Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனிதன் விழித்துக் கொள்வானா?
Page 1 of 1 • Share
மனிதன் விழித்துக் கொள்வானா?
மனிதன் விழித்துக் கொள்வானா?
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்தியக் கலாசாரம் இன்று காற்றோடு பறந்து விட்டது. இன்றைய மனிதன் கலாசாரம் என்ற வார்த்தையில்லாத வாழ்க்கை அகராதியை புரட்டிக் கொண்டிருக்கிறான். முன் காலத்தில் இருந்து வந்த கூட்டுக் குடும்பம் காலப்போக்கில் குட்டிக் குடும்பமாக மாறி இன்று குடும்பம் என்ற சொல்லிற்கு இருப்பிடம் உள்ளதா என்ற சந்தேகத்தோடு வாழ்க்கை ஓடுகிறது. அந்நியர்களைக் கவர்ந்த இந்தியக் கலாசாரம் இன்று சிதைந்து காணப்படுகிறது.
முன்பு குழந்தைகளுடைய பெயரோடு குடும்பத்தின் பெயரும் இணைத்துச் சொல்லப்பட்டு வந்தன. அன்றைய கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்களின் ஆசியையும், உறவினர்களின் அன்பையும் பெற்றுக் கொண்டு குழந்தைகள் வளர்ந்தார்கள். முன்பு குழந்தைகள் குடும்ப கௌரவத்திற்கும், பெரியோர்களின் பெயருக்கும் பங்கம் வராமல் காப்பாற்றுவதில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய ஒழுக்கம் தவறாத நடத்தையும், விவேகமாகச் செயல்படும் திறனும் குடும்ப கௌரவத்தை உயர்த்தியது.
கூட்டுக் குடும்பத்தில் பெரியோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் கழித்தார்கள். குடும்பத்தின் தூண்களாயிருந்த பெரியோர்கள் குழந்தைகளுக்கு நல்ல நீதிக் கதைகளைச் சொல்லி வளர்த்தார்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள். இதனால் அந்தக் குழந்தைகள் நல்ல குணங்களோடு வளர்ந்தன. அந்தக் காலத்துக் குடும்பம் குழந்தைகளின் நற்குணங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் சந்ததிகளை அக்கறையுடன் வளர்த்தன. பெரியோர்களின் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவமும் கூட்டுக் குடும்பத்திற்கு பாடப் புத்தகமாக அமைந்தது. அந்தக் காலத்துக் கிராமத்துக் குழந்தைகள் பட்டணத்திற்குப் படிக்கச் சென்றாலும் கிராமத்துப் பெயரை பழுதடையாமல் காப்பாற்றுவதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்கள். தங்கள் சுயமரியாதைக்குக் கெடுதல் வராமல் நடந்து கொண்டார்கள். பெரியவர்களின் வார்த்தையை மதித்து மரியாதை கொடுத்து அந்தக் காலத்துக் குழந்தைகள் வாழ்க்கையை மனநிறைவோடு வாழ்ந்தார்கள்.
இம்மாதிரி பண்பாட்டை இன்றைய குடும்பத்தில் பார்க்க முடியுமா? நாகரீகம் என்ற பெயரில் குடும்ப கௌரவமும், குடும்பத்தினரின் தன்மானமும் நசிந்து விட்டன. இன்றைய குடும்பம் பணத்தின் மீது கொண்ட மோகத்தால் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அடியோடு தொலைத்து விட்டது. போலியான வாழ்க்கையையும், வரட்டு கௌரவத்தையும் விரும்பும் இன்றைய குடும்பம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லித் தரத் தவறி விட்டது. இதனால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமிடையே நிலவி வரும் இடைவெளி விரிந்து காணப்படுகிறது. பகட்டான வாழ்க்கைக்கு முதன்மை கொடுக்கும் பெற்றோர்கள் குழந்தைகளின் வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கி வருகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியமாகி விட்டது. இயந்திரம் போல நடத்தும் வாழ்க்கை இன்றைய குடும்பத்தைச் சுருக்கி விட்டது. உடன் பிறப்பில்லாமல் தனியாக வாழும் குழந்தைகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை அறிந்து கொள்ளத் தவறி விட்டது. இதனால் அகம்பாவம், ஆணவத்தோடு வளரும் குழந்தைகள் மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் மறந்து விட்டது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. அன்பு, பாசம், பண்பு, பந்தம் ஆகியவைகளைப் புரிந்து கொள்ளாமல் வாழும் குழந்தைகளின் நிலை வேதனைக்குரியது.
பணமிதப்பிலே வளர்ந்து உருவாகும் குழந்தைகள் தீய குணங்களுக்கு அடிமையாகிறார்கள். உறவுகளின் அருமையைப் பற்றி தெரியாமல் வளரும் குழந்தைகளின் பிரச்சனை நடுக்கடலில் கப்பல் திசை தெரியாமல் சிக்கித் தவிப்பது போலத் தோன்றுகிறது. பெரியவர்களைச் சுமையாக எண்ணும் இன்றைய குடும்பச் சூழ்நிலை திக்குத் தெரியாத காட்டில் வழி தவறி நடப்பது போல காட்சி கொடுக்கிறது. இதனைச் சற்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கையின் பரிமாணத்தை புரிய வைப்பது மிகவும் அவசியமானது என்ற நிர்பந்தம் உருவாகியுள்ளது. இந்த தருணத்தைத் தட்டிக் கழிக்காமல் உடனடியாக செயல்படுவதற்கு முயற்சி செய்வோம்.
இந்த நம்பிக்கையில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. காலத்தோடு நம்மை மாற்றிக் கொள்வது தேவையானது. ஆனால் அந்த மாற்றத்தோடு அடிப்படையான கலாசாரத்தைத் தொலைத்து விட்டு வாழ்வது உகந்த வழியில்லை என்று சொல்லலாம். இன்றைய மனிதர்கள் பார்வை இருந்தும் கண்களை மூடிக் கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். மனிதனின் அப்படிப்பட்ட வாழ்க்கை பெரிய கேள்விக்குறியாகத் தோன்றுகிறது. சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. விழித்துக் கொண்டு தூங்கும் மனித நேசத்தைத் தட்டி எழுப்பும் நேரமிது. இந்தத் தருணத்தை நழுவ விட்டால் வருங்காலத்தில் எண்ண முடியாத விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். மனிதன் விழித்துக் கொள்வானா?
நன்றி -சந்தியா கிரிதர், புது தில்லி.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum