தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நாள்தோறும் நாலடியார்"

Page 8 of 25 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25  Next

View previous topic View next topic Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Apr 19, 2013 5:07 pm

First topic message reminder :

நாலடியார்
"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Naaladiyar
கடவுள் வாழ்த்து

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.


வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக! (வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து)


Last edited by முழுமுதலோன் on Mon Oct 28, 2013 9:23 am; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Wed Sep 25, 2013 10:38 am

உண்மை, உண்மை....நன்றி! நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Sep 26, 2013 9:30 am

125பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.

(பொ-ள்.) பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும் - சான்றோர் நட்பு பிறைத்திங்களைப் போல ஒவ்வொரு நாளும் முறைமுறையே வளரும்; சிறியார் தொடர்பு வான் ஊர் மதியம்போல் வைகலும் வரிசையால் தானே தேயும் - கீழோர் உறவு வானத்தில் தவழுகின்ற முழுத் திங்களைப்போல ஒவ்வொரு நாளும் முறையாகத் தானே தேய்ந்தொழியும்.

(க-து.)
 சிற்றினத்தாரோடு சேர்தற்கு அஞ்சுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Sep 26, 2013 10:20 am

நன்றி!"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Icon_smile
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Sep 27, 2013 10:01 am

126 சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து.

நீ சிலரை நற்குணம் உடையவர் என மிகவும் மதித்து நட்புக் கொள்கிறாய்! அப்படி நீ நட்புக் கொண்ட அவர்களிடம் உண்மையிலேயே நற்குணம் இல்லையானால், அவர்களைச் சார்ந்தவனே! உனக்கு நேரும் துன்பத்தினை ஓர் உவமையால் கூறுகிறேன், கேட்பாயாக! அது, ஒருவன் வாசனை மிக்க சந்தனம் இருக்கிறதென நினைத்துச் செப்பைத் திறந்தபோது உள்ளே பாம்பைப் பார்த்தது போலாம்! (ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் என்பது கருத்து).
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Fri Sep 27, 2013 10:27 am

ஆராயாமல் நட்புக் கொள்ள அஞ்ச வேண்டும் சூப்பர் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Sep 28, 2013 9:11 am

127 யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேருந் துணைமை யுடையவர் - சாரல்
கனமணி நின்றிமைக்கும் நாட!கேள்; மக்கள்
மனம்வேறு செய்கையும் வேறு.

(பொ-ள்.) யார் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் துணைமை உடையவர் - எவரொருவர், ஒருவரது உள்ளத்தைத்தேர்ந்து துணியும் ஆற்றலுடையவர்?, சாரல் கன மணி நின்று இமைக்கும் நாட கேள் - மலைச்சாரலில் பெரிய மாணிக்க மணிகள் கிடந்து ஒளிவிடும் நாடனே கேள்; மக்கள் மனம் வேறு செய்கையும் வேறு - உலகத்தில் மக்களின் உள்ளமும் வேறு செய்கையும் வேறாயிருக்கின்றனவே!

(க-து.) நட்பாராய்தலிலும் பலகால் பலவழியால் ஆராய்ந்து துணிதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sat Sep 28, 2013 9:33 am

நன்று! நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Sep 29, 2013 10:13 am

128 உள்ளத்தான் நள்ளா துறுதித் தொழிலராய்க்
கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை -தெள்ளிப்
புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
மனத்துக்கண் மாசாய் விடும்.

(பொ-ள்.) உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை அகத்தால் நேயங்கொள்ளாது, ஆனால் உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளை மேலே உடையவராய்க், கரவினால் நேயஞ் செய்தவரது மிக்க நட்பு! புனல் தெள்ளிநின்று செதும்பு அலைக்கும் பூ குன்ற நாட - நீர் தெளிவுடைய தாய் ஒழுகிச் சேற்றை அலைத்தொதுக்கும் அழகிய மலைகள் விளங்குகின்ற நாட்டையுடையவனே!, மனத்துக்கண் மாசாய்விடும் - என்றும் மனத்தில் வேதனை தருங் குற்றமாய் முடியும்.

(க-து.) மேலோடு செய்யும் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Sun Sep 29, 2013 10:18 am

நன்றி!"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Icon_smile
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Sep 30, 2013 7:58 am

129 ஓக்கிய ஒள்வாள்தான் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையுஞ் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு.

(பொ-ள்.) ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கைப்பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஓங்கிய தனது ஒளிமிக்க வாள் தன் பகைவர் கையில் அகப்பட்டு விட்டால். அது தனது மனவலிமையைக் கெடுப்பதும் திண்ணமாகும்; ஆக்கம் - அவ்வாறே தீயோர் கைப்பட்ட தனது செல்வம் இருமையும் சென்று சுடுதலால் - இம்மை மறுமை என்னும் தன் இருமைப் பயன்களையும் தொடர்ந்து கெடுத்தலால், நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு - அத்தகைய மூடர்களிடத்தினின்று நட்பு நீங்குதல் அறச்செய்கையேயாகும்.

(க-து.) கல்லாத முடர் சேர்க்கையினின்று அஞ்சி விலகுதல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Muthumohamed Mon Sep 30, 2013 8:25 am

நல்ல தொடர் பதிவு பகிர்வு நன்றி தொடருங்கள் ............
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Mon Sep 30, 2013 9:21 am

ம்....அஞ்சி விலகுதல் வேண்டும்.புன்முறுவல் நன்றி! நன்றி!
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Tue Oct 01, 2013 8:10 am

130 மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.

(பொ-ள்.) மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென்று ஏங்கி - மக்கட்கு நல்வாழ்க்கை அமையும் பொருட்டு மனம் ஏங்கி வாழ்க்கைப்பற்றை இன்னும் விடமாட்டாய்; எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே - நெஞ்சமே, அதற்காக நீ எத்தனை ஊழி வாழவிருக்கின்றனையோ? எனைத்தும் சிறுவரையேயாயினும் செய்தநன்றல்லால் உறுபயனோ இல்லை உயிர்க்கு - சிற்றளவாயினும் செய்த அறச் செயலன்றி உயிர்க்கு அடையும் பயன் வேறு சிறிதும் இல்லை.

(க-து.) செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Tue Oct 01, 2013 8:39 am

செய்யும் நல்வினைகளே உயிரோடு தொடர்ந்து வரும்...உண்மைதாங்க...நன்றி! நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Wed Oct 02, 2013 9:14 am

கல்வி

பொருட்பால்
[இது பொருளை உணர்த்தும் பகுதி; அறத்தைப்போல் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றற்கும் நேரே காரணமாதலின்றித், துய்த்தலானும் வழங்குதலானும் முறையே இம்மை மறுமை இரண்டற்கு மட்டும் ஓராற்றால் காரணமாதல் பற்றி, இப் பொருட்பால் அறத்துப்பாலை அடுத்து நின்றது.]
14. கல்வி
[கற்றற்குரிய நூல்களைக் கற்றல், பொருளைத் தேடுதற்கும் தேடிய பொருளைப் பயன்படுத்துதற்கும் கல்வி காரணமாதலின் இதுபொருட்பாலின்கண் அமைந்தது.]


131 குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


(பொ-ள்.) குஞ்சி அழகும் கொடுதானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல -மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும்ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும்மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு -நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம்அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால்மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

(க-து.) நல்லொழுக்கம் பயக்கும்கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Wed Oct 02, 2013 1:45 pm

நன்று! நன்று!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Thu Oct 03, 2013 7:33 am

132 இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

(பொ-ள்.) இம்மை பயக்கும் -நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்;ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால்குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் - தம்மைஅறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம்உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல்இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம்கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து -எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல்அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம்காண்கின்றிலேம்.

(க-து.) கல்வியே, எல்லா வாழ்க்கையின்னல்கட்குங் காரணமான அறியாமையாகியமயக்கத்தைத் தீர்க்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Thu Oct 03, 2013 10:19 am

 கல்வியே, அறியாமையாகியமயக்கத்தைத் தீர்க்கும்.சூப்பர் நன்றி! நன்றி!"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Fri Oct 04, 2013 7:57 am

133 களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;
கடைநிலத்தோ ராயினுங் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்.

(பொ-ள்.) களர் நிலத்துப் பிறந்தஉப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின்விழுமிதாக் கொள்வர்-உவர் நிலத்தில் தோன்றியஉப்பைப் பெரியோர் விளைநிலத்தில் உண்டாகும்நெல்லினும் மிக்க பயனுடையதாகப் பயன்படுத்துவர்;கடைநிலத்தோராயினும் கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும் - ஆதலால், கீழ்க்குடியிற்பிறந்தோராயினும் கற்றறிந்தோரைமேற்குடியாரினும் மேலிடத்து வைத்து மதித்தல்உண்டாகும்.

(க-து.) கல்வி, மாந்தரைஉயர்வகுப்பாரினும் மேலவராக மதிக்க வைக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by ஸ்ரீராம் Fri Oct 04, 2013 8:58 am

நல்லதொரு பகிர்வு அண்ணா. நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Fri Oct 04, 2013 1:23 pm

நன்றி! நன்றி!"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sat Oct 05, 2013 9:39 am

134 வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச்செய்வன
விச்சைமற் றல்ல பிற;

(பொ-ள்.) வைப்புழிக்கோட்படா -வைத்த இடத்திலிருந்து பிறரால் கரவிற்கொள்ளப்படாது; வாய்த்து ஈயின் கேடு இல்லை -நன்மாணாக்கர் வாய்த்து அவர்க்குக் கற்பிக்கநேருமானால் அதனால் அழிதல் இல்லை; மிக்கசிறப்பின் அரசர் செறின் வவ்வார் - தம்மினும்மிக்க செல்வாக்கினால் அரசர் வெகுளல் நேரினும்கவர இயலாதவராவர்; எச்சம் என ஒருவன் மக்கட்குச்செய்வன விச்சை மற்று அல்லபிற - ஆதலால்; வைப்புஎன ஒருவன் தன் மக்கட்குத் தேடி வைக்கத்தக்கவைகல்வியே, பிற அல்ல.

(க-து.) கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Sun Oct 06, 2013 9:50 am

135 கல்வி கரையில! கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

(பொ-ள்.) கல்வி கரை இல -கல்விகள் அளவில்லாதன; கற்பவர் நாள் சில -ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சிலவாகும்; மெல்லநினைக்கின் பிணி பல - சற்று அமைதியாகநினைத்துப்பார்த்தால் அச் சில வாழ்நாட்களில்பிணிகள் பலவாயிருக்கின்றன; தெள்ளிதின்ஆராய்ந்து அமைவுடைய கற்ப நீர் ஒழியப் பால்உண்குருகின் தெரிந்து - நீர் நீங்கப் பாலைஉண்ணும் பறவையைப்போல அறிஞர்கள் பொருத்தமுடையநூல்களைத்தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ளஆராய்ந்து கற்பார்கள்.

(க-து.) தக்க மெய்ந்நூல்களையேதெரிந்து தெளிவாகக் கற்றல் வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by முழுமுதலோன் Mon Oct 07, 2013 10:21 am

136 தோணி யியக்குவான் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய்
அவன்துணையா ஆறுபோ யற்றேநூல் கற்ற
மகன்துணையா நல்ல கொளல்.

(பொ-ள்.) தோணி இயக்குவான்தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றுஇகழார் அவன் துணையா ஆறுபோயற்று - படகுசெலுத்துவோன் பழைமையான சாதிகளில்,நினைக்குமிடத்துக் கடைப்பட்ட சாதியைச்சேர்ந்தவனென்று புறக்கணியாராய் அவன் துணையாகஆற்றைக் கடந்துபோன தன்மையை ஒக்கும்; நூல்கற்றமகன் துணையா நல்ல கொளல் - அறிவு நூல்கள் கற்றபெருமகனொருவன் துணையாக மெய்ப்பொருள்களைஅறிந்து கொள்ளுதல் என்க.

(க-து.) கல்விக்கு முன் பிறப்பின்உயர்வு தாழ்வு கருதத்தக்கன அல்ல.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by sawmya Mon Oct 07, 2013 6:26 pm

நன்றி! நன்றி! நன்றி!"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Icon_smile 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

"நாள்தோறும் நாலடியார்" - Page 8 Empty Re: "நாள்தோறும் நாலடியார்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 25 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 25  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum