தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:16 am

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:18 am

மறுமை வெற்றிக்கு..................

‘மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனது தூதரின் வழிமுறை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம் 318
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:18 am

ஹதீஸ் 16. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் " ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனது அனைத்து செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விடயங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். நிலையான தர்மம் (ஷதகதுல் ஜாரிஆ), பயனளிக்ககூடிய அறிவு, தனக்காக பிரத்திக்ககூடிய சிறந்த பிள்ளைகள்". (முஸ்லிம் 3:1631)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:19 am

“இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸாயீ 1920
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:19 am

“என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவனசிரி குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது. ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 1700
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:19 am

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) பற்றிக் குறிப்பிடுகையில், "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் இருக்கின்றது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுதவாறு நின்று அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும், அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்ப தில்லை. அ(ந்த நேரத்)தைப் பற்றிக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் அது மிகக் குறைந்த நேரம் என்பதை தம் கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்.

நூல் : புகாரி (935)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:19 am

"நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5855


"நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5856
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:20 am

“மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு

அல்லாஹ் கருணை காட்டமாட்டான்”


என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.


என்று ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்கள்.

நூல்:- புகாரி,7376.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:20 am

"தொழுகை" ஒளியாகும்...


"தர்மம்" அத்தாட்சியாகும்...


"பொறுமை" வெளிச்சமாகும்...


"திருக்குர்ஆன்"

உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான

ஒரு நிரூபணமாகும்.....




-நபி(ஸல்).... நூல்: முஸ்லிம்....
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Mon Aug 12, 2013 9:20 am

இரவில் உறக்கம் கலைந்தவர், “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்துலில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ் தூயவன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை) என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ஃக்பிர்லீ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 1154
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:24 am

ஒரு நாள் செய்யதுனா ஈசா (அலைஹிஸலாம்) அவர்கள் தம் சீடர்களுடன் ஒரு வழியே சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது பன்றி ஒன்று எதிரே வருவதைக்கண்டு அதை பார்த்து “நலமாக ஒதுங்கி போ” என்று கூறினார்கள்.

அப்பொழுது அவர்களின் சீடர்கள் அவர்களை நோக்கி, “இந்த இழிந்த பிராணியிடம் இத்துணை மதுரமாக மொழிய வேண்டுமா? சீ பன்றியே ஒதுங்கி விடு ! என்று கூறக்கூடாதா? என்று வினவியபோது,

இறைவனை துதி செய்யும் என் நாவால் நன்மொழிகளைத் தவிர தீய மொழிகளை உச்சரிப்பதற்கு நான் அஞ்சுகிறேன்” என்று பதில் கூறினார்கள்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:25 am

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹுல் புகாரி 3316.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:25 am

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட நபித்தோழர்களுக்கு விருப்பமானவர் ஒருவரும் இருந்ததில்லை. அப்படி இருந்தும் தனக்காகப் பிறர் எழுவது நபியவர்களுக்குப் பிடிக்காது என்பதை அவர்கள் அறிந்திருந்த காரணத்தால் நபி(ஸல்) அவர்களைக் கண்டால், அவர்களுக்காக நபித்தோழர்கள் எவரும் எழ மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: திர்மிதீ 2754
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:25 am

"தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை,

மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான

கருவூலக்காப்பாளர், தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்".


என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.



என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நூல்:- ஸஹீஹ் புகாரி. 2260.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:25 am

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த அளவு தண்ணீரையே எடுத்துச் செல்கிறோம். நாங்கள் அந்தத் தண்ணீரை உளூச் செய்யப் பயன்படுத்தினால் தாகத்தால் கஷ்டப்படுவோம். எனவே கடல் நீரால் உளூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டதாகும்‘ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 83
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:25 am

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணம் செய்யும் போது குறைந்த அளவு தண்ணீரையே எடுத்துச் செல்கிறோம். நாங்கள் அந்தத் தண்ணீரை உளூச் செய்யப் பயன்படுத்தினால் தாகத்தால் கஷ்டப்படுவோம். எனவே கடல் நீரால் உளூச் செய்யலாமா? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கடல் நீர் சுத்தம் செய்ய ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டதாகும்‘ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 83
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:26 am

“முஅத்தின் (பாங்கு சொல்பவர்) “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்” (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

நூல்: முஸ்லிம் 629
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:26 am

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:26 am

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:26 am

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் : திர்மிதீ)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:27 am

ஸலாம் என்ற முகமன் எப்படி வந்தது ?

அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர்
சென்று அங்கேஉட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக!

உமக்கு அவர்கள்
கூறும்வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக!
நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும்.உம
வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."

அஸ்ஸலாமு அழைக்கும்{உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.
உடனே அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி[உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின்
கருணையும் உண்டாவதாக}என்று கூறினார்கள்.

[புகாரி:3326.முஸ்லிம் :2841]
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:27 am

இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டால் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2103
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:27 am

ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரத்ததைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லினாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர. நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும். பல்லோ எலும்பாகும். (நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்திருந்த) ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதை ஒருவர் (அம்பெய்து) தடுத்து நிறுத்தினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வன விலங்குகளுக்கடையே கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே இந்த ஒட்டகங்களுக்கு இடையேயும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. எனவே, அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 5503
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:27 am

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பகரா அத்தியாயத்தின் கடைசி வசனம் அருளப்பட்டபோது அதை நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் வைத்து மக்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பின்னர் மதுபான வியாபாரத்தை ஹராமாக்கினார்கள்.

நூல்: புகாரீ 2084.

--------------------------

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் மதுவை விற்பதாக அறிந்த உமர்(ரலி), 'அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக ஆக்கப்பட்டபோது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை அவர் அறியவில்லையா?' எனக் கேட்டார்.

நூல்: புகாரீ 2223.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:28 am

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். ‘உங்களுக்கு என்ன ஆயிற்று?‘ என்று அவரிடம் கேட்டதற்கு அவர், ‘(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி (ஸல்) அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகிவிட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்” என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் ‘நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, ‘நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3613
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:28 am

முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார். (அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று, “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும்” என்று கூறினார். அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை)” என்று கூறினார். (அப்போது அங்கிருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், “இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்: உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்)

நூல்: முஸ்லிம் 78
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 7 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum