தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

View previous topic View next topic Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:15 pm



புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் முறை --- சட்னிகள்,


ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  P58

புளி அதிகம் சேர்ப்பது உடலுக்குக் கெடுதி. ஆனால், புளிப்பு சுவை இல்லாமல் நம்மால் இருக்கமுடியுமா?  குழம்பு முதல் ஊறுகாய் வரை அனைத்துமே புளிப்புடன் இருந்தால், எக்ஸ்ட்ராவாக நாலு கவளம் தொண்டையில் இறங்கும்.  அதனால்தான் எங்கள் வீட்டில் புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னியாக செய்துவைத்துக்கொள்வோம். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.  தோசை, இட்லிக்கும் தொட்டுக்கொள்ளலாம்'' என்கிற ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மாதங்கி, புளிச்சக் கீரையைப் பயன்படுத்தி சட்னி தயாரிக்கும் முறையை கூறுகிறார்.

தேவையான பொருட்கள்:  புளிச்ச கீரை (கோங்குரா) - 2 கட்டு, காய்ந்த மிளகாய் - 4, பச்சை மிளகாய் - 6, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறுதுண்டு, மஞ்சள் தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துக்கொள்ளவும்.  இரண்டு குழிக் கரண்டி எண்ணெயை அதில் விட்டு, பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும். அதேபோல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாயை வதக்கி எடுக்கவும்.  கீரையை நரம்பில்லாமல் ஆய்ந்து நன்றாகக் கழுவி நீரை வடித்துக்கொள்ளவும்.  கடாயில் எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையைப் போட்டு சுருள வதக்கவும்.  

கீரையைத் தவிர, வதக்கிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்துப் பொடிக்கவும்.  கீரையையும் போட்டு நன்றாக மசிய அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, விழுதைப் போட்டு சுருளக் கிளறி இறக்கவும்.    
இயற்கை மற்றும் ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்:
புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  கர்ப்பிணிகள் அடிக்கடி சாப்பிட்டால் குமட்டல் இருக்காது. இரும்புச் சத்து நிறைந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதைக்காட்டிலும் இந்தக் கீரை இயற்கையான இரும்புச் சத்தை உடலுக்கு அளிக்கிறது.  நாவில் உள்ள சுவை நரம்புகளைத் தூண்டும்.  இந்தச் சட்னி செய்யும்போது, காரத்தைக் குறைவாக சேர்ப்பது நல்லது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:16 pm

கறிவேப்பிலை சட்னி--
ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  3

[b style="margin: 0px; padding: 0px; font-family: Arial; font-weight: bold;"]                   
[/b]
தேவையானவை:
• தக்காளி - 3
• மிளகாய் வற்றல் - 6
• சின்ன வெங்காயம் - 10
• கறிவேப்பிலை - 8 கொத்து
• வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
• உப்பு - அரை தேக்கரண்டி
• கடுகு - ஒன்றரை தேக்கரண்டி
• கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
• எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


செய்முறை:[b style="margin: 0px; padding: 0px; background-color: white; font-family: Arial; font-weight: bold;"]

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.

பிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.[/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:17 pm

தேங்காய் சட்னி



தேங்காய் ( 4 மே. கரண்டி), பச்சை மிளகாய் (4), வெள்ளை பூண்டு (1 பல்), புளி (1/4 தே. கரண்டி),  உப்பு சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு(1/4  தே. கரண்டி), உளுந்தம் பருப்பு (1/2  தே. கரண்டி), பெருங்காயம் (1/4 தே. கரண்டி), கருவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளிக்கவும்.
அரைத்ததை அதில் ஊற்றி கொதிக்கும் முன் இறக்கவும்.

சட்னியின் சுவைகள் :

அரைக்கும் போது, இஞ்சி (சிறிய துண்டு) வைத்து அரைக்கலாம். ஆனால் தாளிக்கும் போது அரைத்ததை அடுப்பை அணைத்துவிட்டு தாளித்ததுடன் சேர்க்கவும். கொதிக்க வைத்தால் இஞ்சியின் சுவை மாறிவிடும். அல்லது இஞ்சியை சிறியதாக நறுக்கி, தாளிக்கும் போது சேர்க்கலாம்.

சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து, தாளிக்கும் போது சேர்த்து வதக்கினால், தனி சுவையாக இருக்கும் சட்னி.

பொட்டு கடலை (தே கரண்டி ) சேர்த்து அரைத்தால், தண்ணீர் நிறைய சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:18 pm

மிளகாய் சட்னி

இட்லி தோசைக்கு சுள்ளுன்னு ஒரு சைடு டிஷ்.

தேவையான பொருட்கள்:

அரைக்க:

பெரிய வெங்காயம் - 2 ( சின்ன வெங்காயம் கிடைத்தால் மிக்க நன்று. சட்னி சுவை கூடும்)
தக்காளி - 2
பூண்டு - 4 பல்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 8
உப்பு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 6 ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் , பெருங்காயம் - சிட்டிகை

செய்முறை:
அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை மிக்ஸில் இட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை சேர்க்கவும் (என் கணவருக்கு கடுகு பிடிக்காது. ஸோ நான் கடுகு சேர்க்கவில்லை). அரைத்த விழுதையும் இத்துடன் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் தனியாக, சட்னி தனியாக பிரியும் வரை மிதமான சூட்டில் சட்னி கொதிக்க வேண்டும்.


Last edited by முழுமுதலோன் on Tue Aug 06, 2013 4:21 pm; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:19 pm

புதினா சட்னி & துவையல்

தேவையானவை:
புதினா - 1 கட்டு
வெங்காயம் - 2
புண்டு -2 பல்
கடுகு,உளுந்து - தேவையானவை
எண்ணெய் - வதக்க தேவையானவை
உப்பு - தேவையானவை
பச்சைமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 கப்


செய்முறை:
புதினா இலைகளை தனியாக பிரித்து பின் நன்கு கழுவி வைக்கவும்.
பானில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு சிவந்ததும் பூண்டு , இஞ்சி விழுது ,பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி பின்
தேங்காய் துருவலையும் அதனுடன் புதினாவை போட்டு நடுநிலையாக (பச்சையாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ) வதக்கி பின்னர் தனியே வைத்து ஆறவிடவும் .
ஆறியதும் மிக்சியில் அரைத்து அதனுடன் உப்பு சேர்த்து பரிமாறவும் .


குறிப்பு:
மிக்சியில் அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அவ்வாறு தண்ணீர் அதிகமானால் நன்கு சுண்ட வைக்க அது புதினா துவையல் என பரிமாறலாம் .
இதனுடன் தோசை, இட்லி அல்லது சூடான சாதத்துடன் சாப்பிடிலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:22 pm

பூண்டு சட்னி-

தேவையான பொருட்கள்

பூண்டு பல் - 20
உளுந்து - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2

செய்முறை

• கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து மற்றும் மிளகாய் வற்றலை வருத்து ஆற வைக்கவும் .

• ஆறியவுடன் இத்துடன் பூண்டு, உப்பு, சேர்த்து சிறது சிறதாக தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைக்கவும்.

• இந்த பூண்டு சட்னி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:23 pm

இஞ்சி சட்னி --

அஜீரணம்,வாய்வுத் தொல்லைகளால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்ற உணவு

தேவையான பொருட்கள்:

இஞ்சி 1
நடுவிரல் அளவு பெருங்காயம்
சிறிதளவு கடலைப்பறுப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் புளி
நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிள்காய்-மூன்று
கடுகு,கறிவேப்பிலை-தாளிப்பதற்கு

செய்முறை:

முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும்.

இஞ்சி,கடுகு,கறிவேப்பிலை தவிர எல்லாவற்றையும் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மிக்சியில் போட்டு மசியாக உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பிறகு வாணலியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி கடுகு,கறிவேப்பிலை போட்டுத்தாளித்துக் கரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றவும். கொதி வந்தவுடன் இறக்கவும். இட்லி,தோசைக்கு மிகவும் ஏற்றது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:24 pm

உளுந்து சட்னி--

*உளுத்தம்பருப்பு 1 கப்
*மிளகாய்வற்றல் 4
*தேங்காய் துருவல் 1/4 கப்
*கறிவேப்பிலை ஒரு கொத்து
*கொத்தமல்லித்தழை சிறிது
*புளி எலுமிச்சை அளவு*உளுத்தம்பருப்பை வாணலியில் எண்ணைய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
*மிளகாய்வற்றலை முதலில் வறுத்துவிட்டு அதனுடன் கறிவேப்பிலை புளி இரண்டையும் வறுக்கவேண்டும்.
*தேங்காய் துருவலையும் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
*எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து அரைக்கவேண்டும்.
*உளுந்து சட்னி இட்லி தோசைக்கு பொருத்தமான சைடு டிஷ்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:25 pm

பேரிச்சை சட்னி
பேரிச்சை - கொட்டை நீக்கியது 5-6
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - 2 டீஸ்பூன்

புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பேரிச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.
வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடுங்கள்.
கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.
இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
குறிப்பு: கூட வருத்து திரித்த சீரகமும் சேர்த்து , கருப்பு கிஸ்மிஸ் பழம் சேர்த்து அரைத்தும் பயன்படுத்தலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:25 pm

கடலைபருப்பு சட்னி


பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கடலைபருப்பு - இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு

வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்தமிளகாய் கடுகு தாளித்து வெடித்ததும் கடலைபருப்பை சேர்த்து நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதை ஆறவைத்து மிக்ஸ்யில் நைசாக அரக்கவும்.
அரைத்த சட்னியை வேறு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியாக நறுக்கிய கருவேப்பில்லை தூவவும்..
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:30 pm

கத்தரிக்காய் சட்னி


கத்தரிக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் 3
தக்காளி 3
மிளகா வத்தல் 8
எண்ணை 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு அரை, அரை டீஸ்பூன்

கத்தரிக்கா, வெங்காயம், தக்காளியை பொடிசாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி முதலில் மிளகாயை வறுத்துபிறகு காய்களையும் சேர்த்து சுருள வதக்கவும்.
நன்கு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:30 pm

கொத்துமல்லி பொட்டு கடலை சட்னி

//கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும். //

தேவையானவை
கொத்துமல்லி தழை - ஒரு பஞ்ச்
லெமன் - அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் - ஒன்று
இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் - அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை - ஒரு கை பிடி
உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)

செய்முறை

1. கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.

2. சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும்.
மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:-

தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி,குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:31 pm

வெள்ளரி சட்னி:
தேவை:
சுத்தப்படுத்திய வெள்ளரி சதைப்பகுதி - 1 கப், கெட்டி தக்காளிச் சாறு - 1 மேஜைக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி, துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி, பச்சை மிளகு - 1 தேக்கரண்டி, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் - தாளிதம் செய்ய.
செய்முறை:
தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி துண்டாக்கிய வெள்ளரி, வறுத்த வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், மிளகு, தக்காளிச் சாறு, உப்பு ஆகியவைகளை ஒன்றாக மிக்சியில் இட்டு அரைக்கவும். தாளிதம் செய்யவும். மனதுக்கும், வயிற்றுக்கும் நல்ல திருப்தியான உணர்வைக் கொடுக்கும் இந்தப் புது விதமான சட்னி.
என்ன பயன்?
உடனடியாக தாகம் தீர்க்கும்.குளுமையை அள்ளிக் கொடுக்கும். கோடையிலே ஏறக்குறைய அனைவருக்கும் ஏற்படும் நீர்க்கடுப்புக்கு நல்ல தீர்வு. பொதுவாக கோடை நாட்களிலே எண்ணெய்ப் பண்டங்களை சாப்பிடுவது அஜீரணத்துக்கு வழி வகுக்கும். பித்தம் மிகுந்து கல்லீரல் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வெள்ளரியை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். நரம்புகளை பலப்படுத்தி, சோர்வு மேலிடாமல் தடுத்து, நாள் முழுவதும் துள்ளலுடன் ஓடி ஆட வைக்கும் இந்த வெள்ளரி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:32 pm

புதினா துவையல்

பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள சத்துகள் குறைந்துவிடுகின்றது-அதனால் புதினாவினை வதக்கி செய்வதினை தவிர்ப்பது நல்லது-.

தேவையான பொருட்கள் :
· சுத்தம் செய்த புதினா இலை - 1 கப்
· கொத்தமல்லி + கருவேப்பில்லை - 1 கப்
· தேங்காய் துறுவல் - 1/4 கப் (விரும்பினால் சேர்க்கவும்)
· புளி, இஞ்சி - சிறிதளவு
· உப்பு - தேவையான அளவு
வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
· கடுகு - 1/2 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு - 2 மேஜை கரண்டி
· கடலை பருப்பு - 2 மேஜை கரண்டி
· காய்ந்த மிளகாய் - 4
· பெருங்காயம் - 1/2 தே.கரண்டி
· எண்ணெய் - 1 தே.கரண்டி

செய்முறை :
புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருட்கள் + புதினா + கொத்தமல்லி ,கருவேப்பில்லை + தேங்காய் துறுவல் + புளி, இஞ்சி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
சுவையான சத்தான புதினா துவையல் ரெடி.இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சாதத்துடன் புதினாவை நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
************************************
புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள், ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது. பசியினை தூண்டுகின்றது. இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது. வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது-

(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்-)
உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 -
Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு. விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. சரி, புதினாவினை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்டோம்.. புதினா துவையலினை செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by முழுமுதலோன் Tue Aug 06, 2013 4:35 pm

சிவப்பு குடமிளகாய் சட்னி
ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Kudamilagai%2Bchattini
தேவையானவை:
சிவப்பு குடமிளகாய் 1
வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 2 பல்
இஞ்சி 1 துண்டு
புளி சிறிதளவு
சிவப்பு மிளகாய் 3
உப்பு,எண்ணய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும். சிவப்பு மிளகாய், புளி இரண்டையும் தனித்தனியே எண்ணையில் வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் தேவையான உப்புடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
சிவப்பு குட மிளகாய் சட்னி இட்லி,தோசை,பொங்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற sidedish.

Posted by Mohamed Ali Blog
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை  Empty Re: ஸ்பெஷல் சட்னி தயாரிக்கும் முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum