தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஓஷோ-சிந்தனைகள்

View previous topic View next topic Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 7:44 am

பணத்தின் கவர்ச்சி.
-------------

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ் காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம்.

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன் மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.எதிர்காலத்தை விட்டுவிடு.அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

நன்றி ;தென்றல்
ஓஷோ சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 7:47 am

வருங்காலம்

-------

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால் தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.
******
கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு 'பகிர்ந்து கொள்ளுதல்'என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.
******

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 7:51 am

அடக்குதல்
-------

நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.

சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.ஒருவன் பேராசை கொள்கிறான்.இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும்.இரண்டுமே எலிப்பொறி போலத்தான்.

மிக்க ஈடுபாடும் அடக்குதலும் இயந்திரத்தனமானது.

நீங்கள் பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.மாறாக நீங்கள் அதை அடக்கினாலும்,இயந்திரத்தனமாக மிகவும் ஈடுபட்டாலும்,முடிவு ஒன்றுதான்.

முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.எதையும் தவிர்க்காதீர்கள்.அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.அப்போதுதான் ஒரு நாள் அவற்றைக் கடந்து செல்ல முடியும்.


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 7:55 am

அடுத்தவர் கருத்து.
---------------------------

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?

ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை.நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள்.நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை.நீங்கள் அழகானவர் என்று மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள்.அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால்,அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவர் நீங்கள் அழகானவர் என்று சொல்ல,அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் ,நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது.இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும்.இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள்.அதாவது,நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.

நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை.உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை.நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான்.ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள்.ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால்,நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.

முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள்.அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ,கெட்டவனாகவோ மாற்ற இயலாது.பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும்,நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.ஒருவன் உங்களைப் புகழும்போது,அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான்.அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்,நீங்கள்தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும்,நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:00 am

என்ன செய்ய?
------------------
பிறர் ஒவ்வொருவரும்,'இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',நீ மட்டும் எப்படி நின்று விடுவது?போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா?அப்படித்தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்?

பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது?வீடல்லவே!சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய்.உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்.அதனால் ஆகப் போவதென்ன?உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.
******
மற்றவர்களை நேசியுங்கள்;மதியுங்கள்.மற்றவர்களை விட மேலானவராகவோ,உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள்.மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
******

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:04 am

சமூகம்
------------

தட்டெழுத்து பயின்றவனுக்கு அவனுடைய இயல்பான கையெழுத்து மறந்துவிடும்.கால்குலேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தால் அடிப்படைக் கணக்கே மறந்துவிடும்.படிக்காத கிராமத்தாரிடம் மென்மையான ஆழமான புத்திசாலித்தனம் இருக்கிறது.இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பெரிய தீங்கை ஏற்படுத்தியிருக்கிறது.உங்களை எப்போதும் அடிமைத் தனத்திலும்,பேராசையிலும்,திருப்தி அற்ற நிலையிலும், போட்டியிடும் நிலையிலும்,அன்பற்றும்,எப்போதும் கோபத்துடனும், வெறுப்போடும், ,ஒருவரைப் பார்த்து ஒருவர் வாழ நினைக்கும் நிலையிலும் வைத்திருக்கவே சமூகம் ஆசைப்படுகிறது.உங்களுடைய அறிவுக் கூர்மை அழிக்கப் படுகின்றது.அதிகம் படித்தவர்களால் இந்த உலகம் அபாயத்தில் இருக்கிறது.

******

நீங்கள் உங்களைச்சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும்,அலுப்பாகவும்,இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?ஏன் இந்த மரங்களைப் போலப் புத்துணர்வுடன் வாழக் கூடாது?அவர்களுக்கு என்ன நேர்ந்தது?ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான்.முயற்சிக்கிறான்.அதனால்தான் இவ்வளவு சோகம்,சோர்வு,துன்பம் எல்லாம்.

******

ஒரு புத்தி கூர்மையுள்ளவன் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கவலைப்பட மாட்டான் அடுத்தவன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட மாட்டான்.ஏன்,கடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.அவன் இங்கே,இந்த தருணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பான்.அதைத்தவிர அவனுக்கு வேறொன்றும் தெரியாது.கடவுள்,ஆத்மா,சொர்க்கம் எல்லாம் தானே அவனை வந்தடையும்.

******


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:07 am

வாழ்க்கை ஒரு பரிசு.
-----------------
வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது ஒரு பரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.
******
வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
******
நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன.நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.


நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:10 am

புனித நூல் எது?
---------------------------

இதுவரை இருந்தமனிதன் நிறைய வேதனைப்பட்டு விட்டான்.அவன் அவலத்தில் வாழ பழக்கப் பட்டிருக்கிறான்.துன்புறுவதிலும் சுய சித்திரவதையிலும் அவன் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறான்.அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன.சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.எத்தனை வேதனை அவன் படுகிறானோ,எந்த அளவுக்கு அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.இது சிலரின் சுயநலன்களுக்கு சாதகமாக இருந்தது.துன்புறும் மனிதனை அடிமைப் படுத்துவது சுலபம்.

அறியாத வருங்காலத்துக்காக தனது இன்றைய வாழ்வைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன்,தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன் அவன்..காலம் காலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான்.கற்பனைகளிலும்,கனவுகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர,யதார்த்தத்தை அவன் கண்டதில்லை.

ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப் படுத்தப்பட்ட கும்பலில்தான் பிறக்கிறது.ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,அண்டை அயலார் அனைவரும் கட்டுப் பட்டவர்களே.ஒரு சின்னக் குழந்தை ஆதரவற்றது.அதற்கு அந்தக் கும்பலுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழி இல்லை.

பழையது சாகட்டும்;புதியது பிறக்கட்டும்!

புனித நூல் உன் வாழ்க்கைதான்.அதை உன்னையன்றி வேறு யாரும் எழுத முடியாது.நீ வெற்றுத்தாளுடைய புத்தகத்துடன் வந்தாய்.அதில் நீ என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்.பிறப்பு மட்டும் வாழ்வல்ல.அது வாழ்வை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகும்.நீங்கள் நேசிக்கக் கூடிய அளவு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்வது அவசியம்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:13 am

துன்பம் நிரந்தரமாய் நீங்க...
--------------------------

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

நன்றி : ஜெயராஜன் : ஓஷோ-சிந்தனைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:21 am

நாகரீகத்தந்திரம்
-------------------------

பிறரிடம் மரியாதையாக இருப்பவர்கள்தான் அதிக தன் முனைப்புடையவர்களாக (EGOISTS)இருக்கிறார்கள்.அவர்கள் நிற்கின்ற பாங்கு,பேசுகிற விதம்,பார்க்கின்ற பார்வை,நடை எல்லாவற்றையும் மரியாதையாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் உள்ளே அவர்களின் தன்முனைப்புதான் அவர்களைக் கையாளுகிறது.மிகவும் பணிவாக இருப்பவர்கள் ''தாங்கள் ஒன்றுமே இல்லை,கால்தூசு போன்றவர்கள்''என்று சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் அப்போது அவர்கள் கண்களைப் பார்த்தால் அங்கு தன்முனைப்பு ஆட்சி செய்வது தெரியும்.இதுமிக தந்திரமான தன்முனைப்பு ஆகும்.

மரியாதையாக இருப்பவர்கள் மிகவும் தந்திரக்காரர்கள்.சிறந்த சாமர்த்தியசாலிகள்.அவர்கள்,'நான் மிகச்சிறந்தவன்,'என்று சொன்னால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள் ஆகி விடுவார்கள்.பிறகு போராட்டம் எழுகிறது.அவர்கள் தன்முனைப்பளர்கள் என்று முத்திரை குத்தப்படுவர்.அப்புறம் மக்களைத் தங்களுக்கு வசதியாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் அவர்கள்,'நான் கால் தூசியைப் போன்றவன்'என்று சொன்னால்,மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தங்கள் கதவைத் திறப்பார்கள்.பிறகு அம்மக்களை அவர்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.எல்லாவிதமான மரியாதைகளும் பண்பாடுகளும் ஒரு வகையான நாகரீகத் தந்திரத்தனமாகும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:23 am

புத்திசாலித்தனம்
-------

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.

நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:25 am

இன்பம் யாவுமே..
----------------

நீங்கள் இன்பமாகக இருக்கும்போது இதற்கு முன் துன்பமாக இருந்தீர்கள் என்பதை மறந்து விடுகிறீர்கள்.மீண்டும் துன்பம் தொடரும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.நீங்கள் துன்பமாக இருக்கும்போது முன்பு இன்பமாக இருந்ததை மறந்து விடுகிறீர்கள்.இனி இன்பம் தொடரும் என்பதையும் மறந்து விடுகிறீர்கள்.
இன்பம் வரும்போது அதில் மறைந்துள்ள துன்பத்தைத் தேடுங்கள்.துன்பம் வரும்போது அதில் எங்கோ மறைந்திருக்கும் இன்பத்தைத் தேடுங்கள்.பிறகு உங்களுக்கு உண்மை நிலை புரியும்.இன்பமும் துன்பமும் வெவ்வேறு விசயங்கள் அல்ல.அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.வெளியே தெரியும் விசயத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து விடாதீர்கள்.
ஒருவன் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றி அதிகமாகச் சொல்ல முற்பட்டால் அவனுள் அதற்கு எதிரான விசயம் உள்ளது என்பதைக் காட்டுகிறது.அவன் அவனையே திருப்திப் படுத்திக் கொள்கிறான்,உங்களை அல்ல.
******
பிரார்த்தனை செய்வது கடவுளுக்கானது அல்ல.பிரார்த்தனை உங்களுக்காகத்தான் இருக்கிறது.நீங்கள் பிரார்த்திக்கிரீர்கள்.இதன் மூலம் நீங்கள் மாற்றம் அடைகிறீர்கள்.உங்கள் பிரார்த்தனையை யாரும் கேட்பதில்லை.யாரும் அதைக் கெட்டு உதவப் போவதில்லை.ஆனால் அதன் மூலம் உங்கள் உள்ளம் மாற்றம் அடைகிறது.உங்கள் பிரார்த்தனை உண்மையாக இருக்குமேயானால்,நீங்கள் அதன்மூலம் நீங்கள் வித்தியாசம் ஆனவராக ஆகிறீர்கள்.உங்கள் உறுதிப்பாடு உங்கள் பிரார்த்தனை நிறைவேறக் காரணமாகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:27 am

திருடன்
------------
பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம்.இதுதான் நமக்குள் இருக்கும் திருடன்.அந்தத் திருடனோடு நாம் சண்டை இட வேண்டியிருக்கிறது.திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.அடுத்த வீட்டில் திருடன் ஒருவன் அகப்பட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம்.ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான்.அவனைப் பிடித்துத் தண்டிக்க நினைக்கிறோம்.ஆனால் முடியவில்லை.வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம்.

நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம்.திருடனைத் தண்டிக்க திருடனின் இருப்பு அவசியம்.புனித மனிதர் ஒருவரால் திருடனை அடிக்க முடியாது.ஆகவே திருடர்களே எப்போதும் திருடர்களைக் கண்டிப்பர்.குற்றவாளிகளே குற்றவாளிகளைக் குறை சொல்வார்கள்.காமவயப்பட்டவரே பாலுறவைக் கண்டித்துப் பேசுவர்.நமக்குள்ளே இருப்பதுதான் வெளியே வெளிப்படும். ''ஒருவன், 'திருடன்,திருடன்,விடாதே பிடி,'என்று கத்தினால், அவ்வாறு கத்துபவனை முதலில் பிடிக்க வேண்டும்'' என்று பேரறிஞர் ரஸ்ஸல் சொல்கிறார்.

நம் மன நோய்களை நாம் பிறர் மீது சுமத்துகிறோம்.எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும்போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.நமக்குள் ஏற்படும் போராட்டமே இன்னொருவர் மீது ஏற்றி உரைக்கப்படுகிறது.நமக்குள் முரண்பாடு தோன்றாதபோது,போராட்டம் இல்லாதபோது இன்னொருவர் மீது பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று விடுகிறது.மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும்போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது.ஆனந்த நடனமே அமையும்.மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் துவங்குகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:29 am

தந்திர மனது
----------------------

நீங்கள் வான ஊர்தியில் செல்லும்போது அதன் ஓட்டுனர் எல்லாப் பொறுப்புக்களையும் தானே எடுத்துக் கொள்கிறார்.என்ற ஆறுதலுடன் தேநீர் குடித்துக் கொண்டு பக்கத்தில் இருப்பவருடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.நீங்கள் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாக உணர்கிறீர்கள். அதைப் போலத்தான் கடவுளையும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.''நீங்கள் எப்படி இருக்க ஆசைப் படுகிறீர்களோ அப்படியே இருக்கலாம்.நீங்கள்நம்பும் கடவுள்தான் உண்மையான தகப்பனார்.அவருக்கு எல்லாம் தெரியும்.

அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு இலை கூடக் கீழே விழாது. எல்லாமே நன்மைக்குத்தான்.''இப்படிக் கருதிக் கொண்டிருப்பது எவ்வளவு சௌகர்யமானது?இந்த மனம் எவ்வளவு தந்திரமானது!இந்தக் 'கடவுள்' உங்கள் தந்திர மனதின் வேலைதான்.ஞானி சாரஹா,''நம்பிக்கை என்பது உண்மை இல்லை.உண்மை நம்பிக்கை ஆகாது.உண்மை என்பது நீங்களே அனுபவித்தல்தான்,''என்கிறார்.

சில சமயம் நீங்கள் உடலால் ஏமாற்றப் படுகிறீர்கள்.எப்படியோ முயற்சி செய்து உங்கள் உடலைவிட்டு நீங்கள் தாண்டிச் சென்றால் மனத்தால் மயக்கப்படுகிறீர்கள்.இது மிகவும் தந்திரமானது.மிக மோசமாக ஏமாற்றக் கூடியது.உங்களுடைய நம்பிக்கை இல்லாமலேயே உண்மை வேலை செய்யும்.நம்பிக்கையின் மூலம் பொய் தான் வேலை செய்யும்.இந்தப் பொய்மைக்கு உங்கள் நம்பிக்கை தேவைப் படுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:31 am

வியாதியும் இயல்பும்
---------------------------------

வன்முறை என்பது மனிதருக்கு வியாதி;ஆனால் விலங்குகளுக்கு அது அவற்றின் இயல்பு.
******
வன்முறை உள்ள மனம் சண்டையிடாமல் திருப்தி அடையாது.பிறரைத் துன்புறுத்துவதிலேயே மகிழ்ச்சி காணும்.அத்தகைய மனம் எப்போதும் நிரந்தர மகிழ்ச்சி அடைய முடியாது.
******
நம் உறவுகள் எல்லாம் உள்ளே விஷத் தன்மை கொண்டனவாய்,வெளியே இனிப்பு பூசப்பட்டவையாய் காணப்படுகின்றன.
******
இரக்கம் என்பது ஒரு வகை ஏமாற்றுதல்.பிறர் துயரத்தில் துயரமும்,பிறர் இன்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாடுதல்தான் உண்மையான இரக்கம்.ஆனால் பிறர் துயர் கண்டு இரக்கம் கொள்ளும் நாம் பிறர் மகிழ்ச்சி கண்டு ஆனந்திப்பதில்லையே.
******
செல்வ வளமும்,அதன் அனுபவமும் இல்லாமல் அச்செல்வத்தின் பயனற்ற தன்மையை யாரும் உணர முடியாது.
******
ஏழைக்குத் துறவு மனப்பான்மை வருவதில்லை.ஆனால் பணக்காரனுக்கோ தான் இதுவரை சேர்த்ததெல்லாம் வீண் என்பதும்,உண்மையில் இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை என்பதும் புரிகிறது.
******
இன்னொருவரைப்போல இருக்க நினைப்பது இன்னொருவர் பொருளை அபகரிப்பது போன்ற திருட்டுத் தன்மை கொண்டதாகும்.இன்னொரு வரைப்போல நடப்பது என்பதே ஒரு போலித்தனம்.
******
''ஒரு மனிதன் கோபப்படும்போது அவனைப் பார்த்து நான் சிரிக்கிறேன்.ஏன் என்றால் அத்தகைய மனிதன் பிறர் குற்றத்திற்காகத் தன்னையே தண்டித்துக் கொள்கிறான்.''என்கிறார் புத்தர்.
******
நெருப்பில் கை வைக்க அஞ்சும் மனிதன் கோபமாகிய நெருப்பில் மட்டும் தைரியமாகக் கை வைக்கிறானே!
******
கண்ணாடியில் கூட நாம் நாமாக இருக்க விரும்புவதில்லை.நம் கற்பனை போலவே நாமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே தான் கண்ணாடியின் முன் முழு அலங்காரத்துடன் நிற்கிறோம்.
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:33 am

கும்பல்
-----------

குருட்ஜீப் கூறுகிறார்,''நீ ஒரு தனி ஆள் அல்ல.நீ ஒரு கும்பல்தான்.'நான்'என்று கூறும்போது கூட அங்கு ஒரு 'நான்' இல்லை.பல 'நான்கள்'உனக்குள் இருக்கிறார்கள்.காலையில் ஒரு நான்.மதியம் ஒரு நான்.மாலையில் ஒரு நான்.இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உன்னிடம் இருப்பதில்லை.''

கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும்போது மட்டுமே அமைதி சாத்தியம்.நீங்கள் ஒரு கும்பல்.ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும்.என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை.எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில்தான் இருக்கும்.லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்து விட முடியும்.எனவேதான் உங்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை.நட்பாக இருக்க முடிவதில்லை.நண்பர்கள் பலர் இருக்கலாம்.ஆனால் நட்பு இருப்பதில்லை.யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:35 am

சுதந்திர மலர்
------------------
எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது,தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ,அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான்.அவனிடம் ஏற்படும் அன்பு நிறைந்து வழிகிறது.ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.அவன் பிறரைச் சார்ந்து இல்லை.அடுத்தவர் அன்பு செலுத்தினாலும்,செலுத்தாவிட்டாலும்,அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஒரு அடர்ந்த காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில்,யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில்,அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய,பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில் ,ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?அவை மலர்ந்து கொண்டேதான் இருக்கும்.அதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாது.அது எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டேதான் இருக்கும்.

நீங்கள் அன்புக்கு பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும்.ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.பிறகு ,நீங்கள் உங்கள் ஆழ்மனதில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள்.வழி தேடுகிறீர்கள்.ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார்.பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள்.அந்த நிலையில் அன்பு பரிமாற்றம் எப்படி ஏற்படும்?அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்.

இந்த அதிகார சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:36 am

மகிழ்ச்சி
--------------
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரியாததால் தான் நாம் மகிழ்ச்சி இன்றி இருக்கிறோம்.ஆனால் ஒவ்வொரு உயிரும் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறது.பிறக்கும்போது ஒரு குழந்தை எந்தவித மனப் பதிவும் இன்றியே பிறக்கிறது.மகிழ்ச்சிக்கான ஆவல் மட்டுமே இருக்கிறது.ஆனால் அதைச் சாதிப்பது எவ்வாறு என்பது தெரியாது.

வாழ்நாள் முழுவதும் அதற்காகவே போராடுவான்.ஆனால் மகிழ்ச்சியாயிருப்பது எப்படி என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும் விதம் நமக்குத் தெரிவதில்லை. கோபம் இயற்கையானது.கோபப்படாதே என்று கூறுவதன் மூலம் அவனால் கோபத்தை ஒழித்து விட முடியாது.மாறாக அதை அடக்கி வைப்பதற்குத்தான் நாம் கற்றுக் கொடுக்கிறோம்.அடக்கி வைப்பது எதுவும் அவலத்திற்கே இட்டுச் செல்லும்.கோபப்படாமல் இருப்பது எப்படி என்று நாம் கற்றுக் கொடுப்பதில்லை.அவன் நம்மைப் பின்பற்றியே ஆக வேண்டியுள்ளது. கோபப்படாதே என்று சொன்னால் அவன் புன்னகை புரிவான்.அந்த புன்னகையோ போலியானது.உள்ளுக்குள் அவன் குமுறிக் கொண்டிருப்பான். ஒரு குழந்தையை,வேசக்காரனாக,பாசாங்குக் காரனாக நாம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்

வாழ்க்கை முழுவதும் அவன் பல முகமூடிகளை அணிய வேண்டியுள்ளது.பொய்மை ஒருநாளும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது.உங்களை நீங்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள சமுதாயம் ஒருபோதும் சொல்லித் தருவதில்லை.பற்றுக் கொள்வதே துன்பம். ஆரம்பத்திலிருந்தே அம்மாவை நேசி,அப்பாவை நேசி,என்று பற்றுக் கொள்ளுமாறு உபதேசிக்கப் படுகிறது.தாய் அன்பானவளாக இருந்தால் குழந்தை அவளிடம் பற்று வைக்காமல் அன்புடன் இருக்கும்.உறவு முறைகள் நிர்ப்பந்தமாகத் திணிக்கப் படுகின்றன.பற்று என்பது உறவுமுறை.அன்பு என்பதோ ஒரு மனநிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 8:38 am

நரகம்
-----------

நரகத்தைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?இந்த பூமியில் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைக் காட்டிலும் அந்த நரகம் மோசமானதாகவா இருக்கப் போகிறது?
******
ஒரு பசித்த மனிதனின் வாழ்வுக்கு அர்த்தமுண்டா,இல்லையா என்று எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?ஒரு மலரின் அழகைக் கூட அவனால் ரசிக்க முடியாது.பசி!இசையைப் பற்றியோ,கவிதை பற்றியோ,ஓவியம் பற்றியோ பசித்தவனிடம் பேச முடியாது அப்படிப் பேசினால் அவனை அவமானப் படுத்துவது ஆகும்.
******
உச்சியில் நிற்பவர் ஒரு வகையில் பலவீனமானவர்.பற்றிக் கொள்வதற்கு தலைக்குமேல் அவருக்கு எதுவும் இல்லை.அதே சமயம் அவருக்குக் கீழே இருப்பவர்களோ,எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் கவிழ்த்து விடக் காத்திருக்கிறார்கள்.அப்படிச் செய்தால் அவர்களில் ஒருவருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்குமே!அதனால் உச்சியில் இருப்பவர் எல்லாவிதமான குற்றங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது.
******
மனிதன் யாரும் சாக விரும்புவதில்லை.தற்கொலை செய்து கொள்பவர்கள் கூட வாழ்வுக்கு எதிரானவர்கள் அல்ல.அடுத்த பிறவியிலாவது நன்றாக இருக்கலாம் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
******
உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டது மேலோட்டமானதுதான்.ஒரு காரோட்டி போலத்தான்.காரோட்டிக்குக் காரைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியுமா?
******
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by ஸ்ரீராம் Thu Sep 17, 2015 10:16 am

அனைத்தும் அருமை அண்ணா. சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by செந்தில் Thu Sep 17, 2015 10:49 am

கைதட்டல் முத்தான சிந்தனைகள் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 17, 2015 11:09 am

முத்தான சிந்தனைகள்

மிக்கநன்றி

ஸ்ரீராம் wrote:அனைத்தும் அருமை அண்ணா. சூப்பர்

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓஷோ-சிந்தனைகள் Empty Re: ஓஷோ-சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum