தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓஷோ-சிந்தனைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:44 pm

ஓஷோ-சிந்தனைகள்

வியாதியும் இயல்பும்

வன்முறை என்பது மனிதருக்கு வியாதி;ஆனால் விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு.
******
வன்முறை உள்ள மனம் சண்டையிடாமல் திருப்தி அடையாது.பிறரைத் துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
******
நம் உறவுகள் எல்லாம் உள்ளே விஷத் தன்மை கொண்டனவாய்,வெளியே இனிப்பு பூசப்பட்டவையாய் காணப்படுகின்றன.
******
இரக்கம் என்பது ஒரு வகை ஏமாற்றுதல்.பிறர் துயரத்தில் துயரமும்,பிறர் இன்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாடுதல்தான் உண்மையான இரக்கம்.ஆனால் பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்ளும் நாம் பிறர் மகிழ்ச்சி கண்டு ஆனந்திப்பதில்லையே.
******
செல்வ வளமும்,அதன் அனுபவமும் இல்லாமல் அச்செல்வத்தின் பயனற்ற தன்மையை யாரும் உணர முடியாது.
******
ஏழைக்குத் துறவு மனப்பான்மை வருவதில்லை.ஆனால் பணக்காரனுக்கோ தான் இதுவரை சேர்த்ததெல்லாம் வீண் என்பதும்,உண்மையில் இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை என்பதும் புரிகிறது.
******
இன்னொருவரைப்போல இருக்க நினைப்பது இன்னொருவர் பொருளை அபகரிப்பது போன்ற திருட்டுத் தன்மை கொண்டதாகும்.இன்னொரு வரைப்போல நடப்பது என்பதே ஒரு போலித்தனம்.
******
''ஒரு மனிதன் கோபப்படும்போது அவனைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.ஏன் என்றால் அத்தகைய மனிதன் பிறர் குற்றத்திற்காகத் தன்னையே தண்டித்துக் கொள்கிறான்.''என்கிறார் புத்தர்.
******
நெருப்பில் கை வைக்க அஞ்சும் மனிதன் கோபமாகிய நெருப்பில் மட்டும் தைரியமாகக் கை வைக்கிறானே!
******
கண்ணாடியில் கூட நாம் நாமாக இருக்க விரும்புவதில்லை.நம் கற்பனை போலவே நாமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே தான் கண்ணாடியின் முன் முழு அலங்காரத்துடன் நிற்கிறோம்.
******
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:46 pm

கும்பல்

குருட்ஜீப் கூறுகிறார்,''நீ ஒரு தனி ஆள் அல்ல.நீ ஒரு கும்பல்தான்.'நான்'என்று கூறும்போது கூட அங்கு ஒரு 'நான்' இல்லை.பல 'நான்கள்'உனக்குள் இருக்கிறார்கள்.காலையில் ஒரு நான்.மதியம் ஒரு நான்.மாலையில் ஒரு நான்.இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உன்னிடம் இருப்பதில்லை.''
கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும்போது மட்டுமே அமைதி சாத்தியம்.நீங்கள் ஒரு கும்பல்.ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும்.என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை.எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில்தான் இருக்கும்.லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்து விட முடியும்.எனவேதான் உங்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை.நட்பாக இருக்க முடிவதில்லை.நண்பர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் நட்பு இருப்பதில்லை.யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:47 pm

சுதந்திர மலர்

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது,தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ,அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான்.அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது.ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.அவன் பிறரைச் சார்ந்து இல்லை.அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும்,அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.
ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில்,யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில்,அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய,பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் ,ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது.அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.
நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்.ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.பிறகு ,நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள்.வழி தேடுகிறீர்கள்.ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார்.பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள்.அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்?அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்.
இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:49 pm

மகிழ்ச்சி


நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது. கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம் வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:51 pm

நரகம்


நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?
******
ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்.
******
உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.
******
மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
******
உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?
******
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:52 pm

கைப்பாவை

உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.நீங்கள் அவற்றுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.அதுமட்டும்தான் பாவம்,குற்றம். உதாரணமாக, யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்.நீங்கள் கோபமடைகிறீர்கள் .நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான். உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.
********
புத்தர் கூறுகிறார்,''கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.யாரோ என்னவோ செய்கிறார்.நீங்கள் கோபமடைகிறீர்கள்.அவர் ஏதாவது தவறாகச் செய்யக் கூடும்.தவறாகச் சொல்லக் கூடும். . உங்களை அவமதிக்க ஏதேனும் முயற்சி செய்யக் கூடும்.ஆனால் அது அவரது சுதந்திரம்.நீங்கள் எதிர்ச் செயல் புரிந்தால் நீங்கள்தான் அடிமை என்றாகிறது.'' நீங்கள் அந்த மனிதரிடம்,''உனது மகிழ்ச்சி என்னை அவமதிப்பது.எனது மகிழ்ச்சி கோபம் கொள்ளாமல் இருப்பது.''என்று கூறினால் நீங்கள் எஜமானனைப் போல நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.
********
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:54 pm

தேவையும் ஆசையும்

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே.அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை?உணவு,நீர்,உறைவிடம்,உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள்.இவைதானே உங்களது தேவைகள்.இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள்.யாரையும் காதலிக்காதே,பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை,ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித் திரி என்கிறது மதம்.நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள் .மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.
ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..தங்க இடம் வேண்டுவது தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை. உன்ன உணவு வேண்டும் என்பது தேவை.ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை.தேவைகள் எளிதில் அடையக் கூடியவை.ஆசைகள் அடைய முடியாதவை.உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.
உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள்.ஆசைகள் செயற்கையானவை.தேவைகள் இயற்கையானவை.அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:56 pm

விடுதலை

விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்? வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?பதில் சிரமமானது அல்ல.கூண்டு பாதுகாப்பானது.அது,மழை ,காற்று, வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை.ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.அடிமைத்தனம் ஒரு வியாபாரம்.நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.வேறு யாரோ,உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.நீ இழந்தது உன் சுதந்திரத்தை.நீ உன் சிறகுகளை,நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன்.நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய்.உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய். கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது.நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.ஆனால் நீ விடுதலை,விடுதலை என்று கத்துகிறாய்.இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.
நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை,சோம்பலை விட்டு வெளியேறுங்கள். ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.ஒரு பயணியாக,வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள்:அதில் வாழ்வீர்கள். உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள்:அதை அறிந்திருப்பீர்கள்.கடவுளை வணங்க மாட்டீர்கள்:இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:58 pm

பொறாமை

பொறாமை என்பது என்ன?அது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தலேயாகும்.நம்மை அடுத்தவர்களுடன் ஒப்பிடத்தான் நாம் கற்பிக்கப் பட்டிருக்கிறோம்.ஒப்பிடுவது ஒரு முட்டாள் தனமான செயல்.ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.ஒப்பிட முடியாதவர்கள்.நீ எப்போதும் நீதான்.உன்னைப்போல யாரும் இல்லை.நீயும் யாரையும் போல இருக்கத் தேவையில்லை.கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார் .நகல்களை அல்ல.
பக்கத்து வீட்டைப் பார்த்தால் மிகப் பெரிய விஷயங்கள் நடப்பது போல நமக்குத் தெரியும்.புல் பச்சையாகத் தெரியும்.நமது வீட்டு ரோஜாவை விட அடுத்த வீட்டு ரோஜா அழகாகத் தெரியும்.உன்னைத் தவிர மற்ற எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றும்.இதே கதைதான் மற்றவர்களுக்கும்.அவர்களும் தங்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.அவர்களுக்கு உன் வீட்டுப் புல் பச்சையாய்த் தெரியும்.அவர்கள் நீ நல்ல மனைவியை அடைந்ததாக நினைக்கலாம்.நீயோ அவளைப் பார்த்து சலித்துப் போயிருப்பாய்.
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்பட்டு நரகத்தை உருவாக்கி விடுகிறோம்.கீழ்த்தரமானவர்கள் ஆகி விடுகிறோம்.எல்லோரும் துன்பப்பட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.எல்லோரும் எல்லாவற்றையும் இழந்தால் நல்லது என்று நினைக்கிறோம்.எல்லோரும் வெற்றி பெற்றால் நமக்கு கசக்கிறது.
நீ உனது உள் பக்கத்தை அறிவாய்.ஆனால் அடுத்தவர்களின் வெளிப் பக்கத்தை மட்டுமே அறிவாய்.அதுதான் பொறாமையை உருவாக்குகிறது. யாரும் உன்னுடைய உட்புறத்தில் எப்படிப்பட்டவன் என்பதை அறிவதில்லை.நீ உனது உட்புறத்தில் வெறுமையை,மதிப்பில்லாத தன்மையை உணர்கிறாய் .அதேபோல்தான் மற்றவர்களும்.வெளியில் பார்த்தால் சிரித்த முகத்துடன் இருப்பார்கள்.ஆனால் அவர்களது சிரிப்பு போலியாக இருக்கும்.ஆனால் அது போலியானது என்று உன்னால் எப்படி கண்டு கொள்ள முடியும்/.ஒரு வேளை , அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி இருக்கலாம்.ஆனால் நீ வெளியில் மட்டும் சிரிப்பது போலியானது என்பதை நிச்சயமாக உணர்வாய்.ஏனெனில் உனது உள்ளத்தில் நீ மகிழ்ச்சியுடன் இல்லை.எல்லோரும் வெளித்தோற்றத்தை அழகாக,பகட்டாக ஆனால் எமாற்றிபவையாகக் கொண்டுள்ளனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 7:59 pm

நிலையானது

எப்போது ஒரு மனிதனுக்கு 'நிச்சயமான இறப்பு'பற்றிய உணர்வு பிரக்ஞையாக மேலே எழும்புகிறதோ,அப்போது அவனுக்கு பிறர் மேல் ஏற்படும் பாச உணர்வு குறைகிறது.வேறு விதமாகச் சொன்னால்,நம்முடைய இறப்பின் மறதியே பாசப் பிணைப்புக்குக் காரணமாகிறது.நாம் எப்போது யார் மீதாவது அன்பு செலுத்துகிறோமோ,அப்போது நாம் தொடர்ந்து இறப்பை மறக்கவே முயல்கிறோம்.ஆகவேதான் அன்பு நிலையானது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோர் அனைவரும் இறக்க மாட்டார்கள் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.
******
அடுத்தவரிடம் உள்ள நம்முடைய ஈடுபாடு,அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பு, அடுத்தவரிடமிருந்து மகிழ்ச்சி ஆகியவை வரும் என்ற நம்பிக்கைகள்தான் நம்முடைய மகிழ்ச்சியற்ற தன்மைக்குக் காரணங்கள்.ஆகும்.நீங்கள் எந்த விதத்திலும் மகிழ்ச்சியை வெளியில் இருந்து அடையவில்லை.ஆனால் அந்த நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.அந்த நம்பிக்கை உங்களை விட்டு விலகும்போது நீங்கள் விரக்தி அடைகிறீர்கள்.
******
முதன் முதலில் நம்மை நாமே சார்ந்து எதிர் கொள்ளும்போது மகிழ்ச்சிக்கு மாறாகத் துக்கமே ஏற்படுகிறது.விரக்தி மேலிடுகிறது.ஆனால் நம் முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்,மெல்ல மெல்ல ஆனந்தம் நம்மிடையே மலருகிறது.அதற்கு மாறாக அடுத்தவரை முதலில் நீங்கள் சார்ந்து நின்றால்
ஆரம்பத்தில் மகிழ்ச்சி தோன்றலாம்.ஆனால் முடிவில் நீங்கள் துக்கத்தைத்தான் சந்திக்க வேண்டி வரும்.
*******
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 8:01 pm

புனிதன்

மனிதர்கள் தங்களை அறிவாளிகள் போல உணர்ந்து கொள்ள வைக்கும் கேள்விகளைக் கேட்கிறார்கள்.அவர்கள் பதில் பெறுவதற்காக கேள்விகள் கேட்பதில்லை.மாறாகத் தமது அறிவைக் காட்டிக் கொள்ளவே கேட்கிறார்கள்.ஒரு அறிவார்ந்த கேள்வியைக் கேட்கும்போது நீங்கள் பிரமாதமாக உணருவீர்கள்.
யாருமே மனந்திறந்து தான் யாரெனக் காட்டிக் கொள்ளத் தயாராயில்லை. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக விஷயங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை மறைத்தாக வேண்டும்.யாருமே தாம் வெறுத்து ஒதுக்கப்படுவதை விரும்புவதில்லை.மேலும் புகழ்ந்துரைக்கப்பட விசயங்களும் உள்ளன.இவற்றை நீங்கள் காட்டிக் கொண்டாக வேண்டும். இவை உங்களிடம் இருக்கின்றனவா இல்லையா என்பது பற்றிக் கவலையில்லை.
சமுதாயம் புகழ்ந்துரைக்கும் விஷயங்கள் உங்களிடம் இல்லையென்றால் இருப்பதுபோல் பாவனை செய்கிறீர்கள்.இந்த பாவனை செய்பவர் சில சமயங்களில் உண்மையான நபரைவிட உண்மையாகத் தோற்றமளிப்பது சாத்தியமே.ஏனெனில் நிஜ மனிதர் ஒத்திகை பார்ப்பதில்லை.பாவனை செய்பவரோ ,செய்து பழகுகிறார்.தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொள்கிறார்.உள்ளே அவர்கள் எதிர்மறையான மனிதர்களே.கிரிமினல் குற்றவாளிகள் புனிதர்கள் ஆகிறார்கள் .நீங்கள் புனிதர்களிடம் எதிர்பார்க்கும் மதிப்பீடுகளை,ஒழுக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும்.உங்களுக்குள் ஓர் ஆயிரக்கணக்கான குற்றம் சார்ந்த குணாதிசயங்களை நீங்கள் கொண்டிருப்பது பற்றி யாருக்குக் கவலை?மக்கள் உங்கள் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.யாரும் உள்ளுக்குள்ளே ஆழத்தில் குதிப்பதில்லை.
புனிதனாக இருப்பது போல நடிக்கும் ஒருவனால் அதை விரும்பி ரசிக்க முடியாது.ஏனெனில் அவனது இயல்பு அதற்கு எதிராக இருக்கும்.அவன் தன்னுள்ளே ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பான்.எனவே அவனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதைப் பார்க்க முடியாது.அவன் எப்போதும் சோகமாகவே இருப்பான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 8:05 pm

சண்டை

வன்முறை இல்லாமல் விலங்குகளால் வாழ முடியாது.ஆனால் வன்முறை செய்து மனிதனால் வாழ முடியாது.ஆனால் மனிதன் விலங்காய் இருந்த காலத்தில் பதிந்த வன்முறை இன்னும் தொடர்கிறது.கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் 15000 போர்கள் நடந்துள்ளன.ஒரு நாளில் இருபத்திநாலு மணி நேரமும் நாம் நமக்குள் சண்டை இட்டுக் கொண்டே இருக்கிறோம்.பகைவரோடு சண்டை போடுகிறோம்..சில சமயங்களில் நண்பர்களுடன் சண்டை போடுகிறோம்.பணத்துக்காக சண்டை போடுகிறோம்.புகழுக்காக சண்டை போடுகிறோம்.சண்டை போடுவதே பழக்கமாகி விட்டதால் காரணமின்றியும் சண்டை போடுகிறோம்.வேட்டைக்குப் போகிறவன் காரணமின்றி சண்டை போடுகிறான்.சண்டை போடுவது அவனுக்கு விளையாட்டு.நேரடி சண்டைக்கு போக முடியவில்லை என்றால் சண்டையிடும் உணர்வுள்ள விளையாட்டுக்களை மனிதன் தேடிக் கண்டு பிடிக்கிறான்.அவற்றை வளர்க்கிறான்.ஆழ்ந்து நோக்கினால் மற்றவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமும் பிறரோடு சண்டை போடுவதில் உள்ள ஆர்வமும் புலப்படும்.
வன்முறை உள்ள மனம் சண்டை போடாமல் திருப்தி அடையாது.பிறரைத் துன்பப் படுத்துவதில் மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் ஒருபோதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
வன்முறை மனிதனைப் பிடித்திருக்கும் நோய்.அது தவிர்க்க முடியாதது அல்ல.மனிதத் தன்மை என்னும் மலர் ஒரு நாளும் வன்முறைக்கு இடையே மலர முடியாது.அன்புச் சூழலில் மட்டுமே அது மலர்வது சாத்தியம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 8:06 pm

ஏற்பும் எதிர் விளைவும்

ஒன்றை ஏற்றல்(response) என்பது அனுபவ உணர்வு.ஏற்றலுக்கும் எதிர் விளைவுக்கும்(reaction) இடையே பெரிய வேறுபாடு உண்டு.ஒருவர் நம்மைத் திட்டினால்,பதிலுக்கு அவரைத் திட்ட வேண்டும் என்ற விருப்பம் நமக்குள் எப்போதும் இருக்கும்.ஆனால் அதை எதிர்க்காமல் ஏற்கும்போது அது வேறு விதமாக அமையும்.ஒருவர் நம்மைத் திட்டும்போது,''பாவம்,இவர் இவ்வாறு திட்ட என்ன காரணமோ எனக்குத் தெரியவில்லையே,''என்று நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் அது ஏற்பு.அவர் திட்டியதற்கு நாம் செயல்படவில்லை.உணர்வுபூர்ணமான நேர்விளைவு இது.பட்டனைத் தட்டியவுடன் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது.சுற்றலாமா வேண்டாமா என்று யோசிப்பதில்லை.மறுபடியும் அழுத்தினால் மின்விசிறி நிற்கிறது.அது போலவே நாம் திட்டப்படும்போது-பட்டன் அழுத்தப் படுகிறது.-உடனே கோபம் வருகிறது.ஒருவர் நம்மைப் பாராட்டுகிறார்-பட்டன் அழுத்தப் படுகிறது.-கோபம் நீங்குகிறது.ஆகவே நாம் ஒரு தனி மனிதனா அல்லது இயந்திரமா?நம் நடத்தை இயந்திரத்தனமாய் இருக்கிறது.ஏற்பு என்பது உணர்வின் அடையாளம்.சிலுவையில் அறையப்படும்போது இயேசு ,''கர்த்தரே,இவர்கள் தாம் செய்வது என்னவென அறியாதவர்கள்.இவர்களை மன்னியும்.''என்றார் .இது உணர்வுப் பூர்வமான பதில்.இதுதான் ஏற்பு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 8:09 pm

பொய்யும் உண்மையும்

ஒரு பொய்யை ஒருவர் சொன்னால்,அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி .பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம்.நீங்கள் காலையில் ஒரு பொய் சொன்னால் மாலைக்குள் அது பல விதங்களில் பரவி திரும்ப உங்களிடமே வந்துவிடும்.அப்போது அது உண்மையா,பொய்யா என்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.நீங்கள் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன.அதே சமயம் நீங்கள் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள்.இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.பொய் மிகவும் மேம்போக்கானது.அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு.ஆனால் உண்மை அப்படி அல்ல.பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும்.பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.
**********
தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது.அங்கீகரிக்காது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி,அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம்.அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.
**********
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.தன்னை யாரோ ஒரு கடவுளின் தூதன் வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறார்கள்.இது ஒரு நாகரீகமற்ற அடிமைத்தனம்.
**********
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sat May 18, 2013 8:11 pm

இதயமும் மூளையும்

இந்த உலகம் முழுவதும் அன்பினால் செலுத்தப்படவில்லை.அது தந்திரத்தால் செலுத்தப்படுகிறது.இந்த உலகில் வெற்றி பெற உங்களுக்கு அன்பு தேவையில்லை.உங்களுக்குக் கல்லாகிப் போன ஒரு இதயமும் கூரிய புத்தியும் தான் தேவை.சொல்லப்போனால் உங்களுக்கு இதயமே தேவையில்லை.ஏனெனில் நீங்கள் வளரும் முறை,கலாச்சாரம்,சமுதாயம் ஆகியவை அன்பு செலுத்தும் திறனைக் கொன்று விட்டன.இதயம் உள்ள மனிதர்கள் நசுக்கப்பட்டு சுரண்டப்பட்டு அடக்கியாளப் படுகின்றனர்.இந்த உலகம் தந்திரக்காரர்களால் இதயமில்லாத கொடூரமானவர்களால் நடத்திச் செல்லப்படுகிறது.எனவே வளரும் பிள்ளையும் தனது இதயத்தை இழக்கும்படி இந்த சமூகம் செய்கிறது.எனவே அவனது சக்தி முழுவதும் மூளையை நோக்கி செலுத்தப்படுகிறது.இதயம் அலட்சியப்படுத்தப் படுகிறது. இதயம் எப்போதாவது ஏதாவது சொன்னாலும்,அது உங்கள் செவியை வந்து அடைவதில்லை.உங்கள் தலையில்,மூளையில் ஒலிஅதிகம் இருப்பதால் இதயத்தின் குரல் எழும்பாது.மெல்ல மெல்ல இதயம்,அது அலட்சியப் படுத்தப் படுவதால் சொல்லுவதை நிறுத்தி மௌனமாகி விடுகிறது.சமூகத்தைப் புத்தி நடத்திச் செல்கிறது.அன்பு நடத்திச் சென்றால் நாம்,முற்றிலும் மாறுபட்ட,அதிக அன்பு கொண்ட,குறைந்த வெறுப்பு கொண்ட,போர்களற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருப்போம்.அழிக்கும் முறைகளை உருவாக்குவதை என்றும் இதயம் ஆதரிக்காது.அது வாழ்விற்காக மட்டுமே உயிர்க்கிறது; துடிக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 18, 2013 8:44 pm

super ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 19, 2013 7:26 am

பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:25 pm

தனித்தன்மை


இரண்டு விதமான உயர்வு மனப்பான்மைகள் உள்ளன.ஒன்றில் நீங்கள் உங்கள் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு முகமூடியைப் பயன்படுத்துகிறீர்கள்.முகமூடிக்குப் பின்னே தாழ்வு மனப்பான்மை உள்ளது.இந்த உயர்வு மனப்பான்மை மேலோட்டமானது. ஆழத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதால் இது உண்மையான உயர்வு மனோபாவம் கிடையாது.தாழ்வு மனோபாவம் இல்லாமையே இன்னொரு உயர்வு மனப்பான்மை ஆகும்.நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்காத வரை எப்படித் தாழ்வானவராக இருக்க முடியும்?இவ்வுலகில் நீங்கள் மட்டும் இருந்தால் உங்களை நீங்கள் யாருடன் ஒப்பிட முடியும்?எப்படி நீங்கள் தாழ்ந்தவராக இருக்க முடியும்?தனியே இருக்கும்போது நீங்கள் உயர்ந்தவரும் அல்ல'தாழ்ந்தவரும் அல்ல.இதுதான் ஆன்மாவின் உயர்ந்த தன்மை.அது யாருடனும் ஒப்பிடுவதில்லை.நீங்கள் உங்களை யாருடனும் எதற்கும் ஒப்பிட வேண்டாம்.நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்.நீங்கள் சிறப்பானவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:26 pm

அகங்காரம்


உங்கள் மனைவி அழகாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவி அழகு என்பதை அந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டவே விரும்புவீர்கள்.அவள் ஏதோ உங்களுக்கு சொந்தமான 'பொருள்'என்று தான் கருதிக் கொள்வீர்கள்.நீங்கள் எப்படி சிறந்த கார் வைத்திருந்தால் அதைப் பிறர் பார்த்து தன்னை மதிக்க வேண்டும் ,பாராட்ட வேண்டும் என்று கருதுகிறீர்களோ,அதைப்போல உங்கள் மனைவியைப் பார்த்து பிறர் பொறாமைப்பட வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள்.நீங்கள் வைர நகைகளை அவளுக்கு அளித்தால் அது அன்பினால் அல்ல.உங்களுடைய பணக்கார அகந்தையை வெளிப்படுத்துவதற்கு அவளை ஒரு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள்.அவள் எப்போதும் உங்களை சார்ந்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.அதில் அவள் சற்று மாறுபட்டால் அவள் மீது கோபம் அடைகிறீர்கள்.அவளைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆகவே நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்?உங்கள் மனைவியையா அல்லது பணம் அந்தஸ்து என்ற உங்களுடைய அகங்காரத்தைக் காதலிக்கிறீர்களா?அகங்காரம் எப்போதும் தன முனைப்புடையது.தீவிர போட்டி மனப்பான்மையுடையது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:27 pm

வெற்றுப்படகு


ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம் உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான். ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான்.அவன் கூச்சலிடுவது கேட்கப் படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான்.இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான்.ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான்.கோபம் அடைய மாட்டான்.
எப்பொழுதெல்லாம்,யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது உங்கள் மீது மோதினால்,நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள்.இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது.இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,''மற்றவர் தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம் என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான்.;நான்;பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல.நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம்.ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது,அவர்கள் கோபமடைய.நீங்கள் நல்லது செய்கிறீர்களா,கெட்டது செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல.நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:28 pm

நகைச்சுவை உணர்வு


சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும்.சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ,பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும்.தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது.ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல.மரணம் தான் தீவிரமானது.
வாழ்க்கை என்பது அன்பு ,சிரிப்பு,ஆடல்,பாடல் தான்.கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது.அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது.நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள்.ஆனால் உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை. துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது.துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள்.அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள். வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள். ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்.
தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.ஒரு வியாதி.சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்.பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்.மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும்.அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:29 pm

கோபம் மறைய


கோபம் கொள்ளும் போதெல்லாம் ஐந்து தடவை ஆழ்ந்து சுவாசியுங்கள்.இந்த எளிய பயிற்சி வெளிப்பார்வைக்கு கோபத்துடன் சம்பந்தம் இல்லாதது போலத்தோன்றும்.உணர்வற்றவராக நீங்கள் இருக்கும்போதே கோபம் வரும்.இப்பயிற்சி உணர்வுள்ள ஒரு முயற்சி.இப்பயிற்சி உங்கள் மனதை உன்னிப்புடையதாக ஆக்கும்.மனம் விழிப்படைகிறது.உடலும் விழிப்படைகிறது.இந்த விழிப்பான கணத்தில் கோபம் மறைந்து விட்டிருக்கும். இரண்டாவதாக,உங்கள் மனது ஒரு பக்கத்தில் மட்டுமே முனைப்பாக இருக்க முடியும்.ஒரே நேரத்தில் இரண்டு விசயங்களை மனத்தால் சிந்திக்க முடியாது. கோபம் இருந்தால் அது மட்டுமே இருக்கிறது.மூச்சுப் பயிற்சியில் மனம் மூச்சு விடுவதோடு மட்டுமே இருக்கிறது.அதாவது மனதின் கவனம் திரும்பி இருக்கிறது.இப்போது அது வேறு பாதையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.மறுபடியும் நீங்கள் கோபிக்கத் திரும்பினாலும் பழைய மாதிரி உங்களால் கோபிக்க முடியாது. தொடர்ந்து கோபம் வரும்போதெல்லாம் இப்பயிற்சியை செய்யுங்கள். அப்போது அது ஒரு பழக்கமாக ஆகி விடுகிறது.இனி நீங்கள் நினைத்துப் பார்க்காமலேயே கோபம் வரும்போதெல்லாம் உடனடியாக உங்கள் உடல் இயந்திரம் தானே வேகமாக ஆழ்ந்து மூச்சு விட தொடங்குகிறது.சில ஆண்டுகளில் கோபம் உங்களிடமிருந்து மறைந்து விடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:31 pm

துன்பம்


துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால் அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.துன்பம் இருக்கும்.ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.அது உங்கள் துன்பமாயிராது.யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி வசப்படாமல் பாருங்கள்.அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு ''என்றுதான் கூறும்.ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:32 pm

சிறு மணல்


கண்ணில் பட்ட சிறுமணல் எப்படி இந்த அழகிய உலகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறதோ,அதைப்போல,சிறிய தயக்கம் அல்லது சந்தேகம்,இந்த வாழ்வின் பெருமை,அழகு,உங்கள் பலம் அனைத்தையும் மறைத்து விடும்.
**********
வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது.உண்மையாகச் சொன்னால்,அது மிகவும் அருவருப்பானது.ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தம் இல்லாதது.ஆனால் அதைத்தான் மனம் விரும்புகிறது.வெற்றி என்பது நம் பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம்.
**********
ஒருவர் உடல் துன்பத்தில் இருக்கும்போது,நீங்கள் எதைப் போதித்தாலும் அது அவர்களுக்கு முட்டாள் தனமாகவே படும்.
**********
கோடிக்கணக்கில் மக்கள் ஒருவருக்கொருவர் தீர்ப்பு சொல்லிக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
**********
சட்டம் என்பது தவறான மனிதனுக்கு உரியது.சரியான மனிதனுக்கு அல்ல. ஏனென்றால்,இந்த முழு உலகமும் தவறான மனநிலையில் செயல் படுகிறது.எப்போதாவது ஒரு சரியான மனிதன் வந்தால்,அவனை ஒரு அயலான் போலத்தான் பார்க்கிறது.
**********
முழுமை என்று எதுவும் இல்லை.வாழ்வின் முழுமை என்று தோன்றுவது ஒரு பொய்மைதான்.ஒரு புத்திசாலி,வாழ்வு என்பது குற்றமற்ற நிறைவானது அல்ல என்று புரிந்து கொள்வான்.அது எப்போதும் குறைகள் நிறைந்ததுதான். நாம் எல்லோரும் குறை நிறைந்தவர்கள் தான்.ஒருவனிடத்தில்,இங்கே அங்கே உங்களுக்குப் பிடிக்காத சில குறைகள் இருக்கலாம்.அதே சமயம் அவனிடம் நீங்கள் விரும்பும் சில நிறைவுகளும் இருக்கும்.நீங்கள் ஒருவரை விரும்பினால் அவரை மாற்றவேண்டும் என்று அதற்கு அர்த்தம் இல்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by முழுமுதலோன் Sun May 19, 2013 9:33 pm

பொறுப்பு


நீங்கள் எப்போது உங்கள் பொறுப்பை பிறரிடம் கொடுக்கிறீர்களோ,அப்போதே சுதந்திரத்தை இழக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.எப்போது நீங்கள் இருப்பவரிடமோ அல்லது இறந்தவரிடமோ சரணாகதி அடைகிறீர்களோ,அப்போதே உங்களை அழித்துக் கொள்கிறீர்கள்.அது மாத்திரமல்ல.உங்கள் தனித்தன்மையைப் பொறுத்தவரை,நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறீர்கள்.ஆனால் பல பேர்,தங்களுடைய பொறுப்பிலிருந்து விடுதலை அடையும்போது மிகவும் திருப்தி கொள்கிறார்கள்.ஏதோ சுமை குறைந்ததுபோல உணருகிறார்கள்.சிலபேர் இந்தப் பொறுப்பை தாங்களே மனமுவந்து எடுத்துக் கொள்கிறார்கள்.அவரைத்தான் நீங்கள் உங்களைக் காப்பாற்ற வந்தவர் என்று கருதிக் கொள்கிறீர்கள்.நீங்கள் அவரை நம்பி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள்.இந்த உலகில் ஆராயாமல் நம்புவதைக் காட்டிலும் சுலபமான வேலை எதுவும் இல்லை.ஏனென்றால்,இந்த செயலுக்காக எந்த சிரமும் பட வேண்டியதில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum