தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

View previous topic View next topic Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 7:56 am

"கவுரி மான்" - என்று ஒரு வகை மானினம் உண்டு. அது தன் உடலில் இருந்து ஒரு 'முடி' கீழே விழுந்தாலும் அல்லது உதிர்ந்தாலும் அது இறந்து போகும் என்று செவிவழி, வாய் வழியாக சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

- இது உண்மையா?

- உண்மையாக இருந்தால்... ஏன் இம்முடிவை அந்த மானினம் எடுக்க வேண்டும்?

- முடிக்கும் - மானின் உயிருக்கும் என்ன சம்பந்தம்?

- அல்லது இலக்கியவாதிகளின் மிதமிஞ்சிய கற்பனை வளமா?

- அல்லது அறிவியல் ரீதியாக விளக்கம் ஏதாகிலும் உண்டா?

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by முரளிராஜா Fri Jul 26, 2013 8:02 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 8:03 am

ஏனிந்த ஓட்டம் முரளி?!
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by முரளிராஜா Fri Jul 26, 2013 8:08 am

கவரிமா என்றொரு மானே கிடையாது. இமயத்தில் வாழும் காட்டுமாடு, சடை போன்ற முடி உடையது. கவரி என்றால் மயிர், மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே வாழும் இந்த மாடு உடலிலுள்ள மயிரை இழந்துவிட்டால் உயிர் துறந்துவிடும். இதையே வள்ளுவர் உவமையாக 'மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமா' என்று குறிப்பிட்டார். பின்னால் வந்தவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 'நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரை' என்று கூறி இல்லாத ஒரு மான் இனத்தை உருவாக்கிவிட்டனர்.

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்


என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )



கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?

குழப்பமாக இருக்கிறது அல்லவா?

அந்த குறளை கவனமாக பாருங்கள்..

அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..

கவரி மா…

ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..

அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by மகா பிரபு Fri Jul 26, 2013 8:11 am

ஒருவேளை அந்த மானில் உடலில் முடி strong ஆ ஒட்டி இருந்திருக்கும். அதையும் மீறி முடி விழும் போது அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணித்து இருக்கும். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 8:12 am

மகா பிரபு wrote:ஒருவேளை அந்த மானில் உடலில் முடி strong ஆ ஒட்டி இருந்திருக்கும். அதையும் மீறி முடி விழும் போது அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணித்து இருக்கும். நக்கல்

இது அறிவியல்நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by மகா பிரபு Fri Jul 26, 2013 8:14 am

ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 8:15 am

ஆய்வாளர், திறனாளர், புலவர் திரு.முரளி அவர்களுக்கு நன்றி! நன்றி!

புறநானூறை பிறனு(ஜே)க்கு விளக்கிய பெருந்தகைக்கு எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:04 am

மகா பிரபு wrote:ஒருவேளை அந்த மானில் உடலில் முடி strong ஆ ஒட்டி இருந்திருக்கும். அதையும் மீறி முடி விழும் போது அதிக இரத்த போக்கு ஏற்பட்டு மரணித்து இருக்கும். நக்கல்

கவரிமான் கதை

ஒரு மயிர் உதிர்ந்தாலும் உயிரை இழந்துவிடும் தன்மை கவரிமானுக்கு உண்டு என்று சொல்வார்கள். யாரையும் கடிக்காத நாகப்பாம்பு தன் நஞ்சை யெல்லாம் திரட்டி ரத்தினமாக்கித் தன் தலையில் வைத்திருக்கும். அந்த நாகரத்தினத்தை இரவுக் காலத்தில் கக்கித்துப்பி, அதன் ஒளியில் இரைதேடும் என்றும் சொல்வார்கள். நாகரத்தினம் என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் பெயர் வைப்பதுண்டு. திராவிடர்களின் உயிர், உடற்கலையான யோகப் பயிற்சியின் முதிர்நிலையாகக் குண்டலினியைக் கீழேயிருந்து கிளப்பி மேலே கொண்டுபோய் நிலை நிறுத்துவது என்றும் புளுகி, அதில் இவர் வல்லவர் என்று சில ஆண்களைக் குறிப்பிட்டுக் கூறுவது முண்டு.



பாலையும் நீரையும் கலந்துவைத்தால் நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்தும் ஆற்றல் அன்னப் பட்சிக்கு உண்டு என்று அளப்பவர்கள் உண்டு. முத்துச் சிப்பி வாயைத் திறந்து வைத்துக் கொண்டு கடல் நீரின் மேல் மட்டத்திற்கு வந்து மிதக்கும். பெய்யும் மழையின் ஒரு நீர்த்துளி அதன்வாயில் விழுந்ததும் சிப்பி மூடிக் கொள்ளும், பின்னர் முத்து உருவாகி வளரும் என்றும் கதை அளக்கின்றவர்கள் உண்டு. அதைப்போலவே, சக்ரவாகப் பட்சி மழைத்துளிக்காக வாயைத் திறந்து கொண்டு கிளையில் உட்கார்ந்தவாறே இருக்கும் என்றும் நீட்டி முழக்குவார்கள், பீனிக்ஸ் பறவை வாழ்ந்து முடிந்து இறுதியில் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும்; பின் அந்தச் சாம்பலிலிருந்து புதிய பீனிக்ஸ் பறவை தோன்றும் என்று பாரசீகத்தில் கதை அளப்பதுண்டு.

இப்படிப்பட்ட அளப்புகள் அனைத்து மக்களிட-மும், அனைத்து நாட்டிலும் உண்டு அப்படிப்பட்ட அளப்பை உதாரணமாக வைத்து 969 ஆம் குறள் எழுதப்பட்டுள்-ளதோ? மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா என்ற சொற்றொடர் அப்படித்தான் அமைந்துள்ளது என்பார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் பொற்கோ (திருக்குறள்: பொற்கோ உரை). இவர் தவிர மற்றெவரும் இதனை வெளிப்-படையாகத் தம் உரையில் குறித்தாரில்லை எனலாம்.

உரை எழுதிய அனைவருமே கவரிமா என்பதைக் கவரிமான் என்றே எழுதியுள்ளனர். பொற்கோ அவ்வாறு எழுத-வில்லை. கவரிமான் என்றே குறிப்பிட்டு ஒருவர் கேள்வி கேட்டதற்கு எதையெதையோ எழுதிய மதன் என்பார் (ஆனந்த விகடன் 6.10.10) மான் வகையில் அந்தப் பெயரில் எதுவும் இல்லை என எழுதவில்லை; மா என்றால் விலங்கு எனப் பொருள்-படுவதால், அது மானாக இருக்காது, மற்று ஏதோ ஒரு விலங்காக இருக்கலாம் எனவும் எழுதவில்லை.

பனிப்பகுதிகளில் இருக்கும் விலங்குகளுக்கு மயிர், தோல், இறகு போன்றவை கடுங்குளிரிலிருந்து உயிரைக் காத்துக் கொள்ளும் கவசங்களாக அமைந்-துள்ள இயற்கை நிலையைக்கூடக் குறிப்பிடவில்லை. அப்படிப்பட்ட விலங்குகள் தம் மயிரை இழக்கும் நிலையில் உயிரையும் இழக்கும் நிலை உள்ளதே! இதைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாம்.

ஒரே ஒரு மயிர் இழப்பு _ உயிர் இழப்பு என்ப-தெல்லாம் கூட உரையாசிரியர்களின் உடான்ஸ் எனபதைத் தெளிவாக எழுதாமல், ஏதோ குறளா-சிரியரே உடான்ஸ் விட்டிருப்பதுபோல எழுதி-யுள்ளார் மதன் பழைய அய்யங்கார் (பரிமேலழகர்) எழுதிய உடான்ஸை மறைத்து, திருவல்லிக்கேணி அய்யங்கார் காப்பாற்றுகிறார். இவர்களிடமிருந்து, திருக்குறளைக் காப்பாற்ற வேண்டும்.

நன்றி இணையம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:06 am

கவரிமான் இருப்பது உண்மையா?

கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டா, குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.

இதைத்தான் திருவள்ளுவர், 'மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா' என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.

(ஆதாரம்: முகம்மது அலி எழுதிய 'இயற்கை: செய்திகள், சிந்தனைகள்' நூல்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:07 am

"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்

அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.

கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு

(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.

Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)

Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.

Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.- koodal.com-Kural

கௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.

கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!

வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக் கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.

விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.

வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என்று சொன்னதை; எப்படிக் கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "கவரிமா அன்னார்" எனவே உள்ளது.

முதல் கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

இதன் ஒரு மயிர் அல்லது உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.

இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.

கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.

இதே வேளை "சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார். கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.

என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்; ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:09 am

நன்றி இணையம்

கவரிமான் எங்கு வசிக்கிறது? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா? எப்படி தற்கொலை செய்து கொள்ளும்?



மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின்

என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )



கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?

குழப்பமாக இருக்கிறது அல்லவா?

அந்த குறளை கவனமாக பாருங்கள்..

அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..

கவரி மா…

ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..

அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..

புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..



நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்…



இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம்.

அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..



கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்..






வள்ளுவர் சொன்னது என்னைத்தான் !!

நான் புள்ளிமான். கவரிமான் அல்ல
இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.

முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா… இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..

கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய் சொல் உருவானது..

மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல். ( அரிமா அரிமா என்ற எந்திரன் பாடலை நினைவு படுத்தி கொள்ளலாம்.. அரிமா=சிங்கம் )

சரி..

இந்த குறளுக்கு அர்த்தம் என்ன?

பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..

அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..

அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…

கலைஞர் தன் உரையில் கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என சொல்லப்படுகிறது…அதே போல மானம் மிக்க மனிதர்களும், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்..

சரியான விளக்கம்.. கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையில் அவர் சிக்காதது ரசிக்கதக்கது….



எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..

பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..



ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by முரளிராஜா Fri Jul 26, 2013 10:06 am

விரிவாக விளக்கங்களை அள்ளி தந்தமைக்கு மிக்க நன்றி கவியே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 10:08 am

எனக்கும் இப்பத்தான் தெளிவு கிடைச்சது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஸ்ரீராம் Fri Jul 26, 2013 12:46 pm

இதுக்குதான் ஒரு வில்லெஜ் விஞ்ஞானி வேணும்கிறது.

நான் இல்ல பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 7:37 pm

மேலும் அதிகமான விளக்கமளித்த கவியருவி.ம.ரமேஷிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 7:39 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:எனக்கும் இப்பத்தான் தெளிவு கிடைச்சது...


என்னாலே இங்கு பலபேருக்கு தெளிவு ஏற்பட்டதற்கு ... நான் உள்ளபடியே உவகையடைகிறேன்.முழித்தல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by ஜேக் Fri Jul 26, 2013 7:41 pm

ஸ்ரீராம் wrote:இதுக்குதான் ஒரு வில்லெஜ் விஞ்ஞானி வேணும்கிறது.

நான் இல்ல பயந்து ஓடு 

எப்பவுமே தாங்கள் இப்படித்தான். எதையுமே நேரிடையாக சொல்வதில்லை. என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு வெட்கப்படக் கூடாது பாஸ்நக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Jul 26, 2013 9:24 pm

ஜேக் wrote:
ஸ்ரீராம் wrote:இதுக்குதான் ஒரு வில்லெஜ் விஞ்ஞானி வேணும்கிறது.

நான் இல்ல பயந்து ஓடு 

எப்பவுமே தாங்கள் இப்படித்தான். எதையுமே நேரிடையாக சொல்வதில்லை. என் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு வெட்கப்படக் கூடாது பாஸ்நக்கல் நக்கல் நக்கல் 
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by Muthumohamed Fri Jul 26, 2013 10:44 pm

நல்ல விளக்கம் நன்றி ரமேஷ் அண்ணா

ஜேன் அண்ணா தினமும் இதுபோல் கேள்விகள் கேளுங்கள் அனைவருக்கும் நிறைய செய்திகள் தெரிய வாய்ப்பாக இருக்கிறது உங்களின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4 Empty Re: தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க - 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum