தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:16 am

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:28 am

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத்கள் தொழுகையான) லுஹ்ரையோ அஸ்ரையோ (இரண்டு ரக் அத்கள் மட்டும்) தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்’ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், இவர் கூறுவது உண்மைதானா? எனக் கேட்ட போது அவர்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (விடுபட்ட) பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1227
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:28 am

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம்? எனக் கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள் என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 1226
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:29 am

(ஒரு முறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், “யுக முடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது” என்று கூறி விட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்: 1.(வானிலிருந்து வரும்) புகைமூட்டம், 2.தஜ்ஜால், 3.(பேசும்) பிராணி, 4.மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5.மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல், 6.யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தார், 7.8.9.மூன்று நிலநடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10.இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக் கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்று கூட்டும்.

அறிவிப்பவர்: அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 5558
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:29 am

ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்: (பெண்களிடம் உறுதிமொழி வாங்கிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒரு போதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டேன். நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)

நூல்: முஸ்லிம் 3802
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:29 am

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, அபூபக்ரு (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உமர்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு, உஸ்மான்(ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது 'அரீஸ்' எனும் கிணற்றில் (தவறி) விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்றிருந்தது. - அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)

(நூல்கள் - புகாரி 5873, முஸ்லிம் 4245, அபூதாவூத், அஹ்மத்).
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:29 am

“என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: திர்மிதீ 3862
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:29 am

“வரக்கா பின் நவ்ஃபல் அவர்களை ஏசாதீர்கள். அவருக்கு ஒன்று அல்லது இரண்டு சொர்க்கத்தோட்டங்கள் தரப்படுவதாக எனக்கு காட்டப்பட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: ஹாகிம் 4267
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:30 am

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்” எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, (அவருடைய உள்ளமானது) கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 4548
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:30 am

இஸ்லாம் கவிதையை அடியோடு நிராகரிக்கவில்லை. மாறாக ஆதரிக்கவே செய்கிறது. “நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு (புகாரி 6145) என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். கவிதையானது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமானதாக இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று சிலர் பொய்களையும், காதல் என்ற பெயரில் ஆபாச வர்ணனைகளையும் கவிதைகளாகப் பதிந்தும் பரப்பியும் வருகின்றனர். இது போன்ற கவிதைகளை இஸ்லாம் தடுக்கிறது.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:30 am

நபி (ஸல்) அவர்கள் “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்க மாட்டார்கள்; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள்” என்று கூறினார்கள். உடனே உக்காஷா (ரலி) அவர்கள் எழுந்து,”அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நீரும் ஒருவர் தாம்” என்று சொன்னார்கள். உடனே இன்னொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், நபியே!” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் (ரலி)

நூல்: முஸ்லிம் 371
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:30 am

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.

அல்-குர்ஆன் 24:41.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:31 am

“எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான், அவனுக்கு கேடு தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)

நூல்: அபூதாவூத் 4340
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:31 am

“அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே?” என்று மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1990
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:31 am

“என்னுடைய உம்மத்தில் சில கூட்டங்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து சிலைகளைக் கூட வணங்குவார்கள். மேலும் என் உம்மத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அனைவரும் தன்னை நபி என்றே வாதிடுவார்கள். இந்நிலை ஏற்படும் வரை மறுமைநாள் ஏற்படாது. நான்தான் இறுதி நபி எனக்குப் பின் எந்த நபியும் கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

நூல்: திர்மிதீ 2149
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:32 am

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையின் போது அல்லாஹ்வை அவனது தகுதிக்கு ஏற்ப புகழ்ந்து விட்டு, “அல்லாஹ், யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை வழிகெடுப்பவர் எவருமில்லை. அவன் யாரை வழி கேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் எவருமில்லை. செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும். புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1689
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:32 am

தொழுகையின் ஒற்றைப் படை ரக்அத்கள் முடிந்து எழும் முறை…

தொழுகையில் ஒற்றைப் படை ரக்அத்கள் (1 & 3) முடிந்து இரட்டைப் படை (2 & 4) ரக்அத்களுக்கு எழும் போது சிலர் ஸஜ்தா முடித்ததிலிருந்து அப்படியே எழுந்து நிற்பார்கள். இப்படி செய்யக் கூடாது. ஒற்றைப்படை ரக்அத்களின் இரண்டாம் ஸஜ்தா செய்த பின் சில நொடிகள் இருப்பில் அமர்ந்தப் பின் தான் இரட்டைப் படை ரக்அத்களுக்காக எழ வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் தொழுகையின் ஒற்றைப் படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழ மாட்டார்கள்.

அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி)

நூல்: புகாரி 823
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:32 am

இணைகற்பிக்கும் பெற்றோராயினும் அவர்களுடன் நல்லுறவை பேண வேண்டும்…

தினம் ஒரு ஹதீஸ்-136

--------------------

நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி)

நூல்: புகாரி 5979
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:32 am

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண தறுவாயில்) அவர்களிடம், “லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களுக்காக நான் மறுமை நாளில் சாட்சியம் கூறுவேன்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “பயம் தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்” என்று கூறி (நிராகரிப்பாளராகவே இறந்து) விட்டார். அப்போதுதான் அல்லாஹ் “(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56 ஆவது) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 42
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:33 am

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!‘ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1777
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:33 am

“ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ஜுமுஆவின் போதா (இப்படிச் செய்யக் கூடாது)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு ஜுரைஜ் (ரஹ்)

நூல்: புகாரி 911
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:33 am

“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3159
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:33 am

நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)

நூல்: முஸ்லிம் 1477
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:34 am

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 756
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:34 am

யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 149
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sun Aug 25, 2013 12:34 am

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), நீர் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்றார். (எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 931
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 8 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum