தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுட சுட செய்திகள்...அச்சலா

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 5:38 pm


தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்..


மது அருந்தும் வயது: மகாராஷ்டிரா அரசு உத்தரவிற்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை: மது அருந்தும் வயதினை அதிகரி்த்து உத்தரவிட்ட மகாராஷ்டிரா அரசுக்கு
எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில், அரசு உத்தரவிற்கு இடைக்கால
தடைவிதிக்க கோர்ட் மறுத்துவிட்டது.
மகாராஷ்டிரா மாநில அரசு, மது
அருந்துவோர் சட்டபூர்வ வயதினை 21-ல்இருந்து 25 ஆக அதிகரித்து கடந்த
2009-ம் ஆண்டு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் பாலிவுட்
நடிகர் இம்ரான்கான், மும்பை ஐகோர்ட்டில் கடந்த 2011-ம் ஆண்டு பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.அதில் அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என
கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மோஹித்ஷா, மேத்தா ஆகியோர் முன்பு
விசா‌ரணைக்கு வந்தது. விசாரணை‌க்கு ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு ஆணைக்கு
தடைவிதிக்க முடியாது , இது தொடர்பாக ஏப்.15-ம் தேதிக்கு மகாராஷ்டிரா அரசு
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 5:39 pm

ஓவாய்சி காவல் நீட்டிப்பு

ஐதராபாத் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டுள்ள
ஆந்திர எம்எல்ஏ அக்பருதீன் ஒவாய்சிக்கு காவல், வரும் 12ம் ‌தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த
ஆந்திர எம்எல்ஏ அக்பரூதீன் ஒவாய்சி, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர்
தற்போது அடிலாபாத் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான
மற்றொரு வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஒவாய்சிக்கு,
வரும் 12ம் தேதி வரை காவலை நீட்டித்து ‌நீதிபதி உத்தரவிட்டார்.

-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 5:41 pm

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாக்.,கை வீழ்த்தியது இந்தியா


கட்டாக் : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6
விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் உலகக்கோப்‌பை கிரிக்கெட்
தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய பெண்கள் அணி,
பாகிஸ்தான் பெண்கள் அணியை எதிர்‌கொண்டது. முதலில் பேட்டிங் செய்த
பாகிஸ்தான் அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 193
ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 46 ஓவரில் 4
விக்கெட்டை மட்டும் பறிகொடுத்து 195 ரன்களை எடுத்தது. இதன்மூலம், இந்திய
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ரானுஜா Thu Feb 07, 2013 5:46 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 5:47 pm

ரானுஜா wrote:பகிர்வுக்கு நன்றி
சுட சுட செய்திகள்...அச்சலா Images?q=tbn:ANd9GcRK1aYZxoZsv35eIE1JUG3YRMRYhUQkkZtiosGD5lCTZfOk23rN
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by மகா பிரபு Thu Feb 07, 2013 6:00 pm

அப்பாடா இந்தியா ஏழாவது இடம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 6:02 pm

மகா பிரபு wrote:அப்பாடா இந்தியா ஏழாவது இடம்..
சுட சுட செய்திகள்...அச்சலா 534526
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by மகா பிரபு Thu Feb 07, 2013 6:04 pm

செய்தி சுடவே இல்லை.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 6:05 pm

மகா பிரபு wrote:செய்தி சுடவே இல்லை.. நக்கல்
சூடு பத்தல
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 8:53 pm

யோகாவில் அசத்தும் கோவை கூலி தொழிலாளியின் மகள்


கோவை விலாங்குறிச்சியைச் சேர்ந்த பத்து வயதான பிரதீபா, அங்குள்ள பள்ளி
ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா பூவராகவன்
கூலித்தொழிலாளி. அன்றாடம் சம்பாதித்ததால்தான் குடும்பத்தை நடத்தமுடியும்.
சிரமமான
சூழ்நிலையில் வளர்ந்து வந்தாலும் பிரதீபாவிற்குள் ஒரு ஆற்றல் உள்ளது. அந்த
ஆற்றல் யோகா கலையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாநில அளவில் நடந்த
போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றதும் அனைவரும், "யாரது பிரதீபா' என்று
கேட்டு திரும்பிப் பார்த்தனர், மாநில சாதனை படைத்த கையோடு குஜராத்தில்
நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பெற்றதும்
திரும்பிப் பார்த்தவர்கள் பிரதீபாவை விரும்பி பாராட்டினர்.
தற்போது
மேமாதம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேசச போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதற்கான கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். வறுமை காரணமாக பிரதீபாவின்
திறமை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக "ஈரநெஞ்சம்' அமைப்பினர் முயற்சி
எடுத்துள்ளனர், அவர்களது முயற்சி பலன்தரட்டும்.சர்வதேச போட்டியில் கலந்து
கொண்டு சாதனை படைக்க பிரதீபாவிற்கு வாழ்த்துக்கள்.

- எல்.முருகராஜ்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 8:54 pm

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் லோகநாதன். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு
மேலாக புகைப்படக் கலையை நேசிப்பவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யானைகளை
படம் எடுத்து வருபவர்.
யானைகளை பற்றி பேசுவது என்றால் நேரம், காலம்
போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருப்பார். அதே போல யானைகளை படம்
எடுக்கவேண்டும் என்றால் அலாதியான ஆர்வத்துடன் கிளம்பிவிடுவார்.
யானைகளை
ஒரு குழுவாக படம் எடுக்கவேண்டும் என்பதற்காக கடந்த ஆறு மாதகாலமாக முயற்சி
செய்து ஒரு இடத்திற்கு சென்றார். போன இடத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக
இரண்டு யானைகளுக்குள் கடுமையாக சண்டை வர அதனை படம் எடுத்து
திரும்பியிருக்கிறார். அந்த படங்களை வரிசையாக போட்டோ கேலரியில்
பார்க்கலாம்.
யானைகளை பற்றி நிறைய தகவல் சொல்கிறார்.
முதலில் ஓரு
இடத்தில் யானைகள் நன்றாக இருக்கிறது என்றால் அங்கு காடு நன்றாக இருக்கும்,
காடு எங்கு நன்றாக இருக்கிறதோ அங்கு நாடும் நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை
எப்போதுமே குற்றம் சொல்லக்கூடாது, அதன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம்
உண்டு. அதனை புரிந்து கொள்ளாமல், அதன் வழித்தடத்தில் வீடுகளையும்,
ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் கட்டிவிட்டு, யானை வருகிறது, யானை வருகிறது
என்றால், அது பல நூறு ஆண்டுகளாய் வந்து போய்க் கொண்டிருந்த வழித்தடத்தில்
வராமல் வேறு என்ன செய்யும். வழித்தடம் மாறும் போதும், உணவிற்கு வழியில்லாத
போதும் வயலுக்கு வருகிறது, ஊருக்குள் புகுகிறது.
சினிமாக்களில்
காட்டுவது போல யானைகள் மோசமான மிருகம் அல்ல, தன்னை சீண்டுபவனையும்,
துன்புறுத்துபவனையும்தான் யானை தாக்குமே தவிர மற்றபடி அது சாதுவான
பிராணியே. பொதுவாக யானைக்கு மதுவின் வாடையே ஆகாது, குடித்துவிட்டு
பக்கத்தில் வருவது பாகனே ஆனாலும் பொறுத்துக் கொள்ளாது. அதே நேரம் குட்டி
போட்டு இருக்கும் நேரத்தில் யாராக இருந்தாலும் குட்டியிடம் நெருங்கவிடாது,
அந்த அளவிற்கு பாசம் அதிகம். மனிதர்களைப் போல குட்டிக்கு தும்பிக்கை வழியாக
மூச்சு காற்றை செலுத்தி பிழைக்க வைத்த நிகழ்ச்சி எல்லாம் உண்டு. பத்து
கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ளவைகளை மோப்பம் பிடித்தே அறிந்து
கொள்ளும். யானைக்கு கழுத்து பகுதி கிடையாது என்பதால், திரும்பிப்
பார்க்கவேண்டும் என்றால் அது உடம்பையே திருப்பித்தான் பார்க்குமே தவிர
,கழுத்தை மட்டும் திருப்பிப்பார்க்காது. அதே போல யானைக்கு நேர் பார்வைதான்
உண்டு, அது விரட்டும் போது நேர் பார்வையில் படாமல் பக்கவாட்டில் தப்பி
ஒடினாலே பிழைத்துக் கொள்ளலாம்.
சினிமாக்களில் காட்டுவது போல கும்கி
யானையை தனியார் வளர்க்க முடியாது. அரசாங்கத்தின் வனத்துறையினர்தான்
வளர்க்கமுடியும். காட்டில் இருந்து நாட்டிற்குள் வரும் யானையை
விரட்டியடிக்க பயிற்சியளிக்கப்பட்ட யானையே கும்கி. குட்டியில் இருந்தே
சரியான யானையை அடையாளம் கண்டு அதனை கடுமையான பயிற்சி கொடுத்து
வனத்துறையினர் வளர்த்து வருவார்கள். இந்த கும்கி யானை கூட பெண்
யானையைத்தான் விரட்ட முடியும், இதைவிட உயரமான "டஸ்கர்' என்று சொல்லக்கூடிய
பத்து அடி உயரத்திற்கு மேல்பட்ட ஆண் யானையைக் கண்டால் கும்கி யானையே
ஒடிவந்துவிடும், அந்த மாதிரி யானையை இரண்டு கும்கி யானைகளைக் கொண்டுதான்
விரட்டுவார்கள்.
இது போல இன்னும் பல சுவராசியமான யானைகள் பற்றிய
விஷயங்களை அறிந்து கொள்ள, அதனை படம் எடுக்கும் வித்தையை தெரிந்து கொள்ளவும்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9363210668.
- எல்.முருகராஜ்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by செந்தில் Thu Feb 07, 2013 9:19 pm

கைதட்டல் நன்றி அச்சலா கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 10:59 pm

ரசிகர்களின் அன்பிற்கு எதுவும் ஈடாகாது : கமல்


சென்னை : ரசிகர்களின் பேரன்பிற்கு எதுவும் ஈடாகாது என்று நடிகர்
கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம், இன்று தமிழ்நாட்டில்
வெளியானது. திரைப்படம் குறித்து சென்னையில் கமல்ஹாசன் பத்திரி‌கையாளர்களை
சந்தி்ததார். அப்போது அவர் கூறியதாவது, படத்தை‌ வெற்றி பெறச் செய்த
ரசிகர்களுக்கு முதல் நன்றி. படம் எதிர்பார்க்காத அளவில் வெற்றி
பெற்றுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் ரசிகர்கள‌ே ஆவர். அவர்களின்
பேரன்பிற்கு முன் எதுவும் ஈடாகாது. ரசிகர்களும், தமிழக மக்களும் காட்டிய
அன்பில், நான் பாடம் கற்றேன். நான் கடனாளியாகி விடுவேன் என்பதை பொறுக்க
முடியாத எனது ரசிகர்கள், தங்களது வீட்டுச்சாவி, பத்திரங்களை எனக்கு
அனுப்பினர். இதன்மூலம் என் மீது அவர்கள் வைத்துள்ள பேரன்பு
வெளிப்பட்டுள்ளது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு
பங்காளியாக செயல்பட்டு துயர் துடைக்க உதவிய ஊடகங்களுக்கும் தனது நன்றியை
தெரிவி்ததுக் கொள்வதாக அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில்
சந்திப்பேன் என்றும், விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கி
விட்டதாக அவர் மேலும் கூறினார்.




சுட சுட செய்திகள்...அச்சலா Blank




-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 10:59 pm

பெண்ணை தாக்கி நகை கொள்ளை

ஆத்தூர்: ஆத்தூரில் சைக்கிளில் வந்த பெண்ணை தாக்கி ந‌கையை
கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், ஆத்தூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள.
சேலம் மாவட்டம் ஆத்தூர், தேவியா குறிச்சியைச்சேர்ந்த நிஜாமுதீன், மனைவி
ரவுலத் (29). இவர் சைக்கிளில் அருகே உளள வங்கிக்கு பணம் கட்ட சென்றார்.
அப்போது பின்னால் பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ரவுலத்தை தாக்கிய
கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்றனர். தலைவாசல்
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





சுட சுட செய்திகள்...அச்சலா Blank-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 11:00 pm

மோடிக்கு ஆதரவு ஏன்? : விஹெச்பி விளக்கம்
அலகாபாத் : லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர்
நரேந்திர மோடியை பரிந்துரைப்பதற்கான விளக்கத்தை, விஷ்வ இந்து பரிஷத்
அளித்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பு தெரிவித்துள்ளதாவது சமீபத்தில்
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடி, 4வது முறையாக
முதல்வர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நரேந்திர மோடி, தேர்தலின் போது,
முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில், அம்மதத்தினர் யாருக்கும்
போட்டியிடுவ‌தற்கு வாய்ப்பு கொடுக்காமலேயே, மாபெரும் வெற்றியை
பெற்றுள்ளார். இதன்மூலம், அவர் மீது அனைத்து தரப்பு மக்களுக்கும்
நன்மதிப்பு உள்ளது புலனாகிறது. இந்த காரணத்தினாலேயே, மோடியை பிரதமர்
வேட்பாளர் பதவிக்கு பரிந்துரைப்பதாக விஹெச்பி தெரிவித்துள்ளது.
-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 11:00 pm

பாலம் இடிந்து மூவர் பலி : 3 பேர் கைது


மும்பை : மும்பையில் பாலம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள்
பலியானதைத் தொடர்ந்து, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை, மும்பை
போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பை சர்வ‌தேச விமான நிலையம் அருகே புதிய
பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு, பாதி
நிலையில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒருபகுதி திடீரென்று இடிந்து
விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ
இடத்திலேயே பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். போலீசார் இதுகுறித்து
வழக்குபதிவு செய்து விசாரணையை துவக்கினர். பால கட்டுமான பணியை செய்து வரும்
கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 11:01 pm

மோடி எனது நண்பர் : மோகன் பகவத்


அலகாபாத் : குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, எனது நண்பர் என்று
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். அலகாபாத்தில்
பத்திரிகையாளர்களை, மோகன் பகவத் சந்தித்தார். பிரதமர் ‌வேட்பாளர் பதவிக்கு
மோடியை தாங்கள் பரிந்துரைப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு,
மோடி எனது நண்பர். நான் அரசியல்வாதி அல்ல. நான் பிரதமர் பதவிக்கு மோடிய‌ை
பரிந்துரைப்பதில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது என்று கூறினார். பாரதிய
ஜனதா கட்சியில் உள்ள பல முன்னணி தலைவர்களும், மோடியை பிரதமர் வேட்பாளர்
பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.
-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 11:01 pm

பேஸ்புக்கிலிருந்து வெளியேற மகளுக்கு கப்பம் கட்டிய தந்தை

சிட்னி : சமூகவலைத் தளமான பேஸ்புக்கிலிருந்து வெளியேற, தனது மகளுக்கு
200 டாலர்கள் அவரது தந்தை வழங்க உள்ளது, இளையதலைமுறையினரிடையே, சமூக
வலைத்தளங்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் இணையத‌ளத்தில்
வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போஸ்டன் எனர்ஜி
நிறுவன உயர் அதிகாரியாக இருப்பவர் பால் பையர், இவரது விடலை வயது மகள் ரசேல்
பையர், எந்நேரத்திலும், எப்போதும் பேஸ்புக்கிலேயே மூழ்கியிருப்பார். அவள்
பேஸ்புக்கிலிருந்து வெளியேற, 200 டாலர்கள் வர தயாராக இருப்பதாக தந்தை
கூறியதையடுத்து, சட்டப்பூர்வ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி, வரும்
ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக 50 டாலர்களும், ஜூன் மாதத்தில், மீதமுள்ள
150 டாலர்களும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Thu Feb 07, 2013 11:02 pm

உலகின் மிகப்‌பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு


லண்டன் : 17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்‌பெரிய முதன்மை
எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர்
கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4
மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by பூ.சசிகுமார் Fri Feb 08, 2013 12:36 am

பயனுள்ள தொகுப்பு சூப்பர்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by மகா பிரபு Fri Feb 08, 2013 9:16 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ஸ்ரீராம் Fri Feb 08, 2013 9:35 am

நன்றி அச்சலா. பயனுள்ள பகிர்வு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Fri Feb 08, 2013 11:16 am

திருஆவினன்குடி கோயிலுக்கு வைகாசியில் கும்பாபிஷேகம்


பழநி:முருகனின் மூன்றாம் படை வீடாகிய பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு,
வரும் வைகாசியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோயிலில்
கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், ராஜகோபுரம் உள்ளிட்ட 5
கோபுரங்கள், மடப்பள்ளி, தரைத்தம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்து
வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் வைகாசியில் நடைபெற உள்ளது.
"ஊர்கோயில்' என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில்
கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 2 கோடியில் திருப்பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு
தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணை ஆணையர் பாஸ்கரன் கூறினார்.

-தினமலர்
சுட சுட செய்திகள்...அச்சலா Blank
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Fri Feb 08, 2013 11:16 am

மருத்துவமனை மூடல்; நோயாளிகள் ஏமாற்றம்



சென்னை: முறையான அறிவிப்பின்றி, பல்நோக்கு மருத்துவமனை மூடப்பட்டதால்,
சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை, அரசினர்
தோட்டத்தில், கடந்த மாதம் 30ம் தேதி, பல்நோக்கு மருத்துவமனையின்
புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செயல்பட
துவங்கிய இம்மருத்துவமனை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால
உத்தரவையடுத்து, நேற்று மூடப்பட்டது. மருத்துவமனை மூடப்பட்டதற்கான காரணம்
அறிவிக்கப்படாததால், அரசு அறிவிக்காததால், நேற்று, பல்நோக்கு
மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வந்த, 15க்கும் மேற்பட்ட நோயாளிகள்
ஏமாற்றம் அடைந்தனர்.


-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by ராகவா Fri Feb 08, 2013 11:16 am

ஜாம்பியாவில் சாலை விபத்து ; 53 பேர் பலி



லுசாகா : ஆப்ரிக்க நாடான, ஜாம்பியாவில், பஸ்சும், லாரியும் நேருக்கு நேர்
மோதியதில், 53 பேர் பலியாயினர். ஜாம்பிய தலைநகர் லுசாகாவிலிருந்து, 100
கி.மீ., தூரத்தில், தபால் துறையின் பேருந்தும், லாரியும், நேற்று, ஒன்றோடு
ஒன்று வேகமாக மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில், 53 பேர்
பலியாயினர். பஸ்சில், 70 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள்
நடக்கின்றன.


-தினமலர்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

சுட சுட செய்திகள்...அச்சலா Empty Re: சுட சுட செய்திகள்...அச்சலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum