்ட் மாநில பெண்ணுக்கு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
சோனாலி முகர்ஜி…. இந்தப் பெயரை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தை சேர்ந்த சோனாலி முகர்ஜியின் அழகிய பெண்ணின் முகத்தில் 2003 ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைத்தனர் மூன்று கொடூரர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் இழந்த அழகிய முகம் ஆசிட் வீச்சில் முற்றிலும் சிதைந்துவிட்டது.
அழகிய முகத்தில் ஆசிட் வீச்சு:-
கல்லூரி மாணவியான சோனாலி, தேசிய மாணவர் படையிலும் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். தினசரி 3 பேர் இவரை சீண்டியடி இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களுடைய தொல்லை பொறுக்க முடியாத சோனாலி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர்கள், ”அழகான முகம் இருக்கிறது என்பதால்தானே இப்படிப் பேசுகிறாய்… உனக்குத் தக்க பாடம் புகட்டுகிறோம்” என்று கூறி, பொலிவான முகத்தை அமிலம் ஊற்றி சிதைத்து விட்டனர்.
22 அறுவை சிகிச்சைகள்:-
இது நிகழ்ந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. சோனாலியின் முகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்துபோகிறார்கள். முகம் உருக்குலைந்து காட்சி அளிக்கிறது. இரு விழிகளிலும் பார்வை இல்லை. நரம்புகள் சிதைந்ததால், வலது காதின் செவித் திறனையும் இழந்துவிட்டார் சோனாலி. இதுவரை 22 அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. அவருடைய தொடைப் பகுதியில் இருந்து சதையையும் தோலையும் எடுத்து முகத்தில் வைத்து ஓரளவு முகத்தை வடிவத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனாலும், பார்வை கிடைக்கவில்லை.
கருணைக் கொலை:-
சோனாலியின் மீது அமிலத்தை ஊற்றிய மூவரில் பிரம்மதர் ஹர்ஜாவை இளங்குற்றவாளி என்று கூறி விடுதலை செய்துவிட்டது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். தபஸ் மித்ரா, சஞ்சய் பஸ்வான் ஆகிய மற்ற இருவரும் பெயிலில் வெளிவந்துவிட்டனர். குற்றம் இழைத்துவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகின்றனர் ஆனால், எந்தத் தவறும் செய்யாத சோனாலி, தன் வாழ்க்கையை இழந்து கருணைக் கொலையை நாடி நிற்கும் அவல நிலைக்குத் தள்ளப்ப்பட்டார்.
ஏழ்மையில் தவிப்பு:-
இவரது சிகிச்சைக்காகவே அத்தனை சொத்துக்களையும் விற்றாகிவிட்டது. ஆனாலும் பயனில்லை. ஒரு கட்டத்தில் உறவினர்களும் நண்பர் களும் கைவிட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மாநிலத்தின் மூன்று முதல்வர்களைச் சந்தித்து விட்டார் சோனாலி. ஆனால், ஒரு பயனும் இல்லை. கண் சிகிச்சை மட்டுமல்லாது மற்ற சிகிச்சைகளுக்கும் சேர்த்து ஏறத்தாழ 17 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சோகத்துடன் காத்திருந்தார்.
சோனாலிக்கு 25 லட்சம் பரிசு:-
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சோனாலியின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக்காற்று வீசியிருக்கிறது ஆம் சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாயை சோனாலி முகர்ஜி, பரிசாக வென்றுள்ளார். இதன் மூலம் சோனாலிக்கு 17 வயதில் பறிபோன வாழ்க்கை 27 வயதில் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
வினோதினியின் வாழ்க்கை:-
சோனாலியைப் போன்ற சோகம் காரைக்கால் நகரைச் சேர்ந்த பெண் விநோதினிக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த பெண்ணின் பார்வையும் பறிபோய் முகமும் சிதைந்து போய் உள்ளது. உயர் சிகிச்சைக்கு பண உதவியின்றி தவித்து வருகிறார். கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விநோதினி.
சோனாலி, வினோதினி போன்றவர்களை நோக்கி வீசப்பட்டது அமிலம் அல்ல; ஆணாதிக்கச் சமூகத்தின் வன்ம ஊற்றில் இருந்து பீறிட்டுப் புறப்பட்ட விஷம் என்பதே உண்மை.
அமிலம் வீசுவதால் பெண்ணின் வாழ்க்கையே பாழாகிறது என்பதை மனதில்கொண்டு, பாலியல் குற்றத்துக்கு இணையாக இந்தக் குற்றத்தையும் பார்க்கவேண்டும்; அல்லது இதற்கென்று தனி சட்டப்பிரிவு உண்டாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
http://kpyramid.com/?p=5068

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சோனாலி முகர்ஜியின் வாழ்வில் வீசப்பட்ட அசிட்டும், ரூ.25 லட்சம் கிடைத்த அதிஷ்டமும்.
அந்த படம் ரொம்ப கொடுரமா இருக்கு..
Re: சோனாலி முகர்ஜியின் வாழ்வில் வீசப்பட்ட அசிட்டும், ரூ.25 லட்சம் கிடைத்த அதிஷ்டமும்.
மன்னிக்க முடியாத குற்றம், கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பாட்டில்கள் வைத்து கைவேலைப்பாடு
» நெப்போலியனுக்குக் கிடைத்த அடி
» படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!
» உயர்ந்த அழகிக்கு கிடைத்த காதலன்
» Bigg Boss ஆரவ்க்கு கிடைத்த அடுத்த promotion | Arav is going to act in a film

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum