தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ்

View previous topic View next topic Go down

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் Empty ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ்

Post by Guest Mon Jun 21, 2010 1:40 pm

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் Pdf_button ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் PrintButton ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் EmailButton



















on 15-06-2010 03:00

Favoured : 3

Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் DivyaDevadass1பெண்கள் எல்லாத்துறையிலும் ஆண்களுடன் சரிசமமாய் நின்று ஜெயிக்கிறார்கள். எதிலும், எந்த நேரத்திலும் தங்கள் திறமைகளுடன் மோதுவதற்கும் தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளனர். அந்த வரிசையில் சர்வதேச பளு தூக்கும் விளையாட்டுப்போட்டியில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யா தேவதாஸ் 4 தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார். கோவை நிர்மலா கல்லூரியில் தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் திவ்யா தேவதாஸுக்கு சிறு வயது முதல் சுமார் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே விளையாட்டு மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. அப்போது, தான் படித்த பள்ளியின் விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் பெயர் கொடுக்கலாம் என்றவுடன் திவ்யாவும் தன் பெயரைப் பதிவு செய்தார். தன்னுடைய ஆசிரியை ஆலோசனையுடன் உடற்பயிற்சி ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தபோது, பள்ளிகளுக்கான கோட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 'குண்டு எறிதல்' போட்டியில் கலந்துகொண்டு முதல் தங்கப்பதக்கம் பெற்று வெற்றியை வித்தாக்கிக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்தார். திவ்யாவின் தந்தை தேவதாஸ் அரசு பணியில், அதுவும் ஒரு நீதிபதியாக இருப்பதால் அடிக்கடி இடமாற்றம் தவிர்க்க இயலாத ஒன்றாயிற்று. ஆனால், அதை பொருட்படுத்தாத திவ்யா தொடர்ந்து படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்தியதால் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றார். தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றும், 9-ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு வந்ததால் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆனால், அதற்கு பதிலாக தொடர் பயிற்சிகளை மட்டும் மேற்கொண்டார். இதன் காரணமாக மீண்டும் பதினோறாம் வகுப்புப் படிக்கும்போது மாநில அளவில் பரிசுகள், பாராட்டுக்கள் ஏராளமாகவே பெற்றார். அடுத்து கோவையில் கல்லூரி ஒன்றில் திவ்யா முதலாமாண்டு மாணவி, அப்போது திவ்யா நல்ல திடகாத்திரமாக இருந்ததால் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு உடற்கல்வி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அதற்கான பயிற்சிகளை ஆசிரியர்கள் முரளி, நாகராஜ் ஆகிய இருவரிடமும் எடுத்துக்கொண்டார். முதலில் 75 கிலோ பிரிவு, அடுத்து 90 கிலோ பிரிவு ஆகியவற்றில் கடும் பயிற்சிகள். அதற்கான பலன், கல்லூரி அளவில் முதல் பரிசும் பெற்றார். மேலும், குண்டு எறிதலிலும், பவர் லிஃப்டிங் போன்ற போட்டிகளிலும் பதக்கங்கள் பெற்றார்.

முதல் இடத்திற்கான கடும் பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டதால் அவரின் கனவுகளின்படியே கை மேல் பலன் கிடைத்தது. கடந்த மே மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதிவரை மங்கோலியா தலைநகர் உள்ளன்பட்டரில் 21-வது ஏசியன் பவர் லிஃப்டிங் சாம்பியன் போட்டி நடைபெற்றது. சுமார் 20 நாடுகள் கலந்து கொண்ட அந்த மாபெரும் போட்டியில் இந்தியாவிலிருந்து சுமார் 30 வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சார்பாக இரண்டு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் மதுரையைச் சேர்ந்த திவ்யா தேவதாஸும் கலந்துகொண்டார். ஒவ்வொரு நாளும் போட்டிகள், பல்வேறு நாட்டு வீரர்களின் திறமைகள் பளிச்சிட்டன. திவ்யா தேவதாஸுக்கு வெற்றி பெறவேண்டும் என்ற வெறி ஆனிவேராய் ஆழ் மனதில் பதிந்திருந்தது. அது 18 வயதுக்குட்பட்ட பவர் லிஃப்டிங் சப் ஜுனியர் பிரிவு, போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்கியது. இதில் 90 கிலோ பிரிவில் ஸ்குவாட், பெஞ்ச்பிரஸ், வெயிட்லிஃப்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு தங்கப்பதக்கமும், மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்புக்காகவும் திவ்யா தேவதாஸ் மொத்தம் 4 தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவின் பெருமையையும், கெளரவத்தையும் உலகத்தின் உச்சியில் உயர்த்திப் பிடித்துள்ளார். திவ்யா தேவதாஸ் குண்டு எறிதல், வட்டு எறிதல், கால்பந்து, துரோபால், ஜாவ்லின், கபாடி, பளு தூக்குதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதால் இதுவரையிலும் 16 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். பரிசுக்கோப்பைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் அவருடைய வீட்டை அலங்கரிக்கின்றன.


ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ் DivyaDevadass2

தற்பொழுது பத்திரிகைகளும், பல்வேறு பொது அமைப்புகளும் திவ்யா தேவதாஸை பாராட்டி எழுதாத நாட்களே கிடையாது. வெற்றிக்களிப்பில் துள்ளிக்குதித்துக் கொண்டாடிக்கொண்டிருந்த திவ்யா தேவதாஸைஅதிகாலை-க்காக தொடர்பு கொண்டு பேசியபோது... "நானும் என் அப்பாவைப்போல் நீதிபதியாக வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். இந்தச் சமுதாயத்தில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு சட்டத்தின் மூலம் உதவ வேண்டும் என நினைக்கிறேன். நான் எடுத்துக்கொண்ட இதே விளையாட்டுத்துறையில் இந்தியாவிற்கு என்னால் மேலும் பெருமை தேடித்தர முடியும். என்னுடைய வெற்றியில் பக்கபலமாய் பயிற்சியாளர்களும், என் பேற்றோர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினாலும், உற்சாகத்தினாலுமே இன்று இவ்வளவு பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். இந்த உந்துதலோடு, வரும் நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் சர்வதேச அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். அத்துடன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறுவதே எனது தலையாய லட்சியம். அதை நோக்கியே தற்போது பிரயாணித்துக்கொண்டிருக்கிறேன்" என்று தெளிவான, திடமான குரலில் உறுதியாக நம்மிடம் தெரிவிக்கிறார். "மனவலிமையும், மங்காத செயல் திறனும், விடா முயற்சியும், விவேகமான பயிற்சியும் இருந்தால் எதையும் வென்றெடுக்கலாம்" என்பதற்கு தங்கப்பெண் திவ்யா தேவதாஸ் தகுதியானவர்தான் என்று கூறி, எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் தங்கப்பதக்கங்களைப் பெறுவீர்கள், அப்போது, அதிகாலை தங்களை மீண்டும் சந்திக்கும் என வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள் : ஆர்.கணேசன், மதுரை
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum