தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue May 14, 2013 10:55 am

First topic message reminder :

ஒரு தமிழனின் சாதனை

ஒரு தமிழனின் சாதனையைப் பார்த்து இன்று கோக கோலா, பெப்சி நிறுவனங்கள் பயப்படுகிறது.

பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.

pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடு போடுகிறார்கள்.

உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி, கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 936834_512343052158471_1795731259_n

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்

***********************************


ஆன்லைன் காயலாங்கடை!

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Logo12

சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.

இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர்.

அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.

இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.

இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு –http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.

***********************************

எனக்கு இல்லை..அது எனக்கில்லை....!

அமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...அதை உடைக்க சிலர் முயற்சிப்பதை படத்தில் காணலாம்..

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 577495_512851985440911_2082560099_n

நன்றி முகநூல்

செய்தி கதம்பம் தொடரும்...


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்கள் வழியே உங்கள் நண்பர்களுக்கும் அறிய தாருங்கள் சகோதர சகோதரிகளே.


ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு Mon Sep 09, 2013 9:02 pm

அமர்க்ளத்தில் ஒரு குறைபாடு உள்ளது. சொன்னால் பரிசு தருவீர்களா? நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 10:38 pm

நன்றி பகிர்வுக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue Sep 10, 2013 11:10 am

மகா பிரபு wrote:அமர்க்ளத்தில் ஒரு குறைபாடு உள்ளது. சொன்னால் பரிசு தருவீர்களா? நக்கல்
அட்மின் இப்படி சொன்னா என்ன செய்ய முடியும். மண்டையில் அடி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு Tue Sep 10, 2013 4:45 pm

அட்மின் இப்படி சொன்னா என்ன செய்ய முடியும்
 பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Fri Oct 04, 2013 9:50 am

மளிகைக் கடைக்காரர் நடத்தும் பள்ளிக்கூடம்

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 1239855_616062458444237_878295645_n

கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது.

“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”

அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிரமணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என்கிற பாலுஜி, இரு ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் ராதாகிருஷ்ணன். இன்னொருவர் அகிலா.

“ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே மூத்தவர். இங்கே படிச்சவர். சுகாதாரத் துறையில தஞ்சாவூர் பக்கத்துல உள்ள வல்லத்துல வேலை செய்றார். தினமும் 100 கி.மீ. பயணம் செஞ்சாலும் இங்கே ஒரு நாள் விடாம வந்துபோதிக்கிறார். அகிலா இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே சின்ன பொண்ணு. ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டே, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இந்தி கத்துக்கொடுக்கிறார். இங்குள்ள 38 ஆசிரியர்களும் இப்படித்தான்” என்கிற பாலுஜி அடுத்தடுத்து சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை.

“இங்கே வர்ற நிறைய பேர் ஏதோ காசு வாங்காம கல்வி கொடுக்குறதுதான் பெரிய காரியம்னு நெனைக்குறாங்க. அது இல்லை. இங்கே நாங்க எதைக் கல்வியா கொடுக்குறோம்கிறதுதான் முக்கியம்னு நாங்க நெனைக்கிறோம். பணம்தான் உலகம்னு ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்லிக்கொடுக்குறோம். அறம்தான் உண்மையான வாழ்க்கையோட ஆதாரம்னு சொல்லிக்கொடுக்குறோம். இங்கே படிச்ச ஒரு மாணவர் சுங்கத் துறையில ஒரு பெரிய பதவிக்கு, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சுப் போனார். கொஞ்ச நாள்ளேயே அந்த வேலை வேணாம்னு சொல்லி ஒதுங்கிட்டார். காரணம் என்ன தெரியுமா? லஞ்சம் வாங்காம, லஞ்சம் வாங்குறதைத் தடுக்காம அங்கே வேலை பார்க்க முடியாதுங்கிற சூழல். எங்க பிள்ளைங்க ஒருபோதும் தவறான பாதையில போக மாட்டாங்க. பணத்துக்குப் பின்னாடி ஓட மாட்டாங்க. இதைச் சொல்லிக்கொடுக்குறதுதான் முக்கியம்னு நெனைக்குறேன்” என்று சொல்லும் பாலுஜி எங்கிருந்து இந்த அறவுணர்வைப் பெற்றார்? எப்படி அதை அணையாமல் காக்கிறார்?

பாலுஜியின் பதில்: காந்தி. “செம்பியன்மாதவிங்கிற குக்கிராமத்துல உள்ள காந்தியடிகள் நடுநிலைப் பள்ளிதான் எனக்குள் காந்தியை விதைச்சுது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துன தாளாளர் ஆர்.என்.ராமசாமியும் ஆசிரியர் வி.ராமச்சந்திரனும் படிப்பைவிட முக்கியம் அறம்னு சொல்லி எங்களை வளர்த்தாங்க. நல்ல விஷயங்களை அடுத்தவங்களுக்குப் போதிக்கிறதைவிட முக்கியம், நாம பின்பற்றுவதுனு சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ அவங்க எங்களுக்குச் சுட்டிக்காட்டின வழிகாட்டி காந்தி. தான் உண்மைனு நினைச்ச அறத்துக்காகக் கடைசிவரைக்கும் வாழ்ந்தார் காந்தி. அந்த வைராக்கியம் வந்துடுச்சுன்னா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அறம் நம்மையும் காப்பாற்றும்!”

நன்றி - சமஸ் @ தி இந்து
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by mohaideen Fri Oct 04, 2013 1:26 pm

உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கும் செய்தி.

ஒரு பள்ளிக்கூடம் நடத்தினால் எவ்வளவு வருமானம் ஈட்டலாம் என்று கணக்கு போட்டு கல்வியை தொழிலாக நடத்தும் இக்காலத்தில் இவரைப்போன்றுள்ளவர்களை என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது. வார்த்தை கிடைக்கவில்லை. இருந்தாலும் வாழ்த்துகிறோம். கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 


இவர்களைப்பார்த்து மற்றவர்கள் திருந்தினால் நாட்டில் அனைவர்களுக்கும் கல்வி கிடைக்குமே
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue Oct 08, 2013 6:48 pm

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 1377000_641214712590398_1872573837_n

பாராட்டுக்குரியவர் !!!!!!!!!!!!!

அரசு கொடுக்கும் பென்ஷன் பணத்துக்காக, ஏழு ஆண்டுகளாக, மின்வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர், தொடர்ந்து பணியாற்றி வருவது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை பெற்றுள்ளது.

அதற்கு அவர் சொன்ன வார்த்தைகள்

"பணியில் இருந்த போது, அரசு சம்பளம் கொடுத்தது; ஓய்வு பெற்றதும், பென்ஷன் கிடைக்கிறது. சாப்பாடு போடும் அதை, சும்மா இருந்து பெற மனமில்லை என்பதால், அதே வேலையை தொடர்ந்து செய்கிறேன். ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு வருவது, சலிப்பை ஏற்படுத்தவில்லை. என் உடம்பில் தெம்பு உள்ளவரை, பணிக்கு வருவேன்; சாகும் வரை வேலைக்கு வர ஆசை தான். அதற்கு கடவுள் தான் அருள்புரிய வேண்டும். ஓய்வுக்கு பின் வேறு பணிகளுக்கு அழைப்பு வந்தது; ஆனால், அதை நான் ஏற்கவில்லை. திட்டமிட்டு வாழ்க்கை நடத்தினால், சிரமம் வராது."

திருச்சி, மல்லிகைப்பூ அக்ரஹாரத்தில் வசிப்பவர், கோபாலன், 65; இவரது மனைவி ரமா. இவர்களது இரு பெண்களுக்கும், திருமணம் ஆகிவிட்டது. 1972ல், தமிழக மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக, மயிலாடுதுறையில் பணியில் சேர்ந்தார். கடந்த, 1976ல், உதவியாளராக பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 1982ல், உதவி வணிக ஆய்வாளராக, திருச்சி, மன்னார்புரம், மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். வணிக ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர், 2006 ஜன., 31ல், ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற அடுத்த நாளே, வழக்கம் போல், அலுவலகம் வந்த அவரை பார்த்து, ஓய்வு பெற்றதை மறந்து வந்து விட்டாரோ என, அலுவலக ஊழியர்கள் நினைத்தனர்.

ஆனால், கோபாலனோ, "சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, இனி, அரசு பென்ஷன் தரப் போகிறது. அந்த பென்ஷனுக்காக, வேலை பார்க்க போகிறேன்' எனக் கூறி, அனைவரையும் அதிர வைத்தார். வாயடைத்து போன அதிகாரிகள், அவரது நேர்மையைக் கண்டு, அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக பணியாற்றும் கோபாலனின் பணி, அந்த பிரிவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக, உடன் பணிபுரிவோர் கூறுகின்றனர். பார்ப்பதற்கு, 45 வயது போல் தோற்றமளிக்கும் கோபாலன், 1982 முதல், இன்று வரை, ஸ்ரீரங்கத்திலிருந்து தினமும், 20 கி.மீ., தூரம், சைக்கிளில் தான் வேலைக்கு வந்து செல்கிறார்.

நன்றி முகநூல்


Last edited by ஸ்ரீராம் on Tue Oct 08, 2013 6:53 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue Oct 08, 2013 6:52 pm

அறிந்து கொள்வோம் :
*********************************
1* இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.
2* குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.
3* டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
4* சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்
5* யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்
6*ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.
7*99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.
8*ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வின் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.
9*கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்
10*வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue Oct 08, 2013 6:54 pm

அறிந்து கொள்வோம்
******************
01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்
11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா
12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )
13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா
14. சத்தில்லாத உணவு - நீர்
15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை
16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ
17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்
18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு
19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்
20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Tue Oct 08, 2013 6:58 pm

உலகத்தையே ஆட்டிப் படைத்த
சர்வாதிகாரி முசொலினியிடத்தில்
"நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.
சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-
" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக
சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும்
நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"
மாவீரன் நேதாஜி.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by முரளிராஜா Tue Oct 08, 2013 7:26 pm

கதம்ப பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by sawmya Tue Oct 08, 2013 8:27 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by மகா பிரபு Wed Oct 09, 2013 7:31 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 02, 2013 10:58 am

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 1454739_647151868668629_1510480849_n

அவசியம் பகிரவும்:-

+375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்ப்பு கொள்ளாதிர்கள். அந்த எண்களில் வரும் அழைப்புக்கு 15.30 ருபாய் உங்கள் balanceஎடுக்க படும், அது மட்டும் அல்லது உங்கள் தொலைபேசில் உள்ள மற்ற மொபைல் எண்களையும் அவர்களால் பதிவு செய்ய முடியும். உங்கள் வங்கி கணக்கு போன்ற முக்கியமான தகவலை சேர்த்து வைத்து இருந்தால் அதை அவர்கள் இதன் மூலம் பயன் படுத்தி கொள்ளமுடியும். ஆகையால் +375 என்று ஆரம்பிக்கும் எண்களில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அதை தயவு செய்து அட்டெண்ட் செய்யாதிர்கள், அல்லது அந்த எண்ணுக்கு நீங்களே தொடர்பு கொள்ளாதிர்கள்.

அவசியம் பகிரவும்.

நன்றி: முகநூல் பக்கம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 02, 2013 11:04 am

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 539763_646539998729816_2110142373_n

அந்த இளைஞன் உயரமாக இருந்ததால் கூடைப்பந்து விளையாட்டில் இயல்பாகவே ஆர்வம். எனினும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தன் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் அந்த கல்லூரி இயக்குநரை சந்திக்க தன் பெற்றோருடன் சென்றான். அவருடனான சந்திப்பு தன் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை அவன் துளியும் அறிந்திருக்கவில்லை. அந்த இளைஞனின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டறிந்த அந்த இயக்குனர் அவனுடைய கூடைப்பந்து பயிற்சிக்கான செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டதுடன் அல்லாமல் அக்கல்லூரியிலேயே பொறியியல் படிக்க அனுமதியளித்து, விடுதியில் தகுந்த வசதிகளுடன் தங்கவும் வைத்தார்.

இதோ இந்த இளைஞன் இன்று இந்திய ஜூனியர் டீமில் இடம்பிடித்து சீனா வரைசென்று வெண்கலக் கோப்பையை வென்றுவிட்டான். கூடைப்பந்து ஃபெடரேஷன் இவன் பக்கம் திரும்பியது. அட, இப்போது இந்த இளைஞன் இந்திய தேசிய கூடைப்பந்து அணியிலும் இடம் பிடித்து விட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

அந்த இளைஞன் : விஜய்.(படத்தில்)
அந்த இயக்குனர்: டாக்டர் மேரி வில்சன்.(படத்தில்)
அந்தக் கல்லூரி: ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி..குன்னம்..ஸ்ரீபெரும்புதூர்.
அந்த இளைஞன் படிப்பது: இரண்டாம் ஆண்டு ECE.

நூறு கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும் ஒலிம்பிக்கில் கேரளாவை விட சிறிய நாடான கியூபாவுக்கு கீழே தான் இந்தியா பதக்கப்பட்டியலில் எப்போதும்.. கிரிக்கெட் கிரிக்கெட் என்று அடித்துக்கொள்ளும் நாட்டில் மற்ற விளையாட்டுக்களின் கதி என்ன என்ற நிலையில், விஜய் போன்ற முத்துக்களை கண்டெடுத்து ஆதரிக்கும், உண்மையான திறமைக்கு தன் கல்லூரியின் கதவை எப்போதும் திறந்து வைத்திருக்கும் டாக்டர் வில்சன் போன்றவர்களே இந்தியாவின் இப்போதைய தேவை.

நன்றி: ராஜேஷ் 'பலவேஷம்'
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 02, 2013 11:06 am

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 1461865_646454832071666_1156006279_n

கிலோ 160 ரூபாய்... மாசத்துக்கு 240 கிலோ... செழிப்பான லாபம் தரும் செம்பருத்தி..!

பூக்கள் என்றதுமே... பூஜைக்கு அல்லது தலையில் சூடிக்கொள்வதற்கு என இரண்டு பயன்பாடுகள்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி அழகுப்பொருள், மருந்துப்பொருள், வாசனைத் திரவியங்களுக்கான மூலப்பொருள்... என பல பயன்பாடுகள் பூக்களுக்கு உண்டு என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம், மருத்துவ குணம் உள்ள பூக்களில் ஒன்றான செம்பருத்தியை சாகுபடி செய்து, சபாஷ் வாங்கும் வகையில் லாபம் ஈட்டி வருகிறார்!

திருச்செந்தூர் தாலூகா, பரமன்குறிச்சியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமம்... காயாமொழி. இங்கேதான் இருக்கிறது முகமது இப்ராஹிமின் செம்பருத்தித் தோட்டம். காலைவேளையன்றில். மும்மரமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தபோது, ''காயல்பட்டினம்தான் என்னோட பூர்விகம். பி.எஸ்.ஸி கெமிஸ்டரி, டிப்ளமோ ஃபுட்வேர் டெக்னாலஜி படிச்சுட்டு... ராணிப்பேட்டையில ஒரு லெதர் ஃபேக்டரியில 13 வருஷம் வேலை பாத்தேன். அங்க அழகானத் தோட்டம் போட்டிருப்பாங்க. அந்த இயற்கைச் சூழல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துலயும் ஆர்வம் அதிகங்கிறதால அந்தத் தோட்டத்தை ரசிச்சுட்டே இருப்பேன். விவசாயம் பத்தி பேப்பர்ல எந்த செய்தி வந்தாலும், முழுசா படிச்சுட்டுதான் அடுத்த வேலையைத் தொடுவேன். இந்தச் சூழல்ல வெளியான 'பசுமை விகடன்’ என் கவனத்தை ஈர்க்க... அதைப் படிக்கப் படிக்க, விவசாயம் செய்யணுங்கிற ஆர்வம் மேலிட ஆரம்பிச்சுச்சு. அதனால, முதல் புத்தகத்துல ஆரம்பிச்சு, பசுமை விகடனை சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்போ வரைக்கும் பத்திரப்படுத்திட்டும் இருக்கேன்.

'கருப்பையா’ன்றவர் செம்பருத்தி சாகுபடி பண்றதைப் பத்தி ஒரு தடவை எழுதியிருந்தீங்க. அதைப் படிச்சுட்டு, அவரைத் தேடி போய் பாத்தேன். 'செம்பருத்தியில் ஏக்கருக்கு ஒரு லட்சம் லாபம் எடுக்கலாம்’னு சொன்னார். உடனே, என் சிநேகிதன்கிட்ட இருந்து, இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ரெண்டரை ஏக்கர்ல செம்பருத்தி போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. மீதி நிலத்துல மலைவேம்பு வளர்ந்துட்டிருக்கு'' என்று முன்கதை சொன்ன முகமது இப்ராஹிம், ஒரு ஏக்கர் நிலத்தில் செம் பருத்தி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

ஆறடி இடைவெளி!

''செம்பருத்தி, செம்மண்ணில் நன்றாக வரும். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நன்கு உழுது... வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி
6 அடி இடைவெளி இருக்குமாறுவிட்டு, ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். (ஒரு ஏக்கரில் 1,200 குழிகள் வரை எடுக்கலாம்). தொடர்ந்து சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்துக் கொள்ள வெண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம், ஒரு கிலோ மட்கிய தென்னைநார் ஆகியவற்றை இட்டு, தண்ணீர் ஊற்றி பத்து நாட்கள் அப்படியேவிட வேண்டும். 11-ம் நாள் செம்பருத்திக் கன்றுகளை நடவு செய்து, மண் அணைத்து தண்ணீர்விட வேண்டும். மண் எப்போதும் ஈரமாக இருக்குமாறு தொடர்ந்து, தண்ணீர் விட்டு வர வேண்டும்.

அதிக உரம்... ஆபத்து!

நடவு செய்த 2-ம் மாதத்தில் இருந்து, மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 6-ம் மாதத்துக்குப் பிறகு, செடிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பூக்கள் பூக்கும். 9-ம் மாதத்துக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் பூத்து, 12-ம் மாதத்துக்குப் பிறகு முழு மகசூல் கிடைக்கத் தொடங்கும். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, 200 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து, பாசன நீருடன் தரவேண்டும். இந்த இயற்கை இடுபொருட்களை அளவாகத்தான் இடவேண்டும். அளவுக்கு அதிகமானால், இலை தடித்து பூக்களின் மகசூல் குறையும். செம்பருத்தியில் அதிகமாக மாவுப்பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இப்பூச்சிகள் தென்பட்டால், பச்சை மிளகாய்-பூண்டுக் கரைசலை அனைத்துச் செடிகளின் மீதும் செழிம்பாகத் தெளித்துவிட வேண்டும்.

ஈரப்பதம்... கவனம்!

செம்பருத்தியில் தினமும் பூக்கள் எடுக்கலாம். காலை 7 மணி முதல் 10 மணிக்குள் பூக்களைப் பறித்து வெயிலில் பரத்தி, ஒரு நாள் உலர்த்தி எடுக்க வேண்டும். வெயில் குறைவாக இருக்கும்பட்சத்தில் இரண்டு, மூன்று நாட்கள் வரை உலர்த்தலாம். பூக்கள் அரக்கு நிறத்துக்கு மாறுவதுதான் உலர்ந்ததற்கு அடையாளம். காய்ந்த பூக்களை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்க முடியும். இருப்பு வைக்கப்பட்டுள்ள பூக்களில் தண்ணீர் பட்டால், பூஞ்சணம் உருவாகிவிடும். அதனால், ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, செம்பருத்தி யில் அதிக வருடங்கள் மகசூல் எடுக்க வேண்டும் என்று விரும்பினால், ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்துவிட வேண்டும்.'

நிறைவாகப் பேசிய முகமது இப்ராஹிம், ''இருப்பு வைக்கிற பூவை, வியாபாரிகளோட தேவையைப் பொருத்தோ அல்லது நம்மகிட்ட சேருற அளவைப் பொருத்தோ விற்பனை செய்யலாம். செம்பருத்தி விவசாயத்தைப் பத்தி எனக்கு வழிகாட்டின கருப்பையாவுக்கே நான் மாசாமாசம் லாரியில அனுப்பிடுவேன். அவர் எனக்கு, பணம் கொடுத்துடுவார். வருஷத்துல ஒன்பது மாசமும் பூ பறிக்கலாம். தினமும் சராசரியாக ஒரு ஏக்கர்லர்ந்து 8 கிலோ பூங்கிற முறையில ரெண்டரை ஏக்கர்லயும் 20 கிலோ கிடைக்குது. அதைக் காய வெச்சா, 8 கிலோ உலர்ந்தப் பூ கிடைக்கும்.

ரெண்டரை ஏக்கரிலும் மாசத்துக்கு 240 கிலோ உலர்ந்தப் பூ. ஒரு கிலோவுக்கு சராசரியா 160 ரூபாய் கிடைக்குது. இந்தக் கணக்குல 9 மாசத்துக்கு ரெண்டரை ஏக்கர்லேர்ந்து 3 லட்சத்து 45 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம். இதுல செலவு போக (குத்தகைத் தொகை இல்லாமல்) எப்படியும் ரெண்டரை லட்ச ரூபாய் லாபமா நிக்கும்'' என்றார், மகிழ்ச்சியோடு!

தகவல் - பசுமை விகடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 30, 2013 11:10 am

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 1546191_622424721150303_758949048_n

சபாஷ்..!

காரைக்காலில் நடந்த இரு பெண்கள் மீதான வண்புணர்வுக் கொடுநிகழ்வில் யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் அந்த பதினைந்துக் கயவாளிப்பயல்கள் மீதும் சரியான நேரத்தில் சரியான நடவடிக்கையெடுத்த முதுநிலைக் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜவர்களுக்கு வாழ்த்துகள். மேலும், தமக்கான பணியிலிருந்து தவறியதற்காக காவல்துறையினர் இரண்டுபேருக்கு பணியிடை நீக்கத்திற்கான ஆணையையும் புதுவையிலிருந்து உடனடியாகப் பெற்றுத் தந்துள்ளார்.


நன்றி: பாலா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 30, 2013 11:13 am

படிப்பை கைவிட்டவர்களுக்கு வேலை தருகிறோம்

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Tamil_News_large_883553

வாழ்க்கையில் பல்வேறு காரணங்களால், படிப்பை இடையே விட்டவர்கள், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அப்படிப்பட்ட இளைஞர்கள் கொஞ்சம் உழைப்பையும், முயற்சியையும் முதலீடு செய்தால், பிரபல தனியார் நிறுவனங்களிலும் எளிமையாக வேலையில் சேரலாம் என, உன்னதி அறக்கட்டளை வழிகாட்டி வருகிறது.சென்னை, மேற்கு மாம்பலம், கே.ஆர்.கோவில் தெருவில் இயங்கி வரும், அறக்கட்டளை மேலாளர் பிரியதர்ஷினியிடம் பேசியதில் இருந்து...

'உன்னதி அறக்கட்டளை' பற்றி சொல்லுங்களேன்?
பெங்களூரில் உள்ள ஸ்ரீகுருவாயூரப்பன் பஜன் சமாஜ் டிரஸ்ட்டின் ஒரு பகுதி தான், 'உன்னதி டிரஸ்ட்' இந்தியா முழுவதும், பல்வேறு நகரங்களில் கிளை உள்ளது. இதுவரை 2,000க்கும் மேற்பட்டோருக்கு, எங்களுடைய அமைப்பின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துஇருக்கிறோம்.

இந்த அமைப்பின் நோக்கம் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார காரணங்களுக்காக, படிப்பை பாதியில் கைவிட்டோர் அதிகம். அந்த இளைஞர்கள், சாதாரண கூலி வேலைகளில், சிக்கி சுழன்று துன்பப்பட்டு கொண்டிருக்கின்றனர்.நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் சக்தியை ஒருமுகப்படுத்தி, அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து, வேலைவாய்பபு, பொருளா தாரம் மட்டுமின்றி, அனைத்து வகையிலும் முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்.

இளைஞர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கிறீர்கள்?
இங்குள்ள நிறுவனங்களில், வேலைக்கு தகுந்த நபர்கள் கிடைப்பதில் தான் சிக்கலே தவிர, வேலை கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.அதனால், இளைஞர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கணினிப் பயிற்சி, ஆளுமைத்திறன், தொழில் நுட்பம், நல்லொழுக்கப் பயிற்சிகள் என, மொத்தம் 70 நாட்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறோம். பாடமாகவும், நேரடியாகவும் நிறுவனங்களுக்கே சென்று களப்பயிற்சியையும் கற்றுத் தருகிறோம்.

பயிற்சி பெற்றோருக்கு எங்கெங்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன?
பெரிய ஜவுளி நிறுவனங்களில் விற்பனை பிரிவு, வாடிக்கையாளர் சேவை, நட்சத்திர உணவக விடுதிகளில் உணவக விருந்தோம்பல், அலுவலக உதவியாளர், கார் ஓட்டுனர், தொழிலகப் பணிகள், காவலாளி சேவை, பி.பி.ஓ., என, பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.இந்த நிறுவனங்கள் மட்டுமின்றி, தற்போது பிரபல கடிகார நிறுவனத்தில் பணிபுரியவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. துவக்கத்தில், 8,000 ரூபாய் சம்பளம் உறுதி. அடுத்தடுத்து, அவரவர் திறமையை பொறுத்து முன்னேறிச் செல்லலாம்.

பயிற்சி பெறுவதற்கு தகுதிகள் நிர்ணயித்திருக்கிறீர்களா?
ஆம். 18 வயது நிரம்பிய, குறைந்த பட்சம் ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தவறிய மாணவர்கள் யார் வேண்டுமானாலும், எங்கள் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்.தற்போது, 20க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அடுத்த குழுவிற்கான பயிற்சி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. 2020க்குள் 10 லட்சம் பேருக்கு, பயிற்சி அளிக்க திட்டமிட்டுஉள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு: 94444 85241; www.unnatiblr.org


நன்றி: தினமலர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by ஸ்ரீராம் Mon Dec 30, 2013 11:27 am

நம்மால் ஏன் முடியாது....?
இவரால் செய்ய முடியும் போது ஏன் நம்மால் முடியாது..?
யாரையும் நீங்கள் தேடி போய் உதவ வேண்டாம்...
உங்கள் முன் உதவி வேண்டுவோர்க்கு உதவலாமே....




ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

செய்தி கதம்பம் - இதையும் படிங்க - Page 4 Empty Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum