Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள்
Page 1 of 1 • Share
பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரக’ ஒத்திகை : 520 நாள் தனிமையை ஆரம்பித்தனர் 6 விண்வெளி வீரர்கள்
[LINK=/images/stories/tamilcnn/june-2010/tech/science-specials-52.jpg] [/LINK]
மாஸ்கோ:ராட்சத உலோக கூண்டு; அதில் ஒரு பகுதியில் ‘மாதிரி’ விண்கலம்; இன்னொரு பகுதியில் செவ்வாய் கிரக சூழ்நிலை; மற்றொகு பகுதியில், வீரர்கள் தங்கும் இடம். இது தான் ரஷ்யாவில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக் கூடம்.
* இந்த கூண்டில் நுழைந்த ஆறு விண்வெளி வீரர்களுக்கும் 24 மணி நேரமும் தனிமைதான். சூரியனை பார்க்க முடியாது. 10 நாட்களுக்கு ஒருமுறை வேண்டுமானால் குளிக்கலாம். வெளியில் வரவே முடியாது.
* உள்ளே புகும்போது அளிக்கப்பட்ட தண்ணீர், ‘கேன்’களில் அடைக்கப்பட்ட உணவுகளை தான் கடைசி நாள் வரை சமமாக பிரித்து சாப்பிட வேண்டும்.
* தண்ணீரையும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.
* பொழுது போக்குக்கு புத்தகம் படிக்கலாம்; கம்ப்யூட்டரில் வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.
* வெளியில் இருப்பவர்களை இ&மெயில் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். தினமும் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளியில் உள்ள விஞ்ஞானிகளுக்கு இதன் மூலமாக அவர்கள் தெரிவிப்பார்கள்.
அடைக்கப்பட்ட கூண்டுக்குள் இப்படி எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் தெரியுமா? 520 நாட்கள். யப்பா... இவ்ளோ நாளா என்று நீங்கள் வியக்கலாம். கிட்டத்தட்ட பூமியில் ஒரு ‘செவ்வாய் கிரகம்’ உருவாக்கப்பட்டு, அதற்கு சென்று வருவது போல, விண்வெளி வீரர்களை வைத்தே ஆய்வு நடத்தப்படுவது வியப்பானது தானே! நெருங்கவே முடியாத செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் சென்று, திரும்பி வர முடியுமா என்று பார்க்கவே, புதுமையான முறையிலான இந்த சோதனை ரஷ்யாவில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கழகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டத்துக்கு ‘மார்ஸ் & 500’ என்று பெயர். மாஸ்கோவில் உள்ள மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வு மையத்தில் இந்த திட்டத்துக்கான எல்லா ஒத்திகையும் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய அமைப்புடன், சீனா, ரஷ்ய அமைப்புகளும் ஒத்துழைக்கின்றன. செவ்வாய் கிரகத்துக்கு போய், ஆய்வு செய்து திரும்பி வர 520 நாட்கள் பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகம் தான், சூரிய மண்டலத்திலேயே நெருங்க முடியாத கிரகம். அதற்கு சென்று திரும்ப முடியுமா?
அதற்கு செல்வதற்காக விண்கலத்துக்குள் நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது உடல் மற்றும் மன ரீதியாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?அந்த சாகச பயணத்தை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களால் அதை தாக்குப் பிடிக்க முடியுமா? இவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே பூமியிலேயே ஒரு ‘செவ்வாய் கிரக பயண ஒத்திகை’ நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, மாஸ்கோவில் உள்ள மையத்திலேயே உலோக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளே நுழைந்து விட்டால், செவ்வாய் கிரகத்துக்கு போகும் மனோநிலை வந்து விடும்.
ஒரு பகுதியில் செவ்வாய் கிரக விண்கலம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம், படுக்கை அறை, கம்ப்யூட்டர் அறை, சாப்பாடு இருப்பு வைக்கும் அறை எல்லாம் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த செவ்வாய் பயணத்துக்கான வீரர்கள் ஒத்திகையில் ஈடுபடுவதற்காக விண்கலம் போன்ற மூடிய கூண்டுக்குள் சென்று விட்டனர்.
வீரர்கள் யார் யார்?
1. பிரான்சின் ரோமெய்ன் சார்லஸ்; வயது 31. மெக்கானிக்கல் இன்ஜியர்.
2. சுக்ரோவ் ரஸ்டமோவிச் கம்லோவ் (ரஷ்யா); வயது 37. மருத்துவ நிபுணர். ராணுவ சர்ஜன்.
3. அலெக்சி செர்கவிச் சிடேவ் (ரஷ்யா); வயது 38. ராணுவ, கடற்படை படிப்பில் பட்டம் பெற்றவர்.
4. அலெக்சாண்டர் எக்ரோவிச் ஸ்மோலிவ்ஸ்கி; 32 வயதான இவர் மனோதத்துவ நிபுணர்.
5. இத்தாலியை சேர்ந்த டீகோ உர்பினா; 27 வயதான இவர், எலக்ட்ரானிக்ஸ் நிபுணர்.
6. யு வாங் (சீனா), வயது 27; வானியல் நிபுணர்.
முடியாவிட்டால் விலகலாம் :
1960ம் ஆண்டில் இருந்தே செவ்வாய் கிரகப் பயணத்துக்கான சோதனை நடக்கிறது. ஒத்திகை பயண ஆய்வில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்கள் அனைவரும், 520 நாள் சோதனையை முடித்து விட்டுதான் வெளியே வருவோம் என கூறினர். ஒருவேளை, இந்த ‘நரக வேதனை’யை தாங்க முடியாதவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆய்வில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
செவ்வாயில் நடக்கலாம் :செவ்வாயில் நடக்க முடியுமா? ஒத்திகையில் இதுதான் முக்கிய பரிசோதனை. செவ்வாய் எப்படியிருக்கும், அதில் நடக்க முடியுமா என்பதை கற்பனை செய்து அதற்கேற்ப ஒத்திகை நடத்தப்படுகிறது. அதற்காக, செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பும், பெரிய மணல் திட்டும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கம்மியா தான் எல்லாம்... :கூண்டில் அடைக்கப்பட்ட விண்வெளி வீரர்களுக்கு தனி படுக்கை உண்டு.
விண்கலத்தில் போகும் போது தவிர, மற்ற நேரங்களில் தனியாகத்தான் இருக்க வேண்டும். ‘கேன்’ உணவை மிக குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். அதுபோல தண்ணீரையும் குறைவாக செலவழிக்க வேண்டும். அப்போது உடல் இளைத்தாலும் கவலையில்லை.

Similar topics
» ஏப்ரலில் பூமியில் விழும் சீன விண்வெளி ஆய்வு நிலையம்
» ஒத்திகை பார்த்துக்குறோம்...
» இந்த நாள் இனிய நாள், -இன்றைய ஆன்மிகம்
» மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்
» "மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்"

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum